மாயம் - 70
இரத்தக்களமாய் மாறி கொண்டிருந்த அந்த போர்களத்தில் காணும் இடமெங்கிலும் குருதிப்புனலே காட்சி தந்தது... நாகமனிதர்கள் சிலர் துண்டு துண்டாய் மரணித்து வீழ்ந்திருந்தனர்... சில இடங்களில் யாவும் நீல நிற திரவங்கள் கொட்டி சிகப்பு இரத்தத்தோடு ஆறாய் ஓடி கொண்ருந்தது...
யானையாளிகள் சதக் சதக்கென கண்ணிற்கெட்டா அந்த துஷ்ரந்களை மிதித்து சல்லடையாக்க நிலம் மெல்ல நீல இரத்தத்தால் சாயம் பூச பட்டது...
அந்த ஐந்து அமைச்சன்களும் சஹாத்திய சூரர்களும் சற்றும் விட்டு கொடுக்காமல் போரிட்டு கொண்டிருந்தனர்...
உடலில் வாளின் கீறல்களால் உண்டான காயங்களில் இரத்தம் கசிவதை ஒருவரும் கண்டதாய் தெரியவில்லை...
சரணின் முன் பெருமூச்சு விட்டபடி நின்ற மகரகாந்தன் அவன் வாளை மறு கரத்தில் பிடித்து சரணை முறைத்தபடியே சரணின் மீது பாய அவன் தாக்குதலை தட்டி சரண் நகரவும் சட்டென அவனுள்ளிருந்து இரண்டாம் மகரகாந்தன் வெளிப்பட்டான்..
இதை எதிர்பார்க்காத சரண் சுதாரிக்கும் முன் சரண் நகர்ந்த அப்பகுதியில் குதித்த இரண்டாம் மகரகாந்தன் சரணின் முதுகில் வாளால் கீறினான்...
முன் நின்றிருந்த மகரகாந்தன் சரணை நோக்கி தன் வாளின் பிடியை இரு கைகளாலும் உயர்த்தி குத்த முயல அதற்குள் சரண் தன் முதுகின் வலியை பொருட்படுத்தாது மண்ணில் விழவும் முதலாம் மகரகாந்தனின் குறி தப்பிவிட இரண்டாம் மகரகாந்தன் அவன் வாளை மீண்டும் சரணை நோக்கி பாய்ச்சும் முன் ஒரு கருநீல பந்து அவனை சீரி வந்து தாக்கியது...
முதலாம் மகரகாந்தன் அவனது வாளை மீண்டும் சரண் மீது அழுத்த அதை தன் வாளை குறுக்கே விட்டு தடுத்த சரண் வேகமாய் உயர்த்திய காலால் அவனை உதைத்து தள்ளி விட்டு கீழிருந்த காலை மடக்கி எம்பி எழுந்து நின்றவனின் அருகிலே மேலிருந்து அனு குதித்தாள்....
அனு : இந்த இரண்டாமவனை யான் கவனித்து கொள்கிறேன் தமையா என கண்களில் கருநீல ஒளி சுடர்விட்டெறிய கூறியவள் சரண் தலையசைத்ததும் அவளது உரையிலிருந்து கண்கள் கூசும் ஒளியுடன் மிளிர்ந்த அவளது அற்புத வாளை உருவினாள்...
அந்த ஒளியிலே இரண்டாம் மகரகாந்தன் தினற அவன் மீண்டும் ஒரு நிலைக்கு வரும் முன் வேகமாய் சுழன்று அவனது வாளை தட்டி விட்டாள் அனு..
மகரகாந்தனின் செயலை போரினிடையிலே கவனித்த விஞ்ஞவெள்ளன் சட்டென இரண்டாய் பிரிய அவனின் திடீர் அதிர்வினால் ரவி இரண்டடி பின் நகர்ந்து நின்றான்...
இருவரும் : ஹாஹாஹா எம் இருவரிடமிருந்து தம்மை யார் காக்கப் போவது சூரரே என ஒரு சேர கேட்டு சிரிக்க
ரவி : ஹா.. ஒருவன் உறினாலே பதிலடி கொடுக்க அலுப்பமெக்கு.. இதில் இருவரும் உளறுகிறீரா.. யாது உளறினீர்... தம் இருவரிடமிருந்து எம்மை காக்க வேண்டுமா... தம்மிருவரை தான டா எவரேனும் எம்மிடமிருந்து காக்க வேண்டும்...
இரண்டாம் விஞ்ஞவெள்ளன் : அதையும் தான் காணலாமே என சட்டென தன் இறெக்கையை விரித்து அவன் பறக்க திடீரென பின்னிருந்து அவனை கீழே உதைத்து தள்ளி விட்டு அவன் மீதே ஏறி நின்றாள் தான்யா...
தான்யா : தமது கூற்றின் படி.. இவ்விருவரையும் தமது சினத்தில் மடிய விடாது ஒருவனை காத்து என் முறைபடி போராட உள்ளது யானெனவே எண்ணுகிறேன் தமையா என ரவியை பார்த்து கண்ணடிக்க ரவி அவளின் கூற்றில் புன்னகைக்கவும் இரு விஞ்ஞவெள்ளனும் இவளெங்கிருந்து குதித்தாள் என்பதை அறியாமல் முளித்தவர்கள் அவளது கூற்றை செவி மடுத்து வெறியாகினர்...
அதற்கு மேலும் நேரத்தை வீணடிக்காது அண்ணன் தங்கை இருவரும் தங்களது முன் இருந்த விஞ்ஞவெள்ளனை நோக்கி தங்களது முறையில் யுத்தத்தை தொடங்கினர்...
தான்யா அவன் எழ முயற்சிப்பதை கண்டு அவன் முதுகில் மிதித்து அவளது இடையிலிருந்த ஒரு குறுவாளை உருவி அவன் தோளில் இறக்கினாள்...
வலியில் கதறிய விஞ்ஞவெள்ளன் ஒரே எம்பில் தான்யாவை கீழே தள்ளி விட்டு எழுந்து நிற்க தான்யா சுதாரிக்கும் முன் இவனது வாள் தான்யாவின் முழங்கையில் ஒரு ஆழமான கீறலை பரிசளித்திருந்தது...
அதை கண்டு சாதாரணமாய் பல்லை கடித்த தான்யா அதற்கு மேலும் ஒரு நொடி கூட சிந்திக்காமல் அவளது வாளை சுழற்றி விஞ்ஞவெள்ளன் மீது அடிக்க அதை கடைசி நொடியில் தன் வாளை குறுக்கே விட்டு தடுத்த விஞ்ஞவெள்ளனின் முகத்தில் அவளின் வேகத்தை கண்டு மிரட்சி எழும்பியிருக்க அவன் எண்ணியதை விடவும் அவள் விவேகமானவள் என்பதை நிரூபிப்பதை போலவே தன் வாளை அகற்றாமல் இடது கரத்தாலே தன் தோள் உரையிலிருந்த ஒரு குறுவாளை உருவி நொடி நகர்வதற்குள் சரக்கென விஞ்ஞவெளள்ளனின் வலது நெஞ்சில் இறக்கினாள்...
தன்னை கடிக்க வந்த நாகமனிதனின் வாளை இரண்டாய் வெட்டிய வீர் திடீரென விஞ்ஞவெள்ளன் அலரும் அரவம் கேட்டு திரும்பினான்... அவனது காதல் மனையாட்டி விஞ்ஞவெள்ளனுக்கு எமனாய் அவன் முன் நின்றிருப்பதை கண்டவனின் முகத்தில் புன்னகை மலர அவன் பின் திடீரென இரத்தம் தெறித்தது
சட்டென திரும்பி பார்த்த வீர் அங்கு நின்றிருந்த ரக்ஷவை கண்டு முளிக்க வீரை பின்னிருந்து தாக்க வந்திருந்த நாகமனிதனை இரண்டாய் வெட்டி முதல் முதலாய் ஒருவனை மரணிக்கச் செய்திருந்த ரக்ஷவ் அந்த எண்ணமின்றி போரில் கவனமின்றி நின்ற தன் குருவை முறைத்து கொண்டிருந்தான்...
ரக்ஷவ் : தற்போதும் எமது அன்னையை சைட்டடித்தே தான் ஆக வேண்டுமா குருவே என அவன் அதே பார்வையுடன் கேட்க வீர் பதிலளிக்கும் முன் இடது கரத்தால் தன் வில்லை பற்றிய ரக்ஷவ் அவன் வலது கையிலிருந்த குறுவாளை அந்த வில்லில் பொருத்தி சட்டென ஒரு திசை நோக்கி குறி வைத்து ஏவ அந்த குறுவாள் அவர்களை நோக்கி சீரி கொண்டு வந்த ஒரு நாகமனிதனின் கழுத்தை பொத்து கொண்டு அவன் பின் வந்த ஒரு துஷ்ரந்தின் கரத்தில் ஆழ வெட்டிட்டு நீல நிற இரத்தத்தை தெறிக்க வைத்தது...
ரக்ஷவ் : ச... இந்த நாகமனிதன யாரு வர சொன்னது... துஷ்ரந்துக்கு வச்ச குறி லைட்டா மிஸ்ஸாய்டுச்சு என குறைப்பட்டுக் கொள்ள அதை கேட்ட உடனே
வீர் : டேய் உனக்கு இவனுங்க கூட சண்ட போட தான் அனுமதி.. துஷ்ரந்கள் பக்கம் நீ போக கூடாது என உடனே வீர் காட்டமாய் கூறினான்
ரக்ஷவ் : அப்போ உங்களுக்கு மட்டும் தானும்மாவ சைட்டடிக்க யாரு பர்மிஷன் குடுத்தது குருவே என எதிர்கேள்வி கேட்க
நிரு : ரொம்ப முக்கியம் இப்போ .. ஓடுங்க இரெண்டு பேரும் என இருவரையும் முறைக்க அவர்கள் உடனே யுத்தத்தோடு இணைந்து கொண்டனர்... நிரு அவளுக்கு நேரெதிரே தன்னோடு போரிட்டு கொண்டிருந்த அருளவர்தன் இரண்டாய் பிரிந்து விட்டான் என்பதை அறியாமல் ஒருவன் தன் பின் இருப்பதையும் கவனிக்காமல் யுத்தத்தில் கண்ணாய் இருந்த ரித்விக்கை நோக்கி ஓடினாள்...
அவள் வருகையை ரித்விக் பின் நின்ற இரண்டாம் அருளவர்தன் அறிந்தானோ இல்லையோ ரித்விக் அறிந்திருந்தான்...
நிரு அவள் காலை நிலத்தில் அழுத்தி எம்பி அவள் வாளை ஓங்க சரியாய் ரித்விக் திரும்பி அவனது வாளால் அவனை பின்னிருந்து தாக்கவிருந்த அருளவர்தனின் நெஞ்சில் தாக்க நிரு ரித்விக்கின் முன் இவ்வளவு நேரமும் நின்றிருந்த அருளவர்தனை தாக்கி உதைத்து தள்ளி விட்டு கீழே குதித்து நின்றாள்...
நிரு : பின்னிருந்து தாக்கும் கோழயடா நீவிர்
ரித்விக் : யாம் அப்பட்டியலில் இல்லை என்பதை நினைவில் கொள் என நிருவின் வாக்கியத்தை முடித்து வைத்தான்...
பின்ன எச்சரிக்கையையே சக்தியாய் கொண்டிருக்கும் அவனை பின்னிருந்து தாக்க வருவோரை அறியாமலா இருப்பான் அவன்....
இரண்டாம் அணி நாயகன்கள் தங்கள் தாய்மார்களின் போர் கலைகளை கண்டு அசந்து போயிருந்தனர்... ராமின் வெள்ளை தோல் பாதி நீல நிறத்தில் இருக்க அவன் வாய் முழுவதும் நீல சாயம் அப்பியதை போல் இருந்தது... இதே நிலை தான் மற்ற அனைவருக்கும்...
அனைத்திற்கும் மேலாக சிம்மயாளிகள் பல நாள் பின் இப்படிப்பட்ட தீணி கிடைத்ததால் பூந்து விளையாடி கொண்டிருந்தது...
இப்போது மற்ற இரு அமைச்சன்களும் இரண்டிரண்டாய் பிரிந்திருக்க அவர்கள் பதம் பார்த்து விடும் நோக்கில் சென்ற ரனீஷ் மற்றும் அர்ஜுனை முந்தி கொண்டு அவ்விடத்தை அடைந்திருந்தாள் ரக்ஷா... அவளூடே பவியும் அவ்விடத்தை அடைந்திருந்தாள்...
இவ்விருவரும் ரனீஷ் அர்ஜுனை கண்டு கண்ணடிக்க அவர்களும் செய்கை புரிந்ததால் ஆல் தி பெஸ்ட் கூறி விட்டு விட்ட இடத்திலிருந்தே வீருடன் மீண்டும் தொடர்ந்தனர்...
ஹ்க்கும் என்ற தன் துணையின் குரலில் தன்னை வெகு அருகில் முறைத்தபடி கீழே தள்ள முயன்று கொண்டிருந்த மிதரவர்தனனை மொத்த அழுத்தத்தையும் சேர்த்து தள்ளி விட்டு எழுந்தான் அஷ்வன்த்
அஷ்வன்த் பவியை கேள்வியுடன் நோக்க பவி அவனுக்கு பதில் பார்வை செழுத்தாது அவளது குறுவாள் ஒன்றை அவனின் கையில் தினித்து விட்டு போர்களத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா போடாத குறையாக நின்ற அவ்விருவரை நோக்கி ஏய் என ஹை பிட்ச்சில் அலரி கொண்டே ஓடி வந்த இரண்டாம் மிதரவர்தனனை தன் வாளால் தடுத்து அதே நேரம் அவன் அவளை உதைப்பதற்காய் உயர்த்திய காலை அவள் காலால் மிதித்து கீழே தள்ளினாள் பவி
பவி கொடுத்த அந்த குறுவாளை பிடித்து சற்று அழுத்திய அஷ்வன்த் அதன் மறுமுணையில் சர்ரென ஒரு ஈட்டி வெளி வரவும் அதை ஒரு கரத்தால் பிரித்தெடுத்து ஓங்கி வீச அது சரியாக மிதரவர்தனனின் வயிற்றில் சென்று குத்தியது...
அவன் வயிற்றை பிடித்து கொண்டு அதிர்ச்சியாய் நிற்க அஷ்வன்த் கல்லென அவனை ஒரு உதை உதைத்து கீழே தள்ளி விட்டான்...
முகிலும் ரக்ஷாவும் ஒருவர் மற்றவருக்கு பார்வை செலுத்தி விட்டு ஒரே நேரத்தில் அவர்களுக்கு முன் ஒன்றாய் ஏதோ தங்களுக்கு தானே அரண் என்பதை போல் ஒரு கையில் கேடையத்துடன் மறு கையில் வாளுடன் நின்ற இரு சாகாரகாந்தனை நோக்கி ஓடினர்...
இருவரும் ஒரே நேரத்தில் எம்ப ரக்ஷா முதல் சாகாரகாந்தனின் கேடையத்தில் கால் வைத்து மறுகாலால் அவன் கழுத்தை எத்தி கீழே பலமாய் தள்ளி விட முகிலின் தாக்குதல் அதை விடுத்தும் பலமாய் இருந்தது...
இரண்டாம் சாகாரகாந்தனின் கேடையத்தில் காலாலே எம்பி அவனது ஒரு காலால் அவன் முகத்தை எத்தி பின் தள்ளி மீண்டும் மறுகாலால் பலமாய் உதைத்து தூர சென்று விழ வைத்து காற்றிலே அவன் செய்த தாக்குதலினால் ஒரு முறை கரணம் அடித்து கீழே குதித்தான் முகில்..
காற்றிலே இவன் ஃபுட் பால் விளையாடுவான் என நினைத்திருந்தால் கோல் போஸ்ட்டாவது வைத்திருக்கலாம் என்பதை போல் கை தட்டி சிரித்தாள் ரக்ஷா...
சித்தார்த் அவன் கரத்திலிருந்து பாய்ந்த தீயினால் கண்ணிற்கெட்டா துஷ்ரந்களை மிகவும் எளிதாய் அனைவருக்கும் காட்ட ஆதியன்த்தின் சூராவளி காற்று அந்த துஷ்ரந்களை ஒன்றாய் பொருக்கி கொண்டு அந்த நிலம் முழுவதும் சிதற விட ருத்ராக்ஷ்ஷின் நீர் ஆதியன்த்தின் சுழலுடன் இணைந்து சுவாசிக்க விடமால் சிதறும் அனைத்து துஷ்ரந்களையும் மரணிக்கச் செய்தது...
துஷ்ரந்களை உயிரோடு எரித்து கொண்டிருந்த சித்தார்த்தை நோக்கி திடீரென யுகி உறும அவன் கவனிப்பதற்குள் பறக்கும் புலியின் உருவிலிருந்த மித்ரன் சடாரென சித்தார்த் மீது பாய்ந்து அவனை மறுப்புறம் இழுத்துச் செல்ல சித்தார்த்தை பின்னிருந்து கடிக்க வந்த எமதர்மனின் முதுகில் ரக்ஷவ் தாக்கிய அதே காயத்தில் மீண்டும் வந்து இறங்கியது ஒரு அம்பு
எமதர்மன் நாயகர்களும் ரக்ஷவும் சர்ப்பலோகம் வந்ததும் எப்படியோ தப்பித்து வந்து விட்டான்...
அது அதே அம்பு தான்.... எமதர்மன் திரும்பி நோக்க ஓடி வரும் யுகியின் மீது பாய்ந்து அமர்ந்த ரக்ஷவ் இவனை நோக்கி மற்றொரு அம்பை வில்லில் வைத்து குறி வைக்க " திருந்துகிறேன் சென்று விடுகிறேன் " என்று இவன் விட்ட டயலாக்கெல்லாம் அவன் காதுகளில் வட்டமடிக்க அவனை யோசிக்க விடாமல் ரக்ஷவ் எவிய அம்பு சரியாய் ரக்ஷவின் குறி தப்பாமல் அவன் நெஞ்சில் இறங்க அடுத்த நொடியே யுகி உறுமிக் கொண்டே அவன் மீது பாய்ந்தது...
எமதர்மன் உயிர் பயத்தில் அலர திடீரென கேட்ட ரக்ஷவின் அலரலில் யுகி அவனை அப்படியே விட்டு விட்டு அவர்களின் பின் சற்றே தொலைவில் கீழே விழுந்த ரக்ஷவை நோக்கி ஓடியது...
ரக்ஷவின் பின்னிருந்து ஒரு துஷ்ரந் அவனை திடீரென பிடித்திருக்க அந்த விசை சக்தியை தாங்க இயலா ரக்ஷவ் இது தான் தப்பிக்கும் வழியென்றே அறியாது கீழே விழ கீழே கிடந்த ஒரு வாள் அவனது புறங்கையை பதம் பார்க்கவும் அலரி விட்டான்...
துஷ்ரந்தை கவனிக்காது எழ முயன்றவனை நோக்கி அந்த துஷ்ரந் வேகமாய் வர அதற்கும் முன் அது சட்டென தீப்பிடித்து எரிய தொடங்கியது
ரக்ஷவ் அதன் மிகக் கொடூரமான அலரலிலே நிமிர்ந்து அந்த கேவலமான உருவத்தை நோக்கினான்... அவனுக்கு முன் சித்தார்த் தீக்கனலென எரிந்து கொண்டு ரக்ஷவிற்கு அரணாய் நிற்க இவ்விருவரையும் தாண்டி குதித்த யுகி நொடிக்கணக்கில் சித்தார்த்தின் அழலையும் (நெருப்பையும்) மீறி அந்த துஷ்ரந்தை மொத்தமாய் கடித்து குதறி சின்னாப்பின்னமாக்கி தனக்கு ஊணாக்கி (உணவாக்கி) விட்டே மறு புறம் திரும்பியது...
யுகி வந்ததுமே ரக்ஷவை மெதுவாய் எழுப்பிய சித்தார்த் அவனது சக்தியால் நொடியிலே ரக்ஷவின் காயத்தை மறைய வைத்திருக்க ரக்ஷவ் அதை கவனித்து விட்டு சித்தார்த்தை நோக்கும் முன் யுகி வேகமாய் அவனை நோக்கி ஓடி வந்தது..
ரக்ஷவ் : யுகி எமக்கொன்றுமில்லை... நீ செல் என கூறவும் யுகி ஏதோ மறுப்பாய் உறும அதை புரியவைப்பதை போலிருந்தது சித்தார்த்தின் கூற்று
சித்தார்த் : யுகி ரக்ஷவ் உமது பொருப்பு... அவனை விட்டு நீ எங்கும் செல்லக்கூடாது என கூற யுகி தலையசைத்து ரக்ஷவ் ஏறி கொள்வதற்காய் கீழே மண்டியிட சித்தார்த் ரக்ஷவை மெல்ல தூக்கி யுகி மீது அமர வைத்து விட்டு அவனது இறெக்கையை விரித்து மேலே பறந்தான்...
இந்த நிகழ்வினால் இம்மூவரும் யமதர்மனை மறந்திருக்க அவன் தப்பித்தால் போதுமென கோட்டைக்குள் சென்றிருந்தான்...
நாகனிகள் மூவரும் திடீரென ஏதோ ஒரு திசையில் திரும்ப அந்த திசை முழுவதும் எண்ணற்ற கடம்பர சர்ப்பங்கள் சரசரவென ஓடி வந்தது...
கடம்பர சர்ப்பம் அனைத்துமே ஒரு முழம் அளவில் தான் இருக்கும்... அதை இவர்கள் கவனித்தால் நாகமனிதர்களையும் துஷ்ரந்களையும் எவ்வாறு கொல்வதென்று மூவரும் தினற அனு பதட்டத்தில் திசை திரும்பியதால் மகரகாந்தன் அந்த சந்தர்பத்தை உபயோகித்து அவனது வாளால் அனுவின் கழுத்தை வெட்ட முணைய திடீரென யாரோ பின்னிருந்து இழுக்கவும் தோளில் சிறிய வெட்டுடன் அனு மயிரிலையில் தப்பித்தாள்...
சரணால் அனு சட்டென இழுக்கப்பட அனுவை தாக்கிய மகரகாந்தன் மீது மேலிருந்து குதித்தான் துருவ்...
துருவ் : அத்த.. ஓக்கே வா... என கேட்க அனுவும் சரணும் ஒரு சேர தலையத்து விட்டு எழுந்து நின்றனர்...
அனு : துரு நா அவன பாத்துக்குறேன்... நீ மோகினி அண்ணிக்கிட்ட கடம்பர சர்ப்பங்கள் இந்த இடத்த நோக்கி வந்துக்குட்டு இருக்குன்னு உடனே சொல்லு என கூறியவள் துருவ் அவனது பருந்து உருவில் பறந்ததும் எழுந்த மகரகாந்தனை மீண்டும் கீழே தள்ளி விட்டு அவளது சகோதரிகளை தேடினாள்...
மேலே பறந்து கொண்டிருந்த திவ்யாவும் ப்ரியாவும் அவளை நோக்கி தாங்கள் பார்த்து கொள்வதாய் கண்ணசைக்க நிம்மதியாய் புன்னகைத்த அனு இப்போது அவளுக்கு தோளில் காயத்தை தந்திருந்த மகரகாந்தனுடன் மீண்டும் களத்தில் இறங்கினாள்...
துஷ்ரந்களை கடித்து குதறி கொண்டிருந்த மிதுன் திடீரென அலர அவன் காலை ஒரு கடம்பர சர்ப்பம் கடிப்பதை கண்ட வீனா அவளது வாளால் அந்த சர்ப்பத்தை இரண்டாய் வெட்டினாள்...
மிதுனின் காலில் மஞ்சள் நிறமாய் ஒரு வட்டம் உருவாகியதை வீனா கவனிக்க மிதுன் அவர்களை நோக்கி வந்த கடம்பர சர்ப்பங்களை நோக்கி வெறியுடன் உறுமி விட்டு முன்னோக்கி செல்லப் போகவும் வீனா அவனை தடுக்க சரியாக அங்கே ஒன்றாய் ஒரு சேர ஒலித்த ஏதோ அரவங்கள் அந்த கடம்பர சர்ப்பத்தை அரள வைத்தது...
அவைகளுக்கு எவ்வாறு அரவம் பலமோ அதே போல் பலவீனமும் அரவம் தான்... அந்த கடம்பர சர்ப்பங்களை சுற்றியும் நாழா புறத்திலும் பருந்து வம்சத்து தந்தையும் தனையன்களும் சேர்ந்து பறந்தவாறு அவர்களின் சிறகுகளை அசைத்து தாயாவள் எழுப்பும் அந்த அரவத்தின் அதிர்வை அவர்களை தாண்டி போக விடாமல் அந்த கடம்பர சர்ப்பங்களுக்கு அழுத்த மோகினி அவளது நாகபருந்தின் உருவத்தில் கண்கள் மின்னி மையத்தில் ஒரு விதமான அரவத்தை எழுப்பியபடி பறந்து கொண்டிருந்தாள்... அந்த அரவத்தினால் மருண்டு அலரி கொண்டிருந்த சர்ப்பக்கூட்டத்தையே திவ்யா மற்றும் ப்ரியாவின் சக்திகள் வளைத்து சிறை வைக்க தொடங்கியது...
வீனா : மிதுன்கண்ணா... இரு ஒரே நிமிஷம்...பல்ல நல்லா கடிச்சிக்கோ... இட்ஸ் சீரியஸ் என கத்தியவள் மிதுனின் காலில் மஞ்சள் வட்டம் தோன்ற தொடங்கிய இடத்தில் நன்கு ஆழமாய் கீறாமல் வாளால் ஒரு கீறலையிட அதில் மிதுன் பல்லை கடித்து வலியை கட்டுப்படுத்த அவன் இரத்தம் கசிய கசிய அந்த கடம்பர சர்ப்பத்தின் நஞ்சும் வெளியேறியதும் அவன் முதுகில் தட்டி அவனுக்கு வைத்திருந்த தடுப்பை அகற்றி அவனுக்கு சூரையாட அனுமதி தந்தாள் வீனா...
அப்போதே மெல்ல கண் விழித்த சித்ரியா இந்த கோர தாண்டவங்களை கண்டு அதிர்ந்து போய் பரிதவித்தாள்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... யூடி எப்டியிருக்கு.. ஐ மீன் போர்... ஓக்கேவா... போரடிக்கிர மாரி இல்ல தான... ஐ ஹோப் அப்டி இல்லாம இருந்துர்க்கனும்... இப்போ எனக்கு கொஞ்சம் சார்ஜ் பற்றாக்குறை உள்ளதனால் மீதியை மற்றொரு அத்யாயத்தில் தருகிறேன்... அது நாளைக்கு வரும்... சீக்கிரமே தர முயற்சிக்கிறேன்.. பாப்போம்... பீ சேஃப் எவ்ரிவன்... குட் நைட் டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro