Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 58

அற்புத கோட்டை

சிம்மயாளிகள் மெல்ல அமைதியடைந்ததும் சரண் கீழே சென்று அந்த அறை கதவை திறந்து விடவும் வளவன் வெளியேற அவன் இரு தோளிலும் சேவனும் மயூரனும் கண்களில் எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தனர்...

ரக்ஷவை ஆறுதலாய் அணைத்தபடி மோகினி வெளியேறினாள்... மோகினியிடமிருந்து பிரிந்த ரக்ஷவ் சரணிடம் ஓட சரண் அவனை கை நீட்டி அழைத்து அணைத்து கொண்டான்...

வளவன் : என்னாச்சு சரண்... எதுக்கு சிம்மயாளிகள் அப்டி உறுமுனாங்க...

சரண் : எங்களுக்கும் தெரியல வளவா... என கூறவும் சரியாக முதலணி நாயகர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்தனர்...

ரக்ஷவ் : நா போய் பாக்கட்டுமா குருவே என கம்மிய குரலில் கேட்கவும் இத்துனை நாட்களில் இவர்கள் யாவருமே ரக்ஷவை இப்படி அமைதியாய் கண்டதில்லை என்பதால் சரண் சரி என தலையசைத்தான்...

ரக்ஷவ் மாடி ஏறி ஓடியதும் அனைவரையும் அலசிய நிரு நீலி பிறை அங்கில்லாததை கண்டு

நிரு : நீலியும் பிறையும் எங்க என சேவன் மயூரனை கேட்க அவர்களுக்கும் அப்போதே துணைவிகளின் நினைவு வந்து உடனே யானையாளிகள் வீற்றிருக்கும் மைதானத்திற்கு விரைந்தனர்...

அங்கு யானையாளிகள் அனைத்தும் அமர்ந்து ஓய்வு எடுத்து கொண்டிருக்க நீலியும் பிறையும் கால் நீட்டி போட்டு கொண்டு ரித்விக்கின் யானையாளி மீது உறங்கி கொண்டிருந்தனர்...

அது கோட்டையின் உட்புறத்தில் தள்ளி அமைந்துள்ளதால் சிம்மயாளிகளின் உறுமல் இவர்களை அண்டவில்லை...

ரித்விக் : அவங்க தூங்கட்டும்.. நம்ம விஷயத்துக்கு வருவோம்...

மோகினி : நீங்க எல்லாரும் எப்டி டா கோட்டைக்கு வந்தீங்க என நாயகிகளை நோக்கினாள்...

பவி : நாங்க வீட்ல நைட்டுக்கு சமைச்சிட்டு பேசிக்கிட்டு இருந்தோம் மோகினிக்கா... திடீர்னு அனு திவி ப்ரியாக்கு என்னமோ ஆச்சு.. என அந்நினைவிற்கு செல்ல மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்...

சாதாரணமாக கலந்துரையாடியவாறு ஒரு ஒரு வேலை பார்த்து கொண்டிருந்தனர் நமது நாயகிகள்.. சாதாரணமாய் சென்ற அவ்வேளை சட்டென சூடுபிடிக்க தொடங்கியதை போல் காற்று பலமாய் வீசி அனலடிக்க தொடங்கியது...

நாகனிகளின் விழிகள் தனிச்சையாகவே அவர்களின் ஆத்ம நிறத்தில் ஒளிர அம்மூவரின் மனதிற்கும் அற்புத கோட்டையில் எழும் வேகம் தெரிந்தது..

திவ்யா எதற்கும் தாமதிக்காமல் உடனே அவளின் சக்திகளை கொண்டு அற்புத கோட்டையிற்கு ஒரு வழியை உருவாக்க அவர்களின் சினம் " சிம்மயாளிகளே " என ஒரு சேர ஒலித்த கர்ஜனையில் எதிரொலித்தது மற்ற நாயகிகளுக்கு தெளிவாய் தெரிந்தது....

திவ்யா : என்னன்னு தெரியல அண்ணி.. ஆனா நம்ம பசங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு தோனுது.. ஏதோ ஒன்னு தப்பா நடந்துருக்கு.. சிம்மயாளிகள் இந்த மாரி கோவப்படுரது அரிதிலும் அரிது தான்...

வீர் : இப்டி எப்பவுமே நடந்ததில்ல டா திவிமா... அவங்க கோவத்துக்கு எப்பவுமே ஒரு காரணம் இருக்கும்.. அதோட இது சாதாரண கோவம் மாரி தெரியல... யுகியோட கண்ணு சிவப்பாவும் அகியோட கண்ணு நீலமாவும் விகியோட கண்ணு வெள்ளையாவும் இருந்துது

மது : ஆனா.. சிம்மயாளிகளோட விழி நிறம் பச்சை தானே அத்தான்... இதுக்கு என்ன அர்த்தம்...

அஷ்வன்த் : எங்களுக்கும் தெரியல டா மதுமா.. கற்றது கல்லளவு கற்காதது உலகளவுன்னு சும்மாவா சொன்னாங்க... ஒவ்வொரு நாளும் நமக்கு இதுவர தெரிஞ்சிடாத பல விஷயம் வெளி வருது...

ரக்ஷா : ம்ஹும் இல்ல அண்ணா.. நமக்கு நடக்குரத பத்தின எல்லாமே நமக்கு தெரிஞ்சது தான்.. ஆனா அத நம்மளால சரியா பகுத்தறிய தான் முடியல...

ரவி : என்ன ரக்ஷாமா சொல்ல வர... நமக்கு எப்டி சிம்மயாளிகள பத்தி தெரியும்... க்ரிஷ் இந்திரன் சத்தீஷுக்கே தெரியாது டா

வீனா : அவ அப்டி சொல்ல வரலங்க.. நம்மள சுத்தி உள்ள விஷயங்களும் நம்ம சந்திக்கிர விஷயங்களும் இப்டி எல்லாத்த பத்தின பதிலுமே நம்ம கிட்ட இருக்கு.. ஆனா நம்ம இன்னும் அத சரியா கண்டுப்புடிக்கல.. அவ்ளோ தான்...

ஒவீ : கேள்ளி நம்மள சுத்தியே இருக்குர மாரி பதிலும் நம்ம கிட்டையே தான் இருக்குன்னு சொல்ல வர அதானடி என கேட்க தன் இரெட்டை சகோதரிக்கு ஆமென்று பதில் தந்தாள் வீனா

ப்ரியா : ஹ்ம்ம் ஆனா பதில் எங்கன்னு போய் தேடுரது..

அர்ஜுன் : அதுக்கு முன்னாடி... நம்ம பசங்க கிட்ட பேசுரது நல்லதுன்னு எனக்கு தோனுது...

அனு : ஆனா சர்ப்பலோகத்துல இருக்குரவங்க கிட்ட எப்டி பேசுரது.. என குழப்பமாய் கேட்க அனைவரும் அவளை நோக்கினர்...

சர்ப்பலோகம்

தன் சிறை சாலையில் ஒரு ஓரத்தில் ஒடுங்கி அமர்ந்திருந்த லீலாவதியின் சிந்தனைகள் நேற்றைய நினைவுகளையே சுற்றி வந்தது....

வலியினால் முகம் சுருங்கி அமர்ந்திருந்தவரின் செவிகளில் துருவ் மற்றும் அருணின் அரவம் வந்தடைய மெல்ல கண்களை திறந்து நோக்கியவர் இருளில் இருந்ததால் அவருக்கு நேரெதிரே நின்றிருந்த துருவிற்கு லீலாவதியை தெரியவில்லை...

துருவ் அப்போது தான் அந்த காகிதத்தை எடுத்திருந்தான்... அந்த துஷ்ரியிடமிருந்து இவர்கள் செல்வதை கண்ட லீலாவதிக்கு துருவின் முகமும் ரனீஷை அச்சில் வார்த்த அருணின் முகமும் புது வித வலுவை கொடுத்தது...

உடலில் பல விதமான வலிகள் இருந்தாலும் அதை பொருத்து கொண்டு தன் நாக உருவை எடுக்க முயற்சித்தவருக்கு பலவாறான முயற்சிகளின் பின் அவரின் நாக உருவு மெதுமெதுவாய் தென்பட்டது...

நாக உருவை எடுத்த லீலாவதி அவரின் கைகளில் கட்டப்பட்டிருந்த இரும்பு சங்கிலிகளில் இருந்து விடுப்பெற்று சோர்வின் காரணமாய் வேகமாய் ஊர இயலாமல் மெதுவாய் ஊர்ந்து ஜன்னல் வழியே வெளியே சென்றார்...

அவர் வெளியேறிய சில நொடிகளில் தான் இரட்சகன்கள் விதுஷுடன் பணிப்பெண்கள் அறைக்கு சென்றனர்... உடல் மொத்தமும் வலியில் முறுக்க தான் பெற்ற மகவுகளை ஒரு முறையாவது கண் குளிர கண்டு விட வேண்டுமென்ற வெறியுடன் அங்கிருந்து ஊர்ந்தவர் துஷ்ரிகளின் சத்தமனைத்தும் நின்றதும் எவரேனும் பார்த்து விட கூடாதென்பதற்காய் பாதையை கடந்து கோட்டையை அடையும் முன்பே நடுவில் இருந்த அந்த யாகம் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் பதுங்கினார்...

அவரின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ அந்த நேரம் தான் சித்தாத்தின் பார்வை அவர் மறைந்திருந்த தூணுக்கு மிக அருகிலே இருந்த சவப்பெட்டிகள் மீது பதிந்தது...

அதை கவனித்திராத லீலாவதி கோட்டை மதிலில் இருந்து சிலர் கீழிறங்குவதை எதற்சையாய் காண அப்போது சரியாக அவரின் கவனம் ஏதோ மெல்லமாய் ஒலித்த ஒரு அரவத்தில் திசை திரும்பியது...

அந்த மூன்று சவப்பெட்டிகளுள் ஒன்று மெதுவாய் ஆட தொடங்க அதன் மீதோ தீயின் சின்னம் சிகப்பு நிறத்தில் செக்க செவேளென ஒளிர தொடங்கியது

லீலாவதி ஒன்றும் புரிபடாமல் அங்கிருந்த படியே அச்சவப்பெட்டிகளை காண மெதுமெதுவாய் அதனருகில் இருந்த மற்றைய இரு சவப்பெட்டிகளிள் ஒன்றுள் காற்றின் சின்னம் வெள்ளையாய் ஒளிர்ந்தது...

சில நொடிகளில் திடீரென நடுவிலிருந்த சவப்பெட்டியில் அதிக அரவம் எதிரொலிக்க அதிலோ நீரின் சின்னம் நீல நிறத்தில் ஒளிர்ந்தது...

அதை காணக்காண லீலாவதியை சுற்றி உள்ள அனைத்தும் அதிர தொடங்கியதை அவர் அறிந்திருக்கவில்லை... நிமிடங்கள் கடந்தது... எப்போது சித்தார்த் அங்கு வெறி பிடித்தவனாய் அலரத் தொடங்கினானோ அந்த நொடி வேதபுரத்தில் சிம்மயாளிகள் வெறி கொண்டது

இங்கு இந்த சவப்பெட்டிகளோ அமானுஷ்யங்களுக்கு கட்டப்பட்டதை போல் தடதடவென ஆட அதனுள் ஏதேதோ சத்தம் எழுந்து லீலாவதியின் இதயத்தை நடுங்கச் செய்தது...

அந்த சவப்பெட்டிகளின் அருகில் நெருங்க முயன்றவரை தனிச்சையாய் அந்த சவப்பெட்டிகள் மூன்றையும் சுற்றி உருவான நீர் வளையம் தடுக்க அந்த நீர் வளையத்திற்குள்ளோ தீ வளையமொன்று கோரப்பசியில் கிடைப்பதை பிச்சு திங்கும் கழுகின் வேகத்துடன் பரபரவென்ற சத்தத்துடன் சுற்றி வளைத்திக்க அந்த சுற்று வட்டாரத்தையே சுற்றி வளைத்த காற்றின் வளையமொன்றுக்குள் மாத்திரம் புயல் போல் காற்று வீசி அந்த இடத்தையே இரணகளமாக்கத் தொடங்கியிருந்தது...

லீலாவதி : இறைவனே... என் நிகழ்கிறதிங்கு.. இந்த கன்னாடி சவப்பெட்டிகள் இத்தனை இரணகளத்திலும் எவ்வாறு வீற்றிருக்கும் இடத்தினை விட்டு அசையாதிருக்கிறது... இது ஆபத்திற்கான அறிகுறியா.. என் விழைய காத்திருக்கிறது.. பேராபத்தை போலுள்ளதே என பிதற்றியவருக்கு தெரியவில்லை தீ வளையத்தை சுற்றி வளைத்த நீர் வளையம் அந்த இரணகளத்தில் எவரையும் காயப்படுத்தி விட கூடாதென்பதற்காவே உருவானதென்று

சித்தார்த்தின் சினத்தை ருத்ராக்ஷ் ஆதியன்த் மட்டுப்படுத்த முயற்சிக்கையில் இங்கு நிலமை முன்பிற்கு இருந்த புயல் வேகத்தில் சற்று குறைய வேதபுரத்தில் சிம்மயாளிகள் ஏதோ கண் விழித்தால் நாளையே இருக்காது என கனவு கண்டதை போல் சஹாத்திய சூரர்களை தங்களை நெருங்க விடாமல் உறுமி அலையனுப்பி அவர்களை அழுந்தத் தள்ளியது

விதிர்விதிர்த்து போய் நின்றிருந்த லீலாவதி திடீரென அனைத்தும் பழைய நிலைக்கு திரும்புவதை கண்கள் விரிய ஆச்சர்யத்தில் காண மெதுமெதுவாய் சுருங்கிய அந்த காற்று வளையம் நீர் மற்றும் தீ வளையத்துடன் சுருங்கி அந்த சவப்பெட்டிகளுடனே ஒடுங்கியது...

அதே நேரம் சிம்மயாளிகள் மூர்ச்சை நிலையை தழுவ சித்தார்த் சரிந்து விழுந்திருந்தான்...

திக் திக் என மெதுவாய் துடித்த இதயத்தின் ஓசையில் அதிர்ச்சிகளிவ் இருந்து வெளி வந்து தன்னை சுற்றி நோக்கினார் லீலாவதி.. புயலுக்கு முன் அமைதி என கேட்டது போய் புயலுக்கு பின் அமைதி என்பதை அப்போது தான் கண்டார் போலும்..

அப்படி ஒரு நிசப்தம் நிலவிய அந்த பெரும் சுற்றளவை கண்டவாறு அந்தச் சவப்பெட்டிகளை நோக்கியவரை அந்தச் சவப்பெட்டிகளை சுற்றி இப்போது காய்ந்து கருத்து சாம்பல் மீந்திருந்த வளையம் தன் புறம் இழுத்தது..

அந்த சாம்பலின் அருகில் மெதுவாய் நகர்ந்து சென்று அதை விரலினால் வருடி பார்த்தார்... மனம் சொல்லேனா துயர் ஒன்றுக்குள் நிறைய தொடங்கியதை அறிந்து அதற்கு மேலும் அங்கு நில்லாமல் யட்சினிகளை காண சென்றார்...

ஆனால் வழியிலே யட்சினிகளின் அறையை என்றுமில்லாது பல துஷ்ரிகள் சூழ்ந்திருந்தது.. அதற்கு காரணம் யட்சினிகளின் அறையிலிருந்து மெல்லிய ஒலியில் வெளியேறி கொண்டிருந்த ஒரு ஓசை தான்... அது நித்யா அழும் ஓசை என அறிந்த தாயின் மனம் தவிதவிக்க வேறு வழியின்றி தப்பிக்க வழி கிடைத்தும் அங்கிருந்து மீண்டும் தன் சிறைக்கே திரும்பினார்..

லீலாவதியின் சிந்தனையெல்லாம் இன்னும் நேற்றைய நினைவிலே தான் இருந்தது.. அந்த நிகழ்வு அவருக்கு ஏதோ உண்மையை உணர்த்தவே நடந்ததை போலிருந்தாலும் அவ்வுண்மை யாதென கண்டறிய இயலா நினையிலிருந்தார்...

நித்யாவை நோக்கி தன் காலடியை எடுத்து வைத்த நித்ரா சட்டென கதவு திறக்கும் ஓசையில் இரண்டடி பின் நகர சில நாட்களாய் காணாமல் போயிருந்த சாம்பரா காட்சி கொடுத்தாள்...

ஆனால் அது புதிய அதிசயமொன்றும் இல்லை...எப்பொழுதும் போல கடுகடுக்கும் முகத்தில் ஏதோ கூடுதலாய் கடுகு மிளகாய் போட்டு தாளித்ததை போல் பச்சை மிளகாய் தின்று காதிலிருந்து புகை வராத குறையாக நின்றிருந்தாள்...

கயல் : வாங்க டி சாப்டலாம் என கூலாய் அருகிலிருந்தவள்களிடம் கூறிவிட்டு ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்த கயல் அவள் தட்டையில் சித்ரியா பரிமாறிய ஏதோ பல வண்ணம் கலந்த உணவை கண்கள் நிறைந்த ஆர்வத்துடன் காண அதில் மண்ணை அள்ளி போடுவதை போல் கத்தினாள் சாம்பரா

சாம்பரா : ஊன் கேட்கிறதா ஊன்.. எச்ச மடி அடிமை உமக்கு அரசவை உணவு கூடத்தில் ஊன் கேட்கிறதா.. எழுவாயடி உமது கதிரையிலிருந்து என கத்தியதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல் அவளை கண்டு கொள்ளாமல் கயலுக்கு அருகில் அமர்ந்திருந்த சந்தியா

சந்தியா : வேதி பேபி.. இது என்ன கலர்ஃபுலா இருக்கு.. இங்க மீன் வருவல்லாம் கிடைக்காதா... என ஏதோ மெனுவை கொடுத்ததை போல் வேதித்யாவை பார்த்து கேட்க அவளின் அடை மொழியில் புரியவில்லை என்றாலும் லேசாய் சிரித்த வேதித்யா பின் மீன் வருவல் என கூறியதை கேட்டு பதட்டத்துடன் ஏதோ கூற வர அதற்கு முன்

நித்ரா : பாம்பு ஃப்ரை வேணா கிடைக்கும் டி சாப்புட்ரியா என நிமிர்ந்தும் பாராமல் அவளுக்கு சித்ரியா பரிமாறிய உணவை வாயில் எடுத்து வைத்து இரசித்து விழுங்கி விட்டு கேட்டாள்...

யட்சினிகளின் முகத்தில் அவளின் பதிலில் மெல்லிய புன்னகையை படர விட நித்யாவும் மூக்கை உறிஞ்சியபடி " யார்ரா நம்ம தங்கச்சிக்கே டஃப் கொடுத்த வாயாடி " என நித்ராவை நிமிர்ந்து பார்த்தாள்...

வேதித்யா : அய்யகோ சந்தியா.. மீன் வருவலென நீவிர் பறைந்ததை ஆழிலோகத்தவர் செவி மடுத்தால் அவ்வளவே

மாயா : ஏன் அவங்கள்ளாம் வந்து இருக்குர எல்லா மீனையும் அள்ளீட்டு போய்டுவாங்களா என அதிர்ச்சியாய் கேட்க இதில் அதித்தி அடக்க மாட்டாமல் சிரித்தே விட்டாள்...

எழில் : அடடடடா... என்ன மாயா.. அழிலோகத்தவர்களுக்கு நீவிர் மீன்களை வருத்து உண்ண கேட்கிறீர் என தெரிந்தால் நம்மை வருத்து ஊனாக்கி விடுவார்கள் என விளக்கமளிக்க சந்தியாவும் மாயாவும் கொட்ட கொட்ட முளிக்க அதை கண்டு

இக்ஷி : இதுக்கு தான் தானா வம்ப வெலக்குடுத்து வாங்க கூடாதுங்குரது என அவள்களுக்கு பழிப்பு காட்டியபடி அவள் தட்டையில் பரிமாறப்பட்ட இனிப்பான ஏதோ ஒரு உருண்டையை இரசித்து உண்டாள்...

இவ்வளவு நேரமும் ஒரு ஜீவி இவள்களை முறைத்து கொண்டிருப்பதை காணாமல் இவ்வளவு சாதாரணமாய் இருப்பவர்களை கண்டு யட்சினிகளின் மனதில் ஏதோ ஒரு பரவசமெழ அவர்களும் சாம்பராவை கண்டும் காணாமல் அவர்களின் கதிரையில் அமர்ந்தனர்...

எழில் அவர்களுக்கு பரிமாறச் சென்றாள்...

சாம்பரா : பணிப்பெண் நீ... நீ கூட எம்மை அவமதிக்கிறாய் அல்லவா... அடியேன் உமக்கு அறுசுவை உணவு கேட்கிறதா... என சட்டென இக்ஷி முழுதாய் அபேஸ் செய்யப் பார்த்த அந்த இனிப்பு உருண்டையை வாங்கி தூக்கி எறிய இக்ஷி பொங்கி எழுந்து விட்டாள்...

இக்ஷி : பக்கி புடிங்கி திண்டாலாவது சரிங்கலாம்... புடிங்கி தூக்கி ஏறியிர.. உனக்கு சோறோட அறும தெரியுமா டி...

சாம்பரா : யாரை டி பக்கி என்கிறாய்... யான் யாரென்பதை அறிவாயோ .. என இக்ஷியை அறைய கை ஓங்கியவளை

மதி : வாய் மேல போட்டேன்னு வை... நீ யாருன்னு உனக்கே தெரியாம தான் என் சகோதரியோட உருண்டைய தூக்கி எறிஞ்சியா என அவள் கேட்ட கேள்வியை சற்று வேறு விதமாய் புரிந்து கொண்டு மதி பளிச்சென ஒரு அறை விட்டாள்...

சாம்பரா : எவ்வளவு தைரியமிருந்தால்.. என கத்தி கொண்டே மீண்டும் ஆக்ரோஷமாய் அடிக்க வந்தவளை இக்ஷி பிடித்துத் தள்ளி விட

நந்தினி : வந்து சாப்டுங்க டி.. அது எதாவது பன்னீட்டு போகுது ... சாப்பாட்ட முன்னாடி வச்சிக்கிட்டு நாம அத கவனிக்காம விட்டா ஃபூடி கங்குங்குர நம்ம கூட்டத்தோட பேரு என்னத்துக்கு ஆகுரது என இருவரையும் இழுத்து வந்து அமர வைத்தாள்...

சினம் தலைக்கேற எழுந்த சாம்பரா அவளது கரத்தை உயர்த்தவும் அவளது கூரான விரல்களில் வெள்ளி துகள்காள் சுழல தொடங்கின..

சாம்பரா : வெள்ளி வேத்திரம் அணிந்த மகா மாயையிவளையா தாக்கினீர்... உம்மை தண்டிக்காது விடேனடி என விரல்களை மடக்கி இக்ஷி மதி புறம் வீசினாள்...

இக்ஷி அவள் வீசிய வேகத்தில் சற்று பின் நகர அவளை முழுதாய் சாம்பராவின் வெள்ளி சக்தி ஆக்ரமிக்கும் முன் சாம்பரா வலியினால் அலரத் தொடங்கினாள்...

இக்ஷியை கீழே விழும் முன் பிடித்திழுத்த மதியும் மற்றவர்களும் நிமிர்ந்து நோக்க அவர்களுக்கு நேரெதிரே அமர்ந்திருந்த அதித்தியின் வெந்நிறக் கண்கள் சாம்பராவை நோக்கிக் கொண்டிருந்தன

அதித்தி : கூற வந்ததை கூறுவதை விடுத்து உமக்கு அவர்களை தண்டிக்க எவ்வொரு அனுமதியும் அன்று சாம்பரா.. என பொருமையாய் அதே நேரம் அழுத்தமாய் கூறியவளை கண்டு நரநரவென பல்லை கடித்தாள் சாம்பரா

சாம்பராவின் உடலை சுற்றியிருக்கும் காற்றில் மிதந்த கண்ணிற்கெட்டா அதித்தியின் சக்தி ஒரு கயிறை போல் அவளை இறுக்கி கொண்டிருந்தது...

சாம்பரா : இதற்குள் தலையிட்டு வீண் செயல் புரியாதே அதித்திக்கா என்றவளின் மீதிருந்த அதித்தியின் பார்வை இன்னும் கூராக சாம்பராவின் உடலை இறுக்கி கொண்டிருந்த இறுக்கம் அதிகரித்து அவள் இன்னும் அலரினாள்...

அதித்தி : வீண்விரயம் வேண்டா என யான் பறைந்ததை கவனித்தாயன்றோ.. வந்த நோக்கத்தை மட்டும் கூறு

சாம்பரா : அஹ்.. ஏய் நேற்றைய இரவில் எமது அமைச்சன்களை ஏன்ன டி செய்தீர்கள் என அதித்தியிடம் பேசி இன்னும் வாங்கி கட்டிக் கொள்ள விரும்பாமல் பஞ்சலோக விந்தைகளை நோக்கி சீர அவர்கள் எவரும் இவளை கண்டு கொண்டதை போல் தெரியவில்லை...

ஆருண்யா அவர்களை உண்ண கூறி வேதித்யாவிடம் கண் காட்டவும் வேதித்யாவும் அவர்களை உண்ணி கூறியிருந்தாள்...

பத்யரூனா : சாம்பரா... கூற வருவதை விளக்கி கூறு

சாம்பரா : ஹோ நீரும் இங்கு தான் உள்ளீரா...சரி தான்... நேற்றைய தினம் யானிங்கில்லாத வேளையில் எவர் கோட்டைக்குள் நுழைந்து அமைச்சன்களை மூர்ச்சையாக்கியது

வைஷு : மூர்ச்சைனா போய் சேந்துட்டாங்களா என ஒரு நொடி நிமிர்ந்து கேட்டவளின் கூற்று யட்சினிகளை தவிர்த்து பத்யரூனாவிற்கோ இளவரசிகளுக்கோ ஏன் சாம்பராவிற்குமே புரியவில்லை...

சாம்பரா : ஏய் தமிழில் பறையும் நீ எமக்கு புரியும் படி பறை என எகிரவும் அதித்தி அவளை அடக்க

நவ்யா : நீ சொல்றதெதுவுமே தான் எங்களுக்கு புரியல... உன்ன மாரி என்னன்னே தெரியாத பறை பறைங்குர வார்த்தைய நாங்க உன் கிட்ட சொன்னோமா என அவளை புருவமுயர்த்தி சிரிக்காமல் சீரியசாய் கேட்க மெலிதாய் புன்னகைத்த ஆருண்யா

ஆருண்யா : மூர்ச்சை எனில் மயங்கியுள்ளனர் என்பது பொருள் என விளக்க அவளுக்கு தலையசைத்த வைஷு அவள் உணவில் இப்போது காண்ணானாள்...

சாம்பரா : எம் வினாவிற்கு பதிலளிக்க இயலுமா இயலாதா நேற்றைய தினம் யாவர் இங்கு வந்தது என அவள் காலை தரையில் ஓங்கி மிதிக்கவும் அந்த உணவு மேஜை ஒரு முறை ஆடி விட்டு நிலையடைய இப்போது நித்யாவும் சாம்பராவை நோக்கினாள்...

கயல் : தெரிஞ்சிக்கிட்டு...

நித்யா : அறிந்து கொண்டதும் மௌனமாகிடுவாயா... பின் குதிக்க மாட்டாயே ... அறிந்தால் நீ ஐயத்தினால் வாய் திறவக்கூட மாட்டாய் என கயலை இடை வெட்டி இவள் அவளை பார்த்து மிடுக்காய் கூறினாள்...

சாம்பரா : ஹோ அவ்வாறெனில் இதில் உமக்கும் பங்குள்ளதா நித்யரோஹினி .. என்ன மீண்டும் நீ தப்பிக்க முயன்றாயோ.. அதற்கு இவர்களுள் எவரேனும் முயற்சி செய்தனரோ.. யார் அந்த கயவர் .. ஹா யான் எதற்காய் ஐயமெய்திட வேண்டும் ன்க மற்ற இரு யட்சினிகளும் அவள் வந்தது இரட்சகன்களில் ஒருவரென கூறுவாள் என எதிர் பார்த்திருக்க நித்யாவின் பதில் அவளையும் உடன் மற்ற நாயகிகளையும் சாம்பராவையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

நித்யா : நேற்று கோட்டைக்குள் வந்தது எம் மணாள... என அவளை முழுதாய் கூட முடிக்க விடாமல்

சாம்பரா : மணாளனா... இதென்ன டி புதிய புதினம் எழுதுகிறாயா ஆஆஆ என கேட்டு கொண்டிருக்கும் பொழுதே அதித்தி அவளை முறைக்க சாம்பரா நொடிந்து கீழே விழுந்தாள்...

அதித்தி : எம் சகோதரியிடம் தரைகுறைவாய் உரையாடி நாவை இழந்து விடாதே என்ற அதித்தியின் கர்ஜனையில் தோழிகளும் இவர்களை ஓரக்கண்ணால் கவனிக்க தொடங்கினர்...

நித்யா : ஏன் அவசரம் சாம்பரா.. எம் மணாளன் ஆரித்தும் அவரின் சகோதரர்களும் தான்... இன்னும் தெளிவாய் உமக்கு கூர வேண்டுமெனில் நேற்று இங்ஙனம் வந்தது பஞ்சலோக சூரர்களாகிய பராக்ரம வீரன்கள் மற்றும் இரட்சகன்கள் என நிதானமாய் கூறியவளின் பதிலில் இங்குள்ள அனைவருடன் உள் நிகழும் அனைத்தையும் மறைவாய் பார்த்து கொண்டிருந்த சித்தார்த் மற்றும் ஆதவும் அதிர்ந்தனர்...

ஆருண்யா மற்றும் அதித்தி வந்தது ஒருவர் மட்டுமல்ல மொத்த பஞ்சலோக சூரர்களும் வந்திருக்கின்றனரென அதிர... ஆதவும் பஞ்சலோக விந்தைகளும் பத்யரூனாவும் இவள் எப்படி அறிந்தாள் என அதிர இளவரசிகள் மூவரும் நம் வாழ்கைக்கு விடிவு காலம் வர உள்ளதென வந்தது நமது உறவுகளென தெரியாமலே ஆனந்தமாய் அதிர...  சித்தார்த் தன்னை தவிர்த்து வேறெவருடனும் அவள் நேருக்கு நேர் கூட நிற்காததால் தன்னை தான் அவள் மணாளன் என குறிப்பிடுகிறாளா என்றும் தெரியாமல் அவளின் ஆரித் என்ற அழைப்பில் சுற்றம் மறந்த மனதை நினைத்து அதிர்ந்திருந்தான்...

நித்யா : விடை அளித்து விட்டேனல்லவா.. இனி உமக்கு இங்ஙனம் பணியன்று.. நீவிர் வெளியே செல்லலாம் என கூறிவிட்டு அதித்தியை பார்க்க நித்யாவின் பார்வை அர்த்தம் புரிந்ததால் அதித்தி அவளை விடுவித்தாள்...

இருந்த அதிர்ச்சியில் திக்கு முக்காடி விட்டால் போதுமென அங்கிருந்து ஓடினாள் சாம்பரா

அரை மணி நேரத்திற்கு முன்பு

ஓய்வறையிலிருந்த சித்தார்த் தன் நினைவுகள் அனைத்தையும் அசைப்போட்டப் பின் அவன் விழிகளை திறந்தான்...

கருமை சூழவும் அந்த கட்டினை பிரித்தவன் மெதுவாய் எழுந்து அமர்ந்து அப்போதே வெளியே வந்தான்...

அனைவரும் அப்போதே அவனிடம் நடந்ததை பற்றி பேச வர முதலில் அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டுமென எண்ணிய சித்தார்த்

சித்தார்த் : நா கோட்டைக்கு போறேன் யாரு என் கூட வரீங்க என கேட்க அனைவரும் அவனை பதிலின்றி தான் பார்த்து கொண்டிருந்தனர்...

ஏன் செல்கிறேன் எதற்காக செல்கிறேனென்றே கூறாமல் செல்ல போனவனை

ஆதவ் : டேய் நா வரேன் டா என சட்டென தடுத்தான்

சித்தார்த் : அப்ரம் ஏன் டா இவ்ளோ நேரம் அமைதியா இருந்த

ஆதவ் : ஏன் போற ஏது போறன்னு சொல்லனும்ல ... போறேன்னு சொல்லாம கொள்ளாம நீ போற ...

சித்தார்த் : சரி சரி வா... என அவனை இழுத்து கொண்டு கோட்டைக்கு வந்திருந்தான்...

தங்களின் தங்கைகள் அனைவரும் அந்த உணவு மேஜையில் இருப்பதை கண்டவர்கள் அங்கிருந்து நகர பார்க்க எண்ணிய நேரம் தான் சாம்பரா உள்ளே நுழைந்தாள்...

நாயகிகள் அவளை சற்றும் கண்டு கொள்ளாததை கண்டு சிரித்து விட்டு அங்கிருந்து நகர எண்ணியவர்களை மீண்டும் தடுத்தது சாம்பராவின் கோப சீரலும் அதித்தியின் மிடுக்கான கர்ஜனையும்

அதன் பின் அங்கு நடந்த அனைத்தையும் இவர்கள் கவனிக்க அப்போதே அச்சகோதரிகள் மூவர் அக்கோட்டையுள் உள்ளதை அறிந்து கொண்டனர்...

சித்தார்த் நேற்று நேரிலும் தான் கனவிலும் காணும் அவள் அமர்ந்திருப்பதையும் கவனித்தான்...

அதன் பின் தான் நாமே அறிவோமே...

ஆதவ் : நாம எதுக்கு டா இங்க வந்தோம்...

சித்தார்த் : ஹ்ம்ம்ம் ஐலாவ தேடத்தான்.. என பலத்த யோசனை ஒன்றின் பின் பாதி உண்மையை மட்டும் கூறினான்...

ஆதவ் : ஹோ சரி அப்போ நா அப்டிக்கா போறேன்.. நீ இப்டிக்கா போ என அவனுக்கு பாதையை காட்டி விட்டு சென்றான்..

ஆதவ் காட்டிய பாதையில் சென்ற சித்தார்த்தின் கால்கள் எதற்சையாய் போய் நின்றது அந்த மையப்பகுதியில்

அதே நேரம்... வளரி பாட்டி கூறியவைகளை தன் தோழர்களிடமும் கூற வாய் திறந்த துருவ் " துரு கண்ணா " என்ற அனுவின் அழைப்பை கேட்டு " அத்த "என்றான்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... நேத்து யூடி போட முடியல சாரி... இன்னைக்கு டபுல் யூடி தனி தனியா குடுக்காம சேத்தே குடுத்துட்டேன்...ஈஈஈ என்ஜாய்... நாளைக்கு இன்னோறு யூடி கண்டிப்பா உண்டு... ஓக்கே குட் நைட்... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro