மாயம் -73
சில நிமிடங்கள் முன்...
நாயகன்கள் அனைவரும் மடிந்தமர்ந்த வேளை கதிரவன் முழுதாய் மண்ணிற்குள் பதுங்கியிருந்தான்... இரத்தக்கிளறியாய் இருந்த அமைச்சன்கள் நாயகன்களை இந்நிலையிலே கொல்ல முயற்சிக்கும் முன் யாளி வீராங்கனைகள் மகன்களின் அரணாய் எதிர்த்து வர இவர்களை எதிர்த்து தாம் இருக்கும் நிலையில் நிச்சயம் யுத்தமிட இயலாதென்பதை உணர்ந்திருந்த அமைச்சன்கள் கோட்டைக்குள் விரைந்தனர்...
வீனா அவர்கள் செல்வதை கண்டு தடுக்கும் எண்ணத்தில் அவளது வாளை இங்கிருந்தே இறுதியாய் சென்று கொண்டிருந்த சாகாரகாந்தனை குறி வைத்து தூக்கி எறிய அது தவறுதலாய் சாகாரகாந்தனின் முதுகில் சரெக்கென குத்திய நொடி இரண்டு சாகாரகாந்தனும் ஒன்றிணைந்தனர்...
தன் தாக்குதல் அவனை நிற்க வைத்ததை கண்டு வீனா ஓரடி எடுத்து வைக்கும் முன் சாகாரகாந்தனை வலுக்கட்டாயமாய் மற்ற நாழ்வர் உள்ளே இழுத்துச் செல்ல அந்த இரும்பு கதவு தடாளென அடைத்து கொண்டது
அனைத்தும் முடிந்து விட்டதென யாளி வீராங்கனைகள் மண்ணில் வீழ்ந்திருந்த மகன் மருமகன்களை கண்டு கதறினர்... எவ்வளவோ போராடியும் இவர்கள் போரினை வெல்ல முடியவில்லை என எண்ண போரின் முடிவே இதுவல்ல என உணர்த்துவதை போல் மூச்சு வாங்க அங்கே வந்து சேர்ந்தனர் சஹாத்தியசூரர்களும் நாகனிகளும்...
மோகினி குத்துயிரும் குழையுயிருமாய் மூச்சு விட இயலாமல் கீழே கிடந்த ராமை எழுப்ப கண்ணீருடன் போராடி கொண்டிருந்தாள்... ஆனால் அவளது எந்த முயற்சிக்கும் ராம் ஒத்துழைக்கவில்லை...
மருண்ட நிலை நீடிக்கையில் என்ன செய்வதென தெரியாமல் அனைவரும் தவிக்க நாயகன்கள் தனிச்சையாக எழுந்து கொண்டனர் ஆனால் அவர்களின் நிலையை கண்டால் நிற்க கூட இயலாமல் அவர்கள் முயல்வதாய் தான் தெரிந்தது... முன்பு தைரியமளித்து அனைவரையும் முன்னேற்றிய முதலாம் நாயகிகளுக்கும் இப்போது நம்பிக்கை மெதுமெதுவாய் குறைந்து கொண்டிருக்க யாவரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மண் நிலத்தில் பரந்து விரிந்திருந்த காற்றில் மாற்றம் ஏற்பட்டு அதன் வேகம் கூடியது...
இரட்சகன்களின் கண்கள் விட்டு விட்டு ஒளிர சித்தார்த்தின் இறெக்கை திடீரென அவன் முதுகிற்குள் மறைந்து கொள்ள எவரும் எதிர்பார்க்காத வகையில் இப்போது ராமும் எழுந்து நின்றான்...
அவனின் முகம் முழுவதும் பாதி இரத்தத்தில் நனைந்திருக்க அதற்கு நேர் மாறாய் ராமின் கரம் அவனது வாளின் பிடியை இறுக்கியது... அவனை நெருங்கச் சென்ற ஒவீயை துருவ் எதற்காகவோ பிடித்து நிறுத்த அவன் பார்வை இரட்சகன்களையே நோக்கிக் கொண்டிருந்தது...
யுகி மீதமர்ந்திருந்த ரக்ஷவ் திடீரென சிம்மயாளிகள் மூன்றும் இரட்சகன்களின் முன் நகர்வதை கண்டு சுற்றி முற்றி நோக்கினான்... சித்தார்த் இமைகளை பிரித்த நொடி அவனது விழிகள் இரண்டும் இரத்த சிவப்பாப் சிவந்து அதில் பாதிக்கும் மேலாக ஊதா நிறம் ஆட்சி கொண்டிருந்தது....
யாளிகள் அனைத்தும் உறுமவும் பிளரலிடவும் தொடங்கி அந்த இடத்தையே தங்களின் ஓசைகளால் நிறப்ப நம் முதலாம் அணி நாயகர்களுக்கோ நடக்கும் எந்த நிகழ்விற்கு காரணம் தெரியவில்லை...
முன்பை போலவே சிம்மயாளிகள் ஒரு கண்ணிற்கெட்டா வெறியினால் சூழத் தொடங்கியதை நாகனிகளால் உணர முடிந்தது... ஆனால் அன்று கோட்டைக்குள் இருந்த போது இருந்த அளவிற்கு இன்றைய நிலை சிறிதாய் தெரிந்தாலும் பராக்ரம வீரன்களுக்கும் பருந்து சகோதரர்களுக்கும் சித்தார்த்தின் கண்கள் அன்றைய அதே நிலையில் இவன் இருக்கிறான் என உணர்த்தியது...
சித்தார்த்தை அடக்கவே ருத்ராக்ஷ் ஆதியன்த்தின் தேவை அவசியமென்கையில் சித்தார்த்துடனே ருத்ராக்ஷ் ஆதியன்த்தும் அதே போல் நின்றது அனைவரையும் எச்சிலை கூட்டி விழுங்க வைத்தது....
யட்சினிகளை கட்டி தொங்க விடவும் அவர்களின் உடலில் உள்ள நாகசக்திகளை உறிஞ்செடுக்க இரசாயனம் ஏதோ ஒன்றை அவர்கள் மீது ஊற்றினர்... அது பட்டதும் அவர்களின் தோலை கிளிக்க வேண்டும் என தோன்றுவதை போல் பற்றி எரியத் தொடங்கியது...
யாளிகள் இப்போது முன்பிருந்ததை விட சத்தமாய் ஓசையெழுப்ப சஹாத்திய சூரர்கள் அவளைகளை கட்டுப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்...
அந்த ஓசைகள் அனைத்தையும் கிளித்தெறிவதை போல் யட்சினிகளின் அலரல் அனைவரின் செவி மண்டங்களையும் அரள விட அடுத்த நொடி இரட்சகன்கள் மூவரும் அந்த கோட்டைக்குள் நின்றிருந்தனர்....
நாகனிகளே இவர்களின் சக்தியில் வாயடைத்து நின்றிருக்க உலகம் அதிரும் ஓசை அனைவரையும் சிலிர்க்க வைத்தது.... புழுதி மறைய காத்திருக்கும் அளவிற்கு நம் நாயகர்களுக்கு பொருமை இல்லாததால் தன் கரத்தை உயர்த்தி அதன் மறுபுறமாய் இழுத்து காற்றால் புழுதியை கலைய வைத்த ப்ரியா பேரதிர்ச்சியுற்று உறைந்து நின்றாள்...
அனைவரும் அவர்கள் கண்ட காட்சியில் நம்ப முடியாமல் அவ்வாயிலை நோக்கி கொண்டிருந்தனர்... யுகி அகி மற்றும் விகி மூன்றும் ரக்ஷவிற்கு முன் அந்த வாயிலை நோக்கிய படி நின்று கொண்டிருக்க அம்மூன்றிற்கும் முன் ராகவ் ராம் மிதுன் அஷ்வித் மற்றும் கார்த்திக் கண்களை மறைத்த கொலைவெறியுடன் அவரவர் மிருக உருவில் கடித்து குதற இரத்தக் கோலத்தில் காத்து நின்றனர்...
அவர்களுக்கு மேல் வருண் அருண் ஆதவ் மித்ரன் மற்றும் அஜய் அந்த கோட்டையின் மையத்தை அளவு கடந்த அழலுடன் (கோபத்துடன்) இரத்தக் கோலத்தில் குரல் வளையத்தை பிச்சு திங்க காத்திருப்பதை போல் துளைத்துக் கொண்டிருந்தனர்....
இவர்களுக்கு முன் அந்த வாயிலுக்கு சில அடிகள் முன்னே ஊதா நிறம் பாதி கலந்த தங்களின் ஆத்ம நிறக் கண்களுடன் யட்சினிகளை துன்புறுத்தியதால் எழுந்த அளவு கடந்த சினத்துடன் முதல் முறை தங்களின் உருவை எடுத்ததனால் மொத்த சக்தியையும் கட்டுப்படுத்த கூட எண்ணமில்லாமல் குரோதமாய் பார்த்த படி சிம்மயாளிகளின் உறுவில் நின்றிருந்தனர் இரட்சகன்கள்...
இரட்சகன்களின் உறுமல் அந்த கோட்டையையே மீண்டும் ஒரு முறை அதிர வைக்க விந்வார்த்த யஷ்டிகள் காண்பதை நம்ப இயலாமல் விழி விரித்து மாரடைப்பு வராத குறையாய் நின்று கொண்டிருந்தனர்...
சித்தார்த்தின் உடல் சிகப்பு நிறத்தில் மிளிர அவன் கண்கள் ஊதாவும் சிகப்பும் கலந்த நிறத்தில் இருந்தது...
ருத்ராக்ஷின் உடல் நீல நிறத்தில் மிளிர அவனது கண்கள் ஊதாவும் நீலமும் கலந்த நிறத்தில் ஒளிர்ந்தது...
ஆதியன்த்தின் உடல் முழுதாய் வெள்ளையிலும் சாம்பல் கலந்து மிளிர அவனது கண்கள் பாதி ஊதாவிலும் வெள்ளையிலும் ஒளிர்ந்தது...
அதே சிங்கத்தலை... குதிரையின் உடல்... சிங்கத்தின் கால்களென சிம்மயாளிகளின் அதே உருவில் அனைவரையும் கொலை நடுங்க விட்டு நின்றிருந்த இரட்சக சிம்மயாளிகளை நம் கோவன்களின் சிம்மயாளிகள் பார்க்கும் பார்வை முன்பிற்கெல்லாம் இருந்ததை விடுத்தும் வித்யாசமாய் தெரிந்தது அனைவருக்கும்...
கோவன்களின் சிம்மயாளிகள் தங்களின் மகன்களின் வெற்றியை காணுவதை போல் ஒரு வித கர்வத்துடன் இரட்சக சிம்மயாளிகளை நோக்கிக் கொண்டிருக்க நாகனிகளுக்கு ஏதோ தோன்றினாலும் அவர்களால் எதையும் பகுத்தறிய முடியவில்லை....
வளரி பாட்டி : ஹாஹாஹாஹாஹா கூறினேனன்றோ...கூறினேனன்றோ... என கை தட்டி சிரித்தவரின் சிரிப்பு சத்தத்துடன் அந்த இடம் முழுவதிலும் அமைச்சன்களின் இதயம் துடிக்கும் திக் திக் ஓசையை தவிர்த்து வேறெதுவும் கேட்கல்லை...
இத்துனை வருடங்களும் இரட்சகன்களுள் உள்ள மிருகம் அல்லது ஏதோ ஒன்று என குறிப்பிடப்படுவது இம்மூன்று மிருகங்களே ஆகும்... பராக்ரம வீரன்களை போலவே இரட்சகன்களாலும் மிருக உருவத்தை எடுக்க முடியும்... அவர்களின் விலங்கினம் சிங்கமாகும்.. ஆனால் கோவன்களின் மகன்களாய் பிறந்திருக்கும் இப்போதைய பிறவியில் அவர்களுக்கு முன்பே இருந்த சக்திகளில் தந்தை தாயின் மாய சக்தியும் இணைந்துள்ளதால் அவர்களின் ஆத்ம சக்திகள் பராக்ரம வீரன்களை போல் முன்பே வெளி வரவில்லை...
கோவன்களின் உயிரில் கலந்திருக்கும் சிம்மயாளிகளினாலும் வேறொரு காரணத்தினாலும் இரட்சகன்களின் உயிரில் கலந்திருக்கும் சாதாரண சிங்கங்கள் பரிணாம வளர்ச்சியினால் சிம்மயாளிகளாகியது...
இதுவே கோவன்களின் சிம்மயாளிகள் இரட்சகன்களுக்கு அடங்கவும் இப்போது கோவன்களின் சிம்மயாளிகள் இரட்சக சிம்மயாளிகளை தங்களது உதிரத்தில் உதிர்ந்தவர்களாய் பார்ப்பதற்கும் காரணமாகும்...
தீரா : இந்நேரத்துக்கு உங்களுக்கு டௌட்டு வந்துருக்கனும்... ஆனா அது வந்துருக்காது.. அதனால நானே அப்ரம் சொல்றேன்...
அதிர்ச்சியிலிருந்து முதலில் வெளி வந்த முதலாம் அணி நாயகர்கள் அனைவரும் கோட்டையின் ஆறாம் மாடியில் நின்று கொண்டு வாயிலில் பாதி ஜூவையே அழைத்து வந்திருந்தவர்களை ஆவென பார்த்து கொண்டிருந்த பஞ்சலோக விந்தைகளையும் இளவரசிகளையும் காண வீர் இளவரசிகள் மூவரையும் கண்ட அடுத்த நொடியே ஆனந்த அதிர்ச்சியடைந்திருந்தான்...
சற்றும் நொடிகளை தாழ்த்தாமல் தன் நிலை பெற்ற மகரகாந்தன் தப்பிக்க வழி நாடி மாடியில் நின்ற நாயகிகளையும் இரட்சக சிம்மயாளிகளை கண்டு விதிர்விதிர்த்திருந்த யட்சினிகளையும் கவனித்து விட்டு ஒரு யுக்தி இன்றி தப்பிக்க கேடயமாய் பஞ்சலோக விந்தைகளை உபயோகிக்க முடிவெடுத்தான்...
அவனது மனம் புரிந்ததை போல் சித்தார்த் அவனை நோக்கி பல்லை கடித்து சீர சற்றும் சிந்திக்காது மகரகாந்தன் அவனது வலது காலை மண்ணில் பலமாய் பதித்து கோட்டை வாயிலின் முன் ஒரு புதிய பாரையை எழுப்பினான்...
இவனின் திடீர் செயலில் அனைவரும் திடுக்கிட அடுத்த நொடி மகரகாந்தன் அவனது சக்தியை உபயோகித்து கோட்டையின் புறம் ஒரு மிதி மிதிக்க நாயகிகள் நின்ற தரை பகுதி அப்படியே பொத்து கொண்டு மண்ணில் விழுந்தது...
நாயகிகள் அலரிய அலரலோடு இவர்கள் மீது தாவிய நாயகன்கள் அந்த பெரும் பாரையில் மோதி நின்றனர்... இரண்டாமணி நாயகன்களின் கண்களை வெறி முழுதாய் இப்போது மறைத்திருக்க ருத்ராக்ஷ் தன் உறுமலால் அனைவரையும் உலுக்க வைத்ததோடு அந்த பாரையை நோக்கி ஓடிச் சென்று அதை இடிக்க அவனின் பலம் அந்த பாரையை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் நிலத்தில் நின்றோரை தள்ளாட வைத்தது...
அந்த ஒரு பாரையே வாணளவு உயர்ந்திருந்ததால் ஆகாய பிறிவின வீரன்களாலும் உள்ளே நுழைய இயலாது போக மேலிருந்து கீழ் விழுந்ததால் ஏற்பட்ட காயத்துடன் எழ கடினப்பட்ட நாயகிகளை திடீரென பத்திற்கும் மேற்பட்ட நாகமனிதர்கள் சுற்றி வளைத்து அவர்களை நோக்கி ஈட்டியை முன்னோக்கி வைத்தனர்...
மகரகாந்தன் : நாழியை தாழ்த்தாதே விஞ்ஞவெள்ளா... யட்சினிகளின் உதிரத்தை நம் பிரபுவிற்கு காணிக்கையளி என உரக்க கத்த இப்போது மீண்டும் ருத்ராக்ஷ் தன் பலத்துடன் அந்த பாரையை இடித்து மகரகாந்தனையும் தள்ளாட செய்தான்...
திடீரென அந்த பாரையின் பின்னிருந்து கேட்ட யாளிகள் மற்றும் பராக்ரம வீரன்களின் உறுமல்களின் ஓசை மட்டுப்பட மகரகாந்தன் எதற்கும் முன்னெச்சரிக்கையாய் அவனது இரு கரத்திலும் அழுத்தம் கொடுத்து அந்த பாரையை வலுவாக்க அவனின் சக்தியை தவிடு பொடியாக்குவதை போல் நிலத்தில் எழுந்த ஒரு அதிர்வு அந்த பாரையை தகர்த்தெறிந்து சுக்கு நூறாக்க இரண்டாமணி நாயகர்களுக்கு முன் நின்றிருந்த சஹாத்திய சூரர்களுள் பலுப்பு நிற கண்களுடன் மகரகாந்தனை நேருக்கு நேராக பார்த்து நின்றான் சரண்....
மகரகாந்தன் அவன் இரு கரத்தையும் உயர்த்தி அந்த ஒரு பாரைக்குப் பின் அடுத்தடுத்து பல மதில்களை மண்ணிலிருந்து எழ வைத்து நீண்ட பாதுகாப்பு கேடயத்தை உருவாக்கினான்...
அவனால் முடிந்த வரை இவன் பாரைகளை உருவாக்க சரண் அனைத்தையும் இமை மூடும் வேளையதில் சுக்கு நூறாக்கி தள்ள அவனின் பின் பொருமையின்றி நின்றிருந்த இரட்சக சிம்மயாளிகள் மண்ணில் குதித்து வானத்தை நோக்கி உறுமியது...
கோவன்களின் சிம்மயாளிகள் அவைகள் செய்ய போவதை அறிந்ததை போலவே நிற்க ஆதியன்த்தின் முதுகில் புடைத்த வெண்ணிற இறக்கையின் உதவியுடன் அவன் மின்னலென வான் நோக்கி பறந்தான்...
ஆகாய பிறிவின வீரன்கள் ஐவரும் ஆதியன்த்தை சற்றும் கண்டு கொள்ளாமல் விண்ணில் இவர்களுக்கு தடையாய் இருந்த பாரைகளை கொலை வெறியுடன் உடைத்து நொருக்கிக் கொண்டிருந்தனர்...
சரணின் உதவியினால் இவர்கள் முன்னேறி சென்றாலும் மகரகாந்தன் மீண்டும் மீண்டும் பாரைகளை எழுப்பி கொண்டே இருக்க மகரகாந்தனே எதிர்பாராத போது யானையாளி மீது நின்றிருந்த தான்யா உள்ளே குதித்து மகரகாந்தனை நோக்கி தன் வாளை வீசினாள்...
தான்யாவின் திடீர் தாக்குதலில் கவனம் திசை திரும்பி மேடையை விட்டு கீழே விழுந்த மகரகாந்தனை அடுத்த நொடி வெண்ணிற சிறுத்தை ராம் பாய்ந்து வந்து கடிக்க மகரகாந்தனின் அலரலின் ஊடே நித்யாவின் ஆரித் என்ற சத்தம் அனைவரையும் திரும்ப வைத்தது...
நித்யாவின் குரல் சித்தார்த்தை முன்பிருந்ததை விடுத்தும் அதிகளவு சினமுறச் செய்ய அளவின்றி எழுந்த கோவத்தை கட்டுப்படுத்த இயலாமல் உறுமியவனின் வாயிலிருந்து வெளியேறிய தீயலைகள் அவனை சுற்றிலும் ஒரு பெரும் தீ வளையத்தை உருவாக்க அந்த தீ வளையத்திற்குள்ளே நாயகன்கள் அனைவரும் நின்றிருந்தனர்...
தான்யாவை தனியே விடாது ப்ரியா மதிலின் மீதிருந்து தாவி உள்ளே குதித்தாள்... ப்ரியாவின் கால் அம்மண்ணில் பட்டதும் ஒரு புதிய அதிர்வு அந்த மண்ணில் பரவியதை எவரும் அறியவில்லை...
கீழே முட்டு கொடுத்து நின்ற ப்ரியா அவளை நோக்கி வந்த எமதர்மனை கண்டு தன் வாளை உருவி ஒரே சீவில் எமதர்மனை இரண்டாய் வெட்டினாள்...
நித்யாவின் கரத்திலிருந்து வலிந்த உதிரம் அந்த யாககுண்டத்தில் கலந்த அடுத்த நொடியே அந்த குண்டத்தில் வெடியை தூக்கி போட்டதை போல் அது சத்தமாய் வெடித்து அனைவருக்கும் இதயத்தில் நடுக்கத்தை கொடுக்க அதை விடுத்தும் கோவன்களின் சிம்மயாளிகள் மூன்றும் திடீரென அடித் தொண்டையிலிருந்து குரூரமாய் உறுமிக் கொண்டு அனைவரையும் தாண்டி குதித்து ரக்ஷவுடனே அந்த கோட்டைக்குள் நுழைந்தது...
சிம்மயாளிகளின் கண்கள் கோவன்களின் ஆத்ம நிறத்தில் இருப்பதை கண்டு அவைகள் கட்டுப்பாட்டை மீறி விட்டதென உணர்ந்த ருமேஷ் வேகமாய் பறந்து சென்று ரக்ஷவை இழுத்து கொண்டு கீழே விழுந்தான்...
தாவி சென்ற கோவன்களின் சிம்மயாளிகள் முதல் வேலையே இது தான் என்பதை போல துடிதுடித்து கொண்டிருந்த எமதர்மனை குதறத் தொடங்கியது...
ஆதியன்த் வேகமாய் வந்து ஆருண்யாவின் கரத்தை வெட்ட முன்னேறி வந்த மிதரவர்தனன் மீது பாய்ந்து அவன் அலர அலர கதற கதற அவனது கழுத்தை கடித்து குதற அருளவர்தனன் வேகமாய் தன் குறுவாளை உருவி ஆருண்யாவின் கரத்தை வெற்றிகரமாய் கிளித்து அவளது உதிரத்தையும் அந்த தீயில் கலந்தான்...
அடுத்த நொடியே அவன் மீது வெறி கொண்டு வேங்கையென பாய்ந்த மித்ரன் ஆருண்யாவின் கரத்தை வெட்டிய அருளவர்தனனின் வலது கரத்தை தனியே பிய்த்து தூர எறிந்தான்...
யாளி வீராங்கனைகள் அனைவரும் உள் நுழைந்திருக்க யானையாளிகளும் அந்த கோட்டைக்குள் நுழைந்து தங்களின் காலடியினாலே அனைவரையும் அதிர வைத்தது...
வளவன் இரண்டாமணி நாயகிகளை சுற்றி வளைத்திருந்த நாகமனிதர்களை நோக்கி சென்று அவன் சக்தியினால் அந்த நாகமனிதர்களை ஒரு அரவத்தினால் கதற விட்டான்... அவர்கள் வலியில் கதறி நாயகிகளையும் துன்புறுத்த முயல அதற்கும் முன்னே உள்ளே பாய்ந்து வந்த மது நிரு பவி மற்றும் ஒவீ அந்த நாகமனிதர்களை சட்னியாக்க வீனா ரக்ஷா வர்ஷி மற்றும் அனு நாழ்வரும் துஷ்ரந்களை எண்ணிக்கையின்றி வெட்டி குமிக்க தொடங்கினர்...
மோகினி மற்றும் அவளின் மகன்கள் மூவரும் அந்த மேடையை சுற்றி உள்ளே விடாமல் தடுத்த நாகமனிதர்களை அவர்களின் சக்திகளால் காயமடைய வைத்து கொண்டிருந்தனர்... ஒரு நாகமனிதன் இவர்களை நோக்கி வீசிய ஈட்டியை தாவி வாயாலே பிடித்த கார்த்திக் ஒரு சுழற்று சுழற்றி அதை ஏவிய விஞ்ஞவெள்ளனின் நெஞ்சிலே இறக்கினான்....
அஷ்வித் நிலத்தில் காலை தேய்த்து அதி வேகமாய் ஓடி சென்று அதித்தியின் கரத்தை கிளிக்க முணைந்த சாகாரகாந்தனை தனது புஜத்தால் ஒரே அடி அடித்து மண்ணில் தலை புதைய கீழே தள்ளினான்...
கீழே விழுந்த சாகாரகாந்தனின் தலையை கடித்து ராகவ் இழுக்க அவன் அலரிய கேவலமான அலரல் அனைவரையும் அச்சமடைய வைத்தது...
ஈட்டியை தாங்கிய விஞ்ஞவெள்ளன் நிலத்தில் விழும் முன் அவன் இரண்டாய் பிரிய அந்த இரண்டாய் பிரிந்தவன் எழுந்து நிற்பதற்கு முன்னே அவன் மீது பாய்ந்த அஜய் அவனின் கழுத்தை கடிக்க தொடங்கியிருந்தான்...
நித்யா மற்றும் ஆருண்யாவின் உதிரம் கலந்தும் சித்தார்த் மற்றும் ருத்ராக்ஷ் இருவரும் சினத்தால் எழ முயன்ற ஏதோ ஒன்றை தடுத்து கொண்டிருப்பதை போல் அவர்களை முன்னேறி செல்ல விடாமல் சத்தமாய் உறுமிய கோவன்களின் சிம்மயாளிகளை தாண்ட இயலாமல் பதிலுக்கு சீரி கொண்டு நின்றிருந்தனர்...
சாம்பரா நேரம் வந்து விட்டதை உணர்ந்து அந்த வானம் இருளால் சூழத் தொடங்கியதை கண்டதும் அவளது வெள்ளி வாளினால் அதித்தியின் கரத்தில் ஒரு வெட்டிட்டு அவளது உதிரத்தையும் அந்த யாக குண்டத்தில் கலக்க இரட்சக சிம்மயாளிகள் ஒரு சேர அங்கிருந்த அனைவரின் உயிர்மூச்சையும் நிறுத்துவதை போல் உறுமிய உறுமலை விடுத்தும் அந்த யாக குண்டத்தின் தீ வெடித்த சத்தமே மிக மிக பெரிதாய் தெரிந்தது...
நாயகன்களால் மரணத்தை காணப்போகும் அமைச்சன்கள் ஐவரும் யட்சினிகள் மூவரின் உதிரமும் கலந்ததை கண்டு சத்தமாய் கொக்கரிக்க லீலாவதியின் இல்லை என்ற அலரல் அனைவரையும் உலுக்கியது...
அந்த யாக குண்டத்திலிருந்து எழுந்த அந்த வேகமான ஊதா நிற கருந்தீ அதற்கு பின்னிருந்த பெரும் நாகச்சிலையை முழுதாய் பற்றி கொண்டு எரிய தானாக அந்த நிலமே பெரும் இரைச்சலினால் சூழ தொடங்கி அந்த வானமே இருள தொடங்கியது....
அந்த தீயினால் இன்னும் இருள் அப்ப முழு வானமும் ஒளியை மறந்து நிழலுள் மறைய அந்த நாகச்சிலை இரண்டாய் பிளந்து ஊதா நிற கண்கள் அனைவரையும் துளைப்பதை போன்ற அழகுடன் தெள்ளத் தெளிவாய் தெரியத் தொடங்கியது....
அந்த சிலைக்கு நேரெதிரே இருந்த இடத்தில் திடீரென தரை மறைந்து அதில் வேறேதோ உள்ளிருந்து எழத் தொடங்கியது.... வைஷு அதை கண்டு கண்களை விரிக்க அவள் முன்பு கண்ட அதே மூன்று கண்ணாடி சவப்பெட்டிகள் இரும்பினால் சூழப்பட்டு அங்கு தோன்றியது...
அந்த காலி சவப்பெட்டிகள் எதற்கானதென்று அறியாமல் அதற்குள் யட்சினிகளை வைக்க போகின்றனரோ என மனம் தாறுமாறாய் சிந்திக்க அனைவரையும் இன்னும் குழப்புவதை போல ஆதியன்த்தை தள்ளி விட்டு எழுந்த மிதரவர்தனன் அந்த மேடையை நோக்கி பாய்ந்து அவனது முதுகிலிருந்த ஒரு நீண்ட கோடாரியை எடுத்து அந்த கண்ணாடி சவப்பெட்டிகளை வெட்டினான்... சிம்யாளிகள் ஆறும் பயங்கரமாய் உறுமியது
சலக் என்ற சத்தத்துடன் அந்த கண்ணாடி தூள் தூளாய் நொருங்கி விழ அந்த கண்ணாடி சவப்பெட்டிகளுக்குள் இருந்த மரத்தாலான பெட்டிகள் இப்போது அவன் முன் அந்த நிலத்தில் வீற்றிருந்தது...
அனைவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க வேகமாய் ஒரு பெரும் ஒளியுடன் அந்த நாகச்சிலை மொத்தமாய் பிளந்து அதற்குள்ளிருந்து மூன்று கருந்தலை கொண்ட வானளவு உயர்ந்த சர்ப்பம் ஆழமான சீரலுடன் வெளியேறியது...
அமைச்சன்கள் ஐவரும் அதை கண்டு கையுயர்த்தி வானை பார்த்து " ஹரித்தேரா... ஹரித்தேரா... தமக்கு விடிவு காலம் கிட்டி விட்டது பிரபுவே... தமக்கு விடிவு காலம் கிட்டி விட்டது... இந்த ஆகால பிரவஞ்சத்தையும் யாம் ஆளப்போகிறோம்... " என உரக்க கொக்கரித்தனர்...
பாலமுத்திர கோட்டை
ஒரு வழியாக பல இன்னல்களை தாண்டி அந்த முவ்வீரையனின் சிலை முன் நின்றிருந்தனர் நமது குட்டி நாயகர்கள்... அவர்களை முன்பே கஜன் கோட்டையின் மேல் புறத்தில் விட்டு விட்டதால் எங்கெங்கோ சென்று சர்ப்பலோகமும் சென்று வந்து இப்போதே வாயிலை அடைந்திருந்தனர்... பல உயிரினங்களை எதிர்த்து வாயிலை வந்தடைந்தவர்களுள் நீலி மற்றும் பிறை சோர்வடைந்து காணப்பட வேர்வை வேர்த்து குளித்திருந்த சேவனும் மயூரனும் ஒருவரை ஒருவர் நோக்கி விட்டு அந்த சிலையில் ஏதேனும் கிடைக்கிரதா என பார்ப்பதற்காய் முன்னேறினர்...
ஆனால் அவர்களின் காலடிகள் இரண்டடி தாண்டும் முன் திடீரென அந்த சிலையில் ஏதோ மாற்றம் தெரியத் தொடங்கியது... அச்சிலை மெதுமெதுவாய் ஆடுவதை போலிருக்க பின்னே பாலமுத்திர கோட்டை தான் ஆடுகிறதென புரிந்து கொண்ட இருவரும் தன்னவள்களை நோக்கி ஓடினர்...
பிறை மற்றும் நீலி சோர்வு மறந்து படக்கென மேலே பறக்க தொடங்கியிருக்க மயூரனின் உதவியினால் மேலே வந்த சேவனும் அவர்களுடன் முவ்வீரையனின் சிலையை எச்சிலை கூட்டி கண்டனர்...
ஒரு கட்டத்தில் அந்த நடுக்கம் திடீரென நிற்க அந்த சிலையின் கண்கள் அவர்களின் கண் முன்னே திடீரென ஊதா நிறத்தில் பளிச்சென மின்னியது...
அதை கண்டதும் நாழ்வரும் அதிர்ந்து போய் வேகமாய் வெளியே செல்ல நகர அந்த ஊதா நிற கண்களின் வழியே வந்த ஒளி அந்த மொத்த சிலையையும் சூழ்ந்த அடுத்த நொடி இவர்கள் நாழ்வரும் எதிர்பார்க்காததை போல் அந்த சிலை அங்கிருந்து மின்னி மறைந்திருந்தது...
மயூரன் : யாம் உடனே சர்ப்பலோகம் சென்றாக வேண்டு என இவன் கத்தி கொண்டே முன்பு இவர்கள் சர்ப்பலோகம் சென்ற இரகசிய பாதையை நோக்கி வேகமாய் விரைய பிறை மற்றும் நீலியும் நடக்கப் போவதை கனித்திருந்ததால் கேள்வியின்றி அவர்களை வேகமாய் பின் தொடர்ந்தனர்...
சர்ப்பலோகம்
நம் நாயகர்கள் எவருமே அந்த மகாப்பிரபு என்னும் மிருகத்தை கண்டு அஞ்சியதை போல் தெரியவில்லை... அனைவரும் ஏதோ நடக்கவிருப்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்ள அந்த மகாப்பிரபுவோ " சரித்தேரா சரித்தேரா.. சீடர்களே... எமக்கான ஊண்களெங்கே(உணவுகளெங்கே)... பல்லாயிரக்கணக்கான வருடங்களாய் உயிர்த்தெழாததால் மிகுந்த பசியிலுள்ளேன்... எமக்கான விருந்தை அளிக்காதிருப்பின் தம்மையே உண்டு களித்திடுவேன் " என கூறி முடிக்கும் முன்னே சரியாக மண்ணிலிருந்த பல கூண்டுகள் ஒவ்வொன்றாய் எழ அவை அனைத்திலும் ஷேஷ்வமலையின் உயிரின வம்ச குழந்தைகள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர்...
விஞ்ஞவெள்ளன் : தமது விருந்தினை யட்சினிகளிடமிருந்தே தொடங்குங்கள் மகாப்பிரபு... தமக்கான முதல் பலி... தமக்கான மொத்த சக்தியாய் இருக்க உள்ளவர்கள்
திவ்யா : என்னடா எண்ணிக் கொண்டிருக்கிறாய்.... யட்சினிகளை பலி கொடுத்து அவர்களை காவு வாங்க பார்க்கும் தமது அழிவே நெருங்குகிறது... என கர்ஜித்தவளை கண்ட மகாப்பிரபு " இரண்டாம் நாகனியாரே... தமது சக்தியின் அதிர்வலைகளை கொண்டு இந்நிலத்தில் குழுமியிருக்கும் மொத்த உயிர்களையும் எம்மால் ருசிக்க இயலும் " என ஆழ்ந்த குரலில் கூறவும் கோவன்களின் சிம்மயாளிகள் எவ்வொரு அசைவுமின்றி அமைதியாய் நின்றது... திவ்யா பல்லை கடித்து பதில் கூற வர அதற்கும் முன்
மகரகாந்தன் : வேண்டாம் நாகனியாரே... எம் மகாபிரபு உயிர்த்தெழுந்த பின் தமக்கு வெற்றி கிட்டுமென சொப்பனம் காணாதீர்கள்...
வளரி பாட்டி : நீர் தானடா சொப்பனம் காணுவது... உம் மகாபிரபுவும் அழியத்தான் போகிறார் என கூறியதும் ஆதித்யா சனலை போட்டு விட்டதை போல் அந்த ஆறுவருமே இடி போல் சிரித்தனர்...
சாம்பரா : ஹே கூறுகெட்ட கிழவியே... எம் மகாப்பிரபுவை அழிக்க எவராலும் முடியாதடி
வளரி பாட்டி : ஏனடி முடியாது... ஏன் முடியாது... இரட்சய பத்மவிமோச்சன முவ்வியாளனை மறவாயோ... அவன் எழுந்தால் உம் மகாப்பிரபு என்ன.. இவ்வொட்டு மொத்த பிரவஞ்சமும் அழிவை காணும்
மகாப்பிரபு : ஹாஹாஹாஹா அவன் எழ காரியமாய் (காரணமாய்) இருப்போரே அல்லாது அவன் எவ்வாறடி கிழவி எழுவான்.. இவ்வுலகிலே இது நாள் வரையில் பிறப்பெடுக்கா வம்சத்தில் பிறக்கும் விந்தைகளால்.. அதுவும் சிம்மயாளிகளை கொண்டே உயிர்த்தெழுவான் அந்த முவ்வீரையன்... ஹாஹாஹா உலகிலே யாம் மூன்று உயிரின வகை உயிர்த்தெழுந்த முதலில் இருந்தே பிறப்பெடுக்காத ஏழாம் வம்சம்... யாவரும் அறிந்திடாத வம்சம்... நாயக்கர் வம்ச விந்தைகளின்றி எவ்வாறடி அவன் எழுவான் என இவன் அனைவரையும் உலுக்குதை போல் கரிஜிக்க உண்மையில் நம் முதலணி நாயகர்கள் அனைவரும் அவனின் இறுதி கூற்றில் ஆடித்தான் போயினர்....
அவன் கூறி முடித்த அடுத்த நொடி வளரி பாட்டி கை தட்டாத குறையாக அந்த வளாகமே அதிரும் அளவிற்கு சிரித்தார்...
வளரி பாட்டி : உம் விழிகள் முன் ஆறு சிம்மயாளிகள் உள்ளதை கண்டாயோ நீ... கோவன்களின் சிம்மயாளிகள் அன்றி உமது அழிவை குறிக்கும் நாயக்கர் வம்சத்தின் மூச்சங்களை கண்டாயோ நீ என இன்னும் அதிர வைப்பதை போல் உரக்க கத்த அனைவரின் பார்வையும் மையத்தில் நின்ற இரட்சக சிம்மயாளிகளை ஏறிட்டது...
அந்த மகாப்பிரபுவே வளரி பாட்டியின் கூற்றை நம்ப இயலாமல் அதிர்ந்து இரட்சகன்களை காண அவர்களின் கண்களில் இருந்த ஊதா நிறம் மீதி பாதி கண்களையும் ஆக்ரமித்து அவர்களை இவ்வளவு நேரமும் கட்டுப்படுத்தி கொண்டிருந்த கோவன்களின் சிம்மயாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க இருள் கவ்விய விண்ணிலிருந்து காற்று பலமாய் அடித்து அவர்களை சுற்றி ஒரு ஊத நிற புகையை உருவாக்கியது..
அப்புகையோ அந்த மகாப்பிரபுவின் உயரம் வரை வளர்ந்து வளர்ந்து அந்த மகாப்பிரபுவயே விதிர்விதிர்க்க வைக்க நம் முதலணி நாயகர்கள் எது நடக்கக் கூடாதென எண்ணினார்களோ அது நடக்கப் போவதையும் அது இரட்சகன்களாலே நடக்கப் போவதையும் எண்ணி தவிதவித்தனர்....
இரண்டாம் அணி நாயகிகளும் இளவரசிகளும் விண்ணை வியப்பாய் பார்த்து கொண்டிருந்தனர்... புயல் காற்றடித்து அந்த இடம் முழுவதும் பேய் மழை பேயத்தொடங்கியது....
அந்த ஊதா நிற புகை வளர வளர அனைவருள்ளும் பயமும் அதிர்ச்சியும் மற்றும் சில பல உணர்வுகளும் எகிர அனைவரின் மூச்சையும் நிறுத்தி வைப்பதை போல் அனைரின் காதுகளும் கிளிய கேட்டது அந்த மகா உறுமல்....
அனைவரும் செவிகளை மூடி பதைபதைத்து அப்புகையை காண புகை மறைய மறைய அனைவரும் அக்காட்சியை கண்டு விதிர்விதிர்த்து போயினர்... பராக்ரம வீரன்கள் பத்துவரும் அமைச்சன்களை காவு வாங்குவதற்காய் எவ்வொரு உணர்வுமின்றி தயாராகினர்... நீலி மற்றும் பிறையுடன் ஆறடி உயரத்திலே அவ்விடத்திற்கு ஓடோடி வந்த சேவனும் மயூரனும் தாங்கள் தாமதமாய் வந்ததை நேரம் கடந்தே உணர்ந்தனர்...
அந்த மகாப்பிரருவிற்கு நேரெதிரே மிகப் பிரம்மாண்டமாய் மூன்று அதிசக்தி வாய்ந்த இரட்சக சிம்மயாளிளால் எழும்பி சித்தார்த் நாயக் ருத்ராக்ஷ்ய நாயக் மற்றும் ஆதியன்தத நாயக் ஆகிய மூன்று இரட்சகன்களை கொண்டு உயிர்த்தெழுந்து நின்றான் இரட்சய பத்மவிமோச்சன முவ்வியாளன் எனப்படும் முவ்வீரையன்...
மாயம் தொடரும்...
ஹலோ இதயங்களே... இந்த யூடில என்னோட பெஸ்ட்ட குடுத்துர்க்கேன்... உங்களுக்கும் புடிச்சிர்க்கும்னு நம்புறேன்... இன்னமும் நல்லா இல்லன்னு தோனுனா சொல்லுங்க... இப்போவாவது ட்விஸ்ட்டு புரிஞ்சிதா இதயங்களே....
இரட்சகன்கள் தான் முவ்வீரையன்...
வேற என்ன... இன்னும் இரெண்டு இல்ல மூணு யூடில கதை முடியப்போது... எப்பிலாக் கண்டிப்பா இருக்கு கவலப்படாதீங்க.... அடுத்த யூடில உலகம் இருக்குமான்னு பாப்போம் பொருத்திருந்து படிங்க ஓக்கேயா... குட் நைட்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro