டிங் டாங் - 21
"அத்தை..." வைஷ்ணவி வீட்டு வாசலில் நின்று கூவிக்கொண்டிருந்தான் வெள்ளைச்சாமி. வைஷ்ணவி வீட்டின் பின் தெருவில் இருப்பவன். வைஷ்ணவியை விட இரண்டு வயது இளையவன்.
"இருடா நாய்க்கு சாப்பாடு வச்சிட்டு வர்றேன்" மஹேஸ்வரி தன்னுடைய வேளையில் கவனமாய் இருந்தார்.
அவனுக்கோ கடுப்பு, "அந்த நாய் தான் உங்களுக்கு என்ன விட பெருசா போச்சா?"
"ஏண்டா உன் கூட எதுக்குடா என் தங்க பிள்ளைய கம்பேர் பண்ற?"
"நீங்க என் மேல பாசமா இருப்பிங்க-னு இத்தனை நாள் நம்புனேன் ஆனா இந்த குடும்பத்துல இருக்க எல்லாருமே என்ன ஏமாத்த தான் செய்ரிங்கல்ல?" மஹேஸ்வரியிடம் சண்டைக்கு சென்றான் வெள்ளைச்சாமி.
செய்த உணவு அனைத்தையும் நாய்க்கு வைத்து அவனை பார்த்தார் மஹேஸ்வரி சிரிப்போடு, "நேத்து தான்டா அவளுக்கு கல்யாணம் முடிவாச்சு, பூ வைக்க வீட்டுக்கு சொல்லாமலா இருக்க போறேன்? சரி அவ மேல தான் இருக்கா போய் பேசு. நான் காபி போட்டு கொண்டு வர்றேன்"
வீட்டிற்குள் மஹேஸ்வரி சென்றதும் சோகமாக படி ஏறி வைஷ்ணவியை பார்க்க சென்றான். அவளோ வெளியில் இருந்த ஊஞ்சலில் தான் அமர்ந்திருந்தாள், வெள்ளைச்சாமியை பார்த்ததும் தான் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தது கூட மறந்து போனது. ஒரு வாரம் கல்லூரியிலிருந்து டூர் ஒன்று சென்றவன் வந்தது இன்று காலை தான்,
"டேய் வைட்டு(white) எப்படா வந்த?" என்றாள் ஆச்சிரியமாக.
"வைட் மனசு இருக்குறவன ரத்தம் வர அளவு கத்தியால் நெஞ்சுலையே குத்திடல வைஷ்ணவி?" விட்டெதெரியாக பேசினான்.
"என்னடா வைட்டு இப்டி எல்லாம் பேசுற? நான் உன்ன குத்துனேனா? அதுவும் நெஜுல?" அதிர்ச்சியடைந்து போல் நடித்தாள்.
"எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத வைஷ்ணவி, உன்னையே நம்பிட்டு இருந்த என்ன ஏமாத்திட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறியா? என் மனசு துடிக்கிது... இங்க பாரு" தன்னுடைய நெஞ்சை கை காட்டி சொன்னான்.
அவளும் பார்த்தவள், "அட ஆமா..." அதிர்ந்த்தாள்.
"இப்போ எனக்கு என்ன பதில் சொல்ல போற வைஷ்ணவி? உன்ன இத்தநோண்டுல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்கேன்" தன்னுடைய இடுப்பின் அளவினை சுட்டிக்காட்டினான் வெள்ளைச்சாமி.
"உன்னோட லவ் பத்தி எனக்கு தெரியாதா வைட்டு... வீட்டுல பேசுனேன், மகேஷ்கிட்ட கூட சொன்னேன், என்னையே நம்பி ஒருத்தன் இருக்கான், இந்த பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சா அவன நான் ஏமாத்துற மாதிரி இருக்கும்-னு சொன்னேன் வைட்டு" அவளது சோகத்தில் இருந்த நடிப்பை கவனிக்க தவறவில்லை அவன்.
"அப்றம் ஏன் வைஷ்ணவி இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லணும்? இப்போவே பேசுறேன் உன் அம்மா அப்பாகிட்ட நான் பேசுறேன்" அவள் எதுவரை போகிறாள் என்பதை பார்க்க அவனுக்கும் ஆர்வம் தான் வந்தது.
"அங்க தான் பிரச்சனையே... பையன் யாருனு தெரியும்ல நம்ம எடுத்த வீட்டு சமையல் மாஸ்டர் தான்" கார்த்தியின் அறையை காட்டினாள்,
"அந்த ரூம் தெரியுது பாரு, அங்க இருந்து தான் தினமும் என்ன சைட் அடிச்சிருக்கார். என்னோட சமையல் அவரோட சமையலை விட நல்லா இருக்குதுனு சொல்லி ஒரே பீலிங்ஸ் தானாம். ஒரு நாள் வந்து ப்ரபோஸ் பண்ணிட்டாரு. அந்த இடத்துலயே முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்றம் எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாகிட்ட பேசி கெஞ்சி கல்யாணம் பண்ணா இந்த பொண்ண தான் பண்ணுவேன் இல்லனா சூசைட் பண்ணிக்குவேன்னு ஒரே பிடிவாதம்..."
நிறுத்தாமல் கூறியவளுக்கு மூச்சே அடைத்தது. தேவையான காற்றை எடுத்துக்கொண்டவள், "நீயே சொல்லு நம்மளால ஒரு உயிர் போகுதுன்னா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதான் வாழ்க்கையை குடுத்துடலாம்னு முடிவு பண்ணிப்போட்டேன்" பெருந்தன்மையாக பேசினாள்.
"நானும் தான் வாழ்க்கைல பல நூறு பேர பாத்துட்டேன், உன்ன மாதிரி அண்ட புளுகுணிய பாத்ததில்ல அம்மாடி..." ஆசிரியப்பட்டவன் மேலும், "நான் தான் உன்ன ரொம்ப நாளா வாட்ச் பண்ணிட்டே இருக்கேனே... அந்த வீட்டுக்கு நீ விடுற நூல் எல்லாம் பாத்திலையே அந்து விழுகுறத"
"டேய் டேய் வைட்டு... சத்தமா பேசிடாதடா யார் காதுலயாவது விழுந்துட போகுது. இது எனக்கு மட்டும் தான் லவ் கல்யாணம். மத்த எல்லாருக்கும் அரேஞ்ட் மேரேஜ்" - வைஷ்ணவி
"நீ எனக்கு பண்ண துரோகத்துக்கு உனக்கு தண்டனை கண்டிப்பா உண்டு" - வெள்ளைச்சாமி
"எங்க ஹோட்டல் தொறந்ததும் ஒரு நாள் உனக்கு பிரீ சாப்பாடு போடுறேன். வந்து கொட்டிகோ" - வைஷ்ணவி
"பேச்சு மாற மாட்டியே" - வெள்ளைச்சாமி
"அட மாற மாட்டேன்டா இது உன் ஆத்தா குப்பம்மா மேல சத்தியம்" - வைஷ்ணவி
"ஆனா நான் உங்கள உண்மையா லவ் பன்னேனுங்க அம்மணி" வெள்ளைச்சாமி விடவில்லை அவளை, அவள் மேல் காதல் இல்லை என்றாலும் ஒரு பிடித்தம் அவனுக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது.
"விட்டுப்போடு ராசா, நாம ஜம்முனு சீமைல இருந்து ஒரு நல்ல புள்ளையா பாத்துக்கலாம்" - வைஷ்ணவி
"ஆருங்க உங்கள மாதிரி அடக்க ஒடுக்கமா இருப்பாங்க? சரி நீங்க இவ்ளோ தூரம் கேக்குறதால சரிங்றேன், நம்ம சமையல் மாஸ்டர்-கு தங்கச்சி ஒரு புள்ள இருக்காம்ல. அவுக எப்டி?" சரியாக நூல் விட்டான் சுபத்ராவிற்கு.
"அந்த புள்ளையோட அண்ணன் குரவலைல கரண்டியை வுட்டு ஆட்டிடுவாக. அது எப்படிங்க ராசா வயசுல மூத்த புள்ளையவே பாக்குறீங்க?" - வைஷ்ணவி
"அதெல்லாம் ஒரு கிக்கு. உனக்கு சொன்னா புரியாது. சரி கிளம்புறேன்" அவன் கிளம்ப எத்தனித்த நேரம் மஹேஸ்வரி காபி கொண்டு வர உரிமையாய் எடுக்க போனவன் கையை தட்டிவிட்டு, "இது அவளுக்குடா" என்றார் மஹேஸ்வரி.
"பொண்ணும் தர மாட்டிக்கிறீங்க, காபியும் தர மாட்டிக்கிறீங்க... ரோசம் உள்ளவன்டா இந்த வெள்ளைச்சாமி. இனி இந்த வீட்டு படிய மிதிக்க மாட்டேன்"
"கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் இங்க தான் கறி விருந்து" - வைஷ்ணவி
"காலைலயே வந்துடுவேன்" என கீழே இறங்கியவனிடம், "இலை எடுக்க எல்லாம் ஆள் சொல்லியாச்சு, நீ வர வேணாம்" என கத்திய மகளை முறைத்த மஹேஸ்வரி அவனிடம், "வெள்ள இருடா உனக்கு கீழே காபி வச்சிருக்கேன்" அவனை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
இவை அனைத்தையும் கேட்டு வேலை செய்துகொண்டிருந்த கார்த்திக்கு இதழ்களில் மறையாத புன்னகை. அவனிடம் வெள்ளைச்சாமி வரும் முன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள் இணைப்பு சரியாக துண்டிக்கப்படாது தெரியாமல் பேச, அனைத்தையும் கேட்டுவிட்டான் ஆணவன்.
இரவே அவளிடம் கேட்டுவிட அவன் அழைக்கும் முன் அவளே அழைத்துவிட்டாள், "நான் நாளைக்கு பைன்ஆப்பிள் ஜிலேபி பண்ண போறேன். எனக்கு ரெசிபி வேணும்"
"சமையல் தவற என்கிட்ட பேச உனக்கு எதுவுமே இருக்காதா வைஷ்ணவி?" சிரிப்போடு கேட்டான், "எப்போ கால் பண்ணாலும் ரெசிபி கேக்குற இல்லனா சவூதிய காட்ட சொல்ற?"
"வேற என்ன பேசுறது? சரி நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணுவிங்களா?"
"ஒரு தடவ ட்ரை பண்ணேன், புடிக்கல ஆனா அடுத்த வாரமே அத மறுபடியும் யூஸ் பண்ணனும்னு தோணுச்சு. அதான் அப்போவே அந்த பக்கம் போக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்"
"வேஸ்ட் போங்க, சரி சிகரட்?" - வைஷ்ணவி
"தொட்டு கூட பாக்கல" - கார்த்தி
"என்ன பையன் நீங்க? எந்த பழக்கமும் இல்லனு சொல்றிங்க" - வைஷ்ணவி
"ஏன் இந்த மாதிரி பழக்கம் இருந்தா தான் பையனா?" - கார்த்தி
"நான் அப்டி சொல்லல எனக்கு சிகரட் ஸ்மெல் ரொம்ப புடிக்கும், நீங்க குடிச்சா அப்போ அப்போ மோந்து பாத்துக்கலாம்ல" ஆசையாக சொன்னவள் குரலில் சிறிது ஏமாற்றம்.
"சரி இப்போ கூட ட்ரை பண்ணவா?" - கார்த்தி
"வேணாம்" சலித்துக்கொண்டாள், "அது நல்லதில்லை" - வைஷ்ணவி
"ம்ம்ம்... ஏன் வைஷ்ணவி அன்னைக்கு திருவிழால பாத்தோம்ல, அவனை மாதிரி உனக்கு வேற ஏதாவது பேன்ஸ் இருக்காங்களா என்ன?" - கார்த்தி
"அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க இன்னைக்கு கூட ஒரு பையன் வந்தான், நான் தான் சமையலை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். பாவம் மனசு ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டான்"
சத்தமில்லாமல் கார்த்தி சிரித்தான், "ஓ... நான் சூசைட் பண்ணிப்பேன்னு சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்க பிளாக்மெயில் பன்னேனு எனக்கு நியூஸ் வந்தது..."
வைஷ்ணவி கண்கள் பேந்த பேந்த விழித்தது, "யார்... யார் இப்டி எல்லாம் அபாண்டமான பொய் சொல்றது உங்ககிட்ட?"
ஷெர்லினிடம் மட்டுமே அந்த தகவலை கூறியிருந்தாள், "ஓ அந்த மண்டை ஓடு ஷெல்டரின் சொன்னாளா?" அவனின் சிரிப்பில் உண்மை தெரிந்துவிட்டதோ என்ற பயத்தில், "ஏன் கார்த்... நீங்க அத நம்பள தான?"
"ஷெர்லின் சொன்னா நம்பாம இருக்கலாம், ஆனா வைஷ்ணவி சொன்னா நான் நம்பணும்ல?" அவன் குரலில் இருந்த நக்கலில் தான் மாட்டிக்கொண்டது புரிந்தது, "நீ கால் கட் பண்ணாம பேசிட்டு இருந்த வைஷ்ணவி"
அருகிலிருந்த சுவற்றில் முட்டிக்கொண்டாள் கடுப்பில், "மன்னிச்சிடுங்க கடலைமிட்டாய்" அவனிடம் சரணடைவதை கூட விரும்பியே செய்தாள்.
"அது எப்டி எப்டி நான் ப்ரபோஸ் பண்ணி நீ ரிஜெக்ட் பண்ணிட்டு போனியா?" சத்தமாக வாய் விட்டு சிரித்தான்.
"சமயலு சிரிக்காதிங்க..." வைஷ்ணவி எச்சரிக்கையை அவன் அலட்சியப்படுத்திவிட்டான்.
"அதுக்கும் மேல சூசைட் பண்ணிப்பேன்னு சொன்னேனா?" - கார்த்தி
"யோவ் கடலைமிட்டாய் சிரிச்சீங்க கொன்னுடுவேன்..." வைஷ்ணவி கோவத்தை தாண்டி அவளிடம் இருந்த வெட்கத்தை அந்த குரலே காட்டிக்கொடுத்தது.
"கார்த்தி சொல்லு வைஷ்ணவி..." சிரிப்பு மறந்து குரலின் திவ்னி இறங்கியது கார்த்திக்கு.
வைஷ்ணவி மொத்தமும் அமைதியாகிவிட்டாள், "சாப்பிட்டீங்களா?"
"அப்போ நீ கார்த்தி சொல்ல மாட்ட?" ஏக்கம் ஏமாற்றமாய் உருமாறியது. மௌனம்.
"அதான் அன்னைக்கே நான் சாரி கேட்டுட்டேன்ல டா... இன்னுமா கோவம் போகல?" - கார்த்தி
"கோவம் எல்லாம் போய்டும், இப்போ அத பத்தி பேச வேண்டாம்" என்றாள் மெதுவாக.
ஏனோ அவன் தன்னிடம் இன்னும் கொஞ்சம் கெஞ்சி கொஞ்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆசை அவளுக்கு. ஒரு நாள் நேரில் வரவும் கெஞ்ச விட முடிவெடுத்துவிட்டால் அன்று மலை கோவிலிலேயே.
"சரி உனக்கு என்ன கிப்ட் என்ன வேணும் பூ வக்கிரத்துக்கு?" - கார்த்தி
"என்ன சமயலு, எல்லாத்தையும் என்கிட்ட கேட்டே ஈஸியா வேலைய முடிச்சிடலாம்னு நெனைச்சிட்டீங்களா? எனக்கு என்ன புடிக்கும்னு நீங்களா கண்டு புடிச்சு வாங்கி தாங்க. அது ஒரு ரூபாயா இருந்தாலும் எனக்கு சந்தோசம்" - வைஷ்ணவி
"அப்போ புளிப்பு முட்டாய வாங்கிட வேண்டியது தான்"
அவனின் கேலியில் கோவம் தலை தூக்க, "அதெல்லாம் இப்போ வாங்க தேவ இல்ல, அதுக்கு நாள் இருக்கும்" இரட்டை அர்த்தத்தில் வைஷ்ணவி சொன்னது அவனுக்கு புரியவில்லை, புரிந்த பின்னர் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டான்,
"ஓட்ட வாயும், தேர்ட்டி மைண்ட் உள்ள பொண்ணு தான் ரொம்ப டேஞ்ஜரஸ் தெரியுமா?"
"ஏன் ஏன்? அப்டி என்ன டேஞ்ஜர் என்கிட்டே கண்டுடிங்க நீங்க?" வாயாட அவளுக்கா காரணம் தேவை?
"முதல் ஆபத்தான விசயமே உன்னோட வாய் தான், மிச்ச ஆபத்தை பொறுமையா டைம் எடுத்து தேடி சொல்றேன்" விஷமமாக பேசியவனின் சூட்சமம் புரிந்தபாடில்லை அவளுக்கு.
"ஓ கண்டுபுடிச்சிட்டா மட்டும் என்ன பண்ணிடுங்க நீங்க? திருநெல்வேலி பொண்ணு, வம்புன்னு வந்ததா அருவா தான் பேசும் தெரியும்லலே?" அவன் நேரில் இருந்தால் இந்த சவடால் எந்த பக்கம் செல்லுமென்று பார்க்க அவனுக்கு ஆசை.
"உங்க ஊர் திருநெல்வேலில இருந்து பிரிஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சுங்க அறிவு கொழுந்து" என சிரித்தவன், "இப்போ தெரியுது நீ ஏன் என்ன விடாம தொறத்துனனு"
"ஏன் என் சமையலுக்கு என்ன குறைச்சல் கண்டீங்க?" குரல் உயர்ந்து சண்டைக்கு ஏறி நின்றாள். அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, அது அவனாகவே இருந்தாலும் சரி.
"அவனுக்கு எல்லாமே குறைச்சல் தான்" என்றான் அழுத்தமான குரலில், "அம்மா சொன்னாங்க சாப்ட்வேர் என்ஜினீயர் வரன் ஒன்னு உனக்கு வந்துச்சுன்னு"
தன்னை தாழ்த்திக்கொள்ளவில்லை அவன் ஆனாலும் அவளது குடும்பம் தன்னை இத்தனை சீக்கிரம் ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கவில்லை.
"வரட்டும், இந்த ஜில்லா கலெக்டர் வந்தாலும், தலையை கெத்தா தூக்கிவச்சிட்டு கடலைமிட்டாய் கார்த்திக் தான் வேணும்னு நிப்பேன். என் கடலைமிட்டாய் யாருக்கும் சளச்சவர் இல்ல. எனக்கு ஒரு பிரச்சனைன்னா யோசிக்காம வந்து நின்னவர், நான் அவரோட பொண்டாட்டியா மாறுனா என்ன எவ்ளோ பத்தரமா பாத்துக்குவார்? ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பும், அன்பும் கிடைச்சா உலகமே கைல இருக்க மாதிரி. இத விட எனக்கு எதுவும் பெருசா தெரியல"
இதற்கு மேல் நீ பேசினால் உனக்கு உதை தான் விழும் என்றது அவள் குரலில் இருந்த அழுத்தம். அவளது பதிலில் மௌனமாய் சிரித்தவன், "இப்போ எனக்கு என்ன தோணுது தெரியுமா?" தேன் குலைந்த அவன் குரல், அவளது கோவத்தின் முன்பு மேகத்தினுள் மறைந்த சூரியனாய் காணாமல் போனது.
"உங்களுக்கு என்ன பெருசா தோணிட போகுது? நாளைக்கு பருப்பு சோறு வைக்கலாமா, பால் சோறு வைக்கலாமான்னு சந்தேகம் இருக்கும். அதான?"
"ஹே மக்கு வைஷ்ணவி..." செல்லமாக திட்டியவன், "எனக்கு உன்ன பக்கத்துலயே என் நெஞ்சோட கட்டி வச்சுக்கணும்-னு தோணுது"
அவனது குழைவில் அவள் பேச்சற்று நிற்க, "இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா, எனக்கு உன்ன கொஞ்சனும் போல இருக்கு"
காதில் இருந்த கைபேசியை வயர்லெஸ் ஹெட்போனுடன் இணைத்தவன் இதமான மனதுடன் மெத்தையில் படுத்தான்.
அவள் பதிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவளை சீண்டவேன்றே, "உன் அமைதிய பாக்குறப்ப உனக்கும் அந்த ஆசை இருக்கும் போலயே வைஷ்ணவி"
விழி விரித்து அதிர்ந்து நின்றவள் தன்னை சுதாரிக்கும் முன்பே, அவள் மேலே மீண்டும் ஒரு பழியை போட்டவன் மேல் உரிமை வெட்கம் வந்தது, "என்ன நீங்க என்ன என்னமோ பேசுறீங்க?"
"பேச மட்டும் தானேடா முடியும் இப்போ" அவளுக்கோ அவன் கைகளுக்குள் தான் இருப்பது போல உடல் சிலிர்த்து அடங்கியது.
"நான் கால் கட் பண்றேன்" என்றாலே தவிர காதிலிருந்து கூட கைபேசியை எடுக்கவில்லை, அவன் மூச்சுக்காற்றை கூட மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்தாள் இசையைப்போலே.
"வேலைய விட்டுட்டு வரணும் போல இருக்கு" என்றான் சோகமான உள்ளிறங்கிய குரலில்.
"ஆசைப்பட்டு போனீங்க, இப்டி பாத்திலையே விட்டு வர தானா?" சிறு அதட்டல் பெண்ணிடமிருந்து.
"ஆமா தான்..." என இழுத்தவன், "அப்போ உன்கிட்ட இருந்து தப்பிக்க போனேன்" என்றதும் அவளுக்கு கோவம் தான் ஏறியது உச்சந்தலைக்கு.
"அதான் தப்பிச்சிட்டீங்களே" நிறுத்தியவள் பின்னர், "கல்யாணம் வர தான் அந்த சுதந்திரம்" - வைஷ்ணவி
"தப்பிச்சதா தான் நெனச்சேன், ஆனா உண்மைளயே இப்போ தான் மாட்டிகிட்டேன் போல. அங்க இருந்தா இந்நேரம் சுவர் ஏறி குதிச்சு உன்ன பாக்க வந்துருப்பேன்ல?" ஏமாற்றமும் ஏகமுமாய் அவன் பேசியது கூட அவளுக்கு குதூகலமூட்டியது.
"ஆ வந்து என்ன பண்ணுவீங்க? எட்டி நின்னு டாட்டா காட்ட இந்த பேச்செல்லாம் தேவையா?"
விரிந்த புன்னகையோடு விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனுக்கு என்னென்னமோ ஆசைகள் அலைபாய்ந்தது. அவள் வார்த்தைகள் வேறு அவன் அலைபற்றுதலுக்கு தூபம் போட, "டாட்டா காட்டுனவன் ரொம்ப நல்லவன், இப்போ சுவர் ஏறி குதிக்கிறவன் ரொம்ப கெட்டவன் ம்மா... டாட்டா காட்டுறதுக்கு முன்னாடி ரொம்ப சேட்டை பண்ணுவான்"
அவனின் இது போன்ற பேச்சுகள் அவனுக்கே புதிது, அவளுக்கோ விசித்திர பிறவியாகவே தெரிந்தான்.
"நீங்க சரியில்ல எனக்கு தூக்கம் வருது. நான் போறேன் போங்க"
"வைஷ்ணவி... வைஷ்ணவி" அவன் அழைக்க அழைக்க வெட்க புன்னகையோடு கைபேசியை பார்த்திருந்தவள் ஒரு கட்டத்தில் இணைப்பை துண்டித்துவிட்டாள்.
என்ன விதமான ஈர்ப்பு இது என தெரியவில்லை பேதைக்கு. நேற்று வரை எட்ட நின்று பார்த்தாலே தூரம் போ, பார்க்காதே என ஆணையிட்டவன் இன்று என்னென்னவோ பேசுகிறானே, அதுவும் அந்தரங்க அர்த்தங்களில். உடலே சிலிர்த்தது பெண்ணுக்கு. இன்னும் அவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து மீளவே முடியவில்லை, சுகமான இம்சையாக இருந்தது அவன் பேச்சுகள்.
அவனுக்குமே தெரியும் வைஷ்ணவியை தவிர இந்த இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் இத்தனை இலகுவாக தன்னால் பேசியிருக்க இயலாதென்று. அவள் மொத்தமாக தன்னுடைய அசட்டு அன்பினால் அவனுள் புதைந்த காரணத்தினாலே இந்த உரிமை பேச்சு, எல்லை மீறிய சிறு சீண்டலும் வெளிவருகின்றது.
அதோ இதோ என இருவருக்கும் முக்கியமான பூ வைக்கும் நாளும் வந்தது. வைஷ்ணவி, கார்த்தி இரு வீட்டினரின் உற்றார், உறவினர்கள் கூடி நிற்க வைஷ்ணவியை முழு மனதுடன் தங்கள் மருமகளாக மாற்றிக்கொண்டனர்.
விழாவும் நிறைவாக முடிய, வைஷ்ணவியின் பல நிழற்படங்கள் கார்த்தியின் கைபேசிக்கு மாறிக்கொண்டே இருந்தது, சகோதரி மூலமாகவும் ஷெர்லின் மூலமாகவும்.
அத்தனை புகைப்படங்களிலும் சிரிப்பு சிறிதும் மாறாமல் மஞ்சள் பட்டில், கழுத்தில் மாலை, கை நிறைய வளையல் என பார்த்தவனுக்கு தான் அவளுடன் ஒட்டி நிற்க வேண்டும் என பேராவல் வந்து வதைத்தது.
தந்தை, அன்னை என மாறி மாறி மகனுக்கு அழைத்துக்கொண்டு நடப்பவற்றை கூற, வேளையில் கவனம் செலுத்தவே முடியாமல் போனது
ஆடவனால், முயன்று தன்னுடைய கவனத்தை மொத்தமாய் செலுத்தினான். இரவு மொத்த வேலைகளையும் முடித்து வந்து மெத்தையில் உறங்கும் பொழுது பதினொன்றை தாண்டி இருந்தது. களைப்பில் குளித்து வந்தவன் கைபேசியை அப்பொழுது தான் எடுத்தான்.
நண்பர்களிடமிருந்து வந்த வாழ்த்துகள், குடும்ப குழுவிலிருந்து வந்த சகோதரி பதிவேற்றம் செய்திருந்த புகைப்படங்கள், வைஷ்ணவியிடமிருந்து வந்த செய்தி என வரிசைகட்டி நிற்க, அனைத்தயும் பார்த்து பதில்கூறிய பிறகு இறுதியாக தான் வைஷ்ணவி அனுப்பியிருந்த செய்திக்கு வந்தான்.
இரண்டே செய்தி தான்.
முதல் ஒன்றில் வைஷ்ணவி முகம் கொள்ளா புன்னகையுடன் தன் நெஞ்சோடு கட்டி இருந்த டாபர்மேன் நாய்க்குட்டி. கருப்பு நிறத்தில், கால்களில் மட்டும் பிரவுன் நிறம். பிறந்து இரண்டே வாரமான அந்த நாய்க்குட்டியை அவளது விருப்பம் அறிந்து நண்பன் மூலம் வைஷ்ணவியின் கைக்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் வாங்கி கொடுத்திருந்தான் பரிசாக. அதன் கழுத்தில் ஒரு நாய் சங்கிலியோடு எலும்புத்துண்டு டாலர் ஒன்றும் தொங்கியது. அதுவும் அவன் ஏற்பாடு தான்.
இரண்டாவது செய்தியில் ஒரே ஒரு இதயம் துடித்துக்கொண்டிருந்தது. ஆன்லைனில் தான் இருந்தாள் அவன் வருகைக்காக வைஷ்ணவி. தன்னவளையும் அவள் கையிலிருந்த நாயையும் பார்த்தவன் மீண்டும் தன்னவளிடம் கண்களை செலுத்த அந்த சிறிய முகத்திலிருந்து கண்களை பிரிக்க முடியவில்லை, என்றுமில்லாத அளவிற்கு இன்று மினுமினுப்பும் பிரகாசமும் இருந்தது அவளிடத்தில்.
'என்ன பதிலையே கானம்?' - வைஷ்ணவி
அவள் கேள்விக்கு பிறகே தெளிந்தவன், 'நான் இருக்க வேண்டிய இடம்' என அனுப்பிவிட்டான் சோகமாக. அவன் பதிலில் இங்கு வைஷ்ணவி வாய்விட்டு சிரிக்க உடனே அழைத்துவிட்டாள் கார்த்திக்கு.
"என்ன நான் எவ்ளோ கொடுமய அனுபவிக்கிறேன்னு காதால கேக்க கால் பண்ணிட்டியா?" என்றான் எடுத்த எடுப்பிலேயே.
சிரிக்காமல் அவனுக்கு அழைத்தவளுக்கு இப்பொழுது மீண்டும் சிரிப்பு வந்துவிட்டது, உங்கள யார் அங்க போக சொன்னது? அப்போ மாதிரி ஒரு வாரம் லீவு போட்டு வந்துருக்கலாம்ல?" என்ன தான் வெளியில் சிரித்தாலும் அவன் உடன் தேவைப்பட்டான் அவளுக்கும்.
"இல்லன்ற தைரியத்துல தான பேசுற? சரி நீ எனக்கு என்ன பண்ண போற வைஷ்ணவி?" என்றான் கேள்வியாக.
அவளும் யோசிக்காமல், "என்ன வேணாலும் தருவேன்" என்க,
"என்ன வேணாலுமா டா?" அவன் விஷம கேள்விக்கு பிறகு தான் அவன் புரிந்துகொண்ட அர்த்தத்தை அவள் புரிந்தாயிற்று.
"ஹ்ம்ம்... என்ன நீங்க?" என சிணுங்கினாள்.
"சரி சிணுங்காத மூட் மாறிடும் மறுபடியும்" என்றவன், "எனக்கு நீ மறுபடியும் வேலைக்கு போகணும் வைஷ்ணவி" என்றான் தீவிரமாக.
"ம்ம்ஹ்ம் நான் போக மாட்டேன்" உடனே பதில் வந்தது அவளிடமிருந்து."ஏன்?""போக மாட்டேன்னா போக மாட்டேன் தான். வராதுன்னு சொல்லிட்டு போக சொன்னா என்ன அர்த்தம்?" கோவமாக வந்தது வைஷ்ணவிக்கு. என்ன தைரியம் இவனுக்கு? நான் அவன் வேலைய கெடுத்த மாதிரி பேசிட்டு இப்போ போகணுமாம்ல?"கோவத்துல பேசுன வார்த்தை அது""ஏன் உங்களுக்கு மட்டும் தான் கோவம் வருமா? நீங்க தானே வர வேணாம்னு சொன்னிங்க?" முறுக்கிக்கொண்டாள் அவனிடம்.
"ஏன் நீங்க தானே வர வேணாம்னு சொன்னிங்க?" முறுக்கிக்கொண்டாள் அவனிடம்.
"அதே நான் தான் இப்போ வான்னு சொல்றேன். நீ படிச்ச டிகிரிக்கு ஒரு மரியாதை இருக்கு வைஷ்ணவி. உனக்கு வேலைக்கு போக எல்லாம் விருப்பம் இல்லனு தெரியும் ஆனாலும் படிச்சத ஒரே ஒரு தடவையாவது செயல்படுத்தாம எதுக்கு படிக்கணும்? உனக்கு கிடைச்ச வாய்ப்பு எத்தனை பேர் கிடைக்காம கஷ்டப்படிருப்பாங்க?
அதெலாம் மனசுல நியாபகம் வச்சு முடிவெடு, நான் பேசுனது தான் உனக்கு பெருசா தெரியும் ஆனா உன்னோட அப்பா ஆசைக்காவது இந்த ஒரு வேலை பாரு. அதுக்கு மேல நான் உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்" என்றான் உறுதியாக.
"கடமைக்காக வேலை பாக்க சொல்றிங்களா?" - வைஷ்ணவி
"உனக்கு அது கடமை வைஷ்ணவி, ஆனா உனக்கு என்னோட மனைவி என்னோட ஹோட்டல் கட்டுற என்ஜினீயர்-னு நினைக்கவே பெருமையா இருக்கும். இதுக்கும் மேல உன் இஷ்டம்"
அவள் மனதை எங்கு தட்ட வேண்டுமோ அங்கு தட்டி அவள் உணர்வுகளை தூண்டிவிட்டு உறக்கம் வருவதாக இணைப்பை துண்டித்துவிட்டான்.
வெகு நேரம் அவன் வார்த்தைகளும், தந்தையிடம் வேலைக்கு செல்ல மாட்டேன் என்று கூறிய பொழுது அவர் முகம் வாடியதையும் பார்த்தவளுக்கு கார்த்தி கூறியதை செய்வதை தவிர வேறு வழி இல்லாமல் போனது.
'வேலைக்கு போறேன்' கடமைக்காக அவனுக்கு குறுந்செய்தியை அனுப்பிவிட்டு அவள் உறங்கிவிட, அவளது இந்த பதிலுக்காகவே காத்திருந்தவன் நிம்மதியாக உறக்கத்தை தழுவினான்.
How is the chapter? comments please...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro