மாயம் -57
துஷ்ரிகளின் சத்தத்தில் சட்டென எழுந்த சித்தார்த் நித்யா விழும் முன் அவளை பிடித்த படியே அந்த துஷ்ரியின் கண்களை கண்டான்...
நொடி கணக்கில் அதன் சத்தம் அவனது சக்திகளால் அடங்கிட அவன் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த துஷ்ரியை தன் வாளால் ஒரே சீவில் மூர்ச்சையாக்கினான்...
ஆயினும் துஷ்ரிகளின் சத்தம் எழுவதை கண்டு நித்யா துஷ்ரந்களோ அல்ல அமைச்சன்களோ அங்கு வந்து விடுவார்காளோ என மிரள அவளது மனமோ தன் ஆரித் அருகில் இருந்தால் மரணமே வந்தாலும் நான் எதிர்ப்பேன் என போர் கொடி தூக்கி நின்றது...
ஆனால் உண்மையில் அது துஷ்ரிகளின் சத்தமில்ல... கோட்டையின் நாழா புறத்தையும் ஆக்ரமித்த ராகவ் ராம் கார்த்திக் மற்றும் அஜயின் சத்தம்...
முதலில் அந்த துஷ்ரி கத்த தொடங்கவும் எங்கு எதாவது ஒரு துஷ்ரியையை எழுப்பி அது அரவம் எழுப்ப தொடங்கி விட்டால் முன்பே திட்டம் தீட்டியதை போல் ஓநாய் உருவான நாயகன்கள் நாழ்வர் துஷ்ரிகளின் ஓசையை எழுப்பினர்...
இந்த ஓசை அப்படியே துஷ்ரிகளின் ஓசையை ஒத்திருப்பதால் மற்றைய துஷ்ரிகள் சத்தத்தை எழுப்பாது... அத்துடன் சத்தமெழுப்புவது துஷ்ரிகள் இல்லாததால் துஷ்ரந்களும் எழாது.. துஷ்ரந்களுக்கு எழும் வரை பார்வை கிடையாது.. அவைகள் துஷ்ரிகளின் ஓசையினால் மட்டும் தான் எழுவர்... அதுவே நம் நாயகன்களுக்கு சாதாகமாய் அமைந்ததால் மித்ரன் மிதுன் இருவரும் நாயகிகளின் அறை வீற்றிருக்கும் திசை நோக்கி செல்ல துருவன் மற்றும் அருண் யாவரும் அறியாமல் பாதாள சிறையுள் நுழைந்தனர்...
அஷ்வித் கார்த்திக்குடன் ஆதவ் ராகவுடனும் வருண் அஜயுடனும் சென்று அவர்களை எந்த ஒரு ஆபத்தும் நெருங்காத படி பார்த்து கொண்டனர்...
நித்யா : தா..ம் இங்கிருந்து உடனே செல்ல வே..ண்டு..ம்.. இங்ஙனம் வீற்றிரு..ப்பது த..மக்..கு ஆ..ஆபத்து என திக்கித் தினறி கூற அவளது குரலில் அங்கிருந்த படியே தன் தோழன்கள் திட்டத்தை சரியாய் செயல் படுத்துவதை பார்த்து கொண்டிருந்த சித்தார்த் திரும்பி பார்த்தான்...
சித்தார்த் : இனி இத்தகைய உயரமான கட்டிடங்கள் மீதிருக்கையில் சுவரருகில் எச்சரிக்கையுடன் இருங்கள் என பொதுவாய் கூறி விட்டு அங்கிருந்து உடனே தாவி குதித்தான்...
நித்யா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை... அவளுக்கு அவனை நினைவிருக்கையில் அவனுக்கு அவளை ஏன் நினைவில்லை என அவளின் மனம் கேட்க அவன் கண்டும் காணாததை போல் ஏதோ மாற்றானுடன் பேசி விட்டு செல்வதை போல் சென்றது இன்னும் தவிப்பை கூட்டியது..
நித்யாவிற்கு அவனின் நிலை எதுவும் தெரியாது... இவள் அறிந்த எதையும் அவன் இன்று வரை அறியவில்லை... அறிய நேரவுமில்லை... இவ்வாறிருக்கையில் அவன் இவளை அடையாளங்காணுவதை போல் எதிர் நோக்கியது தவறென அவளுக்கு புரியவும் இல்லை...
நித்யா : இத்துனை நாட்கள் எவனுக்காய் காத்திருந்தேனோ அவன் என்னை கண்டும் தெரியாதவர் போல் பேசி விட்டு செல்கிறானே... இதற்காய் தான் என் உயிரை பிடித்து வைத்திருக்கிறேனா... எமது வாழ்கையின் பயன் தான் என்ன... காக்க வருவான் என எண்ணி காத்திருந்தவளை கை விட்டல்லவா செல்கிறான் என கண்ணீருடன் கதறியவளுக்கு இப்போதும் அவன் தான் அவளை காத்தான் என்பது புரியாமல் போக அந்த நேரமே ஆருண்யா அங்கு சகோதரியை தேடி வந்தாள்...
பாதாள சிறைக்குள் ஆருண்யாவின் குரலை கேட்டு குழம்பிய துருவ் யாரந்த நித்தி... யாரிந்த பெண் என குழம்பியபடி முன் சென்ற அருணை பின் தொடர்ந்தான்...
பாதாள சிறையில் முன்பு கயல் இருந்த அதே சிறை பகுதியை கடக்க இருந்தவனின் கால்கள் சட்டென தடம் மறந்ததை போல் சமைந்து நிற்க அருண் இவன் பின் தொடராததை காணாமல் முன்னேறி சென்றிருந்தான்...
அந்த பகுதியினில் நுழைந்த துருவ் அதே சிறையின் இரும்பு கூண்டு போன்ற கதவினை மெதுவாய் தள்ள அது வெளியிட்ட க்ரீச்சிடும் சத்தத்தில் அருண் இவனை திரும்பி நோக்கினான்...
அங்கிருந்து கத்த இயலாததால் இவனிடம் சத்தமெழுப்பாது ஓடி வந்த அருண் அவன் ஒரு சிறையை கண்டபடி இருப்பதை கண்டு துருவனின் தோளை தொட்டு திருப்பினான்...
அப்போது தான் துருவின் கண்களில் அந்த காகிதம் பட்டது.. சுவரோடு ஒட்டியபடி தண்ணீரில் நனைந்திருந்த அக்காகிதத்தை பிரித்தவன் அதில் ஏதோ கிருக்கியிருந்ததை கண்டு பார்வையை கூர்மையாக்க அவன் அதை தெளிவாய் காணும் முன் அருணும் துருவும் ஒரு தும்மலில் கலைந்தனர்...
அருண் சடாரென திரும்பி பார்க்க இவர்களின் முன் ஒரு துஷ்ரி மூக்கை சுருக்கி ஹச்சு ஹச்சு என தும்மிக் கொண்டிருந்தது..
அருண் : பா.. என ஏதோ கூற வந்தனின் வாயை உடடைடே அடைத்த துருவ்
துருவ் : மெதுவா சொல்லு டா... என ஹஸ்கி வாய்ச்சில் கூற...
அருண் : இல்லடா பாவம்.. பேஞ்ச மழைல ஜலதோசம் புடிச்சிடுச்சு போலன்னு சொல்ல வந்தேன் என கூறவும் அவனை வெட்டவா குத்தவா என்பதை போல் முறைத்தான் துருவ்...
துருவ் : ஏன் டா எனக்குன்னே வந்து சேருரீங்க... எல்லாம் என் மாமாக்கள சொல்லனும் வா டா என் கூட என அதே மெல்லிய குரலில் சீரி விட்டு அந்த துஷ்ரி மறு புறம் திரும்பியதும் அருணை இழுத்து கொண்டு சென்றான்...
முன்னேறி மெதுவாய் சென்று கொண்டிருந்த துருவ் ஒரு குறிப்பிட்ட சிறையின் கம்பிகளில் பல வெள்ளி துகள் இருப்பதை கண்டு நடையை நிறுத்தினான்...
அவன் பின் வந்திருந்த அருண் சற்று தலையை நீட்டி அந்த சிறைக்குள் எட்டி பார்க்க
துருவ் : பாட்டி என அழைத்த துருவின் எதிர்பார்ப்பை பொய்க்காமல் எழுந்து வந்தார் வளரி பாட்டி
அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் மதிலின் மீது கூடிட இரட்சகன்கள் விதுஷுடன் இளவரசிகளை பார்த்து விட்டு வந்தனர்... அந்த நேரம் எதற்சையாய் கோட்டையின் மொத்த வளாகத்திற்கும் மையமான பகுதியில் வானளவிற்கு ஒரு பெரும் நாகத்தின் சிலை இருப்பதை துருவ் காண அதை தானும் கண்ட சித்தார்த் அதற்கு கீழ் ஏதோ யாகம் நிகழ்த்த தயார் செய்ததை போல் ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதை கண்டு அவன் கண்களை கூராக்கினான்...
அந்த சிலையிற்கு கீழே மூன்று சவப்பெட்டிகள் இருந்ததை கண்டவனுக்கு காரணமின்றி மனதில் ஒரு வெறுமை படர்ந்தது... ஆதியன்த் அவனை பிடித்து உலுக்கவும் அவனை ஏறிட்ட சித்தர்த்தின் கண்கள் சிகப்பாய் மாறியிருக்க அனைவருமாய் அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து யோக்யா அவர்களுக்களித்த அந்த இருப்பிடத்திற்குள் பதுங்கினர்...
ஆதியன்த் அனைவரையும் எச்சரிக்க முணைந்த நேரம் ஒரு அறையிலிருந்து பலத்த சத்தமொன்று வெளியானது... இவ்வாறு அமைதியாய் சென்ற நேரம் திடீரென மாறவும் அனைவரும் பதறியடித்து அங்கு செல்ல அங்கோ கொழுந்து விட்டு எரிந்த தீயின் நடுவில் கோரமாய் நின்று கொண்டிருந்தான் சித்தார்த்...
சித்தார்த்தின் நாடி நரம்புகள் புடைத்து உடலெங்கிலும் சிகப்பு நிற நரம்புகள் பாய்ந்து அவன் முகத்திலும் செண்ணிற நரம்புகள் தெரிந்தது... அவன் விழிகளோ சிகப்பும் ஒரு வித ஊதா நிறமும் கலந்த நிறத்தில் ஒளிர்ந்தது...
அவனால் சினத்தை அடக்க முடியவில்லையா அல்ல கோவத்தை காட்டியே ஆக வேண்டுமென்ற நிலையிலிருக்கிறானா என்று தெரியாமல் அனைவரும் விதிர் விதிர்த்து நிற்க ருமேஷ் மற்றும் விதுஷ் சித்தார்த்தின் இந்நிலையை கண்டதில் அதிர்ந்து தான் போயிருந்தனர்...
சித்தார்த்தை இவ்வளவு மூர்க்கமாய் அவர்கள் கண்டதில்லை... அவ்வளவு மூர்க்கமாகவும் அனுமதித்ததில்லை.. ஆனால் இன்று நிலை கைமீறி போயிருக்க செய்வதறியாது நின்ற நேரம் சித்தார்த்தின் சகோதரன்கள் களமிறங்கினர்...
அந்நேரத்திற்கு அவர்களால் தான் அவனை அடக்கவும் முடியும்... மற்ற எவராலும் தீயை அடக்க முடியாதல்லவா...
ருத்ராக்ஷ் முதலில் அந்த தீயிற்குள் இறங்கினான்... அவனை அருகில் கண்டதும் சித்தார்த்தின் கண்கள் இன்னும் சிவப்பேற அவனுள் ஏதோ ஒன்று வெறியுடன் உறுமதை போலிருந்தது மற்றவர்களுக்கு...
அற்புத கோட்டை
ரக்ஷவின் கூற்றில் அனைவரும் அவனை நோக்க என்ன ஏதென்று ரக்ஷவ் வாய் திறக்கும் முன் அந்த கோட்டையே அதிர்ந்தடங்கியது சிம்மயாளிகளின் குரோதமான உறுமல்களால்
ரக்ஷவ் அந்த உறுமலில் அரண்டிருந்தான்... சிம்மயாளிகளின் இத்தகைய கோரமான அரவத்தை கேட்டிராத சஹாத்திய சூரர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாக மருத்துவ நாயன்கள் உடனே கதவை திறந்து கொண்டு ஆயுத கள அறையை நோக்கி ஓடினர்... அவர்களை பின் தொடர்ந்து படை வீர நாயகன்களும் ஓட அவர்களுள் இறுதியாய் வந்த சரண் மோகினி வளவன் ரக்ஷவ் வெளியேறும் முன் அவ்வறை கதவை அறைந்து மூடி வெளியே தாழ்ப்பாளிட்டான்..
சரண் : உள்ளேயே இருங்க வெளிய வராதீங்க என உரக்க கத்தியவன் மாடிக்கு ஓட அங்கு கண்ட காட்சியில் உறைந்து போனான்...
அங்கோ யுகி நெருப்பால் சூழ்ந்து கண்கள் முதல் முறையாய் செக்கசெவேளென சிவந்து மூர்க்கமாய் உறுமி கொண்டிருந்தது... அகி யுகிக்கு குறைவின்றி அதே கோவத்துடன் கண்கள் நீல நிறத்தில் ஒளிர உடல் முழுவதையும் நீர் சுழல உறுமி கொண்டிருந்தது....
அவர்களின் பின் விகி இன்னும் குரோதமாய் புயல் காற்றால் அனைத்தையும் தள்ளி விட்டபடி கண்கள் வெண்மையாய் ஒளிர்ந்து உறுமி கொண்டிருந்தது...
நம் நாயகன்களுக்கு இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் துளியும் தெரியவில்லை... அத்துடன் சிம்மயாளிகளின் கண்கள் தான் அதிகப்படியாய் அவர்களை அதிர்ச்சியாக்கியது...
எனெனில் சிம்மயாளிகளை அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாய் கண்டு வருகின்றனர்... இத்துனை வருடங்களில் அவைகளின் கண்களின் நிறம் அதன் இயல்பான பச்சை நிறத்தை விடுத்து ஏவல்களால் கட்டுப்படுத்த பட்டு கருமையாய் கூட கண்டிருக்கின்றனர் ஆனால் இப்படி கோவன்களின் ஆத்ம நிறத்தில் கண்டதில்லை...
சர்ப்பலோகத்தில் சித்தார்த்தின் கோவம் ஏறிக் கொண்டே இருக்க ருத்ராக்ஷ் மற்றும் ஆதியன்த் அவனை நெருங்கியும் கூட அவனால் கோவத்தை கட்டுப்படுத்த முடிந்தாலும் அவனுள் எழும் வேறு ஒன்றை கட்டுப்படுத்த முடியாமலிருக்க பராக்ரம வீரன்கள் பத்து பேரும் அம்மூவரையும் சுற்றி வளைத்தனர்...
துருவ் : பாய்ஸ் ரோர் என கத்தவும் பராக்ரம வீரன்கள் ஒரே நொடியில் அவரவரது மிருக உருவில் மாறி சித்தார்த்தை நோக்கி உறுமினர்... அந்த உறுமல்கள் அவ்வரண்மையை விட்டு வெளியேறாத படி அந்த அதிர்வுகளை தங்களின் சக்திகளால் மீண்டும் அரண்மனைக்குள்ளே தினித்தனர் இவர்கள் அனைவருக்கும் மேலே பறந்து கொண்டிருந்த பருந்து சகோதரர்கள்
அந்த உறுமல்களும் மேலிருந்து தன்னையே தாக்கும் அதிர்வுகளும் சித்தார்த்தை அடக்க முற்பட அவனோ மட்டுப்பட இயலாதவனாய் வெறி கொண்டு கத்தினான்...
ருத்ராக்ஷின் நீரும் ஆதியன்த்தின் புயலும் நொடி கணக்கில் சித்தார்த்தை சிறை வைக்க அவ்விரண்டும் பந்தை போல் மாறி சித்தார்த்தை முழுவதுமாய் மூடிய இவர்களின் பார்வையிலே அவன் அகப்படாமல் மறைந்ததும் பராக்ரம வீரன்களின் உறுமல் அதிகமானது...
சிம்மயாளிகளை அடக்க வழியறியாது பரிதவித்து நின்றிருந்த சஹாத்திய சூரர்கள் இனி மேலும் தாமதிப்பது நல்லதல்ல என அவர்களே களமிறங்கினர்...
ஒரே ஒரு அடி முன் வைத்த முகிலை தூக்கி வீசி எறிந்தது அகி.. முகில் கீழே விழும் முன் அவனை ரித்விக் ஓடி சென்று பிடித்து கொண்டான்...
சிம்மயாளிகள் மூன்றும் அதுகளின் அடி தொண்டையிலிருந்து அதிர்வெலுப்பி பலமாய் உறும அந்த அதிர்வலைகள் சஹாத்திய சூரர்களை பின் தள்ளியது
இவர்கள் எண்வரும் அந்த அதிர்வலையை தாண்டி முன்னேற முயற்சிக்க சிம்மயாளிகள் மீண்டும் மீண்டும் அதை அதிகரித்தது... சிம்மயாளிகளுக்கு சலைத்தவர்களா நம் சஹாத்திய சூரர்கள்...
அவர்களும் விடுவதாய் தெரியவில்லை... அஷ்வன்த் ஓரடி முன் வைத்தால் யுகியை நெருங்கியிருக்கலாம் என்னும் நிலையில் யுகி அவன் மீது பாய எத்தனிக்க அந்த இடைவேளையில் அஷ்வன்த் தன் நடையில் சட்டென வேகம் கொடுத்து யுகியின் பின் சென்றிருந்தான்...
அடுத்த நொடி அங்கு நிறைந்த ஒரு நீல நிற ஒளி சட்டென மறைய நாகனிகளின் " சிம்மயாளிகளே " என்ற கர்ஜனை சிம்மயாளிகளை ஒரு நிமிடத்திற்கும் குறைவான வேளை அமைதி படுத்தியது...
அந்த குறைவான நேரத்தில் சுவரில் இருந்த பிடியை ஓடி சென்று பிடித்திழுத்தான் அஷ்வன்த்... அவன் இழுத்த வேகத்திற்கு சிம்மயாளிகளை சுற்றி இரும்பால் ஆண பெரிய கூண்டொன்று படாரென வந்து விழுந்தது...
அந்த நீல நிற ஒளியிலிருந்து நீல கண்களுடன் திவ்யா வேகமாய் வெளியேறினாள்... அவளை பின் தொடர்ந்து கருநீல நிற கண்களுடன் அனுவும் வெள்ளை நிற கண்களுடன் ப்ரியாவும் வெளியேற அவர்களின் பின் யாளி வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து பதற்றத்துடன் வெளியே வந்தனர்...
அந்த கூண்டு தங்களை ஆக்ரமித்ததும் அம்மூன்றும் மீண்டும் வெறி கொண்டு அலர யுகி வாயால் தீயை கக்கி அந்த கூண்டை எரிக்க முணைய அக்கூண்டு அதற்கு அடங்கி வழி கொடுக்கவில்லை...
இவர்கள் வெளியிலிருந்த படி சிம்மயாளிகளை பார்த்து கொண்டிருக்க சட்டென சிம்மயாளிகள் மூன்றினை சுற்றியிருந்த மூன்று பஞ்ச புதங்களும் மெதுமெதுவாய் மறைந்து பச்சை நிற கண்கள் விளங்கிய சில நொடிகளிள் மயங்கி கீழே விழுந்தது...
சர்ப்பலோகத்தில் அந்த அறை முழுவதும் நிசப்தம் நிலவ அனைவரும் பெருமூச்சறிக்கும் சத்தமே தெளிவாய் கேட்டு கொண்டிருந்தது...
சித்தார்த் : ஐம் ஆல்ரைட் என்ற அவனின் அமைதியான குரலை கேட்டதும் பராக்ரம வீரன்கள் அவரவர் மனித உருவிற்கு திரும்ப பருந்து சகோதரர்கள் கீழ் இறங்இயதும் ருத்ராக்ஷ் மற்றும் ஆதியன்த் அவரவர் வளையத்தை உடைத்தனர்...
வலுவிழந்திருந்த சித்தார்த் கண்கள் மூடிய படி கீழே சரிய ருத்ராக்ஷும் ஆதியன்த்தும் அவனை தாங்கி பிடித்தனர்...
ஆதியன்த் : சித்து என்னாச்சு டா
சித்தார்த் : ஐம் ஆல்ரைட் அத்து.. என மீண்டும் அதையே கூறினான்...
அவன் கண்ணின் ஓரம் இரத்தம் வடிவதை வருண் கவனித்து உடனே அவனை வேறொரு அறைக்கு அப்புரப்படுத்த துரிதப்படுத்தி சிகிச்சையை தொடங்கினான்...
அந்த சிகிச்சை காலை வரை நீடிக்க மற்றவர்கள் சோர்வினால் உறக்கத்தில் தள்ளப்பட்டிருந்தனர்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... இது சடனா ஒரு2 ஹவர்ஸ் முன்னாடிலேந்து எழுத ஆரம்பிச்சது... நைட் யூடி எழுதுவேன்னு ஐடியாவே இல்ல... அதான் எடக்கு முடக்கா இருக்கு... சுமாரா இருந்தா அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க... அடுத்த யூடில மனேஜ் பன்னீடுறேன்... இதுக்கு மேல எழுதுனா இன்னைக்கு பப்போபிஷ் பன்ன முடியாது... அதான் குட்டி யூடி.. ஹோப் யு அண்டர்ஸ்ட்டண்... நாளைக்கு யூடி வர வாய்ப்பில்ல... நா ட்ரை பன்றேன்... ஏன்னா வட்டி ஏதோ ஆஃப்லைன் போகுதாம்... அதுக்கு தான்.. அப்டி எழுதுனா நா ப்ரத்திலிப்பில மட்டுமாவது போஸ்ட் பன்றேன்... நைட்குள்ள வட்டிலையும் போஜ்ட் பன்னீடுவேன்... ஓக்கே குட் நைட் டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro