மாயம் - 51
துருவ் : இரட்சய பத்மவிமோச்சன முவ்வியாளன்
ருமேஷ் : என்னண்ணா இது... ஏன் நீ இவ்ளோ ஷாக்கா இருக்க...
துருவ் : அது ருமி... இது இது இந்த சிலை எதுன்னு உங்களுக்கு தெரியலையா...
அனைவரும் : தெரியலையே...
துருவ் : உங்களுக்கும் தெரியலையா... அப்போ எதுக்கு இங்க இருக்கு... என நாயகன்களை நோக்கினான்...
மித்ரன் : எங்களுக்கு தெரிஞ்ச வர இங்க முன்னாடி எந்த சிலையுமே இருக்காது...
அஜய் : ஆனா நாங்க போன வாரம் வந்தப்போ இங்க எங்களோட மிருக சிலைகள் இருந்தது...
துருவ் : ஓஹ்..
அஜய் : சரி அதுனால என்ன துருவ் மாமா... தெளிவா சொல்லுங்க...
துருவ் : இது யாளிகளுக்கு அடுத்து மதிக்கப்படுர விலங்கினம் அஜு.. அதவாது அதிரதீர வம்சத்தோட சின்னம்... இரட்சய முவ்வியாளன்... முவ்வீரயன்னு சொல்லுவாங்க.. இந்த விலங்கோட நாமமே இது தான்... இது பலாயிரக்கணக்கான வருடங்களுக்கு இடைல சில குறிப்பிட்ட காலங்கல்ல மட்டும் தான் வெளிவரும்... அத நா பாத்தது கிடையாது.. வரலாறுல படிச்சிர்க்கேன்... இதுக்கு உருவ சிலையா ஒன்னே ஒன்னு இருந்ததாகவும் அது ஐயாயிரம் வர்ஷம் முன்னாடி நடந்த யுத்ரபோர்ல காணாம போய்ட்டதாவும் சொன்னாங்க... அந்த சிலை உண்மையாவே நம்ம அற்புத கோட்டைல தான் இருக்கு... ஆனா இங்கையும் இருக்கும்னு நா எதிர்பார்க்கவே இல்ல...
விதுஷ் : இது யாளிகளுக்கு அடுத்து மதிக்கப்படுர விலங்குனா.. இரட்சகன்களோடதா என்ன என துருவ் கூறிய தகவல்களிலும் இப்போது இவன் கேட்ட கேள்வியிலும் முளித்த சகோதரகள் மூவரை பார்த்தவாறு தன் தமையனிடம் வினவினான்...
துருவ் : ஹான் அதுக்கு வாய்ப்பு இல்ல விது.. ஏன் டா உங்களுக்கு அப்டி எதாவது நியாபகம் இருக்கு...
ஆதியன்த் : எங்க வம்சத்தோட சின்னமே இது தான்னு நீ சொல்லி தான் தெரியிது துருவா.. இத பத்தி எதுமே எங்களுக்கு தெ... இல்ல நியாபகம் இல்ல...
மிதுன் : அப்போ தெரிஞ்சிருக்கும்ங்குரியா...
ஆதியன்த் : மே பீ எங்களுக்கு தெரிஞ்சிருக்களாம்... பட் எனக்கு எதுவும் நியாபகம் இல்லடா... ஏன் டா ஞான பழ உடன் பிறப்பே... நோக்கு எதாவது நியாபகம் இருக்கு என சித்தார்த்தை நோக்க அவனும் எந்த வித தடையும் இன்றி தலையை இட வலதாய் ஆட்டினான்...
அஷ்வித் : சரி விடுங்க அப்ரமா அத பத்தி பாப்போம்... வாயில தேடலாமா...
ருமேஷ் : போலாம் போலாம் எங்க இருக்குனு எவனுக்கு நியாபகம் இருக்கு...
கார்த்திக் : எனக்கு வாயில அடையிரதுக்கான முதல் படி நியாபகமிருக்கு...
துருவ் : முதல் படியா.. அப்போ மொத்தமா எத்தன படி டா இருக்கு...
கார்த்திக் : அது ஒரு பத்து பதினொன்னு இருக்கும் டா... ஏன் ஏற மாட்டியா நீ என கேட்டவனை துருவன் கொலை காண்டுடன் முறைக்க கார்த்திக் தன் வாயில் சனி பகவான் கதகளி ஆடுவதை உணர்ந்து வாயை இழுத்து மூடி கொண்டான்...
அருண் : பத்து பதினொன்னெல்லாம் இருக்காது எனக்கு தெரிஞ்ச வர ஒரு நாப்பதருவது படி இருக்கும் என யோசனையுடன் கூற ருமேஷும் விதுஷும் அவனை வாயை பிளந்து கொண்டு பார்த்தனர்..
விதுஷ் : டேய் அஜு... உன் ஐலாவ இப்போலாம் நம்மளால கண்டுப்புடிக்க முடியது டா... நீங்க செஞ்சு வச்ச நாப்பதருவது படியல்லாம் தாண்டி போரதுக்குள்ள யோகபரிபூஜன தினமே வந்துடும் என கூறவும் அஜய் விழி பிதுங்கி அவனை நோக்கினான்...
ஆதவ் : மாங்கா மடையா... அவன் படின்னு நாம நடந்து போற படிய சொல்றான் டா... தாண்டி போற தடைகள் நமக்கு அஞ்சு தான் இருக்கும்...
ருமேஷ் : சப்பா... ரொம்ப சந்தோஷம்... சரி அது என்ன குறிப்பிட்டு அஞ்சு
வருண் : பஞ்சலோக சக்திகள்னா என்னவாம்... உலோகம் உருவான ஐந்து சக்தி... சோ அஞ்சு ஸ்டேஜ் இருக்கும்... என சர்வ சாதாரணமாய் கூறினான்...
துருவ் : இரு இரு... உலோகம் உருவான ஐந்து சக்தின்னா.. ஏதோ உள் குத்து இருக்க மாரி இருக்கு.... எதாவது இருக்கா டா...
மித்ரன் : அதான் முன்னாடியே சொன்னோம்ல டா... அந்த வாயில அவ்ளோ சீச்ரிரம் கண்டுப்புடிக்க முடியாது... அந்தளவுக்கு தான் அத பாதுக்காக்குர சக்திகள் இருக்கும்...
ருமேஷ் : எவ்ளோ பெரிய சக்தியா இருந்தாலும் உங்களுக்கு வழி தெரியும்ல...
அஜய் : எங்களுக்கு வழி தெரியும் தான்... ஆனா அந்த வாயில அடையிரது அத்தன தடையையும் செஞ்ச எங்களுக்குமே அது சவால் தான்.... துருவ் மாமா கனிப்பு படியே அந்து அஞ்சு தடைகளும் பஞ்ச பூதங்களான தீ நீர் காற்று ஆகாயம் மற்றும் நிலமே தான்...
விதுஷ் : போச்சு... நாம போன மாரி தான்... என தலையில் கை வைத்து அங்கேயே அமர
ராம் : என்னாடா அதுக்குள்ள கை விட்டா எப்டி வா வா... உன்ன வச்சு என்ன என்னலாம் ப்லன் பன்னீர்க்கோம்... கார்த்தி கமான் வா வா போலாம் என விதுஷை இழுத்தபடி செல்ல மற்றவர்களும் அவ்விருவரை பின் தொடர துருவிற்கு மாத்திரம் மூவ்வீரையனின் சிலையை கண்டு கொள்ளாது அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை... ஆயினும் அவனுக்கு வேறு வழியும் இல்லாததால் தன் தோழர்களை பின் தொடர்ந்தான்...
அற்புத கோட்டை
வீர் : நமக்கு தேவையான சில தகவல்கள் மட்டும் கெடச்சிருக்கு டா...
சேவன் : அதை முதலில் விளக்குக்கங்கள் சூரரே..
அஷ்வன்த் : காணாமல் போன குழந்தைங்க எல்லாருமே வெவ்வேறு உயிரின வம்சத்துல பிறந்த குழந்தைகள் தான்.. அவங்களுக்கு உருவ மாத்திக்கிரத தவிற குறிப்பிட்ட சக்திகள் வேற எதுவும் இல்ல... ஆனா தர்மன் ஐயா உண்மைய சொல்லாம பாதி மழுப்பி ஏதேதோ பிதற்றிட்டே இருக்குரத பாத்தா அந்த குழந்தைங்க யோகபரிபூஜன தினத்துல எதுக்காகவோ உபயோகப்படுவாங்கன்னு நினைக்கிறோம்...
சரண் : அந்த குழந்தைங்களுக்கு அங்க என்ன டா வேலை இருக்க போகுது... அவங்க யோகபரிபூஜன யாகம் நடத்துரது நம்ம சக்திகள பறிச்சு அவங்கள வலிமை படுத்திக்க தானே... அதுக்கு தேவையான எட்டு வம்சத்துல ஏற்கனவே முதல் வம்சமான மகா வம்சத்தை மடிய வச்சிட்டாங்க... அவங்களுக்கு நிகராவா குழந்தைங்கள உபயோகிக்க போறாங்க...
ரனீஷ் : ச இல்லலடா... வேற எதுக்கோ தான் குழந்தைகள உபயோகிக்க பாக்குறாங்க ... ஆனா எதுக்குன்னு தான் தெரியல... என சொல்லி முடித்த மறு நொடி வளவன் கஜா என குழப்பமாய் ஜன்லை நோக்க ஜன்னலின் வாயிலிலே அமைதியாய் வந்தமர்ந்தான் நம் துருவின் பருந்து கஜன்...
கஜன் : வணங்குகிறேன் தந்தையே.. வணங்குகிறேன் சஹாத்திய சூரர்களே... வணங்குகிறேன் மெய்காப்பாளரே... என வளவனுக்கும் நாயகன்களுக்கும் சேவனுக்கும் வணக்கத்தை தெரிவித்தவன் வளவனை நோக்கினான்...
வளவன் : இங்ஙனம் என்(ன) வினை புரிகிறாய் கஜா... நின் விசு வசுவுடன் வீற்றிருப்பதாயல்லவோ துருவ் பறைந்தான்...
கஜன் : துருவ் தமையனின் திடீர் அழைப்பினால் இங்ஙனம் வர நேர்ந்தது தந்தையரே.. தமக்காய் தமையனிடமிருந்து ஒரு தகவல் எடுத்து வந்துள்ளேன்...
அர்ஜுன் : விசனம் யாது கஜா..
கஜன் : இக்கோட்டையில் பல வருடங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் ஒரே ஒரு உரு சிலை மாத்திரமே வடிக்கப்பட்டதென எண்ணப்படும் அதிரதீர வம்சத்து சின்னமான இரட்சய பத்மவிமோச்சன முவ்வியாளனின் சிலை பாலமுத்திர கோட்டையிலும் இருப்பதாய் துருவ் தமையன் தெரிவிக்க கூறினார்
இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி தான்...
அஷ்வன்த் : மேலும் தொடரு கஜா
கஜன் : அச்சிலை எவ்வாறு அக்கோட்டையில் வந்ததென்றும் எதற்காய் இருக்கிறதென்றும் அக்கோட்டையை உயர்த்திய பஞ்சலோக வம்சத்தவர்களான தம் மைந்தன்களும் அறியவில்லையாம்... இதன் பின் வேறேதேனும் குறியீடிருக்க வாய்ப்பிருக்குமே ஆனால் அதை விரைவில் தம்மை கண்டறிய கூறவே எம்மை அனுப்பினன்...
வளவன் : சரி கஜா.. விரைந்து வந்தமைக்கு நன்றி... தற்போது நீ விடைபெறொலாம்...
கஜன் : எமது கடமை தந்தையே... வருகிறேன் என அங்கிருந்து விடைப்பெற்று சென்றான் கஜன்...
முகில் : இன்னும் அந்த சிலை அங்கத் தானே டா இருக்கு....
வீர் : அங்க தான் டா இருக்கு வா என முன் வெளியேற மற்றவன்களும் வேகமாய் அவனுடன் வெளியேறினர்....
சிம்மயாளிகள் முவ்வீரயனின் நாமத்தை கஜனிடமிருந்து கேட்டது முதலே எதனாலோ அமைதியடைந்திருந்தது... ஆனால் அம்மூன்றிற்குள்ளும் ஏதோ கலந்துரையாடல் சென்று கொண்டு தான் இருந்தது....
கோட்டைக்குள் இருந்த நாயகிகள் தம் கணவர்கள் எங்கோ பதட்டத்துடன் செல்வதை கண்டு ஒருவரை ஒருவர் நோக்கி கொள்ள அவர்களுடன் இருந்த நீலி மற்றும் பிறை வேகமாய் பின் தொடர்ந்து சென்றனர்...
சேவன் ரனீஷின் தோளில் அமர்ந்திருந்தான்... இவர்கள் என்றும் போல் கீழிருந்த தரையிலிருந்து திடீரென எங்கோ மறைந்திருந்ததால் நீலி பிறை இருவரும் அவர்கள் எத்திசையில் சென்றனரென அறியாமல் குழம்பி போய் பின் நாயகிகளிடமே வந்து விட்டனர்...
தீவிரமான பபிற்சியிலிருந்த அனு மற்றும் ரக்ஷவ் சிம்மயாளியின் உறுமலில் கலைய ரக்ஷவ் அனுவை செல்லவா என்பதை போல் மூச்சு வாங்க நோக்கவும் அனுவும் புன்னகையுடன் அனுமதித்தாள்...
ரக்ஷவ் : தன்க்ஸ் மம்மி.. தோ வந்துடுறேன் என வாளை இடையில் பொருத்தி கொண்டு கோட்டையின் உட்புறத்திற்குள் ஓடினான்... அவன் ஓடுவதை கண்டு தோழிகள் அனைவரும் புன்னகையுடன் சற்று இளைப்பாற அமர்ந்தனர்...
குடுகுடுவென வேகமாய் மாடிக்கு ஓடிய ரக்ஷவ் ஆயுகதள அறையின் கதவை மெல்ல திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி எட்டிப் பார்க்க அவனை சற்றும் கண்டு கொள்ளாமல் யுகி அகி மற்றும் விகி மும்மரமாய் கருத்து கணிப்பு நிகழ்த்துகிறோம் என்னும் பெயரில் மற்ற எவருக்கும் புரியாத அவர்களின் பாஷையில் காச்சு மூச்சென உறுமி கொண்டிருந்தது...
முதலில் அதை அஃப்ரிக்கன் ஜுராசிக் வல்டை பார்ப்பதை போல் முகத்தை அஷ்டகோணலாக்கி ஒன்றும் புரியாமல் பார்த்த ரக்ஷவ் அதே முகபாவத்துடன் உள்ளே செல்ல அவனது காலடி ஓசையில் மூன்றும் சட்டென திரும்பி பார்த்தது...
சர்ப்பலோகம்
ஒரு கட்டத்திற்கும் மேலாக யட்சினிகளின் தைரியம் கலந்த கூற்றுக்களை கேட்க இயலாமல் கொதித்தெழுந்த மகரகாந்தன் அவனது கரத்தை ஓங்கி அந்த உணவு மேஜையில் அடிக்க அதில் உருவான அதிர்வு அனைத்து உணவுகளையும் வெவ்வேறு திசையில் பறக்க விட்டதுமல்லாமல் யட்சினிகள் மூவரையும் கீழே தூக்கி வீசியது...
நாயகிகள் அதிர்ந்து போய் எழுந்து நிற்க கீழே விழுந்த மூவருக்கும் எழிலும் வேதித்யாவும் உடனே உதவி செய்தனர்...
கீழே விழுந்ததால் கையை அசைக்க முதலில் கடினப்பட்ட ஆருண்யா பின் அதே கையை முறுக்கி மறு கையால் பிடித்து கொண்டாள்...
நித்யா ஏதோ ஒரு பொருள் குத்தியதால் கழுத்தை நிமிர்த்த இயலாமல் வலியுடன் பல்லை கடித்து கொண்டு சரிவாய் அவர்களை பார்த்தாள்... அதித்தி தன் சகோதரிகளின் இந்நிலைக்கு காரணமான மகரகாந்தனை அவளையுமறியாது சினத்துடன் குரோதமாய் முறைத்து பார்த்தாள்...
அவளது சினம் ஏற ஏற அவளின் விழிகளும் மெதுமெதுவாய் வெண்மை நிறத்தை தத்தெடுக்க அதித்தியின் உடலை சுற்றி வெண்ணிற ஒளி ஒன்று ஒளிர தொடங்கியது...
அதித்தியின் திடீர் மாற்றம் அவளது சகோதரிகளையே அதிர செய்ய மறுநொடி அதித்தியின் கரத்திலிருந்து அதி வேகத்தில் பாய்ந்த வெண்ணிற மின்னல் கீற்றொன்று அந்த நீண்ட உணவு மேஜையை தூக்கி வீச கீழே தடுமாறி விழுந்த அமைச்சன்கள் மீதே படாரென போய் விழுந்தது அந்த மேஜை...
ஐலாவின் அறையிலிருந்த பத்யரூனா அந்த மாபெரும் சத்தத்தில் பதறி அடித்து இங்கு ஓடி வர வெளியே காவலுக்கு நிற்கும் சேனை வீரர்கள் ஓடி வந்து அந்த மேஜையை தூக்க முயற்சிக்க அதித்தி அதற்கு வாய்ப்பே அளிக்காமல் அவளது கரத்தை உயர்த்தியே வைத்திருந்தாள்...
அவள் சக்தியினால் உருவாகும் அழுத்தம் அந்த மேஜையை அவர்கள் மீது மேலும் மேலும் அழுத்த கழுத்திலிருந்து அந்த மேஜையில் நசுங்க தொடங்கிய அமைச்சன்கள் வலியில் கதற ஆருண்யா தன் தங்கையின் கரத்தை பிடித்து கீழிறக்கிய மறு நொடி அந்த மேஜையை இழுக்க முயற்சித்து கொண்டிருந்த சேனை வீரர்கள் திடீரென அழுத்தம் குறைந்ததால் அந்த மேசையுடன் தடுமாறி கீழே விழுந்தனர்...
கழுத்தை பிடித்து இறுமியவாறு எழுந்து வந்த மிதரவர்தனன் கோவத்தில் அதித்தியை அறைய கை ஓங்க அதற்கும் முன்பாக அவனது கரத்தை பிடித்த நித்யா தன் கருநீல கண்களால் அவனை ஏறிட்டாள்...
நித்யா : எனது இளவலை நீ தொடும் வரை அமைதி காப்பவள் யானல்லடா... அவளை நெருங்க நீ எம்மை உதலில் தாண்ட வேண்டும் என கூறியவளின் கை பிடி மிதரவர்தனின் கரத்தில் இறுகி கொண்டே போனது...
மிதரவர்தனன் : எம்மை அவமதித்து தாக்கியதும் அன்றி தற்போது எதிர்த்து வேறு நிற்கிறாயா
பத்யரூனா : அமைச்சனே... வேண்டாம்.. இது யுத்தத்திற்கான ஊழ்(முறை) அல்ல... தாம் பொருமை காக்க வேண்டும்.. தையை கூர்ந்து தேவையின்றி அசம்பாவிதம் நிகழ அனுமதியளிக்காதீர்... தாம் மூவரும் அமருங்கள்... மகள்களே அமருங்கள் என நாயகிகள் அனைவரையும் அமர கூறினார்...
மிதரவர்தனன் : என்ன கூறுகிறாய் பத்யரூனா... இவளது இளவலவள் எம்மையும் என் சகோதரன்களையும் தாக்கியுமிருக்கிறாள் நீ அவளை உயிருடன் விட கூறுகிறாயா ... அது மட்டுமன்றி அவளை அமர வைத்து உபசரிக்கிறாய்...
பத்யரூனா : தேவையற்ற யுத்தம் வேண்டா எனவே கூறுகிறேன் அமைச்சனே.... தாம் தற்போதே இரட்சகன்களினால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டுள்ளீர்.. மீண்டும் ஒரு யுத்தம் வேண்டா என்க அவரை முறைத்து பார்த்த மிதரவர்தனன் அங்கிருந்து வேகமாய் நகர மற்ற நான்கு அமைச்சன்களும் அவனை பின் தொடர்ந்து யட்சினிகளை முறைத்தவாறு செல்ல தன் கதிரையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த அதித்தி அவர்களுக்கு சலைக்காமல் நேருக்கு நேர் பார்த்தாள்..
அதை காண காண இரண்டு வருடமாய் தன் காலடியிலே கிடந்த இவள் என் முன்னேயே கால் மேல் கால் இட்டு அமர்கிறாளா என அருளவர்தனனுக்குள் தீ ஜுவாலை பொங்கி எழ நித்யாவின் கடுங்கோபமான பார்வை தற்போது அவர்களை எதிர்த்து இன்னும் சக்திகளை கூட்டி விட கூடாதென உணர்த்தியதால் அங்கிருந்து அகன்றான்...
அற்புத கோட்டை
சிம்யாளிகளின் படம் பதிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட பாதை அத்துடனே முடிவடைந்திருக்க அந்த ஆளுயர புகைபடத்தை ரவி மெதுவாய் நகர்த்த அதன் பின் ஒரு இருள் நிறைந்த வழி தென்பட்டது...
அந்த வலியின் வாயிலிலே மூன்று செதில்களுள் முவ்வேறு வண்ணமுடைய இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டு அழகாய் ஜொளிக்க அதிலிருந்து மஞ்சள் நிற இரத்தினக்கல்லை எடுத்த ரவி சிம்மமாளியின் படத்திற்கு பின் இருந்த ஒரு சிறிய இடத்தில் பதித்தான்... அவன் அதை பதித்த உடனே அதே வாயிலின் தரையின் கீழ் ஏதோ உருளும் சத்தம் கேட்க தரை மீதிருந்த பலகை நகர்ந்து அங்கு ஒரு பாதை தென்பட்டது... ரவி வழி விட்டு நிற்கவும் அனைவரும் அந்த பாதையிலிருந்த படிகட்டுகளின் வாயிலாக கீழே இறங்ககினர்.. வளவனும் இறங்கியதும் அந்த மஞ்சள் நிற கல்லை தன்னுடன் எடுத்து கொண்ட ரவி வேகமாய் அந்த பாதைக்குள் இறங்க அந்த படிகட்டுகளின் மேல் தானாக அப்பலகை மூடி கொள்ள அதற்கு முன்பாகவே சிம்மயாளிகளின் அந்த படத்தால் திறந்திருந்த அக்கதவும் மூடியிருந்தது...
அந்த மஞ்சள் நிற கல்லுடன் கீழே இறங்கிய ரவி அஷ்வன்த் சுவற்றில் இருந்த ஒரு தீப்பந்தத்தில் தீயை மூட்டி எடுத்ததும் அந்த கல்லை அவனிடம் கொடுத்தான்... அஷ்வன்த் அந்த தீ கம்பத்தை இறுதியாய் வரும் வளவனிடம் கொடுக்க வளவன் பின் ரவி மற்றும் ரித்விக் வந்து கொண்டிருந்தனர்....
சேவனும் வளவனும் முன்பு இப்பாதையெல்லாம் கண்டதில்லை... அவர்களுக்கு அனைத்தும் புதியாய் இருக்க நம் சஹாத்திய சூரர்களோ ஏதோ தினமும் அந்த வழியிலே ஆபீஸ் போக பழக்கி விட்டதை போல் இருளில் கூட சரியாய் ஏதோ ஒரு திசையை நோக்கி வரிசையாய் சென்று கொண்டிருந்தனர்...
அந்த பாதையிலே இரு சுவற்றிலும் பல வகையான ஓவியங்களும் படங்களும் சிற்பங்களும் கலைநயங்களும் நிறைந்திருந்தது...
ரனீஷின் தோளில் அமர்ந்தவாறு சேவன் அனைத்தையும் ஆச்சர்யம் ததும்பிய விழிகளுடன் பார்த்து தன் நினைவிற்குள் நிறப்பி கொண்டு வந்தான்... இரண்டே நிமிடங்களில் அவர்கள் சென்ற பாதை ஓரிடத்தில் முடிய வளவன் தன்னிடமிருந்த தீக்கம்பத்தால் அங்கிருந்த தீக்கம்பங்களில் தீ மூட்டி ஒளியூட்டினான்... அங்கோ முட்டு சந்தை போல் அனைத்தும் மூடி இருந்தது.. நாளா பக்கமும் சுவறு தான்...
அஷ்வன்த் அவனிடமிருந்த மஞ்சள் கல்லுடன் ஒருமுறை சுற்றி நோக்கியவன் பின் ஒரு சுவற்றின் மையத்திலிருந்த ஒரு சிறிய பகுதியில் பதித்து அந்த கல்லை அழுத்தி இடது புறமாய் தள்ளி வலது புறத்தில் இழுத்தான்... அக்கல்லை சுவற்றின் கற்கள் உள்ளே இழுத்துக் கொள்ள அஷ்வன்த் நின்றிருந்த சுவற்றின் நேரெதிரே இருந்த சுவற்றில் ஒரு விரிசல் மெதுமெதுவாய் தோன்றி அந்த சுவறு இரண்டாய் பிரிந்தது...
அச்சுவற்றிற்கு பின் ஒரு சிறிய பாதை தென்பட அதே சுவற்றின் ஓரத்தில் ஒரு பச்சை நிற கல் ஒன்று ஜொளிக்க அதை வீர் எடுத்து கொண்டு உள்ளே சென்றான்...
அந்த சிலை வீற்றிருப்பது மிகவும் பாதுகாப்பான இடம் தான் என்பது சஹாத்திய சூரர்கள் இப்படி மாற்றி மாற்றி விதவிதமாய் திறக்கும் பாதைகளிலே வளவன் மற்றும் சேவனுக்கு புரிந்தது...
இறுதியாக வீரின் கரத்திலிருந்த பச்சை நிற கல்லை ஒரு பலகையில் பதித்து சற்று தள்ளி நின்றான்... சில நொடிகளில் அந்த வட்டமான பலகை மெதுவாய் சுழல தரையிலிருந்து ஏதோ ஒன்று மேலே எழுந்தது....
சுழன்றவாறு திரும்பிய அது மெதுவாய் நிற்க அனைவரும் முவ்வீரயனின் சிலைக்கு முன் இப்போது நின்றிருந்தனர்... முவ்வீரயனின் சிலையில் அங்கங்கு மஞ்சள் பச்சை மற்றும் வெண்ணிற கற்களும் பதிக்கப்பட்டிருந்தது...
முவ்வீரயனை நேரில் இன்றளவும் நம் நாயகன்களும் கண்டதில்லை.. அதன் சிலையுருவை மட்டும் தான் பாதுகாத்து வருகின்றனர்... ஓவியமாய் மட்டுமே மொத்த உலகிலும் அது இருக்கிறது... அது உயிர்த்தெழுமா என்ற சந்தேகத்துடன் அது எப்படி உயிர்த்தெழும் என்ற கேள்வியும் அனைவரிடத்தில் இருந்தது...
பாலமுத்திர கோட்டை
மாடி படிகளின் வாயிலாக ஏதோ ஒரு அறையை தேடி கண்டுப்பிடித்து சென்ற ராம் அந்த அறை கதவை தம் கட்டி அழுத்தம் கொடுத்து தள்ளி திறந்தான்...
உள்ளே வெறும் இருளே மண்டிக்கிடக்க சித்தார்த்தின் கரத்தில் மிதந்த தீ பந்து அவர்களுக்கு ஒளியூட்டியது...
அந்த தீ பந்தினை சட்டென சித்தார்த் ஒரு புறம் அடிக்க அந்த அறையில் பரவலாய் அனைத்தும் பலத்த சத்தத்துடன் சிதறியது... அதை கண்டு நாயகன்கள் அனைவரும் தங்களை தயார் படுத்தி கொள்ள துருவ் ருமேஷ் விதுஷ் மூவரும் என்ன வருகிறதென்றே தெரியாமல் தற்காப்பு முறையில் நிற்க அந்த அறைக்குள் அனைவரும் நுழைந்ததும் உடலை அசைத்து பச்சை நிற ஆழ்ந்த நிறத்தில் கல்லென உடல் கொண்ட ஒரு நாகம் கண்களில் நிலத்தின் அடையாளத்தை கொண்டு ஊர்ந்து வந்தது...
அவர்கள் எதிர்க்கும் முதல் கட்டம்... நிலம்
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... யூடி புடிச்சிருக்கா... புடிச்சிருக்கும்னு நம்புறேன்... அடுத்த யூடி முடிஞ்சா இன்னைக்கே கூட வரும்... பாப்போம்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro