மாயம் - 52
அந்த நாகத்தின் நீண்ட வாள் அந்த அறை முழுவதிலும் சுழன்று சுழன்று கிடந்தது.. அந்த அறையின் வாயில் இப்போது சுவரால் தனிச்சையாகவே மூடி கொண்டது...
ருமேஷ் : டேய் என்ன டா தானாவே மூடிக்கிச்சு என அது உருவாக்கிய சத்தத்தில் பிதுங்கிய விழிகளுடன் முன் நின்றவர்களை நோக்கினான்...
அஷ்வித் : அது உள்ள வந்தவன் எப்டியும் வெளிய தப்பிச்சு போக கூடாதுல்ல டா அதுக்கு தான்... அப்டி மாடிஃபை பன்னீர்கக்கேன்... என இப்புதிர்களுக்கு கோட்டையை மாற்றிவன் வாயை விட
விதுஷ் : நல்லா பன்னீர்க்க டா டேய் என அலரியவனை நோக்கி அந்த நாகத்தின் வாயிலிருந்து ஒரு உருண்டையான பாரை பறந்து வந்தது...
இருளினால் அதை கவனிக்காமல் சற்று தூரம் வந்த பின்னே கவனித்த விதுஷ் சுதாரித்து நகரும் முன் அந்த பாரை அவனின் நெற்றியை பதம் பார்த்திருந்தது...
சித்தார்த் உடனே தன் தீ பந்துகளை அந்த அறையின் ஒவ்வொரு மூலைக்கும் அனுப்பினான்... அந்த சிகப்பு ஒளியினால் அனைவரும் அந்த நீண்ட நாகத்தின் உருவத்தை தெளிவாய் கண்டனர்...
மிதுன் : டேய் இதுக்கூட எப்டி டா சண்ட போடுறது...
துருவ் : வாள் கல்லுக்கிட்ட செல்லுபடி ஆகாது... நம்ம ஸ்கில்ஸ் தான் வழி என கூறியவன் கூறியபடி முன்னேறி சென்று அந்த நாகம் அதன் வாயிலிருந்து மீண்டும் ஒரு கல்லை உருவாக்கி வீச முயற்சித்த அந்த நொடி அக்கலை உதைத்து அதன் வாயிலே அழுத்தினான்...
இந்த தாக்குதலை அந்த நாகத்துடன் மற்ற எவருமே எதிர்பார்க்காததால் இளைஞர்கள் அனைவரும் துருவின் வேகத்தை கண்டு ஓஓஓ என கோரஸ் ஓத துருவ் அதற்கெல்லாம் மசியாது தன் தாக்குதலால் விழி பிதுங்கி மூச்சு விட தினறும் நாகத்தை மீண்டும் உதைத்தான்...
அது தற்காப்பின்மையினால் சுவறில் சென்று மோத துருவ் அது நகரும் முன் அதன் கழுத்தின் இரு புறத்திலும் அவன் முதுகிலிருந்த இரு அம்புகளை உருவி சொருகி விட்டு நொடி கூட தாமதிக்காமல் அவ்விரண்டின் மீதும் குறுக்கே அவனது வாளை வைத்தான்...
துருவின் செயல் புரியாததால் அவ்வறையை ஒரு முறை சுற்றிப்பார்த்த ருமேஷ் இவ்வளவு நேரம் அந்த நாகம் இருந்த இடத்தில் தரை மீது ஒரு கதவு பொருத்தப்பட்டிருந்ததை கண்டதும் ருமேஷ் உடனே துருவை நோக்கினான்...
துருவ் தலையசைத்து உடனே அனுமதி கொடுக்க ருமேஷ் அந்த கதவருகில் சென்று அதை இழுக்க முயல அந்த சத்தத்தில் சுவறோடு ஒட்டிய அந்நாகம் படாரென திமிற தொடங்கியது...
துருவ் அதை சுவற்றோடு அழுத்தியதால் அதன் திமிறல் துருவையும் உலுக்க ருமேஷ் அக்கதவை இழுக்க முடியாமல் படாத பாடு பட்டு கொண்டிருந்தான்...
ருமேஷ் : வெண்டைக்கா மண்டையனுங்களா... வந்து ஹெல்ப் பன்னுங்க டா.... என கத்தியதே துருவின் போர்களைகளுள் மூழ்கியிருந்த மற்ற அனைவரும் நிலையை அடைந்தனர்...
கார்த்திக் : அங்க என்ன டா மாப்ள பன்னிக்கிட்டு இருக்க...
துருவ் : உனக்கு என் தங்கச்சிய கட்டி வைக்கலாமா இல்ல கட்டி வைக்காமலே விட்டுடளாமான்னு ஜோசியம் பாத்துட்டு இருக்கான்... வெண்ண... கதவ தொறந்து கீழ இறங்கித் தொல டா... என கத்தினான்....
கார்த்திக் : நீ ஏன் மச்சான் டென்ஷனாகுர... கூல் சொன்னா செய்யப்போறேன்... என முளித்த படி ருமேஷினருகில் சென்றவன் அந்த கதவை கண்டதும் அது இழுத்து திறக்கும் கதவல்ல அழுத்தி திறக்கக் கூடிய கதவு என உணர்ந்து அதை திறப்பதை விட்டுவிட்டு காலால் ஒரு மிதி மிதித்தான்...
ருமேஷ் அவனை விழி விரித்து நோக்க கார்த்திக் மிதித்த மிதியில் அந்த கதவு தொபக்கடீரென கீழே விழுந்திருக்க ருமேஷ் உணரும் முன் அவனை உள்ளே தள்ளி விட்ட கார்த்திக் அவனுடன் சேர்ந்து குதிக்க
துருவ் : எல்லாரும் குதிங்க
துருவின் பேச்சிற்கு மறுப்பேதென்பதை போல் மற்றவர்களும் அடுத்தடுத்து சிந்திக்காமல் குதிக்க அனைவரும் குதித்ததும் தன் வாளை வேகமாய் உருவி கொண்டு ஒரே தாவில் அதே அறைக்குள் குதித்தான் துருவ்...
துருவை பிடிக்க முயன்ற அந்நாகம் அந்த கதவின் வாயிலாக உள்ளே வர இயலாமல் சினத்துடன் அடி தொண்டையிலிருந்து சீரி விட்டு ஏதோ ஒரு புது விதமான ஒலி எழுப்பியது...
அந்த வாயில் வழியாக கீழே குதித்த துருவ் ஒரு காலை முட்டு கொடுத்து மறு காலை சாய்த்தவாறு மேலே நிமிர்ந்து பார்க்க அந்த விசித்திரமான ஒலியினால் மற்றவர்களும் நிமிர்ந்து அதே போல் நோக்க... தரையில் மல்லாக்க படுத்திருந்த ருமேஷ் " எவன் அவன் மகுடி ஊதுறான் " என சோர்வாய் மேலே நோக்கினான்...
மித்ரன் : இது... பஞ்சலோக நாகங்களோட பாஷை... நாம முதல் கட்டத்தை தாண்டீட்டோம்னு அடுத்த கட்ட காப்பாள நாகத்துக்கு எச்சரிக்கிது போல...
துருவ் : ஹ்ம் சரி விடுங்க இங்கேந்து இரண்டாம் கட்டத்துக்கு எப்டி போறது என அந்த அறையை அளந்த படி கேட்க இவர்கள் முன்பிருந்த அறை வாயிலாக கீற்றென ஒளிர்ந்த தீயின் ஒளி தான் அந்த அறையிலும் பரவியிருந்தது... ஏதோ நூலகம் போலிருந்தது...
சுற்றி புத்தகம் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டு பாழடைந்திருந்தது... சித்தார்த்தின் உதவியினால் மீண்டும் அங்கு ஒளியூட்டப்பட அவர்களை சுற்றியுமே புத்தகங்கள் மட்டும் தான் இருந்தது...
அந்த வரிசையான புத்தகங்களை அனைவரும் உருத்து நோக்கி கொண்டிருக்க பத்து நிமிடத்தின் பின் ஆதவ் தலை கீழாய் வைக்கப்பட்டிருந்த ஒரு பச்சை அட்டை கொண்ட புத்தகத்தை வெளியிலெடுத்தான்... அப்புத்தகம் வெளி வந்ததும் மற்றைய புத்தகங்கள் மெதுவாய் ஆட ஆதவ் எடுத்த புத்தகத்தை உடனே திறந்த ராகவ் அதிலிருந்த காகிதத்தாலான சுருளை வெளியிலெடுக்க அப்புத்தகத்தை சரியாக அதே இடத்தில் வைத்ததும் அங்கு எழும்பியிருந்த நடுக்கம் நின்று விட அந்த காகித சுருளை திருப்பி திருப்பி பார்த்த ராகவ் அவனிடமே பத்திரப்படுத்தி கொண்டான்...
ராம் : இதுக்கு மேல என்ன டா பன்றது... இங்கையே இருந்தா மூச்சு முட்டி செத்துருவோம் போல...
மிதுன் : அட மூச்சு... அப்போனா நம்ம அடுத்து சந்திக்கப்போர கட்டம் காற்று டா... என திடீரென கத்தினான்...
அவன் கத்தி முடிப்பதற்குள் அவர்களின் கால்களுக்கிடையே ஏதோ ஒன்று நகர அனைவரும் சுதாரித்து நகர பார்க்க அதற்கு முன்பாக ஏதோ ஒன்று ராகவ் மித்ரன் மற்றும் விதுஷின் கால்ளை இறுக்கி பிடித்திருந்தது...
சித்தார்த் அவனது தீ பந்தை அவனருகிலே நின்ற மித்ரனின் காலில் அடிக்க மித்ரன் அந்த தீ பட்டு அலரியவாறே கீழே விழுந்தான்...
மித்ரன் : அடேய் என கீழே விழுந்தவனை ஆதியன்த் பிடித்து தூக்கி விட சித்தார்த்திற்கு முன்பாக இப்போது ருத்ராக்ஷ் அவனது நீர் சக்தியை கொண்டு ராகவின் காலை தாக்க ... அவன் கால்களை இறுக்கியிருந்த ஏதோ ஒன்று ராகவை தூக்கி ருத்ராக்ஷ் மீதே எறிந்தது...
ருத்ராக்ஷ் மற்றும் ராகவ் இருவரும் தரையில் விழ சரியாக ராகவின் தலை ஏதோ ஒரு கல்லில் டங்கென இடித்தது..
அந்த வலியில் ராகவ் அலரிய அலரலை விடுத்தும் சத்தமாக ஏதோ ஒரு ஓசை எழுந்தது... அந்த ஓசையிலே தன் வலியை மறந்து ராகவே விதிர்விதிர்த்து போய் நிமிர்ந்து நோக்க அவர்களனைவருக்கும் மேல் ஒரு பெரிய நாகம் விதுஷை அங்குமிங்கும் தன் வாளால் சுற்றி சுற்றி ஆட்டியவாறு ஏதோ ஒரு ஓசையெழுப்பியபடி படமெடுத்து கொண்டிருந்தது...
ராகவ் அவனது தலையை இடித்து கொண்ட அந்த கல்லை உடனே பராசோதிக்க அது மையத்திலிருந்து சுவறின் கீழிருந்து தள்ளப்பட்டிருப்பதை போல் வெளியே நீட்டி கொண்டிருந்தது...
விதுஷை அப்பாம்பு அதே சுவறில் தூக்கி வீச விட்டால் விதுஷ் சுவறிலில் இடித்து நசுங்கியிருப்பான் என்னும் நிலையில் ராகவ் அவனது மொத்த பலத்தையும் ஒன்றிணைத்து அந்த கல்லை வேகமாய் அடிக்க... அது உள்ளே சென்ற மறு நொடி அங்கிருந்த சுவறு நொடிக் கணக்கில் தரைக்குள் புகுந்து கொண்டது...
தப்பினோம் என எண்ணிய விதுஷ் ஒரு நொடி நீருக்குள் மூழ்கி எதிலோ சென்று இடித்தான்...
விதுஷின் முன் அவனை பார்த்து படமெடுத்தவாறு சிகப்பு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கோரமாய் சீரி கொண்டு நின்றது மூன்று நாகங்கள்...
விதுஷ் அக்கடாவென வாயை திறந்த படி அதை பார்த்து கொண்டிருக்க ராம் அவன் கால்களை பிடித்து தரதரவென அவர்கள் புறம் இழுத்தான்...
நாயகன்கள் நடுவில் அவரவர் ஆயுதங்களை வைத்த படி சுற்றி சுற்றி பார்த்தவாறு எச்சரிக்கையுடன் நின்றனர்.. அந்த நான்கு நாகங்களோ அவர்களையே சுற்றி சுற்றி வந்தது...
கார்த்திக் : ஏன் டா நாம இன்னும் இரெண்டாவது கட்டத்தையே முடிக்கல... எதுக்கு டா இந்த மூணு நாழு அஞ்சு கட்டமும் இங்க வந்துச்சு என ஆகாயம் நீர் தீ கட்டங்களும் அங்கு வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுடன் கேட்டான்...
ஆதவ் : நாம ஏதோ ஒரு தப்புப் பன்னீர்க்கோம் கார்த்தி... இரண்டாவது கட்டத்துக்கு போகுறதுக்கு பதிலா நாம டரெக்ட்டா மூணாவது கட்டத்துக்கு வந்துருக்கோம்... அதனால தான் இந்த இடத்துல காற்று இருந்துருக்கு...
ராம் : முதல் கட்டத்துல நாம தேர்ந்தெடுத்தது குறுக்கு வழி போல... என கண்களை அந்த நான்கு நாகங்களின் மீதே பதித்தவாறு கூறினான்...
ருமேஷ் : நாம பேசிச்கிட்டே இருந்தா அதுங்களும் பாக்குரத தவிற எதுவும் செய்யாது... சோ என்ன பன்னலாம்னு சொல்லுங்க...
வருண் : வேற வழி இல்ல... களத்துல இறங்குவோம்.. இடைல எதாவது ஸஸ்பீஷியசா பாத்தீங்கன்னா உடனே அத மத்தவங்களுக்கு தெரியப்படுத்துங்க... இந்த இடத்த விட்டு தாண்டி போனா தான் நம்மளால வாயில அடைய முடியும்...
மித்ரன் : முக்கியமான விஷயம்... நாகங்கள் காயமடைய கூடாது... அவங்கள தாண்டி போனுமே தவிற அவங்கள காயப்படுத்த கூடாது என இறுதியாய் உரக்க கூறியவன் அடுத்த நொடியே தனது பறக்கும் புலியின் உறுவத்திற்கு மாறி வேங்கையென சீரி உறுமினான்...
அவனது உறுமல் அங்கிருந்த அனைவரையும் உலுக்க அந்நாகங்கள் ஒரு நொடி சமைந்து போனது...
அந்த இடைவேளையில் அஷ்வித்தும் அவனது சிறுத்தை புலி உருவை எடுத்து உறும அவனோடு ஆதவ் அவன் பறக்கும் சிறுத்தை புலி உருவையும் மிதுன் அவனது புலி உருவையும் எடுத்து ஒரு சேர உறுமினர்...
இது எக்காரணத்தினாலோ அந்நாகங்களுக்கு திசை திருப்பலாய் போகி விட ராகவ் மற்றும் ராம் ஒன்றாய் அவர்களின் பின் நின்ற ஆகாய கட்ட நாகத்தின் வாளை பிடிக்க அவர்களுடன் அஷ்வித் மற்றும் மிதுனும் அதே போல் அந்த நாகத்திற்கு சிறை வைக்க... மேல் பறந்து கொண்டிருந்த மித்ரனும் ஆதவும் அதே நாகத்தின் தலை பகுதியை பிடித்து கொள்ள அந்த நாகம் திமிறி அடங்கும் முன் அதை அவர்களது பலம் கொண்டு சுழற்றி அந்த நூலகம் போலிருந்த இடத்திற்குள் வீசினர்...
அது சுவரை இடித்து கீழே விழவும் அஜய் தரையில் ராகவ் அழுத்திய அந்த கல்லை தகர்த்து வெளியே எடுத்திருந்தான்... தரைக்குள் மறைந்திருந்த அந்த சுவரு இப்போது மீண்டும் எழுந்து நம் நாயகன்களுக்கும் அந்த ஒரு நாகத்திற்கும் இடையே தடுப்பு சுவராய் அமைந்திருந்தது...
ராகவ் : ஒன்னு காலி டோய்... இன்னு மூணு தான்... என்றபடி இவன் மற்ற மூன்று பஞ்சலோக கட்டங்களுடன் போராடி கொண்டிருந்த நாயகன்களிடம் வந்தான்...
நாயகன்கள் அந்த நாகங்களை தாக்க கூடாது என்னும் நோக்கத்தால் சித்தார்த்தை அவனது சக்தியை உபயோகிக்கவே விடவில்லை... ருத்ராக்ஷ்ஷின் நீரால் உருவான ஒரு சுவரே அம்மூன்று நாகங்களையும் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது...
என்ன தான் ருத்ராக்ஷ் நீரின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அவன் எதிர்க்கும் அம்மூன்று நாகங்களுள் ஒன்று நீர் அம்சத்தை கொண்டதென்பதாலும் ருத்ராக்ஷ் அவனின் தந்தை இந்திரனின் அளவு தன் அம்சத்துடனே போட்டியிட தேரவில்லை என்பதாலும் நீர் கட்டத்தின் நாகம் எளிதாய் ருத்ராக்ஷ் உருவாக்கும் ஒவ்வொரு தடுப்பு சுவரையும் தகர்த்து கொண்டே வந்தது...
துருவ் அவனது பருந்தின் உருவில் ருத்ராக்ஷ்ஷின் தடுப்பு சுவரையும் தாண்டி அந்த நாகங்களிடம் சென்றிருக்க நொடி கணக்கிலே துருவின் உருவம் கானலாய் மறைந்திருந்தது...
அவனை காணாமல் திசை திரும்பிய அந்த நீர் கட்ட நாகத்தை எவரும் எதிர்பார்க்காத நேரம் சட்டென தன் கைகளுள் அழுத்தம் கொடுத்து நீரால் அதன் மொத்த உயரத்தையும் சுற்றி வளைத்தான் ருத்ராக்ஷ்...
இவ்வளவு நேரமும் தங்களை தடுத்து கொண்டிருந்த நீர் சுவர் மறைந்ததால் தீ கட்ட நாகமும் காற்று கட்ட நாகமும் அதுகளின் சக்திகளுடன் முன்னேற திடீரென எங்கிருந்தோ தோன்றிய துருவ் திடீரென அவனது மனித உருவத்திற்கு மாறி அவனின் முழு சக்தியையும் இணைத்து மேல் சுவற்றில் ஒரு அடி அடித்தான்...
அந்த அடி அவ்வளவு பலமாய் இல்லையென்றாலும் அங்கிருந்த மூன்று நாகங்களையும் அதை நோக்கி திரும்ப வைக்க நாயகன்களின் நோக்கமே புரியாது ஒரு நொடி மூன்றும் முளிக்க இந்த நேரத்திற்காகவே காத்திருந்த ருமேஷ் மற்றும் விதுஷ் அவர்களின் பருந்து உருவத்தில் மாறி சீரி கொண்டு துருவை நோக்கி பறந்தனர்...
தன்னை நோக்கி வரும் சகோதரன்களை கண்டு தலையசைத்த துருவ் கீழே குதிக்க துருவ் இருந்த இடம் வரை சென்ற இரெட்டையன்களை திடீரென மினுமிப்பான துகள் கலந்த பச்சை நிற புகை சூழ்ந்து கொள்ள அது மறையும் போது தங்களது மனித உருவில் துருவ் அடித்த அதே இடத்தில் ஒரே நேரத்தில் தங்கள் பலம் மொத்தத்தையும் இணைத்து இவ்விருவரும் அடித்து விட்டு கீழே குதிக்க இவர்களின் கால் மண்ணில் பதிந்த ஓசையுடன் மேல் சுவற்றில் விரிசல் விழும் சத்தமும் கேட்டது...
அந்த விரிசல் அந்த அறை முழுவதும் மெதுமெதுவாய் விரிவடைய அதன் மைய பகுதியில் சித்தார்த் திடீரென அவனது தீயை அதி வேகமாய் நொடியும் நிறுத்தாது தாக்கினான்....
அவன் தாக்கியப் பின்னே அந்நாகங்களுக்கும் நாயகன்ளின் திட்டம் மெதுமெதுவாய் புரிய வர முழுதாய் புரியும் முன் ஓடி சென்று அந்த மையப்குதியின் கீழே நின்ற வருண் மற்றும் அருணின் முதுகில் ஏறி எம்பி குதித்த கார்த்திக் மற்றும் அஜய் அந்த விரிசலில் பலமாய் மோத அவர்கள் மண்ணை அடையும் முன் அந்த மேல் தரை மொத்தமும் உடைந்து கீழே விழ இத்துனை வருடங்களாய் மண்ணுக்குள் இருந்ததால் அங்கங்கு தேங்கியிருந்த மணல் இப்போது அந்த நாகங்களின் மீது சரிந்தது...
தீயினால் தகதகவென எரிந்து கொண்டிருந்த தீ கட்ட நாகம் எழ இயலாமல் அப்படியே மடிந்து விழ நீர் கட்ட நாகம் மணல் நீரில் கலந்ததால் இன்னும் இடையேறி நகர இயலாமல் ருத்ராக்ஷ் உருவாக்கிய அந்த வளையத்தினுள்ளே சரிய காற்று கட்ட நாகம் மாத்திரம் அதன் காற்றில் மணல் கலந்ததால் திக்கு முக்காடி போயிருந்தது...
ஆதியன்த் : பாய்ஸ் டைம் டு மூவ் என உரக்க கத்தியவன் அவனது கைகளை உயரத்தி பாதையில் கிடந்த மணலை நாழாப் புறமும் தள்ள கீழே விழுந்த அனகோண்டா சைஸ் பாம்புகளினைடையே தெரிந்த நேர் பாதையிலே வரிசையாய் அவைகளை தாண்டி ஓடினர் நமது நாயகன்கள்...
ஒரு வழியாக அந்த மூன்றையும் தாண்டி ஓடியதும் திரும்பி பார்த்த ராம் காற்று கட்ட நாகம் அவர்களை பின் தொடர முயல்வதை கண்டு சுற்றி முற்றி நோக்க சரியாக முன் இருந்ததை போலவே முட்டு சந்தாய் முடிந்த அப்பாதையின் சுவற்றின் கீழ் ஒரு கல் நீட்டி கொண்டிருந்தது... சப்பா என்ற பெருமூச்சுடன் அதை காலால் ஒரு உதை உதைத்தான் ராம்...
ராமின் எதிர்பார்ப்பை பொய்க்காமல் அந்த சுவர் தரையின் உள் இழுக்கப்பட்டு அதன் பின் இருள் தென்பட்டது... அனைவரும் உடனே அதனுள் ஓட அந்த கல்லை இருந்த இடத்திலிருந்து இழுத்த ராம் அந்த சுவர் மீண்டும் எழுவதை கண்டு பின் நகர அவனே எதிர்பார்க்காத வகையில் அந்த சுவரின் பின்னிருந்த நீண்ட பள்ளம் போலிருந்த இடத்திலே முன்பே விழுந்திருந்த அவன் தோழன்களுடன் சேர்ந்து விழுந்தான்...
அற்புத கோட்டை
ரக்ஷவ் சமனிமிட்டு குழப்பமான முக பாவத்துடன் கீழே அமர்ந்திருந்தான்... அவன் முன்னோ யுகி அகி மற்றும் விகி எதையோ சொல்ல அரை மணி நேரத்திற்கும் மேலாக முயன்று கொண்டிருந்தது...
இவனும் ஏதேதோ சொல்லி அலுத்து போய் விட்டான்... அவன் கனித்து கூறும் அனைத்திற்குமே சிம்மயாளிகள் மூன்றும் தலையை இடவலதாய் மட்டும் தான் ஆட்டியது...
ரக்ஷவ் : என்ன தான் சொல்ல வரீங்க ... இது ஒன்னுமே புரியல வேற எதாவது செய்ங்க என உறுமுவது போல் பாவித்து கொண்டிருந்த மூன்றையும் கண்டு கூறினான்...
சலைக்காமல் சரியென தலையாட்டிய சிம்மயாளிகள் ஒன்றை ஒன்று பார்த்து கொண்டது .. பின் விகி ஓடி சென்று ஒரு வட்டத்தை அதன் கை விரல்களால் வரைந்து அதனுள் நிற்க ஓடி சென்று விகியின் மேல் அகி நின்றது...
ரக்ஷவ் : டேய் டேய் பொருமையா... ஆடுது ருமூ என சிம்மயாளிகள் ஓடுவதால் உருவாகும் அதிர்வில் தள்ளாடியபடி கூறினான்.... ஆனால் அதை அவைகள் கண்டு கொண்டால் தானே....
யுகி இப்போநு ஓடி சென்று அதன் சகோதரர்கள் மீது தாவி அகி மேல் நின்று அதன் வாயை அகல விரித்து மேலே நோக்கியது....
யுகி அதன் வாயிலிருந்து தீயை உமிழ அது சிம்மயாளிகளின் பின் பலத்த சத்தத்துடன் விழுந்து வெடிக்க அதை சற்றும் எதிர்பார்த்திடாத ரக்ஷவ் எழுந்து நின்றான்... வெடித்த தீயின் விழைவால் வந்த புகை சிம்மயாளிகளை மறைத்து நிழலில் அது ஒரு புது வித விலங்கின் உருவத்தை காட்டியது...
அந்த உருவத்தை கண்டதும் ரக்ஷவ் அவன் தலையில் கை வைத்து அதிர்ச்சியுடன் இவைகள் செய்த காரியத்தை கண்டு ஆயுதகள அறையின் வாயிற்கதவை நோக்க தடதடவென ஓடிவரும் சத்தம் அவ்வறையை நிறைக்கவும் ரக்ஷவ் ஓடி சென்று யுகி ஏற்படுத்திய தீ அடையாளத்தை மறைப்பதை போல் அதன் மேல் சென்று நின்று கொண்ட அடுத்த நொடி படாரென கதவு திறக்க மேல் மூச்சு கீழ் மூச்சும் வாங்க நின்றான் ரித்விக்...
ரக்ஷவ் அவனை கண்டு அவஸ்த்தையாய் இளிக்க சிம்மயாளிகள் ஒன்றின் மேல் மற்றொன்று நிற்பதை ரித்விக் கவனிக்கும் முன்பாக கலைய நினைக்க அதற்கும் முன்பே ரித்விக் அவைகளை கவனித்திருந்தான்...
ரித்விக் : என்னாச்சு ரக்ஷவா..
ரக்ஷவ் : ஒன்னுமில்லையே குருவே என முளிக்க சரியாக அனைவரும் அப்போது அங்கு கூடியிருந்தனர்...
அனு : என்னாச்சு ரக்ஷவ்... சிம்மயாளிகள பாக்க போறேன்னு தான டா வந்த... என்ன சத்தம்...
ரக்ஷவ் : அது ஒன்னுமில்லல மம்மி யுகி என யுகியை காட்டி சொல்ல வரும் முன் யுகி " டேய் சொல்லாத டா " என்பதை போல் அவன் காதிற்கருகில் உறும ரித்விக் யுகியின் அருகில் சென்று ரக்ஷவை அவன் நின்ற இடத்திலிருந்து அலேக்காய் தூக்கி அவனருகில் நிற்க வைத்து விட்டு ரக்ஷவ் நின்றிருந்த இடத்தை நோக்கினான்...
ரக்ஷவ் பீதியுடன் ரித்விக்கின் பின்னிருந்து எட்டி பார்க்க அவன் கண்களோ சிம்மயாளிகளை உள்ளுக்குளே கரித்து கொட்டுவதை வெளி காட்ட அவைகளோ அவனிடம் கெஞ்சுவதை போல் பாவமான பப்பி பேசுடன் நின்றது...
மது : என்னாச்சு மாமா...
ரித்விக் : ம்ஹும் ஒன்னும் இல்ல டா... எப்பவும் நடக்குரது தான் என சாதாரணமாய் திரும்பவும் ரக்ஷவ் பெருமூச்சு விட்டான்...
எங்கு யுகி இப்படி செய்ததனால் தனக்கு ஏதேனும் ஆபத்து விழைய வாய்ப்பிருப்பதால் குருக்களும் தாய்களும் சிம்மயாளிகளுடன் இனி விளையாடக் கூடாதென கூறி விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு...
அனு : அதுக்கு எதுக்கு ரக்ஷவா நீ பயப்புடுர.. யுகி இப்டி தரைய எரிக்கிரது வழக்கம் தான்... அதுக்காக அப்டி நாங்க சொல்லீட்டா மட்டும் யுகி அகி விகி சும்மா இருந்துடுவாங்களா சொல்லு என சிரிப்புடன் கூற ரக்ஷவ் இப்போது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவளை நோக்கினான்....
ரக்ஷவ் : என்ன மம்மி சொல்றீங்க..
அனு : உன் பாதுகாப்புக்காக உன்ன சிம்மயாளிங்க கூட விளையாட கூடாதுன்னு நாங்க சொல்லிட்டா அவங்க மூணு பேரும் சும்மா இருந்துடுவாங்களான்னு கேக்குறேன் டா செல்லம் என மீண்டும் கூற இப்போது சிம்மயாளிகள் அனுவை " அப்டி சொல்லுவீங்க " என்பதை போல் மெதுவாய் உறுமி கொண்டே பார்த்தது...
ப்ரியா : பாத்தியா ரோஷத்த... நீங்க மூணு பேர் இருக்குரப்போ ரக்ஷவ்க்கு எதுவும் ஆகாது ... நாங்க உங்கள பிரிக்கவும் மாட்டோம் என உறுதியளித்தாள்...
ரக்ஷவ் : ஈஈஈஈஈஈ என என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இளிக்க அவனது கள்ளம் கபடமற்ற புன்னகை என்னவோ ஏதோவென்று பதறியடித்து கொண்டு வந்திருந்த அனைவரின் மனதையும் நிம்மதியடைய செய்தது...
பவி : அட கோவப்படாதீங்க யுகி அகி விகி... அனு சொன்ன மாரி நாங்க யாரும் ரக்ஷவ உங்க கிட்ட இருந்து பிரிக்க மாட்டோம்... ஒருத்திய தவிற
ரக்ஷவ் : யாரந்த ஒருத்தி என முகத்தை தூக்கி வைத்து கொண்டு கேட்க...
நிரு : வான்மதி குட்டி உன்ன கூட்டீட்டு போய்டுவாள்ள கண்ணா... என்றதற்கு சிம்மயாளிகள் மூன்றும் யாரந்த வான்மதி என்பதை போல் ரக்ஷவை முறைத்தது..
ரக்ஷவ் : ஆமால்ல... நா என் வீட்டுக்குக் கூட போனும்ல... இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்தா நா எல்லாத்தையும் மறந்துடுவேன் போல அம்மா...
ஒவீ : பரவாயில்ல கண்ணா... போறப்போ அதெல்லாம் பாத்துக்களாம் வா வந்து சாப்டுட்டு விளையாடுரதா இருந்தா விளையாடு இல்ல பயிற்சி எடுக்க போறதா இருந்தா .. பயிற்சி கூடத்துக்கு போகலாம்...
ரக்ஷவ் : சரிம்மா... வாங்க போவோம் என அனைவருடனும் வெளியே செல்ல நாயகன்கள் மட்டும் அறையிலே இருந்தனர்...
ரித்விக் : யுகி அகி விகி எத ரக்ஷவ்க்கு காமிக்கனும்னு முயற்சி பன்னீங்க... நீங்க ஒருத்தர் மேல ஒருத்தர் ஏற மாட்டீங்களே என கேட்டதற்கு சிம்மயாளிகள் மூன்றும் என்ன பதில் கூற என்பதை போல் ஒன்றை ஒன்று பார்த்து கொள்ள இறுதியாக மோகினி உண்ண அழைக்கவும் சஹாத்திய சூரர்கள் அங்கிருந்து சிந்னையுடனே கீழே சென்றனர்...
பாலமுத்திர கோட்டை
ராம் தரையில் விழுந்த வேகத்திற்கு அருண் யம்மா என அலர அருண் மீது வந்து விழுந்திருந்த ராம் உடனே எழுந்து அவனுக்கு எழ உதவினான்....
அருண் : என்னா கணம் கணக்குர டா நீ... என் முதுகெலும்பு உடஞ்சு போச்சு போ என ராமிடம் கத்தி கொண்டிருக்க
ராம் : டேய் டேய் போதும் டா வா டா பேசாம என அவன் வாயை மூடி மற்றவர்கள் நோட்டமிட்டு கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றனர்...
வருண் : இது எந்த இடம் டா... எதாவது தெரியிதா...
சித்தார்த் : ம்ஹும் சரியா தெரியல டா... நாம போக போக பாலமுத்திர கோட்டையோட அடி பகுதிக்கு தான் போய்ட்டு இருக்கோம்...
மிதுன் : அப்போ அது சரியான பாதை தான டா.. என அவனது கூரான விழிகளால் அந்த பெரிய அவை போலிருந்த இடத்தை நோட்டமிட மிதுனின் கண்களை அழகாய் தன் புறம் இழுத்தது ஒரு கன்னாடி
அக்கன்னாடியின் அருகில் சென்ற மிதுன் அதை மெதுவாய் திருப்பி விட்டு தள்ளி நிற்க தானாகவே திரும்பி கொண்ட அக்கன்னாடியின் மேலிருந்த திரை கீழே விழ பஞ்சலோக அச்சினை கொண்ட அந்த திரை அழகாய் அவர்களை கண்டு மின்னியது...
ருமேஷ் : சப்பா ஒரு வழியா கண்டுப்புடிச்சிட்டோம் டா... என பெருமூச்சு விட்டான்...
அவனது பெருமூச்சை கண்டு சிரித்த கார்த்திக் அந்த பஞ்சலோக அச்சின் நடுவில் இருந்த சொடுக்கியை அழுத்தினான்... அதிலோ ஏதோ ஒரு மிருகத்தின் கை அச்சை போன்ற ஒரு அச்சு இருந்தது...
அதே அச்சு சஹாத்திய சூரர்கள் பராக்ரம வீரன்களின் புறங்கையில் வைத்து விட்டு அச்சிற்கும் ஒத்துப்போவதை போலிருக்க கதவு திறக்காதிருந்ததை கண்டு உடனே நினைவு வந்தவனாய் தான் அந்த பச்சை நிற புத்தகத்திலிருந்து எடுத்த சுருளை அக்கதவின் பூட்டில் உட்புகுத்தி திருப்பினான் ராகவ்... சரியாக பஞ்சலோக அச்சிலிருந்து வெளியேறிய கண்களை கூசும் ஒளியுடன் ஏதோ ஒன்று மின்னி மறைய தங்கள் முதலடியை ஒன்றாய் சர்ப்பலோகத்தில் பதித்தனர் நமது இரண்டாமணி நாயகன்கள்...
அவர்களின் கால் அடுத்தடுத்து அம்மண்ணில் பதியவும் சுற்றத்தின் காற்றழுத்தம் மாறுபட தெள்ளத்தெளிவாய் இருந்த விண்ணில் கருமேகங்கள் கூட்டம் கூட்டமாய் கூடி மழைக்கு தயாராகின..
ஆனால் அது சில நொடிகளுக்கு தான்.... அந்த கருமேகங்கள் நாயகன்களின் ஒவ்வொரு விழிகளும் அவரவர் ஆத்ம நிறத்தில் ஒளிர்ந்தடங்கியதும் தனிச்சையாகவே கலைந்து சென்றது...
சர்ப்பலோகத்தின் அழகை கண்டு மெய் மறந்து நின்றிருந்த நாயகன்களின் பின் விதுஷும் ருமேஷும் வாயிலின் வழியாக உள்ளே வர யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் முன் ஒரு புறவி வந்து சீரி கொண்டு நின்றது... அதிலிருந்து நெஞ்சில் சர்ப்பலோக முத்திரை பதிக்கப்பட்டு மிடுக்குடன் இறங்கினான் சர்ப்பலோகத்து கோட்டையின் சேனை தலைவன்....
அவனை கண்டதும் ருமேஷ் விதுஷ் இருவரும் " சர்ப்பலோக கோட்டையின் சேனை தலைவன் " என கூறியபடி அதிர அதை கேட்டதும் இரட்சகன்களும் உடன் பராக்ரம வீரன்களும் அதிர்ந்தனர்....
அவர்களனைவரையும் இன்னும் அதிர வைப்பதை போல் அவர்களின் பின்னிருந்து ஒலித்தது துருவின் குரல்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... சாரி சாரி நேத்து யூடி குடுக்க முடியல... பட் ஷ்யுர் இன்னைக்கு டபுல் யூடி... நைட்டுக்குள்ள இன்னோறு யூடி குடுத்துடுறேன்... நெக்ஸ்ட் என்ன நடக்க போகுதுன்னு எதாவது கெஸ்ஸிங் இருக்கா... ஈஈஈ கண்டிப்பா இப்போ நடக்க போறத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... பட் ஷ்யுர் அது யாரையும் டிஸ்ஸப்பாய்ன்ட் பன்னாது... சோ லெட்ஸ் சீ... மறக்காம கமென்ட்ஸ் சொல்லுங்க... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro