சிறுவன்
இருவரும் ஒரே குரலில் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்த, அதை கவனித்த தாத்தா ," என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆகுறீங்க??" என்று வினவினார்.
வயதான தாத்தா விற்கு எந்த வித அதிர்ச்சியும் கொடுக்க வேண்டாம் என்று எண்ணிய இருவரும் மீண்டும் ஒரே குரலில்," ஒன்னுமில்லை தாத்தா," என்று கூறினர்.அவர்களின் வாய் தான் அப்படி கூறியதே ஒலிய அவர்களின் முகங்களில் பீதி படிந்திருந்தது.அதை கவனித்த அந்த முதியவர்," நீங்க இரண்டு பேரும் எங்கிட்ட எதையோ மறைக்கறீங்க ," அது என்னனு சொல்லுங்க," என்று கண்டிக்கும் தொணியில் கூறினார்.ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அரவிந்தனே கூறத்துவங்கினான்," தாத்தா நாங்க வீட்டுக்க வந்துகிட்டு இருக்கும் போது வழியில வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு , வண்டிய சரி பண்ணிட்டு வீட்டுக்கு வந்து இறங்கும்போது இந்த சின்ன பையன் எங்க பின்னாடி உட்கார்ந்து இருந்திருக்கான். அவன் எப்படி உள்ளே ஏறுனானு எங்களுக்கு தெரியலை ," என்று முழு உண்மையும் கூறாமல் பாதியை மட்டும் கூறினான்.அந்த நிலையிலும் அரவிந்தனின் சாமர்தியத்தை எண்ணி மதுவின் மனம் பெருமை கொண்டது.
அரவிந்தன் கூறிய பிறகே அங்கு நின்றிருந்த சிறுவனை கவனித்தார் அந்த பெரியவர்.பார்பதற்கு 6 வயது சிறுவனை ஒத்திருந்த தோற்றம் மாநிறத்தில் குண்டு கண்ணங்களுடன் முகத்தில் தவழும் புன்னகையுடனும் பச்சை நிற கண்களுடனும் நின்றிருந்த அவனை முதல் பார்வையிலே அவருக்கு பிடித்துவிடவே அவர் அரவிந்தனை பார்த்து," இப்போதைக்கு இந்த பையன்.இங்கயே தங்கட்டும் அரவிந்தா நம்ப பிரச்சினை எல்லாம் தீர்ந்ததுக்கு அப்பறமா இவனை பத்தி விசாரிச்சு எங்க அனுப்பனுமோ அங்க அனுப்பி வச்சிடளாம்," என்று தன் சம்மதத்தை தெரிவித்தார்.
தாத்தாவின் வார்த்தைகளில் சிறிது ஆசுவாசமடைந்த அரவிந்தன் அந்த சிறுவனை நோக்கினான், இந்த வீட்டினுள் நுழையும் முன் இருளடைந்திருந்த அவனது முகம் இப்பொழுது ஒளியுடன் காணப்பட்டது மேலும் அவன் கண்களில் மின்னிய பச்சை நிற பளபளப்பை பார்க்கும் பொழுது மனதில் கிலி தோண்றியது.
நடப்பதை தடுக்கும் சக்தி தனக்கு இல்லை என்பதை நன்கு தெரிந்து கொண்ட அரவிந்தன் தன் தாத்தா வை பார்த்து ," சரி தாத்தா , நான் போய் முதல்ல போலீஸ் ல ஒரு புகார் கொடுத்திட்டு வந்திடறேன். என்ன தான் நம்ம வீட்டில நடந்த சம்பவம் மர்மமா இருந்தாலும் முதல்ல ஒரு புகார் கொடுக்குறது நல்லதா படுது, நீங்க எதுக்கும் கவலை படாம இருங்க , நான் போய்டு உடனே வந்திடறேன்," என்று கூறினான்.
அவனை வழி அனுப்பிவிட்டபின் தன் தாத்தா விடம் வந்த மது ," நீங்க எதாவது சாப்பிடீங்களா தாத்தா ?" என்று வினவினாள்.
" எங்கமா...என் குடும்பமே காணாம போயிடுச்சு நாளைக்கு கல்யாணத்திற்கு ஊரு சனமே திரண்டு வரப்போகுது ,இதுல எனக்கு சாப்பாடு ஒன்னுதான் குறை ," என்று மனவேதனையில் கூறியவரை பார்த்த மதுவின் மனதில் தான் அந்த குளக்கரையில் அமர்ந்திருக்க வில்லை என்றால் இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்காது என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது அதனை புறம் தள்ளி ," தாத்தா எல்லாம் சரி ஆகிடும் சீக்கிரமே எல்லோரும் திரும்ப வந்திடுவாங்க எல்லாருக்கும்," தவிர்க்க முடியாத காரணத்தினால திருமணத்தை தள்ளி வைக்கிறோம் திருமண தேதியை விரைவில் தெரியுப்படுத்துறோம்," அப்படீனு நான் மெசேஜ் அனுப்பிடறேன் . நீங்க எதை பத்தியும் கவலை படாம கொஞ்சம் நிம்மதியா இருங்க எல்லாமே நந்தன் மாமா பார்த்துப்பாரு," என்று கூறிவிட்டு அடுக்களையை நோக்கி சென்றாள்.
அவளை பின்தொடர்ந்த அந்த சிறுவனை அவள் கவனிக்க தவறிவிட்டாள். அங்கே தன் தாத்தாவிற்கு சூடாக ஒரு டம்ளர் பாலில் தன் பாட்டியின் தூக்க மாத்திரை ஒன்றை போட்டு திரும்புகையில் தன் பின்னே சிரித்துக்கொண்டிருந்த அந்த சிறுவனை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.அவனிடம் பேசுவதற்கு ஏதோ தடுக்க அவனை விடுத்து தன் தாத்தா விடம் சென்றாள்.
அவளிடமிருந்த பாலை வாங்கியவர்," ஏம்மா இந்த பையன் நீ எங்க போனாலும் உன் கூடவே வர்றான் பாரு அவனுக்கு என்ன சாப்பிட வேணும் கேட்டு அதை சாப்பிட கொடுத்து தூங்க வைமா," என்று அக்கரையுடன் கூற அவள் மனதிலோ," என்ன?? என் பின்னாடியே வர்றானா??? ஒரு வேளை எங்கிட்ட வந்து பசிக்குது ஒரு பாட்டில் ரத்தம் வேணும்னு கேட்டா நான் என்ன செய்யுவேன்," என்று பயம் எழ வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அடுக்களையில் சாப்பட்டை திறந்து நோக்கியவளின் கண்களில் கண்ணீர் வெள்ளமென வந்தது, அனைவருக்கும் செய்த விஷேச சாப்பாடு அங்கே கேட்பாறற்று கிடந்தது , ஒரு.தட்டில் சாதம் வைத்து அவனிடம் கொடுத்தாள், அந்த தட்டை பார்த்த அந்த சிறுவனின் கண்களிலிருந்த மினுமினுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அங்கே கரிய நிறம் சூழ்ந்து கொண்டது என்ன நடக்கிறது என்பதை யூகிக்கும் முன்பு அந்த சிறுவனின் தோற்றம் முழுவதும் மாறி அங்கே ஒரு அருவருக்கத் தக்க உருவம் அவளின் சங்கு கழுத்தை தன் நீண்ட கைகளால் நெரித்தது,அவளால் கத்தவும் முடியாத நிலையில் அந்த உருவம் அவளின் கருவிழிகள் கண்களை விட்டு தெரித்துவிடும் அளவு பயம் முகத்தில் அப்பி இருக்க அவளின் பயத்தை பார்த்த அந்த உருவம் மெலிதாக சிரித்து பயந்த அவளின் விழிகளை நோக்கி" என்ன பார்தா தட்டுள சாதம் போட்டு சாப்பிடற மாதிரியா தெரியுது?? வேணா உன் இரத்தத்தை உரிரிரிஞ்சி குடிக்கவா?? நல்ல இரத்தம் குடிச்சு ரொம்......ப..... வருஷம் ஆச்சு ," என்று கூறிக்கொண்டே அவளின் கழுத்தை நோக்கி தன் கரிய கூரிய பற்களை
கொண்டு சென்றது.
********
வீட்டை விட்டு வெளியே வந்த அரவிந்தன் நேரே தனது நெருங்கிய நண்பன் சத்யன் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் காவல்நிலையத்திற்கு சென்றான். அங்கு அவனை அந்த நேரத்தில் எதிர்பார்காத சத்யன்," என்னடா நாளைக்கு கல்யாணத்தை வச்சிகிட்டு இங்க என்ன செய்யுற??"என்று வினவ, " அதுக்குதான் உன்ன பார்க்க வந்தேன்.கொஞ்சம் வெளிய வா சத்யா உங்கிட்ட கொஞ்சம் பேசனும் ," என்று கூறிய நண்பனை புரியாத பார்வை பார்தாலும் எழுந்து வெளியே வந்தான்.
தன் நண்பனான சத்யனிடம் குளக்கரையில் வண்டி நின்றது முதல் வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் அரவிந்தன். அவன் கூறுவதை வேறு யாரும் கூறியிருந்தால் சத்யன் நம்பியிருக்க மாட்டான்.ஒரு நிமிட யோசனைக்கு பிறகு ,"சரிடா இப்ப இந்த ராத்திரி வேளையில நம்மால ஒன்னும் பண்ணமுடியாது நீ வீட்டுக்கு போ நாளைக்கு காலையில சீக்கிரமே வந்திடு நம்ம முதல்ல அந்த குளக்கரையில போய் எதாவது தெரிஞ்சுக்க முடியுதானு பார்போம் ," ஏன்று கூறினான்.
அவனது கூற்றில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்ட அரவிந்தன் ," சரிடா என்னை வீட்டில இறக்கிவிட்டிடு நான் பைக் எடுத்துட்டு வரலை ," என்று கூறினான்.
இருவரும் சத்யனின் பைக்கில் ஏறி வீடு நோக்கி சென்றனர்.அவனது வாகனம் வீடு இருக்கும் தெருவை அடைந்தது.ஆனால் அங்கே அவர்கள் வீடு இருந்த இடம் காலியாக இருந்தது.அங்கே இதற்கு முன் வீடு இருந்ததற்கு அடையாளமாக எதுவும் தென்படவில்லை. இதை பார்த்த இருவரும் செய்வதறியாமல் குழம்பி போய் நின்றனர்.
(தொடரும்....)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro