வெல்கம் பக்
ஹாய் ஹலோ இதயங்களே..
எல்லாரும் எப்டி இருக்கீங்க... ஹோப் எவ்ரி ஒன் ஈஸ் ஃபைன்..
நானும் ரொம்ப நல்லா இருக்கேன்.. பட் நீங்க கதை படிக்காம எப்டி இருந்தீங்கன்னு எனக்கு உண்மையா தெரியாது... நா ரொம்பவே பாடு பட்டுட்டேன்... ஒரு பதினைஞ்சு நாள் என்னால டைப் பன்னாம இருக்க முடியல... அப்பப்போ கை டைப்படிக்க ஓடீடுது... எப்டியோ நானே எனக்கு போட்டுக்குட்ட கண்டின்க்காக கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்... எக்ஸம் முடிஞ்ச அன்னைக்கு நா அடஞ்ச சந்தோஷத்த வார்த்தையால சொல்ல முடியாதுன்னா பாத்துக்கோங்களேன்... ஹிஹி எல்லாமே சூப்பர்பா எழுதியிருக்கேன்... மார்க்கெல்லாம் சொல்ல மாட்டேன் ... 😝😝
உங்க கிட்ட சொல்ல நிறையா இருக்கு... ஆனா அந்த நேரம் இது இல்ல... கூடிய சீக்கிரம் மாயம் மற்றும் தேடல் கதைய முடிச்சிட்டு மனசு விட்டு சொல்றேன்... மாயம் யூடி உங்களுக்கு புடிச்சிதா புடிக்கலையான்னு தெரியல... என்ன தான் மாபெரும் சந்தோஷத்த அதுல குடுத்தாலும் உங்களுக்கு " கம்பீரமாய் நின்றனர் உயிரிழந்து விட்டனர் என நம்பும் இவ்வுலகின் அதிபயங்கரமான சக்தி கொண்ட வேந்தன்யபுரத்தின் முக்கோக்களும் உலகின் முக்கோக்களுமான யுவக்ரிஷ்ணன் இந்திரஜித் சத்தீஷ்வரன் " அப்டின்னு சொன்னா தான் பெரிய சந்தோஷம் கிடைகும்னு எனக்கு தெரியும்... ஆனா என்ன செய்ரது... சொல்ல முடியாதே...
அதனால தான் உங்கள கொஞ்சமாவது சந்தோஷபடுத்தலாமேன்னு கோவன்களோட பசங்களான நம்ம இரட்ச்சகன்ள் தான் சித்ரன் ருத்ராக்ஷ் ஆதியன்த் னு ஒத்துக்குட்டேன்... சொல்ல போனா இந்த ஒரு ட்விஸ்ட்டையே நா இன்ட்டர்மிஷன்ல தான் ஓப்பன் பன்னனும்னு நெனச்சேன்... ஹிஹி
அப்ரம் இந்த யூடி ரொம்பவே பெருசா இருந்துர்க்கும் அதுக்கு நீங்க செலவழித்த நேரத்திற்கு உண்டான முக்கியத்துவத்துக்கு தகுந்த மாரி எழுதியிருக்கனான்னு எனக்கு தெரியல... அடி நீங்க சந்தோஷமா எதிர்பாத்து வந்து அது நிறவேறாம போய் உங்க நேரத்த நா வீணடிச்சிருந்தா என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க...
இனி தினம் என் தலைய அடமானம் வச்சாவது ஒரு யூடி போற்றுவேன்... இது வர நீங்க பாத்த மாரி 2000 வார்த்தைகளெல்லாம் இருக்காது... 1000 தான்... வேலைகள் இருந்தாலும் கொஞ்ச கொஞ்சமா யூடி குடுத்துடுறேன் கவலப்படாதீங்க...
முடிஞ்ச அளவு மாயம் கதை பாதி முடிஞ்சதும் தேடல் கதைக்கும் ரெகுலர் யூடி குடுக்க ட்ரை பன்றேன்.. அப்ரம் ஒரு முக்கியமான விஷயம்...
காலம் கதைய ரிஎடிட் பன்னி அத அமேஜான்ல பப்லிஷ் பன்ன ரெடி பன்னிட்டேன்... இன்னைன்னு பப்லிஷ் பன்னீடுவேன்.. மூணு நாளிலையே அமேஜான் லின்க் கிடைச்சிடும்... அப்டி வாட்பட்லையும் ப்ரத்திலிப்பிலையும் வாசிக்க முடியாதவங்க அங்க படிச்சிக்கோங்க...
மாயம் கதை எப்டி போகுதுன்னு நீங்க சொன்னா தான் என்னால மேற்கொண்டு எழுத முடியும்... ஏன்னா இந்த கடைசி யூடி எழுதுறதுக்கு எனக்கு ரொம்ப வித்யாசமா இருந்துச்சு... ஏன்னா நா MTK எழுதி முடிச்சு ஆறு மாசமாச்சு... அது எழுதுனதுக்கும் இந்த SMK நா எழுதுரதுக்கும் என்னாலையே பல வித்யாசங்கள கவனிக்க முடியுது...
என் ரைட்டிங் ஏதோ கொஞ்சம் டெவலப் ஆய்ர்க்கு... பட் அது உங்களுக்கு புடிச்சிருக்கான்னு தான் எனக்கு தெரியல... முன்ன மாரி என்னால எழுத முடியுமான்னு தெரியல... பட் நிச்சயமா ட்ரை பன்றேன்... இப்போ 7 ஆம் அத்யாயம் போரடிக்கிர மாரி இருந்தா தயவு செஞ்சு தயங்காம சொல்லுங்க... அது தான் எனக்கு ஒரு முடிவெடுக்க உதவும்... புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்...
ஓக்கே டாட்டா இதயங்களே... நாளைக்கு பாப்போம்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro