மாயம் - 50
வண்ண வட்டங்களுக்கு மத்தியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு நாக மனிதனை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதியன்த்
அவனருகிலே மற்றவன்களும் அந்த உயிரற்ற நாகமனிதனின் உடலை கண்டவாறு நின்று கொண்டிருக்க ஆதியன்த் வாய் திறவாமலே நேற்று இரவு ஐலாவை கடத்தி சென்ற சர்ப்பம் இவனாகத் தான் இருக்கக் கூடுமென இரண்டாமணி நாயகன்கள் அனைவரும் கணக்கிட அதற்கு அடுத்தக்கட்டமாய் அவர்கள் அனைவரின் மூளையிலும் உதித்த கேள்வியை ருமேஷ் வெளியிலே கேட்டிருந்தான்...
ருமேஷ் : அப்போ ஐலா எங்க...
ஆதியன்த் : தெரியல... ஆனா இதே சர்ப்பத்தத் தான் நான் பாத்தேன்...
அஜய் : ஐலா சர்ப்பலோகத்துல தான் இருக்கா... நாம இன்னும் தாமதிக்க வேண்டாம் ப்ரதர்ஸ்..
துருவ் : அவசரப்படாத அஜு... சர்ப்பலோகம் போறதுக்கு நமக்கு பாதை வேணும்...
வருண் : பாதைனா... எத துருவ் சொல்ற...
துருவ் : வழி தான் டா...
ராம் : ஏன் டா வழியே தெரியாமத் தான் எங்கள கூட்டீட்டு வந்தீங்களா
விதுஷ் : ராசா அந்த வழிய நீங்க தான் கண்டுப்புடிக்கனும்... இருந்த எல்லா வழியும் அழிஞ்சு போச்சு.. இருக்குரது ஒன்னு தான்... அதுவும் சாகாரகாந்தனோட கண்பார்வைல தான் இருக்கு...
ருத்ராக்ஷ் : அப்போ நாமளே உருவாக்கனுமா....
ஆதவ் : உருவாக்குரதுக்கு உண்டான சக்தியெல்லாம் நம்ம கிட்ட கெடையாது டா... மோர் ஓவர் முக்கியமான தேவை கொண்ட நாக சக்தி முழுசா இங்க யார் கிட்டயுமே இல்ல... அதற்கு துருவ் தனக்குள் நாக சக்தி இருக்கிறது என கூற வருவதற்கு முன்பாக
சித்தார்த் : அப்டீனா நாம சாகாரகாந்தனோட கன்ட்ரோல்ல இருக்குர வாயில கண்டுப்புடிக்கனுமா...
கார்த்திக் : மச்சான்.. அவன் கன்ட்ரோல்க்குள்ள இருக்க வாயில் வழியா நாம சர்ப்பலோகம் போக முடியும்னு நினைக்கிர... என யோசனையுடன் அருகில் நின்ற அருணிடம் வினவ அவன் யோசனையிலிருந்து வெளி வராமலே
அருண் : பரலோகம் வேணா போலாம்னு நினைக்கிறேன்... அதற்கு அனைவரும் அவனை முறைக்க கார்த்திக்கோ " நான் அதை அமோதிக்கிறேன் மச்சான் " என்பதை போல் பாத்தான்...
ஆதியன்த் : பீ சீரியஸ் டா...
அருண் : சீரியஸா தான் டா சொல்றேன்... அந்த வாயில் வழியா போனா சர்ப்பலோகத்துக்குலாம் இல்ல டரெக்ட்டா சொந்த செலவுலையே பரலோகம் போய்டலாம்...
அஜய் : சரி அப்போ என்ன செய்ரது... இல்லாத வாயிலுக்கு எங்க டா போக சொல்றீங்க...
மிதுன் : நமக்கு ஒரு வாயில் இன்னும் இருக்கு என்றதும் அனைவரும் அவனை காண... அருண் அதற்கு தலையசைத்து அமோதித்தான்...
அருண் : ஆமாடா... ஒரே ஒரு வாயில் இன்னும் இருக்கு...
ஆதியன்த் : அது... அது இன்னும் இருக்கும்னு நினைக்கிரியா அருண்... என முதலில் இழுத்தவன் பின் யாதென உணர்ந்து சற்று அதிர்ச்சி கலந்த சந்தேகத்துடன் அருணை நோக்கினான்... அதே சந்தேகம் பராக்ரம வீரன்கள் மற்றும் இரட்சகன்களின் முகத்திலும் படர ஒரு சிலரின் வதனத்தில் குழப்ப இரேகைகளும் இருந்தது...
அருண் : நிச்சயமா இருக்கும்...
ருமேஷ் : இருந்த வாயில் எல்லாமே அழிஞ்சிடுச்சு... இன்னும் ஒன்னு எங்க இருக்கு...
மித்ரன் : பாலமுத்திரை கோட்டையில டா என்றவனின் முகத்தில் ஐம்பது சதவீதம் குழப்பமும் மீதி சதவீதம் சந்தேகமும் நிறைந்திருந்தது...
வருண் : குழப்பம் அவசியமில்ல மித்ரா... பாலமுத்திரை கோட்டைல அந்த வாயில் இன்னும் இருக்கு ... அது தான் நமக்கு வழியாவும் அமைய போகுது என உறுதியளித்தான்...
ருமேஷ் : டேய் என்ன டா பேசுறீங்க... தெளிவா சொல்லுங்களேன்....
ருத்ராக்ஷ் : போன ஜென்மத்துல நாங்க எல்லா வாயிலையுமே அடைக்கல ... ஒரே ஒரு வாயில எதுக்கும் தேவைபடும்ங்குரதுக்காக அடைக்காமையே விட்டு வச்சிட்டோம்... என கூறி முடிக்கும் முன் துருவ் பட்டாசாய் பொரிய தொடங்கினான்...
துருவ் : ஏன் டா அது வேற எதாவது தப்பான விஷயத்துக்கு உபயோகமாகியிருந்தா என்ன டா ஆகுறது... அப்டி ஒரு வாயில் இன்னமும் இருக்குன்னு யாருக்காவது தெரிஞ்சிருந்தா பூலோகத்தோட நிலமை என்னவாயிருக்கும்... ஒரு வாயில உருவாக்க நேரம் செலவழிக்காம முன்னாடியே யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள் அந்த வாயில் வழியா பூமிக்கு வந்துருந்தா என ஆகுறது... எதாவது ... என கத்தி கொண்டே போக இவன் இப்படி கோபப்பட்டே பார்த்திராத அனைவரும் அவனை விசித்திரமாய் பார்த்தனர்...
விதுஷ் : அண்ணா கூல்... நீ ஹைப்பர் ஆக இது நேரமில்ல...
மிதுன் : கால்ம் டௌன் துருவ்... அந்த வாயில் இன்னமும் இருக்குன்னு எங்க பதிமூணு பேர தவிர்த்து இப்ப வரைக்கும் உங்க மூணு பேர தவிர வேற யாருக்கும் தெரியாது... அது தெரியவும் வாய்ப்பே இல்ல டா... ஏன்னா அது இருக்குரது பாலமுத்திரை கோட்டைல... அத யாராலையும் திறக்க முடியாது... அதோட இத்தன வர்ஷமும் பாலமுத்திரை கோட்டை மண்ணுக்குள்ள தான் இருந்தது... அதனால அத கண்டுப்புடிக்கவும் யாராலையும் முடிஞ்சிருக்காது டா...
துருவ் : அப்போ பாலமுத்திரை கோட்டை மண்ணுக்குள்ள போனதுக்கு காரணமும் நீங்க தானா...
அஷ்வித் : அப்டி சொல்ல முடியாது துருவா... நாங்க பாலமுத்திரை கோட்டைல உள்ள வாயில யாருமே கண்டுப்புடிக்க முடியாத படி தான் மறச்சி வச்சிருக்கோம்.. எந்தளவுக்குன்னு நாம அங்க போகும் போது உனக்கே புரியும்... ஆனா பாலமுத்திரை கோட்டை மண்ணுக்குள்ள புதஞ்சிது எங்க எதிர்பாரா மரணத்தால தான்...
விதுஷ் : வெயிட் வெயிட்.. இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்... உங்க பிறவி நியாபகம் வந்துடுச்சா...
ராம் : அப்டியும் சொல்லலாம்... ஏதேதோ சில விஷயங்கள் மட்டும் நியாபகம் இருக்கு... சரி இப்போ அது அவசியமில்ல... பாலமுத்திரை கோட்டைக்கு உடனே போகனும் வாங்க...
சித்தார்த் : நேரம் தாமதிக்க வேண்டாம்... உடனே வாயில கண்டுப்புடிச்சு திறக்கனும் என முன் ஓடிய ராமை பின் தொடர்ந்து இவன் ஓட மற்றவர்கள் அவ்விருவரை பின் தொடர்ந்து ஓடினர்...
சர்ப்பலோகம்
அந்த உணவு கூடத்திலிருந்த பத்தடி நீள உணவு மேஜையில் பல விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டிருக்க மையத்திலே ஐந்து அமைச்சர்களும் அமர்ந்து வயிறு முட்ட கண்டதையும் உண்டவாறிருந்தனர்...
மறு புறத்திலோ ஒன்பது கதிரைகளில் வாகாய் அமரவும் முடியாமல் சாயவும் முடியாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரே பொசிஷனில் அமர்ந்தபடி அவரவர் முன்னிருந்த தட்டையே நோக்கி கொண்டிருந்தனர் நமது நாயகிகள்... அவர்களின் இடது புறத்தில் யட்சினிகள் மூவரும் குனிந்த தலை நிமிராமல் அவர்களின் உணவை மிகவும் பொருமையாக உண்டு கொண்டிருக்க சித்ரியா வேதித்யா மற்றும் எழில் மட்டும் அனைவருக்கும் மாற்றி மாற்றி பரிமாறியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்...
அருளவர்தனன் : எழிலினியா.. அருளவர்தனனின் சத்தத்தில் பதறி போய் திரும்பிய எழில் அவனுக்கு எதிரே சென்று நின்றாள்...
எழில் : வணங்குகிறேன் அமைச்சனே..
அருளவர்தனன் : இருக்கட்டும்.. யமது விருந்தினர்களை கவனிக்காது பரிமாறும் பணியில் என்(ன) வினை புரிய போகிறாய்... பஞ்சலோக விந்தைகளை கவனியுங்கள் என காட்டமாய் கூற தலையை ஆட்டியவள் உண்ணாமலே அமர்ந்திருந்த நாயகிகளிடம் சென்றாள்...
பஞ்சசோலக விந்தைகளென்ற பெயரை கேட்டதும் தலை நிமிராது அமர்ந்திருந்த யட்சினிகள் மூவரும் ஒரு நொடி விழித்து பார்க்க அதித்தி ஆர்வத்தில் நிமிர்ந்தே பார்த்து விட்டாள்...
எப்போதடா அவர்கள் நிமிர்வார்கள் என அவர்களின் திசையிலே விழி வைத்து காத்திருந்த கயல் அதித்தி நிமிர்ந்ததும் ஏதோ கூற வர அதற்கு முன் திடீரென மேஜையில் தன் புஜத்தை பலமாய் அடித்து அனைவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினான் மிதரவர்தனன்...
மிதரவர்தனன் : இன்றைய தினம் தம்மனைவருக்கும் முதல் விருந்தாய் அமைகிறது.. இன்னும் சரியாக ஓர் கிழமையில் தமது வினைகளையும் பூர்த்தித்து பயிற்வித்திடுவோம்... ஆதலால் வாய்ப்பினை தவற விடாது நாழியை அனுபவியுங்கள்... தாம் விருப்பப்படும் அனைத்தும் எந்த ஒரு குறைவுமின்றி தமக்கு கிட்டும் என புன்னகையுடன் கூறினான்...
நித்ரா : நீ..ங்க...ள் கூ..கூ..றிய..வை மு..டி..ந்.தது..ம் எ..ங்..க..களை வி..வி ட்டு.. விடு..வீர்...களா என திக்கித் தினறி அவனிடம் வினவியவளின் நடுங்கும் கரத்தை சந்தியா அழுத்தி பிடிக்க அவளின் குரலில் இருந்த தினறலையும் பயத்தையும் உணர்ந்ததும் ஆருண்யா கவலையுடன் அவளை நோக்கினாள்...
மிதரவர்தனன் : தாராளமாய்.. இன்னமும் ஒற்றை கிழமை மாத்திரம் தான்... அன்றைய நன்னாள் விடிந்து எம்மைவரது விருப்பம் எத்தீங்குமின்றி ஈடேறி விட்டதெனில் தம் அனைவரையும் தமது இருப்பிடத்திற்கே விடுவித்திடுவோம்...
கயல் : உண்மையாகவா.. என கேட்டவளின் முகத்தில் அப்பாவித்தனம் தெரிந்தாலும் குரலில் சந்தேகம் தான் நிறைந்திருந்தது...
விஞ்ஞவெள்ளன் : மெய்யாகத்தான்... எம்மைவரது விருப்பம் ஈடேறிவிட்டால் தமது அவசியம் இங்கு தேவையன்று.. உண்மையில் நம் நாயகிகளின் சக்தியும் உதிரமும் தான் அவர்களுக்கு தேவை... அதனாலே அவர்களின் திட்டம் படி அனைத்தும் நடந்தால் இவர்களை விடு வடுவதாய் கூறி கொண்டிருக்கின்றனர்....
நித்யா : பின் எவ்வினையிற்காய் அப்பெண்டிரை வலுக்கட்டாயமாய் பிரித்து வந்து இங்கு சிறை வைத்திருக்கிறாய் விஞ்ஞவெள்ளா என பல்லை கடித்து கொண்டு தலை நிமிராமல் கோவமாய் கேட்ட நித்யாவை நோக்கி திரும்பியது அனைவரது கவனம்...
நம் நாயகிகளுக்கு நித்யாவின் வார்த்தைகளும் அவளின் கோவமும் உடலில் சிலிர்ப்பை மூட்ட சித்ரியா வேதித்யா மற்றும் எழில் இவள் சினத்தை வெளிகாட்டுவதால் எத்துனை தண்டனை அனுபவிப்பாளோ என கவலையுற அமைச்சன்களுக்கோ சினம் தலைக்கேறியிருந்தது...
விஞ்ஞவெள்ளன் : சிரத்தை கொய்திடுவேன் பாவையே.. எந்நாமத்தையே உரைக்கிறாயா... அமைச்சன் எம்மை அவமதித்ததற்கு உமக்கு மரண தண்டனை விதிக்கவும் தயங்க மாட்டோம் என்றறிவாய் தானே..
நித்யா : இயன்றால் அவ்வினை புரிந்து எமக்கிந்த சிறை வாசத்திலிருந்து விடுதலை அளித்திருக்கலாமல்லவா விஞ்ஞவெள்ள.... தாம் இன்னமும் தாமதிப்பதேனாம் என ஏளனமாய் கேட்டவள் அவனை சற்றும் கண்டு கொண்டதை போல் தெரியவில்லை...
அதே போல் தான் அவளது இரு சகோதரிகளுமே இருந்தனர்...
சாகாரகாந்தன் : என்ன நித்யா... அமைச்சன்கள் மீதுள்ள ஐயம் தளர்ந்ததோ... உமக்கு உம்முடைய தண்டனைகளை மீண்டும் விதிக்க வேண்டுமா என கை முஷ்டியை இறுக்கி கோவத்தை கத்தி வெளிப்படுத்தாமல் குரலில் காட்டினான்...
ஆருண்யா : ஐயம் இருந்த இடமறியாது மறைந்து நாட்களாகிவிட்டதை உமது சகோதரன் அருளவர்தனன் உமக்கு முன்னமே தெரிவிக்காததற்கு யாம் பொருப்பேற்க இயலாதடா
சாகாரகாந்தன் : பின்பொருள் ஏதும் அறியாது நாவை நீட்டுகிறாயல்லோ.. அதை விரைவிலே ஒட்ட நறுக்குகிறேன் பார்
ஆருண்யா : மீண்டும் உரைக்கிறேன் நன்கு செவியை தீட்டி உள் வாங்கிக்கொள்.. உமக்காய் அஞ்சி நடுங்கும் சகோதரிகள் இறந்து காலங்கள் ஓடிவிட்டது... தற்போது உயிர்த்திருப்பது சர்ப்பலோக இளவரசி லீலாவதியின் மகவுகள் என கூறுகையில் ஆருண்யாவின் கடல் போன்ற நீல விழியில் ஒரு வெறி தெரிந்தது...
மகரகாந்தன் : மெய் அறிந்ததன் தாக்கம் இதுவா... சரி தான்... ஹாஹாஹாஹா முட்டாள் பேதையே.. உமது தாயரையே (தாயையே) இரு தினம் முன்பறிந்து விட்டு அவள் எம் தங்கை என்பதை எவ்வாறடி நம்புகிறாய் நீ...
அதித்தி : ஒரு கிழமை முன்னே தம்மை இங்கு கண்டு தாமும் இந்த அமைச்சன்களுள் ஒருவன் என்பதை யாம் நம்பும் பொழுது நாக சக்தி படைத்த எமது அன்னை சர்ப்பலோகத்தின் இளவரசி தான் என நம்ப யாம் ஏனடா தயங்கிட வேண்டும் என கால் மேல் கால் போடாத குறை தான் அதித்தி கேட்ட தோரணம்...
யட்சினிகள் மூவரும் இத்னை விரைவில் அவரவர் மனவலிமையை கூட்டி தம்மையே எதிர்க்க துணிந்து விடுவர் என அமைச்சன்கள் எதிர்பார்த்திருக்கவில்லை...
இவையனைத்தையும் மறைவாய் பார்த்து கொண்டிருந்த பத்யரூனா முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நாயகிகள் வீற்றிருந்த அறைக்கு சென்றார்...
ஒரு மணி நேரத்திற்கு முன்பு இங்கிருந்து தான் அவசர அவசரமாக நாயகிகளை அங்கிருந்து அழைத்து கொண்டு உணவு கூடத்திற்கு சென்றிருந்தார்...
அவர்களை அனுப்பியதும் இங்கே வந்தவர் அதே அறையிலிருந்த ஒரு இரகசிய அறையை திறக்க அவ்வறையிலிருந்த மெத்தையில் ஆழ்ந்த மயக்கத்தில் சுற்றமறியாது கிடத்தப்பட்டிருந்தாள் ஐலா...
யாவருமறியாது கதவை மூடி விட்டு உள்ளே வந்த பத்யரூனா ஐலாவை சில நிமிடங்கள் பார்த்து கொண்டே நின்றிருந்தார்...
அற்புத கோட்டை
ரக்ஷவ் என்றுமில்லாது அன்று அனுவுடன் வாள் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தான்... அவனது ஒவ்வைரு தாக்குதலையும் தனக்கு ஏற்றபடி மாற்றி எளிமையாய் எதிர்த்து கொண்டிருந்தாள் அனு.. அவர்களை சுற்றி வர்ஷி மது மற்றும் வீனா அவரவர் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்...
உணவு வேலைகளையும் யாளிகளை பயிற்றுவிக்கும் வேலைகளையும் தான்யா திவ்யா பவி மற்றும் ரக்ஷா நிரு ப்ரியா பிரித்து கொண்டிருந்தனர்...
ஆயுத கள அறையிலோ சிம்மயாளிகள் அம்மூவருக்கு மட்டுமே புரியும் பாஷையில் மும்மரமாய் ஏதோ பேசி கொண்டிருக்க ஒரு புறம் சரணும் முகிலும் ஒருவர் மற்றவருடன் போரிட்டு தங்களை தானே பயிற்று வித்து கொண்டிருக்க மறு புறத்தில் அர்ஜுனும் ரித்விக்கும் ஏதோ ஒரு சிந்தனையிலே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.... அதே அறையில் ஒரு மேஜையின் முன் தலையை கரத்தால் தாங்கியவாறு அமர்ந்திருந்தான் ரனீஷ்...
அவன் முன் மயூரன் ரவிக்கு தந்து விட்டு சென்ற தர்மன் ஐயா எழுதிய கடிதமும் உடனே தாவக்கட்டையை தாங்கி அமர்ந்திருந்த சேவனும் இருந்தான்...
அவர்களுக்கு நேரெதிரே ரனீஷின் நிலை கொஞ்சமும் மாற்றாமல் தம்பிக்கு தகுந்த அண்ணனாய் ரவியும் அதே போல் தலையை தாங்கியவாறு கண்கள் மூடி அமர்ந்திருந்தான்... தர்மன் ஐயாவை காண சென்ற அஷ்வன்த் மற்றும் வீர் இன்னமும் திரும்பவில்லை...
சேவன் : சூரரே.. சூரரே என மெல்லமாய் அழைக்க
ரனீஷ் : ம்ம்ம்ம் என்றான் மெதுவாய்...
சேவன் : இன்னும் எத்துனை நாழிகளை தரையை அளவெடுத்தவாறு களிக்க உள்ளீர்கள்..
ரனீஷ் : ம்ம்ம்ம்ம்
சேவன் : ம்ம்ம்ம்ம் என்ற சொற்றொடரில் எமக்கு தெரிந்தவரை எண் அல்ல சூரரே...
ரனீஷ் : ம்ம்ம்ம்ம்ம்
சேவன் : தமக்கே தெரியுமெனில் எதற்காய் ம்ம்ம்ம்ம் என கூறினீர்கள்...
ரனீஷ் : ம்ம்ம்ம்ம்ம்
சேவன் : சூரரே... நித்திரையிலுள்ளீரா... எழுந்துடுவீர் ஐயனே எழுந்துடுவீர்... எழுந்துடுவீர் ஐயனே எழுந்துடுவீர் என அவன் காடு போன்ற கேசத்தில் ஏறி கொண்டு குதி குதியென குதிக்க பதறி போய் ரனீஷ் எழவும் சேவன் பிடிக்க பிடியின்றி அவனது தலையிலிருந்து வீசி ஏறியப்பட அவன் கீழே விழும் முன் விகி எம்பி குதித்து கரத்தால் அவனை கட்ச் பிடித்தது...
சேவன் : மிக்க நன்றி நண்பா... மிக்க நன்றி என விகியின் கரத்தில் இருந்து கொண்டு கூறியவனை கண்டு விகி ஏதோ உறும சேவன் மீண்டும் மிரண்டு போய் ரனீஷிடமே ஓடி விட்டான்...
அர்ஜுன் : ஏன் டா இப்டி குழப்பத்துலையே இருக்கீங்க... எதாவது வாய திறந்து சொல்லுங்களேன்.... என அதற்கு மேலும் பொருக்காமல் ரனீஷின் தோளை தொட்டு திருப்பி வினவினான்....
ரனீஷ் : என் டா சொல்ல சொல்ற... நடக்குர எல்லாமே கை மீறி போய் கிட்டு இருக்கு... ஏன் நடக்குதுன்னே சில விஷயம் தெரியல... ஒரு காரணமே தெரியாம எப்டி குழப்பத்த விட்டு தெளிவாகுறது...
ரித்விக் : இப்போ என்ன குழப்பம்... ஷேஷ்வமலையில பிறந்த குழந்தைங்க கடத்தப்பற்றுக்காங்க...அவங்க எதுக்காக கடத்தப்பட்டாங்கன்னு தான.... என அவன் முன் இருந்த கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவாறே கேட்டான்..
ரவி : அது இல்ல டா... தர்மன் ஐயா வெவ்வேறு உயிரின வம்சங்கள்ள பிறந்த குழந்தைங்க காணாம போயிர்க்குரதாத்தான் குறிப்பிற்றுக்காரு... அன்னைக்கு பரிசி சொன்னத மறந்துட்டீங்களா... இருவது வர்ஷமா இதே மாரி ஏன் குழந்தைங்க பிறக்குராங்கன்னே தெரியல...அத தர்மன் ஐயாவும் சொல்லல... இப்போ அந்த மாரி அதிசய வம்சங்கள்ள பிறந்த குழந்தைங்க சர்ப்பலோக நாகங்களால கடத்தப்பற்றுக்காங்க... இதுக்கு என்ன அர்த்தம்...
சரண் : அத கண்டுப்புடிக்க தான டா நாம முயற்சி பன்றோம்... ஏன் டென்ஷன் ஆகுறீங்க...
ரனீஷ் : உங்களுக்கு புரிய மாட்டுது டா... இந்த யட்சினி வம்சத்தவர்கள் வேற ஏதோ திட்டம் தீட்டீட்டு இருக்காங்க... அதுக்கான அடுத்தடுத்த படிகள் தான் நடக்குர எல்லா நிகழ்வுகளுமே... ஆனா நாம அத தப்பா புரிஞ்சிட்டு வந்துக்குட்டு இருக்கோம்... என நிதானமின்றி படப்படப்புடன் கத்தி கொண்டிருந்த ரனீஷ் அனைவருக்கும் புதியவனே...
முகில் : மச்சான் மச்சான் டென்ஷனாகாத டா... நம்ம யோசிச்சாலே பதில் கிடைக்கும்...
ரனீஷ் : பதில் என் கண்ணு முன்னாடியே தான் இருக்கு... ஆனா என்னால அத கண்டுப்புடிக்க முடியல... இவங்க செய்யப் போற ஏதோ ஒரு காரியம் அதிகளவு வீரியத்தோட இருக்க போகுது... அது நேத்தோ இன்னைக்கோ ஆரம்பிச்ச மாரி தெரியல டா... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் இறக்குரதுக்கு முன்னாடிலேந்தே இதெல்லாம் நேர்த்தியா வகுக்கப்பட்ட திட்டமா தான் தெரியிது...
சேவன் : சூரரே... நாம் பதைபதைப்பதால் மட்டும் ஒன்றுமாகிவிட போவதில்லை... நிதான நிலையை இழக்க நேரிடுவது இன்னமும் இன்னல்களை கூட்டக்கூடும்.. சற்று பொருமைக்காப்பதே சிறத்தை சூரரே... என்க சரியாக அதே நேரம் வளவனுடன் அஷ்வன்த் மற்றும் வீர் அற்புத கோட்டைக்குள் நுழைந்தனர்...
இருள் கவ்வ தொடங்கிய வேளை பாலமுத்திர கோட்டையை அடைந்தனர் நமது இரண்டாமணி நாயகன்கள்... அவர்களை அந்த கோட்டை எதிர்பார்த்ததோ எதிர்பார்க்கவில்லையோ... கோட்டையின் கதவு தாராளமாய் திறந்திருக்க முன்னமே வந்திருந்த பராக்ரம வீரன்கள் கண்ட பத்து மிருக சிலைகளும் இன்றி அந்த ஒரே ஒரு சிலை மட்டும் தனித்து விடப்பட்டு இருந்தது... அக்கோட்டையினுள் நுழைந்த துருவின் பருந்து விழிகள் நேரே சென்று வீழ்ந்ததும் நடுநயமாய் அமைக்கப்பட்ட அதே சிலையின் மீது தான்...
அந்த சிலையை கண்ட மறுநொடியே துருவ் ஆச்சர்யத்துடன் அதனருகில் சென்று தன் கண்களை தானே நம்ப இயலாமல் நின்று கொண்டிருந்தான்...
மற்றவர்களுக்கு அவன் செய்கை புரியாது போக துருவின் நாவிலிருந்து உதிர்ந்த நீண்ட நாமமொன்று இரண்டாமணி நாயகன்கள் அனைவரையும் கட்டி இழுத்தது...
துருவ் : இரட்சய பத்மவிமோச்சன முவ்வீயாளன்...
மாயம் தொடரும்...
ஹாய்ஹலோ இதயங்களே... எல்லாரும் எப்டி இருக்கீங்க... ஐம் ஃபைன்... எக்ஸம்ஸ் ரொம்ப நல்லா எழுதியிருக்கேன்... தன்க்ஸ் டு எவ்ரிவன்... என் எக்ஸம்ஸ்க்கு விஷ் பன்னதுக்கும் ஒரு வாரத்துக்கும் மேல காத்திருந்ததுக்கும்... நேத்தே போட வேண்டியது... பட் சில அலச்சல் வேலைகள்னால முடியாம போய்டுச்சு... இந்த யூடி உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நம்புறேன்... அடுத்த யூடியோட நாளை உங்களை சந்திக்கிறேன்... புது கரெக்ட்டர் வருமான
்னுலாம் பயப்புடாதீங்க... எந்த புது கரெக்ட்டரும் வரப்போறதில்ல... நீங்க பயப்படவும் தேவையில்ல... அதுக்கு நா கரென்ட்டி... அப்ரம் திரும்பவும் நன்றி... எல்லாரும் வெயிட் பன்னதுக்கு... தன்க் யூ சோ மச்... குட் நைட்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro