மாயம் - 72
கீழே விழுந்த மிதரவர்தனன் உள்ளிருந்து பாய்ந்து வெளி வந்தான் இரண்டாம் மிதரவர்தனன்... அவன் ஆதியன்த்தை தாக்கும் முன் ஆதியன்த் தனது சிறகை விரித்து உடனே மேல் பறக்க இரண்டாம் மிதரவர்தனன் முன் தன் வாளை வேகமாய் சுழற்றி கொண்டு வந்து நின்றான் ஆதவ்..
ஆதவின் கரத்தில் பிணைந்திருந்த வாளின் நுனியில் ஒரு இரும்பு சங்கிலி அவன் இடையோடு இணைந்திருக்க அவன் முதுகில் ஒரு வில்லும் இருந்தது...
மிதரவர்தனன் : ஹா... உம்முடன் யுத்தமிடும் அளவிற்கு யான் குறைந்தனன்றோ உம் தந்தையின் சிரத்தை என்றோ கொய்திருப்பேனடா...
ஆதவ் : ஹ்ம்... என் சிரத்தின் ஒரு ... எடுத்தப் பின் எம் தந்தையின் சிரத்தை கொய்ய உமக்கு தகுதியுள்ளதன்றா என கூறலாம் என சற்றும் அசராமல் பதில் தந்தவன் அதற்கு மேலும் தாமதமின்றி அவனது வாளை கரத்திலே சுளற்றி இடது கரத்தால் தன் முதுகின் பின் இருந்த வில்லை எடுத்து அதில் அவனது வாளை குறி வைத்து மிதரவர்தனை நோக்கி ஏவினான்...
சர்ரென சீரி சென்ற ஆதவின் வாள் திடுக்கிட்ட மிதரவர்தனனின் முகத்தில் ஆழமான ஒரு கீறலை பரிசளிக்க வாளின் பிடியில் பிணைக்கப்பட்டிருந்த இரும்பு சங்கிலியினால் அது மீண்டும் ஆதவிடமே சென்றடைந்தது...
இவனின் தாக்குதலில் அவன் அரள ஆதவோ ஏளனமான தன் புன்முறுவலை அகற்றாது அவனை நோக்கி சீரி வரும் மிதரவர்தனனை எதிர்த்தான்...
மேலே பறந்த ஆதியன்த் அவனது சிறகை விரித்து கோட்டைக்குள் செல்ல அவனை பின் தொடர்ந்து சித்தார்த் மற்றும் ருத்ராக்ஷும் விரைந்து கோட்டைக்குள் நுழைந்தனர்...
அவர்களை கவனித்து தடுக்க சென்ற அருளவர்தனின் தலையை சட்டென ஏதோ ஒன்று பிடித்திழுக்க அவனை கீழே விழ வைத்து அவனுக்கும் முன் தாவி வந்து நின்றான் மிதுன்...
அருளவர்தன் பல்லை கடித்து கொண்டு இரண்டாய் பிரிய இரண்டாமவனும் மிதுனை தாக்கும் முன் அவனை முதுகில் உதைத்து கீழே தள்ளினான் மித்ரன்
மித்ரன் : தமக்காய் யாம் காத்திருக்கையில் உம் சகோதரனை விளாசுவதில் வெகுவாய் ஈடுபட்டிருக்கும் எம் சகோதரனை ஏனடா தொந்தரவு செய்கிறாய் என சீரியசாய் அதே நேரம் நக்கலாய் கேட்டான்...
மிதுன் அவனது கூற்றில் சிறு புன்னகையை தந்து விட்டு அவனை வெறி கொண்டு தாக்க வந்த முதலாம் அருளவர்தனனின் வாளிலிருந்து எம்பி தப்பித்தான்...
அவன் எம்பிய எம்பில் சற்று மிரண்டு பின் நகர்ந்த அருளவர்தனனை " அட போங்க பாஸ்... " என நிறைவாய் புன்னகைத்து கொண்டே தள்ளி விட்ட அருண் சட்டென கீழ் குனிய அவனின் கேசம் நுனியோடு தப்பிக்க அவன் பின் நின்றிருந்த மகரகாந்தன் மீண்டும் அருணின் கழுத்தை குறி வைத்து வாளை ஓங்கினான்... பல்டி அடித்து அந்த பொசிஷனலிருந்து தப்பித்த அருண் அவனது வாளை பற்றி மகரகாந்தனின் வாளுக்கு முன் தனக்கு அரணாய் பதித்தான்...
அந்த க்ளிங் என்ற ஓசையை விடுத்தும் மகரகாந்தன் பல்லை கடிக்கும் ஓசை சத்தமாய் கேட்க அருணால் நக்கலாய் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை...
ஆனால் அந்த நக்கல் பார்வை மகரகாந்தனின் வெறியை தூண்டி விட ஒரு யுக்தி இன்றி மீண்டும் மீண்டும் தன் வாளால் அருணின் வாளை பலமாய் அடிக்க தொடங்கினான்.. ஆனால் அருணின் அழுத்தம் சற்றும் குறையவில்லை...
யாவரும் அறிந்திடாத நேரம் விஞ்ஞவெள்ளன் மற்றும் சாகாரகாந்தன் இருவரும் உள்ளே செல்ல கூட தோன்றாமல் அவர்ளை நோக்கி வந்த கார்த்திக் மற்றும் ராகவை முறைத்த படி முன்னேறினர்...
அதற்கு அவ்விருவரும் நிமிர்ந்து நடந்து வந்தனர்.. இரண்டாம் அருளவர்தனன் மாத்திரம் தன்னை எவரும் கவனிக்கவில்லை என கோட்டைக்குள் செல்ல அவனுக்கு முன் அஷ்வித் கை கட்டி நின்று கொண்டிருந்தான்...
சஹாத்திய சூரர்கள் தொலைவில் நின்று இவையனைத்தையும் நோக்கி கொண்டிருந்தனர்...
அந்த நாகமனிதர்கள் படை மீண்டும் எழும்பியிருக்க துஷ்ரந்கள் அனைத்தும் மொத்த வானையும் ஆக்ரமிப்பதை போல் விண்ணில் கூட்டமாய் பறந்து கீழே இறங்கியது... அவை அனைத்திற்கும் முன் தயாராய் யாளி வீராங்கனைகள் நின்று கொண்டிருந்தனர்... அவர்களுடன் யாளிகளும் பருந்து குடும்பமும் கண்களில் பற்றி எரிந்த வெறியுடன் நின்றிருந்தனர்... அந்த கொடூரமான போர் மீண்டும் தொடங்கியது...
அமைச்சன்கள் ஐவருமே இப்போது பராக்ரம வீரர்கள் பத்து பேரையும் சமாளிப்பதற்காய் இரண்டிரண்டாய் பிரிந்திருந்தனர்... எதிரிகளின் மீதிருந்த வெறி அவர்களை கோட்டை புறம் கூட திரும்ப விடவில்லை...
சாகாரகாந்தனின் வாள் சுழற்றலில் வருணின் தோளில் ஆழமான ஒரு வெட்டு விழ அதை கூட சற்றும் பொருட்படுத்தாது அதே கையால் சாகாரகாந்தனது வாளை பிடித்திழுத்த வருண் மறு கரத்தின் வாயிலாக அவனது இடையிலிருந்த ஒரு சிறு கத்தியை எடுத்து சாகாரகாந்தனின் கழுத்தில் இறக்கினான்..
இரத்தம் தெறிக்க பின் தள்ளப்பட்ட சாகாரகாந்தன் சுதாரிக்கும் முன் எம்பி குதித்த வருண் அவன் கழுத்தில் குறி வைத்து உதைத்து அந்த கத்தியை அவன் கழுத்தில் இன்னும் ஆழமாய் இறக்கினான்...
சாகாரகாந்தன் வலியில் கதற அதை பெருமூச்சறித்தவாறு கண்ட வருணை திடீரென காலை பிடித்து இழுத்த சாகாரகாந்தன் அவன் கழுத்திலிருந்த கத்தியை சரெக்கென உருவி வருணின் நெஞ்சில் குத்த ஓங்க நொடியில் அவனது கரத்தை பிடித்து ஒரு தள்ளு தள்ளி எழுந்து நின்றான் வருண்...
சாகாரகாந்தனின் கண்களில் மண் தெறித்ததால் அவன் தினற ஐந்து நிமிடத்திற்கும் மேலாக கண்களை தேய்த்து தேய்த்து வருண் தாக்கி விடுவானோ என ஒரு முன்னெச்செரிக்கையில் மறு கரத்தால் வாளை காற்றில் வீசி கொண்டிருந்தான்...
ஆனால் ஐந்து நிமிடத்திற்கு பின் கண்களை திறந்தவன் போரை இளைப்பாறியவாறு சற்றும் அலட்டிக் கொள்ளாமல் பார்த்து கொண்டிருந்த வருணை கண்டு அதிர வருணோ
வருண் : ஹா உம் கண்ணை கட்டி விட்டு வேட்டையாட யான் கோழையல்லடா... நேருக்கு நேர் வா என இப்போது எழுந்து வந்தான்...
இரு விஞ்ஞவெள்ளனும் கார்த்திக் மற்றும் அஜயினால் திண்டாடிக் கொண்டிருந்தனர்... மருதீபனை அவர்கள் இருவருமே கண்டதில்லையென்றாலும் அவர்களுள் ஓடும் தந்தையின் இரத்தம் அவரின் மரணத்திற்கு காரணமய் இருந்தவர்களை காணக்காண கொதித்து கொண்டிருந்தது...
அஜயின் பூனை போன்ற கூரான கண்களில் விஞ்ஞவெள்ளனின் பிணத்தை காண வேண்டிய ஆவல் மலையளவு இருந்தது முதலாம் விஞ்ஞவெள்ளனுக்கு தெரிந்ததோ என்னவோ அவனால் அஜயின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தினறினான்...
கார்த்திக்கின் தோளில் இருந்த ஆழிலோக வீரனின் பல் தடங்களை எதற்சையாய் கண்ட இரண்டாம் விஞ்ஞவெள்ளன் வாளின் பிடியிலிருந்த ஒரு கரத்தை விடுவித்து சட்டென அவனது விரலை கார்த்திக்கின் தோளில் குத்தினான்...
ஆனால் விஞ்ஞவெள்ளன் எதிர்பார்த்ததை போல கார்த்திக் திடுக்கிடாது ஒரு புன்னகையை பரிசளிக்க விஞ்ஞவெள்ளன் என்ன நடக்கிறதென்று கவனிக்கும் நொடிகள் முன்னே அந்நிகழ்வு நடந்து விஞ்ஞவெள்ளனின் முழங்கை மட்டும் கீழே விழுந்திருந்தது...
விஞ்ஞவெள்ளன் நடந்ததையே உணராமல் விரிந்த கண்களுடன் முன் நோக்க கார்த்திக் மற்றும் விஞ்ஞவெள்ளனின் இடையில் தெறித்திருந்த இரத்தத்தோடு மின்னியது ரக்ஷவின வாள்...
கார்த்திக் ரக்ஷவை கண்டு கர்வமான ஒரு புன்னகையை கொடுக்க விஞ்ஞவெள்ளன் அந்த போர் களமே அதிரும் வகையாக வலியில் அலரும் முன் தன் தாய்களுக்கு உதவ கார்த்திக்கிற்கு பதில் புன்னகை கொடுத்து விட்டு ஓடினான் ரக்ஷவ்...
கார்த்திக் அவனது வாளை சுழற்றி விஞ்ஞவெள்ளனது நெஞ்சில் இறக்க கை போன வலியும் இந்த வலியும் அவனின் தலைக்கேற வாயிலிருந்து இரத்தம் பீரிட்டது
அஷ்வித் நெஞ்சில் கசியும் இரத்தத்தை பொருட்படுத்தாது வேகமாய் அருளவர்தனனின் வாளை தடுத்து கொண்டே இருந்தான்... அருளவர்தனன் அஷ்வித்தின் பலவீனத்தை கண்டறிய இயலாமல் தன்னால் ஆன அனைத்து தாக்குதலையும் முயற்சித்து அவனை எதிர்த்து கொண்டிருந்தான்....
ஆயிரம் நாகமனிதர்கள் யாளி வம்சத்து வீராங்கனைகள் சுற்றி ஒரு பெரும் வட்டமாய் நிற்க அவர்களுக்கு மேலோ முழுதாய் துஷ்ரந்கள் ஆக்ரமித்து மூட தொடங்கியிருக்க பருந்து வீரர்களும் கீழிறங்கியிருக்க மோகினி மாத்திரம் இன்னும் மேலே பறந்து கொண்டிருந்தாள்...
நாகனிகளை தேடி சஹாத்திய சூரர்கள் சென்றிருக்கின்றனர் என நினைத்திருந்த அனைவருக்குமே அவர்கள் உண்மையில் எங்கு சென்றனெரன தெரியவில்லை...
இரட்சகன்கள் மூவரும் கோட்டைக்குள் சென்று இரண்டாம் நாயகிகள் தங்கியிருந்த அறைக்குள் விருட்டென நுழைய அங்கோ மெத்தையில் மயங்கி கிடந்தது பத்யரூனா
பத்யரூனாவின் நெற்றியிலிருந்து கீற்றென இரத்தம் கசிந்து காய்ந்திருந்தது.. ஆதியன்த் அவரிடம் செல்ல ருத்ராக்ஷ் உடனே அங்கிருந்து வேகமாய் கீழே ஓடினான்...
சித்தார்த் அதே இடத்தில் ஏதோ ஒரு இணம் புரியா உணர்வினால் மருண்டு நின்றிருக்க ஆதியன்த் பத்யரூனாவை பொருமையாய் தூக்கி சாய்ந்தமர வைத்தான்... அடுத்த ஐந்து நிமிடத்தில் ருத்ராக்ஷ் அங்கு மீண்டும் ஓடி வந்து நின்றான்...
ருத்ராக்ஷ் : சித்ரியா வேதித்யா எழிலினியாவையும் காணும் என பெருமூச்சிற்கிடையில் பதில் கொடுத்தான்...
ஆதியன்த் பத்யரூனாவின் காயத்தை குணப்படுத்திய இரண்டே நிமிடத்தில் அவர் அரை மயக்கத்திலே கண்களை திறக்க அவர் கரத்தை பிடித்திருந்த ஆதியன்த் தன் பிடியை இறுக்க...
ஆதியன்த் : தேவி.. தேவி... என்(ன) நிகழ்ந்தது தேவி...
பத்யரூனா : இரட்சகரே...
ஆதியன்த் : தமக்கு ஏதேனும் நினைவுள்ளதா தேவி..
பத்யரூனா : இரட்சகரே.. நேற்றைய இராவில் (இரவில்) அந்த பாதகத்தி சாம்பரா ஏதோ ஒன்றை தேவதையார் மற்றும் இளவரசிகளுக்கு சமைத்த உண்டியில் (உணவில்) கலந்தாள்.. என்ன ஏதென்று வினவி தடுக்கச் சென்ற எம்மை தாக்கினாள்... அதன் பின்... எமக்கேதும் நினைவிலில்லை
சித்தார்த் : இருக்கட்டும்... தாம் இங்ஙனமிருந்து முடிந்த மட்டும் விரைந்து தப்பிச் செல்லுங்கல்.. இன்றைய இரா(இரவு) வேளையில் கோட்டை அருகில் எவ்வொரு சர்ப்பலோக உயிரும் நெருங்கக் கூடாதென யோக்யாவை அறிவிக்கக் கூறுங்கள்... இவ்விராவில் அத்தீய சக்தியை தவிர்த்து வேறெந்த உயிரும் நீங்கக்கூடாது
பத்யரூனா : இரட்சகரே.. ஆனால்
ருத்ராக்ஷ் : ஒன்றுக்கும் ஐயமடையாதீர் தேவி.. இன்றைய இரா(இரவு)மறைந்து விடியல் விடிகையில் அந்த தீயசக்திகளின் அஸ்தமனம் நிகழும் என கூறுகையிலே புன்னகைத்த பத்யருனா
பத்யரூனா : அதில் எமக்கேதும் ஐயமில்லை இரட்சகரே... இந்நாளுக்காகவே பல வருட காலங்களாய் காத்திருக்கிறோம்.. நாளைய விடியலதில் தீயசக்தியை காணப்போகும் அச்சம் யாவருக்கும் இருக்க அவசியமிருக்காது... ஆனால் யாமுரைக்க உள்ளுவதே (நினைப்பதே) வேறு..
ருத்ராக்ஷ் : யாது விசனத்தை தெரிவிக்க எண்ணுகிறீர்கள் தேவி
பத்யரூனா கூறிய அவ்விசனம் இவர்கள் மூவரையும் அதிர்ச்சியடைய செய்ய சரியாக அந்த அறை கதவை திறந்து மூச்சு வாங்கியபடி உள்ளே வந்தான் சேவன்...
சேவனை கண்டு இரட்சகர்கள் மூவரும் முளிக்க சேவனுக்கு பின் தப்பித்து வந்திருந்த நாயகிகள் அனைவரும் ஓடி வந்து அந்த அறைக்குள் வர முதலில் அனைவரையும் அழைத்து வந்திருந்த சித்ரியா வந்த வேகத்திற்கு வாயிலருகிலே நின்ற ருத்ராக்ஷை கண்டு அண்ணா என கதறலுடன் அணைத்து கொண்டாள்...
ருத்ராக்ஷின் கரங்கள் தங்கையவளை அரவணைக்க இரட்சகன்கள் மூவரினது விழிகளும் அனைவரும் நலமாக உள்ளதை உறுதி படுத்திக் கொள்ளும் போது அவர்களுள் இருக்க வேண்டிய தன்னவள்களை தேடியது....
ருத்ராக்ஷ் : சித்ரியா... அழுவதை நிறுத்து.. உமக்கொன்றும் இல்லையடா..
சித்ரியா : அண்ணா... அனைத்தும் தவறாய் நிகழ்கிறது.. யட்சினிகள் மூவரும் எங்குள்ளனர் என்பதை அறியேன்.. அவர்களை கொண்டு அவர்களை பலி கொடுத்து இய்யாகம் நடைப்பெற கூடாது...
சித்தார்த் : அவ்வாறு ஒன்று இப்பிறவியில் ஒரு போதும் நிகழாது சித்ரியா... தாம் யாவருக்கும் எத்தீங்கும் விழையவில்லை தானே...
சித்ரியா : ஆம் அண்ணா.. யாவருக்கும் எத்தீங்கும் விழையவில்லை.. ஆனால் தேவதையார்களின் உதிரத்தை அருளவர்தனன் சேமித்து சென்றான் என கூற ஆதியன்த்தின் பார்வை நாயகிகள் அனைவரின் கரமும் கிளிக்கப்பட்டிருப்பதில் விழுந்தது...
ஆதியன்த் : சேவா... நீங்க எப்டி இங்க வந்தீங்க...
சேவன் : யான் மீண்டும் செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன் இரட்சகரே... முவ்வீரையனின் சிலையை காணவே யாம் பாலமுத்திர கோட்டைக்கு பயணித்தோம்.. ஆயினும் எதனாலோ ஒரு இரகசிய வாயில் சர்ப்பலோகத்தை அடைவதை அறியாது அதில் நுழைந்தோம்... தற்போது யான் உடனடியே அங்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன்.. சென்று வருகிறேன் என இறுதியாய் அனைவருக்கும் பொதுவாய் கூறி விட்டு வெளியேறி சென்றான்...
இரட்சகன்கள் நாயகிகளை அங்கேயே விட்டுவிட்டு உடனே வெளியேறிச் செல்ல நம் நாயகிகள் அனைவரின் பார்வையும் இப்போது சித்ரியாவை தீண்டியது....
நாகனிகள் மூவரும் சர்ப்பலோக எல்லையில் கடம்பர சர்ப்பங்களை அழிப்பதன் எல்லையில் இருக்க திவ்யா அந்த வலை முழுவதும் செலுத்தியிருந்த சக்தி அந்த இடத்தையே ஒரு வித ஒலியில் பிரகாசிக்க வைக்க அனு மற்றும் ப்ரியா இடது வலதில் இருந்து கொண்டு ஓரு கரத்தால் வலைகளை பிடித்து கொண்டும் மறு கரத்தால் அவரவர் சக்தியையும் அந்த சர்ப்பங்கள் மீது செலுத்தினர்...
வீரியம் அதிகமாக அதிகமாக ஒரு கட்டத்தில் அந்த வலையத்தை சுற்றியிருந்த அப்பெரிய பந்து படாரென வெடித்து சிதற நாகனிகள் மூவரும் சரிந்து கீழமர மூவரும் வாயாலும் மூக்காலும் வேகவேகமாய் பெருமூச்சு விட்டு ஒருவரை ஒருவர் நோக்கி கொண்டனர்...
மூவரின் விழிகளும் ஒரு சேர கோட்டையை நோக்கி திரும்ப அடுத்த நொடியே சஹாத்திய சூரர்கள் எண்வரும் அங்கு ஓடி வந்து நின்றனர்...
அந்தி சாயும் சூரியனின் காட்சி அவர்கள் அனைவரின் மனதிலும் கிலியை மூட்டச் செய்ய அவர்கள் எதிர்பார்த்ததை போலவே போர் களத்திலிருந்த பராக்ரம வீரன்களின் உடல் பலவீனமடையத் தொடங்கியது
ப்ரியா : நாம உடனே போர் களத்துக்கு போகனும்னு நினைக்கிறேன்.. என்க அனைவரும் அங்கிருந்து கோட்டையை நோக்கி இப்போது ஓடத் தொடங்கினர்...
போர்க்களம்
அமைச்சன்களின் முகத்தில் புத்தம் புதிய புன்னகை மலர பராக்ரம வீரர்களுள் சஞ்சலம் எழுந்தது... கதிரவனின் கதிர்கள் மெதுமெதுவாய் கீழ் இறங்கத் தொடங்கிய நொடி முதலே அதி வேகமாய் தங்களின் வாள்களை சுழற்றி எதிரணிக்கு வாய்ப்புத் தராது வேட்டையாடிக் கொண்டிருந்த நாயகன்களின் வேகமும் குறையத் தொடங்கியது...
அவர்கள் மாத்திரமல்ல... அந்த மொத்த போர் களத்திலும் வேறேதோ ஒரு சச்தி ஆக்ரமிப்பதை போல் ஒரு உள்ளுணர்வு அனைவருள்ளும் எழ முதலணி நாயகிகள் கவனத்தை திசை திருப்ப விடாத அளவு தங்களைத் தானே கட்டுப்படுத்த அவை அனைத்தும் ஒரு நொடியில் தவிடு பொடியாக்கிது அந்த போர்களம் முழுவதும் கேட்ட சித்தார்த்தின் வலி மிகுந்த அலரல்
பராக்ரம வீரர்களும் அதிர்ந்து சித்தார்த்தின் அலரலை நோக்கி திரும்ப அங்கோ அஷ்வித் எழத் திராணி அற்று கீழ் வீழ்ந்திருக்க அவனுக்கு முன் அரணாய் நின்றிருந்த சித்தார்த்தின் நீண்ட இறக்கையில் இறங்கியது அருளவர்தனன் பாய்ச்சிய வாள்
அருளவர்தனன் மீண்டும் அவனது வாளை ஓங்கி சித்தார்த்தின் முதுகில் குத்தும் முன் யுகி அவன் மீது சீரி கொண்டு பாய யுகியின் மீதமர்ந்திருந்த ரக்ஷவின் வாள் நொடிக் கூட தவறாமல் அருளவர்தனனின் முதுகை கிளித்து நீண்ட காயத்தை பரிசளித்தது...
இந்த அமைச்சன்களின் பலவீனம் அவர்களின் முதுகு பகுதி தான் என்பது ஒரு ராஜ இரகசியம் என்பதை விட அந்த ஐவரை தவிர்த்து வேறெவருமே அறிந்திடாத ஒரு மகா இரகசியம்... இதில் ஒவ்வொரு முறை ரக்ஷவ் அவர்களின் முதுகை பதம் பார்ப்பது அவர்களின் இரகசியம் இவனுக்கு தெரிந்து கிரிந்து விட்டதோ என்னும் பயத்தை கொடுத்தது... ஆனால் உண்மையில் அதை ரக்ஷவ் அறிந்திருக்கவில்லை...
விஞ்ஞவெள்ளன் அருளவர்தனனை தாக்கிய ரக்ஷவை வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்க இரண்டாம் அருளவர்தனன் வேகமாய் மிதுனை தடாரென தள்ளி விட்டு விட்டு தன் பாதி உயிரை காப்பாற்ற வேண்டி தன் வாளை ரக்ஷவை நோக்கி பாய்ச்சினான்...
யாவரும் எதிர்பார்க்காத வகையில் மிதுன் பார்வை மங்கி அங்கேயே சரிந்து கீழே விழுந்திருந்தான்...
அதை இறுதி நொடியில் கண்ட ரக்ஷவ் சற்று குனிந்து சுழன்றெழுந்ததால் கழுத்தை காத்துக் கொள்ள அருளவர்தஜனின் வாள் ரக்ஷவின் முழங்கையை கீறி விட்டு இரத்தம் பீரிட செய்ய தன் வாளின் பிடியை இரு கரத்தாலும் பற்றி அவனது தோளுக்கும் கழுத்துக்கும் இடையே இறக்கிய ரக்ஷவ் அதை சர்ரென உருவி அதே வேகத்திற்கு இடது கரத்தால் முழங்காலில் பத்திரப்படுத்தப் பட்ட குறுவாளை உருவி அதை அருளவர்தனனின் கழுத்தின் மறு பக்கம் இறக்கினான்...
திடீரென விஞ்ஞவெள்ளன் ரக்ஷவை பிடித்து வெறியுடன் கோவமாய் பின்னிருந்து இழுக்க அவனது பிடியிலிருந்து திமிறியவனை அடக்க அவன் காயம் பட்ட கையை இறுக்கி பிடித்தான் விஞ்ஞவெள்ளன்...
ரக்ஷவ் வலியில் அலரிய அலரலில் முதலாம் அருளவர்தனனின் தலையையே பிய்த்து தனியாய் போட போன சிம்மயாளிகள் விஞ்ஞவெள்ளனின் புறம் திரும்பியது...
ஆனால் அதற்கு முன்பாக கார்த்திக்கின் வாள் விஞ்ஞவெள்ளனின் முதுகு வாயிலாக அவன் வயிற்றிலிருந்து வெளியேற இரத்தம் பீரிட தன்னை விழி விரித்து நோக்கிய விஞ்ஞவெளள்னை தன் பலம் கொண்டு உதைத்து தள்ளி விட்டு கீழே விழுந்தான் ரக்ஷவ்...
கார்த்திக் அடுத்த அடி எடுத்த வைப்பதற்குள் இரண்டாம் விஞ்ஞவெள்ளன் கார்த்திக்கை முதுகின் பின்னிருந்து தாக்கியிருக்க அதில் நிலை தடுமாறிய கார்த்திக்கை காக்க வந்த அஜயின் வயிற்றிலும் தன் வாளை அழுத்தி இறக்கி அவனை தூர தள்ளி எறிந்தான் விஞ்ஞவெள்ளன்...
சகோதர்கள் இருவரும் இவ்வாறிருக்க மறுபுறமோ மிதுன் அஷ்வித் மற்றும் சித்தார்த்தும் அதே நிலையில் திராணி அற்று மண்ணில் வீழ்ந்திருந்தனர்...
ரக்ஷவ் பதட்டத்துடன் சுற்றத்தை கவனிக்க யாளி வீராங்கனைகளை விடுத்து அவன் பார்வையில் சிக்கியவை அனைத்துமே நாகமனிதர்களும் துஷ்ரந்களும் மட்டும் தான்.... யானையாளிகள் துஷ்ரந்களை நாசமாக்கிக் கொண்டே இருந்தது...
மிதரவர்தனன் சாகாரகாந்தன் மகரகாந்தனுடன் போராடும் மற்றைய ஆறு பராக்ரம வீரர்களின் நிலையும் மற்றவர்களை போலவே தான் இருந்தது...
என்றுமில்லாது அவர்களின் உடல் அதிக வெப்பத்தால் கொதிக்க அந்த இடத்திற்கு விரைந்து பறந்து வந்த பருந்து சகோதரர்கள் மண்ணில் சரிந்திருந்த ஐவரை கண்டு பதைப்பதைத்தனர்...
துருவின் மூளையில் யோகபரீபூஜன நாளன்று நிச்சயமாக பராக்ரம வீரர்களின் சக்தி குறையும் அவர்களின் உடல் நிலையே வேறு ஒரு மாற்றத்தை கொடுக்கும் என கூறிய வீரின் அபாய கூற்று நினைவில் வந்து சென்றது...
இந்த நிலையே யோகபரீபூஜன தினத்தின் வேளை நெருங்கியதை அங்கிருந்த அனைவருக்கும் உணர்த்தியது
அருணின் பார்வை மங்களாக அவன் முன் நின்றிருந்த மகரகாந்தனின் வதனத்திலிருந்த புன்முறுவல் விரிந்தது.... அருண் அவனது வாளின் பிடியை விடாமல் சட்டென வாளின் பாடியிவிருந்து ஒரு ஈட்டியை உருவி மகரகாந்தன் எதிர்பார்க்காத நேரம் அவனது முகத்தை சரெக்கென கிளித்தான்...
இதில் இரண்டடி மின் நகர்ந்த மகரகாந்தன் இரத்தக்கிளரியான தன் முகத்தை கண்டு அருணை குரூரமாய் காண அருணோ நிற்க இயலாமல் தன்னை வருத்திகொண்டு அந்நிலையிலும் அவனின் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை கொண்டு சிரிக்க முயன்றான்....
இரண்டாம் மகரகாந்தன் வேலினால் அடிப்பெற்று வின் வின்னென வலித்த உடலில் ராமிட்ட கீறல்களனைத்தையும் பொருத்து கொண்டு சுற்றத்தை கவனிக்க முடியாமல் ராம் திண்டாடும் இந்நேரத்தை உபயோகித்து கொண்டான்...
ராமினால் மகரகாந்தன் எங்கிருக்கிறான் என பார்க்க முடியாது போக விரைவிலே அவனது உடல் முழுவதும் பல வெட்டு காயங்களினால் இரத்தம் கசிய தொடங்கி ஒரு ஆற்றை உருவாக்கியிருந்தது...
எத்துனை காயம் பெற்றாலும் தன் ஆழுத்தம் அனைத்தையும் கால்களில் கொடுத்து மண்ணில் நிலைத்து நின்றிருந்த ராம் ஒரு கட்டத்தில் மகரகாந்தனே சோர்ந்து நிற்கும் நேரத்தில் அவனது உணர்வுகளால் அவன் இருக்கும் இடத்தை உணர்ந்து அவன் பக்கம் திரும்பினான்...
தன் புறம் திரும்புபவனை மகரகாந்தன் பெருமூச்சறித்தவாறு விசித்திரமாய் எககாத்தாளத்துடன் பார்த்து கொண்டிருக்க அவன் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிவேகத்துடன் அவன் மீது பாய்ந்த ராம் தன் வாளின் பிடியை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து மகரகாந்தனின் தோளில் வெட்டி கீழே விழ மகரகாந்தனின் வலது கை அப்படியே கீழே சரிந்து விழவும் ராம் மூச்சற்று மயங்கவும் சரியாக இருந்தது....
சாகாரகாந்தனை எதிர்த்து சூரையாடிக் கொண்டிருந்த ராகவ் மகரகாந்தனின் அலரலிலே தன் சகோதரன் கீழ் விழுவதையும் தோழர்கள் ஐவர் மூச்சற்றிருப்பதையும் கவனித்தான்...
அவனின் மூளையிலும் வீரின் கூற்றுகள் நினைவில் வந்து ரிங்காரமிட தொடங்க வீரின் குரலினால் உண்மையில் சாகாரகாந்தன் அவனை நோக்கி கத்திய படி ஓடி வந்தது அவனுக்கு தெரியாமலே போனது...
சாகாரகாந்தன் போர்களத்தில் கவனத்தை மொத்தமாய் இழந்து பேரதிர்ச்சியுற்று தள்ளாடியவாறு திரும்பி நின்றவனின் பின் அலரிக் கொண்டே எம்பி ராம் அவனின் சகோதரனுக்கு செய்ததை போலவே இவனின் ஒரு கையை வெட்ட திடீரென இடை புகுந்த ரக்ஷாவின் வாள் சாகாரகாந்தனின் வாளை மேலே தட்டி விட்டது
இருந்தும் இரத்தம் பொளபொளவென கொட்ட இந்த திடீர் தாக்குதலினால் ரக்ஷாவின் அருகிலே ராகவும் சரிந்து கீழே விழுந்தான்...
மீதமிருந்த மித்ரன் வருண் மற்றும் ஆதவ் அவர்களையே சமாதானம் செய்வதை போல் கட்டுப்படுத்தி கொண்டு அவர்களின் மூளையை கட்டுப்படுத்த நினைக்கும் சோர்வையும் உடலில் எழும் வெப்பத்தையும் விரட்டியடிக்க முயன்று கொண்டிருந்தனர்...
சாகாரகாந்தனும் மிதரவர்தனன்களும் இவர்களை சாதாரணமாக விட்டாலே இறந்து விடுவார்கல் போல என தவறாய் கணக்கிட்டு கொக்கரித்து கொண்டிருந்தனர்...
வருண் ஒரு கட்டத்தில் சுற்றத்தை சுத்தமாய் தாங்கிக் கொள்ள இயலாமல் கீழே விழ முட்டு கொடுத்து மூச்சு வாங்கியவாறு கண்களை மூடி மூடி திறந்தவன் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவன் கால்களில் அழுத்தம் கொடுத்து எம்பினான்...
எவ்வாறு அதை செய்தான் என கேட்டாலும் வருணின் வாளால் பாதி கழுத்து வெட்டப்பட்ட சாகாரகாந்தனுமே அறிந்திருக்க மாட்டான்....
சாகாரகாந்தனின் இரத்தம் அவ்விடமெங்கிலும் தெறிக்கையில் வருணின் முகம் மண்ணை தொட்டிருந்தது....
வருண் என கத்திய ஆதவ் அவனை தாங்க இதையே சந்தர்ப்பமாக்கிய முதலாம் மிதரவர்தனன் அவனது வாளை சற்றும் ஈவு இரக்கமின்றி ஆதவின் தோளில் இறக்கவும் அது சடக்கென ஓரிடத்திலே நின்றது
வருணின் முகத்திற்கு ஒரு அடி முன் மிதரவர்தனனின் வாளின் நுனி ஆதவின் இரத்தத்தால் அலங்கரிக்கப்பட்டு மின்ன அவன் தோளை பிளந்து கொண்டு வந்திருந்த மீதி பாதி வாளை வருணை பதம் பார்க்கும் முன் தன் கரத்தாலே அதை பிடித்து நிறுத்தியாருந்தான் ஆதவ்...
மிதரவர்தனன் ஆதவின் பிடி தளராததால் அதை அழுத்துவதை விட்டு விட்டு சரக்கென இழுக்க ஏய்ய்ய்ய் என்ற சீரலுடன் சுழன்றெழுந்த ஆதவ் அவனது வாளை மிதரவர்தனனின் நெஞ்சில் சரக்கென குத்தினான்.. மிதரவர்தனன் தன் இதயத்தை பிடித்து கொண்டு பின் நகர அவனை மீண்டும் ஆதவ் தாக்க முன்னேறும் முன் அவன் நிலை தடுமாற மித்ரனை சமாளிக்க முயன்று கொண்டிருந்த இன்னோறு மிதரவர்தனன் ஆதவை பின்னிருந்து உதைத்து கீழே தள்ளி விட மித்ரன் மிதரவர்தனின் காலை அவன் எதிர்பார்க்காத நேரம் வெட்டியிருந்தான்...
மிதரவர்தனின் அலரலோடு மித்ரனின் உடலும் மண்ணில் சரிந்தது.. என்ன தான் நம் நாயகன்கள் இவ்வாறு இவர்களை பாதி மரணம் வரை அழைத்துச் சென்றிருந்தாலும் அவர்களின் உயிர் நாடியை அறுப்பதை விடுத்து வேறெந்த தாகுதலும் அவர்களை முழுதாய் மரணிக்க வைக்காது... அதனாலே இவர்கள் இன்னமும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு எழுகின்றனர்...
சித்ரியாவை அனைவரும் சந்தேகமாய் நோக்கிக் கொண்டிருக்க அதை அவள் கவனிக்காமல் வெளியே சென்றாள்.... இப்போது அவள் சிந்தையில் ஓடிய அனைத்தும் யட்சினிகள் மூவரையும் கண்டறிய வேண்டுமென்பது மட்டும் தான்....
மற்றவர்களும் அதை புரிந்து கொண்டு பத்யரூனா கூற கூற கேலாமல் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றனர்...
இவர்கள் எங்கு சென்று தேடுவதென தெரியாமல் முளித்த நேரம் அங்கு திடீரென வந்த கஜன் சித்ரியாவை நோக்கி பறந்து சென்றது
சித்ரியா : கஜா.. கஜா
கஜன் : அண்ணியாரே... தாம் யட்சினிகளை தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்...
கயல் : ஆமா ஆமா.. உங்களுக்கு அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிமுமமா
கஜன் : அறிவேன் தமக்கையே... ஆனால் அவ்விடம் எவ்வாறுள்ளதென்பதை மாத்திரமே அறிவேன்...
சந்தியா : பரவாயில்ல சொல்லுங்க.. ப்லீஸ்..
கஜன் : அவர்கள் ஏதோ நாழு சுவற்றிற்குள்ளே கிட்டத்தட்ட அடி மட்டத்தில் பெட்டிகளுள் அடைக்கப்ட்டிருக்கின்றனர் என சஹாத்திய சூரர் ரவி கூறினார்... அது எங்கோ நம்மை விட்டு தூரமாய் உள்ளது...
நந்தினி : அடி மட்டமா... நாம எப்டி கண்டுப்புடிக்கிறது
இக்ஷி : நம டைம வேஸ்ட் பன்னக்கூடாது... எதாவது பன்னுங்க டி... யோசிங்க
வைஷு : எ..எனக்கு ஒரு இடம் தெரியும்... ஆ..ஆறாவது மாடில ... ஒரு ரூம்ல பாதேன்... அங்க.. அங்க மூணு சவப்பெட்டி இருந்துச்சு... அதுக்குள்ள யாருமே இல்ல... ஒருவேளை அதுல இருப்பாங்களா...
மதி : ஆனா அது...
வைஷு : அது அடிமட்டம் தான்... அது தொலைவா தான் இருந்துச்சு...
வேதித்யா : பின் நாம் நாழியை தாழ்த்த வேண்டா... வாருங்கள் செல்வோம்
நித்ரா : வைஷு சீக்கிரம் வா அஎன துரிதப்படுத்தி படிகட்டுகளை நோக்கி ஓடினாள்... கஜன் இதை துருவிடம் தெரிவிக்க வேகமாய் பறந்து சென்றது
அனைவரும் இப்போது ஆறாம் மாடிக்கு சென்றனர்... அங்கு பல அறைகளும் மண் சிலைகளும் நிறம்பியிருக்க முன்பே அனுபவித்ததால் சுவற்றில் ஷோக்கேசிற்காய் மாட்டி வைகப்பட்டிருந்த வாள்களை உருவி கொண்டு முன்னே ஓடினாள் வைஷு.. அவள் எதிர்பார்த்ததை போலவே மண் சிலைகள் அவர்களை நோக்கி பாய தொடங்கியது
முதலில் அதை கண்டு அரண்டு போன மற்றவர்கள் அதே இடத்தில் உறைய முதலில் வெளி வந்த எழில் வைஷுவிடமிருந்து ஒரு வாளை பற்றி எடுத்து முன் வந்த ஒரு மண் சிலையின் கழுத்தை வெட்ட அது அந்த இடமெங்கிலும் சிதறியது...
மாயா : போலாம் வைஷு வா என அவளை இழுத்து கொண்டு முன் ஓடினாள்... இளவரசிகள் மூவருடன் சந்தியா கயல் நித்ரா மற்றும் மாயா அந்த மண் சிலைகளிடமிருந்து அனைவரையும் காத்தனர்..
வைஷு அவள் நேற்று கண்ட அதே அறை முன் சென்று அந்த புள்ளியை நகர்த்தி உள்ளே பார்க்க அவளின் அதிர்ச்சிக்கு எதிர்மாறாய் அந்த சவப்பெட்கள் நேற்று அவள் கண்டது போல் அப்படியே தான் இருந்தது...
வைஷு : அதுக்குள்ள யாருமே இல்ல என நம்ப முடியாமல் கூற உடனே ஐலாவிற்கு ஏதோ நினைவு வந்தது
ஐலா : ஒருவேளை.. ஒருவேளை அங்க இருக்களாம் இல்லையா... அந்த வைரச்சிலை... அது அடிமட்டத்துல தான் உண்மையாவே இருக்கு என்கவும் இப்போது மற்றவர்கள் புரியாது விழிக்க வைஷுவும் ஐலாவும் அந்த அறையை நோக்கி ஓடினர்...
அதை திறக்க வழி ஒன்றும் இவர்கள் அறியவில்லையென்றாலும் மற்ற கதவுகளை போல அதிலும் ஒரு துளை இருப்பதை கண்டு ஐலா அதில் வேகமாய் பார்க்க அந்த துளையின் வாயிலாக அந்த வைரச்சிலையும் அதை சுற்றி அடைக்கப்பட்டிருந்த யட்சினிகளின் நிலையும் தெரிந்தது...
மதி : ஹே உள்ள தா இருக்காங்க... இத நாம எப்டி தொறக்குரது...
ஐலா : தெரியல அண்ணி.. நேத்து அதித்தி மந்திரம் போட்டு தான் திறந்தாங்க... எனக்கு அது என்னன்னு தெரியல
கயல் : வேற எதாவது வழி இருக்குமே ஐலாமா என இவர்கள் இங்கு தீவிரமாய் உரையாடுகையில் அந்த அறைக்குள் நிகழ்ந்ததை எவரும் கவனிக்கவில்லை....
வைரச்சிலை மையத்தில் இருக்க அதை சுற்றி ஒளிர்ந்த முக்கோணத்தின் மூன்று மூலையிலும் இருந்த யட்சினிகளின் முக்கோணப்பெட்டிகள் மெதுமெதுவாய் சுழல தொடங்க மதிளடைந்து உள்ளே வீற்றிருந்த யட்சினிகளுடன் நாயகிகள் கவனிக்கும் முன்னே அந்த மூன்று பெட்டியும் சுழன்றபடியே தரைக்குள் நுழைய தொடங்கியது...
ஐந்து நிமிடத்திற்கும் மேலாக என்ன செய்வதென தெரியாமல் நின்ற நாயகிகளும் இளவரசிகளும் அமைச்சன்களின் கொக்கரித்தலினால் திடுக்கிட்டு திரும்பினர்...
அந்த கோட்டையின் மையப்குதியில் கொழுந்து விட்டு எரிந்த அந்த தீயின் மேலே யட்சினிகள் மூவரும் கையிற்றால் கட்டப்பட்ட நிலையில் சுயநினைவற்று தொங்கிக் கொண்டிருந்தனர்... சுற்றுப்புறம் மொத்தமும் நாகமனிதர்களாலும் துஷ்ரந்களாலும் வானை எட்டி விடும் அளவிற்கிருந்த மதில்களால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது.... எங்கு கண்களை சுற்றியும் அந்த கோட்டைக்குள் அவர்களால் அவர்களின் குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை....
ஐலா வேகமாய் அந்த துளையில் எட்டி பார்க்க ஆப்போது அந்த சிலையை தவிர்த்து அங்கு வேறெதுவும் இல்லை...
திடீரென அங்கு ஏதோ ஒன்று நிகழ்ந்ததால் லீலாவதி " தம்மை மன்றாடி வேண்டுகிறேன்... எம் மகவுகளை ஒன்றும் செய்யாதீர்கள்... இல்லை வேண்டாம்... " என அடித் தொண்டையிலிருந்து அலரினார்.. அத்தோடே மயக்கத்திலிருந்த யட்சினிகளின் மீது ஏதோ பொலிச்சென ஊற்றப்பட அம்மூவரும் மயக்கம் தெளிந்து உயிர் நோக அலரினர்...
அதை பொருட்படுத்தாமலே நித்யாவின் கரத்தை வெட்ட அவள் கரத்தை நோக்கி தன் கோடாரியை எடுத்து சென்றான் விஞ்ஞவெள்ளன்....
ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்தது அனைத்தும் நாயகிகள் மட்டுமல்லாது அந்த போர்களத்திலும் கோட்டைக்குள்ளும் இருந்த அனைத்து உயிரினம் முதல் யாளிகள் வரை அனைத்தையும் பேரதிர்க்குள்ளாக்கியது...
அக்கோட்டையின் இரும்பினால் ஆன கதவு கண்ணிமைக்கும் நொடி பொழுதில் பலத்த சத்தத்துடன் இரண்டாய் உடைந்து கோட்டையின் வாயில் மீதே தூரச்சென்று விழுந்தது...
கொக்கரித்து கொண்டிருந்த அமைச்சன்களும் அதிர்ந்து போய் வாயிலை நோக்க புழுதி பறந்த அந்த வாயிலின் முன் மூன்று உருவத்தை தவிர்த்து அவர்களால் வேறெதையும் பார்க்க முடியவில்லை....
அந்த புழுதியினிடையே சிகப்பு நிறத்தில் நின்றிருந்த சித்தார்த் அவர்கள் அனைவரையும் குரல் நடுக்க வைப்பதை போல் அடித் தொண்டையிலிருந்து ஒரு சத்தமெழுப்ப அவனின் குரலாலே அது தன்னவன் என அறிந்த நித்யாவும் தன் உடல் வலியை மறந்து அவனை நோக்கினாள்...
சித்தார்த்தின் அலரலோடு அவனருகில் நீல நிறத்திலிருந்த ருத்ராக்ஷ் மிகக் கொடூரமாய் வெறிக் கொண்டு தன் அடித் தொண்டையிலிருந்து அலரி அங்கிருந்து அனைவரின் உடலையும் நடுங்க வைத்ததுமல்லாது ஆருண்யாவின் பூவுடலில் சிலிர்ப்பை தூண்டி விட்டான்...
அவர்களிருவரின் அருகில் நின்றது ஆதியன்த்தே தான் என்றாலும் அவனின் அமைதி அனைவரையும் எச்சிலை கூட்டி விழுங்கச் செய்ய புழுதி வேறு பற்றாததற்கு அவர்களின் கண்களை தவிர்த்து மற்ற அனைத்தையும் மறைத்து வைத்திருந்தது...
ஆனால் இவர்கள் எதிர்பார்த்த ஆதியன்த்தின் அலரல் அவர்கள் எதிர்பார்த்த அளவை விடுத்தும் எகிரி அனைவரின் இதயத்தையும் வெளி கொண்டு வர வைப்பதை போல் இருந்தது....
ஒரு நொடி தான்... ஒரே ஒரு நொடி தான்.... அடுத்த நொடி அந்த புழுதி காற்றுக்கு கட்டுப்பட்டு அந்த வாயிலை விட்டு சரசரவென கலைய சர்ப்பலோகம் மட்டுமல்லாது ஆழிலோகம் ஆகாயலோகம் மற்றும் பூலோக உயிர்கள் அனைத்தின் ஆதி முதல் அந்தம் வரை நடுங்க செய்வதை போல் அந்த உலகமே அதிர அந்த புழுதியை விட்டு தங்களின் பயங்கரமான உறுமலுடன் வெளிவந்தது நம் கோவன்களின் சிம்மயாளிகள் முன் சிகப்பு நீலம் மற்றும் வெண்மை நிறத்தில் நின்றிருந்த மூன்று சிம்மயாளிகள்....
மாயம் தொடரும்...
ஹலோ இதயங்களே... ஐம் ரியலி சாரி... இரெண்டு நாள் யூடி குடுக்காம இருந்ததுக்கு.. கொஞ்சம் மைண் டிஸ்டர்ப் ஹார்ட்ஸ்... இப்போ ஏதோ சமாளிச்சிற்க்கேன்... யூடி எப்டி இருக்குன்னு சத்தியமா தெரியல... ரொம்ப சுமாரா எழுதியிருக்கனோன்னு பயமா இருக்கு... உண்மையாவே நாம எண்டிங்க கண்ண மூடி கண்ண திறக்குரதுக்குள்ள நெருங்கீட்டோம்... நீங்க ரொம்ப இந்த போர்ல எதிர்பார்த்து நா அத குடுக்காம போய் முடிஞ்சதுக்கு அப்ரம் சாரி கேக்க முடியாது... சோ ப்லீஸ்.. கேவலமா இருந்தா சொல்லுங்க... அடுத்த யூடி எப்டி இருக்கும்னு எனக்கு சொல்ல தெரியல... நாளைக்கே குடுக்குறேன்... ட்ரை பன்றேன்... குறை இருந்தா சொல்லுங்க ப்லீஸ்...எதாவது ஒன்னு நல்லா இல்லனாலும் என்னால தாங்கிக்கவே முடியாது அப்ரம்...
அப்ரம்...முக்கியமான கொஸ்ட்டின்.... ட்விஸ்ட் புரிஞ்சிதா... எப்டி இருக்கு😜 ஹிஹிஹி புரிஞ்சிர்க்கும்னு நம்புறேன்.. (கடவுளே... யாரும் புரிலன்னு எனக்கு பல்பு குடுத்துர கூடாது )
ஓக்கே இதயங்களே...குட் நைட் ...டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro