மாயம் - 55
அண்ணாஸ் அத்தான்ஸ் என ஒருங்கே கேட்ட குரல்களில் மித்ரனும் மிதுனும் சுற்றி நோக்க வைஷு ஓட்டமாய் ஓடி வந்து மிதுனை கட்டி கொண்டு அழவே தொடங்கி இருந்தாள்...
மிதுன் : ஹே வைஷுமா... ஷ் ஷ் அழாத ஒன்னும் இல்ல... நாங்க தான் வந்துட்டோம்ல...
வைஷு : எப்டீண்ணா வந்தீங்க... நம்பவே முடியல... வி மிஸ்ட் யு சோ மச்
மித்ரன் : வி மிஸ்ட் யு டூ குட்டிமா... மொதல்ல அழரத நிறுத்து...
சந்தியா : எப்டிண்ணா இங்க வந்தீங்க.. நாங்க ரொம்ப பயந்துட்டோம் என்றவளை தோளோடு அணைத்து கொண்ட மிதுன்
மிதுன் : ஒன்னும் இல்ல குட்டிமா... இன்னும் ஒரு வாரம் தான்... அப்ரம் எல்லாரும் நம்ம வீட்டுக்கே போய்டலாம்...
மித்ரன் : மொதல்ல அமைதியா உக்காருங்க... ஷ் அப்ரம் இங்கையே விட்டுட்டு போய்டுவோம் என உருட்டி மிரட்டி மெத்தையில் அமர வைத்தவன் அவர்களுள் ஐலா இல்லாததையும் கண்டான்...
மிதுன் : நித்து நீ எங்க போய்ர்ந்தா இந்த நேரத்துல
நித்ரா : தூக்கம் வரலண்ணா அதனால
மிதுன் : அதனால உளாத்த போனியா... எதாவது ஒரு ஜந்து கிட்ட மாட்டிக்கிட்டா என்ன டி பன்னீர்ப்ப என வலிக்காமல் மண்டையில் கொட்ட அதை தேய்த்தவாறு அவனை முறைத்தவள்
நித்ரா : என் ந்யூ ஃப்ரெண் என்ன காப்பாத்துவாங்க நீ மூடு..
மித்ரன் : இங்க வந்தும் வாய் அடங்குதா பாரு .. சரி உங்கள கடத்தீட்டு தான வந்தாங்க... நீங்க என்ன நிம்மதியா படுத்து தூங்கீட்டு இருக்கீங்க..
மதி : அவங்க நல்லா ஜம்போ பெட் குடுத்தா நாங்க சும்மா இருப்போமா... எங்கள காப்பாத்த வேண்டியது உங்க பொருப்பு அத்தான்...சோ நாங்க கூலா தான் இருப்போம்... என மிடுக்காய் கூறி கையை கட்டிக் கொண்டாள்...
மித்ரன் :ஹ்ம் இருந்துட்டாலும் நாங்க தான் உங்கள நெனச்சு அங்க கவலப்பட்டுட்டு இருந்துட்டோம் போல என முனுமுனுத்தவாறு ஓரக்கண்ணால் அவளை ஏற இறங்க நோக்க மதியோ தன் கண்களை உருட்டி அவனை முறைத்தவள் பின் திரும்பி கொண்டாள்...
நந்தினி : ம்க்குக்கும் நாங்களும் இங்க தான் இருக்கோம் அத்தான்...
மித்ரன் : சரி டா சரி டா... கொஞ்சம் விட மாட்டீங்களே
நித்ரா : அண்ணா... நீங்க இரெண்டு பேர் மட்டும் தான் வந்துர்க்கீங்களா... இல்ல.. என இழுக்க
மித்ரன் : நாங்க மட்டும் தான் டா மா... அப்பா அம்மாலாம் யாரும் வரல...
நித்ரா : இல்லண்ணா... கோட்டைக்கு... நீ..ங்க இரெண்டு பேர் மட்டுந்தான் வந்துர்க்கீங்களான்னு கேட்டேன் என்றதற்கு அவளின் அண்ணன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவர்களின் தங்கைகள் அறியாதவாறு பார்த்து கொண்டனர்...
மிதுன் : ஆமாடா குட்டிமா...
நித்ரா : ஹோ என மெதுவாய் கூறியவளின் காதருகில் குனிந்த மித்ரன்
மித்ரன் : உன் ராம் மாமாவும் வந்துருக்கான்.. ஆனா எங்க இருக்கான்னு தெரியல என மெதுவாய் கூற திருட்டு முளி முளித்த நித்ரா மித்ரன் கூறியதை கேட்காததை போல அப்படியே தலையை திருப்பி கொண்டாள்...
கயல் : ஏன் அண்ணா.. நம்ம சித்து அத்தான் ருத்ரா அத்தான் அப்ரம் ஆதி அத்தான் மூணு பேரும் உயிரோட இருக்குரதா... என கூறி முடிப்பதற்குள்
மிதுன் : ஹோ உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா... ஆமா கயல்மா... சித்து ருத்ரா ஆதி உயிரோட தான் இருக்காங்க... அவங்க தான் இரட்சகன்களும் கூட...
இக்ஷி : எங்கள பாக்க வரலையா அவங்க மூணு பேரும்... நாங்க அவங்கள பாத்ததே இல்லையே...
மித்ரன் : அது.... என சமாளிப்பதற்குள்
மிதுன் : அட வந்துருக்காய்ங்க பட்டு.. தோ பால்கெனிக்கு அந்த பக்கம் தான் இருக்காய்ங்க என சாதாரணமாய் மாட்டி விட மித்ரன் அவனை முறைத்தான்...
மிதுன் என யாரோ பல்லை கடிக்கும் ஓசையில் தான் உளறியதை உணர்ந்த மிதுன் பால்கெனியை கண்டு இளிக்க பால்கெனியின் திண்டினை பிடித்து தாவி குதித்து உள்ளே வந்தான் ருத்ராக்ஷ்... அவன் பின் அதே போல் ஆதியன்த்தும் தாவி வர அவ்விருவரும் சற்று முளித்த படி எவ்வாறு நாயகிகளை எதிர் கொள்ள வேண்டுமென தெரியாமல் தயங்கி தயங்கியே முன் வந்தனர்...
அவர்களை இதுவரை நாயகிகள் பார்த்ததே இல்லையென்பதாலும் பேசி பழக்கமில்லாததாலும் தங்களை ஏற்றுக் கொள்வார்களா என்ற ஒரு தயக்கம் இருந்தது... அதனாலே அவர்கள் மறைந்திருந்து இவர்களை பார்த்து கொண்டிருந்தனர்...
கோட்டையை சுற்றியும் பதுங்கி பதுங்கி சுற்றி வந்திருந்த ஆருண்யா இறுதியாய் கோட்டையின் மேல் புறத்தில் திரும்பி நின்றிருந்த நித்யாவை கண்டு கொண்டு உடனே அவளை நெருங்கினாள்...
மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க கோட்டையின் மேல் புறத்திற்கு ஓடி வந்த ஆருண்யா நித்யாவை பின்னிருந்து அணைத்து கொண்டாள்...
ஆருண்யா : எங்கேனும் செல்வதாய் இருப்பின் எம்மிடம் தெரிவித்திருக்கலாம் அல்லவா நித்தி.. உம்மை காணாது அச்சமடைந்தேனடி என கூறவும் நித்யாவின் அழுகை கலந்த குரல் வெளிவந்தது...
நித்யா : ஆரு
ஆருண்யா : நித்தி... என்னானதடி... எதற்காய் அழுகிறாய்.. என அவளை திருப்பி காண கண்ணீர் ததும்ப நின்ற நித்யாவினால் வாயே திறக்க முடியவில்லை...
நித்யா : ஆ.. ஆ என ஏதோ ஒன்று அவளது அதரங்களை விட்டு வெளியேற துடிக்க
ஆருண்யா : கூறு நித்தி
நித்யா : ஆரித்தை கண்டேன் ஆரு என்ற கேவலுடன் அவளை இறுக்கி அணைத்து கொண்டு கதறி அழுதாள்...
ஆருண்யா : அவரை கண்டதற்காகவா அழுகிறாய்... அவரை கண்டதற்கு நீர் மகிழ்வடைய வேண்டுமல்லோ என மகிழ்ச்சியுடன் கூற
நித்யா : எம்மால் மகிழ இயலாது ஆரு.. ஆரித்திற்கு எம்மை துளியும் அடையாளம் தெரியவில்லை என இன்னும் அழுதாள்...
ஆருண்யா : நித்தி நித்தி... அழுவதை நிறுத்து.. அவ்வாறொன்றும் இல்லை.. தம் மணாளர் இதுவரை உம்மை ஓர் முறையே கண்டிருக்கிறார் என்பதை அறிவாய் தானே... ஆதலால் கூட அவர் தமது உருவினை மறந்திருக்கலாம்
நித்யா : மறந்திருப்பின் அவர் எதற்காய் சர்ப்பலோகம் வரவளித்திட வேண்டும் ஆரு
ஆருண்யா : நித்தி இரட்சகன்களுக்கு நம் மூவரை காப்பது மாத்திரம் கடமையல்ல..
நித்யா : ஆயினும்
ஆருண்யா : நீ அழுவதை நிறுத்து விரைவிலே உமது மணாளரை நீ காணுவாய்... இன்று வரை அவர்கள் வருவரா என்ற ஐயத்திலிருந்தோம்... ஆனால் தற்போது இரட்சகருள் ஒருவரை நீ கண்டிருக்கிறாய் என்பதே நமக்கு வெற்றிக்கான முதல் படி தான்... வா அதித்தி தனித்திருக்கிறாள் என நித்யாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றாள்...
துஷ்ரிகளின் அரவத்தில் கண் விழித்த பத்யரூனா உடனே பரபரப்பாய் எழுந்து வெளியே வர துஷ்ரந்களின் நடமாட்டத்தையே காணாமல் குழப்பமடைந்தவரை யோக்யா முன் வந்து தடுத்தான்...
பத்யரூனா : ஐயனே.. மகள்களுள் எவரோ இன்னலில் இருப்பதாய் எண்ணுகிறேன்... துஷ்ரிகளின் அரவம் அமைச்சன்களை எழுப்புவதற்கும் முன் யான் அவர்களை சென்று காத்தருள வேண்டும்
யோக்யா : அதற்கு எவ்வொரு அவசியமும் அன்று பத்யா.. பஞ்சலோக விந்தைகளும் யட்சினிகளும் இளவரசிகளும் நலமுடனே உள்ளனர்...
பத்யரூனா : அவ்வாறெனில் துஷ்ரிகளின் அரவத்திற்கு காரணம் யார் ஐயனே.. அத்துடன் துஷ்ரந்களின் நடமாட்டத்தினையும் எம்மால் கண்டறிய முடியவில்லையே
யோக்யா : எந்தவொரு துஷ்ரியும் இன்னும் எழவில்லை பத்யா.. ஆதலாலே உம்மால் அவையை கண்டறிய முடியவில்லை.. துஷ்ரிகளின் அரவத்திற்கான காரணம் நமது பஞ்சலோக சூரர்களே...
பத்யரூனா : என்ன சூரர்களா... என்ன கூறுகிறீர் ஐயனே... மெய்யாகவா
யோக்யா : பொருமை பத்யா.. துஷ்ரிகளை நீ உமது அரவத்தினால் எழுப்பி விடாதே... உமக்கு விரைவிலே அனைத்தையும் விளக்குகிறேன்... நீ சென்று உறங்கு
பத்யரூனா : சரி ஐயனே... ஆனால்
யோக்யா : என்னம்மா
பத்யரூனா : நாளை எம்மை அவர்களை காண அழைத்து செல்வீரா
யோக்யா : தாராளமாக... நீர் சென்று உறங்கு... யான் தற்போது மேற்பார்வையிற்காய் செல்ல வேண்டும்
பத்யரூனா : சரி ஐயனே... ஜாக்கிரதை என்றதோடு பத்யரூனா புது வித நிம்மதியுடன் அவரது அறைக்குள்ளே சென்றார்...
நம் நாயகிகளின் அறையிலோ ருத்ராக்ஷும் ஆதியன்த்தும் என்ன பேசுவதென்றே தெரியாமல் நிற்க திடீரென பால்கெனி வழியாக உள்ளே குதித்தான் சித்தார்த்
அவனது திடீர் வரவில் அனைவரும் அரண்டு பின் நகர சித்தார்த்தின் கண்கள் சிகப்பு நிற இரத்தினக்கல்லாய் பளபளப்பதை கண்டிராத ஆதியன்த்
ஆதியன்த் : ஏனடா உமக்கிந்த அவசரம்... இவ்வாறு குதித்து வந்து பழம் வெட்டியா உண்ண போகிறாய்... அத்துஷ்ரிகள் எழுந்தால் என்(ன) செய்வாய்... எரித்தால் மொத்த துஷ்ரந்களும் எழுந்தது மட்டுமன்றி அந்த மரகலண்ட அமைச்சன்கள் வேறு நம்மை சிறை வைத்ததாய் எண்ணி கொக்கரித்து உமது சினத்தை இன்னும் மெருகேற்றி சர்ப்பலோக கோட்டையையே எரிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடுவார்களடா என அவன் குதித்த வேகத்திற்கு பட்டாசாய் பொரிந்தவனை அனைவரும் முளித்தபடி காண சித்தார்த்தோ எதையும் கண்டுக் கொள்ளாமல் கூலாய் நின்றான்...
துஷ்ரிகளின் அரவமும் ஒலித்து கொண்டே தான் இருந்தது
சித்தார்த் : தற்போது அரவம் எழுப்புவது நீரே ஆவாய் இளவா... உமது கத்தலின் பின் எழும் துஷ்ரிகளை என்(ன) செய்வாய்... புயலினால் உயிர்த்தலின்றி (மூச்சின்றி) மடிய செய்வாயோ... அவ்வாறே ஆனாலும் அதில் அவை எழுப்பும் அரவத்தில் யான் சினத்திற்குள்ளாக மாட்டேனா... அல்ல அந்த மரகலண்ட அமைச்சன்கள் தான் இங்ஙனம் வராதிருந்து எமது சினத்தை மெருகேற்றாமல் இருந்து விடுவரா... என இவனும் அவனுக்கு சலைக்காமல் பதில் கொடுக்கவும் தேவையின்றி மற்ற அனைத்து இடத்திலும் இரண்டு மூன்று வார்த்தையில் மட்டும் பதில் கூறும் சகோதரன் இப்போது வரி வரியாய் எழுதிய பத்தியிலே பதிலளிக்கவும் ஆதியன்த் வாயடைத்து போய் விட்டான்...
மாயா : இப்போ நீங்க இரெண்டு பேரும் பட்டி மன்றத்துல பேசுர மாரி இப்டி பராக்ரஃப் பராக்ரஃபா பேசி பரிசா அண்ணா வாங்க போறீங்க என சிந்தனையுடன் கேட்க ருத்ராக்ஷ் தன் இரு சகோதரர்களையும் எண்ணி நொந்து கொண்டான்...
ருத்ராக்ஷ் : அது ஒன்னுமில்லடா... கொஞ்சம் நெர்வசா இருக்குரதால இரெண்டு பேரும் அவங்கவங்க கரெக்ட்டர தாண்டி நடந்துக்குராங்க... மத்தபடி இவன் இரெண்டு லைன்க்கு மேல பேச மாட்டான்... இவன் இந்த மாரி விஷயத்துக்கு ஹைப்பராகவே மாட்டான் என சித்தார்த்தையும் ஆதியன்த்தையும் பற்றி புன்னகையுடன் கூற.. சகோதரன் கூறியதை பொய்க்காவே கூடாதென்ற எண்ணமுள்ளவர்களை போல சித்தார்த்தும் ஆதியன்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிய சிரித்தபடி அவர்களின் கழுத்தை தேய்த்தனர்...
அவர்களை இப்போதே முதல் முறை கண்டிருப்பதாலும் தாங்கள் பேசினால் பேசுவார்களோ என்ற சந்தேகத்திலும் சற்று பதட்டத்திலும் இருந்த நாயகிகளை அவன் பதிலும் அவன் சொன்ன விதமும் அதற்கு மற்ற இருவரும் கொடுத்த ரியக்ஷனும் சாதாரண நிலமைக்கு கொண்டு வர வைத்தது....
நவ்யா : அப்போ நீங்க எப்டி அத்தான் என சிரிப்புடன் கேட்க...
ஆதியன்த் : அவன் இரெண்டும் கலந்த கலவை நவ்யா குட்டி... நா அமைதியாவே இருக்க மாட்டான்... சித்து அமைதியா மட்டும் தான் இருப்பான்... என கூற இப்போது ருத்ராக்ஷ் அவறை முறைத்தான்...
கயல் : ஓக்கே ஓக்கே அறிமுகப்படலம் இருக்கட்டும்... என்ன நியாபகம் இருக்கா உங்க மூணு பேருக்கும் என அவர்கள் முன் நின்ற படி இடையில் கை வைத்து கொண்டு கேட்க அவள் முகத்தை விளையாட்டாய் உத்து பார்த்த மூவரும் புருவத்தை ஒரே போல் சுருக்கி இல்லையே என தலையசைத்தனர்...
அதற்கு கயல் அவள் முகத்தை தூக்கி வைத்து கொள்ள சித்தார்த் அவள் தலையை கலைத்து விட்டு
சித்தார்த் : உன்ன எப்டி மறப்போம் கயல் குட்டி... எங்களுக்கு தங்கச்சி பாப்பா பொறக்குரதுக்கு முன்னாடிலேந்தே நீ தான தங்கச்சி என மெல்லிய புன்னகையுடன் கேட்க வேகமாய் தலையசைத்த கயல் மறுக்காது அவனை அணைத்து கொண்டாள்...
இக்ஷி : ஏன் சித்து அண்ணா.. உங்களுக்கு எங்க எல்லாரையும் நியாபகம் இருக்கா என கேட்டதற்கு புன்னகைத்த சித்தார்த் பதிலளிக்கும் முன்
ருத்ராக்ஷ் : உங்களுக்கு தான் இக்ஷிமா எங்கள மறந்து போயிருக்கும்... எங்க மூணு பேருக்கும் உங்க ஒவ்வொருத்தர பத்தியும் எல்லாமே இன்னும் நியாபகம் இருக்கு
மிதுன் : ஆமா.. பசங்களுக்கு ஓவர் நியாபக சக்தி... பொறந்தப்போ என்ன நடந்துச்சுங்குரத தவிற மத்த எல்லாமே நியாபகம் இருக்கு என கண்ணடித்து கூறினான்
நித்ரா : எனக்கு ஒரு டௌட்டு ப்ரதர்ஸ்... ஏதோ அந்த துஷ்ரிகள் சத்தம் போட்டா துஷ்ரன்னு என்னத்தையோ எழுப்பி விற்றும்னு சொன்னாங்க... அப்டி எதையும் காணும்...
சித்தார்த் : அத நாங்க பாத்துக்குரோம் டா... நீ ஏன் கவலப்படுர...
மதி : நாம எப்போண்ணா வீட்டுக்கு போவோம்...
ஆதியன்த் : சீக்கிரமே போய்டலாம் டா... இன்னும் ஒரே ஒரு வாரம் தான்... அப்ரம் எல்லாரும் வீட்டுக்கு போய்டலாம்... நீங்க தைரியமா இருங்க... நாங்க எப்பவுமே இந்த கோட்டையே சுத்தியே தான் இருப்போம்...
கயல் : ஹ்ம்... இத துருவ் அண்ணாக்கிட்ட குடுத்துடுங்க சித்து அண்ணா என துருவின் பருந்து அச்சு பதிந்த பதக்கத்தை நீட்டவும் கதை வாங்கி தன் உடைக்குள் பத்திரப்படுத்தி கொண்டான் சித்தார்த்
அந்த நேரம் சரியாக மெதுவாய் ஒரு பருந்து வந்து திண்டின் மீது அமர்ந்தது... அப்பருந்து சட்டென மனித உருவை எடுக்க நாயகிகள் அசந்து விட்டனர்... ருமேஷ் தான் அது
ருமேஷ் : ஹாய் குட்டிமாஸ்... எல்லாரும் எப்டி இருக்கீங்க... கடத்தீட்டு வந்த மாரியே இல்ல டி உங்கள பாக்க பிக்னிக் வந்த மாரில புது புது ட்ரெஸ்ஸா போட்டு சுத்தீட்டு இருக்கீங்க...
கயல் : ஆமா நீ பாத்தல்ல நாங்க புது புது ட்ரெஸ்ஸாப் போட்டு சுத்துனத என அண்ணனிடம் வம்புக்கு நின்றாள்
ருமேஷ் : பின்ன பாக்கலையா... நாங்க ரிக்கப் பாத்துட்டு வந்து தான் பேசுறோம் ஆமா
வைஷு : என்னண்ணா சொல்ற
மிதுன் : அது இப்போதிக்கு உங்களுக்கு புரியாது டா... அம்ரம் வெளக்கி சொல்றோம்...
ருமேஷ் : வெளக்கி சொல்லலாம் டைமில்ல டா... கெளம்புங்க கெளம்புங்க நேரமாச்சு டாட்டா குட்டிமாஸ்... என சட்டென அவனது பருந்து உருவத்திற்கே மாறி அங்கிருந்து பறந்து சென்றான்...
மித்ரன் : ஓக்கே கெர்ள்ஸ்... நாங்க கெம்புறோம்... நீங்க பத்திரமா இருங்க என்ன
சந்தியா : ஹ்ம் சரி அண்ணா
இரட்சகன்கள் : பத்திரமா இருங்க டா என்று விட்டு இவர்கள் அங்கிருந்து கீழே தாவி குதிக்க அவர்களுடன் மித்ரனும் கீழே குதித்தான்... தங்கைகள் உள்ளே சென்றதும் இறுதியாய் செல்ல போன இக்ஷியை தன் புறம் பிடித்திழுத்த மிதுன் அவசரமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்...
மிதுன் : போய்ட்டு வரேன் டி... என் தங்கச்சீஸ் மச்சினிச்சீஸ் கூட பத்திரமா இரு.. அவளுங்களையும் பத்திரமா பாத்துக்கோ டாட்டா என கண்ணடித்து விட்டு சிலையாய் சமைந்திருந்த இக்ஷியை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தாவி குதித்து கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து காணாமல் போயிருந்தான்...
இவ்வைவரும் ருமேஷுடன் கோட்டையின் பின் புற மதிலில் நின்றிருக்க சில நிமிடங்களில் விதுஷ் அவனது பருந்து உருவத்தில் பறந்து வர வெவ்வேறு புறங்களில் இருந்து ராம் வருண் மற்றும் ராகவ் ஆதவ் அதே மதிலில் ஓடி வந்து அவர்களுடன் இணைந்தனர்...
சில நிமிடங்களில் பாதால சிறையின் வாயிலாக துருவ் அங்கே பறந்து வர அவனை பின் தொடர்ந்து அருண் கார்த்திக் மற்றும் அஷ்வித் அஜய் கோட்டையின் முன் புறத்திலிருந்து பின் வந்தனர்...
துருவ் : கெளம்பலாமா...
அருண் : போலாம்
ருத்ராக்ஷ் : துருவா... இன்னும் ஒரே ஒரு வேலை இருக்கு..
வருண் : என்ன வேலை டா... தங்கச்சிங்கள பாத்துட்டீங்க தானே...
ஆதியன்த் : இல்ல இன்னும் ஒன்னே ஒன்னு பாக்கி இருக்கு
அஷ்வித் : சரி வாங்க டா அதையும் முடிச்சிட்டு வந்துடலாம்
சித்தார்த் : இல்ல இல்ல நீங்க கெளம்புங்க... இல்ல மதில விட்டு வெளிய இருங்க நாங்க திரும்ப வந்துடுறோம்... என உடனே தடுக்க
ஆதவ் : உங்க மூணு பேரையும் எப்டி டா தனியா விடுரது...
விதுஷ் : நா அவங்க கூட போறேன் நீங்க கீழ இருங்குங்க .. என்கவும் அதை தடுக்க சென்ற ருத்ராக்ஷ் மற்றும் ஆதியன்த்தை சித்தார்த் பார்வையாலே தடுத்து நிறுத்தினான்...
சித்தார்த் : நீ வா விது நாம போலாம்...
அஜய் : சரி அப்போ பாத்து போய்ட்டு வாங்க... நாங்க கீழ வெயிட் பன்றோம் என்றதும் அனைவரும் ஒருவருக்கு மற்றவர் தலையசைக்க இரட்சகன்களையும் விதுஷையும் தவிர்த்து அனைவரும் அங்கிருந்து கீழிறங்கினர்...
அவர்கள் நலமாய் இறங்கியதும் இரட்சகன்களை நோக்கிய விதுஷ்
விதுஷ் : எங்க போறோம்
பதிலளிக்காமல் பின் தொடரு என சைகை காட்டி விட்டு மூவரும் அம்மதிலிலே இடது புறத்தை நோக்கி ஓடினர்...
மரங்களால் மறைந்த இடத்தில் நின்றிருந்ததால் இவர்கள் வெட்ட வெளியை நோக்கி செல்லவவும் விதுஷும் ஒன்றும் புரியாமல் அவர்களை பின் தொடர்ந்தான்...
கோட்டையின் உட் புறம் தெரிகையில் அங்கிருந்து மூவரும் கீழே குதித்தனர்...
சித்தார்த் அவர்களுக்கு வழி காட்டியாய் முன் செல்ல அந்த கோட்டையின் வளாகத்தில் சென்றவர்கள் இறுதியாய் நின்றது பணிப்பெண்கள் அறையின் முன்...
விதுஷிற்கு அவ்வழி முன்பே தெரியுமென்பதால் சற்று குழப்பத்துடனே அவர்களை பின் தொடர்ந்தான்... இறுதியாய் இரட்சகன்கள் அவ்வறைக்குள்ளே நுழைய விதுஷிற்கு இருந்த சந்தேகம் இன்னும் வலுப்பெற்றது...
அந்த பணிப்பெண்களின் அறையில் அனைத்து இடங்களும் காலியாய் இருக்க ஒரு மூலையில் பாய் விரித்து நம் இளவரசிகள் ஒருவர் மற்றவரின் அருகில் ஒடுங்கி படுத்து உறங்கி கொண்டிருந்தனர்...
இரட்சகன்கள் தூரத்திலிருந்தே அவர்களை கண்டவாறிருக்க அம்மூவருக்கும் அவர்கள் காணும் காட்சியை நம்ப தைரியம் இல்லை... அவர்களையுமறியாது கண்களில் கண்ணீர் பொங்க முதல் முறையாய் தங்களின் தங்கைகளை கண்டு அக மகிழ்ந்து நின்றிருந்தனர்...
விதுஷ் இவர்களின் பின் நின்றிருந்தமையால் அவர்களின் கண்ணீரையெல்லாம் அவன் கவனித்திருக்கவில்லை...
கண்ணை விட்டு கசிய முணைந்த ஒரு துளி கண்ணீரை பட்டென துடைத்த சித்தார்த் ஆழ பெருமூச்சு இழுத்து விட்டு ருத்ராக்ஷ் ஆதியன்த்தை நோக்கவும் அவ்விருவரும் அவனை அதே கண்ணீர் தேங்கிய கண்களுடன் நோக்கினர்...
அவர்களை கண்டு புன்னகைத்த சித்தார்த் அவன் கையை முன் வைக்க அதன் மேல் ருத்ராக்ஷ் அவன் கையை வைத்ததும் ஆதியன்த்தும் அவன் கரத்தை சகோதரன்களின் கரங்களுடன் ஒன்றாய் வைத்து கண்கள் மூடி நின்றான்...
அவர்களின் கரங்களினைடையே இருந்த இடைவேளையின் வழியே ஏதோ ஒரு ஒளி கண்களை கூசுவதை போல் வெளிவர தன் கண்களை கசக்கி விட்டு முளித்து பார்த்த விதுஷ் ஒன்றாய் இருந்த சகோதரர்களின் கரங்கள் மீது இப்போது ஒரு பதக்கம் இருப்பதை கண்டான்...
அந்த பதக்கத்திலோ கோவன்களின் ஆத்ம சக்திகளான தீ நீர் மற்றும் காற்றின் அச்சுக்கள் வரிசையாய் பொதிக்கப்பட்டிருக்க அதை சுற்றி மூன்று வெவ்வேறு நிறமுடைய நாகங்கள் வட்டமாய் சுற்றி வளைத்து கிட்டத்தட்ட கோவன்களையும் நாகனிகளையும் பறைசாற்றுவதை போல் தத்ருபமாய் இருந்தது... ஆதியன்த் அவனது கரத்தை எடுக்கவும் அதே போன்ற ஒரு பதக்கம் ருத்ராக்ஷின் கரத்தில் இருக்க ருத்ராக்ஷ் கரத்தை எடுக்கவும் அதே போன்ற ஒரு பதக்கம் சித்தார்த்தின் கரத்திலும் இருந்தது...
அதை கண்டதும் ஆதியன்த் அவனது சக்திகளை உபயோகித்து அப்பதக்கங்களை காற்றில் தூக்கினான்... அவனது கட்டளைப்படியே அது அவர்களின் தங்கைகளிடம் நகர்ந்து அவரவர் உரிமையாளரின் கழுத்தில் சென்று தஞ்சமடைந்தது...
அப்பதக்கங்கள் சித்ரியா வேதித்யா மற்றும் எழிலினியாவின் கழுத்தில் சாதாரண ஒரு சங்கிலியை போல அழகாய் மின்னி மறைந்தது...
அதை மன நிறைவுடன் கண்ட இரட்சகன்கள் இப்போது அங்கிருந்து பலவாறான குழப்பங்களுள் மூழ்கியிருந்த விதுஷை இழுத்த படி கோட்டையை விட்டு வெளியேறினர்...
அவர்கள் சென்ற சில நிமிடங்களில் யாரோ தமது தலையை கோதுவதை போல் கனவில் உணர்வு பெற்று சட்டென கனவிலிருந்து கண் விழித்து நோக்கினாள் வேதித்யா..
ஏதோ நெருங்கிய உறவு ஒன்று அருகில் வந்ததை போல் உணர்ந்தவளின் இதயம் அதிக மகிழ்வினை பாரமாய் அவளுக்கு எடுத்து காட்ட இவ்வளவு பாரமாய் தன் இதயத்தை இதுவரையில் என்றும் உணர்ந்திடாதவளின் கரம் தனிச்சையாய் இதயத்தை தொடப்போய் அவள் கழுத்தில் புதிதாய் தோன்றிய பதக்கத்தில் பதிந்தது...
அந்த புதிய சங்கிலியை குனிந்து பார்த்த வேதித்யாவினை சொல்லேனா ஆனந்தம் ஒன்று வந்து ஆட் கொண்டது...
வேதித்யா : பந்தப்பதக்கம்
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே.... எப்டி இருக்கு யூடி... உங்களுக்கு இன்னும் துஷ்ரிகள் சத்தமெழுப்பியும் ஏஸ்ரீ அதுஷ்ரந்கள் வரலன்னு சந்தேகமா இருக்குல்ல... அத அடுத்த யூடில க்ளியர் பன்னீடுறேன்... டோன்ட் வரி நாளைக்கே அடுத்த யூடி வந்துடும்... லேட் பன்ன மாட்டேன்னு தான் நினைக்கிறேன்... ரொம்ப போர் அடிச்சா சொல்லுங்க... எதாவது மாத்துரேன்... குட் நைட் ... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro