மாயம் (நிறைவுபகுதி - 1)
மூன்று வாரங்கள் களித்து
அஷ்வித் அந்த படிவத்தில் தன் கையொப்பத்தை இட நந்தினயின் பெயர் அவனின் அருகில் பதிக்கப்பட்டு அவள் முழு மனதுடன் கையெழுத்திட்டதும் அஷ்வித்திற்கு உரியவளானால் நம் சங்கநந்தினி
ஆனந்த கூச்சல்களுடன் கண்ணீரும் அலைகளிக்க அந்த இடமே நம் நாயகர்களின் குடும்பத்தால் ஒரு சில நிமிடங்களுக்கு அவர்களின் வீடாகவே மாறி இருந்தது...
நந்தினி வெட்கத்தால் அஷ்வித்தின் நெஞ்சில் தன் முகத்தை புதைத்து கொள்ள குழந்தையாய் கையில் ஏந்தியவள் இன்று ஒருவனிடம் கை பிடித்து தருமளவு வளர்ந்து விட்டைதை நம் நாயகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை
காலச்சக்கரம் அவர்களை வெகுவாய் வியக்க வைத்தது... அதே நேரம் இந்நொடி அவர்களை பூரிப்படைய வைக்கவும் மறக்கவில்லை... கெனடாவிலிருந்த பெரியவர்கள் ஆறுவரும் வேதபுரம் திரும்பியிருக்க அவர்கள் முதல் நாள் கோவன்களை கண்டு கதறிய கதறல் இன்னும் அனைவரின் மனதிலும் ஒலித்தது...
வனித்தா மற்றும் மாதவன் அவர்களின் மகன்களை கண்டு மனம் நிறைந்து போயிருக்க வனித்தா அழுது அழுது அவரின் மகன்களின் மடியிலே தான் அன்றைய நாளை கிடத்தினார்...
இளவரசிகள் அச்சூழலுடன் அனைவரையும் ஏற்று கொள்ள சற்றே தயங்கினாலும் நம் இரண்டாமணி நாயகிகளின் நச்சரிப்பினால் அவர்கள் விரைவிலே அனைவரையும் ஏற்று கொண்டு சகஜமாகினர்...
யட்சினிகளை எந்த பாகுபாடும் இன்றி திவ்யாவின் சொல் படியே லீலாவதியின் நம்பிக்கையை பாழாக்காமல் பெற்ற மகளை போல் பார்த்து கொண்டனர்...
கல்யாண வைபவங்கள் முடிந்து நம் முதலாம் அணி நாயகர்கள் மன நிறைவுடன் ஒன்றாய் கூடி அமர இரண்டாமணி நாயகர்கள் ஒரு பக்கம் அஷ்வித்தையும் மறு பக்கம் நந்தினியையும் கலாய்த்து கொண்டிருந்தனர்...
அந்த நொடி அவர்கள் அனைவரும் தேடியது ரக்ஷவை தான்... ஆம் ரக்ஷவ் வேதபுரத்திலிருந்து விடைபெற்று என்றோ அவனின் உரைவிடம் நோக்கி தன் பயணத்தை மீண்டும் தொடங்கியிருந்தான்...
அன்று
அந்த காலை வேளையதில் என்றும் போல் சிம்மயாளிகளிடையே கண்ணயர்ந்து விட்டு தனக்கான மெத்தையில் கண்களை திறந்து எழுந்தமர்ந்தான் ரக்ஷவ்... பனி பொழியும் அந்த இரம்மியமான பொழுதில் கோட்டை மைதானத்தில் யாளிகளுடன் அமர்ந்து முதலணி நாயகர்கன்கள் அனைவரும் காலை உடற்பயிற்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தனர்...
அவர்களை கண்டு தனிச்சையாய் ரக்ஷவின் முகத்தில் ஒரு புன்னகை மலர குளியலறை சென்று தன் காலை கடன்களை முடித்து கொண்டு தன் பயிற்சி உடையை அணிந்து கொண்டு வாளை சுழற்றியவாறு வெளியே ஓடினான்...
கோட்டைக்குள் அமர்ந்திருந்த நாயகிகள் அவனை கண்டு புன்னகைக்க " குட் மார்னிங் மம்மீஸ் " என கத்தி விட்டு வெளியே ஓடினான்...
சஹாத்திய சூரர்களும் கோவன்களும் ரக்ஷவின் சத்தத்தில் அவன் புறம் திரும்பி புன்னகைக்க உற்சாகத்துடன் காலை உடற்பயிற்சிகளை தொடங்கிய ரக்ஷவ் உடற்பயிற்சி முடித்ததும் இந்திரனுடன் பயிற்சி எடுக்க தொடங்கினான்...
சேவன் மற்றும் மயூரன் அவர்களை உற்சாகப் படுத்தி கொண்டிருக்க மெல்ல மெல்ல இரண்டாமணி நாயகன்களும் வெளிப்பட தொடங்கினர்...
போரை முடித்து இன்றோடு நான்கு நட்கள் ஓடியிருந்தது... ஷேஷ்வமலை குழந்தையர்கள் அனைவரையும் மீட்டு அவரவர் குடும்பத்திடம் நல்முறையில் லீலாவதியின் உதவியுடன் ஒப்படைத்திருந்தனர்...
கோவன்கள் பல வருடம் களித்து சேவனை கண்டதிலும் சேவன் நீலியின் காதல் வலையில் சிக்கியதையும் அறிந்து அதீத மகிழ்ச்சி கொண்டு நீலியுடன் பிறை மற்றும் மயூரனையும் அவர்களின் குடும்பத்திற்கு வரவேற்றனர்..
தர்மன் ஐயா தான் எண்ணியதை போல் அனைத்தும் ஒரு நல் முடிவுக்கு வந்து விட்டதையும் கோவன்கள் உயிர்த்தெழுந்து விட்டதையும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்...
ஷேஷ்வ குடும்பத்தினர் அனைவரும் கோவன்களை கண்டதில் அதீத மகிழ்ச்சியடைய பூலோகத்தை மட்டுமன்றி மற்ற மூன்று ஞாலங்களிலும் கோவன்களின் உயிர்ப்பு மீண்டும் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் நிம்மதியடையச் செய்தது...
யட்சினி சர்ப்ப வம்சத்தின் நஞ்சையும் முழுதாய் ஆட்கொண்டு புவிவின் அடி மட்டத்தில் அடைத்து அதை எவரும் கைப்பற்றாத படி கடிவாளமிட்டு அன்றே க்ரிஷ் எரித்து சாம்பலாக்கினான்...
தற்போது உலகிலே யட்சினி வம்சத்து நஞ்சை கொண்ட மூவரெனில் அது யட்சினிகள் மாத்திரம் தான்..
முதலில் சஹாத்திய சூரர்களிடம் வாள் பயிற்சி எடுத்து அவர்களை முறியடிக்கத் தொடங்கிய ரக்ஷவ் இப்போது கோவன்களுடனும் வாள் பயிற்சி எடுத்து தன்னைத் தானே மெருகேற்ற தொடங்கினான்...
கோவன்கள் அவனுடன் பயிற்சி எடுக்க வேண்டுமென்றால் ஆர்வமாய் முன் வந்தனர்... இவர்களே சஹாத்திய சூரர்களையும் முதலணி நாயகிகளையும் மெச்சிகொள்வர்... அந்தளவுவிற்கு ஒரு குறுகிய காலத்தில் ரக்ஷவிற்கு அனைத்தையும் கற்று கொடுத்திருக்கின்றனர் அல்லவா
தினம் ரக்ஷவ் செய்யும் மூச்சு பயிற்சி அவனது கவனித்தல் திறனை அதீத வளர்ச்சியை அடைய செய்திருக்க தன்னை எதிர்போர் பயன்படுத்தும் வியூகம் முதற்கொண்டு ஒவ்வொரு நுனுக்கத்தையும் கச்சிதமாய் கண்டறிந்து நம் நாயகன்களை கூத்தாட வைத்தான் அவன்...
இப்போது ரக்ஷவ் நீர் அதி சக்தியை எதிர்த்து போராடி கொண்டிருக்க வாள் சுற்றலில் தன் நீரின் சக்தியையும் இந்திரன் உபயோகித்து கொண்டிருந்தான்... அது தான் ரக்ஷவை இன்னமும் தூண்டி விட்டு கொண்டே இருந்தது...
இந்த பஞ்ச பூதங்களையும் ரக்ஷவ் எதிர்க்கவும் தற்காத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டுமென போர் தொடுக்கும் இரு நாள் முன்பு ஆரம்பித்த பயிற்சி தான் இது...
அந்த இரு நாட்களில் சரணின் மூலமாக நில சக்தியை எதிர்க்வும் அஷ்வன்த் மூலமாக ஆகாய சக்தியை எதிர்க்கவும் பயிற்சி எடுத்தான் ரக்ஷவ்...
போர் முடித்த மறு நாள் அனைவரும் ஓய்விலிருக்க இரண்டாம் நாளில் அனைவரும் தங்களின் பயிற்சியை தொடர்ந்தனர்... அன்று ரக்ஷவ் சத்தீஷுடன் போரிட்டு காற்று சக்தியை எதிர்த்து போரிட்டான்... நிலம் ஆகாயம் போல் காற்று அவ்வளவு எளிதாய் தகர்க்க கூடியதாய் அவனுக்கு தோன்றவில்லை.. ஆயினும் சத்தீஷின் உதவியுடன் சத்தீஷின் ஒவ்வொரு அசைவையும் ஒரு நாள் முழுக்க கவனித்து பயிற்சி எடுத்த ரக்ஷவ் நேற்றைய விடியலில் சத்தீஷையும் காற் சக்தியையும் வென்றான்...
அடுத்த கட்ட பயிற்சியாக இந்திரன் மற்றும் நீர் சக்தியை எதிர்க்கும் வாய்ப்பு முன் வர அதற்கும் அசராமல் முன் வந்த ரக்ஷவ் சத்தீஷுடன் போரிட்ட அனுபவத்தினால் நிச்சயம் காற்றுக்கு குறைந்தது நீரில்லை என உணர்ந்து எதிர்ப்பதை விடுத்து ஆரம்பத்தில் தடுப்பதிலே தன் கவனத்தை செலுத்தினான்...
இந்திரன் ரக்ஷவின் பகுத்றிவில் வியந்தானில் நம் நாயகிகள் குதித்தாட்டம் போட்டனர்.. பின்ன அவர்களின் இளைய மகன் கொடி கட்டி பறக்கும் கணவன்களையே வென்றால் அவர்களையன்றி வேறு எவர் அதிகமாய் மகிழப் போவது...
தன் எண்ணப்படியே ரக்ஷவ் வெற்றி கரமாய் நேற்று இரவிற்கு முன் இந்திரனின் சக்தியையும் அத்தோடு அவனது அசுர வாள் தாக்குதலையும் தற்காத்து கொள்ள கச்சிதமாய் கற்று கொண்டு அப்போதிலிருந்து எதிர்க்கத் தொடங்கியிருந்தான்...
இந்திரன் அவனது வலது கரத்தால் ரக்ஷவ் முன் ஓங்கி தன் இடது கரத்தை சுழற்றி நீரை அதி வேகமாய் அவன் புறம் செலுத்த தன் இடது கரத்தால் குறுவாளை உருவி இந்திரனின் வாளை தடுத்த ரக்ஷவ் ஒருமுறை சுழன்று அவன் வாளால் நீரை எதிர்க்க வாளின் அதிர்வினால் இந்திரனின் நீர் பின் விழ இவர்களின் யுத்தத்தினால் ஆர்வமாய் இருந்த யாளிகள் மிது தான் பொளிச்சென போய் விழுந்தது அந்த நீர்
அப்போது கூட " பரவாயில்ல இன்னைக்கு குளிக்கிரது மிச்சம் " என்பதை போல் யுத்தத்திலிருந்து கண்ணெடுக்காமல் அமர்ந்திருந்தது யாளிகள்
இந்திரன் அவன் வாளை இழுக்கவும் தன் வாளை பிரட்டி இந்திரனின் வாளை தூக்கியடித்தான் ரக்ஷவ்
அனைவரும் மகிழ்ச்சியில் ஹேய் என கத்த " சூப்பர் ஐயா.. நா கத்துக்குட்டேன் " என ஓடிச் சேன்று இந்திரனை அணைத்து கொண்ட ரக்ஷவை தானும் சிரிப்புடன் அணைத்து கொண்டான் இந்திரன்...
ஐலா : டேய் தம்பி நீ சாதிச்சிட்ட டா... எனக்கு தெரியும் நீ சாதிப்பன்னு
ரக்ஷவ் : ஹிஹி தன்க்ஸுக்கா...
நம் முதலணி நாயகன்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்ள இப்போது அனைவரும் அதே புன்னகையுடன் ரக்ஷவை நோக்கினர்...
மித்ரன் : டேய் தம்பி... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டு.. நீ இப்போ க்ரிஷ் மாமாவ எதிர்க்கனும் ... நீ ஜெய்ப்ப டா எங்களுக்கு நம்பிக்கை இருக்கு என அவனுக்கும் நம்பிக்கையூட்டி கட்டை விரலை உயர்த்தி ரக்ஷவின் கரத்துடன் இவன் தனது கரத்தை மோதிக் கொள்ள ரக்ஷவ் திரும்பி அவனை நோக்கி கொண்டிருந்த நாயகன்களை ஒரு முறை நோக்கி விட்டு இறுதியாய் நின்ற க்ரிஷ்ஷையும் காண க்ரிஷின் கண்கள் அழகாய் ஜொளித்து சிரிக்க ரக்ஷவின் கரத்திலிருந்த ப்ரேஸ்லெட்டில் ஆடி கொண்டிருந்த அந்த குட்டி வாள் அழகாய் மின்னியது...
மற்ற நான்கு பஞ்ச பூதத்தையும் விடுத்து அதிக வீரியம் கொண்டது தீயாயிற்றே.. முதலில் தன் கரத்தின் பிடியில் இறுகியிருந்த தன் நாமம் பதிக்கப்பட்ட வாளை நோக்கிய ரக்ஷவ் அவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனை எதிர் நோக்கும் முதலணி நாயகன்களை கண்டு விட்டு புது நம்பிக்கை பிறக்க ஒரு புன்னகையுடன் எழுந்து வந்தான்...
ரக்ஷவ் : ஐயா நா ரெடி.. நீங்க என புருவமுயர்த்தி க்ரிஷ்ஷை பார்க்க
க்ரிஷ் : சார் ரெடின்னா நானும் ரெடி தான் ரக்ஷவா என புன்னகையுடன் முன்னேறினான்...
ரக்ஷவ் முன்னேற்பாடுகளோடே இருந்தாலும் தீயோடு தன் வாள் தொடர்ந்து நிற்குமா என்ற சந்தேகம் அவனுள் உதிக்க.. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை போல் மின்னியது அந்த மந்திர வாள்...
அவ்வாள் ரக்ஷவை தன்னால் தேர்ந்தெடுத்தது... ரக்ஷவின் பெயரை தன் மீது அச்சிட்டிருக்கும் அது அவனை தாக்க வரும் எதையும் எதிர்க்கும் என்பதை அவனையன்றி அனைவரும் அறிந்திருந்தனர்...
அதே போல் க்ரிஷ் தீயால் மிளிரும் அவன் வாளை ரக்ஷவை நோக்கி வீசி ரக்ஷவை நோக்கி தீயை செலுத்த அது தன்னை தாக்க போவதில்லை என அறிந்திருந்ததால் தன் வாளை கேடையமாய் கொண்டு அதை தடுக்க ரக்ஷவ் முயற்சிக்க அவனின் செயல் பாதி முழுமையடைந்தது...
க்ரிஷ்ஷின் தீயை எதிர்க்க முடியவில்லை என்றாலும் அவனை தீண்டுவதிலிருந்து அவனால் தடுக்க முடிந்தது... இவ்வாறே அன்று மாலை வரை தடுக்க நன்கு பயிற்சி எடுத்து கொண்ட ரக்ஷவ் அனைவரையும் கர்வமாக்குவதை போல் மறுநாள் விடியலில் க்ரிஷ்ஷின் தாக்குதலை எதிர்க்கவும் தொடங்கினான்...
அதை காண காண க்ரிஷ்ஷின் கண்கள் மகிழ்ச்சியுடன் மின்னின... ரக்ஷவ் இந்தளவிற்கு விவேகத்துடன் கோவன்களின் சக்தியை எதிர்க்கவும் தடுக்கவும் கற்றுக் கொள்வான் என எண்ணாத சஹாத்திய சூரர்களும் அவனை எண்ணி கர்வம் கொண்டனர்...
க்ரிஷ்ஷின் நினைவலைகளில் சில பல வருடங்கள் முன்பு ரக்ஷவின் வயதை மதிக்க தக்க ஒரு சிறுவன் அவனுடன் நேருக்கு நேராய் நின்று பயிற்சி எடுத்தது நினைவில் வந்து போக தான் பயிற்று வித்த அவனை எண்ணி க்ரிஷ்ஷின் முகத்திலும் ஒரு புன்னகை
ரக்ஷவை நேரில் காணுகையில் நம் கோவன்கள் மூவரின் நினைவிலும் அச்சிறுவனின் பால் முகமே முதலில் வந்து நினைவலைகளில் மோதிச் சென்றன... போர்களத்திலும் பயிற்சியிலும் இருக்கும் ரக்ஷவின் நுனுக்கமும் பகுத்தறிவும் அவர்ளுக்கு வெகுவாய் அவனைத் தான் நினைவூட்டியது
இவ்வாறு ஒரு கட்டத்தில் க்ரிஷ் தன் தோல்வியை ஏற்று கொண்டு முன் வர இரண்டாமணி நாயகன்கள் ரக்ஷவை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர்...
பின் மதியம் அனைவரும் நம் நாயகிகள் செய்த விருந்து மழையில் நனைய ப்ரியா ரக்ஷவிற்கு ஊட்டி கொண்டிருந்தாள்...
அந்த உணவை முடித்து விட்டு சிம்மயாளிகளுடன் விளையாட ஓடிய ரக்ஷவை பார்த்து கொண்டிருந்த நம் நாயகன்களின் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்தது...
அஷ்வித் : என்னாச்சுப்பா.. ஏன் எல்லாரும் ஏதோ கோட்டை இடிஞ்ச மாரி இருக்கீங்க எதாவதுபிரச்சனை
சரண் : பிரச்சனைலாம் இல்ல டா.. இது வேற...
துருவ் : என்னாச்சு சித்தப்பா... தெளிவா சொல்லுங்களேன்...
தீரா : நான் சொல்லட்டுமா
மதி : எங்கேந்து டி இப்டி திடீர் திடீர்னு குதிக்கிர... கதவ திறந்துட்டு வர பழக்கமே இல்லையா உனக்கு என நெஞ்சில் கை வைத்து கொண்டு கண்களை விரித்து கேட்க
தீரா : ம்க்கும் கதவ தட்டீட்டு நீங்க திறக்குர வர உக்காந்துருக்குரதுக்கு நானே உள்ள வந்துடுவேன் போ டி
ஒவீ : தீருமா என்ன பிரச்சனை நீ ஏன் தீடீர்னு இப்போ வந்துருக்க அத சொல்லு
தீரா : அதுவா... இரெண்டுத்துக்கும் ஒரே அன்சர் தான் ஒவீமா... நா ரக்ஷவ கூட்டீட்டு போக வந்துர்க்கேன்...
விதுஷ் : கூட்டீட்டு போக வந்துர்க்கியா... எங்க கூட்டீட்டு போக போற... அவன் இங்கையே இருக்கட்டும்..
தீரா : மறுமை பூமிக்கு தான்... டேய் அவன் அவனோட வீட்டுக்கு போக வேண்டாமா... அவனுக்காக நிறைய பேரு காத்துட்டு இருக்காங்க...
ஆதவ் : மறுமை பூமியா... நீ தளபதியா இருக்கியே அந்த ராஜ்ஜியத்துக்கா...
தீரா : ம்ம்ம் ஆமா ஆமா
ஐலா : நாங்க எப்டி அவன பாக்க முடியும் தீருமா.. நாங்க ரக்ஷவ ரொம்ப மிஸ் பன்னுவோம்..
தீரா : ஃபோன் பன்னி பேசுங்க... நானும் அங்க தானே இருப்பேன்...
அருண் : நாங்க இருக்க மாட்டோம்ல...
தீரா : அதுக்குன்னு உங்க எல்லாரையும் தூக்கீட்டு போய் அங்க போட முடியாது டா.. ஆல்ரெடி அங்க சீட் ஃபுல்லாய்டுச்சு போ
மித்ரன் : நீ என்ன பாப்பு திடுதிபுன்னு வந்து ரக்ஷவ கூட்டீட்டு போனும்னு கேக்குர நாங்க எப்டி ஒத்துக்க முயும்...
தீரா : நா எங்க கேட்டேன்.. கூட்டீட்டு போறேன்னு தான் சொன்னேன்...
கார்த்திக் : பாப்பு வேணம் என பாவமாய் பார்க்க
தீரா : நீ என்ன பாவமா பாத்தாலும் அது செல்லாது இது தான் விதி
பவி : ஆனா ரக்ஷவ ஏன் இப்டி திடீர்னு கூட்டீட்டு போனும்னு நிக்கிர தீருமா
தீரா : கத முடிஞ்சிதே பவிமா
அனு : எனன சொன்ன...
தீரா : இல்ல... அவன் ட்ரெய்னிங் தான் முடிஞ்சிடுச்சே.. அவன் கத்துக்க வேண்டியத கத்துக்குட்டான்.. சோ நா இப்போ நம்ம ரக்ஷவ கூட்டீட்டு போய் தான் ஆகனும்...
அனைவருக்கும் அவள் கூறுவதும் புரிய இத்துனை நாட்களும் தங்களோடு குடும்பத்தில் ஒருவனாய் இருந்தவனை பிரிய மனம் வலிக்கத் தான் செய்தது... ஆனால் வேறு வழியில்லையே...
அரை மணி நேரம் அனைவரும் ஆழ்ந்த அமைதியில் இருக்க ரக்ஷவ் கத்திய கத்தலே அனைவரையும் பதறி அடித்து வெளியே இழுத்து வந்தது...
அங்கு அவர்கள் கண்ட காட்சியில் அனைவரும் சிரித்து விட யாளிகள் அனைத்தும் கத்திக் கொண்டிருக்க தூணை பிடித்து கொண்டு வர மறுத்த ரக்ஷவை பிடித்து இழுத்து கொண்டிருந்தாள் தீரா
தீரா : அடேய் வாயேன் டா
ரக்ஷவ் : மாட்டேன் மாட்டேன் மாட்டேன்... நா வர மாட்டேன் என அழாத குறையாக கண்களை மூடி கொண்டு அந்த தூணை இரு கைகளால் இறுக்கி பிடித்தது மட்டுமல்லாமல் காலையும் அதை சுற்றி தூக்கி வைத்திருந்தான்...
தீரா : நா என்ன உன்ன ஜெயிலுக்கா டா கூட்டீட்டு போறேன்.. வா ரக்ஷவா..
ரக்ஷவ் : நா வர மாட்டேன் பாப்பா நா வர மாட்டேன்...
தீரா : டேய் அப்ரம் அண்ணன்னு பாக்க மாட்டேன் டா நானு
ரக்ஷவ் : பாக்கலன்னா அந்த பக்கம் திரும்பிக்கோ என்ன உற்று பாப்பா என கத்தியவனை கண்டால் சிரிப்பு தான் வந்தது இவர்களுக்கு...
தீரா : அங்கேந்து இங்க வர்ரதுக்கு கூட நீ இவ்ளோ அலும்பு பன்னலையே டா... என இடுப்பில் கை வைத்து அலுப்பாய் கூறியவள் பாவமாய் நாயகர் குடும்பத்தை நோக்கினாள்...
ரக்ஷவ் : அதெல்லாம் எனக்கு தெரியாது... நா வர மாட்டேன்னா வர மாட்டேன் அவ்ளோ தான்...
தீரா : ம்ஹும் இது சரிபட்டு வராது... என இரு கைகளின் உடையையும் ஏற்றி விட்டு கொண்டு ரக்ஷவின் சட்டை காலரை பிடித்து கொண்டு " சங்கிலி கருப்பேஏஏஏஏஏஏஏஏஏ" என இவள் பிடித்து ஒரு காலை அந்த தூணில் வைத்து அழுத்தி அழுத்தம் கொடுத்த இழுக்க அசைவேணா என்றிருந்த ரக்ஷவ் அவளுக்கும் மேலாக அந்த தூணோடு ஒட்டியிருக்க தீரா ஒரு நொடி தன் பிடியை தளர விடவும் அந்த தூணில் இன்னமும் இறுக்கமாய் ஏறிக் கொள்ள தன் அழுத்தத்தை குறைத்த ரக்ஷவ் எதிர்பார்க்காத நேரம் தீரா வேகமாய் இழுக்க ரக்ஷவ் தூணை விட்டு வெளியே வந்திருந்தான்...
ரக்ஷவ் : என்ன விடு என்ன விடு பாப்பா என்ன விடு என இரு கைகளாலும் தன் உடையை பிடித்து கொண்டிருந்தவளை பார்க்காமல் ஓடுவதிலே குறியாய் இருந்தான்...
சிம்மயாளிகள் திடீரென உறுமவும் தீரா தன் பிடியை விட ரக்ஷவ் மீண்டும் சென்று அந்த தூணோடு ஒட்டி கொண்டான்...
தீரா : எப்பா டேய் ஏன் டா நீங்க வேற... என்னாலைலே முடியல என பெருமூச்சு விட்டு சிம்மயாளிகளை பார்க்க அவைகளோ கர்ண கொடூரமாய் அவளை முறைத்து கொண்டிருந்தது...
யானையாளிகள் வேறு ஒரு பக்கம் கத்தி கொண்டிருக்க அனைவரும் காதடைக்ககாகுறையாக தான் இருந்தனர்...
நீலி : தீராமா... ரக்ஷவ அப்ரம் கூட்டீட்டு போலாமா என அவன் அடம் பிடிப்பதை கண்டு பாவமாய் கேட்க தீரா இடவலதாய் தலையத்தான்...
மயூரன் : போலாமெனில் நீவிரும் அவர்களுடன் செல்ல உள்ளாயா தங்கையே...
நீலி : அது தமையனாரே என சேவனை பார்த்து முளிக்க
தீரா : நீலி மட்டும் இல்ல... நீலி ரக்ஷவ் பிறை மூணு பேரையும் நா கூட்டீட்டு போறேன்...
பிறை : அருமை அருமை... யானும் வருகிறேன்
மயூரன் : அடியே கிராதகி எம்மை விட்டு பிரிய அத்துனை ஆர்வமேனடி
பிறை : அவ்வாறன்று ஐயனே.. இவை அனைத்தும் பெண்கள் சமாச்சாரம் தமக்கு புரியாது
சேவன் : பொரு பொரு.. தாம் இருவரும் எம்மிருவரை இங்ஙனம் தனித்து விவிட்டுச் செல்ல உள்ளீரா
தீரா : ஆமா ஆமா... அவங்கவங்க ஆளு வேணும்மா இரெண்டு திங்கள் களிச்சு அங்க வந்து சேருங்க
சேவன் : அல்லன் பாப்பு.. எம் துனைவியை உம்மால் எம்மிடமிருந்து பிரித்து செல்ல இயலாது
சத்தீஷ் : டேய் சேவக்கோழி அவ சொன்னா எதாவது காரணம் இருக்கும்டா
சேவன் : வேண்டாம் வேண்டாம் கோவனே... தீருவிடம் வேண்டா என கூறுங்கள்... எம் காதலியை விட்டு தன்னந்தனியே வாழ எமக்கு விருப்பமில்லை... என சேவன் அழாத குறையாக கத்தினான்...
ரனீஷ் : அவ மொத்தமா உன்ன பிரிக்கல டா சேவா... நீயே ஐடியா கொடுக்காத
தீரா : இன்னும் உங்க இரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல சேவா... நா ஏன் கூட்டீட்டு போறேன்னு தானா புரியும் உங்களுக்கு காத்துருங்க... ரக்ஷவா கீழ இறங்குனியா இல்லையா என அவனிடம் திரும்பினாள்...
ம்ஹும் ரக்ஷவை அந்த தூணோடு ஒட்டிய பசை இன்னும் கரையவில்லை போலும்
மீண்டும் ரக்ஷவை தீரா அழைக்கச் செல்லவும் சிம்மயாளிகள் ரக்ஷவின் முன் நின்று கொண்டு ஏதோ உறுமியது..
தீரா : தோ பாருங்க டா ரக்ஷவ் உங்க கூடயே இருக்க முடியாது என்கவும்
ரக்ஷவ் : நா அவங்க கூடவே தான் இருப்பேன் என வேகமாய் கத்தினான்... அதை கேட்டதும் விகி மீண்டும் தீராவை கண்டு உறும ரக்ஷவை பார்த்து கொண்டிருந்தவள் விகியின் கூற்றை கேட்டதும் அதை முறைத்தாள்...
தீரா : உன் மிரட்டலுக்கு நா பயப்புட மாட்டேன்னு உனக்கே தெரியும் விகி என தெளிவாய் கூறவும் மீண்டும் சிம்மயாளிகள் உறும இப்போது நாயகன்கள் பாரபட்சம் பார்த்து எப்படியோ தீராவிற்கு உதவ முன் வந்தனர்...
க்ரிஷ் :யுகி அகி விகி.. வழியிலிருந்து தள்ளிப் போங்க என கூறவும் மூன்றும் அவனை கண்டு மெதுவாய் சீர இந்திரன் மற்றும் சத்தீஷ் தலையை இட வலதாய் அசைத்து தீராவிற்கு வழி விட கோரி வலியுறுத்த சிம்மயாளிகள் ரக்ஷவிற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகர்வோமா என்றிருந்தது..
கோவன்களை அவைகள் அவமதிப்பது இது தான் முதல் முறை.. மூவரும் அதன் காரணம் அறிந்ததை போல் பெருமூச்சை இழுத்து விட்டனர்... விதியினாலும் இவர்களின் பிறப்பினாலும் மனதாலும் சிம்மயாளிகள் கோவன்களுக்கு கட்டுப்பட்டிருக்களாம் ஆனால் அவைகள் தூய்மையான அன்பினால் தான் ரக்ஷவிற்கு கட்டுப்பட்டிருக்கின்றனர்... அன்பை மிஞ்சும் வேறாயுதம் ஏது
ரக்ஷவ் கண்ணீர் ததும்ப அனைவரையும் நோக்க சஹாத்திய சூரர்கள் அவனை கீழே இறக்கி விடவும் உடனே அவன் வேகமாய் முகிலை அணைத்து கொண்டு அழத் தொடங்கினான்...
ரக்ஷவ் : ப்லீஸ் ஐயா நா போகலன்னு பாப்பா கிட்ட சொல்லுங்க... அங்க நா திரும்ப தனியாய்டுவேன்.. எனக்கந்த தனிமை வேண்டாம்... நா தனியா இருக்க விரும்பல என அழுபவனை கண்டதும் " நீ போயாகனும் ரக்ஷவா " என கூற வந்த நாயகன்களின் நா தடைப்பட்டு நின்றது...
அனைவரும் இப்போது ஒரு சேர தீராவை " கண்டிப்பா போயே ஆகனுமா " என கண்ணீருடன் பார்க்க அவளும் தீர்மானமய் தலையாட்டினாள்...
முகில் : ரக்ஷவ் இங்க பாரு டா.. முதல்ல ஆழரத நிறுத்து.. இது எல்லாமே நீ சந்திக்கிர ஒரு பகுதி தான் கண்ணா
ரக்ஷவ் : எனக்கு போக விருப்பமில்ல ஐயா.. அ..ங்..க அ..ங்க என..க்..கா..க அம்..மா அ..ம்..மா கூட காத்துட்டு இ..இ..இருக்க.. ம..மா..ட்டாங்க.. நா ... நா தி..ரு..ம்..ப தனியா..ளாய்டுவேன் என கேவியனை கண்டதும் அவர்களுக்கு சுத்தமாய் பேச வாய் வரவில்லை...
தீரா : ரக்ஷவா என்ன கொஞ்சம் பாரேன்... ப்லீஸ் அண்ணா.. எனக்காக ஒன்ஸ் என்ன பாரேன் என கம்மிய குரலில் கெஞ்சவும் அவளை அவனும் கண்ணீர் நிறம்பிய கண்களால் நோக்கினான்..
ரக்ஷவ் : நா.. நா வ...வர..னுமா பா..பாப்பா என கேட்டவனை கண்டு மெலிதாய் புன்னகைத்த தீரா
தீரா : ஆமா அண்ணா.. உன்ன நா இங்க என்ன சொல்லி கூட்டீட்டு வந்தேன்னு உனக்கு நியாபகம் இருக்குல்ல.. நீ இங்க வந்ததுக்கான வேலை முழுமைடைஞ்சிடுச்சு.. இதுக்கு மேல நீ திரும்ப வரனும்ல..
ரக்ஷவ் : ஆ...ஆ..னா
தான்யா : தீரு சொல்றது உண்மை தான் கண்ணா.. நீ இப்போ போயாகனும் தான்.. ஆனா நாங்க யாரும் இங்கேர்ந்து எங்கயும் போ மாட்டோம் ரக்ஷவா.. நீ எப்போ வேணா இங்க வரலாம்.. தோனுனா ஃபோன் பன்னலாம்.. நாங்க உன்ன விட்டு தூரமா தான் இருப்போமே தவிற உன்ன விற்ற மாட்டோம் என அவனின் முகத்திற்கு நேராய் முட்டியிட்டு அமர்ந்து அவன் கரத்தை பிடித்து மெதுவாய் கூறினாள்...
தீரா : நீ தனியாள் கிடையாது ரக்ஷவ்.. உனக்காக அங்க பல பேர் காத்துத்துட்டு இருக்காங்க.. அதோட உன் கூட நா எப்பவும் இருப்பேன்.. உன்ன தனியா விட மாட்டேன் ஐ ப்ராமிஸ்.. அவளை கண்டு கண்ணீரை துடைத்து மூக்கை உறிஞ்சிய ரக்ஷவ் அனைவரையும் ஒரு முறை கண்டான்...
அனைவரின் முகத்திலும் கண்ணீருடன் கூடிய புன்னகை இருக்க நம் முதலணி நாயகன்கள் கண்ணீருக்கு வழி கொடுக்காமல் புன்னகையுடன் நின்றிருந்தனர்...
ரக்ஷவ் : என் திங்ஸ பக் பன்ன ஹெல்ப் பன்னுங்க அம்மா
ஒவீ : வா கண்ணா என அனைவருமாய் உள்ளே செல்ல நாகன்கள் அனைவரும் வெளியே நின்றனர்...
பத்து நிமிடத்தில் வெளியே வந்த ரக்ஷவ் பல விடயங்கள் தூக்கி கொண்டு வந்திருந்தான்... அவனின் மந்திர வாள்.. நாயகிகள் பரிசளித்த வில் மற்றும் அதன் அம்புகள்... ஒரு பை முழுவதும் அடங்கிய உடைகள்.. அவனுக்காகவே கொடுக்கப்பட்ட ஆயுதங்கள்... பின் ஒரு புகைபடம்
அப்புகைபடத்தில் ரக்ஷவ் நடுவில் நின்றிருக்க அவனை சுற்றி நம் குடும்பத்தினர் அனைவரும் முகம் கொள்ளா புன்னகையுடன் நின்று எடுத்த புகைபடமது..
வெளியே வந்த ரக்ஷவிடம் ஏதோ ஒன்று இல்லாததை கண்ட ரித்விக் மீண்டும் கோட்டைக்குள் அவனது பொருட்கள் இருக்கும் அறைக்குச் சென்று ஒரு மரப்பெட்டியை தேடி எடுத்து வந்தான்...
ரித்விக் : ரக்ஷவ் இத மறந்துட்டியே என அந்த பெட்டியை கொடுக்க அதை வாங்கிய ரக்ஷவ் குழப்பமாய் அவன் குருக்களை ஏறிட்டான்...
சத்தீஷ் : அத திறக்க வேண்டிய நேரம் இது தான் ரக்ஷவ்... திறந்து பாரு என அவன் தோளிள் அழுத்தம் கொடுக்கவும் அப்பெட்டியை திறந்து பார்த்த ரக்ஷவின் கண்கள் ஒரு ஒளியினால் மின்ன அந்த பெட்டிக்குள் கையடக்க பிடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது...
அதை வலது கையால் எடுத்த ரக்ஷவ் திருப்பி திருப்பி பார்த்து அதிசயித்தான்... அதன் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பலவை அவ்வளவு தத்ருபமாய் செதுக்கப்பட்டிருந்தது... நேர்த்தியாய் அத்துனை அழகுடன் கிட்டத்தட்ட கரத்தில் உள்ள ஒரு தடினமான குச்சியை போல் தான் இருந்தது
ரக்ஷா : இது உனக்கான ஆயுதம் கண்ணா.. அதுவும் உன் குருக்களே உனக்காக உருவாக்குனது
ரவி : ஆமா ரக்ஷவா.. உனக்கு இது புடிக்கும்னு நம்புறேன்.. இது உன் கிட்ட இருக்கும் போது உனக்கு வேற எந்த ஆயுதத்தோட உதவியும் தேவப்படாடு. உனக்கான வாள்.. குறுவாள்.. ஈட்டி .. அம்பு.. வில் .. ஏன் கேடையமாக்கூட உனக்காக இது தன்ன மாத்திக்கும்.. எங்க போனாலும் திரும்ப உன்ன தேடி வரும்.. இந்த ஆயுதத்த உன்ன தவிற வேற யாராலையும் என்ன செஞ்சாலும் உபபோகிக்க முடியாது...
அர்ஜுன் : ஏன்னா அந்த ஆயுதத்துக்கு உரிமையானவன் நீ மட்டும் தான்னு அதுக்கு தெரியும்.. இந்த ஆயுதத்துல எங்க எட்டு பேர் சக்தி மட்டுமில்லாம கோவன்கள் மூவரோட சக்தியும் இருக்குரதால இது எதையும் எதிர்த்து நிக்கும்... மலையே ஆனாலும் இந்த ஆயுதத்தால அத உன்னால தகர்க்க முடியும்.. அதுக்கு இதோட திடமும் உன்னோட வலிமையும் தான் காரணம்... உன்னால முடியும்னு நாங்க நம்புறோம்.. எங்க நம்பிக்கைய காப்பாத்துவல்ல என அவன் முன் மண்டியிட்டு அவனுக்கு நிகராக அமர்ந்து தோளை பற்றி கேட்டான்...
ரக்ஷவ் : கண்டிப்பா குருவே.. உங்க நம்பிக்கைய என்னைக்கும் பொய்யாக்க மாட்டேன்.. என்றவனை நாயகிகள் அனைவரும் அன்போடு அணைத்து விடுவித்தனர்...
ரக்ஷவ் : தன்க்ஸ் அம்மா.. உங்களால இனிமே எனக்கு அம்மா இல்லன்னு நா யோசிக்கவே மாட்டேன்... யோசிக்கிரதென்ன அப்டி ஒரு எண்ணமே வராது... ஏன்னா எனக்குத் தான் பதிமூணு அம்மா இருக்காங்களே என மனதார கண்ணீருடன் கூறி விட்டு இரண்டாமணி நாயகன்களிடம் சென்றவன் அவர்களிடமும் கண்ணீரோடு விடைபெற்று யாளிகளிடம் சென்றான்...
யானையாளிகள் தும்பிக்கையால் ரக்ஷவை பிடித்து வைத்து கொள்ள அவர்களை கண்டு புன்னகைத்த ரக்ஷவை அவர்கள் எண்வரும் அவர்களின் தும்பிக்கையால் இறுக்கி அணைத்து கொண்டனர்...
சிம்மயாளிகளிடம் சென்ற ரக்ஷவிற்கு சுத்தமாக மனமே இல்லை.. அவனை காணாமல் தலை தாழ்த்தி அமர்ந்திருந்த சிம்மயாளிகளின் கண்களால் இருந்து கீற்றென கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது...
அனைவரும் கண்ணார சிம்மயாளிகள் அழுது கண்டது இருவது வருடங்கள் முன்பு கோவன்கள் இறந்த சில மாதங்களில் தான்... அவர்களுக்கு நிகராய் ரக்ஷவை காணும் போது அவனை பிரிய துளியும் அவர்களுக்கு மனமில்லை...
ரக்ஷவ் : யுகி அகி விகி நா போ...போயாகனு..மாம்.. போய்ட்டு வரவா என்கவும் அதுகள் அமைதியாய் இருக்க மூன்றிற்கும் இடையே சென்று அமைதியாய் அவர்களின் முதுகில் தலை வைத்து கொண்டான்...
நாழ்வரின் முகம் உணர்ச்சியற்று காணப்பட மெல்ல மூன்றும் ரக்ஷவை அதுகளோடு அணைத்து கொண்டு இறுக்கி அணைத்து கொள்ள ரக்ஷவின் முகத்தில் ஒரு குட்டி புன்னகை தோன்றியது
ரக்ஷவ் : என்ன மறந்துடாதீங்க உங்கள தேடி நா வருவேன் சரியா... போய்ட்டு வரேன் என்றவன் வளவன் மோகினியிடம் சென்று அவர்களிடமும் ஒரு அணைப்போடு விடைபெற்று இறுதியாய் முதலணி நாயகன்களிடம் சென்றான்...
சரண் : பாத்து போய்ட்டு வா சிஷ்யா என புன்னகையுடன் அவன் கூற முயல
ரக்ஷவ் : ம்ம்ம் என்ன மறந்துட மாட்டீங்கல்ல ஐயா என கண்ணீர் நிறம்பிய கண்களுடன் கேட்கவும் அவர்களால் அதற்கு மேலும் தாங்க முடியவில்லை.. ரனீஷ் அவனை அணைத்து கொள்ள ரக்ஷவ் மீண்டும் அவன் தோளில் சாய்ந்து அழுதான்...
ரனீஷ் : உன்ன எப்டி டா நாங்க மறப்போம்.. உன்ன ரொம்ப மிஸ் பன்னுவோம் டா கண்ணா
ரக்ஷவ் : நானும் என அழுகையை கட்டுப்படுத்த அனைவரையும் இப்போது தீராவின் கத்தல் திசை திருப்பியது...
அங்கு பிறையையும் நீலையையும் தீரா ஒரு பக்கம் இழுத்து கொண்டிருக்க மறுபக்கம் சேனும் மயூரனும் இழுத்து கொண்டிருந்தனர்...
மயூரன் : தீரா இவ்வாறு காதலர்களை பிரித்து தவறு புரியாதே... எவ்வாறு என் தலைவியை பிரிந்து யான் வாழ்வேன்...
தீரா : அடேய் நா என்ன அவள உன் கிட்டேந்து பிரிச்சு பரலோகத்துக்கா அழச்சிட்டு போறேன்...தேவலோகத்துக்கு தான போறேன் விடேன் டா
சேவன் : நீ என் கூறினாலும் சரி எம் தலைவியை யான் அனுப்ப மாட்டேன்...
தீரா : அடடடடடடா நீ நீலி கூட அங்க வந்துட்ட... அப்ரம் நீலி உன் கூட இங்க வந்துட்டா... கணக்கு முடிஞ்சு நா கூட்டீட்டு போனும்
நீலி : இறைவா எங்க கைய பிரிஞ்சிடாம பாத்தூக்கோ ப்ரீஸ்ஸ்ஸ்ஸ்
சேவன் : ஐயலவர் மொழி பறையாதே நீலி என அவள் கரத்தை விடவும் நீலி வேகமாய் தீராவின் தோளில் சென்று விழுந்தாள்...
தீரா : ஹப்பா ஒன்னு வந்துடுச்சு... டேய் மயூரா பிறைய விடு
மயூரன் : இயலாது இயலாது
தீரா : இயலும் இயலும்... கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண பாக்கக் கூடாது டா நீ.. முறையா வந்து கல்யாணம் பன்னி கூட்டீட்டு போ
சேவன் மயூரன் : திருமணமா என கத்தவும் மயூரன் பிறையை விட்டு விட அவளும் தீராவின் தோளில் சென்று விழுந்தாள்...
தீரா : ஆம் ஆம் திருமணம்... அது வர பாக்காம இருங்க ஓக்கே... டேய் ரக்ஷவ் ரெடியா என இதற்கு மேலும் நின்றாள் குட்டி ராணிகள் இருவரையும் இழுத்தாலும் இழுத்து விடுவரெனஅங்கோ ஓடினாள்...
அனைவரும் இங்கு நடந்த இரணகளத்தினால் சற்று பழைய நிலைக்கு திரும்பி சிரித்திருந்தனர்...
ரக்ஷவ் : பாப்பா என தீராவை அழைக்க
தீரா : சொல்லு ரக்ஷவ்
ரக்ஷவ் : என்ன உண்மையா தனியா விட மாட்ட தான... என் கூடவே இருப்பல என ஒரு அடி பட்ட பார்வையுடன் கேட்க
தீரா : கண்டிப்பா ரக்ஷவ்... நா எப்பவும் உன்ன தனியா விட மாட்டேன்... நா மட்டும் இல்ல உனக்காக அங்க நிறைய பேரு இருக்கோம்... நா உன்ன நச்சரிச்சிட்டே தான் இருப்பேன்... நீயே சொன்னலும் விட்டு போக மாட்டேன் என்றவளின் பதிலில் திருப்தி அடைந்ததால்
ரக்ஷவ் : ஹ்ம் உன்ன மட்டும் நம்பி தான் வரேன் பாப்பா என மீண்டும் கூறினான்...
தீரா : தீரா நண்பன ஏமாத்துனான்னு நட்போட சரித்திரத்துலையே கிடையாது மச்சி என்ன நீ தாராளமா நம்பலாம்... என கண்ணடிக்க ரக்ஷவும் அனைவரிடமும் சொல்லிட்டு விட்டு அந்த காட்டையும் கோட்டையையும் ஒரு முறை வலி நிறைந்து வந்தவனை நிம்மதியுடன் திருப்பி அனுப்பும் திருப்தியில் கண்டான்...
அனைவரும் அவன் செல்வதை கண்களில் ஏக்கத்துடன் கண்ணீருடனும் காண முதலணி நாயகர்கள் அவன் எதையும் வெல்வான் என்ற நம்பிக்கையுடன் அவனை கண்டனர்...
சேவன் : இதுவல்லாம் அநியாயம் தீரா.. நம் பராக்ரம வீரன்களுக்கும் தானே திருமணம் நிகழ உள்ளது... அவர்களை இவ்வாறா பிரித்து வைத்திருக்கிறாய்... என அழாத குறையாய் கேட்க பராக்ரம வீரன்கள் அவனை " ஏன் டா உனக்கிந்த கொலவெறி " என கண்களை விரித்து நோக்க தீராவின் பதிலில் பின் அவளை வாயை பிளந்து நோக்கினர்...
தீரா : இவ்ளோ நேரம் பிரிச்சு வைக்கல... ஆனா இனிமே பிரிக்க மாட்டேன்னு யாரு சொன்னா... அண்ணீஸ் ப்லன கரெக்ட்டா எக்ஸிக்யூட் பன்னுங்க டி ரக்ஷவா ஓடீடு என முன்னே தப்பித்தவளை பின் தொடர்ந்து சிரித்தவாறே ஓடிய ரக்ஷவ்
ரக்ஷவ் : டாட்டா என கையசைத்து விட்டு ஓட அவன் தலை மறையும் வரை அனைவரும் அங்கேயே பார்த்து நின்றனர்...
பிறை : சப்பப்பபா எவ்வாறு தீரு இவ்வனைவரையும் சமாளிக்கிறாய்...
தீரா : எல்லாம் பழக்கம் தான் பிறைமா
ரக்ஷவ் : ஹ்ம் ஏன் பாப்பா... எனக்கு தெரிஞ்சு அங்க மித்ராக்கா மயூரி அப்ரம் என் மச்சானுங்கள தவிர்த்து யாரையும் தெரியாது.. ஏன் எனக்காக நிறைய பேர் காத்திருக்காங்கன்னு சொன்ன என கரத்திலிருந்த புகைபடத்தை பார்த்தவாறே கேட்டான்...
தீரா : ஆமா ரக்ஷவ் உனக்காக பல பேர் காத்திருக்காங்க.. உனக்கு தான் தெரியல... எல்லாமே ஒரு காரணத்துக்காக தான நடக்குது ... அந்த மாரி தான்.. நீ சண்ட போட கத்துக்குட்டது என்ன சந்திச்சது எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கு... ஹே அங்க பாரு ஒரு நதி வா வந்து முகம் கழுவிக்கோ ரக்ஷவ் என அவனை வேகமாய் இழுத்து சென்று அழுது அழுது சிவந்திருந்த அவன் முகத்தை கழுவ வைத்தாள்
ஒன்றும் புரியாமல் முகத்தை அந்த குளிர்ந்த நீரினால் அடித்து அடித்து கழுவிய ரக்ஷவ்
ரக்ஷவ் : பாப்பா டவல் வச்சிருக்கியா என கத்த அவள் அவனின் பையிலிருந்து ஒரு டவலை எடுத்து நீட்டினாள்... அதை கொண்டு முகத்தை துடைத்து விட்டு வந்தவனை கண்டு
தீரா : போலாமா ரக்ஷவ் என மந்திரத்தை உபயோகிக்க தயாராக
ரக்ஷவ் : ஹான் பாப்பா தர்மன் தாத்தாவ பாக்கலையே.. அவங்கள்ட்ட சொல்லீட்டு போகலாமா
தீரா : போலாமே என புன்னகையுடன் கூறி ஷேஷ்வமலைக்கு மூவரையும் அழைத்துச் சென்றாள்... தர்மன் ஐயா ரக்ஷவை கண்டதும் அதீத மகிழ்ச்சியடைய அவனின் வலுவேறிய தோற்றமும் அன்று கண்ட பால் முகத்தில் இன்று வீரமும் உடல் வீர காயங்களையும் பெற்றிருப்பதை கண்டு அவன் தயாராகி விட்டான் என உணர்ந்து கொண்டார்... அவரிடம் ஆசி பெற்று ஒரு அன்பான அணைப்பின் பின் வேதபுரத்திலிருந்து விடைப்பெற்றான் நம் ரக்ஷவ்...
நிறைவுபகுதி தொடரும்...
ஹாய் இதயங்களே... உங்களுக்கு இந்த பார்ட் புடிச்சிருக்கும்னு நம்புறேன்... யாரும் ரக்ஷவ மிஸ் பன்னாதீங்க.. அவன நம்ம வானுவோட " கல்கி வீரா " ல டெய்லி பாக்களாம்... அதுக்கு வான்மதி தான் கரென்ட்டி.. இன்னும் ஒரே ஒரு பார்ட் இருக்கு... நம்மகுட்டி பசங்களோட லவ்வ ந்க பாக்கனும் இல்லையா .... அது எப்போ வரும்னு தெரியல... வரப்போ வரும்... ஹிஹி டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro