மாயம் (நிறைவுபகுதி-2)
எவரின் நேரத்தையாவது வீணடிக்க வைத்திருந்தால் தையை கூர்ந்து மன்னிக்கவும்...
_____________________________________________
அந்த நாளின் இறுதியில் சர்ப்பலோகத்திலிருந்து இன்முகத்துடன் வந்து நின்றான் யோக்யா.. லீலாவதி அவர்களுக்கு கடிதமனுப்பியிருந்தார்...
இவர்கள் பூவுலகம் வந்ததும் சர்ப்பலோகத்தில் பெரும்பாலுமிருந்த குறைகளையும் தீர்த்து இறுதியாய் சாம்பராவை ஆழிலோகத்திலே சர்ப்பலோகத்திலிருந்து அனுப்பும் பரிசாய் அனுப்பி வைத்ததாய் எழுதியிருந்தார்..
தீரா : மொத்தத்துல சாம்பரா ஃப்ரையானாளா இல்ல க்ரேவி ஆனாளான்னு தெரியாமையே போய்டுச்சு.. ஹ்ம்ம்ம்
இரவு வரை அவர்களுடனே இருந்த யோக்யா தன் மகளின் மகிழ்ச்சி இங்கு தான் உள்ளதென்பதை அறிந்ததும் அவளை அழைத்துச் செல்ல வேண்டுமென்ற முடிவுடன் வந்திருந்திருந்த தன் எண்ணத்தை தூக்கியெறிந்திருந்தான்...
அந்த இரவு நேர மதியில் மிளிர்ந்த தன்னவளை அணைத்த படி அமர்ந்திருந்த அஷ்வன்த்தின் முன் யோக்யாவிடம் கதையளந்து கொண்டிருந்த அஷ்வித்தின் இரு தோளிலும் சேவனும் மயூரனும் அமர்ந்திருந்தனர்...
மூவரின் முகத்திலும் கப்பல் மூழ்கிய எக்ஸ்ப்ரஷனே இருக்க யோக்யாவிற்கு தான் சிரிப்பு சிரிப்பாக வந்தது....
யோக்யா : அஷ்வித்.. தமது வதனத்தில் குடியிருக்கும் உணர்ச்சிக்கு எந்த கப்பல் மூழ்கியது காரணம் என கேட்க முதலில் இதை கேட்டு அஷ்வித் பேந்த பேந்த முளிக்க அதை புரிந்து கொண்டு சிரிக்கத் தொடங்கிய பவியை திரும்பி பார்த்து முறைத்தான்...
அஷ்வன்த் : டேய் மகனே என் பொண்டாட்டிய ரொம்ப முறைக்காத டா என அவன் முகத்தை திருப்பி விட
அஷ்வித் : யப்பா.. உங்களுக்கே இது அநியாயமா இல்ல... நானே இங்க என் வருங்கால பொண்டாட்டிய பாக்க விட மாற்றீங்கன்னு கவலைல இருக்கேன்.. நீங்க ரொமேன்ஸ் பன்னீட்டு இருக்கீங்க...
அஷ்வன்த் : இதெல்லாம் ரொமேன்ஸுன்னு சொல்லாத போடா...
அஷ்வித் : மா உன் பையனுக்கு கொஞ்சமாச்சும் கருணை காட்டும்மா...
பவி : அதெல்லாம் கிடையாது கண்ணா... சொன்னது சொன்னது தான்... நீ மூணு நாளைக்கு நந்துவ பாக்க கூடாது... பாக்க முடியாது...
யோக்யா : அட இது தான் விசனமோ..
அஷ்வன்த் : ஆமா யோக்யா.. கல்யாணத்துக்கு முன்னாடி பாத்துக்கக் கூடாதுடான்னு சொன்னா கேட்டுக்க மாற்றான்...
சேவன் : இதுவல்லாம் சரியே அல்ல சூரரே.. இவ்வாறு துணைவியை பிரித்து எம்மை தவிதவிக்கை வைக்கிறீரே...
மயூரன் : எம் பிறையை கண்டே ஏழரை மணி நேரம் களிந்து விட்டது சூரரே.. அவளை காணாது இன்னமும் இரேழு தினங்களை எவ்வாறு நான் களிப்பேன்
அஷ்வித் : நாம மூணு பேரும் ஒரே கட்சி டா என இவனும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ள மூவருமாய் ஒப்பாரி வைக்க அஷ்வன்த் மகனின் புலம்பலை தாங்க இயலாமல் பவி சுதாரிக்கும் முன் அவளை இரு கரத்தில் ஏந்தி கொண்டு எழுந்து நின்றான்....
பவி அவன் கழுத்தை சுற்றி மாலையாய் இட்டு தன் கரங்களால் அவனை பிடித்து கொள்ள மற்ற நாழ்வரும் அவனை என்ன என்பதை போல் நோக்கினர்...
அஷ்வன்த் : அநியாயத்துக்கு நீ பொலம்புர மகனே.. நா போறேன் போ
அஷ்வித் : ப்பா அதுக்கு எதுக்கு நீ என் அம்மாவ தூக்கீட்டு போற என எழுந்து இவன் பின் ஓடி வர அஷ்வன்த் பவியை தூக்கி கொண்டு எப்போதோ அங்கிருந்து சென்றிருக்க பவியின் சிரிப்பு சத்தம் அங்கிருந்து மறையவும்
வீர் : நீ லேட்டு மகனே... அவன் திரும்பி கூடப் பாக்க மாட்டான் என திடீரென குரல் கேட்கவும் அஷ்வித் தன் இடது புறம் திரும்பி பார்க்க தான்யாவை தோளோடு அணைத்த படி நிலவை இரசித்து கொண்டு ஒரு ஜன்னலின் முன் நின்றிருந்தான் வீர்..
அஷ்வித் : சித்தா... நீங்களுமா... என பாவமாய் கேட்க
வீர் : டேய் எங்க முதல் காதல் அடையாளத்த பாத்துட்டு இருக்குரது ஒரு தப்பா டா
அஷ்வித் : ஆதவ் வந்துருக்கானா...சொல்லவே இல்ல என தன் சகோதரனை தேடி மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தான்...
தான்யா : ஹாஹா ஆதவ் இல்லடா கண்ணா.. அவன் எங்களுக்கு இரண்டாவது அடையாளம்...
அஷ்வித் : அப்போ ஆதவ்க்கு முன்னாடியே வேற உங்காளுக்கு ஒஉரு குழந்தை இருந்துச்சா என அதிர்ச்சியாய் கேட்க
வீர் : டேய் நா நிலவ தான் டா சொன்னேன்... தொனத்தொனன்னு கேள்வி கேட்டுட்டே உக்காந்துருக்கான்... போய் தூங்குடா... நடுராத்திரில தூங்காம என்ன செய்ர நீ...
அஷ்வித் : யப்பா உனக்கே ஓவரா இல்ல...
வீர் :இல்ல டா என பட்டென கூறி விடவும் அஷ்வித் அவனை முறைத்தான்...
தான்யா : எதுக்கு என் பையன கரிச்சு கொற்றீங்க விடுங்கங்க
வீர் : ஏய் என்ன கச்சி மாறுறியா...
தான்யா : நா எப்பவுமே அவன் கச்சி தான்...
வீர் : எங்க என்ன தள்ளி விட்டுட்டு போ பாப்போம் என நக்கலாய் கேட்க
அஷ்வித் : போப்பா.. நா போறேன் என அவனிடம் கத்தி விட்டு அங்கிருந்து அவனறை நோக்கிச் செல்ல அவனை பின் தொடர போன தான்யாவை பிடித்திழுத்த வீர் அவளை பின்னிருந்து அணைத்து கொண்டு தன் தலையை அவள் தோளில் சாய்த்து கொண்டான்...
தான்யா : பாஸ்.. உங்க பையனுக்கே கல்யாணம் ஆக போகுது.. இதுல இப்போ தான் சாருக்கு கல்யாணம் ஆன மாரி பொண்டாட்டிய சுத்திக்கிட்டு இருக்கீங்க நீங்க
வீர் : என் பொண்டாட்டி என் உரிமை... அது புதுசா கல்யாணமானா என்ன... கல்யாணம் ஆகி நுப்பது வர்ஷம் ஆனா என்ன...
தான்யா : சரி தான்.. என்றவளாலும் தன் புன்னகையை மறைக்க முடியவில்லை...
அவர்களின் அழகிய காதல் காவியத்தின் தொடக்கத்திலிருந்து உடன் வரும் மதியவனும் அவர்களின் ஆழம் மாறா காதலை கண்டு அழகாய் மின்னியது..
மறுநாள் விடியலிலே சித்ரியா வேதித்யா மற்றும் எழிலினியாவிற்கு ஊர் சுற்றி காட்டப் போகிறோமென குதியாய் குதித்து இரண்டாமணி நாயகிகள் கடைசியாய் இந்திரனிற்கு ஐஸ் வைத்து மற்ற அனைவரையும் லேசாக்கி விட்டு வெளியே கிளம்பினர்...
யட்சினி சகோதரிகள் மூவரும் இரண்டாமணி நாயகிகளோடு கடற்கரைக்கு சென்றிருக்க இளவரசிகளுடன் அந்த கடலில் விளையாடி கொண்டிருந்தவர்களை பார்த்தவாறு அதித்தி மாத்திரம் தனியே அமர்ந்திருக்கவும் அவளின் பின் போகலாமா வேண்டாமா என புரியாமல் விழித்த படி நின்றிருந்தான் ஆதியன்த்...
ஆருண்யா கட்டும் மணல் வீட்டிற்கு நித்யா கல்லை வைத்து அலங்காரம் செய்து கொண்டிருந்ததால் அதித்தி மட்டும் தனித்து விடப் பட்டிருந்தாள்...
தங்கைகள் விளையாடி கொண்டிருந்த மறு பக்கத்தில் ஏதோ வரைந்து கொண்டிருந்த ருமேஷின் மடியில் தலை வைத்து படுத்திருந்த ராகவ் மற்றும் ஆதவை கண்டதும் சரி அந்த பக்கமாக சென்று விடலாம் என கால் வைக்க போனவனின் தலையை ஒரு கல் பறந்து வந்து சுல்லென தாக்கியது
தலையை தேய்த்தவாறு திரும்பி பார்த்த ஆதியன்த் அங்கு இரண்டாமணி நாயகிகளுக்கு பொருப்பாய் வந்திருந்த இந்திரன் இவனை மூக்கு முட்ட முறைத்து கொண்டிருப்பதை கண்டு ஈயென இளித்தான்...
இந்திரன் : மவனே போய் பேசுடா.. அந்த பக்கம் போனன்னா கல்ல விட்டடிப்பேன் என அவனுக்கு கேட்பதை போல் கூறவும்
ஆதியன்த் : அப்பா அப்பா வேணாம் பா. நா அப்டீக்கா போய்டுறேனே...
இந்திரன் : அந்த பக்கம் போனன்னா நீ உருப்புட மாட்டடா டேய்... அப்ரம் சிங்கிளா சாக வேண்டியது தான்...
ஆதியன்த் : அய்யையோ வேணாம் வேணாம்
இந்திரன் : அப்போ போய் பேசு டா என ஒரு கல்லை தூக்கி எறிய அதில் அடி படும் முன் அதித்தியிடம் ஓடினான்...
ஆனால் அவன் நேரம்.. அதித்தி அப்போதே ஆருண்யாவின் மணல் கோட்டையில் ஆர்வம் வந்ததால் அவள் சேகரித்த சிப்பிகளை வைத்து அந்த கோட்டையை இன்னும் மெருகேற்ற சென்றிருந்தாள்...
இந்திரன் அதை கண்டதும் இன்னும் முறைக்க ஆதியன்த் பாவமாய் பார்க்க தலையிலே அடித்து கொண்டான்... திவ்யா இருவரையும் கண்டு சிரித்து கொண்டிருந்ததை கண்ட இந்திரன் அவளை வேகவேகமாய் நெருங்க திவ்யா அவனை கண்டதும் ஓடத் தொடங்கினாள்...
இந்திரன் : ஹே நில்லு டி
திவ்யா : நிக்க மாட்டனே என இவளும் கத்தி விட்டு ஓட இவர்களின் பிள்ளைகளோ அதை சுவாரசியமாய் பார்த்து கொண்டே திவ்யாவை உற்சாகப்படுத்த இந்திரனுக்கு போக்குக் காட்டி ஓடிய திவ்யா ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்ள இருவருமாய் கால் தடுமாறி கீழ விழுந்தனர் கடலைகள் அவர்களை அரணாய் தாங்கி இந்திரனோடு திவ்யாவை சேர்த்து அவளை பூரிக்கச் செய்தது...
அன்றைய மாலை வீட்டில் குடும்பமாய் அனைவரும் அமர்ந்து நாளை நடக்கவிருக்கும் சிறிய ரிஷப்ஷன் விழாவிற்காய் தயாராகிக் கொண்டிருந்தனர்... இன்னமும் அஷ்வித் மற்றும் நந்தினியை எவரும் பார்க்க விடவில்லை...
காலையிலிரிந்து ப்ரியா எங்கு சென்றாலும் அவளின் முந்தானையை பிடித்து கொண்டு செல்லாத குறையாக குட்டி போட்ட பூனை போல் அவளையே பின் தொடர்ந்து கொண்டிருந்தான் சத்தீஷ்...
ப்ரியா கண்டும் காணாமல் அவளது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க பொருத்து பொருத்து பொருமையை தூக்கி எறிந்து விட்டு யாவரும் இல்லாத ஒரு இடத்தில் அவளை சுவரோடு சிறை வைத்தான்...
சத்தீஷ் : ஹலோ மிஸ்ஸஸ் சத்தீஷ்.. கொஞ்சம் மிஸ்டர் சத்தீஷ பாத்தா என்னவாம்... நானும் எவ்ளோ நேரம் தான் உன் பின்னடியே அலைவனாம்...
ப்ரியா : அதெல்லாம் எனக்குத் தெரியாது மிஸ்டர் சத்தீஷ்.. நீங்க இதெல்லாம் இருவது வர்ஷத்துக்கு முன்னாடி ப்ராமிஸ் பன்றப்பையே யோசிச்சிற்க்கனும்.. இப்போ அனுபவிங்க என அவனை பிடித்து தள்ளி விட்டு நகரப் போனவளை மீண்டும் சுவரோடு தள்ளினான்...
சத்தீஷ் : அட இருங்க இருங்க என்ன அவசரம்... அங்க பாரு இன்னமும் நா சொன்ன மாரி என்னோட சார்பா அந்த நட்சத்திரங்கள் உன் கூடவே தான இருந்துச்சு என அவர்களருகிலிருந்த ஜன்னல் வழியே அந்தி சாய்ந்த வானமதில் மெல்லிய திரையாய் தென்பட்ட ஒரு நட்சத்திரத்தை காட்ட அவனோடு அதை மீண்டும் காணும் ஆவலில் அவள் கோவம் மறந்து திரும்ப மனையாளின் மனம் அறிந்த அவனின் கரமும் அவனின் பிடியை தளர்த்தி அவளுக்கு திரும்பிக் கொள்ள உதவியது
அந்தி சாய்ந்த சூரியனின் எதிர் திசையில் பிறை நிலவாய் காட்சியளித்த சிறிய நிலவை சுற்றி அங்குமிங்கும் ஒவ்வொன்றாய் மிளிர்ந்தது சில நட்சத்திரங்கள்...
சத்தீஷ் ப்ரியா இருவரின் நினைவுகளிலும் முப்பதாண்டுகள் முன்பு நிகழ்ந்த நினைவை சுற்றி வர தன் இடையை அவனின் கரம் சுற்றி அணைத்ததும் தனிச்சையாக சாய்ந்து தன் தலையை அவன் நெஞ்சின் மீது வைத்து அவனோடு அந்த நிலவை இரசிக்கத் தொடங்கினாள் ப்ரியா
அவளின் கூந்தலில் வீசிய நறுமனத்தை வாசம் பிடித்த சத்தீஷின் இதழ் திருப்தியாய் விரிய அதை உணர்ந்ததை போல் ப்ரியாவின் கன்னம் அழகாய் சிவந்தது...
அவளின் கன்னம் குருகுருக்க தன் இதழால் உரசியவன் ஏதோ கூற வாயெடுக்கவும் சரியாக " அப்பா " என கத்திய சித்தார்த்தின் குரலில் திடுக்கிட்டான்...
ப்ரியா என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்து க்லுக்கென சிரிக்க அவர்கள் இருவருக்குமே சித்தார்த்தின் குரல் கேட்டது...
ப்ரியா : போங்க மிஸ்டர் ஈஷ்வர் உங்க மகன் ரொம்ப ஆசையா கூப்புட்ரான்ல என செல்லமாய் கூறி கொண்டே திரும்பி அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாய் போட்டு கொண்டாள்...
மகனை மனதிலே அர்ச்சித்த சத்தீஷ் மீண்டும் ஏதோ கூற வாயெடுக்க அப்போதும் சித்தார்த்தின் சற்று ஹைப்பிட்ச்சான குரல் கேட்டது
சத்தீஷ் : அட ஏன் டா நீ வேற ...வந்து தொலைக்கிறேன் அங்கையே நில்லு டா என இவன் கத்தவும் ப்ரியா இன்னமும் சத்தமாய் சிரித்தாள்...
ப்ரியா : போ போ நீ இன்னைக்கு தூங்குன மாரி தான். என நக்கலாய் கூறியவளின் கன்னத்தில் சைடு கப்பில் முத்தம் பதித்தவன் அவள் அதிர்ந்து நிற்கும் போது
சத்தீஷ் : நீங்களும் தூங்குன மாரி தான் மிஸ்ஸஸ் ஈஷ்வர் உன்ன மட்டும் துங்க விடுவேனா என அவளின் கன்னத்தை லேசாய் கடித்து விட்டு அங்கிருந்து ஓட ப்ரியாவின் " டேய் லூசு " என்ற கத்தல் அவன் கீழ் செல்லும் வரை கேட்டு அவனின் புன்னகையை இன்னும் விவடையச் செய்ய சித்தார்த்தின் " யப்பாஆஆஆஆ " என்ற கத்தல் அவனின் பீப்பியை ஏற்றியது...
விருவிருவென அவனை தேடிச் சென்ற சத்தீஷ் சித்தார்த் நகத்தை வெடுக்கு வெடுக்கென கடித்து கொண்டு தோட்டத்தில் நின்றதை கண்டதும்
சத்தீஷ் :டேய் மகனா டா நீ.. ஆன் மகனா நீ.. அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சமாவது ரொமேன்ஸ் பன்ன விட்டா கொறஞ்சா டா போய்டுவ...
சித்தார்த் : இப்போ நீ ரொமேன்ஸ் பன்றதா முக்கியம்... என் ரொமேன்ஸுக்கு வழி சொல்லுப்பா
சத்தீஷ் : அப்டியே போட்டன்னா... அப்பாட்ட கேக்குர கேள்வியா இது
சித்தார்த் : அப்ரம் நா வேணா போய் அம்மா கிட்ட கேக்கவா
சத்தீஷ் : டேய் இரு டா இரு... க்ரிஷ்ஷுக்கு பொறந்துட்டு இப்டி நீ முகில் மாரி இருந்துர்க்கியே டா பாவி
சித்தார்த் : ப்பா... க்ரிஷப்பா அம்மாவ ஒரே நாள்ள எஸ் சொல்ல வச்சதுக்கு நா என்ன பன்ன முடியும்...
சத்தீஷ் : ம்க்கும் நீ இரெண்டு வாரமாகியும் ஒன்னுத்தையும் பன்னலையே டா
சித்தார்த் : ஹலோ ஹலோ நாங்க லவ்வ உணர்ந்தே நாழு நாள் தான் ஆகுது
சத்தீஷ் : அன் இதெல்லாம் வக்கனையா பேசு... சரி என் மருமக எங்க
சித்தார்த் : அன் அவளா... அய்யையோ எங்க போனா என அங்குமிங்கும் தேடியவனின் தலையிலடித்து பின் பக்கமாய் திரும்பி விட்ட சத்தீஷ்
சத்தீஷ் : அந்தா இருக்கா பாரு டா மகனே என கயலோடு அமர்ந்து ஏதோ சின்சியராய் வரைந்து கொண்டிருந்த நித்யாவை காட்டினான்...
சித்தார்த் : சரி சொல்லுங்க தந்தையாரே நான் என்ன செய்யட்டும்...
சத்தீஷ் : உன் கழுத்துல கெடக்குர செய்ன கலட்டி அவ கழுத்துல போடு ஒரேடியா கல்யாணமே முடிஞ்சிடும்...
சித்தார்த் : அட நல்லா ஐடியாவா இருக்கே
சத்தீஷ் : எங்களுக்குன்னே வந்து பொறந்தீங்களா டா நீங்க.. டேய் அவ செவுல்லையே ஒன்னு விடுவா டா..
சித்தார்த் : அய்யையோ இல்ல இல்லப்பா என் ரோஹினி அப்டியெல்லாம் பன்ன மாட்டா
சத்தீஷ் : அப்போ நீயே போய் பேசு போ நா உன் அம்மா கிட்ட போறேன்...
சித்தார்த் : நானே அம்மா கிட்ட போறேன்னு அழுவல நீ என் அப்பா எட்டு கழுதை வயசுல அம்மா கிட்ட அதுவும் என் அம்மா கிட்ட போறேன்னு ஆழுவுர... என செல்ல இருந்தவனின் சட்டையை பிடித்து இழுத்து கேட்டான்
சத்தீஷ் : பேசுவ டா பேசுவ... என் மகனாச்சே... என நொந்து கொள்ள சித்தார்த் மீண்டும் அவனை நச்சரிக்கத் தொடங்கினான்...
அற்புத கோட்டையில் ஆயுத கள அறையில் கோவன்கள் மற்றும் சஹாத்திய சூரர்களின் பிரம்மாண்டமான கம்பீர ஓவியத்தின் எதிரே இரட்சகன்கள் மற்றும் பராக்ரம வீரர்களின் அதி கம்பீரமான ஓவியம் தீட்டப்பட்டு அதுனை அழகுடன் மிளிர்ந்து கொண்டிருக்க அதற்கு நேரெதிரே கோவன்கள் மற்றும் சஹாத்திய சூரர்களின் இடையே இருந்த இடத்தில் மிகவும் தீவிரமாய் ஓவியம் தீட்டி கொண்டிருந்த அனுவை பின் நின்றவாறு தொல்லை செய்து கொண்டிருந்தான் க்ரிஷ்...
அனு : யுவா.. திரும்ப திரும்ப என்ன கடுப்பேத்துனீங்கன்னா யுகிய வர சொல்லி உங்கள புடிச்சிட்டு போக சொல்லீடுவேன் என ஓவியத்தை விட்டு கண்ணை எடுக்காமல் இவள் இறுதியாய் எச்சரிக்க அதை பொருட்டாய் எடுத்தால் அவன் அனல் கோவனில்லையே
க்ரிஷ் : ரதுமா ரதுமா ரதுமா நா வரைரனே
அனு : யுவா என் பையனோட பெயின்ட்டிங் உங்களால கெட்டு போச்சுன்னா உங்கள நா சும்மாவே விட மாட்டேன்...
க்ரிஷ் : நீ உன் பையனோட பெயின்ட்டிங்க சொதப்ப மாட்டன்னு எனக்கு தெரியும் கண்ணம்மா..
" உன்னால அவ சொதப்புனான்னா யாளிங்க கூட அடச்சு வச்சிட்டு போய்டுவா டா அவ " என இவர்களை கண்டு கொள்ளாமல் சிம்மயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து கொண்டிருந்த வீரின் அருகில் அமர்ந்திருந்த ரவி சிரிப்போடு கத்தினான்...
க்ரிஷ் : உன் வேலைய பார்ரா நீ ... நான் என் வேலைய பாத்துக்குறேன்...
வீர் : ம்க்கும் நீ என் தங்கச்சிய காண்டேத்திக்கிட்டே இருக்குரதுக்கு அவ வச்சு வாங்கத்தான் போறா பாரு
வீனா : என் அத்தான் ஒன்னும் லேசு கிடையாது ப்ரதர்... என்ன க்ரிஷ் அத்தான் உங்க ரதுவ நீங்க சமாளிச்சிடுவீங்க தானே... என அனுவிற்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வந்தவள் நக்கலாய் கேட்க
க்ரிஷ் : என்னால மட்டும் தான் சமாளிக்க முடியும் குட்டிமா என அவளிடமிருந்து அப்பொருட்களை வாங்கிக் கொண்டவனின் கூற்று திரும்பி நின்றிருந்த அனுவின் காந்த கண்கள் அழகாய் சிரிக்க வைத்தது...
ரவி : ஹ்ம் மடம்க்கு அத்தான பாக்க டைம் இருக்கு... புருஷன பாக்க டைமில்ல டா அகி.. இதுக்குத் தான் நீயெல்லாம் கல்யாணம் பன்னாம இருந்துட்டியோ என ஓரக்கண்ணால் வீனாவை பார்த்த படி அகியிடம் பேச.. தலையை தூக்கி அவனை பார்த்த அகியோ " என்ட்ட தான் பேசுறீங்களா ஐயனே " என உறும அதை உணர்ந்த க்ரிஷ் சிரித்தபடி " உன்ட்ட இல்ல அகி நீ உன் வேலைய பாரு " என கத்தினான்..
அகி " அப்போ சரிங்க ஐயனே " என மறு உறுமல் கொடுத்து விட்டு ரவி தடவி கொடுக்கவும் மீண்டும் விட்ட உறக்கத்தை தொடர்ந்தது...
வீனா : ம்க்கும் பாத்தா மட்டும் அப்டியே கவனிச்சுடுவாங்களா ... அப்டி தான விகி என இவள் விகியை பார்த்து கேட்க விகி இப்போது அவளை " என்ட்டையா பேசுறீங்க தேவி " என்ற எக்ஸ்ப்ரஷனுடன் பார்த்தது
ரவி : ஏன் கவனிக்க மாட்டோமா என வேகமாய் அகியின் தலையை உயர்த்தி அகியிடம் கேட்க அகி பாவமாய் உறுமியது
வீர் : அய்யைய... அண்ணன் தம்பிங்க இரெண்டு பேரையும் வச்சு ஒன்னும் பன்ன முடியாது டா... நா கெளம்புறேன்.. முடிஞ்சா இந்த இரெண்டு வானரத்தையும் நைட்டு டின்னரா முடிச்சிடுங்க யுகி அகி விகி என தன் நண்பன்களை இரக்கமே இல்லாமல் மாட்டி விட்டு விட்டு இருவரும் மூக்கு முட்ட முறைத்த போது கூட கவனிக்காமல் அந்த அறையை விட்டுச் சென்றான்...
வீனா : டேய் வீரா அண்ணா இரு டா... நானும் வரேன்
ரவி : ஏய் இரு டி எங்க டி போற என இவனும் அவன் பின்னே ஓடினான்...
க்ரிஷ் : ஹப்பாடா இனிமே தொல்லையே இருக்காது ரதுமா... கொஞ்சம் புருஷனையும் பாரு டி... இருவது வர்ஷம் களிச்சு வந்துருக்கேன் ஒரு ரொமேன்ஸ் கூட பன்ன விட மாற்றியே
அனு : ம்க்கும் ரொமேன்ஸ் பன்ற வயசு தான்ல இது என ஓவியத்தில் கண்ணாய் இவள் பதில் கேள்வி கேட்க
க்ரிஷ் : ஏஜ் ஈஸ் ஜஸ்ட் அ நம்பர்...
அனு : ஹான் ஜஸ்ட் அ நம்பர் தானே... சோ கொஞ்சம் லேட்டா உங்கள பாத்தா உங்க வயசு ஒன்னும் அதிகமாய்டாது... அதிகமானாலும் இட்ஸ் ஜஸ்ட் அ நம்பர் தானே அப்ரமா பாத்துப்போம் என்றவளை பின்னிருந்து அணைத்து கொண்டான்...
க்ரிஷ் : போ ரதுமா... நீ ரொம்ப பட் வைஃபாய்ட்ட
அனு : பரவால்ல பரவால்ல.. அந்த பட்டத்த எப்டி திருப்பி வாங்கனும்னு எனக்குத் தெரியும்.. இப்போ என் பையன் ஓவியம் தான் எனக்கு முக்கியம் தள்ளுங்க
க்ரிஷ் : அய்யைய டேய் மகனே அன்னைக்கு உன் அம்மாவையும் துணைக்கு இழுத்துட்டு போய்ர்க்களாம்ல டா... இங்க இருந்து உன் அப்பா கூட கொஞ்சம் நேரம் கூட இருக்க மாற்றா டா என நிமிர்ந்து குழந்தை போல் சினுங்கியவனை கண்டு சிரித்தவாறு அவனோடு பின் நகர்ந்த அனு திருப்தியுடன் மேலே நோக்கினாள்...
ஆளுயரத்தில் கோவன்கள் மற்றும் சஹாத்திய சூரர்கள் ஓவியங்களின் இடையே யுகியும் அகியும் விகியும் சீரிப் பாய்ந்து ஓடி வர அதில் அகியின் மீது கம்பீரமாய் அமர்ந்து மூன்று சிம்மயாளிகளையும் ஒரே நேர்கோட்டில் தன் கட்டுப்பாட்டால் வழி நடத்திக் கொண்டே தன் வில்லில் அம்பை பொருத்தி குறி வைத்து கொண்டு அமர்ந்திருந்தான் நம் ரக்ஷவன்...
அத்துனை தத்ருபமாய் அந்த போரில் நிகழ்ந்த அவ்வொரு காட்சியை படம் பிடிக்காத குறையாக தீட்டப்பட்டிருந்தது அப்புகைபடம்... ஆழிலோகத்தவர்கள் ஆகாயலோகத்தவர்கள் போரிடுகையில் அவர்களை நோக்கி அகியின் மீது அமர்ந்து சிம்மயாளிகள் மூன்றையும் இரட்சக சிம்மயாளிகளிகள் அப்புறம் சென்றப் பின் வழி நடத்தி சென்ற ரக்ஷவின் ஓவியம் தான் அது
அதன் கீழ் சரிவான எழுத்துக்களில் அழகாய் ரக்ஷவன் என்ற அவனின் நாமம் பொறிக்கப்பட்டிருந்தது....
க்ரிஷ் : ஹ்ம் இப்பவாவது என்ன பாப்பியா... என அந்த புகைபடத்தை உள்ளூர இரசித்து விட்டு இன்னும் இரசித்து கொண்டிருந்தவளின் கழுத்தில் முகம் புதைத்து கேட்க அனு அவனின் அருகாமையை பல வருடம் பின்பு மீண்டும் மனதார அனுபவித்து கொண்டு நின்றிருந்தாள்...
அனு : ஆனா இப்பவும் உங்களுக்கு வாய்ப்பில்லன்னு தான் நினைக்கிறேன் யுவா என கூறியவள் அவனின் கன்னத்தில் மென்மையாய் புன்னகைத்து சிரிக்க அவளின் கூற்றையும் நடவடிக்கையையும் புரியாமல் முளித்த க்ரிஷ்ஷிற்கு ருத்ராக்ஷின் " அப்பாஆஆஆஆஆ " என்ற கத்தல் ஹைப்பிட்ச்சில் கேட்டது
காலை தரையில் அழுத்தி உதைத்த க்ரிஷ் வரேன் டா என கத்தி விட்டு வயிற்றை பிடித்து சிரித்த அனுவை முறைக்க இயலாமல் ஒரு புன்னகையுடன் அவளின் கழுத்தில் மென்மையாய் இதழ் பதித்து " மிஸ் யு ரது " என்று விட்டு செல்ல அவன் அறையை தாண்டும் முன்பாக அனுவின் " பட் ஐ லவ் யு யுவா " என்ற குரல் அவனை அடைந்தது...
சிம்மயாளிகள் மூன்றும் நம்ம தூக்கத்த கெடுக்காம இருந்தா சரி தான் என சீரி கொண்டு உறக்கத்தை தொடர்ந்தது...
ருத்ராக்ஷ் கோட்டையின் வெளி புறத்தில் முகத்தை சுருக்கிக் கொண்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்தான்... வேகவேகமாய் அங்கு சென்ற க்ரிஷ் மேலே பார்த்து
க்ரிஷ் : டேய் இறங்கு டா கீழ... ஒய்யாரமா மேல என்ன பன்னிக்கிட்டு இருக்க
ருத்ராக்ஷ் : ஹோ வன்ட்டியாப்பா...இங்கேந்நு உன் மருமகள சைட்டடிச்சிட்டு இருக்கேன் என காலாட்டியபடி பதில் தந்தவன் காட்டியை திசையை பார்த்த க்ரிஷ் அங்கு தான்யாவோடு ஏதோ உரையாடியவபடியே பூக்களை பறித்து கொண்டிருந்த ஆருண்யாவை கண்டான்...
க்ரிஷ் : பாத்தா மட்டும் போதுமாடா... போய் பேசலையா நீ
ருத்ராக்ஷ் : ம்க்கும் பாக்குறதுக்கே எனக்கு பயமா இருக்கு
க்ரிஷ் : அய்யோ அவ என்ன உன்ன எரிக்கவா டா போறா
ருத்ராக்ஷ் : ஹான் நல்லவேளை நியாபகப் படுத்துனம்மா... நீ தான் என்ன காப்பாத்தனும் என தொபக்கடீரென கீழே குதிக்க
க்ரிஷ் : குரங்குப்பயளே.. பொருமையா டா.. என்ன காப்பாத்தனும்...
ருத்ராக்ஷ் : அதான்ப்பா... உன் மருமக கோவத்துல என்ன எரிக்க சொல்லி உன் கிட்ட ஹெல்ப் கேட்டா அவளுக்கு ஹெல் பன்னாத
க்ரிஷ் : அது எப்டி டா என் மருமக ஹெல்ப் கேக்கும் போது முடியாதுன்னு ... டேய் லூசுப்பயளே என முதலில் சாதாரணமாய் கூறியவன் அவன் கூறிதை உணர்ந்தும் தலையிலே ஒரு போடு போட்டான்
ருத்ராக்ஷ் : பா உண்மையா தான் சொல்றேன்... நா அவ ஃப்ரெண்டு மட்டும் தான்னு சொன்னதுக்கு இன்னும் கோவமா இருக்காப்பா...
க்ரிஷ் : அதுக்கு தான் நீ பயந்து பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கியா... என அவன் காதை பிடித்து கேட்டு கொண்டிருக்கும் போது வெவ்வேறு பக்கத்திலிருந்து " அப்பா அப்பா அப்பா வலிக்கிது வலிக்கிது " என ஒரே போல் சித்தார்த் மற்றும் ஆதியன்த்தின் குரல் கேட்க இவ்வாறுவரும் அவரவர் சகோதரர்களை நோக்கிக் கொண்டனர்....
சத்தீஷிடமிருந்து தன் காதை மீட்க போராடிக் கொண்டிருந்த சித்தார்த் தன்னை பாவமாய் பார்த்படி தனது நிலையிலே நின்ற தன் இளவன்களை வொய் ப்லட் சேம் ப்லட் என மனதில் கூறி கொள்ள அவன்களும் தலையசைக்க தந்தைகள் மூவரும் தனையன்காள் மூவரின் தலையிலும் கொட்டினர் " ரொம்ப முக்கியம் இப்போ இந்த டயலாக்கு " என்ற கூற்றுடன்
பின்ன அவர்களுக்கா மனதை படிக்கத் தெரியாது... அதுவும் தனையன்களின் மனதை
யட்சினிகள் மூவரும் பூவுலகிற்கு வந்ததும் இரட்சகன்களை திரும்பி கூட பார்க்கவில்லை... அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்... மூன்று வருடமாய் காத்திருந்து காத்திருந்து வந்த பிறகு மூன்றே நிமிடங்களில் மூவரும் " நான் உங்களை காதலிக்கவில்லையே " என மூன்றே வார்த்தைகளில் மனதை உடைத்த பிறகும் அவர்களின் மனம் அவர்களை தான் சுற்றி வந்தது
இருந்தும் அவர்களை இம்சிக்க மனமின்றி இவர்கள் விலகத் தொடங்கியதும் தான் இரட்சகன்களும் உண்மை உறைக்கத் தொடங்கியது...
அப்போதிலிருந்து யட்சினிகளிடம் பேச அவர்களை தூரத்திலிருந்து இவர்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்க கோவன்கள் போய் பேசித் தொலைங்க டா என உதைக்காத குறையாக விரட்டிக் கொண்டிருக்கின்றனர்...
அந்த மருத்துவ அறையினில் தன் இரு காதுகளையும் இருக்கி மூடிய படி தன் முன் நடக்கும் ஊமை படத்தை அலுத்து போய் பார்த்து கொண்டிருந்தான் வருண்... அவனருகிலே இக்ஷியும் மதியும் காதை மூடிய படி நடக்கும் நாடகத்தை அவனின் இரு தோளிலும் சாய்ந்த படி பார்த்து கொண்டிருந்தனர்...
ஏதோ ஒரு மூலிகையை செய்து கொண்டிருக்கும் ரக்ஷாவா ரனீஷ் தொல்லை செய்து கொண்டே இருக்க அவளோ என்ன ஏதென்று பார்க்காமல் எதை எதையோ அவன் மீது தூக்கி எறிந்து அவனை துரத்தி கொண்டிருந்தாள்...
ரக்ஷா: கிட்ட வந்தீங்கன்னா புருஷன்னு பாக்க மாட்டேன் என கத்தியை வைத்து மிரட்ட
ரனீன் : அடியே கிராதகி இப்போ நா என்ன பன்னீட்டேன்னு நீ கொலகாரி ஆக ப்லன் போட்டுட்டு இருக்க
ரக்ஷா : எத பன்னல நீங்க.. எந்த மூலிகைய எடுத்து வர சொன்னா... எந்த மூலிகைய எடுத்து வந்துர்க்கீங்க என அந்த ஒரு கல்லையும் தூக்கி அவன் மீது எறிய அதை அலேக்காய் கட்ச் பிடித்த ரனீஷ்
ரனீஷ் : அடியே அத ஒரு வாரத்துக்கு முன்னாடியே எடுக்க போய்ர்க்கனும் டி... இப்போ இதான் அங்க இருக்கும் என பாவமாய் கூற
ரக்ஷா : நா ஒரு மாசமா உங்கள அந்த மூலிகைய எடுத்துட்டு வர சொல்லிக்கிட்டு இருக்கேன் கேட்டீங்களா நீங்க என பத்ரகாளியை முறைத்தவளை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கியவன் சரண்டராக முடிவெடுத்து அவளை பின்னிருந்து அணைத்து அவள் கரங்கள் இரண்டையும் அசையாத படி பிடித்து கொண்டான்...
ரனீஷ் : சரி சரி சாரி சாரி சாரி என அவளை பேச விடாமல் சாரி கொண்டே அவளின் கன்னத்தில் குட்டி குட்டி முத்தம் பதிக்க ரக்ஷா அவனின் பிடியிலிருந்து விடுபட இயலாமல்
ரக்ஷா : என்ன பன்ற டா லூசு புள்ளைங்க இருக்காங்க
வீனா : அது இப்போத் தான் உனக்கு தெரியிதோ என அவளின் மடியில் தலை சாய்த்திருந்த ரவியின் மருத்துவ குறிப்பை பார்த்து கொண்டிருந்த வீனா இவளை பார்க்காமலே நக்கலாய் கேட்க ரக்ஷா தன் வெட்கத்தை மறைக்க போராடி கொண்டிருக்கும் போதே
வருண் : நாங்க எதையும் பாக்கலப்பா... என்ன குட்டிமாஸ் நாம எதையும் பாக்கல தான என கண்களை மூடி கொண்டு திரும்பி அமர்ந்திருந்தவன் அவனோடு திரும்பி அமர்ந்திருந்த அவனின் தங்கைகளிடமும் கேட்க
மதி இக்ஷி : ஆமா ஆமா அண்ணா... நாங்க இப்போ மெடிட்டேஷன் பன்னிக்கிற்றுக்கோம் அதனால எங்களுக்கு எதுவும் கேட்காது
ரக்ஷா : ஐய்யோ விடுடா எரும என ரனீஷிடமிருந்து விடுப்பட்டு அங்கிருந்து வெளியே ஓடி விட ரனீஷோடு அவனின் பிள்ளைகளும் வெடித்து சிரித்தனர்....
ரவி : ஹே ஷு... நா என் பொண்டாட்டி மடியில தூங்குரப்போ தான் இப்டி பெக்கபெக்கன்னு சிரிப்பீங்களோ... சும்மா இருங்க டா
வீனா : ஆமா ஆமா சாரு இதுவர தூங்குனதே இல்ல
ரவி : எத்தன முறை தூங்குனாலும் அது எனக்கு முதல் முறை தூங்குன மாரி தான் பட்டு குட்டி என கண்ணடித்தான்
முகில் : நவி நவி நவி நவி நவி நவீஈஈஈஈஈஈஈ
ஒவீ : இறைவா என்னங்க உங்களுக்கு பிரச்சனை
முகில் : நா கூப்ட கூப்ட நீ ஏன் கேக்காம இருக்க
ஒவீ : நா என்ன சும்மாவா இருக்கேன் என அவளின் வாளை தோளில் வைத்து கொண்டு முறைக்க
முகில் : சரி பயிற்சி தான் எடுக்குர ஒத்துக்குறேன்... அப்டியே என்னையும் கவனிக்கிரது
ஒவீ : ஹ்ம் கவனிக்கலாமே... சிறப்பா கவனிக்கலாமே... என அவளின் வாளை சுழற்றியபடி முன்னே வர ஒவீயின் வாள் பயிற்சியை நோக்கிக் கொண்டிருந்த சேவன்
சேவன் : மயூரா விரைந்து இங்கு வா... சிறப்பான சம்பவம் நிகழ உள்ளது என அவனை அழைக்க மயூரனை தேடிச் சென்றான்....
முகில் : ஈஈஈ என அவளை பார்த்து இளித்து கொண்டிருந்தவன் அவளின் செயலில் சட்டென குனிய ஒவீயின் வாள் முகிலின் கேசத்தின் நுனியை உராசி விட்டு சென்றது
ஒவீ : என்ன படை தளபதியாரே... யுத்த மிட ஐயமோ என நக்கலாய் கேட்கவும் அவனின் முகத்திலிருந்த குழப்பம் மறைந்து விஷமம் குடி கொண்டது
முகில் : ஹ்ம் வேல்வேந்தனுக்கு ஐயமா.. களமிறங்களாமா தேவியாரே என தன் கரத்தை உயர்த்தி அவன் அருகிலிருந்த மரத்தின் கிளையை பிடித்து எம்பியவன் மறு புறமாய் குதித்து ஒவீ அப்புறம் திரும்பும் முன் அவளது முதுகிலிருந்த குரையிலிருந்து மற்றொரு வாளை உருவி தயாராய் நின்றான்...
ஒவீ அவனுக்கு ஒரு சவால் புன்னகையுடன் வாளை பயில விட கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றவரை நக்கலாய் பார்த்து கொண்டு தங்களின் யுத்தத்தை தொடங்கினர்...
முகில் தாக்குவதை விடுத்து தற்காப்பிலே குறியாய் இருக்க ஒவீ சுழன்று சுழன்று அவனை தாக்க அவளின் ஒவ்வொரு தாக்குதலையும் முகில் முறியடித்து கொண்டே வந்தான்...
முகில் ஒரு கட்டத்தில் ஒவீ சோர்வடைந்ததை கண்டதும் அந்த நேரத்தை பிடித்து கொண்டு அவளை தாக்க.. அவனை தாக்க தெரிந்தவளுக்கு தற்காத்து கொள்ளவா தெரியாது...
மிகவும் எளிதாய் தன்னிடமிருந்து தப்பித்து கொண்டிருந்தவளை கண்டு திடீரென சிரித்த முகில் அவள் சற்றும் திசை திரும்பாததை கண்டதும் சட்டென அவளின் காலை இடித்து விட்டான்...
ஒவீ தடுமாறி விழும் முன்னே அவனை அவளை தாங்கி பிடிக்க அவனின் இதயத்துடிப்பை அருகில் கேட்டு கண் திறந்து அவனை நோக்கியவள் அவனின் பச்சை சிற கண்களை கண்டதும் முறைத்து கொண்டே அவனை தள்ளி விட இருவருமாய் மண்ணில் விழுந்தனர்
ஒவீ வேகமாய் செயல் பட்டு அவனிடமிருந்து பிரிந்து காலால் ஒரு உதை உதைத்தாள்
முகில் : அஅன் புருஷன இப்டிலாம் உதைக்க கூடாது டி
ஒவீ : நா உதைப்பேன்.. ஏமாத்துக்காரா... விழுந்தே கெட என அவனை தள்ளி விட்டு விட்டு ஓட
முகில் : உன்ன பாத்து விழுந்ததுலேந்து நா ஏமாந்துட்டு தான் டி இருக்கேன் ஏமாத்துக்காரி என திருப்பி கத்த அவள் சிரித்த படி அவனை அப்படியே விட்டு விடு கோட்டைக்குள் சென்றாள்...
மயூரனை இழுத்து கொண்டு வந்த சேவன் முகில் ஏமாத்துக்காரி என கத்தி விட்டு கீழே படுத்தவாறே சிரிப்பதை கண்டு " நம் சூரருக்கு மர கலண்டு விட்டதோ " என பார்க்க மயூரனோ " நான் பார்க்க வந்த யுத்தம் எங்கே டா " என சேவனை முறைத்தான்....
வேதபுரம்
விதுஷ் : ஏன் பட்டு இந்த பத்திரிக்கை நல்லா இருக்குள்ள
ஐலா : அண்ணா அது நல்லாவா இருக்கு
விதுஷ் : இதுக்கு என்ன குட்டிமா கொறச்சல்
கயல் : எல்லாமே கொறச்சல் தான் டா அண்ணா...கல்யாணப் பத்திரிக்கைல நாம பருந்த வக்கிரதுக்கு பருந்து வீட்டுக்கா போய் கூப்ட போறோம்
விதுஷ் : அப்போ கூப்ட மாட்டோமா
மோகினி : டேய் அவங்களுக்குலாம் பத்திரிக்கை தேவையில்ல... மனசார கூப்ட்டா போதும்...
நந்தினி : ஏன் அத்தமா... அத்தான் சொல்றமாரி அப்போ மனுஷங்களுக்கு பத்திரிக்கை குடுக்கனும்னா அதுல மனுஷங்க போட்டோ போட்டு குடுக்கனுமா
ராகவ் : குட்டிமா உனக்கு லவ் ஃபீவர் போய் கல்யாண ஃபீவர் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்... ஏன் உளறுர நீ... நாளைக்கு ரவிப்பா கிட்ட உனக்கு ப்ரெய்ன் செக்கப் செய்ய சொல்லனும் என சற்று தீவிரமாக கூறியவனை மண்டையிலே கொட்டினாள் அவள்
ராம் : டேய் சும்மா இரு டா என் தங்கச்சி எவ்ளோ அழகா ஐடியா குடுக்குறா
அதித்தி : அப்படியானால் சர்ப்பலோகத்திற்கு பாம்பை வைத்து பத்திரிக்கை அனுப்பலாமா என புன்னகையுடன் கேட்டவளை கண்டு அப்போதே தான் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு நந்தினி அசடு வலிய சிரித்தாள்...
காவியா : என் பேத்திக்கு கல்யாண கலை முகம் முழுக்க தெரியிதே என அவளை நெட்டி முறிக்க
ருமேஷ் : அட நீங்க வேற பாட்டி உங்க பேத்தி அவன் நினைப்புல லூசு மாறி உளறுனத சமாளிக்கிரதுக்காக முளிச்சிக்கிட்டு இருக்கா என அசால்ட்டாய் மாட்டி விட அஜய் அவன் தலையில் கொட்டி
அஜய் : டேய் எங்க தங்கச்சி அழகா சமாளிக்கிரப்போ தான் நீ மாட்டி விடுவியா போடா அப்டி... என துரத்தவும் சரியாக துருவும் கார்த்திக்கும் இன்னும் சில பத்திரிக்கைகளுடன் வந்தனர்
மாதவன் : சும்மா இருங்க டா புள்ளைய நையாண்டி பன்றதே வேலை.. போங்க போய் அவன நக்கலடிங்க... போங்க என அனைவரையும் விரட்டி விட்டு நாயகிகளை அவரவர் அறைக்கு அனுப்பினார்...
இவர்களை மாடியிலிருந்து நிறைவாய் பார்த்து கொண்டிருந்த வர்ஷியை அணைத்த படி அவளை இரசித்து கொண்டிருந்தான் சரண்
சரண் : ஷினிமா...
வர்ஷி :சொல்லு மாமா
சரண் : நம்ம பசங்க இப்போ தான் பொறந்த மாரி இருக்குல்ல...
வர்ஷி : ஹ்ம் ஆமா மாமா... அதுக்குள்ள அவங்களுக்கு கல்யாணமே வந்துடுச்சு....
சரண் : ஏதோ நேத்து தான் அஷ்வித் பொறந்த மாரி இருக்கு... ஹ்ம் எவ்ளோ வர்ஷம் போய்டுச்சு...
வர்ஷி : ஆனாலும் நம்ம குடும்பம் அப்டியே இருக்கு இல்லையா அது போதும் நமக்கு
சரண் : ஹ்ம்ம்ம் உன்னால தான் எனக்கு இப்போ இப்டி ஒரு குடும்பம் கெடச்சிருக்கு
வர்ஷி : ஷப்பா.... நுப்பது வர்ஷத்துல நுப்பதாயிரம் முறைக்கும் மேல கேட்டுட்டேன் டா யப்பா என அவன் புறம் திரும்பி அவன் கழுத்தில் கரங்களை போட்டு கொள்ள அவன் அவளை இடையோடு அணைத்து கொண்டான்...
சரண் : ஹ்ம்ம்ம் என்ன பன்றது உண்மைய எத்தன முறை சொன்னாலும் கசக்கமாட்டுதே
வர்ஷி : னாமா சாரு அப்டியே ஹரிச்சந்திரன் வம்சா வழி உண்மையே பேசிக்கிட்டு இருக்காரு..
சரண் : ஹிஹி ஆனா உண்மையா ஷினிமா... உன்ன மட்டும் நா காதலிக்காம அர்ஜுன் கிட்ட விட்டுட்டு சிங்கப்பூர்க்கே போய்ர்ந்தா என் குடும்பத்த நா பாத்துர்க்கவே மாட்டேன்...
வர்ஷி : அப்டி பத்தா எனக்கும் அப்டி தாங்க... நீங்க இங்க நம்ம குடும்பத்தோட இருந்ததால தான் என் அண்ணனுங்க என்ன பத்தின உண்மைய கண்டுப்புடிச்சாங்க
சரண் : ஹ்ம் மடம் என்ன விட்டு கொடுக்க மாட்டீங்களே என அவளின் மூக்கோடு மூக்குரச அழகாய் சிரித்த வர்ஷி
வர்ஷி : அப்டிலாம் இல்ல... இது தன்னடக்கம்
சரண் : ஆமா ஆமா ரொம்ப அடக்கம் தான்... வா ரூம்க்கு போவோம் என கூறி கொண்டே அவளை தூக்கி கொண்டான்...
வர்ஷி : லவ் யு மாமா என அவனின் நெற்றியோடு நெற்றி முட்ட அவளின் நெற்றியில் முத்தம் பதித்து சிரித்தான் அவன்
சரண் : லவ் யு டூ
மும்மரமாய் அமர்ந்து ஏதோ படித்து கொண்டிருந்த அர்ஜுனை பார்த்து கொண்டிருந்த நிருஅலுத்து போய் அவனிடமிருந்து அந்த புத்தகத்தை பிடுங்கினாள்
நிரு : டேய் நகு
அர்ஜுன் : ஏய் நா உன் புருஷன் டி மரியாதை எங்க போச்சாம்
நிரு : அதெல்லாம் நா பொருமையா இருந்தப்போவே கேற்றுக்கனும்... எவ்ளோ நேரமா ஒருத்தி கூப்டுற்றுக்கேன் கவனிக்கிறியா நீ
அர்ஜுன் : ஹிஹிஹி கூப்ட்டியா தெரியல பொண்டாட்டி
நிரு : ம்க்கும் சாருக்கு தான் என் மேல இருந்த லவ்வெல்லாம் கொறஞ்சு போச்சே அப்ரம் எப்டி நா கூப்ட்டா கேக்கும்...
அர்ஜுன் : ஹையொடா... என் அருமை பொண்டாட்டிக்கு இப்போ தான் என் நினைப்பெல்லாம் வருதோ என ஒரு கையை தலைக்கு பிடி கொடுத்தவாறு அவளை பார்த்து கேட்க அவளோ முகத்தை திருப்பி வைத்து கொண்டாள்
நிரு : எனக்கு யாரு நியாபகமும் வரல...
அர்ஜுன் : அப்டியா அப்போ என்ன பாக்க மாட்ட
நிரு : மாட்டேன்...
அர்ஜுன் : ஹ்ம்ம் என்ன கண்டுக்க மாட்ட
நிரு : மாட்டேன்
அர்ஜுன் : சரி அப்போ நா வேற பொண்ண பாத்துத்துறேன் போ.. எங்க டா அந்த மற்றிமோனி என திரும்பியவன் ஃபோனோடு மீண்டும் இப்புறம் திரும்பவும் அவனுக்கு மிக அருகில் க்லோசப்பில் அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தாள் நிரு
நிரு : அப்போ சாரு அடுத்த கல்யாணத்துக்கு ரெடியா தான் இருக்கீங்க என இரு கைகயையும் ஏற்றி விட்டு கொண்டு அவன் சட்டையை பிடிக்க
அர்ஜுன் : ஏய் நிரா மா.. உனக்கே தெரியும் உன் புருஷன் ஒரு அப்ரானி
நிரு : அப்ரம் என்னமோ மற்றிமோனின்னு சொன்ன மாரி கேட்டுச்சு..
அர்ஜுன் : அது மற்றிமோனி இல்லடா தங்கம்... அது அது மற்றிமோனி சைட்டு ஆன்லைன் ஷாப்பிங் ஓப்பன் பன்னீர்க்காங்க... அதத்தான் கேட்ன் என வாயிற்கு வந்ததை உளற
நிரு : ஓஹோ அப்டியா ... அப்போ என்ன ஆர்டர் பன்ன போறீங்க
அர்ஜுன் : என் அருமை பொண்டாட்டிக்கு சாக்லேட்டு தான்...
நிரு : சாக்லேட்டா எங்க சாக்லேட் என சாக்லேட் என்ற பெயரை கேட்டதும் குழந்தை போல் அவள் மொத்த கோவத்தையும் மறந்திருக்க தன் பக்கெட்டிலிருந்து ஒரு டைரிமில்கை எடுத்து நீட்டினான் அர்ஜுன்
அர்ஜுன் ம.வ : ஹப்பாடா எஎமர்ஜென்சிக்கு எடுத்து வச்சது நல்லவேளை
நிரு : ஐ ஐ ஐ சாக்கி சாக்கி என வேகவேகமாய் பிரித்தவள் அதை கடித்து ருசித்தாள்
அர்ஜுன் : என்ன செல்லமே ஓக்கே தான
நிரு : ஹைலோ செம்மையா இருக்கு மாமா சூப்பர் லவ் யு லவ் யு என கன்னத்தில் முத்தம் வைக்க அந்த கப்பில் அவளின் சாக்லேட்டில் பாதியை கடித்த அர்ஜுன் அவள் சுதாரிக்கும் முன் எழுந்து கொண்டு
அர்ஜுன் : அட ஆமா தங்கமே செம்மையா இருக்கு என்றதும் அவன் கடித்ததை கண்டு
நிரு : டேய் என் சாக்லேட்டு என ஒரு தலையைணையை தூக்கி எறிய அவளின் சாக்லேட்டை எக்ற்றாவாக ஒரு கடி கடித்த அர்ஜுன்அவளின் கன்னத்தை நன்கு கிள்ளி விட்டு அவள் தூக்கி எறிந்த தலையைணையை அலேக்காய் கட்ச் பிடித்து கொண்டு வெளியே ஓடியிருந்தான்...
இருள் சூழ்ந்த அந்த அறையில் திடீரென பல்பெரிய குளிருக்கு இழுத்து போர்த்தி கொண்டு தூங்கி கொண்டிருந்த ரித்விக்கின் அருகில் மெல்லமாய் சென்ற மது அவன் காதருகில் சென்று " மாம்ஸ் " என மெதுவாய் அழைக்க அவன் ம்ம்ம் என ஒரு பதில் மட்டும் கொடுக்க " மாமாஆஆஆ " என அவள் கத்தியதும் ரித்விக் பதறி போய் எழுந்தமர்ந்தான்...
ரித்விக் : அடியேய் என்ன டி ஆச்சு சும்மா கூப்ட்டா எந்திரிக்க மாட்டனா ஏன் இப்டி எழுப்புர...
மது : ஹிஹி நம்ம பசங்க ரொம்ப வளந்துட்டாங்கல்ல மாமா என அவன் முறைப்பதை காணாமல் அவனை அணைத்த படி அவனருகில் படுத்து கொண்டே கேட்டாள்
ரித்விக் : இதக்கேக்க தான் இந்த கத்து கத்துனியா
மது : ம்ச் சொல்லு டா மாமா... பாரு நேத்து தான் நானும் நீயும் பாத்துக்குட்ட மாரி இருக்கு
ரித்விக் : பொய் சொல்லாத டி... நா உன்ன முதல் முதல்ல பாக்கும் போது உனக்கு மூணு வயசு தான்... என்ன உனக்கு நியாபகமே இருக்காது
மது : உன்னல்லாம் வச்சிக்கிட்டு... போடா
ரித்விக் : ஏய் எங்க ஓடுர நீ... நா பாட்டுக்கு செவனேண்டு தூங்கீட்டு இருந்தேன்... புடிச்சு கத்தி எழுப்பி விட்டுட்டு நீ தூங்குரியா
மது : ஆமா நா எவ்ளோ எமோஷ்னலா பேசுறேன் நீ என்னன்னா இப்போ தான் நியாயம் பேசிக்கிட்டு இருக்க
ரித்விக் : மணி பன்னெண்டாக போகுது டி.. எந்த பொண்டாட்டியாவது புருஷன் கிட்ட அதுவும் தூங்குர புருஷன எழுப்பி அவன் கிட்ட இந்த நேரத்துல எமோஷ்னலா பேசனும்னு நெனப்பாளா
மது : எவ நினைக்கலன்னா எனக்கென்ன நா நெனப்பேன்...
ரித்விக் : ஆண்டவா... அன்னைக்கே தாத்தாஸும் அம்மாஸும் அவங்க பாக்குர பொண்ணத் தான் கல்யாணம் பன்னிக்கனும்னு சொன்னப்போ நா ஒத்துக்குற்றுந்துருக்கனும்... உன்ன கல்யாணம் பன்னிக்கிட்டேன் பாரு...
மது : பாஸ் பாஸ் அதெல்லாம் அப்போவே யோசிச்சிற்க்கனும் நுப்பது வர்ஷம் களிச்செல்லாம் யோசிச்சா செல்லாது ... நீ என் கூட தான் குப்ப கொட்டி ஆகனும் ஹ்ம் என முகத்தை திருப்பி கொள்ள
ரித்விக் : ஹையோ இப்டி மனுஷன தூங்க விடாம அவளே வந்து பேசீட்டு அவளே கோச்சிக்கிறாளே.... இறைவா
மது : போ போப் உன் இறைவனையே கட்டிக்கிட்டு அழு... நா போறேன் என எழப் போவளை பிடித்திழுத்து தன் மீது போட்டு கொண்டவன் அவள் எழாதவாறு கரங்களால் கடிவாளமிட்டான்...
ரித்விக் : ரஞ்சு ரஞ்சுமா ... மாமாவ பாரேன்...
மது : உனக்குத் தான் நா போரடிச்சு போய்ட்டேன்ல போ.. போய் வேற எவளாவது ஒருத்திய கட்டிக்கோ
ரித்விக் : ம்க்கும் அம்பது வயசுல நா இரெண்டாவது கல்யாணம் வேற பன்னனுமா... உன்னையே சமாளிக்க முடியலையாம்...
மது : அப்போ இளமையா இருந்தா கல்யாணம் பன்னீர்ப்பியோ என முறைக்க
ரித்விக் : இங்க இளமைக்கு என்ன கொறச்சல்.. அத விடுடி. என்ன பாரேன்
மது : என்ன
ரித்விக் : நீ என் அழகு மகா டி
மது : ஹே அவ யாரு என அவன் சட்டையை பிடிக்க
ரித்விக் : ஹே ச்ச டயலாக சொல்ல உடு.. என் மகாலட்சுமின்னு சொல்ல வந்தேன்... நீ என் வாழ்கைல வந்த தேவதை பட்டுமா... பாரு நமக்கு கல்யாணம் ஆகி நுப்பது வர்ஷமாச்சு... ஆனா அப்டியா இருக்கு இல்லையே... ஆனா இரெண்டு நாள்ள நம்ம பையனுக்கு கல்யாணம்... கண்ண மூடி கண்ணத் திறக்குரதுக்குள்ள காலம் ஓடீடுச்சு... ஆனா இந்த வாழ்க்க முழுக்க நீ என் கூட இதே மாரி கைய புடிச்சிட்டு சந்தோஷமா இருக்கும் போது எனக்கு எது பெருசா தெரியும் சொல்லு
மது : பேசி பேசியே மயக்கீடு திருட்டுப்பயளே என தன் சிவந்த முகத்தை மறைக்க போராடியவளின் அழகில் சொக்கிப் போப் ரித்விக் அவளின் ரோஜா இதழை சிறை பிடிக்க சில நொடிகள் நீடித்த அந்த இதழ் அணைப்பினை கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் கலைத்தது... அவளிடமிருந்து பிரிந்த ரித்விக்
ரித்விக் : ஆமா இந்த நட்ட நடு ராத்திரில ஏன் நீ என்ன எழுப்பி என முடிப்பதற்குள்ளாக மதுவின் செவ்விதழ் அவன் கன்னத்தில் முத்தம் பதிப்பதை உணர்ந்து அவன் பேசுவதை நிறுத்தினான்...
மது : ஹப்பி வெட்டிங் அனிவெர்செரி டா புருஷா என அழகாய் புன்னகைத்து எழுந்து நின்றாள்...
ரித்விக் நம்ப முடியாமல் முளிக்க அவர்களின் கதவை திறந்து கொண்டு " ஹப்பி அனிவெர்செரி " என கத்தினாள் கயல்
அவளுக்கு பின் பெரியவர்களோடு நம் முதலணி நாயகர்களும் இரண்டாமணி நாயகிகளும் நின்றிருக்க தடதடவென ஓடி வரும் சத்தத்துடன் பெருமூச்சறித்து கொண்டு அந்த அறைக்கு வந்த இரண்டாமணி நாயகன்களும் ஒரு சேர " ஹப்பி அனிவெர்செரி " என கத்தினர்
ரித்விக் அதே அதிர்ச்சியில் சிரிக்க அவனின் நண்பன்கள் அவனை பெரிய அணைப்பினால் தாக்கி அந்த கட்டிலிலே தொப்பென விழ நம் முதலணி நாயகன்கள் " மச்சான் உனக்கு கல்யாணமாகி நுப்பத்தோரு வர்ஷம் ஆச்சு டா " என நக்கல் தோனியில் கத்தினர்
வனித்தா : டேய் பசங்களா எந்திரிங்க டா... உங்களுக்கே புள்ளைங்க பொறந்துட்டாங்க... இன்னும் நீங்க சின்ன புள்ளைங்களா அவங்க சின்ன புள்ளைங்களான்னு தெரியல...
வளவன் : டேய் வாங்க டா கேக் வெட்டலாம்... சீக்கிரம் சீக்கிரம் என துரிதப்படுத்தி அனைவருமாய் ஓ வென கத்த ரித்விக்கும் மதுவும் கேக்கை வெட்டி ஒருவர் மற்றவருக்கு ஊட்டி விட்ட பிறகு இளையவர்கள் அனைவருக்கும் ஊட்டி விட இளையவர்கள் அங்கு கேக் மழை பொழிய வைக்காத குறையாக லூட்டி அடித்து அரட்டை அடித்தனர்...
பெரியவர்கள் ஆறுவரும் இவர்கள் இப்டித்தானே என சிரித்த படி அவரவர் அறைக்கு சென்று விட இளவரசிகளும் யட்சினிகளும் பல நாள் களித்து மனதார சிரித்து நன்கு விளையாடினர்....
நாயகிகள் ஒரு பக்கம் நாயகன்கள் ஒரு பக்கம் பேசியவாறு இருக்க பால்கெனியில் நின்ற படி ஏதோ உரையாடி கொண்டிருந்த இரண்டாமணி நாயகன்கள் யாரோ ஒருவரின் செருமலில் சட்டென திரும்பி பார்க்க அவர்களின் முன் கைகளை கட்டிய படி நம் முதலணி நாயகன்கள் நின்றிருந்தனர்...
அர்ஜுன் : எங்க போய்ட்டு வரீங்க எல்லாரும் என புருவத்தை உயர்த்தி கேட்க உடனே
ஆதவ் : ஃபார்மஸிக்கு
மித்ரன் : பார்க்குக்கு
ஆதியன்த் : லைப்ரரிக்கு
மிதுன் : பீட்சுக்கு
அருண் : துணி கடைக்கு
ராம் : ஸ்டேடியம்க்கு
வருண் : கேக்கு கடைக்கு
சித்தார்த் : அக்வரியம்க்கு
அஜய் : தியேட்டேருக்கு
அஷ்வித் : ஆஃபீசுக்கு
ராகவ் : வண்டலூர் ஜூக்கு
ருத்ராக்ஷ் : எக்ஸிபிஷனுக்கு என ஆளுக்கு ஒவ்வொன்றை ஒரே நேரத்தில் கூறி ஒருவரை ஒருவர் கண்டு முளிக்க இறுதியாய் ருத்ராக்ஷ் கூறிய பதில் சத்தீஷை தவிர்த்து மற்ற நாயகன்கள் அனைவரையும் வெடித்து சிரிக்க வைக்க ருத்ராக்ஷ் பேந்தபேந்த முளித்தான்....
நம் நாயகன்களுக்கு பல வருடம் முன்பு இவர்கள் மாதவன் இரமனன் மற்றும் முரளியிடம் மாட்டி கொண்ட போது இவ்வாறு நாழு பேர் நாழு விதமாய் கூறிய பின் சத்தீஷ் மட்டும் நாழு விதத்திலும் ஒன்றாமல் எக்ஸிபிஷன் என உளறிய நினைவு தான் வந்து போனது
முகில் : சோ இந்த எந்த இடத்துக்கும் போகல... துரைங்க உண்மையாவே எங்க போனீங்க
அஷ்வித் : அது வந்து மாமா நாங்க
கார்த்திக் : மாம்ஸ் துருவ் உங்கள்ட்ட சொல்லலையா இன்னும் என அவர்களருகிலே நின்ற துருவை பாக்க்க துருவ் முளித்தான்...
துருவ் : டேய் நா ஒன்னும் சொல்லல டா என கத்தவும் இரண்டாமணி நாயகன்கள் கார்த்திக்கை முறைக்க அவனோ பீதியுடன் முளித்தான்...
ரவி : சரி சரி முளிக்காதீங்க போங்க போங்க போய் தூங்குங்க...
இரண்டாமணி நாயகன்கள் : ஓக்கே பாஸ் என அவர்கள் தம்மை நம்பிவிட்டதாய் எண்ணி சந்தோஷத்தில் ஸல்யூட்டடித்தனர்...
வீர் : இனிமே மிஷனுக்கு போகும் போது வாட்ச் கட்டீட்டு போங்க டா... ஒரு மணிக்கு போய் மூணு மணிக்குள்ள இங்க இருக்கனும் குட் நைட் என கூறியதும் முதலணி நாயகன்கள் அங்கிருந்து விஷமப் புன்னகையுடன் நகர அதற்கும் " ஓக்கே பாஸ் " என தலையாட்டியவர்கள் அவன் சொன்னது புரிந்ததும் பேயறைந்ததை போல் நிமிர்ந்து பார்த்து முளித்தனர்....
அவர்களை ஒரு சேர திரும்பி பார்த்த நாயகன்கள் " நாங்க உங்களுக்கு அப்பா டா " என ஸ்டைலாய் கண்ணடித்து விட்டுச் செல்ல தங்கள் குட்டு வெளிப்பட்டாலும் அசடு வழிய தங்களின் தந்தைகளை ஏமாற்ற நினைத்தது முடியாத காரியம் தான் என சிரித்து கொண்டனர் இப்போது தமிழகத்தில் நடக்கும் பல அநியாயங்களுக்கு காரணமானவர்களை கடத்தி கதையை முடித்து வழியை நேர்படுத்த அரசாங்கமே இரகசியமாய் அமைத்த பிரபலமான இளைஞர் குழு
நிறைவுபகுதி தொடரும்...
ஹாய் இதயங்களே... எப்டியோ ஒரு வழியா இந்த பார்ட்ட முடிச்சிட்டேன்... சப்பப்பா இவங்களோட பசங்க சீன் வேற இருக்கு ஹிஹிஹிஹி புடிச்சா படிங்க. யாரையும் கம்ப்பல் பன்னல.... ஜாலியா என்ஜாய் பன்னுங்க... யூடி நல்லா இல்லன்னா மன்னிச்சிடுங்க... எனக்கு இதான் எழுத தெரியும்... நாளைக்கு தேடல் யூடி வரும்.. அடுத்த நிறைவுபகுதி தான் லாஸ்ட்டு... அது சீக்கிரமே வந்துடும் ஹிஹிஹி நினைக்கிறேன்... ஓக்கே இதயங்களே குட் நைட் டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro