மாயம் - 75
அமைச்சன்கள் ஐவரும் காண்பதை நம்ப இயலாமல் வெடவெடத்த உடலுடன் வெளிரி நின்றிருக்க மற்ற அனைவரும் வாயடைத்து போய் கண்ணீரின் விழும்பில் நின்று கொண்டிருந்தனர்...
கண்களை இறுக்க மறைத்திருந்த செப்பு இமைகள் மெதுவாய் பிரிந்து இவ்வுலம் இருவது வருடமாய் பார்க்காது ஏங்கியிருந்த அதே இரத்தினக்கற்கள் போன்ற மூன்று ஜோடி விழிகள் மலர்ச்சியுடன் உலகை நோக்கின...
சிம்யாளிகளும் இரட்சக சிம்மயாளிகளும் நிமிர்ந்து கோவன்களை கண்டு உறுமலிடவும் யானையாளிகள் எட்டும்
தலை பணிந்து முழக்கமிட்டது அனைவரையும் நிலைக்கு கொண்டு வந்தது...
பராக்ரம வீரன்களும் தங்களின் காட்டுத் தீ போன்ற வெறி தணிந்ததால் மனித உருவிற்கு மாறி விட்டு உணர்ச்சியற்று விண்ணை நோக்கிக் கொண்டிருந்தனர்...
அம்மூன்று விழிகளும் அனைவருமிடையே சுற்றி வந்து இறுதியாய் தன்னவள்களிடம் நிலைக்க இறுகிய வதனமதில் பூத்த பூப்போன்ற நகையுடன் முதலில் கீழிறங்கினான் சத்தீஷ்...
அடுத்த நொடி தன்னை தோக்கி ஓடி வந்த தன்னவளை அணைத்தபடி கீழே விழுந்தான் சத்தீஷ்...
தன் கால் நிலத்தில் பதியும் முன் தன் மீது பூக்குவியலென வந்து விழுந்த தன்னவளை தன் நெஞ்சோடு மென்மையாய் இறுக்கிக் கொண்டது இந்திரனின் கரங்கள்...
க்ரிஷ் ஒரு சிறு புன்னகையுடன் அனுவை ஏறிட தன் காந்த கண்களில் தேங்கி கன்னத்தில் தரம் புரண்ட கண்ணீரது நிலத்தை அடையும் முன் அவளது மனம் தன்னவனை அடைந்து க்ரிஷ்ஷின் கரம் அவளை அவன் நெஞ்சுக்குள் புதைத்து கொண்டது... சத்தீஷ் தன் விரலால் சுடக்கிட்ட மறுநொடி சுற்றத்தை சுற்றியிருந்த அனைத்து ஓசையும் ஒடுங்கி நிசப்தம் நிலவியது...
நாகனிகளின் அழுகை சத்தம் மட்டும் அந்த சுற்று வட்டாரத்தை சுற்றியும் எதிரொலித்தது...
கோவன்களின் சிம்மயாளிகள் திடீரென இடையில் உறுமலிடவும் க்ரிஷ் அவைகளை நோக்கி புன்னகைத்த படி அனுவுடனே கீழே இறங்கினான்...
சஹாத்திய சூரர்கள் இடதிலும் கோவன்கள் வலதிலும் நின்று ஒருவரையொருவர் நோக்கினர்... அவர்கள் இடையில் மறைக்க இயலா வலி நிறைந்த புன்னகையொன்று தனிச்சையாகவே மலர இரு அதி சக்தியின் வம்சத்தவரும் ஒரே நேரத்தில் தலையசைத்து கொண்டனர்..
இப்போது இடையில் நின்றிருந்த இரண்டாமணி நாயகன்களை நோக்கி சென்றது அவர்களின் பார்வை...
ரக்ஷவ் : முடிக்க வேண்டிய பாக்கி பலிகளையும் முழுதாய் அர்ப்பணித்த பின் தமது விழி நோக்கலை தொடர்வோமா என அந்த மேடையிலிந்து கீழே குதித்தவனை கோவன்களின் பார்வை சுவாரசியமாய் தீண்டி வர விகி துள்ளி குதித்து ரக்ஷவிடம் சென்று அவனை தன் மீதேற்றி கொண்டது...
நாகனிகளை ஒரு புறம் விட்ட கோவன்கள் அவர்களின் கரங்களில் ஜொளித்த அவர்களின் மூன்று அதி சக்தி வாள்களை அவர்களணிந்திருந்த போர் உடையின் உரையில் பொருத்தினர்...
க்ரிஷ் : சர்ப்பலோக வையகத்திலே தம்மை காணுவதில் மித்த மகிழ்ச்சியடைகிறேன் யட்சினி வம்சத்தவர்களே...
இந்திரன் : ஹ்ம் இறுதியாய் கண்டு ஏறக்குறைய பத்து பனைனந்து வருடாந்திரம் சென்றிருக்க கூடுமல்லவா என சிந்தனையோடு க்ரிஷ் மற்றும் சத்தீஷை காண அவர்களிருவரும் அஃப்கோர்ஸ் என்பதை போல் தோளை குலுக்கினர்...
துருவ் : யாம் அறிந்தவரையில் இருவது வருடம் கடந்து விட்டது மாமா அவர்களே என்றவனின் குரலை கேட்டதும் அவனை நோக்கி மூவரும் புன்னகைத்தனர்...
குழந்தையாய் கண்டவனை இப்போது குமரனாய் காண்கையில் அவர்களது மனதின் நெகிழ்ச்சி கண்ணீராய் வெளிப்படாதது ஆச்சர்யமே...
சாகாரகாந்தன் : இ...இ..ல்...லை ... இ..வ்..வா..று நி..கழ து..ளி..யேனு..ம் வாய்ப்..பில்..லை... அ..ன்..றே இ..ன்னுயி..ரை நீ..நீத்த கோ..கோவன்களால் என அதற்கு மேல் தொடர முடியாமல் தினறியவனை நக்கலாய் ஏறிட்டான் சத்தீஷ்...
சத்தீஷ் : முழுதாய் கூறி முடிக்கவும் சாகாரகாந்தா.. கோவன்களால்... என எடுத்து கொடுக்க
மகரகாந்தன் : சகோதரா.. நம்மை எவரோ ஏமாற்ற முயல்கின்றனர்... இ..வை அ..னைத்..தும் பிரம்மையே.. நம் சித்தத்தை செயலிழக்க வைத்து நம்மை அழிக்க முயசிக்கின்றனர்...
க்ரிஷ் : அட.. நிழல் விம்பமென இருந்த யாம் எழுவதற்கே இயலாது முடியாது நடக்காது என வசனம் நுவன்ற நாவா இன்று முன் வந்தும் தந்தியடிக்க முயல்கிறது
மிதரவர்தனன் : தாம் யார்.. கோவன்களென பொய்யுரைத்து புலம்பெயர்கிறீரா...
சத்தீஷ் : என்ன உடன் பிறப்புகளே இத்துனை விரைவில் நாம் கட்டிக் காக்க முயன்ற பெரும் இரகசியத்தை இப்பச்சைக்கொண்டான் கண்டறிந்து விட்டான்... இன்னமும் நமக்கு ராஜ தந்திரங்கள் அவசியமோ என வெகு சீரியசாக கூறியவனை நோக்கி நடந்து வந்த வீரும்
வீர் : இருக்கட்டும் டா தோழா.. பெரும் இரகசியத்தை விளக்கப் பறைந்தாயெனில் இம்மமைச்சன்களுக்கு யாம் வீண்விரயம் புரிய அவசியமிருக்காதல்லவா
அஷ்வன்த் : சரி தான்.. காலம் கடந்தேனும் இன்னமும் நிகழ்ந்தவை யாவும் தமது திட்டமென அறியாது வெற்றி காலம் சுழன்றது அவர்களுக்கென எண்ணமிட்டு சொப்பனம் காணுவோருக்கு மெய் உரைக்கப்பட வேண்டுமல்லோ...
இந்திரன் : நிச்சயமாக.. ஆயினும் என ஏதோ கூற போனவனை நோக்கி வெட்டி கொண்டு வந்த வெள்ளி மின்னலனை இந்திரனின் கண்களிலுருந்து பாய்ந்து வந்த ஒரு நீல நிற மின்னல் வெடித்து சிதற வைக்க ரக்ஷவின் கூர்மையான அம்பு அந்த வில்லை ஏவிய விஞ்ஞவெள்ளனின் நெஞ்சில் சென்று குத்தீட்டு நின்றது
சத்தீஷ் : அஃஅஃஅ.. விளக்கமறியாது தம்மை அழிக்கப் போவதில்லை.. எம் மூவருக்கும் நிகழ்ந்ததை விளக்க வேண்டிய அதீத கடமை உள்ளது என கூறியனின் தலையை தட்டி விட்ட க்ரிஷ் இப்போது அவனது அனல் பார்வையுடன் அந்த அமைச்சன்களின் முன் வந்து நின்றான்... அவனை சுற்றி தனிச்சையாக ஒரு செண்ணிற காற்று சூழத் தொடங்கியது...
க்ரிஷ் : ஹ்ம் எம் மூவருக்கும் மரணமென்ற ஒன்றே அன்றென்பதை அறிந்தும் தாம் அனைவரும் யாம் அழிந்ததாய் எண்ணியதே முதல் தவறு..
சத்தீஷ் : அதிலும் தமது சொற்ப நஞ்சினால் எம் மூவரினது உயிர் மூச்சு தட்டுப்பட்டதென நம்பியது இரண்டாவது கேனைத்தனமான தவறு என நினைவூட்டினான்...
க்ரிஷ் : சர்ப்பலோக இறுதி வாயிலை அடைக்கும் வேளையில் எம் மூவரது உயிரொளியை தாம் அண்ட பிரவஞ்சங்கள் இடையிலிருந்து சேமித்தது மூன்றாம் தவறு.. எம் சொல்லை மீறியும் எம் மகவுகள் மூவரையும் இங்கு சிறை வைத்தது நான்காம் தவறு என பல்லை கடித்தபடி முன்னேறிய க்ரிஷ்ஷின் ஒவ்வொரு அடிக்கும் இவர்கள் அச்சத்தில் நடுங்கிட இன்னமும் விண்ணில் மிதந்த பத்து வாள்கள் ஒவ்வொன்றாய் கார்த்திக் முதல் அஜய் வரை தனிச்சாய் அவரவரது கரத்தில் சென்று தஞ்சம் கொண்டது...
இந்திரன் : சர்ப்லோகத்தில் மீண்ட எம் மூவரது உயிரற்ற உடல்களை அர்ப்ப ஆசைகளை எம் மூவரின் உடலை கொண்டு நிறைவேற்றுவதற்காய் கைப்பற்றி பத்திரப்பத்தியது ஐந்தாவது தவறு.. எம் மைத்துனன்கள் ஆன பஞ்சலோக வம்சத்து வீரன்கள் உயிர்த்துள்ளதை அறிந்தும் சிந்தையின்றி தமது பாதையில் முன்னேறியது ஆறாவது தவறு.. ஒன்றுமறியா மூன்று பாவைகளை சிறை பிடித்து மூன்று வருடங்கள் நான்கு சுவற்றிற்குள் அடைத்து சித்திரவதை செய்தது ஏழாம் தவறு...
சத்தீஷ் : யமது குடும்பத்தையே அழிப்பதாய் சூளுரைத்து எம் மகவுகள் பத்துவரையும் துஷ்ரந்களால் கைப்பற்றியது ஒன்பதாம் தவறு. இப்போரை எழுப்பியது பத்தாம் தவறு. அனைத்தையும் அனுபவித்தும் எம் தோழன்கள் எண்வரை தம்முயிரையே தியாகிக்கும் நிலைக்கு தள்ளியது பெரும் தவறு என கர்ஜித்தவனால் வெளியேறிய ஒரு பலத்த காற்றலை அந்த ஐவரையும் அடித்து தூரத் தள்ளியது...
இரட்சக சிம்மயாளிகள் மூன்றும் திடீரென உறுமி கோவன்களின் முன் சென்று நிற்க அதே போல் பராக்ரம வீரன்கள் பத்துவரும் கோவன்கள் முன் சென்று அமைச்சன்களை முகமிறுக நோக்கிக் கொண்டு எதிர்த்து நின்றனர்...
சம்பாஷனை புரிந்ததாலோ விதியை அறிந்ததாலோ நம் முதலாமணி நாயகன்கள் விலகி நிற்க அவர்களை அலுப்பாக்க விடாமல் தானாக தலை விடவே முவ்வீரையனின் களோபரத்தினால் தங்களை தானே காத்துக் கொள்ள மறைந்திருந்த ஒரு சில எண்ணற்ற துஷ்ரந்கள் அவைகளின் அந்த அதீத அரவத்துடன் மீண்டும் எழுந்தன..
அர்ஜுன் : கொஞ்ச நேரம் இதுங்க நிம்மதியா இருக்க விடாது.. டேய் மொதல்ல முடிச்சிப்போம் டா என அலுப்பாய் அனைவரையும் பார்த்தான்...
வர்ஷி : வேற வழியும் இல்ல டா அண்ணா.. பக்கி பசங்க விட மாட்டானுங்க என கண்ணீரையெல்லாம் துடைத்து விட்டு நக்கலாய் கூறினாள்...
சரண் : ஆமா செல்லம்மா.. அப்டியே உன்ன சனல்ல விட்டா நீ எப்டி பேசுவியோ அப்டி.. என சீரியசாய் கூறி பெருமூச்சு விட்டவனை கோவன்கள் கூட தேவையாடா உனக்கு என்பதை போல் பார்த்தனர்...
இந்திரன் : சரி சரி வாய விட்டு வாங்கிக் கட்டிக்காத டா எரும..
சத்தீஷ் : டேய் மச்சான் நீ சொல்ப்போரியா இல்ல நா உன் டயலாக சொல்லட்டா.... என முகிலை பார்க்க
முகில் : வெளங்கீடும்.. போடா அது என் டயலாக்கு...
சத்தீஷ் : சரி இன்னிங்ஸ் பாத்தும் ரொம்ப நாளாச்சு... ஒரு கை பாப்போமே... என கரத்தை நீட்டி முறுக்கினான்...
ரக்ஷவ் : பாஸ்... நீங்க பேசிக்கிட்டே இருந்தா அம்மாஸ் நமக்கு முன்னாடியே எல்லா கையையும் பாத்துருவாங்க ... லெட்ஸ் கோ யா.... என குறும்பாய் கூறியவன் விகியுடன் சீரி கொண்டு சென்றான்...
க்ரிஷ் : மகனே சொல்லிட்டாரு.. அப்ரம் என்ன யோசனை.. என சிறு புன்னகையுடன் கூறிட அவனை கண்டு சிரித்த முகிலின் முழக்கம் அந்த சுட்டு வட்டாரத்தையும் சுற்றி எதிரொலித்தது...
முகில் : போர் முரசு கொட்டட்டும்... என கூறிய அடுத்த நொடி யானையாளிகள் அனைத்தும் தன் முன்னங்கால்களை அந்தரத்தில் தூக்கி பிளறலிட்டு முன்னோக்கி ஓடியது...
நம் முதலணி நாயகர்களும் பருந்து குடும்பத்தினரும் அந்த துஷ்ரந்கள் மற்றும் எஞ்சியிருந்த சில நாகமனிதர்களையும் அதி வேகத்தில் வெட்டி சாய்த்து பூந்து விளையாடினர்... முன்பு இருந்த ஒரு பதட்டமோ துக்கமோ அவர்கள் ஒருவரின் கண்களிலும் தெரியவில்லை... மாறாக அனைவரின் கண்களும் பல வருடம் காத்திருந்து கிடைத்த ஏக்கம் தீர்ந்த நிம்மதியுடன் மிளிர்ந்தது...
ஆனால் அதற்கு நேர் மாறாய் நம் பராக்ரம வீரன்களின் விழிகள் வெறியினால் சூழப்பட்டு பற்றியெரிய அமைச்சன்களின் விழிகளோ அச்சத்தை அப்பட்டமாய் வெளி காட்டியது....
இந்திரன் : தமக்காய் உருப்பெற்ற இவ்வாள்களால் தம்முடைய எதிரியின் உயிர் நாடியை அழிக்க வேண்டும்.. அவ்வாளை கொண்டே தம்மனைவரால் அவர்களை அடியோடு அழித்தெறிய இயலும் என பராக்ரம வீரன்களை பார்த்து கூறி விட்டு வீர நடை போட்டு கோட்டையை விட்டு வெளியே நடைபோட பராக்ரம வீரன்கள் அவர்களுக்கு கிடைத்த புதிய வாள்களை காற்றில் சுழற்றி தங்களுக்கு பழக்கிக் கொண்டனர்...
ஒரு துஷ்ரந்தின் கழுத்தையறுத்து விட்டு இந்திரனின் கூற்றை கேட்டு திரும்பிய ரக்ஷவ் அவன் நினைவுகளை அலசிக் கொள்ள விகி அவன் நினைவலைகளில் மூழ்கியதால் அவனது வேலையையும் தானே எடுத்து செய்தது..
நம் இரண்டாமணி நாயகிகளும் இப்போது களத்தில் இறங்கி தங்களால் ஆன முயற்சிகளை கொடுத்தனர்...
நம் பராக்ரம வீரன்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாதென்பதற்காகவே அமைச்சன்கள் ஐவரும் இருவராய் பிரியாதிருந்தனர்.. ஆனால் அவர்களை நிம்மதியாய் விட்டால் இவர்கள் நம் நாயகன்களல்லவே...
வருண் தன் வாளை ஒரு கரத்தால் பிடித்த படி மறு கரத்தால் நெற்றியின் முன் வந்து விழுந்த கேசத்தை அழுந்த பின் தள்ளி அவன் முன் நின்ற சாகாரகாந்தனை ஏறிட்டான்...
சாகாரகாந்தன் உடனே தன் வாளை உருவி வருணை நோக்கி ஓடி வர ஒரு பக்கமாய் சாய்ந்து சாகாரகாந்தனை உதைத்து கீழே தள்ளி விட்டு அவன் மீதேறி நின்றவன் தன் வாளை ஒரு நொடி கூட சிந்திக்காமல் சாகாரகாந்தனின் கழுத்தில் இறக்கினான்...
அதில் சாகாரகாந்தன் அலரி கொண்டே அடுத்த நொடி இரண்டாய் பிரிய இதற்காகவே காத்திருந்த ராகவ் அவனது வாளை பற்றி கொண்டு எம்பி இவர்களின் இடையே குதித்தான்...
ஓடிச் சென்று எம்பி அருளவர்தனனின் கழுத்தில் அமர்ந்த அஷ்வித் அவன் வாளை நன்கு மேலுயர்த்தி அதிக அழுத்தத்துடன் அருளவர்தனனின் நெஞ்சில் இறக்கினான்...
அருளவர்தனன் அந்த வலியை தாங்க இயலாமல் தன் வாளால் அஷ்வித்தின் முதுகில் நீண்ட வெட்டிட அதை ஒரு காயமாகக் கூட எண்ணாத அஷ்வித் தன் பிடியை தளர்த்தாமல் மீண்டும் வாளை உருவி அழுத்தி குத்தவும் அருளவர்தனன் இரண்டாய் பிரிந்து ஆதவின் முகத்திலும் ஏளனமான ஒரு புன்னகையை மலரச் செய்தான்...
ராம் மற்றும் அருண் " நான் தான் அவன குத்துவேன்... " " இல்ல நான் தான் அவன் கழுத்தறுப்பேன் " " டேய் நான் தான் ஃபர்ஸ்ட்டு போ டா" " இல்ல இல்ல நான் தான் நான் தான் " என மாற்றி மாற்றி மகரகாந்தனின் உயிரில் விளையாடி கொண்டிருக்க பேந்த பேந்த முளித்த மகரகாந்தன் " உம் இருவரையும் யான் கொல்கிறேன டா " என இடையில் புகுந்து வாளை திருப்பி இருவரின் கழுத்தையும் சீவ முயல ஒரே போல் பின் புறமாய் சாய்ந்த சகோதரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் காலை உயர்த்தி மகரகாந்தனை தூர தள்ளி எறிய அவன் முழுதாய் கீழே விழும் முன் ராம் அருண் இருவரும் ஓடி வந்து அவரவர் வாளால் மகரகாந்தனின் இரு புறத்திலும் சரக் சக்கென கிளிக்க சில வினாடிகலே இரு மகரகாந்தனும் மண்ணில் சென்று விழுந்தனர்...
கார்த்திக் மற்றும் அஜய் விஞ்ஞவெள்ளனை ஏற இறங்க பார்த்து கொண்டு நின்றிருந்தனர்... விஞ்ஞவெள்ளனோ தன் வெள்ளி கீற்றுக்களை ஒரு வளையமாய் வைத்து அவர்களிடமிருந்து தன்னை காத்துக் கொண்டிருந்தான்... அஜய் கார்த்திக்கிடம் தான் பார்த்துக் கொள்வதாய் கூறி விட்டு முன்னே சென்றான்... விஞ்ஞவெள்ளன் வேகமாய் தன் பாதுகாப்பு வளையத்தை அவன் புறம் திருப்ப விஞ்ஞவெள்ளனே எதிர்பார்க்காத போது அவன் மீது பாய்ந்த கார்த்திக் அவனது வாளால் அந்த வளையத்தை சுக்கு நூறாய் உடைக்க மற்றைய புறத்திலிருந்து தன் கால்களில் அழுத்தம் கொடுத்து எம்பிய அஜய் விஞ்ஞவெள்ளனின் கழுத்தில் நீண்ட ஒரு வெட்டினை பரிசளிக்க விஞ்ஞவெள்ளன் அதற்கு மேலும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் இரண்டாய் பிரிந்தான்...
மிதுன் வாளின் நுனியிலிருந்து நூலிழையில் தப்பிச் சென்ற மிதரவர்தனன் நிம்மதி பெருமூச்சு விடும் முன் அவனது பக்கவாட்டிலிருந்து மித்ரன் அவனை தாக்கினான்...
மித்ரனின் வாள் சுழற்சியை தாங்க இயலாமல் பின்னோக்கி வந்த மிதரவர்தனன் திடீரென தன் காலால் மித்ரனை தடுக்கி விட மித்ரன் கீழே விழும் முன் மிதுனின் கூரிய வாள் மிதரவர்தனின் காலில் ஆழமான ஒரு அறுப்பையிட மித்ரன் கீழே விழும் முன் அதே அறுப்பில் அவனது வாளையில் உயர்த்தி அழுந்த குத்தினான்...
பிறகென்ன... பத்து அமைச்சன்களும் ஒருவரையொருவரும் பதறி போய் நோக்கிக் கொண்டு பராக்ரம வீரர்களோடு போரிடத் தொடங்கினர்...
இவர்களை பார்த்த படி விகியின் மீதமர்ந்திருந்த ரக்ஷவின் முகத்தில் திடீரென பிரகாசமாய் ஒரு பல்பெரிந்தது...
விகி ஏதோ உணர்ந்ததை போல் ரக்ஷவை நோக்கி விட்டு இப்போது கோட்டையை நோக்கி ஓட ரக்ஷவ் விகியின் கடிவாளக்கயிற்றை இறுக்கப் பற்றி கொண்டு கோட்டையை நோக்கினான்...
அதே நேரம் சில பல ஓசைகள் அனைவரையும் திசை திருப்ப இரட்சக சிம்மயாளிகள் திடீரென அத்திசையை நோக்கி அதி வேகமாய் ஓடிச் சென்றது..
அந்த திசையில் ஆழிலோக வீரர்களும் ஆகாயலோக வீரர்களும் ஒரு சேர இணைந்து சர்ப்பலோகத்தை எதிர்த்து படையெடுத்து வந்து கொண்டிருந்தனர்...
அவர்கள் எவரையும் உள்ளே விடாமல் சர்ப்பலோக சேனை வீரர்கள் தங்களைத்தானே அரணாக்கி காத்தனர்... இரட்சக சிம்மயாளிகள் ஓட்டத்திலே தங்களின் மனித உருவை எடுக்க இரட்சன்கள் மூவரும் ஒருவரை ஒருவர் நோக்கி கொண்டு இன்னும் வேகமெடுத்து ஓடினர்...
ரக்ஷவுடன் மீண்டும் கோட்டைக்குள் நுழைந்த விகி கால்களை தேய்த்து கொண்டு சீரி நிற்க பராக்ரம வீரன்கள் அனைவரின் கவனமும் ரக்ஷவிடம் வந்தது...
ரக்ஷவ் : அண்ணாஸ்.. அவனுங்க உயிர்நாடிலாம் என்னன்னு எனக்கு தெரியல... ஆனா வீக் பாய்ன்ட்டே அவனுங்களோடு முதுகு தான்... அட்டக் என கத்தியதோடு விகி தன் இரு கரங்களையும் உயர்த்தி அங்கிருந்து மீண்டும் வெளியே ஓடியது...
இரட்சகன்களை பின் தொடர்ந்து சிம்மயாளிகளும் ஓட அவர்களோடு தங்களின் மனித உருவிலே பருந்து சகோதரர்கள் மூவரும் வேகமாய் பறந்து வந்தனர்...
ரக்ஷவோடு துருவ் ருமேஷ் மற்றும் விதுஷும் அவரவர் வில்லில் அம்பை பொருத்தி தொலைவில் வரும் வீரர்களை குறி வைத்து தாக்கினர்...
இரட்சகன்கள் சேனை வீரர்களை நெருங்கியதும் ஒரே நேரத்தில் அவரவர் இறக்கையை விரித்து மேல் நோக்கி பறக்க கோவன்கள் தங்கள் மகன்களை சற்று ஆச்சர்யமாய் நோக்கினர்...
ஆனால் கோவன்களை அதிர்ச்சியாக்க விடாததை போல் திடீரென மிதரவர்தனனின் கோர அலரல் அங்கு அனைவரையும் நிலை குழைய செய்ய இங்கே ஆதியன்த்தின் ஒரு பெரும் சத்தத்துடன் அவன் இரு கரங்களையும் ஒரு புயலை அழுத்தி சேனை வீரர்களை மொய்க்க தொடங்கிய ஆகாயலோகத்தின் சின்னஞ்சிறு கொடிய உயிர்களை தூற எறிந்தான்...
இருள் கவ்விய விண்ணில் வெடித்த பெரும் மின்னல் அனைவரையும் கோட்டையின் புறம் திரும்ப வைத்தாலும் இப்புறம் பருந்து சகோதரர்கள் மற்றும் ரக்ஷவுடன் இரட்சகன்களின் தாக்குதலும் அனைவரையும் ஈர்த்தது...
கோவன்கள் மிக சுவாரசியமாய் எதையும் விடாமல் பார்த்து கொண்டிருந்தனர்...
கோட்டைக்குள் அமைச்சன்கள் பத்துவரும் தமக்கு தப்பிக்க இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி அந்த யாக குண்டத்தீ தான் என அதை நோக்கி தட்டுத்தடுமாறி குத்தியிரும் குழையுயிருமாய் சென்ற அவரவரது எதிரி மீது தங்களின் அடி தொண்டையிவிருந்து அலரி கொண்டே பாய்ந்தனர் நமது ஆகால பராக்ரம வீர நாயகன்கள்...
அவர்களின் அலரலுடன் வானமும் இடிந்து விழுவதை போல் ஒரு சத்தத்தை எழுப்பி அனைவரின் சப்த நாடியையும் ஒடுக்க பராக்ரம வீரன்களின் கரங்களுள் மின்னிய அந்த வாள்கள் ஒரே போல் அமைச்சன்களின் முதுகின் இடது பக்கத்தில் சரக்கென இறக்கப்பட ஓட்டத்தில் சமைந்து நின்ற பத்து பேரும் தங்களின் முதுகில் ஏதோ நொருங்கும் அரவத்தில் சமைந்து நின்றர்...
இரட்சகன்கள் மூவரின் சக்திகள் மொத்தமும் ஒன்றிணைந்து அந்த இரு படையையும் பின் தள்ள அவர்களின் பின் எழுந்த நாகனிகளின் அதிர்வில் அந்த மூன்று படையினரும் முவ்வேறு பக்கமாக தள்ளப்பட்டனர்...
அமைச்சன்களின் இதயம் நின்று துடித்து தங்களின் உயிர்நாடிக்கு ஒன்றும் ஆகவில்லை என உணர்த்தி அவர்கள் ஒரு நொடி மூச்சு விடும் முன்பே...
நம் நாயகன்களின் அதே வாள் அமைச்சன்களின் இதயப்பகுதியில் குத்தப்பட்டு அவர்களின் கொடூரமான அலரல்களுடன் முதுகின் இடது பக்க வாயிலாக அவர்களின் உயிர்நாடியை அறுத்தெறிந்து வெளியே வந்தது....
நாகனிகள் மூவரும் சர்ப்பலோகம் ஆழிலோகம் மற்றும் ஆகாயலோகத்தின் முதன்மையானவர்களென்பதால் அவர்களை கண்டதும் ஆழிலோகத்தவர்களும் ஆகாயலோகத்தவர்களும் தங்களின் வெறியை மட்டுப்படுத்தி இடையிலே தங்களின் மொத்த ஆதங்கத்திற்கும் ஒரு தடுப்பை அமைத்து பொருமையாய் நின்று அவர்களை நோக்கினர்..
சமாதானம் என்றதை தவிர்த்து வேறெதுவும் இஞ்ஞாலங்களில் வேண்டியதில்லை என்பதை உரைக்காமலே உணர்த்திய நாகனிகள் கீழிறங்கவும் தங்களின் வன்மத்திற்கு முழு காரணமுமான அந்த ஐந்து அமைச்சன்களே அழிந்ததால் அவ்விரு ஞாலத்தவர்களும் நாகனிகளின் கட்டளைக்கிணங்கி அங்கிருந்து விலகி சென்றனர்...
பெருமூச்சறித்த பராக்ரம வீரன்கள் எழுந்து இரத்தக்கோலத்தில் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டு முன் நோக்க அவர்களை நோக்கியவாறு அந்த போர்களத்தில் நின்றிருந்த குடும்பத்தார் அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதி பரவியது...
சிம்மயாளிகள் மூன்றும் குதியாய் குதித்து ரக்ஷவுடனே கோவன்களிடம் ஓட இந்தளவு அவர்களை மகிழ்ச்சியில் கண்டிராத ரக்ஷவ் விகி துள்ளிய துள்ளலில் அந்த மண் நிலத்தில் ஸ்பீட் ப்ரேக்கர் வைத்ததை போல் குதி குதியென குதித்தான்....
ரக்ஷவ் : யோவ் குருவே.. யாராவது காப்பாத்துங்கையா.. டேய் விகி குதிக்காத டா... அம்மா என இவன் கத்து கத்தென கத்தியும் அந்த மொத்த போர்களத்தையும் குதூகலமாய் சுற்றி வந்த சிம்மயாளிகள் சற்றும் கண்டு கொள்ளவில்லை...
ஆதியன்த் ரக்ஷவின் நிலையை கண்டு சிரித்தபடியே அவனை விகி மீதிருந்து தூக்க தலை சுற்ற அங்குமிங்கும் கண்களை சுருக்கிய படி பார்த்த ரக்ஷவ் பின் தலையை சிலிப்பி கொண்டு ஆதியன்த்தின் கரத்தில் குரங்கென தொங்கிக் கொண்டான்...
ஆதியன்த்தும் ரக்ஷவும் கீழிறங்கியதும் அவன் நேராய் நிற்காமல் தடுமாற சேவன் அவனை பிடித்து சிரித்தபடி நிற்க வைக்க முயற்சித்து கொண்டிருக்க ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நம் முதலணி நாயகன்கள் அந்த மந்திர திரை உடைந்ததாய் அவர்கள் எண்ணிய அடுத்த நொடி அதிவேகமாய் ஓடிச் சென்று அணைத்து கொண்டனர்...
நம் முதலாமணி நாயகிகள் அனைவரும் அதே போல் ஓடி சென்று ஒருவரையொருவர் அணைத்து கொண்டனர்...
சத்தீஷ் : மச்சான் எங்கள விட்டுட்டு என்னடா இப்டி வயசாயி போய்ட்டீங்க என கண்ணீரை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் கேலியாய் கத்தினான்...
ரித்விக் : எரும ... இருவது வர்ஷம் கோமால இருந்தா நீ மட்டும் யங்கா இருக்கன்னு நெனப்பா... உங்களுக்கும் வயசாய்டுச்சு டா...
தீரா : அத எங்களாளத்தான் டா நம்ப முடியல...
க்ரிஷ் : டேய் விடுங்க டா... விடுங்க மொதல... விட்டு தொலைங்க டா... என திடீரென கத்து கத்தென கத்தியவன் சஹாத்திய சூரர்கள் பேந்த பேந்த முளித்த படி அவர்களை பார்க்கவும் எங்கெங்கோ தேடி ஒரு ஈட்டியை தேடி எடுத்த க்ரிஷ் இந்திரன் சத்தீஷிடம் மற்றுமிரண்டு ஈட்டிகளை வீசினான்...
சஹாத்திய சூரர்கள் ஒருவரையொருவரை பார்த்ததும் இம்மூவரின் நடவடிக்கையின் காரணம் புரிய விடு ஜூட் என்று கூறாத குறையாக ஓடத் தொடங்க... கோவன்கள் மூவரும் அந்த ஈட்டிகளை தூக்கி கொண்டு எண்வரையும் துரத்தி ஓடினர்...
சத்தீஷ் : டேய் பக்கிங்களா நில்லுங்கடா... இல்ல ஈட்டிய முதுகுலையே சொருகீடுவேன்...
சரண் : டேய் வேணாம்டா... ஆல்ரெடி இருவது மணி நேரம் போர்ல சண்ட போற்றுக்கோம் டா...
இந்திரன் : ஏன் நாங்க போடலையா என தன் ஈட்டியை நீட்டி சரணின் மண்டையில் ஒரு அடியை போட
அஷ்வன்த் : டேய் அரமணி நேரத்துக்கு முன்னாடி எந்திரிச்சிட்டு டயலாக் விடாத டா எரும...
சத்தீஷ் : நாங்க இரெண்டு நாளா எந்திரிக்க போராரீடுட்டு இருக்கோம் ... இப்போ நிக்கலன்னு வையேன் குத்தி குத்தி ஓட்டையாக்கீடுவேன் உன் மண்டைய நில்லுடா டேய்
முகில் : நிக்க மாட்டோம் போ டா என யானையாளியை சுற்றி ஓடியவன் யம்மா என மூச்சு வாங்கி நிற்க
க்ரிஷ் : மாட்டினியா என அவனின் உடையை கெட்டியாய் பிடித்ததும் முளித்த முகிலை வீர் இழுத்து கொண்டு ஓடினான்...
வீர் : ஓடித் தொலடா சோம்பேறி
க்ரிஷ் : டேய் இப்போ நிக்கலன்னா வீட்டுக்கு வந்ததுக்கு அப்ரம் சோறு கூட போட விட மாட்டோம் டா
ரனீஷ் : எங்களுக்கு சமச்சிக்கத் தெரியாதா வெவ்வவ்வெவ்வே என நின்று பலுப்பு காட்டியனை இந்திரன் பிடிக்க ஒரு அடி இடைவேளை இருக்கும் போது சிட்டென பறந்தான்...
ரக்ஷவ் : அய்யைய... ஆல்ரெடி எனக்கு தலை சுத்துது... நீங்க வேற ஏன் இப்டி சுத்தி சுத்தி ஓடீடு இருக்கீங்க
ரவி : நீ கேப்ப டா... எங்க நிலமைல இருந்தா தெரியும் உனக்கு என ஓடி கொண்டே கத்தியவனின் மண்டையில் சத்தீஷ் ஒரு தட்டு தட்டினான்...
சத்தீஷ் : அவன என்ன அதற்ற.. நில்லு டா ஒலுங்கா...
அர்ஜுன் : மச்சான் ஓடு ஓடு.. சிக்காத டா என இவ்வாறு எதற்கு ஓடுகின்றனர் எதற்கு துரத்துகின்றனர் என கூறாமலே அந்த மொத்த போர்களத்தையும் சுற்றி வந்தனர்...
சிம்மயாளிகளும் அங்கங்கு கோவன்களுடன் ஓடி விண்ணில் பறக்காத குறையாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்தது...
ஒரு கட்டத்தில் கோவன்கள் மூவரும் நின்று விட்டு பெருமூச்சு வாங்க அதே போல் நாழாபுறத்திலும் இரண்டிரண்டாய் நின்றபடி சஹாத்திய சூரர்களும் பெருமூச்சறித்து கொண்டு அவர்களை நோக்கினர்...
சத்தீஷ் : டேய் மூச்சே விட முடியல டா ஓடித் தொலையா என கூறி முடிப்பதற்கும் முன் அவர்கள் எண்வரும் இம்மூவரின் முன் குழுமியிருந்தனர்...இவர்கள் கேள்விகளை தொடுக்கும் முன்னே க்ரிஷ் அவர்களை அந்த ஈட்டியால் அடிக்க தொடங்கியிருந்தான்...
க்ரிஷ் : ஏன் டா வெண்டக்கை மண்டையா... லாஜிக் எதிக்ஸ்ஸெல்லாம் மறந்துட்டு சூசைட் சூசைட் பன்னிக்க பாக்குறீங்களா... நாங்க நாங்க எழலன்னா என்னடா பன்னீர்ப்பீங்க...
அர்ஜுன் : இதே அடிய பரலோகத்துல வந்து வாங்கீர்ப்போம் டா என அவனிடமிருந்து ஈட்டியை பிடுங்கிய படி பாவமாய் கூறவும் க்ரிஷ் இன்னமும் முறைத்தான்...
ரவி : அடெய் போதும் டா... பின்ன என்னடா பன்ன சொல்றீங்க... முவ்வீரையன அடக்க வேற வழியே இல்ல...
இந்திரன் : ஏன் இல்ல... ஏன் இல்லங்குறேன்... மதிநட்சத்திரம் இன்னைக்கு தான்னு தெரிஞ்சும் எதுக்கு டா முந்திரி மாரி முன்னாடி போனீங்க...
வீர் : போதும் டா மச்சான்... நீங்க வந்துட்டீங்கல்ல அப்ரம் என்ன...
க்ரிஷ் : எப்டி டா விட முடியும்... கண்ணு முன்னாடி உங்க சாவ அதுவும் நீங்களே முன் வந்து போய் வாங்க பாக்குரத எப்டி எங்களால பாக்க முடியும் என அவனின் சட்டை காலரை பிடிக்கவும் அவன் கூறிய மறுபதில் கோவன்களையும் ஒரு நொடி உறையவைத்தது...
வீர் : தப்பு தான் டா... தப்பு தான்... ஆனா எங்களுக்கு அப்போ வேற வழியுமே இல்ல... ஆனா அந்த வாயில்கள அடைக்க வேற வழி இருந்தும் நீயும் இந்திரன் சத்தீஷும் சாகுரத நாங்க நேர்ல பாத்தப்போ எங்களால மட்டும் எப்டி டா தாங்கீர்க்க முடியும்...
க்ரிஷ் அவன் கரத்தின் பிடியை தளர்த்த கோவன்கள் மூவரின் மனதிலும் இவர்களின் இணைப்பிரியா நட்பு மலரை ஊசி நூலால் தைப்பதை போலிருந்தது...
உண்மை தானே... இவர்கள் தங்களைத் தானே மாய்த்துக் கொள்ள போகிறோம் என கூறி விட்டு சென்று அதன் முதல் படியை அடைந்ததும் அதற்கு மேல் தாங்க முடியாமல் பிணமாயிருந்த இம்மூவரின் உயிரொளி தன் ஒட்டு மொத்த சக்தியையும் உபயோகித்து இறந்த தன் உடல்களை மீண்டும் உயிர்க்க வைத்திருக்கிறதென்கையில்... தங்களின் மரணத்தையும் கண்டு இத்துனை வருடம் தாமில்லாமல் அவர்கள் தவித்த தவிப்பு கண்களை கலங்க வைத்தது...
கோவன்கள் : சாரி மச்சான்ஸ் என இவர்கள் கண்ணீருடன் அவர்களை அணைத்து கொள்ள அவ்வெண்வராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...
இவ்வளவு நேரமும் இவர்கள் புரியும் இரணகளத்தையெல்லாம் ஆனந்த கண்ணீருடன் பூரித்து போய் பார்த்து கொண்டிருந்த முதலணி நாயகிகளின் கண்களிலும் அந்த வலியால் கண்ணீர் பெருகியது...
வர்ஷி : டேய் அண்ணாஸ் போதும் டா.... எங்களல்லாம் நியாபகம் இல்லையா... நாங்களும் தான் கஷ்டப்பட்டோம் என கண்ணீரை துதைத்து கொண்டு கோவமாய் இருப்பதை போல் கூறவும் சஹாத்திய சூரர்கள் கோவன்களை இவர்களிடமே அனுப்பினர்...
முதலில் எதனாலோ தயங்கிய மூவரும் குற்ற உணர்ச்சியை தாங்காமல் தலை தாழ்த்திக் கொள்ள யாளி வீராங்கனைகள் ஒரு யோசனையுமின்றி அம்மூவரையும் அணைத்து கொண்டனர்....
நிரு : பனிஷ்மென்ட் இல்லாம பேசுவோம்னு மட்டும் நெனச்சே பாக்காதீங்க... எங்கள இத்தன வர்ஷம் விட்டு போய் தவிக்க விட்டதுக்கு தக்க தண்டனை இருக்கு என கேவலுடன் கூறியவளுக்கு பதிலளிக்க இயலாமல் அழுகை கலந்த சிரிப்புடன் தலையாட்டினர்...
அஷ்வித் மித்ரன் மிதுன் வருண் அருண் ராகவ் மன்னும் ராம் எந்த தயக்கமும் இன்றி அவர்களை ஓடிச் சென்று அணைத்து கொள்ள இரட்சகன்கள் மாத்திரம் சற்று தயங்கி நின்றனர்...
கயல் அவர்களிடம் ஓட அவளையும் வாரி அணைத்து கொண்டவர்கள் முளித்தபடி நின்ற சந்தியா வைஷு நித்யா மாயா நந்தினி நவ்யா இக்ஷி மற்றும் மதியையும் கை நீட்டி அழைக்க அவர்கள் அதற்கு மேலும் தயங்கி நிற்கவில்லை....
மூவரை சுற்றி நின்ற இளைஞர்கள் கூட்டம் அவர்களை மொத்தமாய் மறைந்திருக்க அதில் தனித்துவமாய் தெரிந்த இளவரசிகள் மற்றும் ஐலாவை நோக்கி திரும்பியது இரட்சகன்களின் பார்வை...
சஹாத்திய சூரர்களும் அவர்களை நோக்கினர் அடுத்த நிமிடம் மோகினி தன் மருமகள்களையும் மகளையும் அணைத்து கொண்டாள்...
வளவன் அவளருகில் புன்னகையுடன் நிற்க நாகனிகளும் இப்போது அவர்களை தான் நோக்கிக் கொண்டிருந்தனர்...
வேதித்யா மற்றும் எழிலின் அமைதியான முகம் மோகினியை பின் வாங்க வைக்க தன் தங்கைகளை தன் புறம் திருப்பிய சித்ரியா அவர்களின் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்...
அனைவரின் பார்வையும் இப்போது ஓரமாய் நின்றிருந்த மூவரிடமும் திரும்ப சஹாத்திய சூரர்கள் இளவரசிகளை கண்களால் காட்டி ஏதோ கேட்கவும் கோவன்கள் முகம் கொள்ளா புன்னகையுடன் ஆமென தலையசைத்தனர்...
அந்த இடம் முழுவதும் ஒரு நிசப்தம் நிலவ அனைவரின் பார்வையும் இளவரசிகள் மீதிருக்க காரணம் தெரியாமல் வேதித்யா மற்றும் எழில் சித்ரியாவின் பின் தயங்கி நின்றனர்...
சித்ரியா : இவ்வாறு அனைவரும் எம் மூவரை துளைத்தெடுப்பதை தவிர்த்து சொற்றடர் அமைக்காதபோது எம்மால் மனதை வாசித்து கண்டறிய இயலாதென அறிவீர் தானே என தங்கைகளுக்கு தைரியம் கொடுத்தவாறே இவள் இவர்களை நோக்க க்ரிஷ்ஷிற்கு சிரிக்கத் தான் தோன்றியது...
அனுவின் அதே கோவம்.. தங்கைகளை அச்சமடைய வைப்பதால் எழுந்த கோவம்.. இதிலே சித்ரியா அவளின் தங்கைகள் இருவரையும் எவ்வாறு பாதுகாத்திருக்கிறாளென இவர்கள் நினைக்க அதுவும் உண்மையே... விவரம் அறியும் முன்பிலிருந்து அவர்களிருவவையும் தன் இரு கண்களை போல் வளர்த்தவள் அவள்...
பத்யரூனா : சித்ரியா..
சித்ரியா : யான் தவறாய் ஏதும் வினவவில்லையம்மா.. என தன்னை அமைதியாக்க முயற்சித்த பத்யரூனாவிற்கு இவள் பதில் கொடுக்க
சரண் : இருக்கட்டும் தேவி.. என் மருமகளுக்கு என் தங்கச்சி மாரி கோவம் வரலன்னா தான ஆச்சர்யம்
சித்ரியா : சமாதானம் செய்ய முயலாதீர் மாமா அவர்களே.. இது அவற்றை பற்றி உரையாடும் நாழியல்ல.. அனைவரும் கோட்டைக்குள் செல்வோம்.. என அதற்கு மேல் எதுவும் கூறாமல் வேதித்யா மற்றும் எழிலினியாவை இழுத்து சென்றாள்...
அவள் கூற்றும் சரியே என்பதால் அனைவரும் அவர்களை பின் தொடர்ந்து ஒரு நிம்மதியுடன் கோட்டைக்குள் செல்ல கோவன்களும் நாகனிகளும் அவரவர் துணையின் அருகாமை மீண்டும் கிடைத்ததை எண்ணி மகிழ உள்ளோ யாளி வீராங்கனைகள் அவரவர் கணவனை கட்டிக் கொண்டு குழந்தை போல் அழுது முடிக்கவே அரை மணி நேரத்தை கடத்தினர்...
அவர்களின் சொல்லையும் கடமையையும் மீற இயலாமல் " தம்மை தடுக்க மாட்டோம்... " என கூறிய ஒவீ உண்மையில் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தால் என்ன நிலைக்கு தள்ளப்பட்டிருப்பாள் என்பது அவளறியாத ஒன்று தான்..
லீலாவதி அவர் பெற்ற செல்வங்களை ஆரத்தழுவி கொண்டு உச்சி முகர்ந்தார்... யட்சினிகள் லீலாவதி எங்கு நிழலாய் மறைந்து தங்களை மீண்டும் தனியே விட்டுச் சென்றிவிடுவாரோ என இறுக்க அணைத்து கொள்ள வெவ்வேறு இடத்தில் நின்ற படி இரட்சகன்கள் மூவரும் அவர்களை மனமறியா ஒரு பரவசத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்...
அனைவருக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது.. பல சர்ப்பலோக உயிர்கள் இன்றோடு அவர்களின் அனைத்து கஷ்டமும் நீங்கியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் அந்நாளை கொண்டாடினர்... சர்ப்பலோக சேனை மொத்தமும் இனி உயிர்களை துன்புறுத்தி வாழ வேண்டிய வாழ்கை தேவையில்லை என நெகிழ்ந்தனர்...
அன்றைய இரவு நேர வேளையில் தன் மொத்த குடும்பத்தையும் பழைய நிலையில் கண்டு நம் முதலணி நாயகன்கள் நிறைவாய் புன்னகைக்க இரட்சகன்கள் மூவரும் கோவன்களின் மடியில் தலை வைத்து துயில் கொண்டிருந்தனர்... யட்சினிகளும் அன்று தான் அவர்களின் அனைத்து வலிகளையும் மறந்து உறங்கினர்...
வேதித்யா எழில் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் சித்ரியா பதிலளிக்கவில்லை... அவள் உண்டு அவள் வேலையுண்டென தான் சுற்றினாள்... நம் நாயகன்கள் ஒன்றாய் உழைத்து ஏற்பட்ட விழைவுகளையும் பாதிப்புளையும் திருத்தி அமைத்தனர்...
வேதித்யா : தமக்கையே... தாம் இவ்வாறே எம் இருவரையும் ஒதுக்கிச் சென்றால் என் தான் பொருள்... யமக்கான ஒரு வினாவிற்கு விடையை யாரிடம் அனுகுவதாம்...
சித்ரியா : எம்மிடம் எதையும் வினவாதே வேதித்யா.. அவையின் விடையினை யான் அறிந்திருப்பினும் அதற்கான விளக்கங்கள் எம்மிடமில்லை...
" பின் அதற்கான விடையினை விளக்கங்களுடன் யாம் கூறலாமா " என்ற குரல் கேட்டு சித்ரியா அங்குமிங்கும் நடப்பதை நிறுத்த வேதித்யா எழில் திரும்பி பார்த்து விட்டு உடனே எழுந்து நின்றனர்...
அங்கு மொத்த குடும்பமும் இவர்களை நோக்கியவாறு நின்று கொண்டிருர்தது..
பவி : இவ்வாறு விடையளிக்காதிருந்தால் என் பொருளடா... அதையும் விடுத்து முக்கியத்துவமானது... யாம் உள் வரலாமா
எழில் : வா..வாருங்கள் தேவி..
மது : தேவியல்ல எழிலா.. யாம் உமக்கு அத்தைகளாவர்.. என முன் வந்து அவள் கன்னத்தை மென்மையாய் வருடி கூறியவளை எழில் நம்பாத பார்வை பார்த்தாள்...
நித்ரா : நம்ப முடியாத அளவு இது கின்னஸ் ரெக்கார்ட் இல்ல மச்சீஸ்... நான் தான் உங்க அண்ணி.. என ஓடிச் சென்று அவளை அணைத்து கொள்ள
மிதுன் : கிருக்கி அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடு டி.. ஏன் பறக்குர...
இக்ஷி : எங்களுக்குலாம் ஒரு டைமும் தேவையில்ல... வி ஆர் ஆல்ரெடி சிஸ்ட்டர்ஸ்... என முகத்தை செல்லமாய் சுழித்து கொண்டு நித்ராவின் இன்னோறு புறம் போய் நின்றாள்...
வளவன் :பசங்களா... சும்மா இருங்க என்கவும் இளையவர்கள் அனைவரும் வாயில் விரலை வைத்து கொண்டனர்...
எழில் : தாம் உரைப்பது மெய்யா என கேட்டதற்கு மது ஆமென தலையாட்டினாள்...
வீனா : யாமனைவரும் உம் குடும்பத்தினர் எழிலா.. தம்மை அடைய இயலாமல் தள்ளி வாழ வேண்டிய நிலையில் இருந்தோம்... நீவிர் எவ்வாறெல்லாம் தவித்தீரோ அதுவே யமது நிலமையும்.. தாம் உயிரோடுள்ளதையும் அறியாத பாவி நாங்கள்...
வேதித்யா : வேண்டாம் இவ்வாறெல்லாம் கூறாதீர்கள்
தான்யா : எம் மீதும் தவறுள்ளதடா... தம்மை தேடி யாம் வந்திருக்க வேண்டும் ஆனால்
வீர் : தனு.. விளக்கத்தை கூறுவதாய் கூறுவிட்டு தாம் அனைவரும் மன்னிப்பை வேண்டி மன்றாடிக் கொண்டிருக்கிறீர்கள்... எம் மருமகளை அழ விடாது முதலில் நிகழ்ந்தவையை கூறடி.. என்றதும் யாளி வீராங்கனைகளும் இளித்த விட்டு நடந்த அனைத்தையும் கூறினர்...
சித்ரியா இவை அனைத்தையும் முன்பே அறிந்திருந்ததால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி நின்றிருக்க அனைத்தையும் கேட்டு அழுகையோடு உறைந்திருந்த வேதித்யாவும் எழிலும் சித்ரியாவை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினர்...
சித்ரியா : வேதி எழிலா.. யாம் அழும் காலமனைத்தும் போய்விட்டதடா... இனி யமக்கு யாவரும் அன்றென யாம் தவிக்க அவசியமில்லை என அவர்களை அணைத்தது கொண்டு தலை கோதியபடி சமாதானம் செய்தாள்...
அனைவரும் அவர்களை ஆனந்த கண்ணீருடன் நோக்கினரெனில் நாகனிகள் அழ கூடாதென வாயை மூடி தங்களைத் தானே கட்டுப்படுத்த முயற்சிக்க அம்மூவரையும் இரட்சகன்கள் பின்னிருந்து அணைத்து கொள்ள அவர்களை நோக்கும் படி நம் நாயகர்கள் அனைவரும் கலைந்து நின்றனர்...
சித்தார்த் : மா.. போய் உன் பொண்ணுங்களையும் கவனி.. போ என ப்ரியாவை உலுக்கி தள்ளி விட
சத்தீஷ் : என் புள்ளை சொல்றான்ல போ தேவி.. போய் உன் பொண்ணுங்கள கூட்டீட்டு வா .. என இவனும் அவன் பங்கிற்கு கண்ணீரை மீறிய சிரிப்புடன் கூறினான்...
அவர்களை நெருங்கிச் சென்ற ப்ரியா இருவரையும் தன் இரு கரங்களால் அணைத்திருந்த சித்ரியாவின் கன்னத்தை பட்டும் படாமல் கண்ணீரோடு வருட அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் சித்ரியா தாயின் சேயாய் ப்ரியாவை கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள்...
அனுவும் திவ்யாவும் இவர்களிடம் நெருங்க முதலில் தமக்கையின் பின்னே ஒளிந்திருந்த குட்டித் தங்கைகளும் தயக்கத்திரையை உடைத்து தாயிடம் சரணடைந்தனர்...
அனைவரும் அக்காட்சியை மகிழ்ச்சியுடன் காண அன்றைய இரவு நாகனிகள் பிள்ளைகளும் கணவனும் கிடைத்த நிம்மதியில் இந்த இருவது வருடத்தில் கண்ணீரின்றி இளவரசிகளுடனே உறங்கினர்...
என்றுமில்லாமல் அன்றைய இரவில் விண்ணை வெறித்த படி நின்ற நித்யாவின் பின் தொண்டையை செறுமினான் சித்தார்த்... நித்யா திரும்பி அவனை நோக்க விண்ணை நோக்கியவாறே அவளருகில் வந்தவன் அவளும் விண்ணை நோக்கி திரும்பியதும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான்...
சித்தார்த் : யாருக்கேனும் கத்திருக்கிறீரா தேவி என மெதுவாய் கேட்க ஒரு முறை அவனை திரும்பி பார்த்தவள் பின்
நித்யா : ஹ்ம் காத்திருப்பு முடிந்தாயிற்று இரட்சகரே...
சித்தார்த் : ஆனால் அதற்கான மகிழ்ச்சியின் சாயலை எம்மால் உம் விழிகளில் அறிய இயலவில்லையே தேவி...
நித்யா : காத்திருப்பு மாத்திரமே முடிவு பெற்றதே ஒழிய அதற்கான பலன் கிடைக்காத போது எவ்வாறு எமக்கான மகிழ்ச்சி விழாகளில் இருக்கும் என சாதாரணமாய் கேட்பதை போல் புன்னகைக்க அப்புன்னகை ஏனோ தன் மனதில் வலி எழுப்பவதாய் தோன்றியது சித்தார்த்திற்கு...
நித்யா அங்கிருந்து ஏதும் சொல்லாமல் நகர்ந்துச் செல்ல சட்டென அவள் கரம் பிடித்தூ நிறுத்தியவன் அவளின் விழிகளுள் இன்றும் எதையோ தேட நித்யா ஒரு நிமிடம் பின் சாதாரணமாய் அவனின் மென்மையான பிடியிலிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டு நகர சித்தார்த்தின் மனதில் ஈட்டியை இறக்கியதை போலிருந்தது...
நிலவின் ஒளியில் மறு நிலவாய் ஜொளித்தவளை பார்த்து கொண்டிருந்த ருத்ராக்ஷின் மனம் மெதுவாய் துடித்து கொண்டிருக்க அவள் தன்னை காணாது இருப்பது ஏதோ ஒரு வித வலியை அவனுக்குள் உணர்த்த ஆருண்யா தன்னவன் அருகில் இருக்கிறான் என அறிந்தும் தான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என முட்டாள் தனமாய் முடிவெடுத்து பிரிய எண்ணமில்லாது சேர துடிக்கும் இதயத்தை ருத்ராக்ஷிடமிருது பிரித்து சென்றாள்....
இவை இரண்டிற்கும் நேர் மாறாய் அதித்தி ஆதியன்த் தன் முன்னே தன்னை சிரிக்க வைக்கும் படும் பாட்டை கண்டு ஒரு வழியாக சிரித்தாள்...
ஆதியன்த் : ஹா சிரித்து விட்டீரா... நன்று
அதித்தி : எதற்காய் இவ்வாறு மெனக்கெடுகிறீர் இரட்சகரே... யான் அழுதால் என்னவாம் இவ்வாறு நகைக்கச் செய்தே கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் என விளையாட்டாய் கூறியபடி கண்ணீரை துடைத்தவள் அவனின் பதிலை கேட்டு அவனை நோக்கினாள்...
ஆதியன்த் : பின்ன.. தோழி வருத்தத்திற்கு காரணத்தை அறிந்து அதை போக்குவது தானே தோழனின் கடமை...
அதித்தி : தோழியா... எமக்கு தாம் யாரென எண்ணுகிறீர்கள்...
ஆதியன்த் : இது என்ன வினா.. தம்மை கொல்லாமல் கொல்லும் சில இன்னல்களிலிருந்து அதை கடனாய் பேற்று நகைக்க வைக்கும் ஒரு சாதாரண தோழன் என சாதாரணமாய் கூற அதித்திக்கு தான் கண்ணீர் வற்றியிருந்தது...
அதித்தி : ஹ்ம் அவ்வின்னலுக்கு தாமே காரணமாயின் என் செய்வீர் இரட்சகரே என கேட்டவள் அவன் முகத்தை பார்க்காமல் அங்கிருந்து எழுந்து கோட்டைக்குள் ஓடினாள்...
சாதாரணமாய் சிரித்து கொண்டிருந்தவன் திடீரென அவள் கூறிய கூற்றில் யாரோ இதயத்தை பிடுங்கியதை போல் உணர்ந்து அவள் ஓடிய திசையை திரும்பி பார்த்தான் ஆதியய்த்... அவனது முகத்தில் அப்பட்டமாய் ஒரு வலியின் சாயல் தெரிந்தது...
தனக்கான அறையில் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டிருந்த அஜய் யாரோ கதவை தட்டவும் உள்ளே வர அனுமதி கொடுக்க தலையை நீட்டி எட்டி பார்த்தாள் ஐலா
அஜய் : ஹே ஐல் வா உள்ள
ஐலா : ஹாய் அஜு...
அஜய் : ஹாயெல்லாம் இருக்கட்டும்... இந்த நேரத்துல இங்க என்ன செய்ர
ஐலா : அது நா... ஓக்கே ஃபைன்... அஜு நா நெறயவே தனியா இருந்துட்டேன்... எனக்கு ஒரு பெரிய கூட்டு குடும்பம் தான் வேணும்னு நா சொல்லுவேன்ல... எனக்கு இப்டி இனிமேலும் இருக்க விருப்பமில்லாம... ஐ நீட் டு ஹவ் அ ஃபமிலி...
அஜய் : சரி என்ன அதுக்கு...
ஐலா : அம்.. அது எனக்கு உன் குடும்பத்துல வாழனும்னு ஆசையா இருக்கு டா... உன் பக்கத்துலையே இருந்துட்டு அப்பா அம்மா சித்தி சித்தப்பா பெரிம்மா பெரியப்பா மாமா அத்த அக்கா அண்ணி அண்ணா அத்தான் னு இவங்க எல்லாரு கூடையும் வாழனும்னு எனக்கு ஆசையா இருக்கு என்க அஜய் அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்
அஜய் : அதனால என்னங்குர இப்போ நீ... என கண்டு கொள்ளாததை போல் இவன் கேட்க அவள் கூறிய பதில் அவனுக்கு மைல்ட் அட்டக்கையே வர வைத்தது...
ஐலா : அது அது.. அது நா உன் மோகினி அத்தையோட இரெண்டாவது பையன கல்யாணம் பன்னிக்கலாம்னு இருக்கேன் என்க அஜய் கண்களை விரித்து அவளை நோக்கினான்...
அஜய் : என்னது
ஐலா : அச்சோ எனக்கு வெக்க வெக்கமா வருதே... இரெண்டு முறைலாம் கேக்காதடா என வெக்கத்தை மறைக்க முகத்தை கைகளால் மூடி கொண்டாள்...
அஜய் கோவத்தை அடக்க கூட முயற்சிக்காமல் அவன் வாளை உருவி
அஜய் : டேய் ருமேஷ் உன்ன சும்மா விட மாட்டேன் டா... என வாளை எடுத்து கொண்டு கதவு பக்கம் விரைந்தவனை ஐலா ஓடிச் சென்று பிடித்தாள்...
ஐலா :டேய் மாடு எங்கடா போர...
அஜய் : அன் அவன வெட்டி போட்டு சூப் வைக்க போறேன்.... என இவன் உறும எச்சிலை கூட்டி டவழுங்கிய ஐலா
ஐலா : டேய் மச்சான் ... என் வாழ்கய அழச்சிராத டா... அவரு தான் என் வாழ்கைக்கு ஒரு வழி காட்டீற்காரு என இன்னமும் அஜயை ஏற்றி விட
அஜய் : விடு டி என்ன... இன்னைக்கு உன் இறெக்கைய உறுச்சி பொறிக்காம விட மாட்டேன் டா என இவன் ஓரடி முன் வைத்து கதவை திறக்கவும் " டேய் ரக்ஷவ் அங்கேந்து ஓடீடு டா ... " என ருமேஷும் " நீ உயிரோட இருந்தா நாளைக்கு பாக்குறேன் டா அண்ணா " என ரக்ஷவ்வும் கத்தி விட்டு இரு புறத்திலும் பறக்கத குறையாய் ஓட கோவத்தை மறந்து முளித்த அஜய் ஐலாவின் சிரிப்பலை கேட்டு திரும்பி பார்த்தான்...
ஐலா : ஹாஹா ருமேஷ் அண்ணா ஐடியா செம்மையா ஒர்க் ஔட் ஆகுது டா மச்சான்...
ஐலா சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டிருக்க பின்னே உணர்ந்து அனைத்தையும் கொண்ட அஜய் பல்லை கடித்து கொண்டு அவளை துரத்த ஐலா அவனிடம் சிக்காமல் அந்த அறையை சுற்றி ஓடினாள்...
அஜய் : ஹே நில்லு டி என அவளின் கரத்தை பிடித்து நிறுத்தியவன் காலிடர இருவரும் கீழே தடுமாறி விழுந்தனர்... அஜயிடமிருந்தூ வேகமாய் எழுந்த ஐலா அவன் கன்னத்தில் வேகமாய் இதழ் பதித்து விட்டு
ஐலா : சாரி டா மச்சான் சும்மா விளையாண்டேன்... பட் நா சொன்ன எல்லாமே உண்மை...கூடவே ஒன்னு சொல்றேன்... நா உன் கூட வாழனும்னு நினைக்கிறேன்.. இந்த மாரி உன் அணைப்புல சிக்கி கிடக்கனும்னு நினைக்கிறேன்... நீ எனக்கு மட்டும் நா உனக்கு மட்டும்... உன் குடும்பம் என் குடும்பமாகனும்... நிறைய சொல்லீட்டேன்ல பரவாயில்லை லவ் யு தீபன் என அவன் அதிர்ச்சியில் உறைந்திருந்ந போதே அங்கிருந்து ஓரே ஓட்டமாய் ஓடி தப்பித்து கொண்டாள்...
மறுநாள் அனைவரும் சற்றே சகஜ நிலையை பெற்றிருக்க கோவன்கள் தங்களுக்கு என்ன ஆனதென்ற உண்மையை கூறத் தொடங்கினர்....
இருவத்தியேழு வருடங்கள் முன்பு
நாகனிகளின் பிரசவ நேரம் வரக்கூடுமென எதிர்பார்த்திடாத கோவன்கள் இதுவரை அவர்கள் அறிந்த அனைத்தையும் கூறி விட முடிவு செய்து அவர்களை அழைத்து கொண்டு ராஜ்ஜிய மர்வதன மண்டபத்தை நோக்கி சென்றனர்...
நாகனிகள் கருவுற்ற முதல் நாளில்.. கோவன்கள் மோகினி ஏழு மாதத்தில் துருவ் பிறந்தான் என கூறியதுமே அது உண்மையில்லை என உணர்ந்து கொண்டனர்... நாகனிகளின் பிரசவ காலம் ஆனால் நிச்சயம் குறுகியதாகவேத் தான் இருக்கும் என்பதையும் அறிந்து கொண்டனர்...
கோவன்கள் நாகனிகளின் வயிற்றை தீண்டிய அடுத்த நொடியே மனைவிகளினுள் எழும்பியிருக்கும் உயிர்கள் சாதாரணதல்ல வெகு சக்தி வாய்ந்ததென்பதை அவர்களின் சக்திகளே எடுத்துரைத்தது...
தங்கள் சக்தியே இவ்வாறிருக்க தங்களுடைய விந்தைகள் சக்திகளுடன் பிறக்காது என கூறினால் அன்று கயல் கூட நம்பியிருக்க மாட்டாள்...
நாட்கள் செல்ல செல்ல நாகனிகளின் மூன்றாம் மாதத்திலே அவர்கள் நிறைமாத குழந்தையை சுமப்பதை போன்று காட்சியளிக்கத் தொடங்க கோவன்கள் ஒரு நாளை முடிவெடுத்து அவர்களை அழைத்துச் சென்ற அதே நாள் இரட்சகன்களின் பிறந்தநாளாகவும் முடிவானது...
அனு திவ்யா மற்றும் ப்ரியா நாழு மாதம் களித்து வெளியே செல்வதால் நச்சிரித்து கேள்வி கேட்பதை விடுத்து அவர்களை மிகவும் பாடுப்படுத்தவில்லை...
கோவன்களை காக்கவே ராஜ்ஜிய மர்வதன மண்டபம் விரைவில் வந்தடைய அந்த இடது புற வாயிலுக்கு அழைத்து சென்று சென்ற முறை அவர்கள் யஜ்னுவர்த மலரின் இழ்களை பறிப்பதற்காக சென்ற அதே இடத்தின் வாயிலை திறந்து உள்ளே அழைத்து சென்றனர்...
அதன் அழகை மீண்டும் இரசித்தபடி வந்த நாகனிகளின் முகம் திடீரென மாற கோவன்கள் அதை கவனிக்கும் முன் அந்த இடத்தின் சூழலே மாறத் தொடங்கியது...
இவர்கள் முழுதாய் மலையும் கடலும் காற்றும் கலந்திருந்த இடத்தை அடையும் முன் நாகனிகள் அவர்களின் கண் முன்னே மூர்ச்சையாகி விழுந்தனர்...
இதை எதிர்பார்க்காத கோவன்கள் பயத்தில் பதற நாகனிகளை சூழ்ந்த ஊதா நிற ஒளி அம்மூவரையும் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றது...
கோவன்கள் தனிச்சையாக நடக்கும் செயல்களை ஒன்றும் புரியாமல் பார்க்க என்ன நடக்கிறதென சித்தத்தில் பதியும் முன்னரே அந்த இடம் முழுதும் அசுர காற்று வீசத் தொடங்கி அத்தோடு நாகனிகளின் அலரலும் வெளிவந்தது...
கோவன்கள் மூவரும் அவரவர் மனைவியை தேடி ஓட அவர்கள் மூவரையும் அந்த அசுரக்காற்று தடுத்து ஒன்றிணைத்து அவர்களின் வேகத்தை தணிக்க முயற்சித்தது...
" சற்று அமைதியடையுங்கள் கோவன்களே... நடக்க விருப்பது எவ்வொரு அசம்பாவீதமும் அல்ல " என ஒரு அசிரிர குரல் திடீரென அங்கு எதிரொலித்தது...
இந்திரன் : நீவிர் யார்.. என் நிகழ்கிறதங்கு...
" யான் பஞ்சபூதங்களின் இடையில் உள்ள வளி (காற்று) கோவனே.. " என அந்த புயலுக்கு இடையே பதில் வந்தது..
க்ரிஷ் : வளியா.. ஆயின் இந்நாழிகையில் தாம் மூவர் எதற்காய் எழுந்துள்ளீர்கள் என எரிமலையில் பொங்கிக் கொண்டிருந்த தீயும் அதை சுற்றி அமைந்திருந்த கடல் நீரும் பொங்கிக் கொண்டிருந்ததையும் கண்டு வினவினான்...
அந்த எரிமலையிலிருந்து தீ பந்து மிதந்து இவர்களை நோக்கி வர அதே போல் கடல் நீரிலிருந்தும் ஒரு நீராலான அருவம் எழுந்து வந்தது...
" உம்மை தடுக்கப்பதற்கு பொருத்தருளுங்கள் கோவன்களே.. ஆனால் இவை அனைத்தும் விதியே.. தம்மூவருடைய மைந்தன்கள் இங்கு இம்மண்ணில் தான் பிறப்பெடுக்க வேண்டும் "
சத்தீஷ் : எம் மைந்தன்கள் உருவாகி நான்கு மாதம் தான் கடந்துள்ளது.. அவ்வாறிருக்கையில் ஆறு மாதம் பின் யாம் இங்கு எம்மனைவிமார்களை அழைத்து வர வேண்டுமா..
" அன்று கோவனே.. இன்றே இன்னமும் சில வினாடிகளிலே தம் மூவரது மைந்தன்கள் பூமியின் அடி மட்டத்தில் அதாவது இங்கே பிறப்பெடுக்க உள்ளனர்.. " இதை கேட்டதும் கோவன்கள் அதிர்ச்சியடைய
க்ரிஷ் : என்ன.. எவ்வா.. அடிமட்டத்தில் பிறப்பெடுக்க உள்ள குழந்தைகளா.. அவ்வாறெனில் எம் மைந்தன்கள் என பாதி முடிப்பதற்குள்ளாக
" ஆம் கோவனே.. இன்னும் சில வினாடிகளில் தம் மைந்தன்களாய் பிறக்க உள்ளது இவ்வுலகின் பஞ்சலோக வம்சத்த்து அதிரதீர பிரிவின் முவ்வீரட்சகன்களே ஆவர்... "
இந்திரன் : அதற்கு எவ்வாறு வாய்ப்பு உள்ளது.. அத்துடன் பஞ்சலோக வம்சம் எந்நிர்பதந்தத்தால் பிறப்பெடுக்க உள்ளனர்... என இவர்கள் இவ்வாறு ஏதேனும் நிகழுமென எதிர்பார்த்ததால் சற்று அதிர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கேள்விகளை முன் வைத்தான்...
" நான்கரை மாதம் முன்பு எதிர்பாராத விதமாக யட்சினி சர்ப்ப வம்சத்தினர் விடுப்பெற்றுள்ளனர் ... அவர்களை அழிக்க போவதும் பஞ்சலோக சூரர்களாவர்... இவ்வைவவராலே இவர்களின் பிறப்பிற்கான நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது... அத்துடன் தம்முடைய மைந்தன்களால் இவ்வுலகில் பேரழிவுகளும் ஏற்பட காத்திருக்கிறது "
சத்தீஷ் : கூற வருவதை தையை கூர்ந்து தெளிவாய் கூறவும்
" தாமறியாதது இல்லை கோவனே.. அதிரதீர இரசகன்களின் ஆத்ம சக்தி சிங்கத்தை சாரும்.. ஆயின் இம்முறை அவர்களின் ஆத்ம சக்தி தம் மூவரது உயிர் சக்தியினால் சிம்மயாளிகளாய் உருபெற வாய்ப்புள்ளது.. அத்துடன் அவ்வாறு ஈடேரப்பட்டால் இவர்களின் இருவத்தியேழாம் வயதில் நிச்சயம் ஒரு பேரழிவு உண்டாகும் "
இந்திரன் : எத்துனை பேரழிவாய் இருந்தாலும் அதிலிருந்து அனைவரையும் காப்ப யாமனைவரும் என்றும் இருப்போம்...
"அதிலே ஒரு சிக்கலும் உள (உள்ளது) கோவனே.. இந்த இருவத்தியேழு வருட பயணம் தாம் இதுவரை கற்பனை கண்டிராததை போலிருக்கவுள்ளது.. இரண்டு அதிசக்திகளுள் ஒன்று விரைவிலே உயிரிழக்க நேரிடும் ஒரு சூழ்நிலையை சந்திக்க உள்ளது.. உம்மால் விதியை மாற்ற இயலாது கோவன்களே... இந்த வருட காலங்களில் நிச்சயம் ஓர் அதிசக்தியின் உயிரற்ற உடல்களை புவியுலகின் மண் தாங்கத் தான் போகிறது "
கோவன்களால் வாயே திறக்க முடியவில்லை... மூவரும் வாயடைத்து போய் நின்றிருந்தனர்...
" அஃது இரட்சகன்களின் பிறப்பை தம்மையன்றி வேறெவரும் அறியக்கூடாது கோவன்களே.. அது தம் குழந்தைகளுக்கு மாத்திரமல்ல இனி பிறக்கவிருக்கும் பராக்ரம வீரன்களுக்கும் நான்கு ஞாலங்களுக்கும் பேராபத்தை விழைவிக்கும்.. தம் மூவரது சக்தி இரட்சகன்களுக்கும் இருக்கவிருப்பதால் ஒரு சமயத்தில் தீயோர் அவர்களை கொண்டு நம் புவியின் அடிமட்டத்திற்கான வாயிலை கண்டறிந்து ஐந்து பஞ்சபூதங்களால் பாதுகாக்கப்படும் தம் மூவரது சக்தியை ஒத்த யஜ்னுவர்த மலரை கைப் பற்றி விட்டால் தம்மாலும் பின் விழைவை தாங்க இயலாது... இதுவே இயற்கையின் நியதியும் கட்டளையும்... இரட்சகன்களின் முதல் விழிப்பு ஈடேரும் வரையில் அவர்களே இரட்சககளென்ற மெய் எவருக்கும் தெரியக்கூடாது .. அத்தோடு தாங்க விருக்கும் அனைத்து இன்னல்களுக்கும் தயாராகுங்கள் ... விதியை எதிர் கொள்ளுங்கள் " என்றதோடு அனைத்தும் பழைய நிலைக்கு திரும்ப சமைந்து நின்றிருந்த மூவரும் ஒரு சேர கேட்ட மூன்று அழுகுரலில் திடுக்கிட்டு தன் நிலை பெற்றனர்...
ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டவர்கள் அதற்கு மேல் தாமதிக்காமல் அவரவர் மனைவிகள் அழைத்துச் செல்லப்பட்ட இடத்திற்கு ஓடினர்...
அங்கு தங்களின் அன்னைகளுக்கு பக்கவாட்டத்தில் ஒரு ஊதா நிற மலர்களால் ஆன பஞ்சில் வீரிட்டு அழுது கொண்டிருந்தார்கள் இரட்சகன்கள்...
காண்பதை நம்ப இயலாமல் இவர்கள் தடுமாற இவர்கள் அழைத்தோ அழைக்காமலோ அடுத்த சில நிமிடங்களிலே அங்கு விரைந்து வந்தது நம் சிம்மயாளிகள்...
குழந்தையை அந்த குகையிலிருந்து பதட்டம் நீங்காமலே தூக்கி வந்த மூவரும் வெளியே யுகி அகி மற்றும் விகியை கண்டதுமே சற்று அசுவாசமடைய தங்களின் முதுகில் தங்கள் கோவன்களின் மைந்தன்களும் தமது மகவுகளுமான இரட்சகன்களை தாங்கிக் கொண்டனர்...
இவர்கள் மூவரும் ஒருவரையொருவர் அதே அச்சம் நிறம்பிய முகத்துடன் பார்த்துக் கொள்ள அரை மணி நேரம் பின்னே தெளிவுற்று அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தனர்...
சிம்மயாளிகள் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி கொண்டு முன் செல்ல மூர்ச்சையான தம் மனைவிமார்களை மென்மையாய் ஏந்தி கொண்டு தரையையே வெறித்தவவாறு வந்து கொண்டிருந்த கோவன்கள் மூவரும் இறுதியாய் ஒரு முறை அந்த இடத்தை சுற்றி நோக்கினர்...
அந்த பஞ்சபூதங்களுக்கே தெரியாதே.. நம் நாயகன்கள் விதியையே மாற்றி அமைக்கவும் தயங்க மாட்டார்களென்று
அன்று தான் லீலாவதி மற்றும் கனேஷை சந்தித்தனர்... காலம் ஓடியது இயற்கையின் கட்டளைப் படியே இவர்கள் மூவரும் இரட்சகன்களை பற்றிய மெய்யை சஹாத்திய சூரர்களிடமும் தெரிவிக்காதிருந்தனர்...
பராக்ரம வீரன்களும் பிறப்பெடுத்தனர்... நாட்களும் ஓடியது இரட்சகன்களின் சக்திகளும் வளர்ந்தது... கோவன்கள் அனைத்தும் தெரிந்திருந்தாலும் தெரியாதது போலவே சுற்றித் திரிந்து கொண்டிருக்க அவர்கள் எதிர்பார்க்காததை போலவே எதிர்பாராத ஒரு நாள் யட்சினி சர்ப்ப வம்சத்தினர் போர் தொடுத்தனர்...
அப்போரில் தம்முயிரை இழந்தாலும் இரண்டாம் அதிசக்தித்தான சஹாத்திய சூரர்கள் இருக்க வேண்டும் என எண்ணிய கோவன்கள் இறுதியாய் சர்ப்பலோக வாயிலை அடைக்கச் சென்றனர்...
அங்கு யட்சினி சர்ப்ப வம்சத்தின் நஞ்சும் தம்முள் இருப்பதை அறிந்தவர்கள் தங்களின் மொத்தத் திட்டத்தையும் மாற்றி அமைத்து தங்களைத் தானே மாய்த்துக் கொள்ள தீர்மானித்தனர்...
எனெனில் அன்றைய போரில் இவர்கள் இரு வம்சத்தினருமே இறக்கவில்லை என்றால் எதிர் காலத்தில் என்றேனும் ஒரு முறை அவர்களுக்கு ஏதேனும் ஆகி விட்டாலோ அல்ல தங்களுக்கே ஏதேனும் ஆகி விட்டாலோ அது தாங்க மாட்டாத விசனமாகவே இருக்கும்
அதனாலே அவர்கள் பாதி உயிரை இழந்து கொண்டிருந்த போதே தங்களைத் தானே அழித்து கொண்டனர்...
இரட்சகன்கள் அவர்களின் இருவத்தியேழு வயதில் சந்திப்பதை போல் சூழல் ஏற்பட ஏழு வயதிலே பிரிக்கப்பட்டனர்..
ஆனால் நடந்ததே வேறு..
அன்று சர்ப்பலோக வாயிலை அடைக்க தங்களையே அர்ப்பணித்த கோவன்களின் உடல் எரிய தொடங்கியதும் அவர்களின் சாம்பல் பூவுலகில் கரைய அவர்களின் அதி சக்தி கலந்த உயிரொளி நான்கு ஞாலங்களுக்கும் இடையே உள்ள பிரவஞ்ச இடைவேளைக்குள் சிக்கிக் கொள்ள கோவன்களின் உயிரற்ற உடல் சர்ப்பலோகத்தின் இறுதி வாயில் வீற்றிருந்த சர்ப்பலோக கோட்டையின் அடிமட்டத்திலே தோன்றியது...
அந்த அடி மட்டத்தில் உள்ள சக்திகளும் மண் சிலைகளும் கோவன்களின் உடலை மண்ணோடு மண்ணாக்கியது... அவர்களின் பிணம் முழுதாய் சர்ப்பலோக மண்ணில் மறைந்தது எவருமே அறியாத ஒரு விசனமானது... ஆறு வருடத்திற்குப்பின் கோவன்களின் உயிரொளியை அண்ட பிரவஞ்சத்திலிருந்து சேமித்து அதை நூறாய் பிரித்தனர்... ஆனால் கோவன்களின் உயிரொளி அவர்களது உடலையே சென்றடைய உயிரோடு இருந்தும் இல்லாத நிலையிலே தங்கள் உயிரை பெற்றும் நிராயுதபாணியாய் அடைக்கப்பட்டனர்...
இதை ஆறு வருடம் பின் அறிந்த சாகாரகாந்தன் அதை பெரும் வெற்றியாகவே எண்ணி அவர்களின் சக்தியை நூறு பாகங்களாய் பிரித்து கிட்டத்தட்ட முன்னூறு சவப்பெட்டிகளில் அடைத்து விட்டு அவர்களின் உடலை தெரியாத்தனமாய் பலத்த பாதுகாப்புடன் கோட்டையின் அடிமட்டத்தில் பதப்படுத்தி வைத்தான்...
அவர்களின் திட்டமே கோவன்களின் உடலையும் யோகபரிபூஜன தினத்தில் பலி கொடுத்து அவர்களின் உடல்களில் ஏவலை எழுப்பி உலகை அழிக்க பயன் படுத்தி கொள்ளலாம் என்பது தான்... ஆனால் உண்மையில் மரணமெய்தி விட்டனர் எனப்பட்ட கோவன்கள் இறக்கவில்லை...
அதை சிம்மயாளிகள் மூன்றை தவிர்த்து வேறெவரும் அறியவில்லை... உணர்வு பூல்வமாக அவர்கள் உயிருடனே உள்ளனர் என்பதை உணர்ந்திருந்த சிம்மயாளிகள் எவ்வளவோ செய்து பார்த்தும் எத்துனை முறை உறுமி பார்த்தும் எவருக்கும் புரிய வைக்க முடியவில்லை...
உயிருடனே இருந்தாலும் கோவன்கள் எழுவதற்கும் வாய்ப்பில்லாமல் தான் இருந்தது... சித்தார்த்தை முன்பிருந்தே ஆட்டிப் படைத்தது அவனுள் இருந்த இரட்சக சிம்மயாளியே...
அந்த இரட்சக சிம்மயாளியின் கோவத்தை அடக்க முடியாத போது சிம்மயாளி உயிர்த்தெழ முயலும்... அவ்வேளையில் அவனின் பார்வை முழுவதையும் சிம்மயாளியின் பார்வை மறைத்து தன்னை ஏற்றுக் கொள்ள வற்புருவத்துவதால் அதை அறியாத சித்தார்த் கண் பார்வையற்றவனாய் பாவிக்கப்பட்டான்...
சர்ப்பலோகத்தில் முதல் முறை சித்தார்த் அந்த சவப்பெட்டிகளை கண்டு சினமுற்றதன் காரணம் அவனுள் இருக்கும் சிம்மயாளியே ...
அச்சிம்மயாளியும் கோவன்கள் இங்கு பிணமாய் சிறை வைக்கட்டிருக்கின்றனர் என அறிந்ததால் அதை கண்டதும் வெறி கொண்டது...
சித்தார்த் அவன் கட்டுப்பாட்டை இழந்தான்... அவன் அனுபவிக்கும் வலி கோவன்களின் பல பாகங்களாய் பிரிப்பட்ட சக்தியை கட்டுப்பாட்டை இழக்க வைத்தது...
அவனுள்ளிருக்கும் சிம்மயாளியின் சக்தியும் கோவன்களின் சக்திகளின் திடீர் இராட்சச ஆட்டமும் கோவன்களின் சிம்மயாளிகளை வெறியாக்கியது...
கோவன்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள புனிதமான பந்தத்தினால் இம்மூன்று இடத்திலும் நடந்த களோபரத்தை நாகனிகளின் மனமும் உணரத் தொடங்கியது ..
சித்தார்த் மெல்ல தன்னை கட்டுப்படுத்தியதும் மற்ற இரு இடத்தில் நடடந்த களோபரமும் ஒரு முடிவுக்கு வந்தது...
கோவன்களுக்கும் இரட்சகன்களுக்கும் தந்தை தனையன் என்ன பந்தம் உள்ளதை போலவே சிச்சயாளிகளுக்கும் இரட்சக சிம்மயாளிகளுக்கும் தந்தை தனையன் பந்தம் உள்ளது
இன்று .. சஹாத்திய சூரர்களின் கூற்றுக்களும் முவ்வீரையன் உருவாக்கிய இரணகளமும் அவர்களின் சக்திகள் மாத்திரம் முழுதாய் விடுபட திமிறச் செய்ய ரக்ஷவின் உதவியுடன் அச்சக்திகள் சிம்மயாளிகளால் விடுப்பட ரக்ஷவ் கோவன்களின் உயிரற்ற உடல் இருந்த மரப்பெட்டிகளில் வாளை சதக் சதக்கென இறக்கியது தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் இதயப்பகுதியில் இறங்கியது...
அஃது அனைத்தையும் நாம் அறிவோமே....
சஹாத்திய சூரர்கள் அனைவரும் ரக்வை கட்டி கொண்டு மகிழ்ச்சியில் கண்ணீர் விட ரக்ஷவ் அவர்களை ஐயா என மனமார அழைத்ததை போல் அவனை காரணமின்றி ஏக்கத்துடன் பார்த்திருந்த கோவன்களையும் அழைத்தான்...
அவனுக்கும் காரணம் தெரியாது... எவருக்கும் கேட்க வேண்டிய அவசியமும் இருப்பதாய் தெரியவில்லை.. இந்த மொத்த போரும் அவன் ஒருவனது உதவியினாலே நல்முறையில் முடிவுற்றதென மகிழ்ச்சி அடைந்தனர்
க்ரிஷ் : நாம நம்ம வீட்டுக்கு போலாமா... ரொம்ப வருஷமாச்சு... பழைய படி நம்ம வாழ்கைய எப்பவும் போல இனி நாம வாழலாம் இல்லையா...
அஷ்வன்த் : கண்டிப்பா டா... ஆனா முன்ன விட நாம இன்னும் சந்தோஷமா வாழ்வோம் என அவன் தோளில் கை போட்டு கொள்ள மற்றவர்களும் அமோதித்தனர்...
சித்ரியா : யாமும் வர வேண்டுமா தந்தையே...
அருண் : இங்கையே இருந்தா அங்க நாங்க துருவ்க்கு கல்யாணம் பன்னீடுவோம் குட்டிமா என்கவும் அவள் அண்ணா என சினுங்கினாள்... வருண் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தான்...
வருண் : ஆமா குட்டிமா நீங்களும் எங்க கூட வரத் தான் போறீங்க...
வேதித்யா : ஆனால் பூவுலகில் எம்மால் எவ்வாறண்ணா புதிய நடைமுறையை பழக முடியும்...
வீர் : கடந்த காலம் மாறியே எதிர்காலமும் இருக்காது டா... நீங்க சீக்கிரமே எல்லாத்தையும் பழகிக்கலாம்.... அதுக்கு நாங்க உங்க கூடவே எப்பவும் ஆதரவா இருப்போம்
எழில் : அவ்வாறெனில் சரி மாமா...யான் எம் பொருட்களை எடுக்க செல்கிறேன்...
வேதித்யா : நானும் நானும் வருகிறேன் எழிலா
சித்ரியா :பொருமையாய் செல்லுங்கள் .... யானும் வருகிறேன் என இவளும் அவர்களை பின் தொடர்ந்து ஓடினாள்...
அனைவரும் அவர்களை கண்டு புன்னகைக்கவும் சரியாக அங்கு லிலாவதியும் யட்சினிகளும் வந்தடைந்தனர்...
ரக்ஷா : தம்மை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் லீலா
லீலாவதி : யானும் தான் தேவி..
ரவி : இனி தாம் என்றும் எதற்கும் துன்பப்பட அவசியமன்று சகோதரி... தம் புதல்விகளுடன் சர்ப்பலோகத்தை சிறப்பாய் வழி நடத்துவீரென யாம் முழுமையாய் நம்புகிறோம்...
லீலாவதி : அன்று சகோதரரே... இச்சர்ப்பலோகத்தில் இனிமேலும் அடைத்து வைத்து அவர்களின் சிறகை முடக்க எமக்கு விருப்பமில்லை... அவர்களை தம் பொருப்பிலோ அல்லது கண்பார்வையிலோ பூலோகத்திலே வாழ வைக்க விரும்புகிறேன்... என தயக்கத்துடன் கூறி முடித்தார்.
அங்கிருந்த அனைவரின் மனதிலும் ஒரு சிறு சஞ்சலம் எழுந்தது... நம் இரண்டாமணி நாயகர்களை தவிர மற்ற அனைவரும் இரட்சகன்களுக்கானோரே யட்சினிகள் என அறிந்திருந்தனர்...
அவ்வாறிருக்கையில் இன்னமும் வாடிய மலர்களாய் சிறு புன்னகையுடன் இருக்கும் யட்சினிகளின் நிலை அனைவரையும் கவலையடையச் செய்ய
திவ்யா : தங்கள் புதல்விகளை யாம் பெற்ற புதல்விகளை போல் வைரமென பார்த்துக் கொள்வோம் தேவி என கூறி முடிக்கும் முன்
துருவ் : போங்க அத்த.. உங்க மருமகளுங்கள போய் கூட்டீட்டு வாங்க கெளம்புவோம்... என்றான் சாதாரணமாய் ... திவ்யா அவனை பார்த்து முளிக்க
கயல் : என்னண்ணா சொல்ற...
கார்த்திக் : ஆமா திவிமா... டக்குன்னு போய் கூட்டீட்டு வாங்க ... அப்ரம் உங்க பசங்க இழுத்துட்டு ஓடுனாலும் ஓடீடுவானுங்க என தீவிரமாய் கூறியவனின் கூற்றில் அதிர்ச்சியடைந்து இரட்சகன்களை நோக்கினர்..
இவர்களே எதிர்பார்க்காததை போல் ஆதியன்த் அப்போதே மயூரன் அதிசய பிறவியை போல் தோன்றியதால் அவன் குட்டி இறெக்கையையும் கை கால் தலையையும் தூக்கி திருப்பி பிரட்டி பார்த்து கொண்டிருக்க ருத்ராக்ஷ் யாவரையும் காணாமல் எங்கோ பார்த்தபடி நின்றிருக்க சித்தார்த் கழுத்தை தேய்த்தபடி ஒரு புன்னகையுடன் நின்றிருந்தான்...
யட்சினிகள் நம்ப முடியாமல் அவரவர் மணாளனை அதிர்ச்சி ததும்பிய விழியுடன் நோக்கினர்... இரசகன்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதும் நேற்றைய இரவு யட்சினிகளை சந்தித்து ஒரே நேரத்தில் உடைந்து போன மனதுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டது நினைவு வந்தது...
சகோதரன்கள் மூவரும் அப்போது ஒரே நிலையில் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்ட போது இவர்கள் அனுபவிக்கும் வலிகள் அனைத்திற்கும் அவர்கள் செய்யும் தவறே காரணமென்பதை அறிந்தும் வாய் விட்டு கூறாமல் நின்ற சேவனின் மனம் சித்தார்த்தின் செவிகளில் விழுந்தது தான் நாம் அறியா காதலின் மாயமோ...
இந்திரன் திவ்யாவை இடித்து அவர்களின் மருமகள்களை கண் காட்ட முகம் கொள்ளா புன்னகையுடன் மூவரின் நெற்றியிலும் இதழ் பதித்த திவ்யா அவர்களை அவர்களின் குடும்பத்தில் முழு மனதாய் வரவேற்க்க அதே போல் அனு மற்றூம் திவ்யாலும் அவர்களை மென்மையாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டனர்...
வளவன் : சரி நடந்தது நடந்துடுச்சு இனிமே நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது இல்ல... என கேட்க
தீரா : சச்ச கண்டிப்பா இருக்காது
கார்த்திக் : அதான் நீ இருக்கியே பாப்பு என்றவனை தீரா முறைக்க தீராவை மொத்த கூட்டமும் இப்போது முறைத்து பார்த்தது....
தீரா : ஹாய் பிக் இடியட்ஸ்... கம்பக் செம்மையாமாம்... சொல்ல சொன்னாங்க
க்ரிஷ் : வாங்க ஸ்மால் இடியட் எப்டி இருக்கீங்க...
தீரா : அன் நல்லாயிருக்கனே...
ஒவீ : நாங்க தானே நல்லா இல்ல நீ நல்லா தான் இருந்துர்ப்ப
தீரா : டயலாக்க மாத்தி சொல்லீர்க்கனுமோ
சத்தீஷ் : பாவி சும்மா ஒரு பேச்சுக்கு தான் டி என் மூளை வேலை செய்யாம போனாத் தான் என் அருமை புரியும்னு சொன்னேன்... இப்டி இருவது வர்ஷம் எங்கள கோமால தூங்க வச்சிட்டியே என பிடித்து வைத்து தலையில் வலிக்காமல் நங்கு நங்கெனை கொட்டினான்...
தீரா : அ அ அ டேய் பிக் இடியட் அதெல்லாம் நீ வாயி விடுரதுக்கு முன்னாடி யோசிச்சிற்க்கனும்...
வீனா : சொல்லுவ டி சொல்லுவ நல்லா போடுங்க அத்தான்
தீரா : தோ பாரு கொட்டி கொட்டி என்ன பூமிக்குள்ள அனுப்பிட்டீங்கன்னா உங்க எல்லாரையும் நா கழுத்த அன்னாந்து தான் பாக்கனும்... அப்டியே நா ஒரு இரெண்டு மணி நேரம் நிமிந்து நிமிந்து பாத்தா என் கழுத்து போய்டும்... அப்ரம் நா கீழ குனிய முடியாது... அப்ரம் என்னால கதை படிக்க முடியாது... கதை எழுதவும் முடியாது அப்ரம்
ரக்ஷவ் : ஹே பாப்பா பாப்பா பாப்பா போதும் போதும் போதும்ம்ம்ம்ம்ம்ம்
தீரா : ஹான் சேரி சேரி நீயும் கத்தாத டா அண்ணா
ப்ரியா :சரி அப்போ உன்ன என்ன தான் பன்றதாம்
தீரா : எல்லாரும் ஒரு ஒரு லாலிப்பாப் வாங்கி குடுத்துடுங்க ஈஈஈஈஈ
நிரு : நீ செஞ்ச வேலைக்கெல்லாம் நாங்க லாலிப்பாப்ல வெஷம் வைக்காம இருந்தா சரி என்கவும் அவள் பேய் முளி முளிக்க
தீரா : பரவால்ல எனக்கு வாங்கி குடு என அப்போதும் வேண்டுமென்பவளை சொல்லி என்ன செய்ய என இரண்டாமணி நாயகர்கள் தலையிலடித்து கொள்ள இந்த பதில் தான் வருமென அறிந்திருந்த முதலணி நாயகர்கள் சிரித்தே விட்டனர்...
ரக்ஷவ் : சிரிக்காகீங்கப்பா... இதான் சாக்குன்னு பாப்பா ஓடீடுவா
அருண் : நாங்க இருக்குரப்போ நீ ஏன் டா கவலப்படுர அவ சர்ப்பலோகத்து வாயில தாண்டுரதுக்கு முன்னாடி துரத்தி போய் புடிச்சிடுவேன்...
நீலி : ராசா எங்க படைத்தளபதிய நீங்க ரொம்ப தப்பா எட போடுறீங்க
தீரா : இவ எனக்கு இப்டிலாம் சப்போர்ட் பன்ன மாட்டாளே...
கோவன்கள் : படைத்தளபதியா என நம்ப முடியாமல் தீராவை பார்க்க
தீரா : அ மட்டிவிட்டுட்டாளே.. ஹி ஹி ஹி ஹி ஹி
விதுஷ் : ஏன் இப்போ நீ இவ்ளோ கேவலமா சிரிக்கிர
தீரா : வேண்டுதல் அதான்
சத்தீஷ் : ஹே இரு இரு யாரு தளபதி.. எதாவது ட்ராமா நடிக்கிரியா குட்டிமா நீ அதற்கு தீராவாக பதில் தர வரும் முன்
நீலி : தீராதீ தான் தர்ம ராஜ்ஜியத்தின் படைத்தளபதி கோவன்களே
க்ரிஷ் : என்னது தர்ம ராஜ்ஜியமா... பாப்பு தப்பான பதவிய குடுத்துட்டாங்க டி உனக்கு வா வா போய் நாம ராஜினாமா பன்னீட்டு வந்துடலாமே
தீரா : டேய் அண்ணா கலாய்க்காத டா நா சொல்றேன் என தான் தளபதியான வரலாறை கூறி முடிக்க
இந்திரன் : அப்போ எங்களுக்கே தெரியாம நாங்க உன்ன தளபதியாக்கீட்டோமா ஆனா உன்ன எப்டி தீருமா நம்பி தளபதியாக்குனாங்க
தீரா : ஆமா ஆமா..ஹான் அதான் அண்ணா தெரியல கேட்டு சொல்றேன் என அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் வந்த வழியையே குறுகுறுவென ஒரு வித படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ருமேஷ் : அடியே தீருமா.. இங்க வந்துட்டு அங்க என்னத்தடி தேடிக்கிட்டு இருக்க
தீரா : ஆங்... அது ஒன்னும் இல்ல ... என் பின்னாடியே ஒரு பேய் குட்டி வந்துச்சு இந்நேரத்துக்கு இங்க வந்துருக்கனும் ஆனா ஆளக்காணும்... திடீர்னு நடுவுல எங்கேயோ காணாம போய்டுச்சு.. அதா பாத்துட்டு இருக்கேன்..
ரனீஷ் : என்னது.. ஒரு பிசாசு பின்னாடி பேய் குட்டி வந்துச்சா... நம்ப முடியலையே...
தீரா : ஆமா ஆமா... அதை பார்த்த பேய்ன்னு கூடத் தான் நம்ப மாட்டீங்க... அப்புடி ஐஸ் மழைய பொழியும்.. என்றவளின் முகம் ஒரு சிறு கலக்கத்துடன் இருக்க அதை நீலி கண்டு கொண்டாள்.
அனைவரும் " பேய் ஐஸ் மழைய பொழியுமா. ஒருவேளை எதாவது புது கதையோட வரவ கூட்டீட்டு வந்துருக்காளா... என்ன ஆச்சு இவளுக்கு.." என ஒரு குழப்பத்துடன் அவளை ஏறிட.. அவளை நோக்கி வந்த ரக்ஷவ்
ரக்ஷவ் : பாப்பா.. பயப்படாத நான் போய் என்னன்னு பார்க்குறேன்.
தீரா : பயப்புடுரனா... அடேய் அடேய்... பொறு டா.. அவளே வருவா... அவ பாக்க வந்ததே உன்ன தான்...
ரக்ஷவ் : என்னது பேய் என்ன பாக்க வருதா... என அதிர்ந்தவன் ஸ்லோ மோஷனில் தீரா பார்த்து கொண்டிருந்த திசை நோக்கி திரும்ப.... அங்கு வெண்மை நிறத்தில் உருவான ஒரு வாயிலில் ஜலக் ஜலக் என கொலுசு சத்தம் கேட்டது...
அதை கேட்டவனுக்கு சந்திரமுகி படம் தான் நினைவிற்கு வந்தது...
நீலி : தீரா... அந்த குட்டிய எனக்கு தெரியும்னு நினைக்கிறேன்... அப்படித்தானே.. என தீராவை நோக்க
தீரா ம.வ : இந்த வந்துருச்சு அதோட கூட்டாளி இரெண்டும் சேர்ந்துச்சுங்கனா என் தலை தான் இங்க உருளும்...
இப்போது அனைவரும் வாயிலேயே உற்று நோக்கி கொண்டிருக்க.. வெள்ளை நிறத்தில் ஒரு துப்பட்டா மட்டுமே காற்றில் மிதந்து வாயிலின் வழியாக வெளியே வர.... அதை அரண்ட வழிகளுடன் கண்ட ரக்ஷவ் இரண்டடி பின்னோக்கி நகர... துப்பட்டாவை தொடர்ந்து வெண்ணிற சுடியில் நீல நிற பூக்கள் போட்ட ஆடையில்... கை நிறைய வண்ண வண்ண மலர்களை பறித்து வந்து நின்றவளை கண்டு அப்படியே நின்றுவிட்டான்.
அவள் : ஹாய்.... மை சூப்பர் ஹீரோ.... நா உன்னோட பெரிய்ய்ய்ய்ய ஃபேன்...
ரக்ஷவ் : என்னது... எனக்கு ஃபேனா
அவள் : அட ஆமா... உனக்கு தா ஃபேன்... என கூறியவள்.. கையில் உள்ள மலரை அப்படியே அவனை நோக்கி நீட்ட
ரக்ஷவ் : தாங்கியு... என அப்படியே வாங்க போனவனை தடுத்து
அவள் : உனக்கு புடிச்ச ஒன்னு மட்டும் எடுத்துக்கோ... என கூற.. அவன் அதில் தேடி பிடித்து ஒரு கருநீல நிற மலரை எடுத்தான்.
அவள் : ஹை.. வைலெட் பூ... உனக்கு இந்த கலர் பிடிக்குமா... எனக்கும் பிடிக்கும்... சேம் பின்ச்.. எனக்கு சாக்லேட் வாங்கி தா.. எனக் கூறிவிட்டு யோசித்தவள் பின்... ஆஹான்... லாலி பாப் வாங்கி தா.. என காரணமாய் கேட்டாள்.
ரக்ஷவ் : ம்ம்... சரி... வாங்கி தரேன் என கூறி அழகாய் புன்னகைக்க.. அவளும் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்
அனு : அடியே தீரா.. இந்த பொண்ண தா பேய்குட்டின்னு சொன்னியா??... ஏன் டி பச்ச குழந்தைய போய் பேய்ன்னு சொன்ன...
தீரா : ம்க்கும்... இவளா பச்சப்புள்ள இது சரியான விஷம்... என அவள் தங்கையையே புகழ்ந்து தள்ளினாள்...
வான்மதி ம.வ : நல்ல வேள தூரமா இருந்ததால இவங்க பேசுனது அவ காதுக்கு போகல
வந்திருப்பது தர்ம ராஜஜ்ஜிய போராளி தீரா (கல்கி வீரா)வின் வாழ்விலுள்ள ஒரு முக்கிய கதாபாத்திரம்... தீராதீயின் தங்கை தாரிகா
அவள் உள்ளே நுழைந்ததுமே சர்ரென்று பறந்து வந்த நீலி,
நீலி : ஹே... தாரி... எனக்கு தெரியும் நீதான் வரபோரன்னு... என்றவாறே அவள் தோளில் சென்று நிற்க..
தாரிகா : ஹே நீலி.... எப்டி தெரியும்...
நீலி : உன் அக்கா தா ஒரு பேய் குட்டி பின்னாடியே வருதுன்னு சொன்னா... என அழகாய் மாட்டி விட்டாள்...
தாரிகா ம.வ: இருடி... உனக்கு ஆப்பு ஆன் தி வே..., என நீலி கூறியாதும் கூட்டத்தில் தீராவை தேடி பிடித்து மூக்கு முட்ட முறைத்தாள்.
மற்றவர்களோ என்னது அக்காவா என வாயை பிளக்க... ரக்ஷா அதை வாய்விட்டே கேட்டு விட்டாள்..
ரக்ஷா : என்னது... தீரா தங்கச்சியா நீ..
தீரா : நம்ப முடியலலல்லா என்னாலையும் நம்ப முடியல ... ஆனா அந்த குட்டி பேய் தான் என் தங்கச்சி என முடித்த அடுத்த நொடி
தாரிகா : இல்ல இல்ல ரக்ஷா அண்ணி.., நா அவ தங்கச்சி இல்ல... அவ தா என் அக்கா... என்றவள் தான் கையில் வைத்திருந்த மலர்களில் ஒன்றை மலர்ந்த முகத்துடன் அவளிடம் கொடுக்க அதைப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் ரக்ஷா..
பவி : ரக்ஷா அண்ணியா... அவ பேரு உனக்கு எப்டி மா தெரியும்...
தாரி : அவங்க பேரு மட்டும் இல்ல... உங்க எல்லாரு பேரும் தெரியும்... உங்க எல்லாரையும் பத்தி நல்லாவே தெரியும்... என கூறி அவளுக்கும் ஒரு மலரை கொடுத்தாள்
வீர் : அட... தீரு எங்க எல்லாரையும் பத்தி சொல்லி இருக்கா போல... என சந்தேகமாய் கேட்க
தாரி : இல்லவே இல்ல... அவ என்கிட்ட எதையுமே சொல்ல மாட்டா... நா நெறயா தடவ இங்க கூட்டிட்டு வர சொல்லி கேட்டு இருக்கேன்.. ஆனா அவ என்ன கூட்டிட்டே வர மாட்டா.... எனக்கு உங்கள பத்தி சொன்னது என் பின்கி தான்..
வீர் : அதான பாத்தேன்.... அவனுக்கும் ஒரு பூவை கொடுத்துவிட்டு
தாரி : இவ தா பின்கி, என கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் அவர்களை சுற்றி கொண்டிருந்த பட்டாம்பூச்சியை சுட்டி காட்டினாள்.
அப்போதே அனைவருக்கும் தாங்கள் எங்கு சென்றாலும் இந்த பட்டாம்பூச்சி தங்களை சுற்றுவது நினைவிற்கு வந்தது....
மிதுன் : எது டா குட்டி... இந்த பட்டாம்பூச்சி உன் கிட்ட வந்து சொல்லுமா?
தாரி : இல்ல... இல்ல அண்ணா இது பட்டாம்பூச்சி இல்ல.. இது என்னோட ஸ்பை கேமரா... தீரா எங்க போனாலும் இத அங்க அனுப்பீருவேன்...
தீரா : அடி பிராடு பக்கி... அக்காவையே ஸ்பை வச்சு கவனிக்கிருயா??... கூடவே உளவளிய வச்சிட்டு சுத்தீர்க்கனே..
தாரி : உன்ன யாரு கவனுச்சா.... நா என் அண்ணாஸ தா கவனிச்சேன்.. என அவளுக்கு பதிலளித்தவள் கயலிடம் ஒரு மலரை நீட்டி விட்டு... எனக்கு ஒரு டவுட்.. என அவனை நிமிர்ந்து பார்க்க...
கயல்: என்ன டவுட் டா குட்டி
தாரி : உங்கள நா எப்டி கூபுடனும்...
கயல் : கயல் அக்கான்னு கூப்புடு
தாரி : ஓகே கயல் அக்கா.. இந்தாங்க.. பூ எடுத்துக்கோங்க... என மலரை நீட்டினாள்...
தீரா : இப்போ எதுக்கு டி எல்லாருக்கும் பூ குடுக்குற...
தாரி : யூ ஷட் அப்.... உனக்கு குடுத்தேனா.... இல்லல அமைதியா அந்த பக்கம் போ...
ரக்ஷவ் : ஆஹா... அக்காவுக்கு ஏத்த தங்கச்சி... என கூறியதில் அனைவரும் சிரிக்க... தீரா மட்டும் நோஸ் கட் வாங்கியதில் முறைத்து கொண்டு பாவமாக நின்றாள்...
தீரா ம.வ : ச்ச... எனக்கு மட்டும் எப்பவுமே சப்போட்டே கிடைக்க மாட்டுதே... ஏன் இறைவா இப்டி...
சித்து : அதுக்குளாம் ஒரு முக ராசி வேணும்...
அனைவரும் : எதுக்குலாம் முகராசி வேணும்...
அனு : சப்போட் கிடைக்கிறதுக்கு தா... என கூறினாள்...
தீரா : ஆஹா.. அம்மாவும் புல்லையும் மைண்ட் வாய்ஸ கேட்ச் பன்ன ஆரம்பிச்சுட்டீங்களா.... ச்ச.. நிம்மதியா மைண்ட் வாய்ஸல கூட பேச முடியலையே.. டேய் பிக் இடியட் உன் பொண்டாட்டி கிட்டையும் புள்ள கிட்டையும் சொல்லி வை டா என தலையில் கைவைத்து கொண்டு கத்தினாள்...
க்ரிஷ் : நீயாச்சு அவங்களாச்சு
தீரா : போங்க யாரும் எனக்கு சப்போர்ட் பன்ன மாற்றீங்க நா வேற எங்கையாவது போறேன்
கார்த்திக் : ஹே பாப்பு யானிருக்க பயமேன்... நா இருக்கேன் உன்னோட சப்போர்ட்டரு.. அதோட அங்கல்லாம் இன்னும் கலாய்ப்பாங்க டி வந்துடு
தீரா : நா அடுத்த சீக்வல வச்சா தான் உங்க வாய் அடங்குமோ என முறைக்க
சித்தார்த் : எங்க படைத்தளபதியே வந்துடு தெரியாம சொல்லிட்டேன் உனக்கு இல்லாத சப்போர்ட்டா வந்துடு பாப்பு வந்துடு என கையெடுத்து கும்பிட
தீரா : அன் அந்த பயம் இருக்கட்டும் என்றவளின் ஒரு காதை அர்ஜுன் திருக மறு காதை வர்ஷி திருகினாள்...
அர்ஜுன் : வாலு .. வாயடிக்காத குட்டச்சி என அக்காவும் அனைவரும் மாற்றி மாற்றி வாயடித்துக் கொண்டிருக்கும் போதே அனைவருக்கும் மலர்களை கொடுத்து முடித்த தாரிகா... இப்போது சகாத்திய சூரர்களை நோக்கி
தாரி : எனக்கு ஒரு டவுட்... என அவர்களை பார்க்க...
ரித்விக் : என்ன டவுட் குட்டிமா...
தீரா : அப்போ நா யாராம் என உதட்டை பிதுக்க
அஷ்வன்த் : நீ பாப்பு மா
நித்ரா : சின்ன பாப்பான்னு நெனப்பு உன் தங்க
தீரா : என்ன சொன்ன என்ன சொன்ன... ஐயா ஜாலி.. உலகத்துல ஒருத்தி என்ன சின்ன பாப்பா இல்லன்னு சொல்லிட்டா என குதிக்க
மதி : சின்ன பாப்பா இல்லன்னு தான் சொன்னா பாப்பா இல்லன்னு சொல்லல என்கவும் தீரா முகத்தை சுருக்க
தாரி : கொஞ்ச நேரம் உன் எஃப்எம்ம அடக்கு டி எரும.. உங்க எல்லாரயும் தீரா அண்ணான்னு தானே கூபுடுறா..
சரண் : ஆமா... ஆனா பல நேரம் மரியாதலாம் வராது டா...
தீரா : நா குடுத்த மரியாதை போதும் உனக்கு
தாரி : ஆமா... அவ அப்டி தா... அண்ணனுக்கு மரியாத தரனும்ன்னு தெரியாது... சரி அத விடுங்க... அப்போ நானும் உங்கள அப்டி தானே கூப்புடனும்... என தீராவை ஒதுக்கி விட்டு விட்டு தன் கேள்வியை கேட்க
அர்ஜுன் : வேணும்னா அப்படியே கூப்புட்டுக்கோ குட்டி....
தாரி : அப்போ உங்க பசங்கள நா என்னன்னு கூப்புட... என கேள்வியாய் சூரார்களை நோக்க.. அவளுடன் சேர்ந்து நம் இரண்டாம் அணியும், "அதானே... எப்டி கூப்புட ?" என அதே கேள்வியுடன் நோக்கினர்....
சூரர்களும் இப்போது அதே கேள்வியுடன் மனைவிகளை நோக்க... யாரிடமும் பதில் இல்லாமல் போனதால், இப்போது இந்த குழப்பத்திற்கு காரணமான தீராவை அனைவரும் ஒரு சேர நோக்கினார்கள்....
அதை கண்டு ரக்ஷவ் விழுந்து விழுந்து சிரிக்க... தாரிகாவோ அக்காவை குழப்பத்தில் ஆழ்த்திய மகிழ்ச்சியில் ஆனந்தமாய் புன்னகைத்தாள்.
தீரா : யாமிருக்க பயமேன்..உனக்கு என் அண்ணாஸ் எல்லாரும் மாமாஸ்... அண்ணீஸ் எல்லாரும் அத்தைஸ்
அனைவரும் : அப்போ நீ தாரிக்கு என்ன அம்மாவா
தீரா : இல்ல அக்கா... அப்ரம் எப்டி மாமா வரும் அத்த வரும்னு கேக்காதீங்க எல்லாம் வரும்...
தாரி : சரி ஓக்கே மாமா இவ செஞ்ச வேலைகளுக்கெல்லாம் நீங்க என்ன பன்ன போறீங்க என மறந்ததை நினைவு படுத்த
ராம் : நாம ஓட விடுரதால தான தப்பிச்சு ஓடுரா.. யாளிகள துரத்த விட்டா என்ன
தீரா : எனக்கு தப்பிக்க தெரியாதாக்கும்
மயூரன் : அறியவில்லையெனின் தான் ஆச்சர்யம்
தாரி : உன்னால தப்பிக்க முடியாது டி தீரா
தீரா : அத நா பாத்துக்குறேன் நேரமாய்டுச்சு நீ ஓடு
தாரி : அதுக்குள்ளையா நீ அங்க தான வரனும் அப்போ பாத்துக்குறேன் உன்ன... டாட்டா மாமாஸ் அத்தைஸ் அண்ணாஸ் அக்காஸ் அப்ரம் டாட்டா ஹீரோ... டாட்டா டாட்டா டாட்டா
தீரா : ஒன்னாவது எனக்கு சொல்றாளா பாரு போதும் போ டி என விரல்களை சுடக்கிட்ட அடுத்த நொடி தாரி அங்கிருந்து மாயமாய் மறைந்திருந்தாள்..
மோகினி : இதெல்லாம் எங்கேந்து குட்டிமா கத்துக்குட்ட
தீரா : ஹிஹிஹி அபி மாமா கூட பயிற்சி எடுத்து என முடிப்பதற்குள்
ராகவ் : என்னது மாமாவா
தீரா : அக்கா புருஷன் மாமா தானே என முளிக்க
அஷ்வித் : இங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு நீ அங்க ஜாலியா இருக்கியா
தீரா : ஆவூன்னா இந்த டயலாக் சொல்லாதீங்க டா... நா ஜெயிலுக்குலாம் போய்ட்டு வந்தேன் தெரியுமா
முகில் : ஜெயிலா... அந்தளவுக்குலாம் நீ ஒர்த்தில்லையே குட்டச்சி
தீரா : ஆமா தான் ஆனா... டேய் என முதலில் வாய் தவறி உளறி விட்டுபின் அவன் கூறியதை ரீவைண் செய்து பார்த்து முறைத்தாள்..
திவ்யா : கரெக்ட்டா தான டி கேட்டான்
தீரா : கேப்ப கேப்ப... இவனுங்களுக்காக நா ஜெயிலுக்கே போனேன்... இதுல இவனுங்க மூணுபேரால திரும்ப வேற வானு என்ன ஜெயிலுக்கு அனுப்ப ப்லன் போட்டுட்டு இருக்கேங்குரா என முதலில் சஹாத்திய சூரர்களை பார்த்து கூறிட்டுபின் கோவன்களை குறித்து கூறினாள்...
அஜய் : வானு அப்டிலாம் பன்ன மாட்டாங்க நீ பழி போடாத
தீரா : ஆமா ஆமா அவ ஒன்னும் பன்னலன்னாலும் என்ன முன்னாடியே ஜெயில்ல போட்ட அந்த சுழல் மண்டையன் எதாவது பன்னுவான்...
இக்கூற்றை முதல் அணி நாயகன்கள் குறித்து வைத்து கொண்டனர்...
வைஷு : எல்லாம் சரி ரீசன்ட்டா ஒரு ட்விஸ்ட் வச்சியே அதுக்கு உன்ன என்ன பன்னலாம்... உயிரோட இருந்த மாமாஸ கொன்னு எல்லாரையும் இத்தன வர்ஷம் ஏமாத்தி அத்தன பேரு கேட்டும் அவங்க வருவாங்கன்னு சொன்னியா
தீரா : சொல்லீட்டா அது ட்விஸ்ட்டாகுதுல்ல.... என முளிக்க
நவ்யா : இன்னும் உனக்கு ட்விஸ்ட்டு பைத்தியம் விடலல்ல
ஐலா : எவ்ரிவொன் அட்டக்க்க்க்
தீரா : அதெல்லாம் பன்ன மா... அடியேய்ய்ய்ய் அடப்பாவிங்களா என முதலில் ஒரு பயத்திலே பேசி கொண்டிருந்தவள் சிரித்து கொண்டிருந்த இந்திரனால் அவள் மீது நீர் பொழியவும் கத்தினாள்
இக்ஷி : வாங்க அட்டக்
தீரா : மீ எஸ்கேப் ஓடு ஓடு ஓடு
கோட்டையிலிருந்துதங்களின் பொருட்களுடன் வெளியே வந்த இளவரசிகளும் யட்சினிகளும் அனைவரும் எங்கோ சிரித்தபடி ஓடுவதை கண்டு ஒன்றும் புரியாமல் முளிக்க ரக்ஷவ் அவர்களின் ரியக்ஷனை கண்டு இன்னமும் சிரிக்க அவனோடு மற்ற அனைவரும் வெடித்து சிரிக்க அதே மகிழ்ச்சியுடன் சர்ப்பலோகத்திலிருந்து விடைப்பெற்று வேதமுரத்தை அடைந்தனர்.
புவியில் எந்த ஒரு இன்னலும் இன்றி அமைதியும் மகிழ்ச்சியும் பரவியிருக்க இவர்கள் அனுபவித்த அனைத்து வலிகளுக்கும் பலனாய் பூவுலகில் எந்த இன்னலுமின்றி அது என்றும் போல் நிம்மதியாய் வாழ வகுக்கப்பட்டதை போல் வானம் தெளிவுற்றிருந்தது....
நாயகன்கள் அவரவர் நாயகியின் கரத்தை பிடிக்க அனைவரின் முகத்திலும் எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் ஒன்றாய் வாழ உள்ளோம் என்ற மகிழ்ச்சி தாண்டவமாட அனைவருமாய் ரக்ஷவை இறுக்கி அணைத்து கொண்டனர்...
சர்ப்பலோகம் அவர்களுக்கு எந்தளவு வலியை கொடுத்திருந்தாலும் இம்முறை வாழ்வு முழுவதும் குறைவில்லா ஆனந்தம் இடைப்பதை போல் விருப்பப்பட்ட காதலுடன் இணைய வைத்திருக்கின்றது...
சர்ப்பலோகத்தின் மாயம் உறவுகளை பிரிக்காது அவர்களை மீண்டும் இணைய வைத்து இக்குடும்பத்தை தன் மாயத்தால் வழியனுப்பியது
அந்த வானத்தை போல இவர்களின் வாழும் தெளிவுற்று அன்பிலும் நட்பிலும் காதலிலும் உறவிலும் சிறந்து மகிழ்ச்சியோடு வாழ நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்....
நன்றி!!!
திரைகதை
வசனம்
கற்பனை
தீராதீ
டாட்டா இதயங்களே... நோ லுக்கு கதை முடிஞ்சு ஓடுங்க
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro