மாயம் - 64
சஹாத்திய சூரர்கள் அனைவரும் சில பல புது மருந்து கட்டுக்களுடன் அரை மயக்கத்தில் ஏதோ முனகிக் கொண்டிருந்த யமதர்மனை கண்டு அதிர்ந்தனர்...
அவன் இவர்கள் வந்ததை கூட அறியாமல் அக்கடாவென மல்லாக்க படுத்து கிடந்தான்..
வீர் அனைவருக்கும் உடைந்திருந்த ஜன்னல் கம்பியை சுட்டிக் காட்ட அனைவரும் சற்று குழப்பத்துடன் வெளி வருகையில் அஷ்வன்த் குனிந்து ஏதோ ஒன்றை பார்த்து கொண்டிருந்தான்...
அவனுக்கு முன் நின்றிருந்த சேவன்
சேவன் : ஏன் சூரரே இவ்விடம் மாத்திரம் பள்ளமாக இருக்கிறது... என குட்டி பள்ளம் போல் பதிந்திருந்த யுகியின் காலச்சில் குதித்து கேட்க அவனை மீண்டும் தூக்கிய அஷ்வன்த்
அஷ்வன்த் : சிம்மயாளிகல்ல யாரோ ஒருத்தர் வெளிய வந்துர்க்காங்க என தன் தோழர்களை கண்டான்...
சரண் : அதுக்கு வாய்ப்பு இருக்கா என்ன... சிம்மயாளிகள் யாரும் கூட இல்லாம வெளிய தனியா வர மாட்டாங்களே...
அஷ்வன்த் : கூட யாராவது இருந்துர்க்களாம் டா... ஹ்ம் சரி அத நாளைக்கு கேட்டுக்களாம்... தூங்க போகலாம் வாங்க..
முகில் : ஏன்டா... கோவன்கள் இறந்தத பத்தி ஒரு பத்தி இருந்ததா சொன்னாங்களே... அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க என தன் இரு கையையும் பன்ட் பாக்கெட்டினில் விட்டு கொண்டு அந்த குளிர் காற்றை அனுபவித்தவாறு வினவினான்...
வீர் : தெரியல முகிலா.. ஆனா நாம அத எழுதலன்னு மட்டும் எனக்கு தெரியும்...
ரனீஷ் : க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் கூட அத அப்போ எழுதல.. எனக்கு இன்னும் நினைவு இருக்கு
மயூரன் : ஏன் அதை கோவன்களே மீண்டும் வந்து எழுதியிருக்க கூடாது சூரரே
ரவி : அதற்கு வாய்ப்பில்லை சேவா.. எங்க பதிமூணு பேருக்குமே அத பத்தின நினைவு போய்டுச்சு.. அவனுங்களுக்கும் தான்... அதனால அவங்க எழுதியிருக்க முடியாது
அர்ஜுன் : ஆனா வேற யாரால எழுதியிருக்க முடியும்.. நம்மள தவிற இந்த ஐயாயிரம் வர்ஷத்துல அத யாரும் திறக்கல.. யாளிகள தவிர்த்து வேற யாருக்.... ஒருவேளை யாளிகள் எழுதியிருக்க வாய்ப்பிருக்கா என சட்டென கேட்கவும் அனைவருக்கும் வாய்ப்பு இருக்கா என ஒரு யோசனை பரவ
ரித்விக் : நாளைக்கு யாளிகள் கிட்டையே கேப்போம்.. இப்போ வாங்க போகலாம் என வலுக்கட்டாயமாய் அனைவரையும் இழுத்து சென்றான்...
சர்ப்பலோகம்
மிதுன் : என்ன தான் டா பன்னிக்கிட்டு இருக்க.. யோக்யா கதவோட சாவி குடுத்தும் திறக்காம புலம்பீட்டு இருக்க... விட்டா அந்த மண்டையனுங்களே வந்து தொறந்து விடுர வர நிப்பியோ என ஹஸ்கி வாய்சில் வருத்தெடுத்தவாறு முன் வந்தவன் ராகவிடமிருந்து அந்த சாவியை பிடுங்கி இவனும் முயற்சிக்க
ராகவ் : ஹான் வா ராசா வா.. நீயே திற... நானும் பாக்குறேன் என்றபடி நகர்ந்து நின்று அவனை முறைக்க தொடங்கிய ராகவ் மிதுனும் இளித்து கொண்டே அவனை பார்க்கவும் காரி துப்புவதை போல் சைகை செய்து விட்டு பின் அந்த சாவியை வைத்து மீண்டும் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டான்...
மற்ற அனைவரும் இனுங்க எப்போ தான் திறப்பானுங்களோ என பல்லை கடித்தபடி பாதாள சிறை வாயிலின் முன் பொருமையை இழுத்து பிடித்து கொண்டு நின்றிருந்தனர்...
நித்ரா ராமின் மெல்லிய குரலில் வெளி வந்து அவனை நிமிர்ந்து நோக்க தன்னவளை விட்டால் எங்கு மீண்டும் துஷ்ரந்கள் இழுத்து சென்று விடுமோ என்ற பயத்தில் இறுக்கி பிடித்து கொண்டான் ராம்...
நித்ரா : அத்தான்.. என மெதுவாய் அழைக்க
ராம் : எப்டியிருக்க நித்வி..
நித்ரா : ந..நல்..லா இரு..க்கேன்.. நீ..ங்க
ராம் : ஏதோ இருக்கேன்........ நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா...
நித்ரா : ஹ்ம்ம்ம் என அவனின் அணைப்பிலிருந்தவாறே தலையசைத்தாள்...
ராம் : திரும்ப அப்டி என்ன விட்டு போவியா டி... என இவன் ஆற்றாமையில் தாங்க மாட்டாமல் கேட்டு விட அவனின் கரகரத்த குரலில் நிமிர்ந்து பார்த்தவள் அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டாள்...
நித்ரா : போ மாட்டேன் அத்தான்.. உங்கள விட்டு எங்கையும் போ மாட்டேன்.. உங்க கண்ணுல என் கைய விட நீங்க பயந்தப்போ நா பாத்த அந்த வலி இன்னமும் நிக்கிது... என்னோட மனசு தவிச்ச தவிப்புக்கு இப்போ வர என்னால அர்த்தம் கண்டுப்புடிக்க முடியல... ஆனா உங்க கைய விடுரப்போ நா என் சுயநினைவுல இல்லனாலும் மயங்குரப்போ தெரிஞ்சது எல்லாமே உங்க முகம் மட்டும் தான்.. திரும்ப அந்த வலிய தாங்குர அளவு என் கிட்ட சக்தியும் இல்ல.. என கூறியவளை இன்னும் அவன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவன்
ராம் : ஐ லவ் யு நித்வி.. ஐ லவ் யு சோ மச்... நீ இப்போவே பதில் சொ..
நித்ரா : லவ் யு டூ அத்தான் என பட்டென பதில் கூறினாள்...
ராம் : என்ன சொன்ன... திரும்ப சொல்லு என நம்ப முடியாமல் கேட்க
நித்ரா : விட்டா சர்ப்பலோகத்துக்கே கேக்குர மாரி கூட சொல்லுவேன்.. ஆனா நீங்க மாட்டிப்பீங்க என குறும்பாய் கூற
ராம் : ப்லீஸ் ப்லீஸ்.. சொல்லேன்...
நித்ரா : மாட்டேன் என கன்னத்தில் பரவும் வெட்கக்கதுப்புகளை மறைக்க அவளின் வதனத்தை அவன் நெஞ்சில் புதைத்தாள்...
ராம் : சொல்லு டி.. என சினுங்கவும் அவன் காதிற்கு சற்று எக்கியவள்
நித்ரா : ஐ லவ் யு டூ டா அத்த பையா.. நீ இப்பவே பதில் சொல்லனும்னு இல்ல ... எப்போ வேணா சொல்லு... என அவன் கூற வந்ததை அவனுக்கே கூறி விட்டு அவன் எதிர்பாராத நேரம் அவன் கன்னத்தில் தன் இதழை பதித்தி விட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாய் மாடியை நோக்கி ஓடி விட்டாள்...
கன்னத்தை பிடித்தவாறு உறைந்து நின்ற ராமின் காதுகளில் அவளின் காதல் நிறைந்த வார்த்தைகள் ரிங்காரமிட விண்ணில் பறக்க தொடங்கியவனை விட்டால் அந்த கோட்டைக்கே கேட்பதை போல் ஆனந்ததித்தில் கொக்கரித்திருப்பான்... ஆனால் அதற்கும் முன் அவன் தலையில் ஒரு அடி விழ யம்மா என தேய்த்தவாறே திரும்பியவன் அங்கு முறைத்த படி நின்றிருந்த வருணை கண்டு இளித்தான்...
வருண் : தனியா செவுத்த பாத்து சிரிக்க தான் ஓடியாந்தியா... வா டா என அவனை இழுத்த படி அங்கிருந்த சென்றவனுடன் சித்தார்த்தும் இணைந்து கொள்ள இன்னும் மிதுனும் ராகவும் கதவை திறக்க போராடி கொண்டிருந்தனர்...
கார்த்திக் : எங்க டா போனீங்க...
ராம் : சும்மா அப்டியே வாக்கிங்...
சித்தார்த் : இன்னுமா டா திறக்க ட்ரை பன்னிக்கிட்டு இருக்கீங்க... என பேச்சை மாற்றியதை அவர்கள் அறியவில்லை
ஆதியன்த் : இவனுங்க திறந்த பாடில்ல டா.. ஆமா ருத்து எங்க
வருண் : அவன் உங்க கூட தான டா இருந்தான்... என கூறுகையில் சரியாக ருத்ராக்ஷும் வந்து சேர்ந்தான்...
மித்ரன் : எங்க டா போன என கேட்டதற்கு ருத்ராக்ஷ் பதிலளிக்கும் முன் மிதுன் மற்றும் ராகவின் பொரியல்களை கேட்டு பொருமையை விட்டிருந்தான் அஷ்வித்...
அஷ்வித் : மாமியார் வீட்டுக்கு வந்த மாரி ஆர அமர கிழிக்கிறானுங்க... இது வேலைக்காகாது... டேய் ஊதுங்க டா சங்க... என கூறவும்
அஜய் அருண் : ஓக்கே பாஸ்.. என இதற்காகவே காத்திருந்ததை போல் அஜயும் அருணும் ஒரு சேர வீலென ஊளையிட்டனர்
அஷ்வித் : நகருங்க அந்த பக்கம்... இவனுங்களுக்குலாம் எவன் தான் போஸ்ட்டிங் போட்டு குடுத்தானோ என அந்த கதவை ஒரு உதை உதைத்து திறந்தான்...
அஜய் மற்றும் அருணின் ஊளையின் சத்தத்தால் இந்த சத்தம் வெளியே கேட்காது போக மற்ற துஷ்ரிகளும் வேறு துஷ்ரிகள் அறிவுறித்தி விட்டதாய் எண்ணி கொண்டு அமைதியாய் இருந்து விட்டது
கதவை அசால்டாய் திறந்து உள்ளே சென்றவனை மிதுனும் ராகவும் வாயை பிளந்த படி பார்க்க அஷ்வித் கண்டு கொண்டதாய் தெரியவில்லை...
ஆதியன்த் : போதும் மச்சான் சைட்டடிச்சது உள்ள போங்க என வழிக்கு முன் நின்றிருந்த இருவரையும் உள்ளே தள்ளி விட்டு விட்டு அடுத்தடுத்து உள்ளே நுழைந்தனர்...
இவர்களை துருவ் வழி நடத்த இறுதியாய் அனைவரும் லீலாவதியின் சிறை முன் சென்று நின்றனர்...
ருமேஷ் : தாயே.. யாம் தம்மை சந்திக்க உள்ளுகிறோம்(நினைக்கிறோம்)... சற்று வெளிப்பட தம்மை பணிக்கிறேன்.. என கூறவும் துருவா என பரிட்சயமாய் கேட்டது லீலாவதியின் குரல்
லீலாவதி : எமது ஞாலத்திற்கு தம்மனைவரையும் வரவேற்கிறேன் பஞ்சலோக சூரர்கள் மற்றும் பருந்து சகோதர்களே என கசந்த புன்னகையுடன் கூறினார்...
கார்த்திக் : தாம் எவ்வாறு இவர்களிடம் மாட்டி கொண்டீர்கள் தேவி.. தாம் மரணித்து விட்டதாகவே யமது தாய் தந்தைகள் எண்ணி கொண்டிருக்கின்றனர்..
லீலாவதி : சில வருடங்கள் முன் அந்த பாவி எமதர்மன் என் கணவரை கொன்றதோடு மட்டுமின்றி மூன்று குழந்தைகளுடன் பட்டனத்தில் செய்வதறியாது தவித்த எம்மை வேதபுரம் அழைத்து செல்வதாய் வாக்களித்து எம்மை இங்ஙனம் கடத்தி வந்து விட்டான் வீரரே.. அவனை நம்பிய எம் மகவுகள் யான் விபத்தில் இன்னுயிரை நித்து விட்டேனென அவன் உரைத்த பொய்யை நம்பி விட்டனர்... அவர்களையும் மூன்று வருடத்திற்கும் முன் ஏமாற்றி இங்ஙனம் கிடத்தி கொண்டு வந்து விட்டான்...
ஆதவ் : வருத்தமடையாதீர் தேவி.. தம் மகவுகளையும் தம்மையும் காப்பாற்றி பூவுலகுக்கு அழைத்து செல்வது யமது பொருப்பு.. அதற்காயின் தாம் தைரியமாய் இருக்க விரும்புகிறேன்..
லீலாவதி : நிச்சயமாக வீரரே.. தம்மை எதிர் நோக்கியே இத்துனை காலமும் நம்பிக்கையோடு காத்திருந்தேன்.. எமது எண்ணம் வீண்போகவில்லை... தம் மூவரை உயிருடன் மீண்டும் காணுவேன் என எதிர்பார்த்திருக்கவில்லை இரட்சகர்களே.. ஆயினும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்...
ஆதியன்த் : இதிலென்ன உள்ளது தேவி.. தமது நம்பிக்கையை கை விடாது காப்பது தானே யமது கடமை.. நிச்சயம் பூ உலகையும் மற்ற ஞாலகங்களையும் யாம் விட்டு விட மாட்டோம் என கூறவும் சட்டென லீலாவதியின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது...
லீலாவதி : எம் மகவுகள் நலமாய் உள்ளனரா என இரட்சகன்களை பார்த்து கேட்கவும் அது தங்களுக்கு வந்த கேள்வியில்லை என்பதை போல் நின்றனர் அம்மூவரும்...
விதுஷ் : பொருத்தருள வேண்டுகிறோம் தாயே.. தம் மகவுகளை இன்னும் யாவரும் காணவில்லை.. அதாவது காணக்கிடைக்கவில்லை.. ஆதலின் அவர்களது நலத்தை மீண்டும் தமக்கு உணர்த்த வரவளிபோம் என உறுதியளிக்கிறேன் என கூற லீலாவதிக்கோ மனம் வெம்பத் தொடங்கியிருந்தது...
ஆதவ் கண்டிருந்தாலும் அவன் நித்யா ஆருண்யா மற்றும் அதித்தி தான் யட்சினிகளென்பதை அறியவில்லை...
இரட்சகன்கள் மூவரின் முகத்திலும் எந்த ஒரு உணர்வும் இல்லை.. அவரின் மகள்களும் நித்தமும் இவர்களை எண்ணி காத்திருக்க இவர்களுக்கு அவர்கள் இருப்பது கூட தெரியாதென்பதை போல் இருந்தது அவர்களின் நடவடிக்கைகள்.. ஆதியன்த்தின் சொற்களில் உலகை காப்பாற்றுவோம் என கூறினானே ஒழிய அவரின் மகள்களையும் வாழ்கையில் காப்பாற்றுவோம் என குறிப்பிடவில்லையே என தாய் மனம் தவித்தது
ஆதியன்த் அதித்தியிடம் அவனே அறியாது மனதை கொள்ளை கொடுத்திருந்தாலும் ருத்ராக்ஷ்ஷிற்கு ஆருண்யா மீது முதல் பார்வையிலே சிறு பிரியம் பிறந்திருந்தாலும் அவ்விருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் யட்சினிகள் தான் ஆருண்யா ஆதித்தி இருவருமென அறிந்திருக்கவில்லை...
சித்தார்த் அனைத்தையும் அறிந்திருந்தாலும் அவன் நித்யாவை அவன் மனதிற்குள் இன்னமும் அனுமதிக்கவுமில்லை அவள் தனக்கு முக்கியமானவளோ என்றும் யோசிக்கவில்லை...
லீலாவதி : இருக்கட்டும் வீரரே.. தாம் அனைவரும் நலம் பயத்தால் எமக்கு மகிழ்ச்சியே என உடனே தன் உணர்ச்சிகளை மறைத்து கொண்டார்
மிதுன் : சரி தேவி.. தாம் எச்சரிக்கையுடனே இருங்கள்... யாம் விடைபெறுகிறோம் என அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்...
லீலாவதி : இறைவா.. எம்மகவுகளை சோதிப்பதில் உமக்கேனடா இவ்வளவு ஆர்வம்... அனைத்திலும் அவர்களை ஏமாற்றும் நீ அவர்களின் காதல் வாழ்விலும் ஏமாற்றத்தை பரிசளித்து விடாதே.. அதை தாங்கிக் கொள்ள அவர்கள் படும் பாட்டை எம்மால் நிச்சயம் காண இயலாது என மெதுவாய் கதறியவரின் கதறல்களை கேட்டு கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தார் வளரி பாட்டி
அவருக்கும் இரட்சகன்களின் இந்த நடவடிக்கை அந்த இளம் பெண்களை எண்ணி வருத்தத்தை உயர்த்தியிருந்தாலும் அவர் விதியை நம்பினார்
வளரி பாட்டி : தமது கண்ணீருக்கு வலிமை உண்டு லீலா.. அது என்றும் வீண் போகாது... உம் மகள்களை இவ்வேளையில் வேண்டுமானால் இரட்சகன்கள் அறியாதிருக்காலாம்... ஆனால் இரட்சகன்களின் வாழ்வாகவே மாறப்போவது தம் மகள்கள் தான் என நினைத்து கொண்டார்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... ஷார்ட் யூடி.. மொக்க யூடி... அதான... தெரியும் எனக்கு.. பரவாயில்ல விடுங்க... நெக்ஸ்ட் யூடி நாளைக்கே குடுத்துடுவேன்... கொஞ்சம் காமெடியா போனா நல்லா இருக்குமேன்னு தோனுச்சுப்பா... இதெல்லாம் காமெடியான்னு கேக்காதீங்க.. எனக்கிதான் வரும்... (பாவம் தீரு) அதனால அட்ஜட் கரோ ஓக்கே... அப்ரம்.. எதாவது சொல்லனும்னா சொல்லுங்க ... நா தூங்க போறேன்.. குட் நைட் ... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro