டிங் டாங் - 16
சென்றிருந்தது ஒரு வாரம் கார்த்தி சவூதி சென்று. கடந்த ஒரு மாதமாக குற்றாலத்தில் மழை அதிகம் இருப்பதால் கட்டிட வேலையும் பாதியிலேயே நிற்க, வைஷ்ணவிக்கு தான் கொண்டாட்டமாக போனது.
வேலை செய்ய தேவையில்லை என்று. ஷெர்லின், வைஷ்ணவி இந்த விடுமுறையை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். ஒரு நாள் வைஷ்ணவி வீடு, ஒரு நாள் ஷெர்லின் இல்லம் என மாறி மாறி படம் பார்க்க, கேலி செய்ய என நாட்கள் ஆசையாகவும் அமர்த்தலாகவும் சென்றது.
மஹாலக்ஷ்மி தான் வருத்தத்தில் இருந்தார், "அவன் சீசன் வர்றதுக்குள்ள எப்படியாவது வேலைய முடிச்சிடணும்னு சொன்னான் வைஷு இப்டி ஒரு மாசம் வேலை நின்னுபோச்சே. அவன் ரொம்ப வருபதப்படுறான் டா"
"த்தை இயற்கையை யாரால நிறுத்த முடியும் சொல்லுங்க. எல்லாமே நல்லதுக்கு தான். பேஸ்மென்ட் போட்டுருக்கோம். மழை நல்லா பெஞ்சா பில்டிங் ஸ்ட்ரோங் தானே ஆகும்?"
"அதுக்குன்னு ரெண்டு வாரமாவா?" முகம் வாடி கேட்டார்.
"என்ன இப்போ உங்களுக்கு போர் அடிக்கிதா? எங்க வீட்டுக்கு குடும்பத்தோட பொண்ணு கேக்க வாங்க. வாத்தி ஏதோ பையன பத்தி ரொம்ப தீவிரமா விசாரிச்சிட்டு இருக்கார்"
"வைஷு நிஜமாவா?" அதிர்ச்சியில் வாய் பிளந்தார் மாமியார்.
"ஆமா கோவில்பட்டில இருக்காங்களாம் பையன் அம்மா அப்பா. அவன் சென்னைல ஒர்க் பன்றானாம்" தன்னை இந்த செய்தி எல்லாம் சுத்தமாக பாதிக்கவில்லை என்று திடமாக நின்றாள் வைஷ்ணவி.
"என்னடா இப்டி சொல்ற?" அவளுக்கும் சேர்த்து அவர் ஷாக் ஆனார்.
"இதுல சொல்ல இன்னும் என்ன இருக்கு த்தை. என்ன நடந்தாலும் சரி, யார் என்ன சொன்னாலும் நான் உங்க பையன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன். யார் என்ன சொன்னாலும் என்னோட முடிவு என்னைக்கும் மாறாது. உங்க வீட்டுல நீங்க எப்போ பேச போறீங்க?"
கார்த்தி வீட்டின் சமயலறையில் திண்டில் அமர்ந்து தோரணையாக மாமியாரிடம் மல்லுக்கு நின்றாள் அந்த ரவுடி.
"என்ன மஹாலக்ஷ்மி இதெல்லாம்?" கறாராக கணவனின் கோபக் குரல் கேட்டு டம்ளரில் சூடாக இருந்த பாலை ஊற்றப் போன மஹாலக்ஷ்மி பயத்தில் கையிலிருந்த பால் கிண்ணத்தை அப்படியே விட்டுவிட, கொதிக்க கொதிக்க காய்ச்சிய பால் அவர் காலில் நூலிழையில் பட்டு தெரிந்தாலும் கைகள் சூடான கிண்ணத்தில் பட்டு உயிரே போகும்படி பெருவிரல் எரிந்தது.
சுப்பிரமணி இருப்பதையும் பொருட்படுத்தாமல் மகாலட்சுமியிடம் திண்டிலிருந்து கீழே இறங்கி அவரிடம் விரைந்தாள்.
அதற்குள் சுப்ரமணியுமே பதறிவிட்டார், "மஹாமா..." வேகமாக மனைவி அருகில் வந்தவர் மனைவியை யாரையும் முன்பே வைஷ்ணவி அவரின் கையை பிடித்து வேகமாக தண்ணீரில் காட்டினாள்,
"த்தை வேற எங்கையாவது பால் சிந்திடுச்சா?" அவரோ வலியில் முகம் சுருங்க கைகளை தண்ணீரில் இருந்து விளக்க பார்க்க அவர் கையை விடாமல் பிடித்தவள், "அங்கிள் ப்ளீஸ் ஆண்ட்டி கைய புடிங்க ஒரு நிமிஷம்" என்றாள்.
தன்னை விட அதிகம் பதட்டத்தில் இருக்கும் வைஷ்ணவியை வியப்புடன் சுப்பிரமணி பார்க்க, அவளோ அவரின் கரத்தைப் பற்றி மஹாலக்ஷ்மியின் கையேடு வைத்தவள், "அங்கிள் கெட்டியா புடிங்க. ஒரு நிமிஷம் சில்லுனு தண்ணில கைய காட்டுனா வீக்கம் வராது" என்றவள் வேகமாக குனிந்து அவரில் காலில் வேறு எங்காவது காயம் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.
அவளின் எண்ணத்தை புரிந்த மஹாலக்ஷ்மி, "வைஷுமா என்னடா பண்ற? கால்ல எல்லாம் ஒன்னும் படலடா" கணவனிடமிருந்து கையை வேகமாக உருவி வைஷ்ணவியை எழ வைத்தார்.
"அத்தை, நிஜமா சொல்லுங்க, இந்த காயம் எல்லாம் ரொம்ப எரியும்" தண்ணீரில் கையை காட்டினாலும் எரிச்சல் மட்டும் நீங்காமல் இருக்க அவரின் முகம் வாடி தான் இருந்தது.
"இருங்க த்தை வர்றேன்" என்றவள் மின்னல் வேகத்தில் தன்னுடைய வீட்டிற்கு சென்று தீ காயத்திற்கு போடும் ஆயின்மென்ட் ஒன்றை எடுத்து ஓடி வர, அவளது மஹேஸ்வரி கூட வியப்பாக தான் பார்த்தார்.
கார்த்தியின் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது சுப்பிரமணி மனைவியை திட்டிக்கொண்டிருந்தார், "சொன்ன கேக்கவே மாட்டியாடி நீ? ஹாஸ்பிடல் வந்தே ஆகணும் நீ. பிடிவாதம் பிடிக்காத மகா" "ஒன்னும் இல்லங்க. சரியாகிடும்"
"என்ன சரியாகும்? நான் என்ன சிங்கமா புலியா பயந்து இப்டி முழிக்க? கொஞ்சம் சுதாரிச்சதால எப்டியோ உடம்பு, கால்ல படல. அப்டி என்ன பயம் உனக்கு என் மேல? அந்த பயம், எனக்கு தெரியாம என் பையனுக்கு பொண்ணு பாத்தப்ப இருந்திருக்கணும்"
மனைவி மேல உள்ள அக்கரையில் சுப்ரமணியன் பேச்சை கேட்டு ரசித்த வைஷ்ணவி அவர்களுக்கு இடைவெளி கொடுத்து வெளியிலேயே நிற்க, தன்னுடைய பெயர் அடி படவும், "த்தை..." என உரக்க பேசி தன்னுடைய வரவை கூறினாள்.
வைஷ்ணவி குரல் கேட்டதும் அமைதியாகிவிட்டார் சுப்பிரமணி. வரவேற்பறையில் இருவரும் அமர்ந்திருக்க மஹாலக்ஷ்மி அருகில் சென்று அமர்ந்துகொண்டு வைஷ்ணவி மஹாலக்ஷ்மியின் கையை எடுத்து தான் கொண்டு வந்த ஆயின்மென்ட்டை போட்டாள்.
மஹாலட்சுமிக்கோ உள்ளுக்குள் பயம் அதிகமானது, தன்னை கணவர் என்ன பேசினாலும், திட்டினாலும் கேட்டுக்கொள்ளலாம் ஆனால் இந்த பெண்ணை ஏதாவது பேசினால் அவள் தாங்க மாட்டாளே என்ற பயத்தில் கணவரையே பார்த்து கண்களால் சமாளிக்கும் முயற்சியில் இருந்தார்.
"ஒன்றை மாசமா நடக்குது அங்கிள்" கண்கள் கைகள் இரண்டும் மகாலட்சுமியிடம் இருக்க சில நிமிடங்களுக்கு முன் சுப்பிரமணி கேட்ட கேள்விக்கு பதில் தந்தாள் வைஷ்ணவி.
சுப்பிரமணி மனைவியை தீர்க்கமாக பார்க்க, "வைஷுமா நான் பேசுகிறேன்டா. நீ போ. அப்றம் பேசுறேன்" என்றார் மஹாலக்ஷ்மி.
"இல்ல த்தை. நான் இருக்கேன். எனக்காக நான் தானே பேசியாகணும்? நானே பேசுறேன்" என்றவள் அவர் கையில் போட்ட மருந்து எல்லா இடத்திற்கும் படர்த்திருக்கிறதா என்பதை உறுதி செய்து சுப்ரமணியை பார்த்து திரும்பி அமர்ந்தாள்.
"ஆமா அங்கிள் உங்க பையன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணனும்னு தான் ஆசை எனக்கு. ஆனா அவரை எவ்ளோ புடிச்சதோ அதே அளவு அத்தையையும் ரொம்ப புடிச்சது. சொல்ல போனா இவங்க என்னோட மாமியாரா வந்தா நல்லா இருக்குமேன்னு தான் உங்க பையன நான் அந்த கண்ணோட்டத்துல பாக்க ஆரமிச்சதே" நகத்தை கடினமாக மற்றொரு விரல் கொண்டு பயத்தில் பிய்த்து பாடாய் படுத்தினாள்.
"எனக்கு தெரியும் அங்கிள் நான் பண்றது தப்பு தான், இப்டி நேரடியாவே கேக்குறதெல்லாம் அசிங்கமா தான் இருக்கு ஆனா எனக்கு உங்க பையன் தான் வேணும். என்னோட கண்ண பாத்தே என் மனச புரிஞ்சுக்குற ஒருத்தர என்னால எந்த நிலைமையையும் மிஸ் பண்ண முடியாது. உங்க பையன கண் கலங்காம நான் பாத்துக்குறேன்" இதழ் கடித்து தான் பேசியதை எண்ணி தலையில் அடித்துக்கொண்டாள்.
"சாரி சாரி அங்கிள்" உடனே மன்னிப்பை வேண்டினாள்.
"அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருந்ததில்லை ம்மா"
"நிச்சயமா அவசரத்துல எடுத்த முடிவு தான் அங்கிள், உங்க பையன் வேற யாருக்கும் போய்ட கூடாதுன்னு அவசரத்துல எடுத்த முடிவு தான்" - வைஷ்ணவி
"உன் அப்பா அம்மாக்கு தெரியுமா மா?" - சுப்பிரமணி
"இல்ல அங்கிள், தெரியாது" தலை கவிழ்ந்தது வைஷ்ணவிக்கு.
"நீ செய்றது தப்புனு தெரிஞ்சு தானே ம்மா உங்க வீட்டுல இத நீ சொல்ல தயங்குற?" - சுப்பிரமணி
"அப்பா அம்மா லவ் மேரேஜ் அங்கிள். சொந்தத்துக்குள்ளையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க. என்னோட லவ்க்கு எந்த விதத்துலையும் அவங்க குறுக்க நிக்க மாட்டாங்க. அப்பா அம்மாக்கு தெரிஞ்சு, அப்றம் நீங்க மறுத்திங்கனா தாங்க மாட்டாங்க அங்கிள். அதான் உங்க முடிவு என்னவா இருந்தாலும் என்னோடவே போகட்டும்-னு சொல்லல. உங்களோட முடிவு எதுவா இருந்தாலும் நான் அத ஏத்துக்குறேன்" என்றவள் கண்கள் கலங்கி தலையை நிலத்தை பார்த்து தாழ்த்தினாள்.
அவளை அமைதியாக பார்த்த சுப்பிரமணி எழுந்து தங்கள் அறைக்குள் சென்றுவிட்டார்.
கணவன் சென்ற திசையில் பார்த்த மஹாலக்ஷ்மி மகிழ்ச்சியில் வைஷ்ணவியின் முகத்தை கைகளில் ஏந்தி, "ஏன்டா உன்னக்கு என் மேல அவ்ளோ பாசமா அத்தைகிட்ட சொல்லவே இல்ல"
வைஷ்ணவி கழுத்தை வளைத்து சுப்ரமணி சென்றதை உறுதி செய்தவள் கண்ணீரை துடைத்து மாமியாரின் முகத்தை பார்த்து பல்லை காட்டினாள், "நீங்க தான் மாமாவோட வீக்னஸ்-னு தெரிஞ்சு உங்க வீட்டுகார ஏமாத்துறதுக்கு சொன்னேன். ஒடனே வந்துடுவீங்களே என் பாச மலரே-னு. எப்படி நம்ம ஆக்டிங்? கமல் ஹசன்க்கு டப் குடுத்துடுவேனா?"
நக்கலடித்தவளை பார்த்து செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைத்து கணவனை காண சென்றார். வைஷ்ணவி வெளியில் பதட்டத்துடன் அமர்ந்துவிட்டாள்.
தங்கள் அறைக்குள் சென்ற மஹாலக்ஷ்மி மெத்தையில் அமர்ந்திருந்த கணவரை பார்த்து தயக்கத்துடன் அருகில் சென்று அமர்ந்தார் அவரின் முகம் பார்த்து. அவர் அமைதியே கோவம் இல்லை என்பதை உணர்த்த கணவன் முகத்தில் தெரிந்த குழப்பத்தை புரிந்துகொண்டார்.
"என்னங்க?" என்றார்.
"இல்ல ம்மா... ஒரே யோசனையா இருக்கு" என்றார்.
"சட்டு சட்டுனு பேசும் தான். ஆனா மனசு தங்கம்ங்க"
"நல்ல புள்ள தான் மகாமா... ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வருமா?"
"அவங்க வீடு அப்டி எல்லாம் இல்லங்க. எதார்த்தமான மனுசங்க. குறை சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. சீர் சனத்தை பத்தி யோசிக்கிறீங்கனா அந்த பயமும் தேவையில்லை. அவரும் டீச்சர் தானே ஒரே பொம்பள புள்ள செய்யாம இருக்க மாட்டாங்க" பக்குவமாக எடுத்துரைத்தார் மஹாலக்ஷ்மி.
"ச்சீ ச்சீ அதெல்லாம் யோசிக்கல ம்மா... பொண்ணு நம்ப குடும்பத்துக்கு ஒத்து வருமா? அம்மா இருக்காங்க, சுபத்ரா இருக்கா, ஒரே ஆம்பள புள்ள. மொத்த குடும்ப பொறுப்பும் அவகிட்ட தான் போகும். அதெல்லாம் தாங்கிடுமா, ஏத்துக்குமா... எல்லாமே இருக்குல்ல? விளையாட்டு குணம் தான் அதிகம் அந்த பொண்ணுக்கு, ஒரு குடும்ப பொறுப்ப பாத்துக்குறது ஒன்னும் அவ்ளோ ஈஸியானது இல்ல ம்மா" குடும்ப தலைவராய் தன் நிலையிலிருந்து யோசித்தும் தவறாக படவில்லை.
"முன்ன பின்ன தெரியாத பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தாலும் இதெல்லாம் யோசிக்க தான செய்விங்க... ஆனா வைஷ்ணவி நம்ம கண்ணு முன்னாடி இருக்க பொண்ணுங்க. குறும்பு இருக்கும், அதே நேரம் பொறுப்பும் நாளடைவுல வந்துடும். நம்ம சுபி கூட நல்லா தான் பேசுது, அத்தைகிட்ட சரிக்கு சரி நின்னு வாயாடுது. அவங்கள புடிக்கலைனா இந்நேரம் யாரும் அவங்ககிட்ட பேச கூட மாட்டாங்க. அத்தைக்கும் அவளை புடிக்கும்" என்றவர் மேலும்,
"ஒருத்தருக்கு பொறுப்பு இல்ல இல்லனு சொல்லி அவங்களோட திறமையை வெளி காட்டுறதுக்கு நாம இடமே குடுக்குறது இல்லங்க"
"அத டெஸ்ட் பண்ண என் பையன் வாழ்க்கை தான் கெடைச்சதா மகா?" - சுப்பிரமணி
"எங்க வேலைக்கு போனா நமக்கு ஒரு வேலை குடுத்து அத பொறுப்பா பாத்துக்க சொல்லிடுவாங்களோனு பயந்து வீட்டுக்குலையே பதுங்கி இருக்க உங்க பொண்ணும் அதே மாதிரி தான் இருக்காங்க. உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் அந்த பொண்ணுக்கு ஒரு நியாயமா? ஏன் என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? வைஷ்ணவிய என் காலம் முடியிறதுக்குள்ள என்னால பொறுப்பான மருமகளா மாத்த முடியும்"
மனைவியின் உறுதியில் சற்றே மனம் இறங்கி வந்தார் சுப்பிரமணி ஆனாலும், "கார்த்தி என்ன நினைக்கிறானோ தெரியலையே மா. அவன் முடிவு தானே இதுல ரொம்ப முக்கியம்?"
"உங்க பையன் உங்கள மீறி மறுத்து பேச மாட்டான்ங்க" மருமகள் மகனிடம் பேசியதை எல்லாம் சூசகமாக மறைத்துவிட்டார் மஹாலக்ஷ்மி.
பெருமூச்சு விட்டு, "சரி மகா, எதுக்கும் அவங்க வீட்டுல ஒரு வார்த்தை இன்னைக்கு சாய்ந்தரம் பேசிட்டு கார்த்திக்கிட்ட பேசலாம்" என மனைவியின் கையை எடுத்து ஆராய்ந்தார் காயத்தை.
ஏங்க... நாம ஏன் நாமளா வைஷ்ணவியை பொண்ணு கேட்டு போற மாதிரி போக கூடாது?"
கணவன் கேள்வியாய் தன்னை பார்க்கவும், "இல்ல என்ன தான் இருந்தாலும் நம்ம வீட்டுக்கு மருமகளா வர போற பொண்ணு. அவளே வந்து இப்டி எல்லாம் பேசுனது தெரிஞ்சா ஒருத்தர் மாதிரி ஒருத்தர் ஈஸியா எடுத்துக்க மாட்டாங்க, அவ மனசு நோகுறே மாதிரி பேசுனா கஷ்டம் நம்ம எல்லாருக்கும் தான். அதான் அத்தைக்கு கூட தெரிய வேணாம்"
மனைவி சொல்வதிலும் நியாயம் இருக்க, "என் மகா சொன்னா நான் கேக்காம இருப்பேனா" என சிரிப்போடு சம்மதம் தெரிவித்த கணவரை பார்த்து தலை குனிந்து புன்னகைத்தார் மஹாலக்ஷ்மி.
"என்ன இன்னைக்கு ஸ்கூல் இல்லையா போன ஒரு மணி நேரத்துலையே வந்துட்டீங்க?"
"இருக்கு ம்மா... கொஞ்சம் தலை வலி இருந்தது அதான் லீவு போட்டு வந்தேன். வந்தது கூட ஒரு விதத்துல நல்லதா போச்சு. எத நெனச்சு தலை வலி வந்ததோ அந்த பிரச்சனையே சரியாகிடுச்சு. அம்மாகிட்ட நானே பேசுறேன் கோவில்ல இருந்து வந்ததும்"
மனைவியின் கையை வருடியவர், "ரொம்ப வலிக்கித்தாடி? எதுக்கும் ஒரு டி.டி இன்ஜெக்ஷன் போட்டுட்டு வரலாமா?"
அந்த தம்பதி இதுவரை ஒருவரை பார்த்து ஒருவர் அவர்கள் உணர்வுக்கு பெயர் இட்டதில்லை, ஆனால் தாம்பத்தியத்தின் அழகு கணவனின் அன்பு பார்வையில் மொத்தமாய் கொட்டிக்கிடக்கும், மனைவியின் அக்கரையில் கணவன் எழவே முடியாமல் தினம் தினம் ஆழத்திற்கு சென்றிருந்தார்.
சிரிப்போடு, "இதெல்லாம் ஒரு காயமா? சரியாகிடும், விடுங்க" கணவனை சமாதானம் செய்து மருமகளிடம் இன்ப செய்தியை பகிருந்தவர் மாலை அவள் வீட்டிற்கு வருவதாக வாக்கையும் கொடுத்து அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
மாலை மணி ஐந்து தாண்டி இருந்த நேரம் உறக்கத்திலிருந்து உடல் முழுதும் வேர்க்க எழுந்த வைஷ்ணவி முகத்தை கூட கழுவாமல் அரக்க பறக்க அறையை விட்டு வெளியில் வந்து கார்த்தியின் அறையை பார்த்துக்கொண்டே படிகளில் இறங்கியவள் நேராக சென்றது அவன் இல்லத்திற்கு தான்.
அப்பொழுது தான் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த மஹாலக்ஷ்மி அவளின் கோலம் கண்டு பயந்தேவிட்டார், "என்னடா இப்டி வேர்த்துருக்கு?" சேலை முந்தானை கொண்டு அவள் முகத்தில் படர்ந்திருந்த வியர்வையை துடைத்தவரின் கையை பிடித்து நிறுத்தினாள்.
"அத்தை உங்க பையன்னுக்கு கால் பண்ணுங்க. எப்படி இருக்காங்கனு கேளுங்க"
"காலைல தான்டா பேசுனான். நல்லா இருக்கான். நீ ஏன் இவ்ளோ பதட்டத்தோட இருக்க?" அப்பட்டமான அதிர்ச்சி அவளிடம்.
இந்த வைஷ்ணவியை இதுவரை அவர் பார்த்ததே இல்லை. "என... எனக்கு கெட்ட கனவு த்தை. ஏதோ இறந்தவங்கள... ப்ச்... ப்ளீஸ் த்தை எனக்காக அவர்கிட்ட பேசுங்க" விட்டால் அழுதுவிடுவாள் என்னும் அளவிற்கு முகம் வாடி கண்கள் எல்லாம் சிவந்திருந்தது.
அவள் கூறிய கனவை கேட்டவருக்கு கூட உள்ளம் பதறியது, "சரி இரு" என்றவர் கணவரிடம் மகனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அழைத்து தர கூற மனைவியின் பதட்டத்தை பார்த்து அவரும் பின் வந்தார்.
நல்ல வேலையாக அவன் காலை, மாலை மட்டுமே வேலை பார்ப்பதாக இருக்க இந்நேரம் அங்கு புதிதாய் கிடைத்த நண்பர்களுடன் பேசி மகிழ்ச்சிருந்தவன் அன்னை அழைத்ததும் உடனே அதே சிரிப்போடு அழைப்பை ஏற்றான்.
மஹாலக்ஷ்மி ஸ்பீக்கரில் போட்டிருக்க, "சொல்லுங்க ம்மா" அவன் குரலில் இருந்த சிரிப்பே அவனின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் கூற வைஷ்ணவி கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் கண்ணிலிருந்து தப்பி ஓடியது நிம்மதியில்.
அவள் கண்ட கனவு அப்படி. கட்டிடம் நடக்கும் இடமாக தான் தெரிந்தது, அங்கிருந்து கருகிய நிலையில் ஒரு உடலை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுவது போலவும் அங்கு தான் நின்று கண்ணீரோடு பார்ப்பது போலவும் தெரிய, அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற பயம் உள்ளத்தில் தொற்றிக்கொள்ள பயத்துடனே வந்தது. இப்பொழுது அவன் குரல், அதுவும் சிரிப்போடு கேட்கவும் தான் நிம்மதியாக இருந்தது.
"ஒன்னுமில்ல ப்பா. சாப்டியான்னு கேக்க தான் கூப்ட்டேன்"
"இப்போ தான் ம்மா சாப்பிட்டு முடிச்சு வந்தேன்" - கார்த்தி
"உனக்கு அங்க ஒன்னும் சிரமம் இல்லையே ப்பா. நீ நல்லா தானே இருக்க" - மஹாலக்ஷ்மி
"எனக்கென்ன மா நல்லா இருக்கேன். ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?" சந்தேகமாய் அவன் கேட்க அவரோ வைஷ்ணவியை தான் பார்த்தார். அதே நேரத்தில் சுப்பிரமணிக்கு கைபேசியில் அழைப்பு வர அங்கிருந்து அகன்றார்.
"சமைக்கிறப்ப பாத்து சமைக்க சொல்லுங்க த்தை" மெதுவாக வைஷ்ணவி கூற, அவளுடைய அமைதியான கலங்கிய குரல் ஸ்பீக்கர் உபயத்தினால் அங்கிருந்தவனுக்கு தெளிவாக கேட்டது.
"தேவையில்லாம எதையும் யோசிக்க வேணாம். நான் நல்லா தான் இருக்கேன், என்ன சுத்தி அம்பது பேர் இருப்பாங்க. கவலைபட ஒன்னும் இல்ல. புரிஞ்சுதா?"
வார்த்தைக்கு நூறு ம்மா போடும் அவன் நா இதை சொல்லும் பொழுது வெறுமையாக சொல்ல வைஷ்ணவிக்கு தெளிவாக புரிந்துபோனது அவன் தன்னிடம் தான் பேசுகிறான் என்று தலையை சிறிதாக ஆட்டிவைத்தாள்.
"ம்மா நைட் கால் பண்றேன் மா..." என்றவன் இணைப்பை துண்டித்த நேரம் சுப்பிரமணி கலக்கத்துடன் அங்கு வந்து நின்றார்.
"என்னங்க?" என்றார் மஹாலக்ஷ்மி பதட்டத்துடன்.
"கார்த்தி ஹோட்டல் கட்டுர சைட்ல ஏதோ போலீஸ் ரைடாம். ரெண்டு பாடிய தோண்டி எடுத்திருக்காங்க" குண்டை தலையில் தூக்கிப்போட்ட கணவரின் கையிலேயே மயங்கி சரிந்தார் மஹாலக்ஷ்மி.
Hi epdi iruku chap?
Comments please...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro