சென்னை
ஒரு வழியா எப்படியோ சென்னை வந்துட்டேன். பெரிய பெரிய கட்டிடம் ,வண்ண வண்ண விளக்கு ,கூட்ட நெரிசல் இதெல்லாம் பார்க்க அவ்ளோ நல்லா இருக்கு. அங்க தஞ்சாவூர்ல என்னை சுத்தி உறவுகள் இருந்தாலும் யாருமே இல்லாத மாதிரி இருந்துச்சு ஆனால் இங்கே பாருங்க என்னை சுத்தி அவ்ளோ பேரு இருக்காங்க...ஹாஹா.
என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு பார்க் இருந்துச்சு,சரி ப்ரண்டுக்கு வெயிட் பண்ற நேரம் அங்க உக்காரலாமேன்னு வந்தேன். ஃபுல்லா லவ்வர்ஸ் கூட்டம், இதுக்கு நடுவுல கொஞ்சம் குழந்தைகள் விளையாடும் சத்தம் ம்ம் நல்லாதான் இருக்கு. இவ்ளோ பரபரப்பான ஊர்ல காதலிக்கலாம் நேரம் இருக்கா ? ம்ம் சரி நேரம் ஒதுக்குறாங்க போலருக்கு. ஆனால் கிராமத்துல ஐயோ! லவ்வுன்னு சொன்னாலே ஏதோ தப்புங்குற மாதிரி பாப்பாங்க.
'அடியேய் ஆர்த்தி லவ் பண்ற ஆசை வந்துருச்சா ' என் மனசாட்சி கேட்குது அதே சமயம் என் மனசு சொல்லுது "ஒழுங்கா ஆகுற வேலையை பாருன்னு"
"ஈஈஈஈஈஈஈ"சொல்லுங்க மக்களே நான் லவ் பண்ணட்டுமா வேணாமா மண்டை கொடையுது...
'ஹலோ ஆர்த்தி மேடம் ஹார்ட் வெடிச்சிட போகுது பத்ரம் 'அப்படின்னு மனசாட்சி எச்சரிக்கை பண்றச்ச என் ப்ரண்டு வந்தா...
"ஏய் லூசு உன்னை இங்கயா டி நிக்க சொன்னேன் ?நல்லா ஒய்யாரமா பார்க்ல வந்து உக்காந்துட்டு இருக்க"என்றாள் என் தோழி ப்ரியா.
"சாரி டி நல்லா காத்தோட்டமா இருக்குமேன்னு வந்தேன் " ..
"யப்பா சரி வா போலாம் வீட்டுக்கு" என்று அவளுடைய ஸ்கூட்டியில் அமரவைத்து அழைத்து வந்தாள்.
கதவை திறந்த அவளுடைய அண்ணன் என்னை வச்ச கண்ணு வாங்காம பார்க்க எனக்கோ "ஆத்தாடி இப்ப தான் காதலை பத்தி நினைச்சோம் இங்க அதுக்கான தூபம் போடுறாப்ல இருக்கே...
"ஏய் லூசு வா உள்ளே " -ப்ரியா.
"உன் அண்ணன் குறுக்கே நிக்கிறாரு டி நான் எப்படி வருவது " - நான்
"அட வா டி " -அவள்
சரி என்று , அவனை மீறி உள்ளே வர எத்தனித்தேன் எதர்ச்சையாக என் தோள்பட்டை அவர் மீது உரசியது.
"சாரி "
"இட்ஸ் ஓகே" என்றபடி அவன் சிரித்துக் கொண்டு நகர்ந்தான்.
"அடியேய் ப்ரியா உன் அண்ணன் பேரு என்ன "-நான்
அவனிடமே கேளேன் டி.
"ஏங்க உங்க பேரு என்ன" என்றதற்கு.
"என் பேரு மணி" என்றான் அவன்
"ம்ம் நைஸ் நேம்" என் காதலுக்கு மணி அடித்து விட்டது என்று நினைத்து சிரித்தேன்.
வாசகர்களே வந்த களைப்பில் இருக்கிறேன் நாளை தொடர்வோம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro