Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 56

அற்புத கோட்டை

தர்மன் ஐயா கைதியை போல் சஹாத்திய சூரர்கள் முன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்... சேவனும் மயூரனும் தர்மன் ஐயாவை கேள்வியுடன் பார்த்தவாறு அமர்ந்திருக்க குருக்களை விட மனமில்லாது ரக்ஷவும் அங்கு தான் அமர்ந்திருந்தான்...

நாயகிகள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றிருந்தனர்... அற்புத கோட்டைக்கு வந்தே மூன்று நாட்களுக்கு மேலானதால் வீட்டையும் பரமாறிக்க வேண்டுமல்லவா...

நீலி ஒரு ஜன்னலருகில் அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்... பிறையோ யானையாளிகளுக்கு போக்குக் காட்டியவாறு அவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள்...

யானையாளிகளும் அவளுக்கு சலைக்காமல் மாறி மாறி பிடிக்கிறேனென அங்குமிங்கும் டங்கு டங்கென தாவிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பிறையை அஷ்வன்த்தின் யானையாளி பிடித்து விட்டது

பிறை தோல்வியை ஒத்து கொண்டதும் நீலியை தேடி வந்தாள்...

பிறை : ஏன்னானது நீலி அண்ணி.. தாம் ஏன் பஞ்சலோக சூரர்கள் விடைபெற்றது முதலிருந்து கவலையுற்றே இருக்கிறீர்...

நீலி : கவலையுறவில்லை பிறை அண்ணி.. குழப்பத்தில் வீற்றுள்ளேன்...

பிறை : யட்சினிகளை பற்றித் தானே...

நீலி : ஆம் அண்ணி.. இரட்சகன்களுக்கு அவர்களுக்காக அம்மூவர் காத்திருக்கின்ற விசனமே தெரியவில்லை... அதை அறிந்த மயூரன் தமையன் மற்றும் சேவன் கூட தர்மன் ஐயா யட்சினிகளை தான் குறிக்கின்றார் என்பதை அறிவிக்காது அமைதி காத்தது இன்னமும் எமது மனதை வாட்டுகிறது..

பிறை : தேவையின்றி உம்மையே குழப்பி கொள்ள வேண்டா அண்ணி.. சேவன் தமையனும் எமது துணைவரும் அமைதி காத்ததன் பின் ஏதேனும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும்.. அதுவே அவர்களை முடக்கியும் வைத்துள்ளது... விரைவிலே மெய்யை அவர்களினூடாகவே அறியலாம்...

நீலி : ஹ்ம் சரி பிறை அண்ணி என ஒரு மனதாய் சமாதானமானாள்...

அர்ஜுன் : தமது பதிலுக்காகவே காத்திருக்கிறோம் ஐயா.. ஷேஷ்வமலையின் உயிரின வம்ச குழந்தைகள் கடத்தப்பட்டதன் காரணம் என்ன

தர்மன் ஐயா : இதை முன்னமே தம்மிடம் தெரிவிக்காதிருந்ததற்கு எம்மை பொருத்தருளுங்கள் சூரரே..

அஷ்வன்த் : காலம் தாழ்ந்தப் பின் கடந்ததை எண்ணி பயனில்லை ஐயா.. மெய்யை தையை கூர்ந்து பறையுங்கள்..

[முக்கிய குறிப்பு : நன்கு கவனித்து வாசியுங்கள்.. மறந்து விட வேண்டாம்.. முக்கியமான பத்தி {Paragraph} ]

தர்மன் ஐயா : மூன்னொர் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்து வந்தது .. இயற்கையின் பிள்ளைகளாய் கருதப்படும் உயிரினங்களிலே முதல் பயன் வகிக்கும் குறிப்பிட்ட ஒரு சில உயிரினங்களின் பிறப்பில் அதன் ஜனித்தலை ஆணித்தரமாய் உயிரூட்ட தங்களைத் தானே அப்பாவி ஜீவிகள் சமர்பித்து ஊணாகும் (உணவாகும்).. யட்சினி சர்ப்ப வம்சத்தினர் மீண்டும் உயிர்த்த காலம் முதல் இன்று வரை ஷேஷ்வமலையில் அப்பாவி ஜீவிகளாய் கருதப்படும் உயிரின வம்சங்கள் பிறப்பெடுக்க துடங்கியது.. அதற்கு மெய்யான நோக்கத்தை என்(ன) வினை புரிந்தும் எம்மால் கண்டறிய இயலவில்லை...அக்காலத்திலே தாம் அனைவரும் கோவன்களையும் அவர்களின் மகள்களையும் இரட்சகன்களையும் இழந்ததாய் எண்ணி தனித்னியே பிரிந்து சென்ற துயர் காலம்... தம்முடன் இதையும் பகிர்ந்து இன்னலை கூட்ட விரும்பாதே மறைத்தேன்...

ரவி : ஹ்ம்ம் என்ன தர்மன் ஐயா.. இத்தகைய அதி முக்கியமான விசனத்தை யம்மிடம் பகிராதது தற்றோது எந்நிலையில் நிற்கிறதென்பதை கண்டீரா... சரி கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும் ஐயா.. ஷேஷ்வமலையில் இன்னமும் சில உயிரின வம்ச குழந்தைகள் இருக்கின்றனர்.. ஆதலின் அலட்சியப்படுத்தாது காவலை வலுப்படுத்துங்கள்.. இரவு வீதம் எமது காப்பாளர்கள் காவலின் பால் அங்ஙனம் காவல் காப்பர்... தாம் கவலையின்றி விடைப்பெறுங்கள்...

தர்மன் ஐயா : சரி சூரரே... சென்று வருகிறேன்.. என தர்மன் ஐயா விடைபெறும் வரை அமைதியாய் இருந்த சஹாத்திய சூரர்கள் பின் பெருமூச்சை இழுத்து விட்டனர்... தர்மன் ஐயா வெளியேறியதும் வளவனுடன் மோகினியும் உள்ளே நுழைந்தாள்...

மோகினி : தாம் அனைவரும் எம்மிடமிருந்து எதை மறைக்கிறீர் என்பதை அறியேன்... ஆயின் அதற்கு தீர்வு எம்மிடமோ அல்லன் தம் மனையாள்களிடமும் தங்கையர்களிடமும் இருக்க வாய்ப்புண்டு

வீர் : இதை மறைக்க எவ்வொரு எண்ணமும் இல்லை தமக்கையே.. யாம் இதற்கான விடையறியாது குழப்பத்திலுள்ளோம்...

மயூரன் : சூரரே... மோகினி தாயார் ஓர் சர்ப்பம் எனின் அவரிடம் நமது குழப்பத்திற்கான விடையிருக்க வாய்ப்புண்டல்லவா...

ரித்விக் : இருக்களாம் மயூரா.. ஆயினும் மோகினி தமக்கை இந்த ஐயாயிர வருடங்களை பற்றித் தான் அறிவாரே ஒழிய அதற்கு முந்தைய காலங்களை பற்றி அறியார்...

மோகினி : அவ்வாறு யான் கூறியது கோவன்களுக்கு மாத்திரமே இளவா என கூறவும் அவளை அனைவரும் என்ன என்பதை போல் கண்டனர்...

வளவன் : ஹ்ம்ம்ம் ஆம் மோகினி யட்சினி சர்ப்ப வம்சத்தின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவளே.. இரட்சகன்களின் பிறப்பை பற்றிய இரகசியங்களை வெளி கொணர கூடாதென்ற விதியினாலே எம்முடன் கூட எதையும் பகிராது இத்துனை காலமும் அவையை மறைத்து வைத்திருக்கிறாள்...

சேவன் : அவ்வாறெனில் தாம் அனைத்தையும் அறிவீரா தாயே..

மோகினி : முன்பே கூறிறேனன்றோ சேவா.. யாம் அனைத்தையும் அறியவில்லை எனினும் பஞ்சலோக சூரர்களை பற்றியும் அவர்களின் ஜனித்தலை பற்றியும் நன்கு அறிந்திருந்தேன்.. ஆனால் எனது ஞானத்தையும் கோவன்களின் ஞானம் தோற்கடித்து விட்டது

முகில் : தெளிவாய் கூறும் தமக்கையே

மோகினி : நமது கோவன்கள் நாகனிகள் கருவுற்ற தினமே வேறொரு தீயசக்தி பூலோகத்தில் உயிர்த்தெழுந்ததை அறிந்திருந்தனர் முகிலா.. அன்றிரவே துருவன் பிறப்பினை பற்றி கேட்டனர்... இரட்சகன்கள் பிறப்பெடுக்க எட்டு மாதமே கணக்கெடுக்கும் என்பதாலும் அவர்கள் சாதாரண குழந்தைகள் இல்லை என தெரிந்து விட கூடாதென்பதற்காய் துருவன் ஏழு மாதத்தில் பிறந்தானென பொய்யுரைத்தேன்... அதன் படி நாகங்களுக்கு பிறக்க போகும் குழந்தை எட்டு மாதத்தில் பிறந்தால் பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டரென எண்ணினேன்.. ஆனால் அதை எனது இளவல்கள் துளியும் நம்பவில்லை என்பதை அன்று யான் அறியவில்லை... அடுத்த நான்கே மாதத்தில் இரட்சகன்கள் பிறப்பெடுத்தனர்.. பூவியின் அடி மட்டத்திலே இரட்சகன்கள் பிறப்பெடுப்பர் என்பதை அறிந்தவள் யான்... ஆதலாலே சித்து ருத்ரா ஆதி இரட்சகன்களில்லை என எண்ணினேன்... யாம் அனைவரும் நான்கு மாதத்திலே குழந்தை பிறந்ததை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை... காரணம் நாகனிகள் நாகங்கள்... ஆயினும் கோவன்களின் நடவடிக்கை எனது எண்ணத்தையும் வலுவூட்டியது... ஆறு வருடத்தின் பின் அவர்களை கோவன்கள் அவர்களின் மரணத்தின் வாயிலில் நின்ற போதும் பிரித்து வைத்த போதே அவர்கள் இரட்சகன்களே தான் என்பதை அறிந்தேன்...

ரவி : அம்மூவரும் ஏன் மறைத்தனரென்பதை இனி யாம் அறியப்போதில்லை... ஆனால் இரட்சகன்கள் நான்கே மாதத்தில் அதுவும் புவியின் அடி மட்டம் என்ற ஓரிடமே இல்லாத போது எவ்வாறு பிறப்பெடுத்தனர்...

மோகினி : அதை யானும் அறியேன் இளவா... கோவன்கள் இரட்சகன்களின் பிறப்பை அறிந்தே தான் பிரசவ காலத்தில் நாகனிகளை எங்கோ அழைத்து சென்றுள்ளனர்... இதிலே கோவன்களின் ஞானம் எனதை தோற்கடித்துள்ளதை அறிந்தேன்... யான் அறிந்ததை விடுத்தும் அம்மூவர் எதை பற்றியோ விளாவாரியாய் அறிந்திருக்கின்றனர்...

சரண் : சரி தமக்கையே... இந்த உயிரின வம்ச குழந்தைகளை பற்றி ஏதேனும் அறிவீரா...

மோகினி : ஏதோ சிலவையை அறிவேன் இளவா.. தர்மன் ஐயா கூறிய குறிப்பிட்ட உயிரினங்களை போல் சர்ப்பலோகத்திலும் ஒரே ஒரு குறிப்பிட்ட உயிரினம் ஒன்று உள்ளது... அது யாதென்பதை அறியேன்... ஆயினும் அதை உயிர்பித்து அக்குழந்தைகளை ஊணாக்க அமைச்சன்கள் முடிவெடுத்திருக்க வாய்ப்புண்டு

ரனீஷ் : எனில்.... எப்பொழுதும் அந்த அமைச்சன்கள் " பிரபுக்களை விடுவித்து உலகை கை பற்றுவோம் " என குறிப்பிடுவது அந்த குறிப்பிட்ட உயிரினங்களில் ஒன்று தானோ... ஆனால் பிரபுக்கள் என பன்மையில் அல்லவா அவர்கள் கூறுவர்.. என சரியான பாய்ன்ட்டிற்கு வந்தான்...

அனைவரின் மூளையிலும் ஐந்து அமைச்சன்களும் எப்போதும் உளறும் அந்த கூற்று வந்து போனது...

மோகினி : சரியாக கூறினாய் இளவா... ஆம் அங்கு ஒன்று தானே உள்ளது...

சேவன் : ஒருவேளை பூலோகத்திலுள்ள உயிரினங்களையும் சேர்த்து கூறுகின்றனரோ...

மோகினி : வாய்ப்பன்று சேவா... பூலோகத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட உயிரினங்களை அவர்களால் நெருங்கவும் இலயாது...

வளவன் : யாதந்த உயிரினங்கள்

மோகினி : கோவன்களின் சிம்மயாளிகள்... சஹாத்திய சூரர்களின் யானையாளிகள்...மற்றொன்று என கூற வரும் முன்...

அஷ்வன்த் : யாளிகளில் இத்துனை இருப்பதை போல் அந்த ஒரு குறிப்பிட்ட உயிரினத்தில் எண்ணற்றவை இருக்களாமல்லவா... என சட்டென கூற அதை மோகினியும் அமோதித்தாள்...

மோகினி : நம் யாளிகள் மட்டுமல்ல முவ்வீரையன் என்ற உயிரினமும் உள்ளது ஆனால் அது இப்போழ்தில்லை என சாதாரணமாய் கூற முவ்வீரையனின் நாமத்தை கேட்டதும்

வீர் : முவ்வீரையனுமா... முவ்வீரையனின் சிலையை பாலமுத்திர கோட்டையில் கண்டதாய் துருவன் தூதனுப்பினான் தமக்கையே... அதில்

மோகினி : என்ன முவ்வீரையனின் சிலையா... அதற்கு வாய்ப்பே இல்லை... முவ்வீரையனின் சிலை தான் யுத்ரபோரின் போதே காணாமல் போய் விட்டதே... என அதிர்ச்சியில் கத்தியே விட அதான என்பதை போல் சேவனும் மயூரனும் ப என சஹாத்திய சூரர்களை பார்க்க ரக்ஷவிற்கு " யார்ரா இந்த மூவ்வீரையன் " என்ற கேள்வி மூளைக்குள் ஓடி கொண்டிருந்தது

வளவன் : இல்லை மோகினி.. முவ்வீரையனின் சிலை இக்கோட்டையில் தான் உள்ளது... ஆனால் அது பெரிதல்ல... அதை போல் வேறொரு சிலை பாலமுத்திர கோட்டையில் கூட உள்ளதாம்... அதில் ஏதேனும் அறிகுறி இருக்குமா...

மோகினி : யான் அறியேன் ராஜ்... இந்த தகவல் எமக்கு புதிது... முவ்வீரையனை பற்றிய தகவல்கள் யுத்ரபோரின் போதே அழிந்தமையால் அதை பற்றி யான் அறியேன்...

மயூரன் : ஒரு நிமிடம் தாயே... தாம் மெய்யை தான் பறைகிறீரா சூரர்களே... இரட்சய பத்மவிமோச்சன முவ்வியாளன் எனப்படும் முவ்வீரையனை பற்றித் தானே தாம் கூறுகிறீர்... என கேட்டதும் ரக்ஷவ் சட்டென அவனை திரும்பி பார்க்க சஹாத்திய சூரர்கள் தலையசைத்தனர்...

வளவன் : அவ்வாறெனில் நம்மால் முவ்வீரையனை பற்றி அறிந்து கொள்ள இயலாதா... அதை பற்றி எவருமே அறியவில்லையே என்க " எனக்கு அத பத்தி தெரியும்னு நெனக்கிறேன் " என கேட்ட குரலில் அனைவரும் திரும்பி ரக்ஷவை ஏறிட்டனர்...

சர்ப்பலோகம்

இளவரசிகள் அளவில்லா மகிழ்ச்சியில் சுழன்று கொண்டிருந்தனர்... நாயகிகள் யட்சினிகள் பத்யரூனா என அனைவரும் எழுந்து வந்திருந்தனர்... ஆனாலும் ஐந்து அமைச்சன்கள் இன்னமும் அங்கு வரவில்லை... நித்ரா மற்றும் ஆருண்யா ஒருவரை ஒருவர் கண்டதும் மெல்லிய புன்னகையை பரிமாறி கொள்ள நித்ரா அழுது அழுது வீங்கிய கன்னங்களும் சிவந்த கண்களுமாய் இருந்த நித்யாவை கண்டதும் அவளிடம் நெருங்கினாள்...

ஆருண்யாவும் அதித்தியும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் நித்யா சமாதானமாகவில்லை... இன்னமும் நேற்றைய நினைவை எண்ணி உள்ளுக்குள்ளே குமுறி கொண்டு தான் இருந்தான்...

இவள் இவ்வாறு தன்னை தானே வருத்தி கொள்ள முக்கிய காரணமானவனோ அங்கு தன் கண்களை திறக்க இயலாமல் கண்களை சுற்றி கட்டு கட்டப்பட்டு அமைதியாய் படுத்திருந்தான்...

அவன் உறங்கி விட்டான் என நினைத்து அவனுக்கு மருத்துவம் பார்த்திருந்த வருண் அந்த பெரும் அறையை விட்டு வெளியேறினான்...

அது கிட்டத்தட்ட ஏதோ ஆதரவற்று பார்க்காமல் விட்ட ஒரு குட்டி அரண்மனை போல் இருந்தது... வெளியே பார்க்க அப்படி இருந்தாலும் உட்பகுதி சற்று நன்றாகத் தான் இருந்தது...

இன்னும் உறங்கும் தோழன்களையும் சகோதரன்களையும் கண்ட வருண் துருவை காணாமல் அவனை தேடி சென்றான்...

அருணும் துருவும் கதிரையில் அமர்ந்த படி எதை பற்றியோ கலந்துரையாடி கொண்டிருந்தனர்...

வருணும் அவர்களருகில் சென்றமர்ந்து கொண்டான்...

அருண் : சித்து இப்போ எப்டி இருக்கான் டா

வருண் : இப்போ பரவாயில்ல டா தூங்குறான்...

துருவ் : அவனுக்கு எதனால அப்டி ஆச்சுன்னு எதாவது தெரிஞ்சிதா வருண்...

வருண் : ம்ஹும் இல்ல துருவா.. சித்து கிட்ட தான் கேக்கனும்.. அவனுக்கு முன்னாடி கண்ணு தெரியாதுன்னு சொன்னப்போ நாம சும்மான்னு நெனச்சோம்ல.. பட் அது உண்மை தான்... உண்மையாவே சித்துக்கு கண் பார்வை போய்டுச்சு..

அருண் : என்னாடா உளறுர... அவன் நல்லா தான இருக்கான்...

வருண் : ஹான் இப்போ நல்லா தான் டா இருக்கான்... ஆனா கிட்ட தட்ட சித்து பத்து வருஷத்துக்கும் மேலாக கண் பார்வை இல்லாம தான் வாழ்கைய கிடத்தீர்க்கான்... அதனாலையோ என்னவோ அவனுக்குள்ள இருக்க சக்தி அப்பப்போ அவன் கண் பார்வைய எடுத்துட்டு அவனோட சக்திய உபயோகப்படுத்துது... ஐம் டம்ன் ஷ்யுர் சித்து கோவப்பட்டதால தான் அவனோட சக்தி எழுந்துருக்கு.. அந்த நேரத்துல அவனோட கண் பார்வை திரும்ப போயிருக்கு... பட் அப்பையும் அவனால பாக்க முடிஞ்சிது

அருண் : டேய் நிறுத்து டா... விட்டா நான் படிச்ச மெடிசன் கோர்ஸையே மறந்துடுவேன் போல... அவன் எழுந்ததும் என்ன ஏதுன்னு அவன் கிட்டையே கேட்டுக்களாம்... நீ எக்ஸ்ப்லைன் பன்றன்னு இன்னும் குழப்பாத

வருண் : போடா டேய்...

கட்டிலில் இவர்களின் உறையாட்டை கேட்டவாறு புன்னகை மாறாது கண்கள் மூடி படுத்திருந்த சித்தார்த் கண்களை திறக்க ஏற்பட்ட ஆவலை முடக்கி அதே போல் சற்று இளைப்பாற எண்ணினான்...

அவனது மனம் பல நாள் பின் ஏதோ ஒரு நிம்மதியில் மூழ்கிட திடீரென மனக்கண்ணில் பாய்ந்த நித்யாவின் பத்தொன்பது வயது தோற்றம் நேற்றைய நினைவை கிளறி விட்டது...

அந்த நடுநிசி இரவில் கோட்டையை சுற்றி வளைத்த நம் நாயகன்கள் அவரவர் தரையிறங்க வேண்டிய இடங்களை நோட்டம் பார்க்க முதலில் ராமிற்கு கண் காட்டிய சித்தார்த் மற்றும் ருத்ராக்ஷ் கோட்டைக்குள் பாய்ந்தனர்...

ருத்ராக்ஷ் கீழ் குதித்ததும் அதில் சிலிர்த்த ஆருண்யா அவன் புறம் திரும்புவதற்குள்ளாக நித்ரா அவ்விடத்திற்கு வர நித்ராவை அங்கு எதிர்பார்க்காத ராம் அவளை அங்கு கண்டதும் உறைந்து போயிருந்தான்...

அந்த நேரத்தில் ருத்ராக்ஷ் அவனது சக்திகளை உபயோகித்து தூய ஆன்மாக்களை கொண்டு அமைச்சன்கள் ஐவரையும் ஆழ்ந்த நித்திரைக்குள் தள்ளினான்....

நித்ராவின் கண்ணீரால் கடப்பாறையென இறுகியவனை அவளின் கண்ணீர் ததும்பிய விழிகள் நோக்கவும் தன்னிலை பெற்று தெளிந்தான் ராம்...

மதிலில் இருந்து கோட்டையின் கீழ் தாவ எண்ணிய சித்தார்த் சில நொடிகளில் தாங்கள் வகுத்த திட்டமனைத்தையும் மறந்து மேற்புறத்திற்கு பாய்ந்தான்... அவன் காலை முட்டு கொடுத்து எழுந்து நிற்கையில் சுவற்றிலிருந்து தடுமாறி விழப் போன அவளின் இடையை வளைத்து அவனோடு இழுத்தான்...

தப்பிக்க வழித்தேடி வந்திருந்த நித்யா தெரியாமல் ஒரு இரகசிய கதவில் இருந்த சர்ப்பத்தை தொடவும் அது அவள் மீது சரக்கென சீரி விட அந்த பயத்தில் தட்டுத்தடுமாறி ஓடி வந்திருந்தவள் காற்றில் மாற்றம் ஏற்பட்டு திடீரென தான் உணர்ந்த சிலிர்ப்பிலும் அவள் எடுத்து வந்திருந்த சுடர் விக்கின் தீ குபீரென பெருகி எரியவும் தடுமாறி விழப்போக அந்த நேரம் வலிய கரமொன்று அவளின் இடையை இறுக்கி பின் புறமாய் இழுத்தது...

அந்த தீண்டலில் சிலிர்த்டங்கிய நித்யா அவளிடமிருந்த சுடர் விளக்கின் ஒளியில் சிகப்பு கண்களுடன் தீ சுடராய் ஒளிர்ந்த சித்தார்த்தை கண்டு உறைய சித்தர்த்தோ எவளை காண மாட்டோமா என அவனுக்கே தெரியாமல் சில முறை எண்ணினானோ அவளை மீண்டும் அந்த தீயின் ஒளியில் அத்துனை அருகில் கண்டதில் மலைத்திருந்தான்...

அவனின் கண்களை அவளின் மை விழியிலிருந்து பிரிக்க இயலாமல் அவன் சங்கமித்து நிற்க நித்யா மூச்சு விடூவும் மறந்து அவனது அணைப்பில் அவன் நெஞ்சோடு ஒட்டி நின்றிருந்தாள்...

ஆனால் அது சில வினாடிகள் மாத்திரம் தான்... இவர்களின் அரவத்தில் மேல் புறத்தை காக்கும் துஷ்ரிகள் வீலென சத்தமெழுப்பி அவ்விருவரையும் கலைத்தது

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... இந்த யூடி ஓக்கேவா... கரெக்ட்டா சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லீட்டேனா... அப்டி சொல்லலன்னா கதெல்லாம் அடுத்த யூடில சொல்லீடுறேன்...ஹிஹிஹி டாட்டா
DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro