பயணம்
என் பெயரு ஆர்த்தி, எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ,வீடு , ஸ்கூல், அதை தவிர என் வீட்டு ஜன்னல், இதெல்லாம் தான் தெரியும். வீட்டை சுத்தி மாமரம், தென்னைமரம் நீரோடை வலது புரம் வயல்,, இதெல்லாம் இருக்கும். எனக்கு படிக்கிற நேரம் போக மீதி நேரம் இந்த ஜன்னல் வழியே தெரியும் இயற்கையை ரசிக்கிறது தான் பொழுதுபோக்கு,அப்பா அம்மா இரண்டு பேருமே கிடையாது ,அத்தை வீட்ல தான் வளர்ந்தேன். அத்தையும் மாமாவும் வேலைக்கு கிளம்பி போய்டுவாங்க , நான் வீட்ல தனியா தான் இருப்பேன்,ஒரு வயதான கிழவியும் இருக்கும் (மாமாவோட அம்மா) நான் ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே அவங்க தான் சாப்பாடு எல்லாம் போட்டு கொடுத்துட்டு போவாங்க,பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்ல தான் அவங்க இருப்பாங்க. இப்படியே என் வாழ்க்கை போய்ட்டு இருந்தது...
+2ல நல்ல மதிப்பெண் எடுத்ததுனால சென்னைல படிக்கலாம்னு கிளம்பி போக ஆயுத்தமானேன்.
"அடியேய் ஆர்த்தி..இந்தா டி பலகாரம் எடுத்துட்டு போ ட்ரெயின்ல சாப்பிடுறதுக்கு "என்று அத்தை தான் செய்த பலகாரத்தை என் கிட்ட கொடுத்தாங்க. நானும் எடுத்து பையில வச்சிக்கிட்டு தேங்க்ஸ் அத்தைன்னு கிளம்பினேன்.
"ரெயில்வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணவா " அப்படின்னு மாமா கேட்டாரு
"இல்லை மாமா நானே போய்க்குறேன்னு சொல்லி கிளம்பினேன். அட நானே முதன் முதல்ல தனியா என் வாழ்க்கையை தேடி போறேன் , அந்த சுதந்திர காற்றை முழுசா சுவாசிக்க ஆசையா இருக்கு. அதுமட்டுமல்ல எப்பவுமே யாராவது நம்ம கூடவே இருக்கனும்னு நினைக்கிறது முதல்ல தப்பு. நம்ம வேலையை நாம தான் பண்ணனும்னு சொல்லி புரியவச்சதே இந்த தனிமை தான்.சில நேரங்கள்ல தனிமை தர அனுபவம் யாராலும் தரமுடியாது. தனிமை சுகமா மாறுகிற காலத்துல உங்க மனசுல எந்த எதிர்பார்ப்பும் இருக்காது . சரி சரி ட்ரெயினுக்கு டைம் ஆகுது ஆட்டோவ பிடிச்சு ஸ்டேஷன் போயிட்டு பேசுறேன் வாசகர்களே.
.....
ஆர்த்தி அவள் கதையை தொடர்வாள். காத்திருங்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro