மாயம் -7
விரல் நீட்டி தொடும் தூரத்தில் கிளை இருந்தாலும் அதை தொட்டால் எங்கு கிளை முறிந்து விடுமோ என்ற பயத்தில் தொங்கி கொண்டிருந்த ஒரு பறவையை ஜன்னல் வழியே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி... அவளருகிலே தூரிகையினால் அந்த செவ்வாணத்தின் படத்தினை அழகான ஓவியமாய் தீட்டி கொண்டிருந்தாள் மாயா...
அவளின் கை வண்ணத்தின் அழகு ஓவியத்தினில் பிரதிபலிக்க கன்னாடி பிம்பமென தெரிந்த அவ்வோயியத்தை தன்னையும் மறந்து இரசித்து கொண்டிருந்தாள் இக்ஷி...
விடிந்ததிலிருந்தே மனம் சஞ்சலத்தில் அலைய மன நிம்மதிக்காய் ஓவியம் தீட்ட துடங்கிய மாயாவின் கை அவள் எண்ணத்திற்கேற்ப அழகாய் உருவாகி கொண்டிருந்தது...
இமை மூடி வரைந்து கொண்டிருந்தவளின் மனம் திடீரென நெருட தொடங்க, சீராய் சென்ற தூரிகை தடுமாறியது அவளின் கட்டுப்பாட்டை விட்டு கைகள் தனிச்சையாய் எதையோ கிருக்க... இமையை கூட திறக்காமல் நிற்பவளையே ஆரம்பத்திலிருந்து ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்த மதி இவள் திடீரென புருத்தையும் இதழையும் சுருக்குவதையும் கண்டு குழப்பமடைந்தாள்...
மாயாவின் இயற்கை ஓவியம் திடீரென மாறுவதை கண்டு இவ்வளவு நேரமும் அதை இரசித்து கொண்டிருந்த இக்ஷியும் பதறி போய் அவளை பார்த்தாள்... தன் கட்டுப்பாட்டை மொத்தமாய் இழதிருந்த மாயா தூரிகையை தவிர்த்து கையிலிருந்த அனைத்தையும் தூக்கி எறிந்ததோடு மறுகையால் எதையெதையோ தள்ளி விட்டாள்...
இக்ஷி : ஹே மாயா... என கத்தவும் இவளின் கத்தலில் கீழிருந்த அனைவரும் மேலே ஓடி வந்தனர்... நந்தினி பயத்தில் உடல் நடுங்க இமையை பிரித்திடாமல் நின்ற மாயாவை தோள் தொட்டு திருப்ப முயன்றாள்...
அவளின் தொடுகையில் சட்டென கண்களை திறந்த மாயா... பெருமூச்சை வாங்கியவாறு சட்டென சாய... அவளை பிடித்து பெட்டில் அமர வைத்தாள் சந்தியா...
வைஷு : என்ன டி ஆச்சு... ஏன் டி இந்த கத்து கத்துன... என பறபறக்க...
மாயா : எனக்கே தெரியல டி... என்னமோ ஆய்டுச்சு... மனசு ஏதோ பயமா இருந்துச்சு... கை பாட்டுக்கு ஏதோ வரையிரது மட்டும் தான் என்னால உணர முடிஞ்சிது... என்ன ஏதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியல...
நவ்யா : ஹே கூல் டி ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல... என முதுகை தேய்த்து அவளை அசுவாசப்படுத்த உதவினாள்..
மதி இன்னமும் மாயா தீட்டியிருந்த ஓவியத்தை நெற்றி சுருங்க புருவ முணை இணைய... இதழை குவித்து அழகாய் பார்த்து கொண்டிருந்தாள்...
தலையிலே அடித்து விட்டு அவளை உலுக்கினாள் நித்ரா...
நித்ரா : ஏன் டி இப்டி வெறச்சு நிக்கிர...
நந்தினி : இப்போ உனக்கு என்ன டி செய்யுது
மதி : அவ வரஞ்ச ஆர்ட்ட பாத்துட்டு பேசுங்க டி... என நகர்ந்து நிற்கவும் ஏழ்வரின் கண்களும் அந்த ஓவியத்தை தீண்டி வந்தது...
அழகான நீல வாணில் பாதிக்கும் மேற்பட்ட இடத்தை இருள் ஆக்ரமித்து மீதமிருந்த இடத்தினில் சூரியனின் பாதி உட்சத்துடன் செம்மையான சாயமும் வெண்மேகங்களும் திரண்டிருப்பது அழகாய் தீட்டப்பட்டிருந்தது... இருள் வாணில் மூழ்கி கிடந்த நிலவின் ஒளி மெல்ல உலகை எட்டி கொண்டு பார்ப்பதை போலும் நிலத்தில் கால் பதியா ஆயிரமடி தூரத்தில் வெவ்வேறு நிறத்திலிருந்த மூவர் மேல் பார்ப்பதை போல் மிதக்கவும்... அவர்களை சுற்றி ஏழ்வர் வட்டமாய் அவர்களுக்கு சற்றே கீழ் மிதப்பதை போலும்... அவர்களுக்கு கீழ் ஐவர் ஒரு சேர கைகளை உலகை நோக்கி சுழற்றி கால்களால் எம்பியதை போலும் இருக்க.... அவர்களின் கீழ் நிலத்தில் பலரையும் அந்த வட்டமருகிலே நெருங்க விடாமல் தடுத்து சிலர் போரிடுவதை போல் இருந்தது அவ்வோவியம்...
மாயா : எனக்குள்ள இத்தன வர்ஷமா இவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட் ஒளிஞ்சிருந்தான்னு தெரியாம போய்டுச்சே டி... என வியப்பாய் கூறினாள்...
ஏழ்வரும் : எங்களுக்கும் தான்... என ஒரே போல் கூறவும் இக்ஷி அதை ஃபோட்டோ எடுத்து கொண்டாள்.... அவள் ஃபோட்டோ எடுத்த அடுத்த நொடியே நித்ராவின் செல்பேசி அலர செல்பேசியிலோ முகி மாமா என்ற பெயர் ஒளிரியது...
(மீண்டும் நினைவுக்கு...
அஷ்வன்தின் மகள் வைஷ்ணவி / மகன் மித்ரன்
ரித்விக்கின் மகள் சந்தியா / மகன் அஷ்வித்
ரவியின் மகள் மாயா / வருண்
ரனீஷின் மகள் நந்தினி / அருண்
வீரின் மகள் நவ்யா / ஆதவ்
முகிலின் மகள் இக்ஷி / ராகவ்
அர்ஜுனின் மகள் மதி / ராம்
சரணின் மகள் நித்ரா / மிதுன்
ஜோடிகள் விரைவில் தெளிவாய் விவரிக்கப்படும்)
மலர்ந்த புன்னகையுடன் அட்டென் செய்து அப்பா என்றாள் நித்ரா...
முகில் : நித்து... என இவன் ஆரம்பத்திலே அழைக்க...
நித்ரா : முகி மாமா எப்டி இருக்கீங்க... என உற்சாகமாய் வினவினாள்...
முகில் : நா நல்லா இருக்கேன் நித்துமா... நீங்க எல்லாரும் எப்டி டா இருக்கீங்க...
நித்ரா : ரொம்ப நல்லா இருக்கோம் மாமா... ஒவீ அத்தி எப்டி இருக்காங்க...
முகில் : நல்லா இருக்கா டா... என்ன சாப்ட்டாச்சா எல்லாரும்..
இக்ஷி : மைடியர் தந்தையே... உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கேன் நியாபகம் இருக்கா இல்லையா...
முகில் : என் செல்லமே... உன்ன எப்டி இக்ஷிமா மறப்பேன்...
மாயா : கொஞ்சலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல முகிப்பா... என சிரிப்புடன் கூற...
முகில் : ஷு... நானே சமாளிச்சிட்டு இருக்கேன் கால வாராத மாயாமா
சந்தியா : ஹலோ மாம்ஸ் எங்கள எப்போ ஊருக்கு அழச்சிட்டு போவீங்க... என்ற கேள்வியில் திடீரென அப்புறம் நிசப்தம் நிலவியது...
வைஷு: மாம்ஸ்... மாமா... ஹலோ மாமா இருக்கீங்களா...
முகில் : சிக்னல் சரி இல்ல கண்ணா... நா அப்ரமா பேசுறேன்... என ஃபோன் அத்துடன் கட்டானது...
குழப்பமாய் சுருங்கிய புருவ முடிச்சிடும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நாயகிகள் தோளை குலுக்கி கொண்டனர்..
நவ்யா : ஏன் டி இந்த கொஷின் கேட்டா மட்டும் அப்பாஸ்லேந்து தாத்தாஸ் பாட்டீஸ் வர எல்லாரும் நழுவுராங்க...
நித்ரா : அத தான் இருவது வர்ஷமா நானும் என் டிடெக்ட்டிவ் மூளைய வச்சு கண்டுப்புடிக்க பாக்குறேன் சிக்க மாட்டுதே டி...
நந்தினி : ம்க்கும் மடெம்க்கு அப்டியே சரண் மாமா மாறி டிடெக்டிவ்னு நெனப்பு...
மதி : அவ சரண் மாமா மாறி டிடெக்ட்டிவோ இல்லையோ.. ஆனா மிதுன் அத்தான் மாறி கிடையாது... என சிரிப்புடன் கூறவும் மிதுனின் பெயரை கேட்டதும் தன்னாலே இக்ஷியின் கன்னம் சிவந்ததை சகோதரிகள் அனைவரும் நமட்டு சிரிப்புடன் கவனித்தனர்...
நித்ரா : அவன மாரி அவன் ஒருத்தன் இருந்தா பத்தாதா டி நா வேற இருக்கனுமோ...
இக்ஷி : கெர்ள்ஸ் நாம பேசிக்கிட்டு இருந்த டாப்பிக்கே மாறுது...
வைஷு : ஏன் மச்சி இந்த டாப்பிக் பேசுறதுனால நோக்கு எதேனும் ப்ராப்லமா...
இக்ஷி : அப்டி இல்ல...
சந்தியா : அப்போ நாங்க எங்க அண்ணன பத்தி பேசுனா உனக்கு என்ன டி...
இக்ஷி : சரி நீங்களே பேசுங்க... நா போய் கயல் காட்ட பேச போறேன்... என எழுந்து ஓட போனவளை பிடித்திழுத்தாள் மதி...
மதி : ஓடாத டி வா சேந்தே பேசுவோம்... ஃபோன் போடு அவளுக்கு... என சிரிப்புடனே கூறவும் சில நொடிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் கயலுக்கு இவர்களிடமிருந்து ஃபோன் போனது...
ஃபோனை அட்டென் செய்த கயல் எதை கூறினாளோ இவ்வெண்வரின் முகங்களும் பிரகாசமடைய மலர்ந்த முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
வேதபுரம்
சமையலறையில் பால் பொங்குவதையும் கவனியாது ஏதோ ஒரு சிந்தையில் நின்றிருந்த பவியில் தலையிலே ஒரு அடியை போட்டு விட்டு அடுப்பை அணைத்தாள் வர்ஷி...
வர்ஷி : லூசு என்ன டி யோசனைல இருக்க... எத இப்போ ஆராய்ச்சி பன்ன போற...
பவி : லூசு அது இல்ல டி...
வர்ஷி : அப்ரம் என்ன யோசனைல இருக்கியாம் ... என பொங்கிய பாலில் டீ தூளை கலந்து தேனீரை தனி தனி டம்ளர்களில் ஊற்றினாள்...
பவி : நம்ம ப்ரிமா சொன்னதெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு டி... என இவள் ஸ்லப்பின் மேல் அமர்ந்தவாறு கூற... ஒரு நொடி ஊற்றுவதை நிறுத்தி விட்டு கண்களை நிமிர்த்திய வர்ஷி பின் மீண்டும் கண்களை தாழ்த்தி கொண்டாள்...
வர்ஷி : அதுல என்ன குழப்பம் பவிமா உனக்கு
பவி : ஆர் யு சீரியஸ்... இதுல குழப்பமில்லாம எப்டி இருக்கும்... நம்ம ப்ரிய பத்தி உனக்கு தெரியாதா டி...
மது : ப்ரியாவ பத்தி நமக்கு தெரியாம எது டி இருக்க போகுது... பட் இருந்தாலும் அத போட்டு குழப்பிக்கிரதுனால என்ன ஆக போகுது சொல்லு என கேட்டவாறே உள்ளே வந்தாள்...
பவி : ஏன் மதுமா உனக்குமா என் கவலை புரியல...
தான்யா : ப்ரியாவோட கனவுல வந்ததெல்லாம் நடந்தா நம்ம பசங்களுக்கு எதாவவது ஆய்டுமோன்னு கவலபடுர அதான... என பொருமையாய் கேட்டு கொண்டே காய்களை நறுக்க தொடங்கினாள்...
வர்ஷி : என்ன டி இத இவ்ளோ ஈசியா சொல்ற...
அனு : எங்க அண்ணனுங்களும் அத்தானுங்களும் இருக்குரப்போ நீங்க ஏன் டி கவலப்படுரீங்க... உங்க அண்ணனுங்க வேணா இப்போ இல்லாம இருக்கலாம்... ஆனா என் அண்ணனுங்களும் அத்தானுங்களும் நம்ம பசங்களுக்கு எப்பவும் எதுவும் ஆக விட மட்டாங்க... என அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவள் ஏதோ ஒரு அர்த்தத்தை பார்வையில் பொருத்தி நிதானமாய் கூறினாள்... அவளூடே உள்ளே வந்த திவ்யா பவியின் தோளில் அழுத்தம் கொடுத்து அவளுக்கு வலுவூட்டினாள்....
பவி : இல்ல டி... அம்மா அத்தி அத்தமா அத்துன்னு எங்க காலையே சுத்தி வர புள்ளைங்களுக்கு எதாவது ஆய்டுச்சுன்னா நெனச்சு கூட பாக்க முடியல... என கண்ணீர் ஊற்றெடுக்க நின்றவளின் கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்ட வீனா...
வீனா : பவிமா... நீ ஒரு அம்மாங்குரதுக்கு முன்னாடி யாளி வம்சத்தோட வீராங்கனை.. ஒவ்வொரு யுக்தியும் வியூகமும் அறிஞ்சு தெரிஞ்சு புரிஞ்சிக்கிட்டவ நீ..
நிரு : நம்ம பசங்க சாதாரண குழந்தைங்க இல்லன்னு நமக்கே தெரியும்... எதிர் பாராதது தான் இது... ஆனா சஹாத்திய வம்ச சூரர்களுக்கும் யாளி வம்சத்து வீராங்கனைகளுக்கும் பிறக்குர குழந்தைங்களா இருக்கும் போது
ரக்ஷா : அவங்களுக்கு எந்த ஆபத்தா இருந்தாலும் அது அவங்கள நெருங்குரதுக்கு முன்னாடியே தூர விலகிடும்... என நிருவின் கூற்றை முடித்து வைத்தாள்...
ப்ரியா : ஆனா அந்த குழந்தைங்க பஞ்சலோக வம்சத்து பராக்ரம விந்தைங்களா இருக்கும்னு நாம எதிர்பாக்கலையே டி என கூறியவளை அனைவரும் என்ன என அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தனர்...
அதே நேரம் இரவின் ஆளுமையை தன் கையில் கொண்டு இடி முழங்கி வெள்ளி நிற மின்னலின் ஒளியில் மலையின் உச்சியில் அஜானுபாகுவான உடல் வாகுடன் பிரளயமே வெடித்து சிதறியது போல் சிரித்து கொண்டே நின்றான் அவன்...
உடலை முழுக்க முழுக்க வெள்ளி நிறம் சூழ்ந்திருக்க... கண்கள் முதல் காலின் நுனி வரை வெள்ளியில் குளித்திருந்தவனின் இடையில் சொருகப்பட்டிருந்த வாளின் கூர்மையை விடவும் ஜொளித்தான் அவன் விஞ்ஞவெள்ளன்
விஞ்ஞவெள்ளன் யட்சினி சர்ப்ப வம்சத்தின் வெள்ளி நடை படையின் ஒரே வெள்ளி வேத்திரம் புரிந்திருக்கும் அபார சக்தி படைத்த தளபதி... கழுகு வம்சத்தின் பெருமைக்குறியவன்...
விஞ்ஞவெள்ளன் : சரிதேரா.. சரிதேரா.. வக்கிரம்ப்பிக்குவாரா... ஹாஹாஹாஹாஹா எஞ்சியழியும் யட்சினி வம்ச வெள்ளி வேத்திர காடனானனெமக்கு (காடனான எமக்கு) விடுப்பு கிடைத்தாயிற்று சாம்பரா... கிடைத்தாயிற்று... எம் விஜயம் இன் முழுமதியினையும் தகர்த்து புவியை ஒளிர செய்யும்... ஹாஹாஹாஹா என பற்கள் தெறிக்க கத்தி கொண்டிருந்தான்...
அவன் முன் வெள்ளை திற நீண்ட கூந்தலுடன் முட்டி வரை மறைத்த சாம்பல் நிற ஆடை அனிந்து வெள்ளி கண்கள் மலர நின்றாள் அவள் விஞ்ஞவெள்ளனின் சாம்பரா
சாம்பரா , விஞ்ஞவெள்ளனால் உருபெற்ற ஒரு இனமில்லாத சர்ப்பலோகத்தைச் சார்ந்த உயிர்.. விஞ்ஞவெள்ளனுக்கு அனைத்து கையுமே அவள் தான்..
சாம்பரா : ஹரித்ரவாரா ஹரித்திரவாரா ஐயனே... நிங்களின் பிரவேசம் இன்றி பூலோகமே உம் மீதிருந்த அச்சம் விலகி மகிழ்வில் திழைக்கிறது... இந்நாள் தொடங்கி அனைவரினது மனதைரியமும் நடுங்கி அழிய உள்ளது என்றாள் முகம் கொள்ளா சிரிப்புடன்....
விஞ்ஞவெள்ளன் : எமது மகிழ்வை பகிர சொல்லோ சொற்றொடரோ இங்கன்று சாம்பரா... வா யாம் வெற்றிகனலை இப்புவியிற்கு வெளிகாட்டுவோம்.. இந்நாளே ஒரு மனித பிறவியை யாம் உணவாக்கலாம் என இவள் கை பிடித்து தரையில்லாத இடத்தில் அவன் கால்களை வைக்க... சரியாய் அவன் காலை தாங்கியது தனிச்சையாய் அங்கு உருப்பெற்றிருந்த ஒரு கருமையும் வெண்மையும் கலந்த மேகம்...
விஞ்ஞவெள்ளன் விடுப்பெற்றது வெவ்வேறு இடங்களில் இருந்த அனைவருக்கும் புரிய ப்ரியாவின் கனவு அனைவரின் கண்கள் முன்னும் நிழலாடியது...
தாம் தூமென வெடித்து சிதறிய அந்த அகால வனத்தில்.. உயிர் மடிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த நடுவருள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தாலும் பிடிக்க தவறிய வாள்களை கரங்கள் இறுக பற்றி கண்கள் முழுதும் வெறியுடன் அந்த தீ பிடித்து எரியும் இடங்களின் முன் வரிசையாய் நின்றிருந்தது மித்ரன் வருண் அருண் மற்றும் ஆதவ்...
அவர்களின் மேல் அந்தரத்தில் அபாரமான அளவிலுள்ள இறெக்கைகள் அங்கங்கு காயத்தால் கிளிந்திருக்க அதே போன்ற வாள்களை இறுக பற்றி முகம் இறுக மிதந்து கொண்டிருந்தது மிதுன் ராம் ராகவ் மற்றும் அஷ்வித்...
அவ்வெண்வரின் வெறியும் ஒரே போல் காணப்பட ... அவர்களின் கரங்களில் பிணைந்திருந்த அதி கூர்மையான வாள்கள் அவர்களுக்கு இன்னும் கம்பீரத்தை கூட்ட கண்களிலே பிரளம் வெடிக்க கம்மோபீரமாய் நிமிர்ந்த நடையுடன் வந்தனர் பஞ்சலோக வம்சத்தின் அகில அகால அண்டத்தின் பராக்ரம ராஜ மாவீரர்கள்...
அவர்களின் உடல் தோற்றமே கோரமாய் தெரிய... அவர்கள் பின்னும் சிலர் அதே வெறியுடன் நிற்பது மங்களாகவே காட்சி அளித்தது...
இவ்வனைவரின் முன்னும் ஏதோ ஒரு பயங்கர சக்தி இருப்பது மாத்திரம் உறுதி பட்டாளும் அது யாதென்பதை அறியும் முன்னே கனவு கலைந்து கண் விழித்திருந்தாள் ப்ரியா...
மணி மதியம் இரண்டரை இருக்கும் வேளையது... வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னும் வீட்டினரிடம் ஏதோ சாக்கு கூறிவிட்டு யாவரும் அறிந்திடாமல் ஷேஷ்வமலையின் அடிவாரத்தை அடைந்திருந்தனர் நமது சஹாத்திய வம்ச சூரன்கள்...
என்றுமில்லாது சாதாரண கஷ்வல்ஸ்ஸில் ஏதோ உரையாடியவாறு காட்டிற்குள் நுழைந்து ஷேஷ்வ குடும்பத்தினரை அடைந்தனர்...
இவர்களின் எதிர்பாரா வரவில் அங்கு கூட்டம் கூட்பப்பட ... அனைவரையும் சமாளித்து நலம் விசாரிப்புகள் அனைத்திற்கும் பதிளித்து இன்முகத்துடன் தாண்டி வந்தவர்கள் தர்மன் ஐயாவை காணாமல் அவர் குடிலின் வாயிலில் குழப்பமாய் நின்றனர்...
உள்ளிருந்து தலையில் மல்லிகை மலரை சூடியவாறு அரக்கு புடவை அனிந்த பெண்ணொருவள் வெளியே வந்தாள்... அவளை கண்டதும் இவர்கள் விலகி நிற்க இவர்களை எதிர்பார்க்காதது அவளது முகத்திலே பிரதிலிக்க கன நொடியில் மகிழ்ச்சி ஆக்ரமித்து புன்னகையுடன் அவர்ளை வரவேற்த்தாள்.. அவள் தர்மன் ஐயாவின் பெயர்த்தி முன்பு நாம் குட்டி பெண்ணாய் கண்டு இப்போது குமரியாய் வளர்ந்திருந்த பரிசி...
பரிசி : வருக சஹாத்திய வம்ச சூரர்களே வருக வருக.. தங்களை கண்டு எத்துனை ஆண்டுகள் ஓடியாகி விட்டது... தங்களுக்காவது இப்புறம் வந்து செல்ல மனம் வரவில்லையோ... என மகிழ்ச்சியாய் தொடங்கி நக்கலாய் இழுத்து வைத்தாள்...
சரண் : அட என்ன பரிசி.. நமது பிறப்பிடத்தினில் இருந்தால் தான் அதை மறவாமல் இருப்போமா... எத்துனை காந்த தொலைவில் இருப்பினும் ஈண்ட மண்ணின் மனம் மறவாதம்மா என புன்னகையுடன் கூறினான்...
பரிசி : நிங்களின் வாய் ஜாலத்தில் எவரால் வெற்றியடைய இயலும் சஹாத்திய சூரரே.. ஒத்துழைக்கிறேன் ஒத்துழைக்கிறேன் என கையை சலாம் போடுவதை போல் கீழே மடக்கி காட்டி சிரித்தாள்...
அஷ்வன்த் : சரி சரி போதுமம்மா உமது விளையாட்டு... நின் விடியலிலே எவ்விடம் செல்ல விழைகிறாய்...
பரிசி : அவ்வாறன்று சூரரே.. நதியோரம் சண்டுகள் சேகரிக்க செல்கிறேன்...
ரித்விக் : சரியம்மா.. தர்மன் ஐயா இங்கெவ்விடத்திலும் இல்லையே... எங்கு சென்றுள்ளார்...
பரிசி : அப்படியா... பொழுது விடியும் முன்பே குடில் விடுத்து சென்று விட்டாரே.. ஒரு நிமிடம் சஹாத்திய சூரரே.. கண்ணா... கண்ணா சற்று இங்கு வாயேன்... என இவள் குடில் உள்ளே நோக்கி குரல் கொடுக்க... " என்னானதம்மா " என வினவியவாறே குடுகுடுவென ஓடி வந்தாள் புறனா...
நாம் முந்தைய அத்யாயத்தில் இரட்கனுடன் கண்ட அதே புறனா...
பரிசி : தர்மன் ஐயாவை கண்டாயா...
புறனா : ஹ்ம் பாட்டனார் எங்குள்ளார் என்பதை யானறிவேனே... நீர் ஏன் வினவுகிறாய்... என இவள் எதிர் கேள்வி கேட்க... பரிசியின் அதே குறும்பு குணத்துடன் இருக்கும் இந்த குட்டி புறா நிச்சயம் அவளின் மகளாக தான் இருப்பாளென்று தெளிவாகவே புரிந்தது நம் நாயகன்களுக்கு...
பரிசி : யான் ஒரு வினா எழுப்பினால் நீர் எமக்கு எதிர்வினா எழுப்புகிறாயே... சரி உம் பாட்டனாரிடம் சஹாத்திய சூரர்கள் அவரை நாடி வந்துள்ளனர் என்பதை தெரிவித்து வா...
புறனா : சஹாத்திய சூரர்களா... என தன் குட்டி வாயை திறந்நு கொண்டு திரும்பிய புறனாவிற்கு இப்போதே நம் நாயகன்கள் கண்ணில் பட்டனர்...
பரிசி : ஆம் இவர்கள் தான் நமது சஹாத்திய வம்சத்தின் எட்டு வீரதீர மகாசூரன்கள்...
புறனா : வருக வருக சூரர்களே... தம்மை இது வரை யமக்கு காண கிடைக்கவில்லை... ஆதலின் தங்களையும் அடையாளங்காண இயலவில்லை... பொருத்தருளுங்கள்.. என பணிவாய் கூற...
ரனீஷ் : இருக்கட்டும் புறனா... இது ஒன்றும் அந்தளவிற்கு பெரும் விசனமல்ல... நீர் உமது பாட்டனாரை யமக்காக அழைத்து வருகிறாயா...
புறனா : நிச்சயம் சஹாத்திய சூரரே... விரைந்து அழைத்து வருகிறேன்... என கண்கள் மூடி நின்றவளை வெண்ணிற காற்று சூழ்ந்து கொள்ள தன் புறாவின் உருவிற்கு மாறி விண்ணை நோக்கி பறந்து சென்றாள்... அதை ஆச்சர்யமாய் கண்ட நாயகன்கள் அதே ஆச்சர்யத்துடன் பரிசியை நோக்க... அந்த ஆச்சர்யத்தை உணர்ந்திருந்த பரிசி பெருமூச்சுடன்...
பரிசி : ஆம் சஹாத்திய வம்ச சூரர்களே... இது எவ்வாறு நிகழ்கிறதென்று எவருக்கும் தெரியவில்லை...
வீர் : தர்மன் ஐயாவிற்குமா பரிசி...
பரிசு : ஹ்ம் ஐயா இதை பற்றி உரையாட தொடங்கினாலே அதை தவிர்த்து விடுகிறார்... சில காலமாய்.. அதாவது கோவன்கள் ... என இழுக்க அவள் எதை குறிப்பிட வருகிறாள் என்பதை புரிந்த கொண்ட நாயகன்களுக்கு கோவமும் அத்துடன் வருத்தமும் ஊடுரவ... சில நொடிகளிலே அதை அவர்களுக்குள்ளே மூடி மறைத்து கொண்டனர்...
அர்ஜுன் : என்ன கூற வருகிறாய் பரிசி... பத்து வருடங்களாக .. என எடுத்து கொடுக்க
பரிசி : பத்து வருடங்களுக்கு மேலாகவே நமது ஷேஷ்வ மலையில் பிறக்கும் விந்தைகள் சில குறிப்பிட்ட வம்சங்களில் பிறப்பெடுக்கின்றனர்... பத்து பதினைந்து வருடங்கள் முன் வரை எம்மை போன்றவர்கள் எவ்விதமான வம்சத்திலும் பிறக்கவில்லை... அதாவது ஷேஷ்வமலையில் ஏழாயிரம் வருடங்கள் முன் மகாவம்சத்தில் பிறந்த கோவன்கள் மற்றும் சஹாத்திய வம்சத்தில் பிறந்த சூரர்களான தங்களை தவிர்த்து இது வரையிலும் வேறு எவரும் எவ்விதமான வம்சத்திலும் பிறக்கவில்லை... ஆனால் இப்போது திடீரென இப்படி நிகழ்வது தான் அனைவரையும் சற்று வருந்த வைக்கிறது...
முகில் : எந்தெந்த வம்சங்கள் பரிசி.... என புருவம் சுருங்க வினவியவனை ஏறிட்ட பரிசி
பரிசி : குரங்கு வம்சம்.. முயல் வம்சம்.. ஆந்தை வம்சம்.. குருவிகள் வம்சம்.. மீன்கள் வம்சம்.. மற்றும் இறுதியாக புறா வம்சம்... ஆனால் புறா வம்சத்தில் இந்த பத்து வருடத்தில் எம் மகள் புறனா மாத்திரமே பிறந்துள்ளாள்... இதில் ஏதேனும் இன்னல் நேரிட கூடுமா... என தவிப்பாய் ரவியை ஏறிட்டாள்...
ரவி : இ..இல்லையம்மா... நீன் ஐயம் கொள்ள அவசியமன்று... விரைவிலே இதற்கான காரணத்தை கண்டறிகிறோம்...
பரிசி : சரி சஹாத்திய சூரரே... யான் நதிக்கரைக்கு செல்கிறேன்... என அவர்களிடம் விடைப்பெற்று சென்றாள்... இதே யோசனையில் இருந்த நாயகன்கள் தூரத்தில் ஏதோ ஒன்றை கண்டு விட்டு ஆனந்த அதிர்ச்சி கலந்து அவ்விடம் நோக்கி ஓடினர்..
அங்கு பராக்கு பார்த்து கொண்டு வந்தது வேறு யாருமல்ல தீரா தான்...
ரனீஷ் : ஹே தீரா... என கத்தவும் சரியாய் இவர்களை நோக்கி மலர்ந்த முகமாய் ஓடி வந்தாள்...
தீரா : ஹாய் மை டியர் அண்ணாஸ்... எல்லாரும் எப்டி இருக்கீங்க...
அர்ஜுன் : நாங்க நல்லா தான் இருக்கோம்... நீ எங்க போய்ர்ந்த இவ்ளோ நாளா.. ஒரு முறை எங்கள பாக்க வந்தியா... என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து போய்ட்டோம் குட்டச்சி...
தீரா : என் அண்ணனுங்களுக்கு என் மேல எவ்ளோ பாசம்...
முகில் : அதெல்லாம் ஒன்னும் இல்ல டி .. நீ வேற எங்கள விட்டுட்டு சும்மா போய்ட்டன்னா எங்க கதை என்னாத்துக்கு ஆவரது அந்த கவலை தான்...
தீரா : பித்தள மண்டையா அப்ரம் பாத்துக்குறேன் உன்ன...
ரித்விக் : சரி சரி இத்தன நாளா எங்க போய்ர்ந்த...
தீரா : உங்கள மட்டுமா நா மேய்க்கிறேன்.. தமிழ்நாட்ல.. அப்ரம் மெடர்மான்ல... என கூறிவிட்டு நாக்கை கடிக்க...
நாயகன்கள் : மெடர்மானா... என முளித்தனர்...
தீரா : அது ஒரு ஊரு... இப்டி லண்டன் ஊட்டி சத்ருவனம்னு சுத்தீட்டு வர டைமாய்டுச்சு...
ரனீஷ் : டைமாய்டுச்சா... மாசக்கணக்காய்டுச்சு... என திருத்தி வைத்தான்...
தீரா : சரி சரி உண்மை தான்..
ரவி : எங்கள பாக்க வராம நீ என்ன இந்த பக்கம் வந்துருக்க...
தீரா : நீங்க இங்க இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்... தெரிஞ்சு தான் வந்தேன்...
வீர் : அப்டியா நீ காரியம் இல்லாம சடன் விஜயம் குடுக்க மாட்டியே...
தீரா : ஆமா ஆமா ரொம்ப பெரிய காரியம் இருக்கு... தோ அங்க பாருங்களேன்... என அவள் பின் ஒரு திசையை காட்டினாள்...
தூரத்தில் இரு மரங்களின் இடையே இருந்த இடைவேளையில் இருந்து தீரா வெளியேறிய அதே வெண்ணிற ஒளியிலிருந்து முளித்து முளித்து சலைத்த கண்கள் புது இடத்தை கண்டதில் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் வளம் வர ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் முகம் மலர அவனுக்கே உரிதான ராஜ நடையுடன் நடந்து வந்தான் ஒரு இளைஞன்...
அஷ்வன்த் : ஏ குட்டிமா யாரு இவன்... சின்ன பையன் மாரி இருக்கான்... ஆனா...
தீரா : ஆமா ஆமா சின்ன பையன் தான்... ஆனா என்ன விட பெரியவன் தான்... என அவனை பார்த்தவாறு கூறினாள்...
நாயகன்கள் : ஆமா இப்போ ஏன் இவன இங்க கூட்டீட்டு வந்துர்க்க... என தீராவை சுற்றி நின்று அவளுடன் அவனை பார்த்தவாறு ஒரு சேர வினவினர்...
தீரா : செய் நிங்க இப்டி பாக்குரத பாத்துட்டு புள்ள பயந்துட போது ... இங்க பாருங்கடா... என நடுவில் நின்று கத்த இப்போது இவர்கள் இவளை பார்த்தனர்...
அர்ஜுன் : சரி என்ன விஷயம்னு சொல்லு...
தீரா : அவன் இனிமே உங்க கூட தான் இருப்பான்... நீங்க இனிமே அவன் கூட இங்க தா இருக்க போறீங்க... அவன் ஒன்னுந்தெரியாத பச்சப்புள்ள... வாயெல்லாம் நல்லா ஆடிப்பான்.. ஆனா அடிக்க வரவன தான் சரியா அடிச்சு தொலைய மாட்டான்...
முகில் : சொல்லி குடுத்தா கத்துக்க போறான்... அதுக்கு ஏன் அவன வருத்தெடுக்ககுர...
தீரா : அதுக்கு தா அவன கூட்டீட்டே வந்துருக்கேன்... நீங்க தான் அவனுக்கு எல்லாத்தையுமே சொல்லி தர போறீங்க...
சரண் : எங்களுக்கு பிரச்சனை இல்ல குட்டிமா... ஆனா அவன யாரும் தேட மாட்டாங்களா...
தீரா : ஒரு கூட்டம் வல வீசி தேடீட்டு தான் இருக்கு... ஆனா எல்லாம் செய்ரவளே (ஆத்தர சொன்னேன் ) நம்ம பக்கம் இருக்கும் போது யாரும் அவன கண்டுப்புடிக்க முடியாது... அவனாலையும் போக முடியாது...
நாயகன்கள் : ஓஹோ... என இவர்கள் கோரஸ் பாடும் போதே சுற்றி பார்த்து கொண்டே வந்த அவன் தீராவை கண்டதும் உடனே அனைத்தையும் நினைவு பெற்று இவளை நோக்கி கத்தினான்...
அவன் : ஏ பாப்பா... நீ பாட்டுக்கும் என்ன கூட்டீட்டு வந்துட்டு என்ன நட்டாத்துல விட்டுட்ட போய்ட்ட... என்ன இடம் இது...
தீரா : கத்தாத அண்ணா... இங்க வா.. சொல்றேன்... என்கவும் அவனும் நடந்து வர அதற்கு முன்னே... " தோ பாருங்க அண்ணாஸ் எக்காரணத்த கொண்டும் அவன் கைல உள்ள ப்ரேஸ்லெட்ட தொற்றாதீங்க " என எச்சரிக்கையாகவும் அதே நேரம் கட்டளையாகவும் கூறினாள்...
அவன் : ஏ பாப்பா... என்ன சண்ட போட கத்துக்குடுக்குறேன்னு சொல்லிட்டு ஏன் இவங்களுக்கு நடுவுல நிக்கிர... ஆமா என்ன இடம் இது... ரொம்ப வித்யாசமா இருக்கு
தீரா : இவன் யாருன்னு தெரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்... தெரியலையா..
ரித்விக் : சொன்னா தான தெரியும்... யாரிவன்...
தீரா : கல்கி வீரா ரக்ஷவன்...
ஆம்.. கல்கி வீரா ரக்ஷவனின் சாகச பயணம் என்னும் வேறொரு உலக(கதை)யின் நாயகன்... சில காரணங்களுக்காய் தற்காப்பு கலைகளை கற்க இங்கு வந்துள்ளான்... அங்கு ரக்ஷவனை அழைத்து வந்த சிறு பெண் தீராவே தான்...
( இக்கதையையும் விருப்பமிருதந்தாலும் ரக்ஷவனின் சாகசங்களை காண ஆவல் கொள்ளுவோர் " கல்கி வீரா ரக்ஷவனின்னோ சாகச யணம் என்னும் கதையை வாசியுங்கள்..)
ரக்ஷவன் : கல்கி வீராவா அது யாரு பாப்பா... என் கூட வேற எவனைனாவது கூட்டீட்டு வந்துர்க்கியா என்ன... என சுற்றி முற்றி பார்க்க...
தீரா : முதல்ல என்ன பாப்பா பாப்பான்னு கூப்டாதடா.. என் பேரு தீராதீ ஓக்கே.. அப்ரம் அந்த வீரன் யாருன்னு உனக்கு தானாவே புரியும்... அப்போ அதெல்லாம் குடைஞ்சிக்கோ...
ரக்ஷவன் : சரி என்ன இடம் இது...
தீரா : வாழ்கைல இந்த இடத்த நீ பாத்துர்க்க மாட்ட ரக்ஷவ்... இது ஷேஷ்வமலை... இனிமே இவங்க கூட இங்க தா நீ இருக்க போற...
ரக்ஷவன் : இங்கையா அப்போ நா என் வீட்டுக்கு போக வேண்டாமா...
தீரா : இங்க இருந்து உன்னால எங்க வேணா போக முடியும்... உன் வீட்டுல நடக்குரத பாக்க கூட முடியும்... ஆனா அங்க இருக்க முடியாது.... இவங்க கூட கொஞ்ச நாள் நீ இருந்து தான் ஆகனும் சரியா...
ரனீஷ் : கிருக்கி... பச்சப்புள்ள பச்சப்புள்ளன்னுட்டு நீ எதுக்கு அவன பயமுறுத்திக்கிட்டு இருக்க...
தீரா ம.வ : பயமுறுத்துரனா... மீ இசிட்..
அஷ்வன்த் : பாரு ரக்ஷவ் நாங்களும் உன்ன மாதிரி தான்... உனக்கு இங்க எந்த வித பிரச்சனையும் இருக்காது... இனிமே நாங்க வெளியாளுங்க கிடையாது.. உனக்கு இன்னோறு அண்ணனுங்க ...
ரக்ஷவ் : வணக்கம் குரு தேவர்களே அண் யு ஆர் சோ குட் அண்ணா... ஆனா நீங்க எப்டி எனக்கு சண்ட சொல்லி தர முடியும்...
தீரா : போக போக உனக்கே புரியும் ரக்ஷவ்...
அஷ்வன்த் : நீ தீரா மாரி வாயாடின்னு நெனச்சோம் ஆனா என்ன இவ்ளோ அமைதியா இருக்க...
தீரா : ஏது நா வாயாடியா
ரக்ஷவ் : பின்ன இல்லையா...
தீரா : நீயும் என்ன கலாய்க்கிறல்ல... டேய் அண்ணாஸ் நா அப்பப்போ வந்து கழுத்தறுக்குறேன்னு தான கொஞ்ச நிம்மதியா இருக்கீங்க... இவன் என்னோட கார்பன் காப்பியா கூடவே இருப்பான்... அப்போ தெரியும் தீராவோட அருமை...
ரக்ஷவ் : ம்க்கும் தெரிஞ்சிட்டாலும் நீ டயலாக் விட தான் லாய்க்குன்னு நினைக்கிறேன் தீராமா...
தீரா : நெனப்ப நெனப்ப வா என் கூட ... என தனியே இழுத்து சென்றாள்...
ரக்ஷவ் : எங்க கூட்டீட்டு போற பாப்பா...
தீரா : ஏன்டா உன்ன விட கொஞ்சம் தான குட்டியா இருக்கேன் பாப்பான்னு காண்டாக்காத டா... சரி அத விடு ... நீ உன் உலகத்துல எப்டியோ அந்த மாரி அவங்க எட்டு பேரும் இங்க... போக போக உனக்கு பல விஷயம் தெரியவரும்... எல்லாரும் ஃப்ரெண்லியா இருப்பாங்க... நீ கத்துக்க வேண்டிய எல்லாத்தையும் கத்துக்குட்டதோட இங்க பல அனுபவங்கள கத்துக்கலாம் அண்ணா..
ரக்ஷவ் : எல்லாம் சரி நா சண்ட போடுரதுக்கு ஆயுதம் வேணுமே.. இது வேற சின்னதாய்டுச்சு நா என்ன செய்ய முடியும்... என அவன் ப்ரேஸ்லெட்டில் தொங்கி கொண்டிருந்த சுருங்கிய வாளை காட்டி கேட்டான்...
தீரா : முக்கியமான ஒரு விஷயம்... இந்த வாள யாரையும் தொட விற்றாத டா தங்கம் என கெஞ்சுவதை போல் கூறினாள்...
ரக்ஷவ் : ஏன்...
தீரா : அது எனக்கும் தெரியாது... உனக்கு தேவையான ஆயுதம் சரியான நேரத்துல கிடைக்கும் கொழப்பிக்காத... அவனுங்க கூடவே தான் நீ இனிமே இருக்க போற.... என இனி நடக்க போவதையும் நடந்ததையும் அவனிடம் கூற ஆச்சார்யத்தில் ப என கண்களை திறந்தான் ரக்ஷவன்...
ரக்ஷவ் : நீ சொல்றதெல்லாம் உண்மையயா...
தீரா : நடக்க போறத வச்சு நீயே தெரிஞ்சிப்ப... இதெல்லாம் அவங்க கிட்ட சொல்லிடாத என் கதி அதோகதி தான்... போ போய்ட்டு வா...
ரக்ஷவ் : ஹ்ம் ஓக்கே பாப்பா டாட்டா என நம் நாயகன்களை நோக்கி ஓடினான்..
தீரா : இவன் பாப்பாவ விட மாட்டான் போலருக்கே...
தங்களை நோக்கி வந்த ரக்ஷவனுடன் நம் நாயகன்கள் சில பல விஷயங்களை பேசியவாறு நகர... சரியாக புறனா அவர்களுருகில் வந்து ஒரு திசையை காட்டினாள்... இது வரை ஒரு புறா பேசி பார்த்திராத ரக்ஷவ் முளிக்க அவள் காட்டிய திசையில் தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தவாறு சுருங்கிய கண்களை மூடி மூடி திறந்து ஏதோ முனகி கொண்டிருந்தார் தர்மன் ஐயா...
புறனா : சூரர்களே பாட்டனார் அங்கு இருக்கிறார்... என சுட்டி காட்டி விட்டு விளையாட சென்றாள்...
இவர்கள் அனைவரும் அங்கு செல்ல... அர்ஜுன் ரக்ஷவையும் அவர்களுடன் மறுக்காமல் அழைத்து சென்றான்..
தர்மன் ஐயா : வருக சஹாத்திய வம்ச சூரர்களே.. என கம்மிய குரலில் வரவேற்றவர் ரக்ஷவனை கண்டதும் மெல்லிய புன்னகையை வீசினார்...
ஏதோ ஹரிபாட்டார் படத்தில் முதல் முறை வால்டமார்ட்டிடமிருந்து தப்பித்த ஹரி மருத்துவமனையில் கண் விழித்ததும் அவனை சிறிய புன்னகையுடன் பார்த்த டம்புல்டாரை போல் தன்னை பார்க்கும் தர்மன் ஐயாவை திகிலாய் பார்த்தான் நம் ரக்ஷவ்...
தர்மன் ஐயா : வரவேற்கிறேன் ரக்ஷவா... என அதே டம்புல்டாரின் புன்னகையுடன் கூறியவர் இப்போது டம்புல்டாரின் ஸ்ற்றிக்ட் முகத்தை குத்தகைக்கு வாங்கியதை போல நம் நாயகன்களை பார்த்தார்...
தீரா : இவன இவங்க கூட போக விட்டதுக்கு என் கதைய ஹரிபாட்டர் தமிழ் வர்ஷனாக்கீருவான் போல...
ரவி : தர்மன் ஐயா... இங்கு என்ன நிகழ்கிறது ... எத்துனை வருடங்களாய் பரிசியின் மகவான புறனாவை போல் விந்தைகள் பிறப்பெடுக்கின்றனர்... இவ்விசனத்தை எங்களுக்கு ஏன் தெரிய செய்யவில்லை... என எடுத்த எடுப்பிலே இதை முன் வைக்க... " இவ்வளவு நேரம் நல்லா இருந்த அண்ணன் ஏன் இப்போ பாகுபலி படத்த பாத்துட்டு வந்த மாரி பேசுறான் " என முகத்தை சுருக்கி அவனை பார்த்தான் ரக்ஷவ்..
தர்மன் ஐயா : பொருத்தருளும் சஹாத்திய சூரரே... இதற்கான விசனத்தை அறிந்தும் அதை தெரிவிக்க இயலா நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன் நான்...
ரக்ஷவன் : அண்ணாஸ் யாரிவரு... என இவர்களின் நடுவே தலையை விட... அவன் தலையை கீழே இறக்கி விட்டு..
சரண் : இது இன்னலில் முடிய இருக்கிறதா தர்மன் ஐயா... எங்களை பொருத்தவரை இஃது சாதாரண விசனமாய் தெரியவில்லை...
ரனீஷ் : இவரு தான் தர்மன் ஐயா ரக்ஷவ்... உலகத்துலையே ரொம்ப அனுபவிக்கவரு.. நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி... மத்ததெல்லாம் அப்ரம் சொல்றேன்...
ரக்ஷவ் : ஓ இவரு தான் தர்மன் ஐயாவா... ஹ்ம் என இவன் தனக்கு அவரை முன்பே தெரியும் என்பதை போல் கூறியதை நாயகன்கள் இருந்த தீவிரத்தில் கவனிக்க தவறினர்...
தர்மன் ஐயா : என் செய்ய கூறுகிரீர் சஹாத்திய சூரரே... கோவன்களின்றி இம்மலை நிலைத்து நிற்க உமது காவல் போதுமானது.. எனினும் இவ்வாறு நிகழ்வது ஏதோ ஒரு நற்செய்தியை குறித்தாலும் இன்னலின் குறியீட்டையும் மனதில் விதைக்கிறது... என தடியை பிடித்து எழுந்தவாறு கூற ரக்ஷவன் ஓடி சென்று அவருக்கு எழ உதவினான்...
ரக்ஷவ் : பாத்து தாத்தா... கைய புடிச்சிக்கோங்க... என்றவாறு அவரை எழுப்பியவனை புன்னகையுடன் கன்னத்தில் தட்டி கொடுத்தவர்...
தர்மன் ஐயா : நீ பிடிக்க வேண்டிய கரங்கள் உமக்காய் காத்திருக்கிறது ரக்ஷவா... அவைகளை ஏமாற்றிடாது உம் இலட்சியத்தில் வெற்றி ஈட்டிடுவாய்... அதற்கு இம்மூத்தவனின் ஆசி உம்முடன் என்றும் இருக்கும்...
ரக்ஷவ் : சரிங்க தாத்தா... என்றவன் பொருமையாய் விலகி நின்று கொண்டான்...
அஷ்வன்த் : இது எதில் முடிவடையும் என விவரியுங்கள் ஐயா..
தர்மன் ஐயா : ஹ்ம் கோவன்கள் இறப்பின் பின் நிகழ கூடாத அனைத்தும் நிகழ்ந்து விட்டது ... எமது சொற்களின் படி பத்து வருடங்களுக்கும் மேலாக தாங்கள் ஈண்ட மகவுகளையே பிரிந்து வாழ்கின்றீர்... ஆயினும் விதி வலியது.. என்(என்ன) மாயம் தான் உபயோகப்பட்டாலும் விதியின் மாயத்தை தடுக்கும் சக்தி நம்மிடத்தில் இல்லை...
முகில் : தொடக்கத்தின் முதலாய் சுற்றி சுற்றி பேசினால் மாத்திரம் தீர்வு கிடைத்திராது ஐயா... மேன்மேலும் குழப்புவதை விடுத்து உண்மையை கூறுங்கள்...
தர்மன் ஐயா : யட்சினிசர்ப்பலோகத்தின் பசப்பச்சை வம்ச மிதரவர்தினியும்.. அவளின் சகோதரி அருளவர்தினியும் அவர்களின் சகோதரன் வெள்ளி படையின் வெள்ளி வேத்திரம் அனிந்த தளபதி விஞ்ஞவெள்ளனும் இன்றோடு முழுதாய் விடுப்பட்டு விட்டனர்...
ரக்ஷவ் : விஞ்ஞா... என இவன் வாயில் வராமல் உளறியவாறிருக்க.. அவனை முந்தி கொண்டு தீவிரமாய் முன் வந்த ரனீஷ்...
ரனீஷ் : அதற்கு சாத்தியமன்று ஐயா... தாங்கள் அறியாததா.. உமது வாக்கை தாமே தவிர்க்கலாமா... இது நிகழ துளியேனும் வாய்ப்பில்லை...
தர்மன் ஐயா : ஹ்ம் உலகை நம்ப செய்ததினால் யானும் அதை நம்ப வேண்டுமா சூரனே... கோவன்கள் இம்மண்ணில் இல்லாத காலம் யஜ்னுவர்தம் மலரும்.. அம்மலரை நேரில் கூட இது வரை அம்மூவரையன்றி வேறெவரும் கண்டதில்லை... அது எவ்விடத்தில் மலருகிறதென்று தாங்கள் கண்டிருந்தாலும் அவ்விடம் செல்ல அம்மூவரின் துணையின்றி அது இயலா காரியம் தானே...
அர்ஜும் : இவையை நாங்களும் அறிவோம் ஐயா...பஞ்சலோக வம்சத்தினரே ஈண்டிடாத போது நிச்சயம் அவர்கள் விடுபட இயலாது
தர்மன் ஐயா : அப்படி இருக்கையிலும் யட்சினி சர்ப்ப வம்சத்தினர் உயிர்த்தெழுந்து விட்டனரே... பஞ்சலோக வம்சத்திரனால் அழியவே யட்சினி சர்ப்ப வம்சம் உயிர்த்தெழுந்துள்ளது...
ரவி : இவை நம்பும் விசனமாய் தெரியவில்லை ஐயா... இரட்ச்சகர்களின்றி பராக்ரம விந்தைகளான எம் மகவுகளால் என் செய்திட இயலும்... என இவன் கோவமாய் கத்த...
தர்மன் ஐயா : இரட்ச்சகன்கள் இல்லையென எவர் கூறியது... கோவன்கள் இல்லாத மண்ணில் எவ்வாறு இந்த யத்ரவமரத்தின் இலைகள் வெண்ணிறத்தை தத்தெடுத்தது... பூலோகத்தின் முக்கோக்களான முக்கோவன்களோ அல்லது அவர்களுக்கு அடுத்து மூச்சங்களாய் கருதப்படும் முவ்வீரட்ச்சகன்கள் இம்மண்ணில் காலடி எடுத்து வைத்தால் மட்டுமே இந்த யத்ரவமரத்தின் இலைகள் அதன் உண்மையான வெண்ணிறத்தை தத்தெடுக்கும் என்பதை யான் தங்களுக்கு தெரிவிக்க அவசியமில்லை... அப்படியிருக்க கோவன்களே இல்லாத போது இப்போது இம்மண்ணில் காலடி எடுத்து வைத்தது அதிரதீர வம்சத்து முவ்வீரட்ச்சகன்கள் தானே.... என ஷேஷ்வமலையே அதிர இவ்வளவு நேரமும் இருந்திடா வலிமையுடன் அந்த கம்பை ஓங்கி மண்ணில் அடித்தார்...
அதன் அதிர்வில் அனைவரும் நகர... நாயகன்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கவும் ஷேஷ்வமலையின் மரங்கள் குறுகி மேகங்கள் முறுங்கி அனைத்து வர்ணமும் கலந்து வெள்ளி மழை பொழிந்தது....
அதே நேரம் சித்ரனை நம்பி நகரத்தை விடுத்தும் வெளியே அமைந்திருந்த அவனது மர வீட்டின் வெளியே நின்ற வருணும் அருணும் ஒரு சேர சித்ரன் என அலர... அவர்கள் முன் கருப்பு கன்னாடி அனிந்து கொண்டு அவர்களை நோக்கி திரும்பி நின்றிருந்த சித்ரனின் கழுத்தை சட்டென பிடித்து மேலே தூக்கினான் விஞ்ஞவெள்ளன் ..
சித்ரனின் கரத்திலிருந்த ஸ்டிக் தவறி கீழே விழ.. அந்த மர வீட்டின் உள்ளிருந்த மித்ரனும் மிதுனும் வெளியே ஓடோடி வந்தனர்...
தூரத்தில் ருத்ராக்ஷுடன் ஏதோ உரையாடியவாறு வந்து கொண்டிருந்த ஆதவும் அஷ்வித்தும் இதை கண்டு அதிர்ச்சியில் இங்கு ஓடி வர ருத்ராக்ஷ் அவ்விடத்திலே உறைந்து நின்றிருந்தான்...
விஞ்ஞவெள்ளன் : ஹா யான் விடுதலை ஈண்ட இந்நாளில் எமக்கான முதல் விருந்தே நீர் தானடா குருடா... உன்னை யான் பலி கொடுக்க போவதை கண்டு எம் மீதுள்ள ஐயம் மீண்டும் இங்கு மேலெழும் பார்... என ஏதோ ஐபிஎல்லில் வெற்றியடைந்ததை போல் சிரித்தான்...
ஆனால் கண்ணிமைக்கும் நொடி பொழுதில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் கீழ் நின்றிருந்த அனைவருடன் விஞ்ஞவெள்ளனும் அரண்டு தான் போனான்...
விஞ்ஞவெள்ளனின் கழுத்தருகில் இரு கற்கள் சுழன்று அவன் புஜத்தில் சூராவளியாய் இடிக்க... அதே வேகத்தில் எம்பி வந்து அவனை நிழை குலைய வைத்தது ஒரு பெரும் பாரை...
அனைவரும் ஒன்றும் புரியாமல் திரும்பி நோக்க... அங்கோ தொலைவில் நின்றிருந்த ருத்ராக்ஷின் கைகளில் அவனின் நரம்பு புடைக்கப்பட்டு இமைகளுக்கு ஏறியிருக்க... கரு விழிகளின் நிறம் நீலத்தை தத்தெடுத்து அவனை அசல் ருத்ரமூர்த்தியாய் காட்டியது...
அவனுக்கு மேல் கால்களை ஒரு அதிவேகமாய் சுழலும் சுழல் ஆக்ரமித்திருக்க மிதந்து கொண்டு.. கண்கள் முழுதும் சாம்பல் சூழ்ந்து விஞ்ஞவெள்ளனை நோக்கி அங்கிருந்த இன்னோறு பாரையை கண்களாலே தூக்கி எறிந்தான் ஆதியன்த்...
அந்த பாரையிலிருந்து கண நேரத்தில் தப்பித்த விஞ்ஞவெள்ளன் அவனின் கை பிடியில் இருந்த சித்ரனின் கருப்பு கன்னாடி தவறி கீழ் விழுவதை கண்டு அவனை ஏறிட்டான்...
அதே போல் மெல்ல நிமிர்ந்து அவன் கண்களை நோக்கிய சித்ரனின் கண்மணிகள் சிவப்பு பிற இரத்தினக்கல்லாய் பளபளத்தது...
கீழ் நின்ற எட்டு பேருக்குமே ஒன்றும் புலப்படாது போனது... அந்த கண்களின் நிறத்தை கண்டதற்கே விஞ்ஞவெள்ளனின் உடல் ஆட்டம் காண.. அதில் அவன் பிடி தளரவும் சித்ரனை அவர் விட்டு விட... கீழே விழ போகிறான் என ராகவும் மிதுனும் டேய் சித்ரன் என அவனை பிடிக்க ஓட... அதற்கு முன்னே காற்றழுத்தத்தில் காலை அழுத்தி மேலே எம்பிய சித்ரன் விஞ்ஞவெள்ளனின் தாடையிலே ஓங்கி குத்தினான்...
பார்வையே இல்லாதவன் தன்னை சரியாய் குறி பார்த்து எப்படி அடித்தான் என அரண்டு போன விஞ்ஞவெள்ளன் முளிக்க அதே நேரம் கீழிருந்து ஒரே தாவில் சுழன்று வந்திருந்த ருத்ராக்ஷ் அவனை மாரிலே உதைத்து இன்னும் மேலுயர்த்தினான்...
மூச்சடைத்து மேலே வீசப்பட்டவரின் முதுகிலே ஓங்கி அடித்து கீழே மண்ணில் புதைய வீசினான் ஆதியன்த்...
வட்டமாய் நின்று மேலே பார்த்து கொண்டிருந்த இரண்டாம் அணி நாயகன்கள் அந்த வட்டத்திற்குள் அந்த விஞ்ஞவெள்ளன் அதிகமான அதிர்வுடன் விழவும் சற்று பின் நகர... கீழே விழுந்தவன் முகம் வெளிரி போனது... அம்மூவரின் விழிகளும் முகங்களுமே விஞ்ஞவெள்ளனுக்கு அனைத்தையும் எடுத்து கூற" இல்லை .. கோவன்கள் அழிந்து விட்டனர் " என்று கண்கள் மிரள அலரினான்...
அவனின் கூற்றில் ஏதோ மின்சாரம் பாய நின்ற எண்வரும் மேலிருந்த கேட்ட மூன்று கர்ஜனையில் இன்னும் வியந்து மேலே நோக்கினர்...
" மகாவம்ச கோவன்கள் அல்ல டா நாங்கள்... அதிரதீர வம்சத்து முவ்வீரட்ச்சகன்கள் " என்றபடி கோவன்களின் மறு உருவங்களாய் நின்றது
யுவக்ரிஷ்ணன் இந்திரஜித் சத்தீஷ்வரனின்
மகவுகள் சித்ரன் ருத்ராக்ஷ் ஆதியன்த்தாய் காட்டப்பட்ட
நாயக்கர் வாரிசுகளான
சித்தார்த் நாயக்
ருத்ராக்ஷ்ய நாயக்
ஆதியன்த்த நாயக்
மாயம் தொடரும்...
அடுத்த பார்ட்டையும் மறக்காம பாருங்க...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro