மாயம் (நிறைவுபகுதி - 3)
நீண்ட பாகமாகத்தான் இருக்கும்... விருப்பமில்லாதோர் தவிர்த்து விடு செல்லலாம்.. நேரத்தை வீணடிக்க வைத்திருந்தாலும் தையை கூர்ந்து மன்னிக்கவும்...
__________________________________________________________
தீராவின் கண்ணோட்டத்திலிருந்து..
தீரா : பப்பிமாஆஆஆஆஆ எங்க இழுத்துட்டு போர என்னைய... நா ரெஸ்ட் எடுக்கனும் ம்ம்ம்ம்ம்
வான்மதி : ஒரு நாள் தூங்கலன்னா நீ குறைஞ்சு போய்ட மாட்ட பாப்பு வா வா டைமாகுது
தீரா : அடடடடா... எங்க போறோம்னாவது சொல்லேன்.... நா ஆல்ரெடி தப்பிக்கனும்...
வான்மதி : வேதபுரத்துக்கு தான் வேற எங்க
தீரா : அங்க ஏன் பப்பிமா
வான்மது : எல்லாம் காரணமாத் தான்...
தீரா : சொல்லலன்னா நா வர மாட்டேன் வானுமா அப்ரம் உன்னாலையும் போ முடியாது...
வான்மதி : எல்லாம் காரணமாத்தான்... டக்குன்னு வா... ஆல்ரெடி லேட்டாய்டுச்சு நீ வேற அடம்ப்புடிக்காத
தீரா : ஆமால்ல...
வான்மதி : ஆமா ஆமா வா போலாம்...
தீரா : சரி சரி வா போவோம் நானும் தப்பிச்ச மாரி இருக்கும் என தன் சில மந்திரங்களால் வேதபுரத்திற்கு நேரடியான ஒரு வாயிலை உருவாக்கியதும் இருவருமாய் உள்ளே செல்ல " ஏ தீரு கீழே குனி டி " என காதிற்கருகில் கேட்ட அலரலில் முன் சென்ற தீராவை இழுத்து கொண்டு அப்போதே அவ்வாயிலை விட்டு ஒரு காலை மட்டுமே வைத்த வான்மதி தொபக்கடீரென கீழே விழ அவர்களின் தலையை தாக்கவிருந்த அந்த அம்பு நுனியில் சீரிச் சென்று அவர்களின் பின்னிருந்த மரத்தில் பதிந்தது
நெஞ்சாங்கூட்டில் துடிக்கும் இதயத்தின் சத்தம் அருகில் அமர்ந்திருப்போர் வரையிலும் தெளிவாய் கேட்க " ஹே நா கரெக்ட்டா குறி வச்சிட்டேன் " என கைதட்டி கொண்டு குதித்த மாயாவை இருவருமாய் பீதியுடன் நிமிர்ந்து பார்த்தனர்
அவர்களுக்கு பத்தடி முன்னே மாயா குதியாய் குதித்து கொண்டு கை தட்டி கொண்டிருக்க அவளின் அழகிய காற்கூந்தல் அவளின் ஒவ்வொரு துள்ளலிலும் அவளூடு எகிரி குதிக்கயில் அவளவனின் முகத்தையும் மென்மையாய் தீண்டி வர வில்லை பிடித்து கொண்டு தன்னவளை பார்வையாலே வருடி கொண்டு ஒரு புன்னகையுடன் நின்றிருந்தான் ஆதவ்
தீரா : வாய்லையே போடுவேன்... நீ குறி வச்சது என் தலைய டி...
மாயா : ஹான் உன்ன யாரு திடீர்னு குறுக்கால வர சொன்னது... இதுக்கு தான் கதவ திறந்து வரனும்ங்குரது... நீயா ஒரு கதவ திறந்து வந்தா நா என்ன செய்ய முடியும்...
வான்மதி : சொல்லுவ மா சொல்லுவ... நீ இவள போட்டுத் தள்ளீட்டா அப்ரம் போராளி கரெக்ட்டருக்கு நா எங்க போவேன்...
ஆதவ் : உனக்கு போராளி கரெக்ட்டர் தான வானுமா ப்ராப்லம்.. நீ கவலையே படாத அவளுக்கு சப்ட்யூட்டா நா சர்ப்பலோகத்துலேந்து ஆள் அனுப்பி வைக்கிறேன்.. என் செல்லக்குட்டி அவள போட்டு தள்ளீடட்டும் என மாயாவை இடையோடு அணைத்தபடி கூற அவனின் திடீர் அணைப்பில் அவனின் அப்பில் பெண்ணாகவே சிவந்த மாயா தீராவை போட்டுத் தள்ளும் வாய்ப்பு கிடைத்ததும் இன்னும் உற்சாகமாய் கைதட்டி சிரித்தாள்...
வான்மதி : ஹான் இந்த ஐடியா நல்லா இருக்கே
தீரா : படுபாவிங்களா... ஏன் இப்டி என்ன போட்டு தள்ளுரதுலையே இருக்கீங்க
வான்மதி : அப்போ தான் நீ கென் அண்ணன் அண்ணிங்க பசங்கள பிரிச்சு வைக்காம இருப்ப... உன் தொல்லை இருக்காதுல்ல என நாக்கை துரித்து அவளை கடுப்பேற்ற முகத்தை சுருக்கி அவளை முறைத்த தீரா
தீரா : நீ இங்கையே கெட... நா மறுமை பூமிக்கே போறேன்...என திரும்பிநடக்க
மாயா : நீ கென்ன டி வானுவ விட்டுட்டு போறது... வானு எங்க கூட தானௌ இருப்பா நீ கெளம்பு
வான்மதி : வெவ்வவெவ்வ நா இங்கையே இருந்துக்குவேனே
தீரா : ஹான் ஹான் இரு இரு... நீ எப்டி மறுமைபூமிக்கு வரன்னு நானும் பாக்குறேன் என மந்திரத்தை உபயோகிக்க தொடங்க அவளது கரத்தில் தாண்டவமாடத் தொதொடங்கிய மாயத்தை கண்ட பின்பே தன்னால் மறுமைபூமிக்கு அவளில்லாது செல்ல இயலாதென்பதை நினைவு கொண்ட வான்மதி
வான்மதி : அடியே அடியே பாப்பு பாப்பு சும்மா சும்மா ... என்ன விட்டுட்டு போய்டாத என ஓடிச் சென்று அவளது கரத்தை பிடித்து கொண்டாள்...
தீரா : ஹான் அப்டி வா வழிக்கு என இளித்தவளின் தலையிலே அடித்தாள் அவள்
இவர்கள் இருவரையும் பொருட்டாட் மதிக்காது அக்காதல் ஜோடி ஒருவர் மற்றவரின் கண்கள் சம்பாஷனை பேச மோன நிலையில் சங்கமித்து நின்றிருந்தனர்
வான்மதி : ஹலோ எச்சுஸ்மி.. ஹலோ என அவர்களுக்கு இடையே கையை நீட்டி ஆட்ட அங்கு ரியக்ஷன் இருந்தால் தானே தொடர்ந்து பேசுவதற்கு... தீரா வான்மதியை இழுத்து கொண்டு அவர்கள் திரும்பப் போவதில்லை என்பதையறிந்து அவர்களை தாண்டிச் சென்றாள்...
மாயாவின் கண்மணிகளில் தெரிந்தே விரும்பி தொலைந்து கொண்டிருந்த ஆதவின் விரல்கள் மென்மையாய் அவளின் நெற்றியில் வந்து விழுந்த கற்றை கூந்தலை ஒதுக்கி விட அவனின் பட்டும் படாத ஸ்பரிசத்தில் சிலிர்த்தடங்கிய மாயா அதற்கு மேலும் அங்கு நின்றால் தன்னையே அவனிடம் இழந்து விடுவாளென்பதை உணர்ந்து தன் பலம் கொண்டு அவனை தள்ளினாள்...
அவளின் கரத்தை பிடித்து அவன் மேலும் அவளை அவளோடு இழுக்க அவன் கண்களை எதிர்நோக்க இயலாமல் நாணம் தலை தூக்க கிடைத்த ஒரு நொடி இடைவேளையில் அவனை முழுதாய் தள்ளி விட்டு விட்டு அவன் எழுவதற்குள் அங்கிருந்து மறைந்திருந்தாள் மாயா
தலையை கோதிய படி தனிச்சையாக சிரித்த ஆதவ் விண்ணை நோக்கி நிறைவாய் புன்னகைத்து கொண்டான்...
வான்மதி : ஹே பாப்பு என்ன இடம் இது...
தீரா : ஓ நா உன்ன இங்க அழச்சிட்டு வந்ததில்லல்ல... இது தான் அவங்க வீடு பப்பிமா... கிராமத்துக்குள்ள இருக்குரது ... எப்டி செம்மையா இருக்கா என சத்தமாய் கேட்க
வான்மதி : நாம காட்டுக்குள்ள இல்லையா என இவள் வேறு ஒரு கேள்வி கேட்க
தீரா : இல்.. என கூற வரும் முன்பாக
ராம் : இல்ல இது நம்ம வீட்டு கார்டன் என இருவரையும் முறைத்த படி அவர்களுக்கு முன்பாக நின்றிருந்தான்...
இருவரும் அவனை நிமிர்ந்து பார்க்க வான்மதி ராமின் தோளுக்கு பின்பாக சற்றே தொலைவில் ஒரு பெண் ஓடுவதை கண்டு ராமின் இந்த கோபத்தின் காரணம் புரிந்து சிரிப்பை அடக்க இயலாமல் தீராவை பார்த்தாள்...
தீரா : நீ ஏன் டா எல்லா புதரையும் எட்டி பார்த்துட்டு இருக்க என அவனிடம் சாதாரணமாய் கேட்க ராம் நங்ஙென அவள் தலையிலே ஒரு கொட்டை வைத்து விட்டு
ராம் : வா வானுமா அவ கெடக்குரா என வானுவை வரவேற்த்து விட்டு சென்றான்...
தலையை தேய்த்தபடி அவனை புரியாது முறைத்து பார்த்த தீரா வான்மதி வயிற்றை பிடித்து கொண்டு சிரிப்பதை காண
வான்மதி : ஹாஹாஹா ஏன் பாப்பு அவன் மூட் தெரிஞ்சும் இப்டி வாய விட்டு கொட்டு வாங்கிக்கிர
தீரா : மூட் தெரிஞ்சுமா... எனக்கு தான் தெரியலையே பப்பிமா
வான்மதி : நீ கத்துன கத்துல அவன் கூட இருந்த நித்ரா வீட்டுக்குள்ள ஓடீட்டா... நீ பாக்கலையா என சிரித்தபடியே கேட்க தீரா கூறிய பதிலில் இன்னும் சிரித்தாள் அவள்
தீரா : ம்க்கும் பாடி பில்டராக்கும் என் முன்னாடி பாதி மலை சைசுக்கு அவன் நிக்கும் போது நா எங்க பாக்குறது ... ஏன் எல்லாரும் இப்டி வளந்து தொலச்சிருக்கானுங்களோ தெரியல என தலையை தேய்த்தபடியே கூறியவளின் தலையிலே வந்து குதித்தான் சேவன்
வான்மதி : ஹே ஹாய் சேவன் என உற்சாகமாய்
சேவன் : வரவேற்கிறேன் சகோதரியாரே... என்றவனோடு " வாரும் வாரும் வாரும் வான்மதியே " என கத்தி கொண்டே பறந்து வந்தான் மயூரன்
தீரா : சேவா இறங்குடா கீழ ..வலிக்கிது
மயூரன் : ஹான் இருக்கட்டும் இருக்கட்டும் தீரா....
சேவன் : இரு திங்கள் முன்பாக நின் எம் மனையாளை எம்மிடமிருந்து பிரித்து சென்ற போதும் எமக்கு இவ்வாறு தானே வலித்தது என அப்போது வில்லத் தனமாய் பேசினான்...
தீரா : உமக்கு பழிவாங்க இதுவடா நேரம்... தற்போது நீர் இறங்கவில்லை எனில் உம்மை பாலமுத்திர கோட்டையில் அடைத்து விட்டு யான் அனைவரையும் மறுமைபூமிக்கு அழைத்துச் சென்றிடுவேன்...
வான்மதி : நீ என்ன டி எங்க சேவன மிரட்டுரது... நா சேவன கூட்டீட்டு போவேன் போ என்றதும் தீராவின் கூற்றில் செய்தாலும் செய்து விடுவாளே என பீதியாய் வெளுத்திருந்த சேவனின் முகம் தெளிவடைந்தது...
தீரா : உன்னையே விட்டுட்டு போய்டுவேன் பப்பிமா என்கவும் இப்போது வான்மதியும் கப்சிப்பென வாயை மூடிக்கொள்ள சேவன் இறங்கியதும் தலையை தேய்க்க போனவளின் தலையில் மீண்டும் வந்து விழுந்தது ஒரு கொட்டு
வான்மதி மீண்டும் சிரிக்க " எந்த கூருகெட்ட குக்கரது " என கத்தி கொண்டே திரும்பிய தீராவின் பின் அவளை விட உயராமாய் இருந்த அஜய் அவளை குனிந்து பார்க்க அவன் பின் ஐலா அவனின் தோளிலிருந்து எட்டி கொண்டு தீராவை பார்த்தாள்...
வான்மதி கண்ணோட்டத்திலிருந்து..
அஜய் : ஹாய் தீரு மா... ஹாய் வானுமா...
வான்மதி : ஹாய்.. ஹாய் ஐலா
ஐலா : வெல்கம் ஹோம் பேபீஸ்.. ஆமா என் தம்பி எங்க.. என ஆவலாய் கேட்க
வான்மதி : அவன் வரல ஐலா...
ஐலா : வரலையா என பாவமாய் முகத்தை சுருக்கிய ஐலாவை ஆறுதலாய் அஜய் அணைத்து கொள்ள அவனோடு தனிச்சையாய் ஒன்றிய ஐலாவின் கண்கள் ரக்ஷவை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் சோர்ந்திருந்தது...
தீரா : ஹே ஐல்... என அவளை சமாதானம் செய்ய வாயை திறந்தவளை இப்போது வான்மதி அங்கிருந்து இழுத்து சென்றாள்...
அஜய் : ஹே என்ன பாரு டி ஏன் இப்போ சோகமா இருக்க நீ
ஐலா : ம்ச் போ தீபன். உனக்கு என் கஷ்டம் தெரியாது... நா சின்ன புள்ளைலேந்து அம்மா அப்பா அண்ணன் அக்கா தங்கச்சி தம்பின்னு யாருமே இல்லாம வளந்தவ... இங்க வந்தப்போ முதல்ல உங்களுக்கு அப்ரம் எஎன் கிட்ட ரக்ஷவ் குட்டி தான் ஃப்ரெண்லியா பேசுனான் தெரியுமா... எனக்கு அவன ரொம்ப புடிக்கும்... நீங்க எல்லாரும் இருந்தாலும் தம்பின்னு அவன் இல்லாம எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு என கூறியவளின் கண்களில் நீர் கோர்க்க அவளின் கன்னத்தை நிமிர்ந்து அவளின் கண்களில் மென்மையாய் இதழ் பதித்த அஜய் அவளின் கன்னம் தாண்டிய கண்ணீரை
மிருதுவாய் துடைத்தான்
அஜய் : உன் தம்பிய உன் கிட்டேந்து யாரும் பிரிக்கல பட்டு.. ரக்ஷவ் அங்க இருக்கனும்... நீ கவலையே படாத நாம சீக்கிரமே ரக்ஷவ போய் பாக்களாம்... நா தீரு கிட்ட எப்போ போளாம்னு கேக்குறேன் சரி தானே...
ஐலா : உண்மையாவா... உண்மையாவே என்ன அழச்சிட்டு போவியா என வேகமாய் கேட்க அவளின் கண்களில் தெரிந்த மின்னலை கண்டு புன்னகையுடன் அவனும் வேகமாய் தலையசைத்தான்...
அஜய் : கண்டிப்பா அழச்சிட்டு போறேன்...
ஐலா : அப்போ யாளிகளையும் கூட்டீட்டு போலாமா... என கேட்க அஜய் புரியாமல் அவளை பார்த்தான்.. ஆம் ரக்ஷவை பிரிந்ததும் சிம்மயாளிகளும் யானையாளிகளும் சற்று சோர்ந்திருந்தாலும் நம் இரண்டாமணி நாயகிகளிடமும் பழக தொடங்கியிருந்தது...
யானையாளிகள் தங்கள் தலைவன் தலைவிகளின் மக்கள் என்பதை உணர்ந்து குழந்தை போல் அவர்களோடு ஒட்டி கொண்டாலும் சிம்மயாளிகள் முதலணி நாயகன்களை தவிர்த்து வேறு எவரிடமும் தங்களின் குழந்தை தனத்தையும் அன்பையும் வெளி காட்டாமல் அவர்களை பார்த்து கொண்டனர்...
ரக்ஷவ் இருக்கம் போழ்த்து சிம்மயாளிகளுடன் ஐலாவும் இருந்ததால் ஐலாவுடன் சிம்மயாளிகள் சற்று அமைதியாய் இருக்கும்...
அஜய் : யாளிகளையா... அது கஷ்டமாச்சே
ஐலா : ஏன் கஷ்டம்... நாம திவி அத்தை கிட்ட யாளிகாள அங்க டெலிபோர்ட் பன்ன சொல்லீடலாம்.. நாங்க எல்லாரும் ரக்ஷவ பாக்கனும் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ்...
அஜய் : சரி சரி வானு கிட்ட பேசுறேன் என தன்னவளின் கெஞ்சலை தாங்க முடியாமல் கூறியிருந்தாலும் யாளிகளை மறுமைபூமிக்கு அழைத்து செல்ல இயலுமா என அவன் உள்ளூர நெருடலாய் உணர வான்மதி மற்றும் தீரா இங்கு வந்த காரணத்தை அவன் அறியவில்லை...
ஐலா : ஹையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ லவ் யு சோ மச் புருஷா என அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு பனிக்கட்டியென உறைந்தவனை திரும்பியும் பாராமல் வீட்டிற்குள் ஓடினாள் ஐலா
வான்மதி தீராவை இழுத்து கொண்டு வீட்டிற்குள் காலை வைக்க வேகமாய் ஓடி வந்த ஷைஷு முதலில் வந்த வான்மதியை அணைத்து கொண்டாள்...
வைஷு : ஹே வெல்கம் ஹோம் வானு என்கவும் அவளுக்கு வான்மதி புன்னகைத்து விட்டு பதில் தர வாயை திறக்கும் முன்பாக அனைவரையும் அதிர வைப்பதை போல கத்தி கொண்டே வந்தான் மித்ரன்...
மித்ரன் : தீஈஈஈஈருஊஊஊஊ பாப்பாஆஆஆஆ.....
தீரா ம. வ : இவன் ஏன் இந்த இழு இழுக்குறான் என ஸ்லோ மோஷனில் அவனை நோக்கி திரும்பினாள்
அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு கூட வான்மதியை அன்பாய் வரவேற்த்தனர்...
தீரா : என்ன டா... எதுக்கு என் பேர் இப்புடி இழுத்துட்டு இருக்க.... என சந்தேகம் இருந்தாலும் சாதாரணமாய் மித்ரனிடம் கேட்க அனைவரின் கவனமும் இப்போது அவர்களிடம் சென்றது
மித்ரன் : ஈஈஈஈ.... ஒன்னும் இல்ல... நீ நடந்து நடந்து சோர்ந்து போய்ருப்ப.... இந்தா பாப்பா... இந்த ஜூஸ் குடி... என ஒரு மார்க்கமாக ஒரு டம்ளரை நீட்டினான்...
தீரா : அவ்வளவு நல்லவனா டா நீ... சொல்லவே இல்ல... சரி ஜூஸ் தானே குடு குடு நான் குடிக்கிறேன்...
வான்மதி : அப்போ எனக்கு... எனக்கு ஜுஸ் இல்லையா என உதட்டை பிதுக்கி காட்ட....
கயல் : ஐயோ.. வானு குட்டி... உனக்கு இல்லாத ஜூஸா... இந்தா குடி... என இன்னொரு டம்ளரை நீட்டினாள்...
வான்மதி : ஹை சூப்பரு... என அதை கையில் வாங்கி பார்த்துவிட்டு குடிக்க தொடங்க... தீராவும் மித்ரன் கையில் இருந்த அந்த ஜுஸை வாங்கினாள்... அதை கையில் வாங்கியவள் முதலில் அதன் நிறத்தை பார்க்க... அதுவோ வரகாப்பி போல கருஞ்சிவப்பு நிறத்தில் கன்னாடி போல் இருந்தது...
தீரா : டேய்.. என்ன ஜுஸ் டா இது.. இந்த கலர்ல இருக்கு.. என டம்ளரை தூக்கி உற்று பார்க்க..
வான்மதி : பாப்பு.. இது ஆப்பிள் ஜுஸ் டி... செம்ம டேஸ்டா இருக்கு.. குடி குடி.. நீயும் குடி.. என சப்புகொட்டி கொண்டே கூற... ஆசையில் அந்த ஜூஸை வாயருகே கொண்டு போனவள் விழியை ஏழு கிலோ மீட்டருக்கு விரித்து..., "சை....", என டம்ளரை இரண்டடி முன்னே நகர்த்தி தலையை இரண்டடி பின்னே நகர்த்தினாள்...
(அதுக்கு மேல நகத்த முடியல.. 😜... முடிஞ்சா அது அடுத்த ஊருக்கே போய்ருக்கும் 😂)
தீரா : டேய் படுபாவி பயலே... என்ன ஏமாத்தி கஷாயமா டா குடிக்க வைக்கிரீங்க.... என கலவரமாய் கேட்க
வான்மதி ம.வ : கஷாயமா??.. எந்த ஊருல கஷாயம் இனிப்பா இருந்துருக்கு... இது நல்லா தானே இனிக்குது என்ற யோசனையில் தன் டம்ளரை தூக்கி பார்க்க.... அடுத்து நடந்த சம்பவத்தில் அவர்களின் திட்டம் இவளுக்கு புரிந்து விட்டது...
தீரா : போங்கடா டேய்.. என்னையவே ஏமாத்தி கஷாயம் குடிக்க வைக்க பாக்குறீங்களா... நெவர்... என கஷாயத்தை அங்கிருந்த ஜன்னல் அருகில் இருந்த ஸ்லாப்பிலெயே வைத்துவிட்டு ஓட பார்க்க.. இதை எதிர்பார்த்தே அங்கே மறைந்து நின்ற ருமேஷ் அவள் இரு கரத்தையும் பின்னால் வளைத்து பிடித்தான்..
ருமேஷ் : பாப்பு குட்டி... நீ குடிச்சு தா ஆகனும்.. நீ இங்க வர்றதுக்கு முன்னாடியே எங்க தம்பி கால் பண்ணி அங்க நடந்தத சொல்லிட்டான்... உனக்கு ஸ்ட்ரென்த் வேணும்ன்னு தானே குடுக்குரோம்... குடிச்சுறு குடிச்சுரு...
தீரா : அடேய் ரக்ஷவ் ... ம்ஹும்ம்........ வாயை பிடித்து ஊற்றினாலும் ஊற்றி விடுவார்கள் என ஜிப் போட்டு மூடாத குறையாக வாயை இருக்கமாக மூடிக்கொண்டு, கை ருமேஷிடம் மாட்டி கொண்டதால் ஓட முடியாமல்.... மூக்கு முட்டியில் படும் அளவிற்கு குனிந்து விட்டாள்.
நடக்கபோகும் சிறப்பான சம்பவத்தை காண மொத்த குடும்பமும் அப்போது அங்கே கூடிவிட்டது... ஸ்டாண்டில் இருந்த குவளையை எடுத்தபடியே வந்த இந்திரன்
இந்திரன் : என் செல்ல ஸ்மால் இடியட்ல... நல்ல புள்ளையா குடிச்சுரு பாப்போம்.... என அவன் ஒற்றை காலை மடக்கி அவள் முன்னால் அமர்ந்து அவளின் தலையை நிமிர்த்த... கஷாயத்துடன் சேர்த்து அவனையும் தள்ளிவிட்டு ருமேஷின் பிடியில் இருந்து தன் கரத்தை வளைத்து திருப்பி உருவி கொண்டு தப்பித்து ஓடினாள்.
கஷாயம் கீழே சிந்தாமல் கெட்ச் பிடித்த இந்திரன், எழுந்து நின்று மற்ற அனைவருக்கும் கண்ணை காட்ட... அவரவர் பொசிஷனில் நின்று கொண்டார்கள்...
ஓடியவள் நேராக வெளியில் ஓடியிருப்பாள், ஆனால் வாயிலை அடைத்தபடி அங்கே விஷம புன்னகையுடன் வந்து நின்றான் ரனிஷ்... அதனால் வேறு வழி இல்லாமல் வீட்டிற்குள்ளேயே ஓட... இன்னொரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸை ஊற்றிக்கொண்டு அதை உருஞ்சியவாரு பாப்புவை பார்த்துக்கொண்டிருந்தாள் அவளின் பப்பிமா.
முகில் : பாப்பு.. இத்தன நாள் நீ ஓடுனப்ப போனா போகுதுன்னு விட்டுடோம்... ஆனா இன்னிக்கு.... எங்க செல்ல மகனோட ஸ்ட்ரிக்ட் ஆடர்.... நீ தப்பிக்கவே முடியாது... ஆல் ஃபேமிலி மெம்பர்ஸ்..... கேட்ச் ஹெர்.... என எப்பொழுதும் போல் படைதளபதியாய் அவன் போர் முரசு கொட்டட்டும் என்பதை வேறு மொழியில் கூறி அவனின் குடும்பத்தை தயார் படுத்தினான்...
அடுத்த நொடியே அந்த ஒரு சுண்டெளியை ஒரு பூனை படையே துரத்த கிளம்பியது... தீரா மாடியை நோக்கி ஓட.. ஆல்ரெடி மாடியில் நின்றிருந்த தான்யா வேகமாக இவளை நோக்கி கீழே ஓடிவர... பாதையை மாற்றி ஹாலிற்கு ஓடினாள் தீரா..
சேவன் மயூரன் வானுவின் அருகில் அமர்ந்து கொள்ள.. இப்போது அங்கே நடக்கும் மேட்சிர்க்கு மூவரும் லைவ் கமென்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார்கள்...
வான்மதி : இதோ கஷாயத்திர்க்கு பயந்து சோஃபாவை சுற்றி ஓடுகிறாள் நம் மறுமை பூமியின் படை தளபதி பாப்பு...
சேவன் : அவளை விடாமல் துரத்துகிறார் நம் வேந்தன்யபுரத்து படை தளபதி மற்றும் சாகாத்யசூரரான சரண்...
தீரா : அடியே பப்பிமா.... என்ன காப்பத்தாம என்ன டி கமென்ட்ரி குடுத்த்துட்டு இருக்க...
வான்மதி : நா பழி வாங்கிட்டு இருக்கேன் பாப்பு... ஒழுங்கா ஓடு... இல்லனா புடிச்சுவச்சு ஊத்தீருவாங்க...
தீரா : இரு டி உன்ன வந்து வச்சுக்குறேன்.. என கத்திவிட்டு ஓட... கருநீல கீற்று ஒன்று அவளை வளைத்து பிடித்தது...
தீரா ம. வ : என்னடா இது ... கால் ஓடுது.. ஆனா நா ஓட மாட்டுறேன்.. என குழம்ப... அவளை மாய சக்தியால் கட்டி வைத்திருந்தாள் அனு..
மயூரன் : இதோ தீராவின் கரத்தை பிடித்து விட்டார் நம் முதல் நாகனி.... தீரா மீள்வார??.... போராடுகிரார்.... போராடுகிறார்.. போராடி கொண்டே இருக்கிறார்...
சேவன் : இதோ நம் திரவக்கோவான் கஷாயத்துடன் முன்னேறுகிறார்... முன்னேருகிறார்... ஓஓஓ.. தீரா தன் மாயத்தால் நாகனி அவர்களின் மாயத்தில் இருந்து மீண்டு விட்டார்..
கிரிஷ் : ஓய் ஸ்மால் இடியட்.. நீ எப்புடி என் ரது கிட்ட இருந்து தப்பிக்கலாம்.. மறுபடியும் இங்கேயே வா...
தீரா : அடேய் பிக் இடியட்... அந்த கஷாயத்த உன் நெருப்பால ஆவியாக்கு.. அப்பறம் நா வரேன்.. என நழுவி கிச்சனுக்குள் ஓட.. அங்கே இரு ஜீவன்கள் நிற்பதை கவனிக்காமல் உள்ளே வந்துவிட்டு மீண்டும் வெளியேற திரும்ப... கிச்சன் வாயிலில் வந்து நின்றாள் பவி.... உள்ளிருந்த ரக்ஷா வீனா அவள் இரு கரத்தையும் பிடித்து கொண்டனர்..
தீரா : அஹ்ம் அஹ்ம்.. அண்ணீஸ்... மீ பாவம்.. இப்போ பாரு நல்லா தானே ஓடுறேன்.. நா நல்லா தா இருக்கேன்.. எனக்கு அந்த கசப்பான கஷாயம் வேணாம் என கத்திகொண்டே அவர்கள் பிடியில் இருந்து நழுவ பார்க்க....இந்திரனிடம் இருந்து கஷாயத்தை வாங்கி கொண்டு பவியை தாண்டி உள்ளே வந்தான் அஷ்வன்த்
அஷ்வன்த் : பாப்பு.. நல்ல புள்ளையா இத குடிச்சுட்டு அப்பறம் என்ன வேணா சொல்லு.. நாங்க கேக்குறோம்... இந்தா ஆஆஆ... என வாயை பிடித்து புகுட்ட... ஒரு மிடறு வாய்க்குள் சென்ற மறுநொடியே துள்ளி குதித்து கிச்சனை விட்டு வெளியேறினாள் தீரா..
வான்மதி : இதோ சமையல் களத்தில் இருந்து வெளியேறி விட்டார் நம் போராளி... என வேகமாய் அவளின் பேப்பர் மைக்கில் கத்த
தீரா : உன்ன கொல்லப் போறேன் பாரு.. என இவள் திருப்பி கத்தினாள்...
வான்மதி : ஹிஹிஹி.. மொதல்ல லெஃப்ட்ல பாரு
அங்கே திரும்பினால் வீர் மற்றும் ரவி சரியாக அவளை பிடிக்க வர ஒரு நூலிழை தூரத்தில் பின்னோக்கி நகர்ந்து தப்பி ஓடினாள்.... அவளை ரவுண்ட் கட்டி நின்றார்கள் நம் மூன்று இளவரசிகள்..
தீரா : அடியே.. உங்கள உங்க குடும்பத்தோட சேத்து வச்சவ டீ நா.. இப்புடிலாம் ரவுண்ட் கட்ட கூடாது.. என பாவமாக முகத்தை வைத்து கொண்டு சித்ரியா மற்றும் எழிலுக்கு நடுவே புகுந்து தப்பிக்க பார்க்க.. இருவரும் கைகோர்த்து அவளை வலை போட்டு பிடிப்பது போல் பிடித்துவிட்டார்கள்.
மயூரன் : மீண்டும் சிக்கிவிட்டார் நம் பாப்பு... இம்முறை கஷாயம் அவர் வாயினுள் செல்லுமா??... இல்லை மீண்டும் தப்பி விடுவாரா...
தீரா : டேய்.. இப்ப மட்டும் நீ வாய மூடல.. உன் பிறைய பாக்க முடியாம பண்ணிருவேன் என மிரட்ட..
வான்மதி : அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா.... அப்புடியே இவ விட்டுட்டு போனா நாம நீலிய கூப்பிட்டு கூட்டிட்டு போக சொல்லுவோம் என அவனுக்கு தைரியம் கொடுத்து மீண்டும் கமெண்ட்டிரியை தொடர... அப்போதே " தந்தையே.. பிடித்து விட்டோம் தீராவை பிடித்து விட்டோம் " என தீவிரவாதியை பிடித்து விட்டோமென கத்தாத குறையாக குதித்து கொண்டிருந்த இளவரசிகளிடம் சத்தீஷ் வருவதை கவனித்து
தீரா : அய்யய்யோ... டேய் கிட்ட வராத டா.. அப்பறம் நா அழுதுறுவென்... என கத்த.. அதற்குள் மகள்களுடன் சேர்ந்து அவளை இறுக்கமாக பிடித்தவன்
சத்தீஷ் : டேய் மச்சான்.. ஊத்துடா கஷாயத்தை என அருகில் இருந்த அஷ்வன்த்தை நோக்கி கத்தினான்..
தீரா : ஹான் ஹான்.. சீக்கிரம் சீக்கிரம் கீழ ஊத்திரு...
கிரிஷ் : கீழ இல்ல... உன் வாயில.. என்றபடி அவனும் அவளை ஒரு புறம் சிறை வைக்க
தீரா : ம்ஹும்.... நா வாய திறக்க மாட்டேன்.. என வாய்க்கு இதழ்களால் பூட்டிட்டு கொண்டாள்...
அர்ஜுன் : உன் வாய திறக்க வைக்க எங்களுக்கு தெரியாது பாரு... என ஒரு டைரிமில்க்கை பிரித்து இந்தா இத சாப்புட்டுக்கோ ... அப்போ கசக்காது.. ஆ... என அவள் வாயருகில் நீட்ட.. அதே நேரம் கஷாய குவளையுடன் அருகில் ரெடியாக நின்றான் அஷ்வன்த்..
தீரா : போடா.. நீ காட்டுற மாறி காட்டி அப்பறம் குடுக்க மாட்ட... உன் பொண்டாட்டி வந்து பிடிங்கிட்டு ஓடிருவா.. என சொல்லி முடிக்கவில்லை.. டைரி மில்க் நிரு கையில் இருந்தது...
நிரு : அடியே.. உனக்கு மருந்து குடிக்க என் டைரி மில்க் கேக்குதா.. போ டி.. போய் குச்சி முட்டாய வாங்கி சப்பிக்கோ..
அர்ஜுன் : அடியே நிரா.. அவளுக்கு என்ன நா குடுக்கவா போறேன்.. சும்மா ஏமாத்தி மருந்த குடிக்க வைக்க தா கண்ணுல காட்டுனேன்
தீரா : அட பாவி.. அப்போவே சந்தேக பட்டென எனும்போதே ரித்விக் அவள் தலையை லேசாக பின்னோக்கி சாய்த்து..
ரித்விக் : ஊத்துடா ஊத்துடா ஊத்துடா.. மறுபடியும் ஓடிர போரா... என கத்த
அஷ்வந்த் : பாப்பு... ஒரே ஒரு மடக்கு... ஒரே ஒரு மடக்கு... என வாயை பிடித்து ஊற்ற... மீண்டும் ஒரு மடக்கு வாய்க்குள் எப்படியோ சென்று விட்டது..
அவளும் துள்ளி தப்பி ஓடிவி்ட்டாள்.
சேவன் : இளவரசிகள் பிடியில் இருந்து மீண்டும் நழுவி ஓடிய தீரா இப்போது பருந்து சகோதரர்கள் மத்தியில் சிக்கி விட்டார்.. என கத்த துரு ருமேஷ் விதுஷ் அவளை சுற்றி இருக்க.... இரண்டாவது பாதுகாப்பு வளையமாக முதலணி நாயகிகள் மொத்தமாக சூழ்ந்து விட்டார்கள்...
துருவன் : அட சை... நா கூட சின்ன புள்ளைல இந்த குதி குதிச்சது இல்ல.. நீ என்ன தீரு பாப்பா இப்புடி பண்ணுற என அவள் முன்னாள் வந்து நிற்க...
தீரா : அது கசக்கும்... என்ன உற்றுங்க பா.. தேவையில்லாம நாம இங்க ரேஸ் நடத்தீட்டு இருக்கோம்...
இக்ஷி : நீ ஓடாம இருந்தா நாங்க ஏன் டி குட்டி பிசாசே ரேஸ் ஓடப் போறோம் என சற்று இளைப்பாறியபடியே வினவ
தீரா : நீங்க அந்த கஷாயத்த குடிக்க சொல்லாம இருந்தா நா ஏன் ஓடப்போறேன் என இவளும் பதிலுக்கு பதில் பேச
வர்ஷி : குட்டிமா ரக்ஷவ் உன்ன இத குடிக்க வைக்கிரதுக்கு எங்களுக்கு இந்த மிஷன அசைன் பன்னீர்க்கான்... சோ நாங்க உன்ன விட மாட்டோம்...
தீரா : அஹென் அது வேணாம்... நல்லாவே இருக்காது.. என முகத்தை அஷ்ட்டகோணலாக சுழித்து காட்டினாள்...
விதுஷ் : நீ ஒழுங்கா குடிச்சு முடி உனக்கு ஆளுக்கு ஒரு குச்சிமுட்டாய் வாங்கி தரோம்... என கூறியவனை சந்தேகமாக பார்க்க..
ஹான் ஹான்.. வாங்கி தரோம் என அனைவரும் கோரஸ் பாட.. அவர்களின் கோரஸ் கத்தலுக்கு இவள் குச்சிமிட்டாயின் கனவில் முடிவெடுக்கும் முன்பாகவே அந்த பெரிய வட்டத்திற்குள் இரட்சகன்கள் மூவரும் நுழைய... ருத்ராக்ஷ் ஆதியன்த் அவளின் கரத்தை இருக்கமாக பற்றி கொள்ள... சொட்டு மிச்சம் வைக்காமல் அவள் வாய்க்குள் அந்த மருந்து இருந்த டம்ளரை கவிழ்த்திருந்தான் சித்தார்த்...
வான்மதி, சேவன், மயூரன் : வெற்றி வெற்றி வெற்றி... என முழக்கம் பாய்ச்சினர்
சேவன் : எடுத்த காரியம் சிறப்பாக நிறைவு செய்யபட்டது...
மயூரன் : வாழ்த்துக்கள் கோவான்களே.. வாழ்த்துக்கள் சூரர்களே... வாழ்த்துக்கள் நாகனிகள் மற்றும் யாளி வீராங்கனைகளே..... வாழ்.. என கூற வரும் முன் வான்மதி குறுக்கிட்டாள்
வான்மதி : நீ இப்புடி ஒன்னு ஒன்னா சொல்ல விடிஞ்சுறும்... இப்ப நா சொல்லுறேன் பாரு.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்., என் செல்ல குட்டி போராளிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்... என கூறி சிரிக்க.. பலவாறாக முகத்தை கோணிக் கொண்டிருந்த தீரா வானுவை நோக்கி
தீரா : அடியே... உன் வாழ்த்த நீயே வச்சுக்கோ.. முதல்ல எல்லாரும் எனக்கு குச்சிமுட்டாய குடுங்க என குதியாய் குதிக்க.. அப்போதே வீட்டிற்குள் வந்த ராம் மற்றும் ராகவ் இவளை கண்டார்கள்
ராகவ் : ஓய் பாப்பா... மருந்து குடிச்சிட்டியா
தீரா : என் மூஞ்சிய பாத்தா குடிக்காத மாறியா தெரியுது...
ராம் : ஹப்பாடா அப்போ குடிச்சுட்டு தான் நிக்குர... என் தம்பி காள் மேல காள் பண்ணி கேட்டுட்டே இருக்கான்.. இரு நா போய் மிஷன் கம்ப்ளீட்ன்னு சொல்லிட்டு வரேன்..
தீரா ம.வ : அடேய் ரக்ஷவ்... உன்ன நா என்ன டா பன்னுனேன்... ஏன்டா என்ன இப்புடி கோர்த்து விட்ட... உனக்கு யாரு அங்க ஃபோன் குடுத்தது... படுபாவிங்களா
ரவி : சரி சரி... போதும் விடு பாப்பு.. எங்க மகன ரொம்ப திட்டாத... அவன் உன் நல்லதுக்கு தானே சொல்லுறான்..
தீரா : ம்க்கும்.... நல்லதுக்கு தா... சரி சரி.. பேச்ச மாத்தாதீங்க.. எங்க என் லாலிபாப்...
மது : டேய் பசங்களா... யாராச்சும் போய் பாப்புக்கு லாலிபாப் வாங்கிட்டு வாங்கடா என பராக்கிரம வீரர்களை நோக்கி கூற
தீரா : என்னது இப்போ தா வாங்க போறீங்களா... ஹான்ன்ன்... எனக்கு இப்போவே வேணும்... வாய் கசக்குது.. போ நா போய் சக்கரையாசும் சாப்புடுறேன்... தள்ளுங்க என அனைவரையும் ஒதுக்கி விட்டு கிச்சனுக்கு போனவளை பிடித்து தடுத்தாள் தான்யா...
தான்யா : அடியே... மருந்து சாப்பிட்டு உடனே ஸ்வீட் சாப்புட கூடாது டி.. எஃபெக்ட் இருக்காது... குச்சிமுட்டாய் பத்து நிமிஷத்துல வந்துரும் அத சாப்புடு..
தீரா : என்னாது... பத்த்த்த்துஉஉஉஉ நிமிஷமாஆஆஆஆ...
கார்த்திக் : ஆமா ஆமா.. பத்து நிமிஷத்துல வந்துரும்... பொறு நா போய் வாங்கிட்டு வரேன் என வெளியேற... வானுவை முறைத்துகொண்டு வாயையும் பலவாறாக சுழித்து கொண்டு பொத்தென சோஃபாவில் உக்கார்ந்து விட்டாள் தீரா..
இவ்வளவு நேரமும் பாரபட்சம் பார்க்காமல் சோபாவில் அமர்ந்து வயிறு வலிக்க சிரித்து கொண்டிருந்த ஐலாவை இவள் மூக்கு முட்ட முறைக்க அவள் கண்டு கொண்டால் தானே...
ஆதவ் : போதும் என் தங்கச்சிய முறைச்சிது அப்டீக்கா பாரு என முகத்தை திருப்பி விட இப்போது அவனையும் முறைத்தாள்... அனைவரும் கார்த்திக் வந்த பின்னே எப்படியும் தீரா வாயை திறப்பால் என உணர்ந்து அவரவர் வேலையை பார்க்க செல்ல வான்மதியும் வீட்டை சுற்றி பார்க்க ஓடியிருந்தாள்...
ஆதவ் அவளின் முறைப்பில் சிரிப்பை மறைக்க இயலாமல் அவளின் தலையை கலைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்துச் செல்ல அவளை பார்த்து நக்கலாய் சிரித்த படி செல்லும் இரண்டாமணி நாயகன்களை முறைத்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தமர்ந்தாள் கயல்..
கயல் : அட என்ன பாப்புமா.. உனக்கு உடனே லாலிப்பாப் வேணும் அதானே... இரு கௌத்தம் குச்சிமிட்டாய் வாங்கீட்டாருன்னு நெனக்கிறேன் என ஒரு நொடி சிந்தித்தவள் பின் ஒரு முறை சொடக்கிட அவள் விரலை சுற்றிய ஒரு சிறிய ஒளி மறையவும் அவர்கள் முன் கழுத்தில் மாலை மாலையாய் போட்டிருந்த குச்சிமிட்டாய்களுடன் கை நீட்டியவாறு முளித்து கொண்டு நின்றிருந்தான் கார்த்திக்
இது தான்... நம் இரண்டாமணி நாயகிகளுள் மறைந்திருந்த சக்திகளை தட்டி எழுப்ப வேண்டாமென நம் முதலணி நாயகர்கள் பொருப்பான பெற்றோர்களாய் முடிவெடுத்திருந்தாலும் அதை அறியாத ருமேஷ் ஒரு நாள் வேதித்யாவின் சக்தியை உயிர்த்தெழ செய்திருந்தான்...
அன்று
அந்தி மாலை சாயும் தருணத்தில் தன் கழுத்தில் என்றும் உள்ள பந்த பதக்கத்தை வருடி கொண்டிருந்தவளை தொலைவில் கண்ட ருமேஷ் அவள் அதிசயமாய் தனியே நின்றிருப்தை கண்டு அவளை நோக்கி பொருமையாய் நடந்து வந்து கொண்டிருந்தான்...
முதல் முறை அவளிடம் உரையாட உள்ள எண்ணமின்றி அவளை நோக்கி இவன் செல்ல அலைபாயும் தன் மனமதை களவாடக் காத்திருக்கும் கள்ளன் பின் வருவதை கவனியாமல் நின்ற வேதித்யாவை தீண்டிச் சென்ற தென்றல் காற்று அவளது மேனியை சிலிர்க்க வைக்க ருமேஷ் அவளை நெருங்க வைத்த இறுதி அடியில் பட்டென திரும்பிய வேதித்யாவின் கண்களில் இருந்து பாய்ந்த ஒரு கீற்று ருமேஷின் தோளை உராசி விட்டு சென்றது
என்ன நடந்ததென்பதை உணரும் முன்பாக அவனின் தோலை பிளந்து கொண்டு இரத்தம் கசிய வேதித்யா கண்ணீரில் வெடித்திருந்தாள்...
தன் வலியை கூட உணராமல் ஏதோ கசியும் உணர்வில் தன் தோளை திரும்பி பார்த்த ருமேஷ் தோளில் ஒரு கோடென துணி கிழிந்திருப்பதையும் அது மெதுமெதுவாய் ஒரு அடர்ந்த நிறத்திற்கு மாறுவதையும் மவன் நடந்ததை புரிந்து கொள்ளும் முன் வேதித்யாவின் அழுகை அவனை திசை திருப்பியிருந்தது
ருமேஷ் : ஹே ஹே வேதித்யா.. எதற்காய் இப்போழ்து அழுகிறாய் நீ
வேதித்யா : யா..யான்.. த..த..ம்..மை எ..ம்..மை அ..அ..அறி..யா..ம..ல்.. கா..கா..ய..ப்..படுத்..தி வி.ட்..டே.ன் ... எ..ம்..எ..ம்மை பொ..பொ..ருத்..தளு...வீ..ர் என அவளின் அழுகைக்கு மத்தியில் வெளியேறிய வார்த்தைகளை எப்படியோ கோர்த்து அதை புரிந்து கொண்ட ருமேஷ் ஒரு புன்னகையுடன்
ருமேஷ் : இதில் நின் தவறேதும் அன்று வேதித்யா.. வீண் கண்ணீர் சிந்தி எம்மனமதையும் குற்ற உணர்வில் குமுறல் கொள்ள வைக்காதே என மென்மையாய் கூறி எப்படியோ சில பல வார்த்தைகளில் அவளை சமாதானம் செய்திருந்தான்...
முதல் சந்திப்பே இவ்விருவருக்கும் இப்பேர்பட்ட சம்பவமாய் இருந்தாலும் ஒரு நிம்மதியான உணர்வும் மனதில் ஊற்றெடுத்து பிறந்திருந்தது...
அதன் பின்னே நடந்ததை கேட்டறிந்த முதலணி நாயகர்கள் இரண்டாமணி நாயகிகளின் சக்திகளை உயர்த்தெழச் செய்வது அவர்களுக்கு என்றேனும் ஆபத்தீடேறினால் அதை தகர்க்க தேவை படும் என ஒத்துக் கொண்டனர்...
அவர்கள் எண்ணியதை போலவே அனைவரின் சக்திகளும் அவர்களுக்கு உதவியது... பெரும்பாலும் இளவரசிகள் மற்றும் இரண்டாமணி நாயகிகளின் (யட்சினிகளும்) சக்திகள் தற்காக்கவே அமைந்ததாகும்...
நாகனிகள் மற்றும் யாளி வீராங்கனைகளுக்கு உள்ளவை போல அவை எதுவும் எதிர்க்கக் கூடிய சக்திகள் இல்லை... தன் சுற்றத்தையும் சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டி தான் அந்த சக்திகள்
ஆனால் அதே சக்திகள் ஒவ்வொருவரின் வாழ்கை மற்றும் காதல் துணையுடன் மாறியது... நாயகிகளுக்கு சக்திகள் அபாரமானதாக இல்லையென்றாலும் அவர்களின் சக்திகளால் அவர்களின் துணைகளை அவர்களை எதுவேண்டுமானாலும் செய்ய முடியும்... அதில் ஒன்று தான் கயல் கார்த்திக்கை இங்கு வரவழைத்தது...
கயல் அவன் முளியை கண்டு இளிக்க அவன் புரியாது தன் சுற்று வட்டாரத்தை காணும் முன்பாக அவனின் அன்பு தோழி அவன் கழுத்திலிருந்த குச்சிமிட்டாய் மாலையை அப்படியே உருவி அவனை இரக்கமே இல்லாமல் கீழே தள்ளி விட்டிருந்தாள்...
ஆனால் அதிலும் அவள் ஏதோ உதவி செய்ததை போல கார்த்திக் தடுமாறி அவனவள் மீதே விழ தீரா அதை கண்டும் காணாமல் விரைவாகவே மிட்டாய்கள் கிடைத்து விட்டாதால் ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்காகவாவது நிச்சயம் உண்ண விட மாட்டார்களென அறிந்து தன்னிடமுள்ள குச்சிமிட்டாய்களை யாரும் பிடுங்கி விட கூடாதென தோட்டத்தை நோக்கி ஓடியிருந்தாள்...
கயல் கார்த்திக்கை அத்துனை நெருக்கத்தில் கண்டதும் விழி பிதுங்கி விழிக்க முதலில் அவளிடமிருந்து எழுவதற்காய் அந்த சோபாவில் கரமூன்றிய கார்த்திக் அவளின் முளியை கண்டு அவளிடம் விளையாட எண்ணி அதே கரத்தினால் கயலின் இடையை வளைத்து பிடித்தான்...
கயல் அவனின் தோளை பற்றி கொள்ள இருவரும் ஒருவர் மற்றவரின் மூச்சு காற்றை உணரும் இடைவேளையில் இருக்க கார்த்திக் பாதி சாய்ந்தும் பாதி எழுந்தும் என்ற நிலையில் கயல் மீது சாய்ந்து அவளை மேன்மேலும் விழாமல் பிடித்திருந்தான்...
கார்த்திக் : உன் கண்ல என்னைக்குமே என்ன மயங்கி விழ வைக்கிர விழியாள் என அவன் ஆழ்ந்த குரலில் அமைதியாய் கூற அவனின் மிருதுவான தொடுகையில் கயல் அவன் கண்களை விட்டு தன் கண்களை பிரித்து வேறு புறமாய் திரும்ப அவளின் கன்னத்தில் பதிந்த அவனின் இதழ் அவளை கண்களை விரித்து தொண்டு மீண்டும் அவன் புறம் திரும்ப வைத்தது
அந்த கயல் விழிகள் விரிந்திருக்கும் அழகில் சொக்கி மயங்கியவன் அவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து எழுந்து நிற்க இதற்காகவே காத்திருந்ததை போல் அங்கிருந்து விருவிருவென மாடி ஏறிச் சென்றாள் கோவப்பழமாய் சிவந்திருந்த தன் வதனத்தை மறைக்க வழியறியா கயல்
மாடி வளாகங்களில் நடை பயின்றபடி சென்று கொண்டிருந்த வான்மதி மெதுவாய் ஒவ்வொரு இடத்தையும் பார்த்த படி செல்ல அவள் முன் சரியாக புன்னகைத்த படி வந்து நின்றாள் மதி
மதி : ஹாய் வானு என்ன கோட்டைக்கு போகலையா...
வான்மதி : கோட்டைக்கா... கோட்டைக்கு போகனுமா நாம
மதி : ஆமா வானு வாங்க நானே அழச்சிட்டு போறேன்.. எல்லாரும் கார்த்தி அண்ணா வந்ததும் வந்துடுவாங்க ...
வான்மதி : ஹான் வரேன் மதி.. பட் பாப்பு எங்க போனான்னு தெரியல அவள கண்டுப்புடிச்சு இழுத்துட்டு வரேன்...
மதி : அவ கோட்டைக்கு தான் போய்ர்ப்பா வானு நீ வா என அவளை இழுத்த படி அதே வளாகத்தில் ஒரு புத்தகத்தை படித்தவாறு அமர்ந்திருந்த திவ்யாவிடம் சென்றாள்...
திவ்யா அவளின் பார்வையை புரிந்து கொண்டு தன் சக்தியை உபயோகித்து அங்கிருந்த அனைவரையும் கோட்டைக்கு மாற்ற நாயகன்களை தவிர்த்து மற்ற அனைவரும் அங்கு தோன்றியிருந்தனர்...
ஏதோ பேச்சு சத்தம் கேட்டு வான்மதி அவள் நின்ற இடத்திலிருந்து எட்டிப் பார்க்க புது மண தம்பதியர்களாய் அஷ்வித் மற்றும் நந்தினி உணவு கொண்டிருந்தனர்...
சரியாக கூற வேண்டுமெனில் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்து கொண்டிருந்த கணவனுக்கு வேண்டா வெறுப்பாக முகத்தை காட்டி கொண்டு ஆசையாய் உணவூட்டி கொண்டிருந்தாள் நந்தினி
அவர்களின் காதலை விவரிக்க வார்த்தைகளே தேவைபடவில்லை அங்கு... ஏனெனில் வார்த்தைகள் கூற வேண்டிய தீராவும் கோட்டையில் இப்போதைக்கு எத்தனையாவது மிட்டாயென்ற கணக்கே இல்லாமல் குச்சிமிட்டாயை ருசித்து கொண்டிருக்கிறாளே
நந்தினி : ம்ச் நீங்களே சாப்ட்டா தான் என்னங்க... நான் தினம் ஊட்டுனா நம்ம வீட்டுக்கு போனப்புரம் இதுவே உங்களுக்கு பழக்கமாய்டாதா என பிடிக்கவே இல்லை என்பதை போல் அலுத்து கொண்டவளின் கையை பிடித்து இழுத்து அவனின் மடியில் அமர வைத்தவனின் சைகைக்கு எந்த ரியக்ஷனும் கொடுக்காமல் பல முறை பழகியதை போல சாதாரணமாக ஊட்டுவதை தொடர்ந்தாள் நந்தினி
அஷ்வித் : ஊற்றுரதுக்கு உனக்கும் பிராப்லமில்ல... சாப்பிடுரதுக்கு எனக்கும் ப்ராப்லமில்ல... அப்ரம் ஏன் பொண்டாட்டி இத பழக்கமாக்கக் கூடாது என அவளின் விரலை வலிக்காமல் கடிக்க ஸ்ஆ என கையை உதறியபடி மறுகையால் அவன் தொடையை கிள்ளினாள்
நந்தினி : கெட்டுப் போய்ட்டிங்க நீங்க ரொம்ப சரி கடைசி வா ஆ என இங்கு நடக்கும் குட்டி குட்டி சில்மிஷங்களை வான்மதியுடன் நாயகிகள் அனைவரும் இரகசியமாய் பார்த்து கொண்டனர்...
மது : ப்பா கலக்குர டா மகனே.. உன் அப்பாவையே பீட் பன்னீடுவ நீ என ஹஸ்கி வாய்சில் கூறி கொண்டு கை தட்ட
திவ்யா : நாங்களும் தான் பெத்து வச்சிர்க்கோமே... விட்டா சன்யாசியா போய்டுவானுங்க போல மூனு பேரும்... நீ தான் அசத்துர மருமகனே என இரட்சகன்களின் காலை வாரினாள்
ப்ரியா : என் தங்கம்.. என்னாமா எங்க பொண்ண மடக்ககுறான்...
வீனா : ஐம் ஃப்ரௌட் ஆஃப் யு மை சன் இன் லா என அஷ்வித்தை பாராட்டி கொண்டிருந்த அம்மாமார்களை மகள்கள் மார்கமாய் பார்க்க வான்மதி அடக்கமாட்டாமல் சத்தமாய் சிரித்து விட்டாள்
அஷ்வித்தும் நந்தினியும் பதறி போய் எழ இவர்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்து இளித்தபடி எழுந்து நிற்க அஷ்வித் ஒரு பக்கம் நந்தினி ஒரு பக்கம் முளித்த படி நின்று கொண்டனர்...
அஷ்வித் அங்குமிங்கும் பார்க்க நந்தினி இறுதியாய் இருந்த கவளத்தை அஷ்வித்தின் வாயில் தினித்து விட்டு ஓரே ஓட்டமாய் சமையலறைக்குள் நுழைந்தாள்..
அஷ்வித் : அது நா.. அம் என மென்று கொண்டே பதிலளிக்க தெரியாமல் பராக்கு பார்க்க
தான்யா : பொருமையா மெண்டு முழுங்கீட்டு சொல்லு டா கண்ணா ஏன் அவசரம் என கீழிறங்கி வர அஷ்வித் பேந்தபேந்த முளிக்க அவனை காப்பாற்றுவதை போலவே திடீரென யானையாளிகள் அனைத்தும் ஒரு சேர ஒரு பிளரலிட அதனூடே " டேய் என் லாலிப்பாப்ப புடுங்கீடாதீங்க டா " என்ற தீராவின் கத்தலும் கேட்டது
அஷ்வித் இதை சாக்காய் பிடித்து கொண்டு வெளியே ஓடினான்... அவனை பின் தொடர்ந்து அனைவரும் சென்றனர்...
இந்த சத்தத்தில் மாடியில் குளித்து விட்டு தலையை உளர்த்தி காய வைத்து கொண்டிருந்த அதித்தி வேகமாய் ஓடி வர அவளுகேகு முன்பாக ஆருண்யா மற்றும் நித்யா கீழே சென்றிருந்தனர் போலும்...
வேகமாய் படிகளை விட்டு இறங்கிய அதித்தி திடீரென படிகளின் முடிவில் உள்ள ஒரு அறையிலிருந்து சட்டென ஒருநிழல் வெளியேறி அவளை தாண்டிச் செல்ல அந்த மின்னல் வேகத்தில் அதித்தி தடுமாறி படிகளின் விழிம்பில் விழும் முன் அவனின் கரங்கள் அவளை அவன் புறொமாய் இழுத்திருந்தது...
அதித்தி : நாயக் இனியேனும் இவ்வாறு தாம் மெமம்மை அச்சுறுத்த முயன்றா.. என கோவமாய் கூறி கொண்டே கண்களை பிரித்தவள் அவளை நோக்கி நக்கலாய் சிரித்துகொண்டிருந்த ஆதியன்த்தை கண்டு மைம்று வாரம் களித்து தான் அவனிடம் பேசி விட்டோம் என்பதை உணர்ந்தாள்...
ஆதியன்த் : என்னானது எம் இதயராணிக்கு .. விழி பிரித்தப் பின் மன்னவனிடம் உரையாடலாகாதோ என குறும்பாய் கேட்க அவள் அவனிடமிருந்து விலகும் எண்ணும் போது தனிச்சையாக அவனின் கரங்கள் அவளை அவனோடு அஇறுக்க சுவற்றில் அழுத்தி நின்றிருந்தவனின் மீது அதித்தி ஒட்டிக் கொண்டிருந்தாள்...
அதித்தி : தாம் எம்மை விடுவிக்க வேண்டுகிறேன் இரட்சரே.. எமக்கு தம்மை காணுவதை விடுத்தும் வேறுசில பணிகள் உள(உள்ளது)
ஆதியன்த் : ஹான் இதே இதழ் ஒரு சில வினாடிகள் முன் நாயக் என நுவன்றதை போல் செவி மடுத்தேனே.. அது பிழையோ
அதித்தி : ஹ்ம் மனையாளவளை தோழியென்றுரைத்து புறம் தள்ளிய அப்பேர்பட்டவரின் நாமத்தை எந்நா உரைக்கவில்லை என்றுறுதி அளிக்கிறேன் இரட்சகரே என வேறெங்கோ பார்த்தவாறு அழுத்தி கூற அவளின் கூற்று ஆதியன்த்தின் இதயத்தை சுருக்கென தைத்தது
மூன்று வாரம் பேசாதிருப்பதற்கே தான் ஏங்கியிருக்கையில் மூன்று வருடம் தான் வருவேனா மாட்டேனா என்றே தெரியாமல் தன்னையே நித்தமும் எண்ணி வந்த அவளின் வலிக்கு இது உகந்தது தானே என கூறி தன்னை சமன் செய்து கொண்டவன் தன் குரலை சரி செய்து அவளின் முகத் அவள் புறம் திருப்பினான்
ஆதியன்த் : அதித்தி என அவன் மென்மையாய் அழைக்க அவனை மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள் அவள்
அதித்தி : ஹ்ம்ம்
ஆதியன்த் : யான் புரிந்த தவறை சரி செய்ய ஏதேனும் வழி உள்ளதா.. என அமைதியாய் கேட்க முதல் முறையாக அவனின் கண்களில் தெரிந்த வலியை அடையாளங்கண்டாள் அதித்தி
அதித்தி : எதற்காய் வினவுகிறீர் இரட்சகரே என கேட்கையில் அவளின் குரலும் உடைய கண்களும் கண்ணீரால் நிறைய அவனின் தோளின் மீதிருந்த அவளின் கரம் அவளது பிடியை இறுக்கியது
ஆதியன்த் : இதற்காய் தான்... இதற்காகத்தான்.. உம் முன் பிரவேசிக்கும் வரை எம்மை காதலுடன் நாயக் என அழைத்த அதரங்கள் மீண்டும் அவ்வாறு அழைக்க வேண்டும்.. அதற்காய் இன்னுயிரை நீத்தேனும் எம் தவறை சரி செய்ய முயல்வேன் என்றவனை மீறி கொண்டு வந்த ஒரு துளி கண்ணீர் அவனின் முதலில் வாக்கியத்திலே அவன் தன்னை புரிந்து கொண்டான் தன் காதலை ஏற்று றிண்டான் எஐஐ சந்தோஷத்திலும் நிம்மதியிலும் இத்துனா நாட்காள் அவளுள் புதைந்திருந்த துக்கத்தை வெளிப்படுத்த அவன் நெஞ்சில் புதைந்து கதற தொடங்கியவளின் கன்னத்தில் பட்டுத் தெறித்தது
அதித்தி : வேண்டா நாயக் வேண்டா நாயக்.. தமக்கு யாம் உணர்ந்த வலி புரிய வேண்டுபதற்காய் ஒதுங்கினேனே ஒழிய தம்மை பிரிந்ணு வாழ ஒரு போதும் எண்ணியதில்லை நாயக்.. வாழ்கையில் ஒவ்வோர் நொடியிலும் தம் கரம் பிடித்து வாழவே உள்ளுகிறேன் (நினைக்கிறேன்) அதை என்றும் புறக்கணிக்க எண்ணாதீர்கள்.. நீரின்றி யான் உயிரற்ற பிணமாவேன் என கத்தி அழுதவளை இறுக்கி கணத்து கொண்டு தன் முதல் இதழ் முத்தத்தை அவளின் நெற்றியில் அழுந்த பதித்தான் அவளின் மன்னவன்...
வெளியே ஓடிய அனைவரும் அவர்கள் முன் இருந்த காட்சியை கண்டு சிரிக்கத் தொடங்கியிருந்தனர்... அங்கோ எட்டு யானையாளிகளும் தங்களை இத்துனை நாட்களும் பார்க்க வராத தீராவை வெகு நாள் களித்து கண்டதில் கூட்டமாய் குழுமி தங்களின் தும்பிக்கைகளால் கட்டித் தழுவாத குறையாக பாசத்தை காட்டி விட்டு அவளின் மீதுள்ள கோபத்தை நினைவு கொண்டு வெகு சீரியசாய் குச்சிமிட்டாயை ருசித்து கொண்டிருந்த அவளின் கைகளில் இருந்த லாலிப்பாப் பக்கெட்டுகளை பிடுங்கி கொண்டனர்...
இவர்களை கவனியாமல் அங்கு யானையாளிகள் மற்றும் தீராவிற்கு இடையே ஒரு செல்ல கோபத்தால் வாக்கு வாதமே நடந்து கொண்டிருந்தது...
தீரா பாவமாய் இதழை சுருக்கிய படி அவர்களை முறைத்து கொண்டிருந்தாள்... அந்த முறைப்பெல்லாம் அங்கு எடுபட்டால் தானே அவளின் லாலிப்பாப் மீண்டு வரும்
தீரா : டேய் என்ன இறக்கி விடுங்கடா நா லாலிப்பாப் சாப்டனுன் என ரித்விக்கின் யானையாளியிடமிருந்து கீழே இறங்க திமிறியவளை நோக்கி முகிலின் யானையாளி கோவமாய் ஏதோ கேட்டது
தீரா : அ..து ஹான் என்ன யாரும் இங்க ஓட விடல ... அதான் வர முடியல இப்போ தான் தப்பிக்க சான்ஸ் கெடச்சிது என பதில் கொடுத்தவளுக்கு மீண்டும் ரவியின் யானையாளி ஒரு கேள்வி கேட்க ஒன்றுமே புரியவில்லை என்றாலும் வான்மதி அவர்களின் உரையாடலை கூர்ந்து கவனிக்கலானாள்...
தீரா : ரக்ஷவ கூட்டீட்டு போறப்போ அவன இழுத்துட்டு போகவே எனக்கு நேரம் பத்தலையா.. அதான் உங்கள பாக்க முடியல... நீங்க நேர்ல தான் இருந்தீங்க பட் உங்க செல்ல ரக்ஷவ் தான் என்ன பிசியா வச்சிருந்தானே என எப்படியோ அவர்களை சமாதானம் செய்து முடித்தாள்...
தீரா : ஹான் இனிமே வீக்லி ஒன்சே வந்துடுறேன் இப்போ குச்சிமிட்டாய குடுங்க டா என பாவமாய் பார்க்கவும் பாவம் பார்த்து ரித்விக்கின் யானையாளி அவளை தன் மீதிருந்து கீழே இறக்கி விட வீரின் யானையாளி மீண்டும் அவளின் குச்சிட்டாய்களை அவளிடமே கொடுத்தது
தீராவின் கால் மண்ணில் பதிந்த தடுத்த நொடி இவளுக்கு இவ்வளவு சீக்கிரம் எப்படி குச்சிமிட்டாய் வந்ததென தெரியாமல் நின்றிருந்த நாயகிகளை தாண்டி குதித்து வெளியே வந்து உறுமியது விகி
விகியின் கண்கள் சுற்றத்தையும் அலசி இறுதிமாம் தீராவை சென்றடைய அவளை நோக்கி வேகமாய் ஓடிய விகி சட்டென சடன் ப்ரேக்கிட்டு நின்றது
தீரா ஒரு குச்சிமிட்டாயை பிரித்து ருசித்து கொண்டு நிமிர்ந்து விகியை கண்டு முளிக்கவும் யுகி மற்றும் அகி அதே போல் சீரிப் பாய்ந்து விகியோடு வந்து நின்றனர்
இவர்களிடம் ஓடி தப்பிக்க இயலாதென உணர்ந்த தீரா அடுத்த நொடி அங்கிருந்து தன் மந்திரத்தால் மறைய முயற்சிக்க அதற்குள்ளாக சிம்மயாளிகள் மூன்றும் அவளை நோக்கி உறுமியது
தீரா ம.வ : கண்டுப்புடிச்சிட்டாய்ங்களே... சரி சமாளிப்போம்
வான்மதி : ஹைஹை சிம்மயாளி என இவ்வளவு யாரும் யயானையாளிகளின் உரையாடலை கெடுக்க மனமின்றி அமைதியாய் நின்றிருந்தவள் ஆர்வமாய் ஓடி வர அவளை கண்டதும் சிம்மயாளிகள் ஏதோ ஒரு காரணத்தினால் விண்ணை நோக்கி உறும அதன் அர்த்தம் புரியாமல் வழியிலே தடுப்பமைத்து நின்றாள் வான்மதி
தீரா : யுகி அகி விகி சும்மா இருங்க என ஏதோ வான்மதிக்கு புரியப்போவதை போல் சட்டென அதட்ட மூன்றும் இப்போது தீராவை நோக்கியது அதே முறைப்புடன்
அவர்களுக்கு நிகராக தீராவும் முறைக்க அனைவருக்குமே இந்நாழ்வருக்குள் நடக்கும் சம்பாஷனைகள் விசித்திரமாய் தெரிந்தது...
நிறைவுபகுதி தொடரும்...
" ஹப்பாடா எக்ஸம் முடிச்சிட்டு வந்துட்டியா "
"உனக்கு யூடி போட இவ்ளோ நாளா "
"எவ்ளோ இழு இழுப்ப நீ இந்த நிறைவுபகுதிய "
" எது தொடருமா அப்போ இன்னும் முடிக்கலையா நீ "
" அடியே பாப்பு என்ன நெனச்சிக்கிட்டு இருக்க நீ "
என இப்படி பலவாறாக நினைத்து கொண்டும் என்னை வருத்து கொண்டும் இருக்கும் என் இனிய இதயங்களே... ஹிஹிஹி நான் இதே யூடில தான் நிறைவுபகுதிய முடிக்கனும்னு நெச்சேன்... ஆனா நம்ம வானு என் ட்ரக்க எனக்கு அந்த கஷாயத்த குடுத்து மாத்தி விட்டுட்டா... யப்பப்பா... அந்த கஷாயம் சீன் மொத்தத்தையும் எழுதுனது நம்ம வானுவே தான்... என்ன வச்சு செஞ்சுட்டாங்கபா... அதனாலையே இந்த யூடி பெருசா போய்டுச்சு... ஹான் என்ன சொல்லீட்டு இருந்தேன்.... சோ நா என்ன சொல்ல வரேன்னா... யூடீஸ மூணா பிரிக்க போறேன்... நிறைவுபகுதி - 3,4,5 ... இன்னும் இரெண்டு இருக்கு ஹிஹிஹி... கவலப்படாதீங்க நா கண்டிப்பா லேட் பன்ன மாட்டேன்...
இந்த யூடில என் கண்ணோட்டம் மற்றும் வான்மதி கண்ணோட்டம்னு இரெண்டு இருந்துர்க்கும்...
வானு கண்ணோட்டம் கதை வாசகர்கள் எல்லாருக்கும் பொருந்தும்... ஏன்னா ஒன்னுமே புரியாது... என் கண்ணோட்டம் அஷ் யூஷ்வல் எப்பவும் போல தான்... அடுத்த இரண்டு யூடியும் இதே மாரி இரு கண்ணோட்டங்கல்ல தான் இருக்கும்... ந்யு ட்ரை...
அரை மணி நேரத்துல லடுத்த யூடி வந்துரும்... இன்னைக்கே அடுத்த இரண்டு யூடி வந்துடும்... மே பீ பெருசா தான் இருக்கும்.. கண்டிப்பா உங்களுக்கு படிக்கபோரடிக்காதுன்னு நம்பி தான் போடுறேன்... கடைசி பாகத்துல ஒரு ட்விஸ்ட்டு வைக்க போறேன்.. அதான் இப்டி வித்யாசமான நடை... அப்டி போரடிச்சிதுன்னு நெனச்சா நோ ப்ராப்லம்.. அஃபீஷியலா கதை முடிஞ்சிடுச்சு... சோ இந்த புக்க லைப்ரரி அல்லது நூலத்துல இருந்து நீக்கிக்கலாம்... அடுத்த யூடியோடு விரைவிலே வரேன்... டாட்டா
DhiraDhi❤.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro