மாயம் - 63
ஷேஷ்வமலையை யானையாளிகள் காவல் காக்க சஹாத்திய சூரர்களும் வளவனும் அற்புத கோட்டையை நோக்கி பயணமாகினர்..
இன்னும் சஹாத்திய சூரர்கள் அந்த பத்திகள் விவரித்த விசனங்களில் நிம்மதியற்றே காணப்பட்டனர்.. அந்த பத்திகள் விவரித்தது போல் உண்மையிலே முவ்வீரையனின் வரவு உலகின் இறுதி நாளை கொண்டு வந்து விடுமோ என்ற பதைபதைப்பு இருந்து கொண்டே தான் இருந்தது...
என்ன ஆனாலும் கோவன்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்கு உடைவதை போல் நிலை ஏற்பட விடக்கூடாதென்ற தீர்க்கத்துடன் ஒரு வழியாக கோட்டையை வந்தடைந்தவர்களை சேவனும் மயூரனும் குழப்பமான மனநிலையுடனே வரவேற்த்தனர்...
வளவன் : சேவா மயூரா... அனைவரும் உறங்க சென்று விட்டனரா... தாம் மாத்திரம் இங்கென்ன வினை புரிகிறீர்கள்...
மயூரன் : ஒன்றுமில்லை தந்தையே.. தங்கைகளும் தாய் மோகினியும் அந்த கண்ணாடி அறையினுள் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றனர்... தங்கையும் நீலி மற்றும் பிறையும் அங்கே தான் உள்ளனர்...
வீர் : ரக்ஷவும் சிம்மயாளிகளும் எங்கிருக்கின்றனர்...
சேவன் : அந்நாழ்வரும் ஆயுதகள அறையில் உறங்கி விட்டனர் சூரரே
முகில் : சரி சேவா.. தாம் அனைவரும் தங்கைகளை தேடி செல்லுங்கள்... யான் ரக்ஷவை கண்டு விட்டு அங்கே வருகிறேன் என்றவன் ஆயுதகள அறைக்கு செல்ல மற்றவர்கள் அந்த கண்ணாடி அறையை நோக்கி சென்றனர்...
அனு : வாங்க ப்ரதர்ஸ் எப்போ வந்தீங்க... அங்க காவல்லாம் பலப்படுத்தியாச்சா என வந்து நின்றவர்களை பார்த்து கேட்க இவர்களும் தலையசைத்தனர்...
அர்ஜுன் : சரி என்ன என்ன கண்டுப்புடிச்சிர்க்கீங்க... என கேட்டபடி கீழே அமர அனைவரும் அங்கு குழுமி அமர்ந்தனர்...
ஆயுதகள அறை கதவை மெதுவாய் திறந்து உள்ளே சென்ற முகில் சத்தமெழுப்பாமல் மெத்தையில் படுத்திருந்தவர்களிடம் நெருங்க சில நிமிடங்களில் அவனின் காலடியோசை கேட்டு சட்டென எழுந்து நிமிர்ந்து பார்த்தது அகி
முகில் : அகி நான் தான் ஷ்ஷ் என வாயில் விரல் வைத்து கூறவும் அகியுடன் யுகி விகியும் எழுந்து கொள்ள அந்த மெத்தையில் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த ரக்ஷவின் கேசத்தை மென்னகையுடன் வருடிய முகில் அதற்கு மேலும் " இவன் தூக்கத்த கெடுத்தான் அவ்ளோ தான் " என்பதை போல் விரைத்து நின்ற சிம்மயாளிகளின் பார்வையை தாங்க இயலாமல் எழுந்து அவர்களுக்கு வழி விட்டான்...
முகில் : சரி சரி ஒன்னும் பன்ன மாட்டேன்... ரக்ஷவ பத்திரமா பாத்துக்கோங்க குட் நைட் என மெதுவாய் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்...
மோகினி : நிறையவே தெரிய வந்துருக்கு இளவா.. என ரவிக்கு பதிலளித்தாள்...
ரனீஷ் : முவ்வீரையன பத்தி மொதல்ல சொல்லுங்க என பெருமூச்சுடன் கூற தலையசைத்த நிரு குறிப்பெடுத்த பத்திகளை வாசிக்க தொடங்கினாள்...
முவ்வீரையன் உயரமான உடல் வாகும் அஜானுபாகுவான பலமும் கொண்டது.. அதன் மந்திர சக்திகளை கணக்கிடும் அளவு நம் முன்னோரிடம் செயலிகல் இல்லாததால் அவர்களும் அறியவில்லையாம்...
ஆழி கடல் ஆழத்தையும் தாண்டி நனந்தலை (அகன்ற) உலகின் பஞ்சபூத சக்திகளை இணைந்து முவ்வீரையனுக்கு புவி அழிய உதவும் என்பதை யாவரால் நம்ப இயலும் இருந்தும் அதுவே மெய்யாகிறது விதியின் சதுர விளையாட்டுக்களில்...
உலகறிந்து நிகழப்போகும் அந்த பேர் யுத்தத்தில் எத்துனை ஊன் (உடல்) தான் தன்னது இன்னுயிரை நீத்தாலும் முவ்வீரையனது செறுக்கை (கோபத்தை) மட்டுப்படுத்த வழியற்ற நிலையில் தன் அழலால் (நஞ்சினால், நெருப்பினால் ) தன்னையே அழித்து கொள்ள முணையும் போழ்து அவிரும் (உயரும்) ஒளியானது மறையும் வேளை திணையானது (பூமியானது) அழிவை பெறும்..
அஷ்வன்த் : மொத்தத்துல முவ்வீரையன் எழுந்தா உலகம் அழியும்னு இருக்கு அதானே... என தலையை பிடித்தவாறு கண்கள் மூடி கேட்க அவர்கள் தலையாட்டுவதை காணவில்லையெனினும் அங்கு நிலவிய மௌனம் மெய்யை எடுத்துரைத்தது
ரவி : மேல சொல்லுங்க மா... என அஷ்வன்த்தின் தோளை தட்டி கொண்டு கூறினான்...
தான்யா : முக்கோக்கள் இறந்தத பத்தி சில வரிகள பாத்தோம்...
அர்ஜுன் : என்ன... என நம்ப முடியாமல் கேட்க
வர்ஷி : ஆமா அண்ணா.. எப்டின்னு தெரியல.. பட் இதுல விந்வார்த்த யஷ்டிகளோட நஞ்சினாலே கோவன் இழந்தான் அப்டின்னு ஒரு பத்தி இருக்கு
வளவன் : ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லையே...
மோகினி : அதான் எங்களுக்கும் தெரியல.. ஒரு விஷயத்த கவனிஞ்சீங்களா.. இந்த ஒவ்வொரு பத்தியுமே ஏதோ ஒரு கதைல சொல்ற மாரி இருக்கு.. அந்த ஒவ்வொரு சொல் நடையும் அப்டி தான் இருக்கு.. நாம படிக்கனும்னு எழுதுன மாரி இல்ல... நமக்கு சொல்லனும் நாம கேக்கனும்னு எழுதுன மாரி இருக்கு...
அஷ்வன்த் : சரி தான்... ஆனா இந்த விஷயங்கள் எப்டி இங்க வந்துச்சு... உண்மைய சொல்லப்போனா இங்க ஒரு பத்தி குறிப்பிட்ட மாரி யாளிகள நாங்க காட்டுக்குள்ள வைக்கவே இல்ல...
பவி : ஹான்.. என்னங்க சொல்றீங்க...
ரவி : ஆமா பவிமா... ஐயாயிரம் வர்ஷத்துக்கு முன்னாடி தான் யாளிங்க எங்களுக்கு கெடச்சது... அப்போவே யாளிங்க இங்க தான் இருந்தாங்க...
மோகினி : உங்களுக்கு ஐயாயிரம் வர்ஷத்துக்கு முன்னாடி தான் யாளிங்க கெடச்சதுன்னா அதுக்கு முன்னாடி எங்க இருந்துச்சு...
ரக்ஷா : தெரியல.. இப்டி ஒரு இடமே இருக்குரது நமக்கு தெரியல... சேவன் தமையன் சொன்னாரே.. இந்த இடம் தடைபட்ட பகுதியா இருந்துச்சா
சரண் : ஆமாமா.. இந்த கோட்டைய கட்டும் போது எங்களுக்கு இருவது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.. கற்ற காலத்துல இந்த பகுதில ஏதோ அமானுஷ்யமா சத்தம் கேக்குறதாவும் யார் யாரோ வந்துட்டு போற மாரி இருக்குரதாவும் கோட்டைல வேலை பாத்த பணியாட்கள் தேவசேனை(மூன்றாம் ஜென்மத்தில் கோவன்களின் அன்னை மற்றும் ஐயாயிரம் ஆண்டின் முன் வேந்தன்யபுரத்தை ஆண்ட அரசி) அத்தைக்கிட்ட முறையிட்டாங்க... அதனால அத்த இந்த பகுதிய மட்டும் தடை செஞ்சாங்க.. நாங்களும் இத கண்டுக்கல... அதனால தான் இந்த பகுதி மட்டும் எப்பவும் வெறுமையாலே இருக்கும்..
ரனீஷ் : ஆனா எங்களுக்கே தெரியாம இங்க இவ்ளோ புதிர் பாதைகளும் இரகசிய குறிப்பீடுகளும் எப்டி வந்துது யாரு அமச்சதுன்னு தெரியல என பார்வையை அந்த அறையை சுழற்ற விட்டு கொண்டு கூறினான்...
வீனா : அதுக்கு பதில் ஒருவேளை இங்க கிடைக்கலாம்னு நினைகிறேன் என இவ்வளவு நேரமும் இவர்களை மதிக்காமல் இங்கு வந்ததிலிருந்து அவள் நோட்டமிடும் அந்த அறையின் மையச்சுவரில் இருந்த குறிப்பிட்ட பகுதியை பார்த்து கொண்டே கூறினாள்...
அனைவரும் இவள் என்ன கூற வருகிறாள் என புரியாமல் அவள் பார்த்த திசையில் பார்க்க வீனா குருகுருவென பார்த்து கொண்டிருந்த அந்த பகுதியில் மட்டும் எந்த ஒரு பத்தியும் என்ன ஒரு எழுத்து கூட தோன்றாமல் தெளிவாய் இருந்தது...
சேவன் : அங்ஙனம் மட்டும் ஏன் ஒன்றும் இல்லை...
மது : நாங்களே இப்போ தான் கவனிக்கிறோம் தமையா... ஏன் அங்க மட்டும் ஒன்னுமே இல்ல என அதனருகில் எழுந்து செல்ல அனைவரும் எழுந்து அவளை பின் தொடர்ந்தனர்...
மது அதை தொடப்போகவும் முகில் அவளை தடுத்து நிறுத்தினான்...
முகில் : நீ தொடாத மது ... என்றவன் வெளியிலிருந்து உள்ளே வர
வளவன் : ஆமா எதாவது ஆபத்தா கூட இருக்களாம் நீ பின்னாடி வா மா... என்கவும் மது பின் வர வீர் அந்த சுவற்றின் அருகில் சென்று அதை தொட்டு பார்த்தின்... ஈரம் இன்னும் இருக்க அந்த கண்ணாடி சுவற்றை தொட்டு உணர முயன்றவன் ஒரு இடத்தில் மட்டும் அவனது பிரதிபளிப்பு இல்லாமலிருப்பதை கூர்ந்து கவனித்தான்... அது ஒரு துள்ளியமான புள்ளி என்பதால் எவருக்கும் அவ்வளவு எளிதில் தெரியவில்லை...
வீர் ஏதோ உணர்ந்தவனாய் அதை அழுத்த அடுத்த நொடியே அந்த அறை முழுவதுமிருந்த நீரின் ஈர்ப்பு அந்த மையப்பகுதியை அடைந்து எழுத்துக்கள் ஒவ்வொன்றாய் தோன்றின
ஏழாயிரம் வருடம் முன்பு கானகத்தில் கண்ணிற்கெட்டா இடங்களில் யாளிகளை மறைத்தானாம் விடலவன்.. அவ்விடவலனை ஓவியமாக்க எண்ணிய எமக்கு அனுமதியன்றென்பதால் யாமே யாளிகளை பாதுகாத்ததென்ற மெய்யை பறைய வாய்ப்பற்று போனது
விடலவன்
விடலவன் என்ற நாமம் சஹாத்திய சூரர்களுள் மின்னலென பாய மற்றவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.... எனெனில் விடலவன் என்ற நாமம் அவர்களின் இரண்டாம் பிறவியில் ஷேஷ்வமலையில் பிறந்த போது கோவன்களின் தாயார் சஹாத்திய சூரர்களை செல்லமாய் அழைக்கும் நாமம்...
அது எவ்வாறு இங்கு உள்ளதென துளியும் அவர்களுக்கு நினைவில்லாது போக ரனீஷின் மனக்கண்ணில் ஏதேதோ நிழல் பிம்பம் சடார் சடாரென சென்று மறைந்தது
அடுத்தடுத்து தோன்றிய வார்த்தைகளை வீர் வேகவேகமாய் வாசிக்க அவனது பதற்றம் தான் மற்ற எவருக்கும் புரியவில்லை...
ஒருவேளை.. எதிர்காலத்தில்.. இப்பத்திகளை பற்றிய தேவையிருக்காதிருப்பின் இப்பத்திகள் இவ்வாறு கண்ணிற்கிடாமலே இருப்பதில் தவறன்று.. ஆயின் யமது எதிர்கால வம்சம் இம்மெய்களை நினைவு கொணர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு நினைவு கொணர இயலாத நிலை ஏற்படின் அதற்கு சகாயம் புரியவே உருவானது இந்த இரகசிய அறை..
வீர் வேகமாய் அடுத்த பத்தியை தேட அதுவோ தோன்றாமல் "த " என்ற முதல் எழுத்தில் அப்படியே இருக்க அது தோன்றும் முன்னே ரனீஷின் குரல் அந்த அறையில் எதிரொலித்தது...
ரனீஷ் : தற்போது மக்களோரிடம் விடைபெற்றுச் செல்ல உள்ளதால் உடனே எதிர்கால பயணத்தை மேற்கொண்டு இங்ஙனம் வீற்றுள்ளோம்.. இது உதவினால் நன்று.. இத்தகவல்கள் தேவை என்ற நிலையில் யாளிகள் யமக்கு நிச்சயம் உதவி புரியும்.. ஆதலின் அது வரை யாமே இந்நினைவுகளை அழித்து கொண்டு போர் களம் செல்ல உள்ளுகிறோம்...
இப்படிக்கு ஷேஷ்வமையின் சஹாத்திய சூரர்களும் கோவன்களும்...
என கூறியவனை நாயகிகளும் குட்டி நாயகர்களும் வளவன் மோகினி தம்பதியரும் ஆ என வாயை பிளந்து வைத்து பார்க்க அவனோ அந்த சுவரையே ஆச்சர்யமாய் வெறித்து கொண்டிருந்தான்....
சர்ப்பலோகம்
இரவின் நடுநிசி குளிரில் அனைவரும் இழுத்து போர்த்தி உறங்காத குறையாக இருந்த வேளையில் ஒரு சுடர் விளக்கை ஏந்தியபடி கோட்டையின் வளாகத்தில் கண்மணிகளை சுழல விட்டபடி நடந்து எங்கோ சென்று கொண்டிருந்தாள் நித்யா
மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது பொருமையாய் ஒவ்வொரு அடியையும் வைத்து நகர்ந்தவள் மூன்றாம் மாடி வளாகத்தினை அடைந்ததும் அவள் வாயையும் மூக்கையும் மூடி கொண்டாள்...
அந்த வளாகம் முழுவதும் எண்ணற்ற துஷ்ரிகள் நைட் ட்யூட்டி பார்த்து கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது..
அவள் தன்னை திடப்படுத்தி கொண்டு ஓரடி எடுத்து வைக்கும் முன் சட்டென பின்னிருந்து யாராலோ இழுக்கப்பட்டாள்.. துஷ்ரிகள் அனைத்தும் அந்த ஒரு வினாடியில் கேட்ட ஓசையினால் நித்யா இருந்த இடத்தை சுற்றி நோக்க தன் வாயை இறுக்கி மூடி அந்த துஷ்ரிகளை நோட்டம் விடும் கருப்புடை அணிந்திருந்தவனை கண்கள் விரிய நோக்கினாள் நித்யா
அந்த துஷ்ரிகள் விலகியதை உறுதி படுத்தியதும் தன்னவளின் கண்களை நோக்கியவன் " தமக்கு இந்நாழியில் இங்ஙேது பணி தேவி " என தன் ஆழ்ந்த குரலில் மெதுவாய் கேட்க ... அடுத்த நொடியே நித்யாவின் விழிகளுள் நிறைந்திருந்த அந்நியனோ என்ற பயம் மறைந்து தன்னவன் என்ற உணர்வு நிறைந்தது
நித்யா : தா..தாம் இ..வ்..வே.ளையில் .. இ..ங்..ங..னம் ..எ..ன்..ன செ.ய்கி..றீர்..கள் என இவள் மெதுவாய் எதிர் கேள்வி கேட்க
சித்தார்த் : சர்ப்பலோக அமைச்சன்கள் ஓய்விலிருக்கையில் கோட்டையையும் கோட்டையுலுள்ளோரையும் காக்க எம் சகோதரர்களுடன் வந்துள்ளேன் என அவன் தயங்காமல் பதில் அளித்தான்...
நித்யா : ஓஹ்.. என மெதுவாய் இவள் கூற சுற்றி தன் கண்களை சுழல விட்ட சித்தார்த் வழியிலிருந்து விலகி கொண்டான்...
சித்தார்த் : தாம் இப்போது தம்மறைக்கு செல்வதே நன்னலம் .. செல்வீரென நம்புகிறேன் என கூறி விட்டு அவன் அங்கிருந்து செல்ல அவளோ " தாம் கூறினால் உயிரையே விட துணிபவள் அறைக்கு செல்ல மாட்டேனா ஹ்ம் " என தன் மொத்த திட்டத்தையும் அப்படியே விட்டு விட்டு அவளறைக்கு சென்றாள்...
தங்கள் அறையிலிருக்கும் பெரிய பால்கெனியில் அமர்ந்திருந்த நித்ரா அந்த இரவை இரசித்து கொண்டிருக்க அவளுக்கு துணையாய் இரு நாட்கள் முழுவதும் உறங்கியதால் நித்திரயற்ற ஐலா அவளருகில் அமைதியாய் அமர்ந்திருந்தாள்...
அமைதியாய் அமர்ந்திருந்த இருவரும் திடீர் திடீரென மதிலிருந்து சில நிழல்கள் மாறி மாறி கோட்டைக்குள் குதிப்பதை காண நித்ரா எதிர்பாப்புடன் இப்போதாவது தன்னவனை காண முடியுமா என அங்கிருந்து எழவும் ஐலா அவள் கரத்தை பிடித்தாள்...
ஐலா : எங்க போற நித்து
நித்ரா : நீ இங்கையே இரு ஐலா... நா சீக்கிரம் வந்துடுறேன்... என அவள் அழைக்க அழைக்க கேலாமல் அறையை விட்டு வெளியே வந்தவள் துஷ்ரிகளை சத்தமெழுப்பி தம்மவர்களை மாட்டி விட்டு விட கூடாதென பொருமையாய் நடந்து வந்தாள்...
முன்னாடியும் பின்னாடியும் பார்த்தவாறு அந்த நீண்ட வளாகத்தினுள் வந்து கொண்டிருந்தவள் ஒரு தூணை கடக்கையில் மற்றொரு தூணை காணாமல் இடித்து நின்றாள்...
அந்த தூணிலிருந்து நகர எண்ணியவளின் கரத்தை சட்டென ஏதோ ஒன்று இழுக்க மீண்டும் அதே தூணில் சென்று மோதியவள் அது தூணல்ல என்பதை உணர்ந்து கத்த முயலும் முன்னே அவளை தன்னணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான் ராம்..
வேதபுரம்
அனைவரும் இன்னும் அதிர்ச்சியுடன் நின்றிருக்க ரனீஷ் அதிர்ச்சி ஆச்சர்யம் கலந்த கலவையாய் மற்ற ஏழ்வரையும் கண்டான்...
ரனீஷ் : ஏன் டா உங்களுக்கு நியாபகம் இல்லையா.. இ..இது எல்லாமே நம்ம வேலை தான்.. ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நாம யாளிகள காட்டுல ஒரு குகைல தான் வச்சிருந்தோம் என படப்படப்பாய் கத்த
ரக்ஷா : யோவ் கடந்து குதிக்காம எங்களுக்கு விளக்கமா சொல்லுயா... என இவளும் ஒன்றும் புரியாமல் கத்தினாள்..
வீர் : ஆமா நாம தான்.. நாம தான் இதெல்லாம் என அதற்கு மேல் அவனுக்கு வார்த்தை வரவில்லை
ஒவீ : முழுசா சொல்லு டா அண்ணா.. என்ன நடக்குது இங்க..
ரனீஷ் : சொன்னா நம்ப மாட்டீங்க... இது எல்லாமே எங்க வேலை தான்... ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஷேஷ்வமலைலேந்து கிளம்புரதுக்கு முன்னாடி காட்டுக்கு யாளிகள பாக்க போனோம்... அன்னைக்கு யாளிங்க கிட்ட இதப்பத்தி சொல்லிட்டு நாங்க எதிர்காலத்துக்கு காலபயணம் செஞ்சோம்.. அப்போ தான் இந்த இடத்துல இவ்வளவு செஞ்சு ...
வளவன் : ஹே ஹே கூல் கூல் ரனீஷ்.. பொருமையா சொல்லு
ரனீஷ் : அதான் சொல்றனே வளவா... நாங்க தான் இது எல்லாத்தையும் எழுதுனது... ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இரெண்டாயிரம் வருஷத்துக்கு அப்ரம் பயணிச்சு இத எல்லாம் செஞ்சிட்டு அப்ரம் தான் நாங்க நாகமலைலேந்து எங்கள சந்திக்க வந்த நாகனிகள் மற்றும் யாளி வீராங்கனைகளையே சந்திக்க போனோம்...
நீலி : அப்டீன்னா இங்க உள்ளவங்க பேய் பிசாசுன்னு நெனச்சு பயந்தது உங்கள பாத்து தானா என கேட்கவும் சற்று முளித்த ரனீஷும் தலையசைத்தான்...
பிறை : அவ்வாறெனில் தமக்கு ஏன் அது நினைவிலில்லை தமையரே
சரண் : அது.. நாங்க திடீர்னு போட்ட திட்டம் தான் பிறை... முவ்வீரையன பத்தி சிம்மயாளிகள பத்தி ஏன் யட்சினி சர்ப்ப வம்சத்த பத்தின்னு எல்லாமே எங்களுக்கு தெரிஞ்சிருந்தது... எதிர்காலத்துல இந்த குறிப்புகள் தேவப்படுமா தேவப்படாதான்னு எங்களுக்கே தெரியல... ஒருவேளை இதெல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய நிலமை வந்தா அத தெரிஞ்சிக்கனும்னு இங்க வந்து இந்த வேலையெலாம் பாத்தோம்....
முகில் : ஆனா... எதிர்காலத்துல முவ்வீரையன் எழுரதுக்கு அவசியமிருக்காதுன்னு நெனச்சு தான் எங்க நினைவுகள நாங்களே அழிச்சிக்கிட்டோம்... அப்டி ஒரு தேவை ஏற்பட்டா தெரிஞ்சிக்க தான் எல்லாத்தையும் பத்தி சர்ப்பலோகத்த பத்திலாம் கால பயணம் செஞ்சு இங்க வந்து எழுதுனோம்... திரும்ப நாங்க ஷேஷ்வமலைக்கு போறதுக்குள்ள எங்க நினைவு எல்லாமே அழிஞ்சதால இப்டி ஒரு நிகழ்வு நடந்துச்சுன்னே எங்களுக்கு நினைவு இல்ல என அதிர்ச்சியுடன் கூறி முடித்தான்...
மது : ஆனா ஏன்... எதுக்காக உங்க நினைவ அழிச்சிக்கிட்டீங்க
ரவி : காரணமாத்தான் மதுமா.. முவ்வீரையன பத்தின இரகசியம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் தெரியும்... அப்போ நடந்த ஒரு பெரிய விபத்துல தெரிஞ்சு வச்சிருந்த எல்லாருமே இறந்துட்டாங்க... எங்க பதிமூணு பேர தவிற... முவ்வீரையன் உயிர்த்தெழுந்தாலே அது தான் உலகத்தோட இறுதி நாளா இருக்கும்... முவ்வீரையன்னா என்னன்னே தெரியாம யாராவது முவ்வீரையன பத்தி எங்க மூலமா தெரிஞ்சிக்கிட்டு அந்த சர்ப்பலோகத்தோட உயிரினத்த எழுப்பி முவ்வீரையன் வர்ரதுக்கு வாய்ப்ப ஏற்படுத்தீட கூடாதுங்குரதுக்காக தான் நாங்க கூட அத தெரிஞ்சிக்க வேண்டாம்னு எங்க நினைவுகள நாங்களே அழிச்சிக்கிட்டோம்...
அஷ்வன்த் : ஆனா தேவைக்காக தான் இப்டி இந்த இடத்த செஞ்சோம் என கூற அனைவருக்கும் மனம் ஏதோ போலிருந்தது...
ஒவீ : ஆனா எதுக்காக சரியா ஈராயிரம் வருஷம் பயணிச்சீங்க.. உங்களுக்கு எப்டி அப்போ இங்க கோட்டை கற்றாங்கன்னுலாம் தெரிஞ்சிது
ரித்விக் : அதுவா.. அது என சற்று யோசித்தான்...
வீர் : நா சொல்றேன் டா.. அப்போ எங்களுக்கு நாங்க திரும்ப வருவோமாங்குர சந்தேகம் இருந்துது டா.. அதோட நாங்க அழிஞ்சாலும் அந்த குறிப்பு நம்ம பசங்களுக்கு உதவலாம்.. அதனால தான் அடுத்த மதிநட்சத்திரம் இரண்டாயிரம் வருடம் களிச்சு வரத தெரிஞ்சு அந்த காலக்கட்டத்துக்கு பயணிச்சோம்.. அபோ தான் அற்புத கோட்டைய கட்ட ஆரம்பிச்சாங்க... நாங்களும் இந்த பகுதிய இதுக்காக உருவாக்க ஆரம்பிச்சோம்... தேவசேனை அத்த இந்த பகுதியையே தட செஞ்சது நல்லதா போச்சு... என பெருமூச்சு விட " இப்படி வெண்ணையை வேணும்னே நழுவ விட்டுட்டு நிக்கிறானுங்க பாரு " என அனைவரும் அவன்களை ஒரு பார்வை பார்த்தனர்...
திடீரென சேவன் ஏதோ நினைவு வந்தவனாக...
சேவன் : சூரரே... இன்று யமதர்மனை கண்காணிக்க சென்றபோது அவன் மதிள் தெளிந்து எழுந்ததை கண்டேன்...
அர்ஜுன் : ஓஹ் எழுந்துட்டானா... இதுக்கு தான் காத்துட்டு இருந்தோம்... டேய் வாங்க டா
வீனா : சாப்புட்டு போங்க அண்ணா
அஷ்வன்த் : வந்து சாப்ட்டுக்குறோம் டா மா... நீங்க போய் தூங்குங்க... நாளைலேந்து நமக்கு தூங்க நேரமிருக்காது என்று விட்டு சேவன் மயூரனுடன் அங்கிருந்து வேகமாய் சிறை புறம் சென்றனர்...
நாயகிகள் அவர்கள் செல்வதை கண்டு விட்டு நீலி பிறையையும் அழைத்து கொண்டு ஓய்வறைக்கு செல்ல வளவனும் மோகினியும் அவர்களின் அறைக்கு சென்றனர்...
சிறை வாயிலை நோக்கி சென்றவர்கள் அங்கு அவர்கள் கண்ட காட்சியினை நம்ப இயலாமல் அதிர்ந்தனர்..
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... யூடி எப்டி இருக்கு... ஹிஹிஹி நீங்க இந்த டைம் ட்ரவல் ட்விஸ்ட்ட எதிர்பார்த்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்... பரவால்ல இந்த யூடி ஓக்கே தான.... சுமாரா இருந்தா அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க அடுத்தடுத்து நாம சரசரன்னு நேரா போருக்கே போய்டலாம்... மே பீ நாளைக்கு போர் ஆரம்ச்சிடும்னு நினைக்கிறேன்..
பாப்போம்... நைட் யூடி கண்டிப்பா இருக்கு.. மறக்காம விமர்சனத்த கொடுத்துட்டு போங்க இதயங்களே... டாட்டா
அப்ரம்... நம்ம ஹீரோஸ் எப்போ காலமாற்றம் பன்னாங்கன்னு உங்களுக்கு டௌட்டா இருந்தா .. ரனீஷ் குறிப்பிட்ட அந்த டைமிங் நியாபகம் இல்லனா " காதல் - 42 " யூடில ஹீரோஸ் ஷேஷ்வமலைய விட்டு போறதுக்கு முன்னாடி கோவன்கள் மட்டும் தனியா ஒரு இத்துக்கு போய்ட்டு வந்ததா மக்கள் கவனிச்சிருப்பாங்க... அப்போ உங்களுக்கு தெளிவாய்டும்...
ஓக்கே மீண்டும் டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro