Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1

முகலாய அரசு ...
படை,  போர், வீரம் என்று அவர்கள்  காலம் மிகவும் அதிரடி படையாகவும் ...
மது மாது போதை அந்தபுரம் என்று மகிழ்ச்சியில் திழைத்த அரசாகவும் ...
அதுமட்டுமில்லாமல் வரலாற்று புகழ் மிக்க
ஷாஜகான் - மும்தாஜ்
அக்பர் - ஜோதா என்று அழியாத காதல் காவியங்களுக்கு பெயர் போன காலம் முகலாய காலமாகும் ...

அக்பர் மற்றும் ஜோதாவின் ஒரே வாரிசு ( இரட்டையர்கள் ஒருவர் இறந்துவிட்டார் .. )
நூருதீன் சலீம் ஜஹாங்கீர் ..நம் நாயகனாவார் ...
சிறு வயதிலே போதை பிடியில் மகிழ்விற்கு குறைவில்லாமல் அம்சமாய் திழைத்தார்.. 
அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாய் பதினான்கு ஆண்டுகள் வீட்டை விடுத்து முழுவதும் போர் படை இரத்தம் என்று  தன்னையே அர்பணிக்கும் நிலைக்கே சென்று விட்டார் எனலாம் ...

இன்னும் மகனை தனித்து விடுத்தால் மொத்தமாக இவ்வுலகத்தை விட்டே சென்றுவிடுவான் என்று எண்ணி ஜோதாவின் விருப்பத்திற்கு இணங்கி படையை விடுத்து சலீம் இளவரசரை அரசவைக்கு திரும்பும்  படி ஆணையிடுகிறார் அக்பர் ...

சலீம் முகலாய அரசிற்கு திரும்பும் நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது..
ஆடல் பாடல் என்று எவ்வித குறைகளும் இன்றி பலமாக பல ஏற்படுகள் செய்யப்பட்டது ....

சலீமிற்கு பரிசளிக்கும் பொருட்டு சிற்பியிடம் உலகத்திலே அழகான சிலைகள் செய்யுமாறு பணித்திருந்தார் அரசர் ...

பார்த்து பார்த்து செதுக்கிய சிற்பங்கள் முடியும் நிலையில் ஒரே ஒரு சிலை மட்டும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக சிலைக்கு மாதிரியாக  நாதிரா பேகம் சிலையாக நிற்க வைக்க முடிவெடுத்தனர் ...

சலீம் போர் முடிந்து கம்பீரமான யானை போல் அவ்வரங்கம் வந்தான் . சிலைகள் ஒவ்வொன்றாய் பார்வையிட்டவனை கவர்ந்தது ஒரு சிலை அது சிலை இல்லை சிலைக்கு பதில் உயிராய் நின்ற நாதிரா . அவள் கண்களை பார்த்த மாத்திரத்தில் தன் சிந்தையை முழுவதும் இழந்தான் என்றே சொல்ல வேண்டும் ...
அவளை பார்த்த அந்த நொடி அவன் மனதில் உதிர்த்த பெயர் அனார்கலி ... ஆம் சலீமின் அனார்கலி அவளே ...
காதல் கொண்ட மனம் தேன் நிறைந்த மலரை வண்டு சுற்றித் திரிவதைப் போல் அவளையே சுற்றி வந்தது ...

சலீமை வரவேற்கும் விதமாய் ஆடல் ஒன்று நாதிராவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ...
சிலைக்கு உயிர் கொடுத்தவளை பார்த்த உடனே மனதை தொலைத்தவன் அவளின் ஆடலில் மொத்தமாய் தன்னை பரிகொடுத்தான் .

முகலாய மன்னரான சலீம் தனக்கு அடிமைபெண்ணான நாதிராவின் மீது காதல் கொண்டு அவனின் மொத்தமாக அவளை மாற்ற பல முயற்சிகளை எடுத்தான் ...

முயற்சி பலனாய் அவன் காதல் கடலில் நீந்த ஆரம்பித்தனர் ...
அடிமை பெண் நாதிராவை முகலாய மன்னன் சலீமின் அனார்கலியாக மாற்றிருந்தான் தன் காதல் மனதினால் ...
காதல் கொண்ட ஜோடி புறாக்கள் தங்கள் உலகத்தில் எந்த வித தடையும் இல்லாமல் சுதந்திரமாக பறந்து காதல் செய்தார்கள் ..

நரம்பும் தசையும் கண்களுக்கு அத்தனை தெளிவாய் தெரியாது ஆனால் மனித உடலினுள் பெறும் பங்கு வகிக்கும் அதுபோல அவன் வாழ்வில் அனார்கலியின் பங்கு பெருமளவில் உணர்ந்தான்  ...

அன்பென்று வந்து விட்டால் அரசனாவது ஆண்டியாவது அனைவரும் இறைவனுக்கு சூட்டப்படும் மாலை போன்று பரிசுத்தமானவர்களே ...
காதல் மனதில் ஆனந்தமாய் திரிந்தவர்களுக்கு பெரும் தடையாக வந்தார் ஜஹாங்கீரின் தந்தை அக்பர் ..

நாதிராவை சிறை வைக்கிறார் அக்பர் ..

அந்த காலத்தில் எல்லாம் நடனம் ஆடுபவர்களை தாழ்ந்த இனம் என்று கருதுபவர்கள் தான் அதிகம்...மாதவி கற்பிற்கு சிறந்த உதாரணம் என்றாலும் ஆடல் நாயகி என்பதால் சிலப்பதிகாரத்தில் அவளுக்கு கிடைத்தது அவமதிப்பு தான்....

அதுபோல நாதிரா  கற்பில் சிறந்தவள் என்றாலும் நாட்டில் உள்ள அனைவராலும் விலைமகள் என்றே அழைக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள்...
அதனால் அவர்களை பிரித்தே ஆக வேண்டும் என்று குறியாய் இருந்தார் அக்பர் ...

காதல் வந்தால் எறும்பும் யானையாகும் பூனையும் படையெடுக்கும் என்பது பொய்யாக்காமல் தன் காதலை எதிர்த்த தந்தையையே எதிர்க்க துணிந்தான் சலீம் ...
தன்னிடமிருந்த படைகளை திரட்டினான் அவர்களுக்கு எதிராக போர் புரிய முடிவு செய்தான் சலீம் ஜஹாங்கீர் ..
படை வீரங்களில் முகலாய அரசர்கள் சிறந்தவர்களிலும் சிறந்தவர்கள். கலையை கற்றுக்கொடுத்த ஆசானிடமே மாணவன் தன் திறமையை காட்ட எண்ணினால் விளைவு ஆசானிற்கே சாதகமாகும் என்பதை உணர்த்தியது சலீமின் நிகழ்வு ...

போரில் அக்பர் அரசர் தன் மகனை வீழ்த்தி வெற்றி கண்டார் ..
மகனாக கொள்ளாமல் போர் புரிந்து கலக்கம் ஏற்படுத்திய எதிராளியான சலீமிற்கு மரண தண்டனை விதிக்கிறார் ...
நாதிராவை தன்னிடம் ஒப்படைத்தால் சலீமிற்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று இளவரசனுக்கு உயிர் பிழைக்க ஒரு வழியை தந்தார் அக்பர் ...

தன் இணைக்கு மரண தண்டனை கிடைத்து அதன் பின் தான் உயிர் வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்து தானாக முன்வந்து தன்னை அர்ப்பணித்து தன் தலைவனை காப்பாற்றினாள் நாதிரா ...

சலீம் இளவரசருக்கு தெரியாமல் அக்பர் நாதிராவை சந்தித்து பேசுகிறார் ...

" நீ ஒரு பணிப்பெண் உனக்கு என்ன தகுதி இருக்கிறது என் மகனை திருமணம் செய்ய கேவலம் ஆடி பாடி மகிழ்விக்கும் நீ என் மகனை எதை கொண்டு வசியம் செய்தாய் .. எதை பிடுங்க உன்னிடம் மயங்கச்செய்தாய்.." கர்ஜனையாய் பேசினார் அக்பர் அந்த பெண்ணிடம் ...

" காதல் கொண்டது என்னவரின் தூய மனதை பெறுவதற்காக மட்டுமே..  உங்கள் காசு பணம் தேவையில்லை அவரை தண்டித்து விடாதீர்கள் என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் .அவரை விட்டுவிடுங்கள்... " சலீமின் அனார்கலியாய் கெஞ்சினாள் அந்த அடிமை பெண் ...

" உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் என் மகனை என்னிடம் விட்டுசெல் மொத்தமாக விட்டுச்செல் ... " பீடிகை போட்டார் அவளிடம் ...

" எதுவானாலும் செய்கிறேன் என் உயிரானவரின் உயிரை பறித்து விடாதீர்கள்,  மன்றாடி கேட்கிறேன் பறித்து விடாதீர்கள் .. " அழுகையும் கரைந்தாள் அனார்கலி...

" சரி..  மரண தண்டனை சலீமிற்கு பதிலாக உனக்கு மாற்றுகிறேன். உயிருடன் உனக்கு சமாதி கட்ட வேண்டும் இதுவே என் இறுதி முடிவு .."  அழகான காதலை கிள்ளி எறிவதாய்  தண்டனை வழங்கினார் அக்பர் ....

அதிர்ச்சியின் உச்சத்தில் சம்மதமாய் தலை அசைத்தவள்

" உயிர் பிரிந்தாலும் அவர் மனதில் நானும் என் மனதில் அவரும் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளோம் அதை அந்த கடவுள் நினைத்தாலும் மாற்ற முடியாது ... " தைரியமாக உறைத்தாள் ...

" கடவுள் நினைத்தால் முடியாது ஆனால் நான் முடித்து காட்டுவேன் உன் இறுதி ஆசையை சொல் உன் மரணம் முன் நிகழ்த்தி வைக்கப்படும் " என்று உறுதியளித்தார் அக்பர்...

சிறிது மௌனத்திற்கு பிறகு "இந்த முகலாய பேரரசிற்கு நான் மாகாராணியாக வேண்டும் சலிம் மகாராஜாவாக அவரின் அனார்கலி நான் ஒரு நாள் இந்த முகலாய அரசிற்கு மகாராணியாக அவருடன் ஒரு நாள் வாழ வேண்டும் அதை நிறைவேற்றி தர முடியுமா .. ??? இது தான் என் இறுதி ஆசை " அக்பர் அரசரையே ஆட வைத்து விட்டாள் நாதிரா ...

" என்ன நீ ராணி ஆக வேண்டுமா , என்ன தகுதி இருக்கிறது உன்னிடம் ..... "
கோபத்தில் வார்த்தைகள் மேலும் வலு பெறுவதற்கு முன் ...

"என்னவரின் உரிமை முழுவதும் எனக்காக வேண்டும் . உயிர் நீங்கும் முன் முழுவதுமாய் அவர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் . அந்த தகுதி எனக்கு மட்டுமே உரித்தானது  " அமைதியாய் அழுத்தமாக அவளை புரிய செய்தாள் ..

ஒரு நாள் தானே அதன் பின் அவர் பெரும் நன்மையை நினைத்துக் கொண்டார் ..

" உன் இறுதி ஆசை நிறைவேற்றி வைக்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை கொண்டே அது அரங்கேற்றப்படும் .. ஒப்புக்கொள்கிறாயா ???" ..

" என்ன நிபந்தனை ?? " கேள்வியாய் நாதிரா ...

" நீ மகாராணியாக்கப்பட்ட அந்த இரவு ராேஜா பூக்களின் பானத்தில் மயக்க மருந்து கலந்து சலீமை சுய நினைவை இழக்க செய்ய வேண்டும் .. அவன் விழிப்பதற்குள் நீ உயிருடன் சமாதியாக வேண்டும் . இது தான் என் நிபந்தனை .. " இரக்கம் இல்லாமல் நிபந்தனை ஒன்றை அந்த பெண்ணிடம் வைத்தார் அக்பர் ...

" ஒப்புக்கொள்கிறேன் ... என்னவர் விழிந்திருந்தாள் எமன் என்றும் பத்தடி தள்ளியே நிற்பான் அவர் மயக்கம் அடைந்த வேளையில் மட்டுமே என் உயிர் இந்த உடலை நீங்கும் ... " கர்வமாக அதே நேரம் வேதனை வாட கூறினாள் அனார்கலி ...

" இந்த நிபந்தனை சலீமிற்கு தெரிய கூடாது உன் ஆசை சீக்கிரமே நிறைவேற்றப்படும் " கர்ஜனையாய் தெரிவித்துவிட்டு அவ்விடமிருந்து விலகினார் அக்பர்...

'நம் காதல் மின்னல் பொழுதில் தோன்றி துளி ஈரப்பதம் கலந்த சாம்பல் மாளிகையாய் வளர்ந்து நொடி பொழுதினில் மண்ணோடு மண்ணாக போகிறது .'
உன் உயிருக்கு முன் நம் காதல் பெரிதல்ல சலீம் .
இறந்தாலும் எத்தனை காலம் ஆகினாலும் என் சலீமின் அனார்கலி நான் மட்டுமே ..' மனம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான் ..

அவளின் விருபத்தின் படி முகலாய அரசிற்கே மகாராணியாக்கப்பட்டாள் ...
எதுவும் அறியாத சலீம் தந்தை தன் காதலை ஏற்ற மகிழ்ச்சி ஒரு புறம் விரும்பியவளே மகாராணியாய் தன் அருகில் இருக்க வேறென்ன வேண்டும் ஒரு அரசனுக்கு ...

ஒரு நாள் முழுவதும் மாகாராணியாய் அவளும் மகாராஜவாக அவனும் தனி தீவாய் தோன்றும் முகலாய அரசும்...

" விரும்பி உன்னை ஏற்றேன் ,
மெய் வருத்தி உன் கரங்கள்
பற்றினேன் ,
இனி பிரியா வாழ்வை வாழ்வோம் ,
அகிலம் பொறாமை கொள்ளும் அளவிற்கு மகிழ்ந்திருப்போம் ,
பிரிவெனும் சொல்லை நீக்கி இனிதாய் துவங்குவோம் நம் புது இல்வாழ்க்கையை , " அவளின் காதில் ரகசியமாய் குசலம் பேசினான் சலீம் ..

"என்னை நீங்கும் நிலை வந்தாலும் வெள்ளை உருண்டை கொண்ட கருவிழி உவர்நீர் சுரக்காமல் காத்தருள வேண்டுகிறேன்,  என் விருப்பம் நிறைவேற்றுவீரா என் மாவீரரே .. " மறைமுகமாய் தகவல் தெரிவிக்க விளைந்தாள் அனார்கலி ..

" கனவிலும் தவிர்க்க நினைக்கும் சொற்களை திருவாய் கொண்டு மொழியாதே பேரழகியே,  புதிதாய் அத்தியாயம் துவங்கும் பொன்நாளில் இன்பமாய் வார்த்தைகள் மொழிவாய் கண்ணே !! " தன் காதலை அவளுக்கு காண்பிக்க நினைக்கும் காதலனாய் சலீம் ...

" உலகில் இல்லாத அழகா,  அரசர் காணாத எது உம்மை ஈர்த்தது இந்த அடிமை பெண் நாதிராவிடம் " விவரம் அறியும் குழந்தையாய் மன துன்பம் மறைத்து அனார்கலி ...

"உன் கண்களை சந்தித்த அந்த வேளையில் இந்த புவியில் நான் ஜனித்ததற்கான அர்த்தம் கிடைத்தது ,
வீரனாய் அழைந்த என்னை மாவீரனாய் மாற்றியது ,
இந்த சலீமின் அனார்கலி நீ மட்டுமே ,
அடிமை பெண் அல்ல சலீமின் அனார்கலி ... தெளிவாய் சொல் , எங்கும் சொல் , எதிலும் சொல் , சலீமின் அனார்கலி நீ தான் என்று .. " அவளை பார்த்த நொடி அவளிடம் விழுந்த அந்த நொடி  அவளிடம் விளக்கினான் சலீம்..

" சலீமின் அனார்கலி "

" சலீ்ம்ம்மிமின்ன் அனார்ர்கலி. ... " நிறுத்தி நிதானமாய் உச்சரித்தாள் ...

" விலைமதிபில்லா என்னவளின் அன்பிற்கு என்ன பரிசு நான் தருவேன்..  ஆழ்கடலில் தூங்கும் முத்து பபவளங்களை கொடுக்கவா .?. பரந்து விரிந்த வானவனின் நெற்றி பொட்டு வெண்ணிலவை கொடுக்கவா ...?
உன்னவனிடம் கேள் கண்மணியே ... " காதல் மொழிகள் தலைவனிடம் ...

சிரித்துக்கொண்டாள் " நிலவையே பரிசாக தர காத்திருக்கும் என்னவனின் இதய துடிப்பை பொறுமையாக நான் கேட்டு உணற வேண்டும் உம் இதயத்திற்கு அருகில் சிறு இடம் குடுப்பீறா .. ??? " வேதனை மறைத்து அவன் இதயத்திடம் ஆறுதல் தேடினாள்...

" சிறு இடம் எதற்கு அனார்கலி அது உன் இதயம் நான் என்னிடம் பறித்ததற்கு நீ தண்டனை அளிக்காமல் காப்பாயானால் சம்மதிக்கிறேன் ... " அவளின் வார்த்தைக்கு பின் இருக்கும் காயம் புரியாமல் பிதற்றுகிறான் சலீம் ...

" தண்டனைகள் பல காத்திருக்கிறது மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள் மன்னாதிமன்னரே .. " விளையாட்டாய் பல எச்சரிக்கைகள் விடுத்தாள் அனார்கலி ...

" இனிமையான தண்டனைகளை முழு மனதுடன் ஏற்பேன் என் அரசியே .. " மெதுவாய் அவள் மீது விழுந்தான் ...

'உம் வாசம் முழுவதும் சேமித்து கொள்கிறேன் என் கல்லறையில் மீதம் இருப்பது அது மட்டுமே ...' எண்ணங்களின் வேதனை வெளிபாடு அது ...

" உனக்கு எதுவும் ஆசை உள்ளதா நிறைவேற்றும் பொறுப்பு பெற்றவன் இன்று நான் கேட்கிறேன் என்ன ஆசை சொல் அனார்கலி ... " ஆசை தீர்க்கும் ஆசை காதலன் கேட்கிறான் ...

" உங்களுடன் நூரு ஆண்டுகள் வாழ வேண்டும்  " பேராசையாய் கேட்டு வைத்தாள் அவள் ...

மென்மையான சிரிப்புகளுடன் நிமிடங்களும் நொடிகளாக நகர ஆரம்பிக்க ...

" ரோஜா இதழ் பானம் ராஜாவிற்கு பிடிக்குமா ... ? " அக்பரின் வார்த்தை காக்கும் நாதிரா வெளிவர துவங்கினால்...

" இது என்ன பிரமாதம் ஒரே மிடரில் விழுங்குவேன் என் அனார்கலி கையில் கொடுத்தால் நஞ்சையும் ... " தன்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டாள் என்ற நம்பிக்கையில் அதை விழுங்கினான் சலீம் ...

" நஞ்சை கூட ஏற்று கொள்வீரா .. அத்தனை காதல் ஏன் இந்த பெண் அத்தனை அம்சம் பொருந்தியவள் அல்லவே " உடையும் குரலை சீர் படுத்தினாள் ...

" அம்சம் எதில் இருக்கிறது தெரியுமா உன் அழகான குணத்தில் .. ஆம் உனக்கு எது பிடிக்கும் இந்த சலீமிடம் " அவளை இருக அணைத்துக்கொண்டு காதில் காவியம் கேட்டான் ...

" பிடிக்காமல் ஏதும் இருந்தால் தானே பிடித்ததை கூற
உம் ஒவ்வொரு அணுவும் விரும்புபவள் இவள் ஐயனே .." கண்ணீர் சலீமின் தோளை தாண்டி மேனி தீண்டியது ...

" கண்ணீர் வேண்டாம் கண்மணியே சலீமின் அனார்கலி வருத்தம் கொள்ளக்கூடாது ..." ஆருதலாய் அனைத்தான்..

அணைப்புகள் அம்சமாகும் நேரம் கடந்துவிட முழுவதும் இருட்டிவிட்டது

நாதிரா கண்விழிக்க அவள் அருகில் அவன் சலீம் முழுமையாக கண்களில் நிறைத்துக்கொண்டாள் ...
மஞ்சத்தில் அவனை கடத்தியவள் கண்களை அழுத்த துடைத்து கண்களில் தன் கணவனை நிறைத்து கொண்டு கிளம்பினாள் அக்பர் அரசரை கண்பதற்கு ...

" நீர் சொன்ன வாக்கை காப்பற்ற வந்து விட்டேன் நிறை வேற்றுங்கள் உங்கள் விருப்பம் எதுவோ அதை .. " முட்களை கொண்டு தன் இதயத்திற்கு வேலி அமைத்தவள் படு திடமாக தன்னை காட்டிக்கொண்டாள் ...

" சபாஷ் அடிமைபெண் அதிகாரம் வந்ததும் தப்பி பிழைப்பாய் என்று எண்ணினேன் சபாஷ்...  " சற்று அதிர்ச்சியான குரலில் ....

சிறுது நேரத்தில் ...

" போ அதனுள் நில் " கட்டளை குரல் அக்பரிடம் ..

" சலீமின் அனார்கலி நான்  " ஜபத்தினை போல் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டாள்...

அவர்களின் காதலுக்கு வேலியாய் செங்கள் மணல் களிமண் கொண்டு இருக்கி சுவர் எழுப்ப துவங்கியது ...

" சலிமின் அனார்கலி நான் ..
சலிமின் அனார்கலி நான் " ... நாதிராவிடம் வேறு வார்த்தைகள் வரவில்லை ....

மயக்கம் சற்று தெளிய ஆரம்பிக்க தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான் சலீம் ....
"அனார்கலி " எழுந்ததும் அவன் தேடல் அவளே ...

அறைகள் முழுவதும் தேடினான்
தேடினான் ..
தேடிக்கொண்டே இருக்கிறான் ...

தூரத்தில் ஏதோ தெரிகிறது பாதிக்கும் மேல் சுவர் கட்டபட்டு விட்டது .இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பாக்கி இருக்க ...

"அனா..
அனார்...
அனார்கலி ...."
கண்டுக்கொண்டான்... ஆம் அவள் அனார்கலி உயிருடன் அந்த அறைக்குள் மூட பட இருக்கிறாள் ...
ஓடுகிறான்..  ஏனோ அந்த மாவீரனுக்கு கால்களில் அத்தனை தடுமாற்றம் இன்று ...

அங்கு அவள்  " சலிமின் அனார்கலி நான்..
சலிமின் அனார்கலி நான் .. " அதுமட்டுமே ...

வேகமாய் வந்தவன் தடுக்கி விழ அவன் கண்ட கடைசி காட்சி தன் அனார்கலியின் கண்களை மட்டுமே ...

முடிந்தது..  முடிந்தே விட்டது ...

கண்களில் துவங்கிய சலீமின் அனார்கலி காவியம் கண்களிலே முடிந்து விட்டது....

உயிர் பிரியும் வேலையில் அவன் கடைசி வார்த்தைகள் " அனார்கலியின் சலீம் இவன் " என்பதே ...

தன் கடைசி மூச்சு நிற்கும் பொழுதில் " சலீமின் அனார்கலி நான் " கண்கள் மூடு அவள் கடைசி சுவசமாய் கூறிய வார்த்தைகள் ...

ராணி இறந்த பின் அவளுக்காக தாஜ்மஹால்(சமாதி)
கட்டிய ஷாஜகானை விட
தன் காதலுக்காக உயிரோடு இருக்கும்
போதே சமாதியில் இருந்த அனார்கலியும்,அவள் நினைவுகளுடனே வாழ்ந்த சலீம் மட்டுமே என்று அழகிய காதலுக்கு தகுதியானவர்கள்.....

அவர்கள் காதலின் ஆயுட்காலம் குறைவு தான்..ஆனால் அந்த காதல் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.....(அனார்கலி சமாதி பஞ்சாப்பில் உள்ளது.....)

நன்றி
சல்மாசசிகுமார் ❤..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro