மாயம் நிறைவுபகுதி - 4
அப்போதே குளித்து விட்டு அற்புத கோட்டைக்கு செல்ல கிளம்பி வந்த எழில் வீட்டில் எவரையும் காணாமல் ஒரு ஒரு அறையாய் சென்று திறந்து பார்க்க மோகினி அறையை திறந்த எழில் எதற்சையாய் உள்ளே ஒரு உருவம் இருப்பதை கண்டு பட்ட பகலிலே திருடன் வந்து விட்டான் என ஒரு முடிவுக்கே வந்து விட்டாள்...
அங்கு திருமணத்தில் எடுத்த புகைபடங்களில் தன்னவளின் படத்தை தேடி தேடி பார்த்து இரசித்து கொண்டு பின் நிற்கும் வில்லங்கத்தை அறியாதமர்ந்திருந்தான் விதுஷ்..
அவன் நேரம் சரியாக அங்கிருந்த லைட் ஃப்யூஸ் மோக பட்டபகலிலே நடுராத்திரியானதை போல் இருக்கும் மோகினியின் அறை அப்போது குமிருட்டுல் சூழ்ந்தது..
தன் மனம் கவர்ந்தவளின் சிரிப்பில் மயங்கியிருந்த விதுஷிற்கு கரன்ட்டு போனதெல்லாம் தெரியவில்லை... அவனின் பின் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கேட்ட ஏதோ ஒரு சிறிய ஓசையில் தன்னிலை பெற்ற விதுஷ் தன் செல்பேசியை அப்படியே தரையில் விட்டு விட்டு தன்னை தாக்க வரும் ஏதோ ஒரு ஆயுதத்தை வளைத்து பிடித்து அவன் புறமாய் மடக்கி இழுக்க இதை சற்றும் எதிர்பார்க்காத எழில் அவனின் பிடியில் திரும்பி சிக்கிக் கொண்டாள்...
ஒரு கரத்தை முதுகு புறமாய் முறுக்கி பிடித்த விதுஷ் மறு கரத்தால் அவனின் முகத்தில் படர்ந்த அவளின் கூந்தலை அகற்ற தங்கள் முன்பிருந்த கண்ணாடியில் ஒருவரை ஒருவர் கீழே விழுந்த விதுஷின் செல்பேசியின் எல்ஈடி டார்ச் வழியாக கண்ட இருவரும் வாயடைத்து போய் நின்றிருந்தனர்...
எவ்வளவு நேரம் அப்படியே நின்றரோ விதுஷின் பிடி மெதுமெதுவாய் தளர அவனிடமிருந்து கைகளை உருவி விடுவித்து கொண்ட எழில் இவனை நோக்கி திரும்பவும் அவன் ஃபோனை எடுக்க குனிய இருவருமாய் நெற்றியோடு நெற்றி முட்டி கொண்டனர்...
விதுஷ் உடனே அவளின் நெற்றியை மெதுவாய் தேய்த்து விட அவளின் நெற்றி சில நொடிகளிலே சிவந்து காட்சியளித்தது... அவளின் நெற்றியை உன்னிப்பாய் தேய்த்து கொண்டிருந்தவனையே அவள் விழி உயர்த்தி நோக்கிக் கொண்டிருக்க விதுஷின் விழிகளும் அவளின் விழிகளோடு மெல்லமாய் சங்கமித்தது... எழில் என்ன உணர்ந்தாலோ பட்டென அவனிடமிருந்து கதவை நோக்கி ஓட்டம் பிடித்தவளின் கரத்தை பிடித்து நிறுத்தினான் அவன்..
விதுஷ் : கரம் பிடிக்க நம்பிக்கை என்றும் உள என்றுரைத்து விட்டு தற்போது உதறி விட்டு செல்வதன் அர்த்தம் யாது இனியா என அவனின் அவளை பார்த்து கேட்க தரையை பார்த்து கொண்டிருந்த எழில் மெதுவாய் அவனை நோக்கி திரும்பினாள்...
அவள் திரும்புகையில் அவளின் கழுத்தில் ஏதோ மின்னுவதை அவன் காண அது அவன் அவளுக்காய் அளித்த பதக்கமென அவன் அறியும் முன்பாக
எழில் : தற்போதும் எம் கரம் தம் பிடியிலே வீற்றிருக்கிறதென்பதை தாம் மறந்ததற்கு யான் பொருப்பேற்கலாகாது என தன் இனிய குரலில் கூறியவள் அவனின் விழிகள் அப்போதே அவர்களின் இணைந்திருந்த கரங்களில் பதிவதை கண்டு புன்னகைக்க அவன் வேறேதும் உணரும் முன்பாக ருத்ராக்ஷின் " எழில் பாப்பா... எங்க இருக்க... " என்ற கத்தலில் அவனின் கையை விட்டுவிட்டு வெளியே ஓடினாள்...
பித்து பிடித்ததை போல் எங்கோ பார்த்து சிரித்து கொண்டிருந்த விதுஷை அஜய் வந்து இழுத்துச் சென்றான்... அனைவருமாய் இப்போது ருத்ராக்ஷின் சக்தியின் வாயிலாக அற்புத கோட்டைக்கு செல்ல அவர்களை முதலில் வரவேற்த்ததே ஒரு குட்டி சீரல் தான்...
அவர்களின் ஒரு புறம் சிம்மயாளிகள் நின்றிருக்க மறுபுறம் இவர்கள் திரும்பும் முன்பாக ஒரு ஒளியால் சூழப்பட்டிருந்த தீரா பட்டென வெளியே வந்து நின்றாள்...
இவர்கள் கோட்டையின் வெளியே காட்டில் நின்றிருந்தனர்... என்ன ஏதென்று ஒருவர் கேட்கும் முன் வான்மதியுடனே நாயககிகள் அனைவரும் வெளியே ஓடி வர அவர்களோடு அஷ்வித் மறௌறும் ஆதியன்த்தும் நின்றிருந்தனர்... கோவன்களின் கண்கள் ஆதியன்த் மற்றும் அதித்தியின் இணைந்திருந்த கரத்தை கண்டு பெரும் நிம்மதியடைந்தது...
வான்மதியின் கண்ணோட்டத்திலிருந்து...
அஷ்வித் : பாப்பு ஏன் வெளிய ஓடி வந்த... நாங்க வர்ரதுக்கு முன்னாடி ஏதோ சத்தம் கேட்டுச்சு...
அதற்கு சிம்மயாளிகள் ஏதோ வாய் திறக்கும் முன்பாக அவர்களை நோக்கி தீரா ஒரு பார்வை பார்க்க என்ன புரிந்ததோ மூன்றும் முறுக்கிக் கொண்டு உள்ளே சென்றது
அவைகள் உறுமினால் யாருக்கும் ஒன்றும் புரியாது தான் ... ஆனால் அவளோடு கோவன்களுக்கும் புரிந்து விடுமே...
வான்மதி : ஏய் பாப்பு என்ன அங்க இங்கயும் ஓடி பிடிச்சு விளையாடிகிட்டு இருக்க என்னாச்சு
தீரா : ஒன்னுமில்ல பப்பிமா... யுகி அகி விகி ரக்ஷவ ஏன் கூட்டீட்டு வரலன்னு கோச்சிக்கிட்டாங்க அதான் என கூறவும் உள்ளிருந்து சிம்மயாளிகளும் மூன்றும் ஏதோ உறும தான் கோட்டையை முறைத்தால் சிப்பயாளிகளுக்கே தெரிந்து விடும் என்பதை போல் கோட்டையை முறைத்த தீரா " பாத்தீங்களா சிம்மயாளிகளே சொல்றாங்க " என அதையும் கூற ஓரக்கண்ணால் அவளையே பார்த்து கொண்டிருந்த கோவன்களை பார்த்தவள் அவன்கள் மூவரும் இவளை சந்தேகமாய் பார்த்து கொண்டாருப்பதை கண்டு உடடே பார்வையை மாற்றி கொண்டாள்...
ஒவீ : ஏ பாப்பு என்ன மறைக்கிர எங்க கிட்டு இருந்து...
தீரா : ஹான் அப்டிலாம் இல்லையே ஒவீமா...
ருத்ராக்ஷ் : இல்லையே... சிம்மயாளிகள்.. நீ சொற்றதுக்கு எதிர் மறையா சொன்ன மாரி தான எனத்து ததோனுது
தீரா : அது இதுன்னு ஒளறாம அங்குட்டு மோடா... நானே .. அம்என் லாலிப்பாப்ப தேடிக்கிட்டு இருக்கேன்... ஹே என் லாலிப்பாப் எங்க .... லாலிப்பாப் என கத்தியபடி மீண்டும் மோட்டைட்டுள்ளே ஓட அனைவரும் தலையிலடித்த படி அவளை பின் தொடர்ந்தனர்...
கோட்டைக்குள் இறுதியாய் நுழைந்த ராம் அனைவரும் தங்கள் முன் சென்றதை உணர்ந்து அவன் தங்கை இக்ஷியுடன் ஏதோ ஒரு உணவு வகை பற்றி சின்சியராய் பேசி கொண்டிருந்த நித்ராவின் கரத்தை பிடிக்க இக்ஷியை கண்டு கண்ணடித்து விடேடு பெண்கள் இருவரும் அவன் செயலை உணரும் முன் ராம் அங்கிருந்து நித்ராவோடு மறைந்திருந்தான்...
இக்ஷி தன்னை கடந்து சென்ற காற்றினால் தலையை சிலிப்பு கொண்டு நிற்க " ஹாய் மை டியர் அத்தை பொண்ணே " என்ற டி கஷ்வலாய் அவளை நோக்கி தன் வசீகரிக்கும் புன்னகையுடன் நடந்து வந்தான் மிதுன்
இக்ஷி அவனை கண்டு கொள்ளாததை போல எங்கோ ர்வையை திருப்பி கொள்ள
மிதுன் : ஓஹ் எங்கள பாக்கலையாமாம் சரி தான்.. சரிப்பா நா என் மரத்தான் ஃபீல்டுக்கு போறேன் வர்ரவங்க வரலாம் என கூறி விட்டு தன் காலில் இருந்த ஷூக்களை கலட்டினான் மிதுன்...
இக்ஷி : ம்க்கும் ... ஷூ இல்லாம தான் இவரு மரத்தான் ஓடப் போறாரு என முகவாயை தோளுக்கு இடித்து விட்டு உள்ளே செல்லப் போன இக்ஷி அவனின் கூற்றில் அவனை னேனோக்கி ஆசையாய் திரும்பினாள்...
மிதுன் : நாழு கால்ல ஓடுரதுக்கு ஷூ தேவையில்ல கண்ணு.. உம் மாமன் புலி என உறுமியவனை நோக்கி வேகமாய் திரும்பிய இக்ஷி மிதுன் நொடியில் தன் வேங்கையின் உருவெடுத்து உறுமியதை கண்டு ஆர்வமாய் கண்களை விரித்தாள்...
மிதுன் அவளை விட்டு விட்டு செல்லப் போவதை போல் கால்களை மண்ணில் தேய்த்து காட்டிற்குள் மறைய தயாராக
இக்ஷி : டேய் கத்தான் என்னையும் அழச்சிட்டு போடா என அவனை நோக்கி தையத்தக்கத் தையாவென குதிக்காத குறையாக ஓடிச் சென்று அவன் மீது ஏறி கொண்டாள்...
மிதுன் வெற்றி பெற்றதாய் ஒரு உறுமலையிட அவளின் மனதிலோ " இவ்வேங்கையவனிடம் மனம் கவள ஈண்டெடுக்கப்பட்டிருக்கும் உம் இதயம் உம்மை என்றும் எம்மை புறம் தள்ள அனுமதியளிக்காதடி என் ஆசை காதலியே " என கூறி விட்டு அவளின் கரங்கள் அவனின் கழுத்தை அணைத்து முகத்தை அவன் கழுத்தில் புதைத்து கொண்டவளின் வெட்க கதுப்புகளை மணக்கண்ணில் கண்டு இரசனையாய் புன்னகைத்தவனின் கால்கள் இப்போது அக்கானகத்திற்கும் சீரிப் பாய்ந்தது...
இக்ஷி வாகாய் அவன் மீது அமர்ந்து அவளது கூந்தலை அடித்து செல்லும் காற்றிற்கு இடையே அடைக்கப்பட்ட முயல் குட்டியை போல அவனோடு ஒன்றி போய் அவனின் கழுத்தில் மேலும் முகம் புதைத்து கொண்டாள்...
அதில் அவனின் காதல் மனம் பொங்கி எழ தன்னவளை விண்ணில் பறக்க வைக்காத குறையாக அந்த பெரும் மைதானத்தில் ஓடி கொண்டாருந்த மிதுனின் மனம் அன்று பெரும் பொக்கிஷத்தை அடைந்ததை போலிருந்தது...
போரில் கடம்பவன சர்ப்பத்தினால் கடிப்பட்ட மிதுனின் கால் முழுமையாய் குணமாகியிருந்தாலும் அந்த சிகிச்சையில் அவனுக்களித்த காயங்களால் இரத்த ஓட்டமும் நரம்புகளும் எவ்வித எடையுமில்லாத இருக்க தினம் இவ்வாறு அவனது மிருக ரூபத்தில் ஓடத் தொடங்கினான்... வேங்கையின் வேகத்தை கூற வேண்டுமா...
அந்த அழகிய தருணத்தில் ஏதையோ உணர்ந்த மிதுனின் ஓட்டம் மெதுமெதுவாய் நடைக்கு மாற அவனின் முதுகிலே சாய்ந்து உறக்கத்தை தழுவியிருந்தாள் அவனின் ஆசை காதலி
சில பெருமூச்சுக்களுக்கிடையே தன் மனித ரூபத்திற்கு மாறிய மிதுன் அவளை குழந்தை போல் நெஞ்சோடு டணைத்த படி இரு கரங்களிலும் ஏந்தி கொள்ள அவளின் தூங்கும் அழகை இரசித்தவன் அவளின் நெற்றியில் பட்டும் படாது இதழ் பதிக்க அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்த போல அவனின் தோளை சுச்சி தன் கரங்களை மாலையாய் இட்டு அவனின் கழுத்தில் மேலும் தன் முகத்தை புதைத்து கொண்டாள் அவள்...
அவர்களின் காதலை வெளிப்படுத்த அந்நிலையில் வார்த்தைகள் தேவைப்பட்டிருக்கவில்லை... அவளோடு நெற்றி முட்டி மெதுவாய் புன்னகைத்தவன் தன் உறங்கும் காதலியை அங்கிருந்து தூக்கிச் சென்றான்...
காட்டின் மறுபுறத்தில் ஒரு மரத்தோடு கை கட்டியபடி நித்ரா நின்றிருக்க அவளுக்கு இரு புறமும் தன் கரங்களால் சிறை வைத்து நின்றிருந்தான் ராம்
ராம் : மடம் எப்போ வாய திறக்க போறீங்க...
நித்ரா : சாரு எப்போ என்ன விட போறீங்க...
ராம் : காலைல பேசிக்கிட்டு இருக்கும் போதே ஓடீட்டு இப்போ என்ன திரும்ப வேற விட சொல்றியா...
நித்ரா : தோ பாரு டா அத்தான் அதெல்லாம் இப்போ விளாவரிக்க முடியாது ... நாம வீட்டுக்கு போலாம் வா டா
ராம் : முடியாது...
நித்ரா : அத்தான் ப்லீஸ்ஸ்ஸ்ஸ்
ராம் : ம்ஹும் முடியாது
நித்ரா : சரி உனக்கு என்ன தான் அத்தான் வேணும்..
ராம் : நீ சொல்லு...
நித்ரா : என்ன நா சொல்லனும்... என முகத்தை சுருக்கி கொண்டு அவனை பார்க்க அவள் கன்னத்தில் மெதுவாய் இதழ் பதித்தவன் அவள் இன்னும் முறைத்த படியே இருக்கவும்
ராம் : போதும் நித்வி.. இன்னும் எவ்ளோ தான் ஓட போற
நித்ரா : நீ உண்மையாவே என்ன வேலை பாக்குரன்னு சொல்லு அப்போ தான் நா உன்ட்ட பேசுவேன்...
ராம் : ம்ச் என்ன பேபி ஐம் ஜஸ்ட் அ பாக்ஸர்.. உனக்கு தான் தெரியுமே...
நித்ரா : நீ பாக்ஸரா இருக்குரதால தான் இந்த புல்லட் பட்டுச்சோ என சட்டென அவனின் சட்டையை பிடித்து கத்த அவனின் தோளுக்கும் கழுத்துக்கும் இடையே ஒரு நீண்ட தையல் விழுந்திருந்ததை அதிர்ச்சியோடு கண்ட ராம் கண்ணீர் மழ்க அவனை முகமிறுக நோக்கிக் கொண்டிருந்தவளை மெதுவாய் நோக்கினான்...
ராம் : நித்...
நித்ரா : பொய் சொல்லனும் பாக்காத ... எவ்ளோ நாள் என்ன ஏமாத்த போற... எப்டி உனக்கு குண்டடி பட்டுச்சு மரியாதையா சொல்லு... நான் எவ்ளோ நாள் தெரியாத மாரியே நடிச்சிட்டு இருப்பேன்... நேத்து நீ போனப்போ கூட எவ்ளோ நேரம் உயிர புடிச்சிட்டு இருந்தேன் தெரியுமா...
ராம் : எவ்ளோ நாளா இதெல்லாம் தெரியும் உனக்கு...
நித்ரா : உனக்கு குண்டடி பட்ட அன்னைலேந்து எனக்குத் தெரியும்... என்ன மட்டும் ஏன் அத்தான் நீ கஷ்டப்படுத்தீட்டே இருக்க... உன்ன நெனச்சிட்டே நா அழுதுட்டு இருக்கனுமா... நீ என்ன விட்டு போய்ட்டா நா என்ன பன்னுவேன்... வேற யாராயாவது எனக்கு கல்யாணம் பன்னி வைப்பாங்கன்னு மட்டும் நினைக்காத... என் அண்ணனுங்களே அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..
ராம் : சாரி நித்வி...
நித்ரா : போடா... நீயும் உன் நித்வியும் என நகர போனவளை இழுத்து அவன் நெஞ்சில் அவன் சாய்த்து கொள்ள அவன் சட்டையை பிடித்து கொண்டு கதறி கதறி அழுதாள் நித்ரா...
ராம் : ஓக்கே ஓக்கே ஓக்கே காம் டௌன்.. நல்லா கேட்டுக்கோ.. நா என்ன வேலை பாக்குறேன்னுலாம் உன் கிட்ட சொல்ல முடியாது நித்வி.. பட் நா உனக்கு உறுதியளிக்கிறேன் டா... உன்ன விட்டு எப்பவுமே நா போக மாட்டேன்.. எனக்கு எதுவும் ஆகாது... எவ்ளோ கஷ்டம் வந்தாலும் உனக்காக மட்டுமாவது நா உன் கிட்ட வருவேன் டா... என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே...
நித்ரா : ம்ம் ம்ம்
ராம் : குட்... சோ நல்லா நியாபகம் வச்சுக்கோ... எப்பவுமே நா உன் கூட தான் இருப்பேன்... உன்ன விட்டு போக மாட்டேன்.. உனக்காக திரும்ப வருவேன்... உன் அண்ணனுங்களையும் பத்திரமா கூட்டீட்டு வருவேன் போதுமா...
நித்ரா : ஹோ அப்போ எல்லாரும் கூட்டு களவானிங்களா... என கண்ணீரை துடைத்த படி கேட்க
ராம் : பின்ன நா மட்டும் பன்ன முடியுமா... இல்ல அவனுங்க தான் விற்றுவானுங்களா...
நித்ரா : என்ன சொல்ற அத்தான்
ராம் : ஹ்ம்ம்ம் சரி கேளு சொல்றேன்.. ஃபர்ஸ்ட் இந்த வேலைல இறங்குனதே சித்து ருத்ரா ஆதி தான்... அத தெரிஞ்சி நானும்... மிதுனும் ராகவும் இறங்குனோம்.. எங்கள பின் தொடர்ந்து அஷ்வித் கார்த்திக் அஜய் இறங்குனாங்க.. எங்க யாரையும் தனியா விட முடியாம மித்து வருண் அருண் ஆதவும் இறங்கீட்டாங்க.. இத தெரிஞ்சிக்கிட்ட துருவும் ருமேஷும் விதுஷும் எங்க கூடவே இருன்ட்டாங்க...
நித்ரா : எருமைங்களா... எங்க எல்லாரையும் ஏமாத்திக்கிட்டா இருக்கீங்க...
ராம் : ஆ ஹாஹா நாங்க இல்லடி...உண்மையா ஏமாத்துரது நம்ம அப்பாஸ் தான்... நாங்க என்ன செய்ரோம்னு அவங்க எப்பையோ கண்டுப்புடிச்சிட்டாங்க...
நித்ரா : மம்மீஸும் கண்டுப்புடிக்கிட்டும் அப்ரம் இருக்கு உங்களுக்கு ... அது வர என் கிட்ட வராத ... குரங்கு என அவனை தள்ளி விட்டு விட்டு ஓட
ராம் : ஹே நில்லு டி யார குரங்குங்குர என அவளை பின் தொடர்ந்து துரத்தி ஓடினான்...
ஆயுதகள அறையில் சிம்மயாளிகள் அவர்களின் இடத்தில் அழகாய் அமர்ந்து எப்பொழுதும் போல மற்றவர்களின் செவிகளை கொய்ங் கொய்ங் என காது கிளிக்க வைக்காத குறையாக மாற்றி மாற்றி அவர்களின் மொழியில் உறைறாடல் நடத்தி கொண்டிருக்க அங்கிருந்த தீராவை தவிர்த்து மற்ற நாயகிகள் அனைவரும் காதை மூடி கொண்டு அமர்ந்திருந்தனர்...
வான்மதி : ஏன் பாப்பு என்ன பேசுறாங்க அவங்க என ஓரக்கண்ணால் சிம்மயாளிகளை முறைத்து கொண்டிருந்தவளிடம் சந்தேகமாய் கேட்க ஒரு சில நொடிகள் தண்ணியில் முக்கியெடுத்த பறவையென முளித்த தீரா
தீரா : அம் அது வந்து ஹான் நீ யாருன்னு தெரியாம அவங்களுகுள்ள கான்வர்ஸேஷன் நடத்திக்கிட்டு இருக்காங்க பப்பிமா என்கவும் சுடசுட எண்ணெயை ஊற்றியதை போல தீராவை நோக்கி முறைத்தனர் நம் சிம்மயாளிகள்
பவி : ஏன் பாப்பு உனக்கு எப்டி நம்ம சிம்மயாளிகளோட பாஷை புரியிது...
தீரா : பாஷை உருவாக்குனதே நான் தானே... எனக்கு புரியாம இருக்குமா... என சாதாரணமாய் கூற அவளின் வாயிலிருந்த லாலிப்பாபை கபக்கென பிடுங்கிய சந்தியா
சந்தியா : உண்மைய சொல்லு பாப்பு
தீரா : அதுக்கு எதுக்கு என் லாலிப்பாப்ப புடுங்குன நீ என அவளிடமிருந்து பிடுங்கி மீண்டும் வாயில் வைத்து கொண்டவளிடமிருந்து சந்தியா மீண்டும் பிடுங்க முயறௌசிக்க இம்முறை தீராவின் பற்கள் விடுவேணா என சவால் ஏற்காத குறையாக அந்த லாலிப்பாப்பின் குச்சியை நறுக்கி பிடித்து கொள்ள சந்தித்தாவும் விடாநு இழுக்க ஒரு கட்டத்தில் சந்தியாவிடம் குச்சியும் தீராவிடம் முட்டாய் மட்டும் வந்து இருவரும் பலென்ஸ் இன்றி கீழே விழுந்தனர்...
வான்மதி : லூசு பக்கி ஒரு அன்சர் சொன்னா குறைஞ்சா டி போய்டுவ... என அவளை தூக்கி விட அப்போதும் வாயிலிருந்த மிட்டாயை ருசித்தவாறு எழுந்தவள் அவளை கேவலமாய் பார்க்கும் குடும்பத்தை கண்டுக்கொள்ளவில்லை...
தீரா : சரி சரி விடுங்கையா... எவ்ரித்திங் ஈஸ் ஃபர் இன் ஃபன்ட்டசி அன் தீராஸ் ஸ்டோரீஸ்...
நித்ரா : அப்போ இப்போயும் நீ உண்மைய சொல்ல மாட்ட
தீரா : அடடடடா நானும் சிங்கம் டி அதான் எனக்கு அவங்க பாஷை புரியிது என்கவும் இப்போதும் அனைவரும் அவளை நம்பாத பார்வை பார்க்க அப்போதே சரியாக நாயகன்களும் அந்த அறைக்குள் நுழைந்தனர்...
சமையலறையில் சுடுநீர் வைத்து கொண்டிருந்த ஆருண்யா தன் பின் எவரோ இருக்கிறார் என்ற உணர்வில் திரும்பி பார்க்க சமையலறையின் வாயிலிலே தயங்கி தயங்கி நின்றிருந்தான் ருத்ராக்ஷ்...
அவனை கண்டு ஒரு சில நிமிடகள் அவள் அமைதியாய் நிற்க பின் வரவழைத்து கொண்ட புன்னகையுடன்
ஆருண்யா : வாரும் இரட்சகரே.. உணவுண்ண வந்தீரெனில் தற்போழ்தே தமக்கு அறிவித்திடுகிறேன்.. அத்தையார் கூறியவரை உண்டி தயாராக இன்னமும் சில நாளிகை ஆகும்
ருத்ராக்ஷ் : ஹ்ம் தம்மிடம் உரையாட சில வினாடிகள் வேண்டுமெமக்கு
ஆருண்யா : அவ்வாறெனில் தாம் உணவுண்ண வரவில்லையோ
ருத்ராக்ஷ் : இல்லை
ஆருண்யா : ஓஹ்.. என சுரத்தே இல்லாமல் கூறி கொண்டு சுடுநீரை தனித்தனியே குவளைகளில் ஊற்றத் தொடங்க எங்கு ருத்ராக்ஷின் பொருமை பறந்ததோ
ருத்ராக்ஷ் : எமக்கு பதிலளி ஆருண்யா என அவன் சட்டென அவள் கரத்தை பிடுக்கிழுக்க அவ்விருவர் எதிர்பார்க்கும் முன்பாக ஆருண்யாவின் கரத்திலிருந்த சுடு நீர் ருத்ராக்ஷின் கரத்தில் தவறுதலாய் ஊற்றப்பட்டிருக்க அதற்கு பல்லை கடிப்பதை விடுத்து வேறொரு உணர்வையும் காட்டாத ருத்ராக்ஷின் மனதை ஒரு ருறை அசைத்து பார்த்தது ஆருண்யாவின் கண்ணீர்
ஆருண்யா : என் காரியம் செய்கிறீர் தக்ஷை.. சித்தம் கலங்கி விட்டதா.. என் காரியம் செய்திருக்கிறீர் என்பதை அறிந்தீரா...
ருத்ராக்ஷ் : இவ்வழி ஒன்றும் அத்துனை வலியுற்றதாய் அல்ல ஆருண்யா
ஆருண்யா : தமக்கு வலிக்காதிருப்பதற்காக எம் மனதை இரணம் செய்தாக வேண்டுமென்ற எண்ணமா... தமக்கொரு காயம் சிறு பூச்சியின் கடியாகத் தெரிந்தாலும் எமக்கது எப்பேர் பட்ட வலியென்பதை தாம் அறிவீரா.. தம்மை நெருங்க இயலாமல் அணுஅணுவாய் சித்திரவதை பட்டு தவிக்கும் ஓர் வலி போதாதா எம் வாழ்கையை இருளடைக்க... இவ்வாறு முட்டாள் தனம் புரிந்து தான் எம்மை தம் புறம் ஈர்க்க வேண்டுமா
ருத்ராக்ஷ் : பின் வேறென்ன டி செயல் புரிய... யான் மூன்றிற்கும் மேற்பட்ட ஆண்டுகள் உம்மை காத்திருக்கச் செய்து உம்மை தவிக்க செய்தேன் தான்.. ஆயின் என் காதலை உணர்த்த முயன்ற போதிலிருந்து எம்மை தள்ளி வைப்பது நீயா அல்ல உம்மை யான் தள்ளி வைக்கிறேனா... எனது முட்டாள் தனம் உம்மை எவ்வாறு காயப்படுத்தியதோ அவ்வாறே உம் முட்டாள் தனத்தினால் யானும் வலியை தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை என்றடி உணர்ந்துக் கொள்ள போகிறாய்... எம் சகோதரர்கள் தம் சகோதரிகளை விட்டு ஒதுங்கியிருந்ததன் காரியம் (காரணம்) அறியாமலே எம் காதலையும் உணராமலே யானும் உம்மை விட்டு நீங்கி விடுவேனென எண்ணி கொண் நீர் எம்மை விட்டு நீங்கியதற்கு எம்மை என் செய்ய கூறுகிறாய்...
ஆருண்யாவிற்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்ததே ஒழிய வாயிலிருந்து ஒரு வார்த்தையேனும் வரவில்லை... அதிர்ச்சி ... அவன் தன்னிடம் கத்தி பேசிய அதிர்ச்சி... பயம் ... தான் ஒதுங்கியிருந்ததன் காரணத்தை உணர்ந்த பயம்... வலி .. தன்னால் அவனும் தவிதவிக்கிறான் என்ற வலி
ருத்ராக்ஷ் : தற்போதும் கூறுவேனடி... யான் அனுபவித்த வலிகளை விடுத்தும் நீ அனுபவித்து அனுபவிக்கும் வலிகள் ஏராளம்... அதற்கு மருந்தாய் அமைய எம்மை ஏன் தடுக்கிறாய்... எம் காதலை உணர்ந்தும் அதை ஏன் தூர ஒதுக்குகிறாய்
ஆருண்யா : தம் காதலை ஒதுக்கும் அளவிற்கு யான் ஒன்றும் அப்பேர்பட்ட வீரமானவள் அல்ல தக்ஷை... எமக்கனைத்துமே எம் சகோதரிகள் தான்.. அவர்கள் படும் வேதனையை உடனிருந்து கண்டு களித்தவள் நான்... இன்று அதித்தி தம் இளவலுடன் இணைந்திருந்தாலும் அதற்கு முன் அவள் அனுபவித்த வலி கொடியதாகும்.. இன்றவ்வலி அனைத்தையும் தம் இளவலின் காதலே கானல் நீராக்கச்செய்துவிட்டது.. ஆயினும் எம் தமக்கையை பற்றி அறிவீரா... எம்மிருவரை விடுத்தும் அவள் அனுபவித்த கண்டு வந்த வலிகளும் வேதனைகளும் கோடிக்கணக்கானவை.. அவர்கள் எமக்கு முன்பே அவரவர் மனாளனை கண்டிருந்தனர்.. யான் தம்மை அன்று நேரில் காணும் முன்பு ஒரு போதும் தம்மை கண்டதில்லை.. எனவே எங்கு என்னையும் இதே போல் எம் மன்னவன் ஒதுக்கிடுவாரோ என்ற அச்சம் இருந்தது... எம் சகோதரிகளின் நிலையை கண்டதும் தம்மை அனுகி அவர்கள் அனுபவிக்கும் வலியை அனுபவிக்க திராணியற்றே தம்மை விட்டு தள்ளி சென்றேன்
ருத்ராக்ஷ் : ஏனடி இவ்வாறு சிந்திக்கிறாய்... எம் சகோதரன்கள் அவரவர் மனையாளை விட்டு ஒதுங்கியிருந்ததே காதலை உணராததால் தான்... அத்தோடு நித்யா அனுபவித்த வலிகளுக்கு சித்து பொருப்பேற்றதை அறிவாயோ.. இன்னமும் எம் இருவரை விடுத்தும் நித்யாவை அத்துனை வலிகளை தாங்க வைத்ததற்காய் அவன் வலிகளை அனுபவித்து கொண்டிருக்கிறான்.. ஹ்ம் உமக்கு எம் காதல் மீதல்லவா சந்தேகம் ஏற்பட்டுள்ளது...
ஆருண்யா : அல்ல ... அல்ல... எமக்கு தம் காதல் மீது என்றும் சந்தேகம் ஏற்பட்டதல்ல... என அவனை பார்க்க இயலாமல் கண்களை இறுக்க மூடி கத்தி அழுதவளின் தலையை மென்மையாய் கோதி விட்ட ருத்ராக்ஷின் கண்காளும் பனித்திருந்தது...
ருத்ராக்ஷ் : இனிமேலுமாவது உம் காயங்களுக்கு என் காதலை மருந்தாக அனுமதிப்பாயா
ஆருண்யா : அதை தாம் வினவ வேண்டும் என்ற அவசியமன்று தக்ஷை என்றவளின் கண்ணீர் அவனின் காயம் பட்ட கரத்தில் பட்டுத் தெறிக்க அவளின் கண்ணீர் பட்டதும் இதுவரை அனுபவித்திடாத ஒரு உணர்வில் அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்ட ருத்ராக்ஷ் தான் மட்டுமல்ல தன் காதலும் தனக்கு மருந்து தான் என்பதை அவனின் குணமான கரத்தை கண்டு அறிந்து கொண்டான்...
நிறைவுபகுதி தொடரும்...
சப்பப்பாஆஆஆஆஆ முடிய மாட்டிக்கிதப்பா... சரி விடுங்க அடுத்த அத்யாயத்தையும் நைட்டுக்குள்ளையே குடுத்டுறேன்.. லேட்டானதுக்கு மன்னிச்சிடுங்க இதயங்களே ... தன்க்ஸ் ஃபார் யுவர் அன்கண்டிஷனல் லவ்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro