Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

டிங் டாங் - 17

நேரம் மாலை ஐந்தரையை தாண்டி சென்றிருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டம் மட்டும் இன்னும் நகராமல் அப்படியே இருந்தது. காவல்துறையினரின் வாகனமும், பல அரசு வாகனங்களும் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருக்க வைஷ்ணவியும் ஷெர்லினும் ஒரு காவல் அதிகாரியின் பின்னே அவர் செல்லும் இடமெல்லாம் அலைந்துகொண்டிருந்தனர். 

அங்கு வேலை பார்க்கும் அனைவரும் இடத்தில் இருந்தனர். சுந்தர் முதல் சித்தாள், கொத்தனார் என அனைவருக்கும் வரிசையாக மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அனைத்தையும் ஒரு ஓரமாய் நின்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சுப்பிரமணிக்கு தான் மனதில் பெரிய பாரம் குடிகொண்டது. 

மகன் எவ்வளவு ஆசையாக துவங்கியது இப்படியா வந்து நிற்க வேண்டும்? அவன் பொறுப்பில் விட்டது, அவன் நண்பர்கள், பங்குதாரர்கள் வந்து கேட்டால் என்ன பதில் கூறுவது... இனி இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று சண்டையிட்டால்?

இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று சண்டையிட்டால் என்ன கூறி சமாளிப்பது என குழப்பங்களும் கேள்விகளும் சரி விகிதத்தில் அவரை கிறங்கடித்தது. இதில் மஹாலக்ஷ்மி தொடர்ந்து கைபேசியில் அழைத்துக்கொண்டு இருந்தார். மனைவியின் பதட்டம் புரிந்தாலும் பதில் என்ன பேசுவதென்று தெரியாமல் தவிர்த்துவந்தார். 

"வைஷு என்னடி உன் ஆளு கொலை பண்ற அளவு பெரிய ஆளா என்ன?" 

காதை கடித்த ஷெர்லினை பார்த்து முறைத்த வைஷ்ணவி, "ஓங்கி ஒரு மிதி மிதிச்சா குத்தால அருவில தான் போய் விழுவ" 

"நீ கோவப்படுத்த எல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா நீயும் ஒடந்தையா இருப்பியோனு எனக்கு சந்தேகம் வருது" 

"ச்ச ச்ச... சாதாரண சாப்பாடுக்கே முதல உன்ன வச்சு தான் டெஸ்ட் பண்ணுவேன், இதுல சொல்லவா வேணும்? எப்படி எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம், எங்க அறுத்த சட்டுனு உசுரு போகும்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு தான் அடுத்தவன்" - வைஷ்ணவி 

"சரி எதுக்குடி ஜேம்ஸ(ஷெர்லின் தந்தை) இங்க வர வச்ச?" - ஷெர்லின் 

"உன் அப்பா மண்டைல ஈஸியா மொளகா அறச்சிடலாம்" - வைஷ்ணவி 

"அந்த ஆளுக்கு எல்லாம் அவ்வளவு பவர் இல்லடி. டம்மி பாவா. உள்ள ஒளிஞ்சிருக்க அம்பி வெளிய தெரிய படுத்த கூடாதுன்னு தான் அந்த முருக்கு மீசையே" தன்னுடைய தந்தை என்னும் பார்க்காமல் சரமாரியாக புகழ்ந்தாள் ஷெர்லின். 

"என்னமோ பண்ணட்டும் உன் அப்பாகிட்ட சொல்லி அவரு ஆளுங்கள இங்க இருந்து வேகமா காலி பண்ண சொல்லு" 

"உன் வீட்டுல வாடகைக்கு இருந்தவனை காலி பண்ண சொல்ற மாதிரி போக சொன்னா ஒடனே அவங்க போகணுமா? நல்லா இடத்தை சுத்தி அலசி ஆராஞ்சு தான் கெளம்புவாய்ங்க. சரி நீ இப்போ என்ன பண்ண போற?" - ஷெர்லின் 

"என்ன பண்ண போறனா? மணி ஆறாச்சு உங்க அப்பாகிட்ட காசு வாங்கு டீ குடிச்சிட்டு வரலாம்" - வைஷ்ணவி 

"உலகமே அழிஞ்சாலும் டீ மட்டும் வேளா வேளைக்கு குடிச்சிடு. உன் ஆளோட மனசுல அழுத்தமா ஒக்கார இத விட சரியான சந்தர்ப்பம் வேற எதுவுமே இல்ல" - ஷெர்லின் 

"ஓ கால் பண்ணி பீல் பண்ண வேணாம்னு ஆறுதலா பேசவா?" 

"ம்ம்ம் கையோட சவூதி-கு ஒரு டிஸ்யூ பேப்பர் டப்பாவையும் பார்சல் அனுப்பி விடு" நாக்கை மடித்து தோழியை பார்த்து திட்ட வந்த ஷெர்லின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, "ஏண்டி கெழவியா மண்டைய போட்டுச்சு? 

போன் பண்ணி ஆறுதல் சொல்லி கண்ண தொடச்சு விட, இது தொழில் சம்மந்தப்பட்டது. ஆரம்பத்துலையே இவ்ளோ பெரிய பிரச்னை வந்தா பெரிய தடங்களா நெனச்சு பீல் பண்ணுவாங்க. சோ இத உன் ஆள் காதுக்கு போகாம நீயே பிரச்னையை சால்வ் பண்ணி விடு" 

ஏதோ பிடித்தது, ஏதோ உதைத்தது ஷெர்லின் திட்டம், "அது எப்படி ஷெர்லினு உன்ன மாதிரி ஒன்னத்துக்கும் ஆகாத உதவாக்கரையையும், உன் அப்பா மாதிரி டம்மி போலீஸ் எல்லாம் கூட வச்சிட்டு இத செஞ்சு முடிக்க முடியும்?" யோசனையோடு தாடையை தடவினாள். 

"ஆள் பலம் இல்ல, ஆனா உனக்கு தான் உன் வாய் கால்வாய் மாதிரி நீண்டுட்டு இருக்கே. அத யூஸ் பண்ணு" - ஷெர்லின் 

"அதெல்லாம் சரி தான்... ஆனாலும் இந்த சமையலுக்கு தெரிஞ்சா அடுப்புக்கு என்ன விறகாக்கிடுமே" - வைஷ்ணவி 

"விறகா? கட்டி புடிச்சு முத்தம் தான் குடுப்பாரு லா..." 

முகம் மலர்ந்து, "அப்படிங்கிற?" - வைஷ்ணவி 

"ஆமா... முதல உன் மாமனாரை பேசி சமாதானம் படுத்து" சரி என்று வைஷ்ணவி சுப்பிரமணி இருந்த இடத்திற்கு நடந்தாள். 

"சார் உங்க பையன வர சொல்லுங்க" ஒரு கான்ஸ்டபில் வந்து சுப்ரமணியிடம் கேட்க அப்பொழுது அருகே வந்த வைஷ்ணவி காதில் விழுக வேகமாக அவர் அருகில் வந்து, "சார் உங்கள இன்ஸ்பெக்டர் கூப்பிட சொன்னாரு" தூரத்தில் நின்ற ஷெர்லின் தந்தையை கை காட்டிவிட்டாள். 

"வர சொல்லுங்க சார்" மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திவிட்டு அந்த போலீஸ் செல்ல கைபேசியை எடுத்து மகனுக்கு அழைக்க போனவரை, 

"வேணாம் அங்கிள்" என்ற வைஷ்ணவி வார்த்தை தடுத்து வைத்தது. 

"அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவருக்கு விசயமும் தெரிய வேணாம். ப்ளீஸ் இப்போ வந்துர்றேன்" அந்த கான்ஸ்டப்பில் சென்ற திசையில் விரைந்தவளை அந்த கான்ஸ்டபிலும், ஷெர்லின் தந்தையும் ஒரு சேர பார்க்க தோழி அருகே சென்று அமைதியாக நின்றுகொண்டாள் வைஷ்ணவி. 

"நீங்க போங்க நான் பேசிக்கிறேன்" அவரை அனுப்பி வைத்து வைஷ்ணவியை ஜேம்ஸ் முறைத்தார். 

"பெரிய மீசை வச்சிருந்தா மதுரை வீரன்-னு என்னமோ உன் அப்பனுக்கு" வைஷ்ணவி தோழியை காதில் கேட்டாள். 

"அவருக்கு கேக்குற மாதிரி பேசு அவரே பதில் சொல்லுவார்" 

"என்ன வைஷ்ணவி இது? எங்களை வேலை செய்யவே விட கூடாதுன்னு முடிவோட தான் இருக்கியா?" - ஜேம்ஸ் 

"அவரே ரொம்ப நொந்து போய் நிக்கிறாரு, அவர்கிட்ட உங்க பையன வர சொல்லுங்க-னு சொன்னா என்ன பண்ணுவார்? அவரோட பையன் இப்போ சவூதில இருக்காங்க அங்கிள். எப்படி வர முடியும்?" - வைஷ்ணவி 

"வரணும் வைஷ்ணவி. இடத்தை பேசி வாங்கிருக்குறது அவன் தான். அப்ப அவன் தானே முக்கியம்? இது என்னோட ஏரியால வர்றதால என்ன தான் இன்ச்சார்ஜ் எடுத்துக்க சொல்லிட்டாங்க" என்றார் களைப்பாக. 

"அப்ப வசதியா போச்சு" - வைஷ்ணவி 

"அது ஏன் அவர் வரணும்? வெளிநாட்டுக்கு போனவரை உங்களால வர சொல்ல முடியுமா? கூடாது தகப்பனே கூடவே கூடாது. இது சட்டத்துலயே இல்ல" இந்த பாய்ண்ட் நமக்கு தோன்றவில்லையே என்று தோழி பக்கம் திரும்பி கையை நீட்டி இருவரும் சிரித்த முகத்துடன் கை குலுக்கிக்கொள்ள, 

"எத்தனை படம் பாத்துருப்போம்" பெருமையாக ஷெர்லின் தந்தையை பார்த்து கர்வத்துடன் நின்றாள். 

"அதையும் மீறி நீங்க அவரை வர சொல்லியே ஆவேன்னு சொன்னா உங்க மேல கேஸ் போடப்படும். வேணும்னா அவர் ஆறு மாசம் கழிச்சு வர்றப்ப விசாரிச்சுக்கோங்க" - வைஷ்ணவி 

"எதுக்கு அந்த பையன் மேல உங்களுக்கு இவ்ளோ அக்கறை? பெத்தவரே அமைதியா அங்க நிக்கிராறுல?" போலீஸ் புத்தி சரியாக வேலை செய்தது தோழிகளின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டு. 

"நீங்க ஜேம்ஸ் பாண்ட் தான் ஜேம்ஸ் பாண்ட் தான். அவர் எங்களுக்கு வேலை வாங்கி தந்தவர்" - வைஷ்ணவி 

"மரியாதையே இல்லாத வீட்டுல ஒரு வேளை தோசை சாப்பிட்டாலும் கால் மேல கால் போட்டு சாப்புடுறோம் இப்போ தான்" - ஷெர்லின்

"அது தொடரணும்னா இந்த இடத்துல வேலை நிக்காம நடக்கணும்" - வைஷ்ணவி 

"அதுக்கு அவர் ராசி நட்சத்திரம் பாக்காம இந்த ஹோட்டல முழுசா கட்டி முடிக்கணும்" - ஷெர்லின் 

வீட்டிலிருந்து தோழியை அழைத்து கிளம்பும் பொழுதே ஜேம்ஸ் தங்களின் மேல் சந்தேகம் வந்தால் எதை பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்தவர்களுக்கு சரியாக அது உதவவும் செய்தது. 

"நான் பெத்ததும் சரியில்ல, அதுகூட சுத்துறதும் சரியில்ல" புலம்பியவாறே அங்கிருந்து அகன்றார். 

சுப்பிரமணி இருந்த இடத்திற்கு வந்த வைஷ்ணவி, "அவருக்கு விசியம் தெரிய வேணாம் அங்கிள். நாமளே முடிஞ்ச அளவு பாத்துக்கலாம்" 

"அது சரி வராது ம்மா... அவன் ஆரமிச்சது. அவனே வந்து பாக்கட்டும்" ஒரு இடத்தை பார்க்கும் பொழுது அதை தெளிவாக விசாரிக்க வேண்டாமா என்ற கோவமும் மகன் மேல் உதித்தது அவருக்கு. 

"அவர் வந்துனா? அங்க இருக்க வேலைய விட்டுட்டு இங்க வர சொல்றிங்களா அங்கிள்?" 

"வந்து தானே மா ஆகணும்? சின்னதா ஒரு கடைய ஆரமிச்சு அதுல கொஞ்சம் லாபம் பாத்துட்டு அப்றம் இந்த மாதிரி பெரிய முயற்சி எடுக்கணும். எடுத்த ஒடனே பெரிய குதிரைல தான் ஏறுவேன்னு நின்னா இப்டி தான் நடக்கும்" - சுப்பிரமணி 

"சின்ன கடை, சின்ன முயற்சி, சின்ன வீடு இப்டி எல்லாமே சின்னதா பாத்துட்டே இருந்தா எப்ப தான் அங்கிள் வளர முடியும்? இவ்ளோ பெரிய ஸ்டேப் எடுக்குறாருன்னா உங்க பையனுக்கு தன்னோட திறமை மேல எவ்ளோ நம்பிக்கை இருக்கும்னு யோசிச்சு பாருங்க" 

"அவன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா ஒரு இடத்தை வாங்குறப்ப அத தெளிவா விசாரிக்க வேணாமா?" - சுப்பிரமணி 

"இதெல்லாம் நடக்கும்னு அவருக்கு தெரியுமா அங்கிள்?" 

"இப்போவே இங்க இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு நாள பின்ன இங்க யார் சாப்புட வருவாங்க? இது அவனோட தொழிலுக்கு தானே அடியாகும். அவன் பார்ட்னர்ஸ் வந்து கேள்வி கேட்டா என்னால என்னமா பதில் சொல்ல முடியும்?" 

"அதெல்லாம் புரிஞ்சுக்குவாங்க அங்கிள். இப்போ இந்த பாடி எடுத்து கூட பின்னாடி இருக்க இடம் தான். அந்த இடத்தை மட்டும் விட்டுட்டு மத்த இடத்துல ரிசார்ட் கட்டுனா ப்ராப்லம் வராது. ப்ளீஸ் அங்கிள் அவர்கிட்ட இந்த விசயத்த மட்டும் கொண்டு போகாதீங்க. தெரிஞ்சா ஒடனே கெளம்பி வந்துடுவார், உங்க எல்லாரோட எதிர்ப்பையும் மீறி போயிருக்காருன்னா அவருக்கு அது மேல ரொம்ப விருப்பம் இருந்துருக்கணும்" கண்கள் சுருங்க கெஞ்சிய வைஷ்ணவியை நிராகரிக்கவும் அவருக்கு மனம் வரவில்லை. 

"எனக்கு இந்த ஊர்ல உதவிக்கு கூப்புட கூட யாரையும் தெரியாது ம்மா" என்றார் சுருங்கிய முகத்துடன். 

"அதெல்லாம் பிரச்சனை இல்ல அங்கிள். தோ அங்க நிக்கிறார் பாருங்க" 

தூரத்தில் நின்று கைபேசியில் தீவிரமாக பேசிய ஜேம்ஸை கை காட்டினாள், "அவர் நமக்கு தெரிஞ்ச பையன் தான். எதுனா சொன்ன செஞ்சிடுவார். இந்த கேஸ் கூட அவர் பொறுப்புல தான் இருக்காம். வாங்க பேசலாம்" என சுப்ரமணியை ஜேம்ஸ் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள். 

சுப்ரமணியை பார்த்ததும் ஒரு நிமிடம் என சைகை செய்தவர் பேசி முடித்து, "சார் பாடி பாத்தா ஆறு மாசம் முன்னாடி பொதச்ச மாதிரி இருக்கு. முக்கால்வாசி அழுகி போச்சு. நீங்க இந்த ஊருக்கே வந்து மூணு மாசம் கூட ஆகலானு பாப்பா சொல்லுச்சு. இடத்தோட ஓனர் சிங்கப்பூர்ல தான் அஞ்சு வருசமா இருக்காராமே" - ஜேம்ஸ் 

"ஆமா சார். இடத்தை பேசி முடிக்கிறப்ப சைன் பண்ணிட்டு ஒடனே கெளம்பிட்டதா தம்பி சொன்னான்" - சுப்பிரமணி 

"ம்ம்ம்... இடம் காலியா இருக்குறத பாத்து ஏதோ ஒரு திருட்டுப்பைய தான் இந்த வேலைய பாத்துருப்பான். சோ கவலை படாதீங்க. நான் பாத்துக்குறேன்" - ஜேம்ஸ் 

"ரொம்ப தங்க்ஸ் சார். பையன எதுவும் வர சொல்லனுமா?" 

வைஷ்ணவியை பார்த்த ஜேம்ஸ் கண்கள் பிறகு மீண்டும் சுப்ரமணியிடம் சென்றது, "வேணாம் சார். அப்றம் என் மேல யாரவது கேஸ் போட்டுடுவாங்க. ஆமா நீங்க என்ன வேலை பாக்குறீங்க?" 

"நம்ம கவெர்மென்ட் ஸ்கூல் ஹச்.எம்" மாமனாருக்காக இங்கிருந்து பதில் சென்றது. "சரி சார். நான் சொல்றப்ப ஸ்டேஷன் வரைக்கும் மட்டும் வந்துட்டு போக வேண்டி வரும்" - ஜேம்ஸ் 

"அது..." 

சுப்பிரமணி பேசும் முன்பே, "அதெல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள். நீங்க வேலைல பிஸியா இருந்தா அவர் வீடு நம்ம வீட்டு பக்கம் தான். அவரே வந்து விசாரிச்சிட்டு போயிடுவார். என்னங்க போலீஸ்கார்?" 

வைஷ்ணவிக்கு குறும்பு சற்று அதிகம் இருக்க ஜேம்ஸ் ஒரு காவல்துறை அதிகாரி என்பதை கூட மறந்து பல முறை தோழியுடன் சேர்ந்து செய்த சேட்டையை எல்லாம் ஊக்குவித்தவருக்கு இப்பொழுதும் அவளை எதுவும் பேச முடியவில்லை. தன் தந்தையிடம் பேசும் அதே உரிமை பேச்சை அவரிடமும் காட்டுபவளுக்கும் வம்பிற்கு இழுக்க தயக்கமே இருந்ததில்லை. 

"தொழில் பண்ண போற இடம் கொஞ்சம் மீடியா-கு தெரியாம..." என சுப்பிரமணி இழுத்தார். 

"சரி சார். பிரச்சனை வராம நான் பாத்துக்குறேன்" அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இடமே ஆள் அரவமே இல்லாமல் போனது. 

சுந்தர் தான் அமைதியாக நிற்க, "பேருக்கு தான் சென்னைல பெரிய பிஸ்னஸ் மேன். ஆனா பாரு ஒரு போலீஸ சமாளிச்சு அனுப்ப முடியல" ஜாடையாக அருகில் வந்து நின்று ஷெர்லின் பேசினாள். 

"போலீஸ்கு காசு குடுத்து அனுப்பி வைக்க சொல்ல சொல்றியா?" - சுந்தர் 

"ஏன் பண்ண முடியாதா?" - ஷெர்லின் 

"பண்ணலாமே... உன் வீட்டுக்கு வர வைக்கவா?" குறும்பு சிரிப்புடன் அவளை பார்த்து புருவத்தை உயர்த்தி கேட்டான். 

"ஹெலோ... என் தோப்பனார் போலீஸ். தெரியுமா?" 

"தெரியுமே" ஜேம்ஸ் இருந்த பக்கம் கண்ணை காட்டி கூறியவன், "போலீஸ் மகளை அர்ரெஸ்ட் பண்ணா தானே என் பவர் தெரியும்?" 

"இது ப்ராடு என்ஜினீயரா இருக்கே" அதிர்ந்தவள் அந்த இடத்தை விட்டு செல்ல, அவள் கையை பற்றி நிற்க வைத்தவன், 

"ப்ராட சமாளிக்க நானும் ப்ராடா மாறி தானே ஆகணும்" கண் சிமிட்டி சிரித்தவன் கைகளை உதறியவள் ஓடி சென்று தோழியோடு நின்றாள். ஆனால் அப்பொழுதும் அவள் தன்னை பார்ப்பது அறிந்தவன் சிரிப்போடு சுப்பிரமணி இருக்கும் இடத்திற்கு சென்றான். 

"அங்கிள் பயப்பட வேணாம். இந்த இடம் உங்க பேர்ல தான் குத்தகைக்கு எடுத்ததா கார்த்திக் சொல்லிருக்கார். கடைசியா இருக்க அரை ஏக்கர் இடத்தை மட்டும் விட்டுட்டு மத்தத மட்டும் நாம லாயர் வச்சு மூவ் பணிக்கலாம் அங்கிள். நல்ல வேலை பின்னாடி இருக்குற இடத்தை பட்ஜெட் யோசிச்சு இப்போதைக்கு விட்டுடலாம்னு கார்த்தி சொன்னார்" 

"அவனோட கனவு ப்பா இது. காலேஜ் போய் ஒரு வருசத்துல ராஜஸ்தான்ல ஒரு ட்ரிப் போய்ட்டு வந்து அதோட சின்ன வெர்ஷன்ல கட்டணும் ப்பா-னு சொல்லிட்டே இருப்பான். அது தான் இன்னைக்கு ஒரு புள்ளியா இங்க வளந்து நிக்கிது. இத கருக விட்டுட போறோம்னு மனசு இன்னும் அடிச்சுக்குது" வேதனை நிறைந்த குரலில் தன் தந்தைக்கு நிகரான ஒரு மனிதர் பேசவும் சுந்தர் மனம் கனத்தது. 

"ரொம்ப யோசிச்சு உங்க ஒடம்ப கெடுத்துடாதீங்க அங்கிள். நாம நல்லபடியா இத கட்டி முடிக்கிறோம். கார்த்தி பார்ட்னர்ஸ் எல்லார்கிட்டையும் நான் இன்னைக்கு ரூம்கு போய் பேசுகிறேன். கார்த்தியை டிஸ்டர்ப் பண்ணிக்க வேணாம்" 

"உனக்கு ஏன் ப்பா வீண் சிரமம்? நானே பேசுகிறேன் அந்த பசங்ககிட்ட" - சுப்பிரமணி 

"இல்ல அங்கிள் நீங்க வீட்டுல இருக்கவங்கள சமாதானம் படுத்துங்க" அவரை சமாதானம் செய்து வைத்தான் சுந்தர். 

இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்ததை விளக்கமாக கூறி, மகனிடம் இது பற்றி பேசவே வேண்டாம் என்று உத்தரவை விட்டிருந்தார். 

அதற்கடுத்து வந்த ஒரு வாரத்தில் சுப்பிரமணி அரை மனதாய் பள்ளி செல்வது, மீண்டும் ஒரு குழப்பத்துடன் அமர்ந்திருப்பார். மெதுவாக அவர்கள் வீட்டிற்குள் வந்த வைஷ்ணவி மாமியாரிடம் சென்று சமயலறையில் நின்றுகொண்டாள் பெரிய சிரிப்போடு. 

"என்னடா ஏன் இந்த பரபரப்பு?" பாத்திரங்களை அடுக்கி வைத்தவர் வைஷ்ணவியின் முகத்தை பார்த்து சிரிப்போடு கேட்டார். 

"ஆமா த்தை ஒடனே வெளிய வாங்க அம்மா வைட்டிங்... வீட்டுல சொல்லிட்டேன் உங்க பையன் விசயத்த" 

மஹாலக்ஷ்மி விழி விரித்தார், "ஏண்டா சொன்ன? சூழ்நிலை வேற சரியில்ல... என்ன நினைப்பாங்க வீட்டுல?" 

"அதெல்லாம் ஒன்னும் நினைக்கல. நான் உங்க பையன எந்த சூழ்நிலையையும் விட மாட்டேன்னு சொல்ல தான் எல்லாத்தையும் ஒடச்சேன். அம்மாவே ஆரம்பத்துல அந்த ஐடியால தான் இருந்தாங்க போல. உங்க அண்ணன் பொண்ணு இருக்கவும் தான் கேக்கலையாம்... அதுவும் இல்லாம நான் லவ் பன்றேன்னு தெரிஞ்சதும் முடிவுல ஸ்ட்ரோங்கா நிப்பாங்க. நீங்க கெத்தா பையன் வீட்டுக்காரங்க மாதிரி அம்மாகிட்ட வந்து பேசுங்க" கையேடு அவரை இழுத்து வாயிலுக்கு அழைத்து சென்றாள். 

அங்கு வைஷ்ணவிக்கு இருக்கும் அதே சிரிப்போடு மஹேஸ்வரி இருந்தார். மஹாலக்ஷ்மி அருகில் சென்றதும் அவர் கையை பற்றியவர், "எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சுபி அம்மா. கார்த்தி மாதிரி ஒரு நல்ல பையன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு குடுத்து வச்சதுன்னு அடிக்கடி யோசிப்பேன். இப்போ பாவம் தம்பி, என் பொண்ணுகிட்ட மாட்ட போறாரா?" 

"என்ன மஹேசு. என்னையவே பகைச்சுக்க போறியா? உன் பொண்ணு கிடைக்க தான் உன் மாப்பிள்ளை குடுத்து வச்சிருக்கணும்" அன்னையிடம் சண்டைக்கு நின்றாள் பெண். 

மஹாலக்ஷ்மியோ சங்கடத்தோடு, "இல்ல வைஷ்ணவி அம்மா, நிலைமை கொஞ்சம் சரியில்ல. பிரச்சனை ஓஞ்சதும் பேசலாம்னு நினைச்சோம்" 

"இதுக்கு எதுக்கு யோசிக்கணும். பையன பத்தி தெரியும், குடும்பத்தை பத்தியும் தெரியும். இதுல நடுல வர்ற ஒரு சின்ன பிரச்னையை பாத்து பசங்க வாழ்க்கையை நாம தடை போட கூடாதுல" - மஹேஸ்வரி 

"சரி தான் வைஷ்ணவி அம்மா... ஆனா இவங்க அப்பாக்கு அவனோட பார்ட்னர்ஸ் யாராவது பின் வாங்கிட்டாங்கனா என்ன பண்றதுன்னு ஒரே யோசனை" - மஹாலக்ஷ்மி 

"பார்ட்னர் தானே வேணும்? என் அண்ணன் வருவான்... என்ன மம்மி?" - வைஷ்ணவி 

"ஆமா அவனுக்கு-னு ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு அவங்க அப்பாக்கு ஆசை. அத உங்க கூட பண்றதுல அவருக்கு சந்தோசம் தான் இருக்கும். எதுக்கும் அவர்கிட்ட கேட்டுட்டு ஒரு வார்த்தை சொல்றேன். பிரச்சனை வந்தா பயப்பட வேணாம் வைஷ்ணவி அம்மா" ஆறுதல் வார்த்தைகள் கூறியவர் மேலும் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பினார். 

இரவு பதினோரு மணியளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தீவிரமாக அலசிக்கொண்டிருந்தவளுக்கு அவள் சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் கார்த்தி அழைத்திருக்க என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் சந்தோஷத்தில் துள்ளியவள் ஒருவழியாக மனதை நிதானமாகி காதில் வைக்க, "யாருங்க நீங்க என் விசயத்துல தலையிட?" காட்டமான அவனது அந்நிய குரலில் அப்படியே சிலையானாள் பெண். 



Hi epdi iruku? Comments please...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro