Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 48

கயல் : நம்மள எதுக்கு டி இப்போ அங்க வரனும்னு சொல்றானுங்க...

மதி : எதாவது புது ப்லனா இருக்குமா...

மாயா : இல்லனா எதாவது யாகம் பன்ன போறாங்களா

வைஷ்ணவி : ஒருவேளை புதுசா யாரையாவது சித்திரவதை பன்னுவாங்களா

இக்ஷி : நாம போகாம இருந்தா என்ன நடக்கும்...

நந்தினி : யட்சினிகள இப்போ நமக்கு காட்டுவாங்களா

நித்ரா : நமக்கு தப்பிக்க வழி இருக்குமா...

நவ்யா : அன்னைக்கு கயல் கைய அறுத்த மாரி நம்மள்ள இன்னோறு ஒருத்தர் கைய அறுக்க போறானுங்களோ... என ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளை பரபரப்பாய் அடுக்க

சந்தியா : ஜஸ்ட் காம் டௌன் கெர்ள்ஸ்.. ஏன் இப்போ பறக்குறீங்க என நிதானமாய் கேட்டு அனைவரையும் அவளின் புறம் திருப்பினாள்...

நவ்யா : ஏன் டி உனக்கு பதட்டமா இல்ல...

சந்தியா : இருக்கு தான்... பட் நாம பயந்தா மட்டும் என்ன ஆகீட போகுது... இத நெகட்டிவாவே பாக்காம கொஞ்சம் பாசிட்டிவா பாப்போமே என்றதும் என்ன சொல்ல வர என்பதை போல் மற்றவர்கள் இவளை ஏறிட்டனர்..

நித்ரா : இதுல பாசிட்டிவா பாக்க என்ன இருக்கு சந்து...

சந்தியா : இருக்கு டி.. அந்த அரசவை இரவு உணவுக்கு அப்ரம் தான் நடக்க போறதா பத்யரூனா சொன்னாங்க... சோ எப்டியும்  நடு இராத்திர வர நடக்கும்.. அதுக்கு நாமளும் இந்த அறைய விட்டு வெளியேறலாம்... அப்போ எல்லாரும் பிசியா தான் இருப்பாங்க... பணியாட்களும் நம்ம சித்ரி வேதி எழில தவிர்த்து வேற யாரும் இருக்க மாட்டாங்க... அப்போ நாம யட்சினிகள தேடலாம் இல்ல..

கயல் : வேஸ்ட் ஆஃப் டைம் சந்து.. அது முடியவே முடியாது.. நம்மளையே அங்க இருக்கனும்னு சொல்லீர்க்காங்கன்னா யட்சினிகளும் அங்க தான் இருப்பாங்க... நேர்லையே நாம பாத்துடலாம்...

மாயா : இட்ஸ் ஓக்கே.. எதுக்கு நாம டைம வேஸ்ட் பன்னனும்.. அந்த நேத்துல இந்த கோட்டைய விட்டு தப்பிக்க நாம வழி தேடலாம்... என தெளிவாய் கூறினாள்...

நந்தினி : ஆர் யு சீரியஸ்.. அப்டி அது நடக்குர காரியமா இருந்தா மூணு வர்ஷமா இங்க சிறைப்பட்டு இருக்க யட்சினிகளும் இருவது வர்ஷமா இருக்குர சித்ரி வேதி எழுழிலும் தப்பிச்சிருக்க மாட்டாங்களா என கேட்டு கொண்டிருக்கும் போதே சட்டென அவர்களின் அறை கதவு தட்டப்பட வாக்குவாதத்தை கப்சிப்பென நிறுத்தி கொண்ட பெண்கள் உள்ளே வர அனுமதி கொடுத்ததும் பத்யரூனா தீவிரமான முகபாவத்துடன் உள்ளே நுழைந்தார்...

பணிப்பெண்கள் அறையில் அரசவையிற்காகத் தயாராகி கொண்டிருந்த எழிலின் அலமாரியிலிருந்த உடைகளின் இடையே மெல்ல எட்டி பார்த்தது அந்த தங்க டாலர்...

அதை விரல்களால் வருடியவளின் கண்ளில் ஒரு அழகான உணர்வு பிரதிபளிக்க நினைவுகளோ ஒரு வருடம் முன் நிகழ்ந்த நிகழ்வுக்கு பயணித்தது...

அன்று தன் சகோதரிகளுக்கு முன்பாகவே கண் விழித்திருந்த எழில் காலை வேலைகளை முடித்து கொண்டு அவளது பணிவிடைகளை செய்ய தொடங்கியிருந்தாள்..

அமைச்சன்களும் அவ்வளவாக நடமாடாத காலம் தான் அது... சாகாரகாந்தன் அவனது குகைக்குள்ளே முனிவர் போல் போய் அமர்ந்துகொள்வான்... மிதரவர்தினி(மிதரவர்தனன்) சர்ப்பலோகத்திலே இல்லாமல் பூலோகத்தில் இருந்து வந்தாள்(ன்) ... அருளவர்தினி (அருளவர்தனன்)  யட்சினிகளை கண்காணிப்பதே தன் தலையாய கடமையென சுற்றி கொண்டிருந்தான்...

பத்யரூனாவும் அப்போது இல்லாததால் இவர்களை எவரும் கண்காணிக்கவில்லை... அரசவை அமைச்சன்களின் விரும்பிய இடமான தோட்டத்திலுள்ள பூஞ்சோலைக்கு நீர் பாய்ச்சிய படி சில மலர்களை பறித்து கொண்டிருந்த எழிலை கவர்ந்தது ஒரு பருந்தின் ஓசை...

சர்ப்பலோகத்தினுள் சர்ப்பங்களையும் மனிதர்களையும் சில குறிப்பிட்ட உயிர்களையும் தவிர்த்து வேறெவரும் வாழவில்லை... பிறப்பிலிருந்து இங்கே வளரும் எழில் புத்தகத்தில் ஓவியமாய் கண்ட பருந்து கண் முன் பறப்பதை கண்டு ஆர்வமானாள்...

அந்த பச்சையும் வெள்ளியும் கலந்த நிறத்திலிருந்த பருந்து திடீரென அந்த பூஞ்சோலையிலே விழ அதை பின் தொடர்ந்து பூஞ்சோலையின் பின் பக்கத்திற்கே வந்து விட்டோம் என்பதை அறியாமல் அதை நோக்கி ஓடியவள் பருந்திற்கு பதிலாய் அங்கு பாதி மயங்கிய நிலையில் கிடந்த ஆண்மகனை கண்டு அதிர்ந்தாள்...

பெருமூச்சறித்தவாறு அங்கங்கு சில காயங்களுடன் மண்ணில் சரிந்திருந்தவனை நோக்கி மெதுவாய் எழில் நகர ... அவளது காலடி ஓசையில் பட்டென எழுந்து தன்னை தாக்கத் தான் எவரோ வருகின்றனெர தவறாய் நினைத்து அவளை தன் வியூகங்களால் கரத்திலே சிறை வைத்து பிடித்தான் விதுஷ்...

தன் ஒரு கரத்தை முதுகில் மடக்கி பின்னிருந்து அணைத்திருக்கும் யாரென்றே தெரியாத அந்த ஆண்மகனை கண்டு எழில் ஐயத்தில் நடுங்க அவளின் வேழ்விழிகளில் மிரட்சியையும் ஐயத்தையும் கண்டு கொண்ட விதுஷ் உடனே விலகி நின்றான்...

எழில் தன்னிலைக்கு வரும் முன்

விதுஷ் : யார் நீ.. சர்ப்பலோ கோட்டையின் பூஞ்சோலையில் உமக்கென்ன வினை...

எழில் : அ..தை யான் வின..விட வேண்..டும்.. தா..தாம் யார்.. இங்ஙனம் என்(ன) வி..னை புரிய வந்து..ள்ளீர் என திக்கித் தினறி ஒருவழியாக கேட்டு முடித்ததும்..

விதுஷ் : யான்.. யான் திசை மாறி இங்ஙனம் வீழ்ந்து விட்டேன் பாவையே.. தாம் ஆழிலோகத்திற்கான பாதை அறிவீரா...

எழில் : ஆழிலோகமா... தாம் ஆழிலோகத்தவரா... ஆயின் எவ்வாறு பருந்துகள் ஆழிக்குள் உயிர்க்கும்...

விதுஷ் : அல்லன் பாவையே.. யான் ஒரு பூலோகத்தவன் என கூறி முடிக்கும் முன்னே...

எழில் : பூலோகத்தவரா... என் காரியம் புரிந்துள்ளீர்... வீரர்களே... இங்ஙனம் நம் எதிரியிணத்தோர் அத்துமீறி நுழைந்து என கத்தி கொண்டிரும் போதே அவள் வாயை மூடி இழுத்து பிடித்த விதுஷ் விழி விரித்து அங்குமிங்கும் நோக்கினான்...

அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த எழிலின் நெற்றியை சரியாக அவன் கழுத்தில் கிடந்த அந்த பருந்து இறெக்கையின் முத்திரை பதித்த டாலர் இடித்து விட்டு சென்றது...

தன் பிடியிலிருந்து விடுபட திமிறுபவளை ஒரு பார்வையில் அடக்கிய விதுஷ் பின் சுற்றத்தை அலசியதும் அவளை விடுவித்தான்...

விதுஷ் : மெய் அறியாது பிழை புரியாதீர் பாவையே... அத்துமீறி நுழைவது எமது வழக்கத்திலில்லை.. திசை மாறி வந்ததாலும் மேலும் என் சிறகுகளை நீட்டி பறக்க இயலாததாலுமே இங்ஙனம் வீழ்ந்து விட்டேன்... அவன் புஜத்திலிருந்த காயத்தையும் அவன் குரலில் இருந்த உண்மையையும் உணர்ந்து சரியென தலையசைத்தாள் எழில்...

எழில் : தமது காயத்திற்கு யான் மருந்திடலாமா...

விதுஷ் : தாம் எவ்வித ஐயமுமின்றி நம்பி எமது கரம் பற்றலாமெனில்... என இவன் நிறுத்த...

எழில் : தாம் எம்மை நம்பி கை நீட்டினால் அதை பற்றவும் எமக்கு ஐயமில்லை என கூறியவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் பூஞ்சோலையின் மூலிகை மலர்களை கொண்டு அதை கைகளிலே கசக்கி ஆற்றின் நீரை வைத்து பத்து போல் அவனது காயத்தில் பூசி விட்டாள்..

வலியில் முகம் சுருக்கினாலும் அவளையே கண்ணிமைக்காது பார்த்து கொண்டிருந்த விதுஷிற்கு அவளது முகத்திறையை அகற்ற வேண்டுமென்ற எண்ணம் வரவில்லை...

விதுஷ் : தமது சகாயத்திற்கு நன்றி..

எழில் : அது எமது கடமை என சிறிதாய் புன்னகைத்தாள்...

விதுஷ் : இத்துனை நல்லுள்ளம் படைத்தவர் இக்கோட்டைக்குள் என்(ன) செய்கிறார் என்பதை அறியேன்.. ஆயினும் தமக்கு என்றேனும் ஒரு இன்னல் ஏற்படின் தயங்காது எம்மை நினையுங்கள்... வினாடிகளில் தம்மை காக்க எங்ஙனம் வீற்றிருந்தாலும் முன் வருவேன் என கூறி விட்டு அங்கிருந்து விடைப்பெற்று சென்றான்... எழிலுக்கு அவன் பெயர் கூட தெரியாது... ஆனால் எதனாலோ அவனை நம்ப மனம் ஊந்தவும் அவன் சென்ற திசையை நோக்கி புன்னகைத்தாள்...

அதற்கு பின் எழில் விதுஷை காணவில்லை... இன்றளவும் தான்.. அன்று விஞ்ஞவெள்ளனிடமிருந்து காக்க எவரேனும் வர மாட்டார்களா என தவித்தவளுக்கு அரணாய் வசு வந்தது ஆச்சர்யமாய் இருக்க... அந்த பருந்து எழிலின் நினைவுகளில் மீண்டும் விதுஷின் விதைகளை தூவி அவளுக்கு அவனது துணை என்றும் இருக்குமென்பதை போல் அந்த டாலரையும் கொடுத்து விட்டு சென்றது...

தன் நினைவுகளில் மூழ்கி தவித்த எழில் சட்டென யாரோ உலுக்கவும் திரும்பி பார்க்க தங்கையின் கரத்திலிருந்த டாலரை கண்டு அவள் பின் நின்றிருந்த சித்ரியா வியந்தாள்...

சித்ரியா : அட... உமக்கு இப்பதக்கம் எவ்வாறு கிடைத்தது எழிலா.. இதை நேற்று கயல்விழியிடமல்லோ கண்டேன்..

எழில் : என்ன) கூறுகிறீர்கள் தமக்கையே.. அவரிடம் இதை போல் வேறொரு பதக்கம் உள்ளதா

சித்ரியா : உள (உள்ளது) எழிலா.. அது அவரது தமையனதென்று குறிப்பிட்டார்.. சரி எமது வினாவினுக்கு விடை...

எழில் : ஹோ.. இது எமக்கு சில தினங்கள் முன்பு ஒரு பருந்தினால் கிடைக்க நேர்ந்தது தமக்கையே...

அதற்கு சித்ரியா பதிலளிக்கும் முன்..

வேதித்யா : நாழியாகிவிட்டது சகோதரிகளே... அரசவையின் இரண்டாம் மணியை அடித்து விட்டனர்... மூன்றாம் மணிக்கும் முன் யாம் கூடத்தில் இருக்க வேண்டும் என உள்ளே வந்து உரக்க கூறினாள்...

சித்ரியா : வா எழிலா என தங்கையிடம் கூறி விட்டு இவள் முன் நடக்க அந்த டாலரை அலமாரியிலே வைத்து விட்டு வேகவேகமாய் தன் தமக்கைகளை பின் தொடர்ந்தாள் எழில்...

அற்புத கோட்டை

பராக்ரம வீரன்களுக்கும் இரட்சகன்களுக்கும் சஹாத்திய சூரர்களாலும் யாளி வீராங்கனைகளாலும் நாகனிகளாலும் தீவிரமாய் போர்களைகளும் வாள் பயிற்சிகளும் ஆயுத உபயோகங்களும் ஒவ்வொரு நுனக்கத்துடன் கற்றுத் தரப்பட்டு கொண்டிருந்தது... அனைத்தையும் சுவாரசியமாய் சேவன் மற்றும் மயூரன் ஊக்குவித்து கொண்டிருக்க தங்கள் சைசிற்கு பவி செய்து கொடுத்த வாள்களை வைத்து கொண்டு ஜஜைன் ஜொஜைன் என சத்தமெழுப்பியவாறு வாள் பயிற்சி எடுத்தனர் நம் குட்டி ராணிகள்..

அவர்களுடனே ஐலா அவளுக்கு மோகினி அளித்த ஒரு வாளின் உதவியால் மோகினி கற்றுத்தரும் அனைத்தையும் மெதுமெதுவாய் கற்றறிந்து கொண்டிருந்தாள்... துருவன் தன் சகோதரன்கள் இருவருக்கும் பருந்து கலைகளை பயிற்று வித்து கொண்டிருக்க அவர்களை வளவன் மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான்...

யானையாளிகள் இவை எல்லாம் கவனித்தவாறு அமைதியாய் ஓரிடத்தில் வீற்றிருக்க வீட்டிற்குள்ளே அர்ஜுனும் ரனீஷும் கொட்டாவி விட்டு கொண்டு மாடி படியில் தாவக்கட்டையை கரத்தால் தாங்கிய படி அமர்ந்திருந்தனர்...

அவர்களின் முன்னோ ரக்ஷவ் கீழே சமனமிட்டு அமர்ந்து பூனை குட்டிகாளாய் மாறிய யுகி அகி விகியுடன் அரை மணி நேரமாய் விளையாடி கொண்டிருக்கிறான்...

பயிற்சிகள் தொடங்கி ஒரு மணி நேரமாகி விட்டது... முதல் அரை மணி நேரம் அர்ஜுன் மற்றும் சரணுடன் தீவிரமாய் வாள் பயிற்சியிலும் போர்கள பிற்சியிலும் இருந்த ரக்ஷவ் அடுத்த அரை மணி நேரத்தில் சிம்மயாளிகள் நித்திரை முடித்து எழுந்து வந்ததும் அதுகளுடன் விளையாட சென்று விட்டான்...

அர்ஜுன் : டேய் ரக்ஷவா... நேரமாகுது டா.. எவ்ளோ நேரம் விளையாடுவ என பாவமாய் கேட்க

ரக்ஷவ் : இன்னும் கொஞ்ச நேரம் குருவே என திரும்பியே பார்க்காமல் கத்தினான்... அவன் தலை மேல் தொங்கி கொண்டிருந்த யுகி இவ்வளவு நேரம் சந்தோஷமாய் மியாவ் மியாவ் என கத்தி விட்டு சட்டென அர்ஜுனை திரும்பி பார்த்தது..

அர்ஜுன் : டேய் யுகி... நீ முறைச்சா நா பயந்துடுவேன்னு நினைக்காத.. இப்போ நீங்க அவன் கூட விளையாடுனா அவன் எப்போ டா பயிற்சி எடுப்பான் என யுகியிடம் கேட்கவும் மடியில் தவழ்ந்த விகியின் தலையை கோதியவாறு கரத்தில் வைத்திருந்த அகியுடன் ரக்ஷவும் அவர்களை நோக்கினான்...

ஒரே நேரத்தில் யுகி அகி விகி மியாவ் என ஒரு சத்தமெழுப்பியது...

சரண் : திரும்ப நைட் விளையாடலாம் டா நீ வா என கூறவும்

ரக்ஷவ் : சரி சரி வரேன் என்றதும் ஹப்பாடா என அவர்கள் இருவரும் எழுந்து நிற்க நம் சிம்மயாளிகள் நம் நாயகன்களை முறைத்து கொண்டே ரக்ஷவ் எழுந்து நின்றதும் அவனை நிமிர்ந்து நோக்கின...

எழுந்து கொண்டு உடையை தட்டி விட்டு கொண்ட ரக்ஷவ் இன்னும் தன்னையே பார்த்து கொண்டிருந்த சிம்மயாளிகளை கண்டு என்ன என கேட்க அதற்கோ அவனையும் அர்ஜுன் சரணையும் ஒரு முறை பார்த்த மூன்றும் பின் எதுவும் கூறாமல் ஆயுதகள அறைக்குள் சென்றது...

அதன் பின் சரண் அர்ஜுனுக்கு இடையில் ரக்ஷவிற்கு வாள் பயிற்சி தொடங்கியது.. முன்பிற்கு இப்போது ரக்ஷவ் அதிகமாக கற்றுத்தேரியிருந்தான்... சரணின் எப்படிப்பட்ட தாக்குதலையும் அவனால் எதிர் கொள்ள முடியும்...

சரண் மட்டுமல்லாமல் மற்ற ஏழ்வரினதும் கூட... ஒரே வாள் தாக்குதலின் சாயலில்லாமல் முகில் அர்ஜுன் ரவி ரனீஷ் வீர் அஷ்வன்த் ரித்விக் சரண் என எட்டு பேருடனும் தனித்தனியாய் அனுவின் யோசனை படி மேலும் பலவை கற்றுக்கொள்ள எதிர்த்து போரிட தொடங்கியிருந்தான்...

யாளி வீராங்கனைகள் ரக்ஷவை வாள் மட்டுமல்லாது மற்ற ஆயுதங்களின் களைகளையும் கற்று கொடுத்து கொண்டிருந்தனர்...

இருவத்தி நான்கு மணி நேரமும் தீவிரமாய் பயிற்சிகள் சென்றது... நாயகன்கள் உடல் முழுவதும் தீராத பயிற்சியின் காரணமாய் துளிர்ந்த வேர்வையுடன் அப்போதும் விடாமல் ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட்டு கொண்டிருந்தனர்...

பராக்ரம வீரன்களுக்கும் இரட்சகன்களுக்கும் ஆறாயிரம் வருடம் முன்பே போர்களைகளில் பரிட்சயம் இருந்ததால் அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியே போதுமானதாய் இருந்தது...

அந்தி சாயும் மாலை நேரமதனில் நெற்றியில் வந்து விழுந்த கற்றை முடியை ஊதி தள்ளி விட்டு அந்த செங்கதிரோனின் கதிர் பட்டு தங்கமென ஜொளிக்கும் தன் வாளால் முன்பிருந்தவனின் வாளில் இடித்தாள் அனு...

அனு நாகனிகளுளே போர்களைகளில் திறமையானவளென்கையில் அந்த யுத்தத்தை பார்த்து கொண்டிருந்த அனைவரின் வதனத்திலும் ஒரு குறுநகை இருந்தது...

அதற்கு காரணமும் அனுவின் கண்களில் இத்துனை வருடங்கள் பின் தெரிந்த அதே வெறியும் மிடுக்கும் தான்... கோவன்கள் இறந்த பின் அனு அனைத்தையுமே கை விட்டிருந்தாள்... அவள் விரும்பி கற்றுக்கொண்ட முதல் காதலான போர்களையையும் தான்...

தன் அன்னையிற்கு முன் பெருமூச்சறித்து கொண்டு செங்கதிரோனுடன் போட்டியிடுவதை போல் கதிரவக்கண்களுடன் வாளை இறுக பற்றி அவளது தாக்குதலை எதிர்த்தான் சித்தார்த்...

கட்டுடல் மைந்தனவனுக்கே அனுவின் தாக்குதல் அனைத்தும் இடியாக தான் இருந்தது... மீண்டும் மீண்டும் அனுவை ஒரு முறையாவது வெல்ல வேண்டுமென இன்று ஒருநாள் முழுவதும் சித்தார்த் விடாமல் யுத்தத்தில் களமிறங்கினான்... அனு அவனது ஊத்வேகத்தையும் ஆர்வத்தையும் வீணாக்க விரும்பாமல் சலிப்பின்றி அவனுடன் இருவதாவது முறையாக வாள் யுத்தத்திற்குள் களமிறங்கினாள்...

தன் வாளை இழுத்து ஒரு சுழற்றில் மீண்டும் மகனை நோக்கி வீசிய அனு அவன் குறுக்கே வாளை விட்டு தடுத்ததும் நக்கலாய் புன்னகைத்தாள்... சித்தார்த் அவளை அதே நக்கலான புன்னகையுடன் காண தன் வாளை சித்தார்த் எதிர்பார்க்காத நேரம் திருப்பி அவன் அசந்த நேரம் அவனது வாளை இடித்து கீழே எறிந்தாள்...

ஆனால் அனுவே எதிர்பார்க்காமல் கீழே விழுந்த வாளை தாவி சென்று பிடித்து சித்தார்த் அனு சுதாரிக்கும் முன் அவளது வாளுடன் இடித்து வாளை தூக்கி எறிந்தான்...

அனு மகிழ்ச்சியுடன் அவனை ஓடி சென்று அணைத்து கொள்ள சித்தார்த்தும் அவனது அன்னையை மூச்சு வாங்கி கொண்டே அணைத்து கொண்டான்....

சித்தார்த்திற்கு ஊக்கமளித்து கொண்டிருந்த பராக்ரம வீரன்கள் கோரஸாய் கத்த அதே நேரம் சிம்மயாளியின் உறுமலில் அனைவரும் திரும்பி நோக்கினர்...

கோட்டைக்குள்ளிருந்து தான் உறுமல் வந்தது... ஆனால் அது ஆக்ரோஷமாகவோ எச்சரிக்கையாகவோ தெரியவில்லை... ஏதோ குதூகலத்தில் உறுமியதை போலிருக்க அனைவரும் ஆர்வமாய் உள்ளே ஓடினர்...

கோட்டையின் மையத்திலிருக்கும் மைதானத்தில் பலத்த சத்தங்கள் எதிரொலிக்க அந்த இடமே சற்று ஆடத்தான் செய்தது....

அங்கு ஐலா கை தட்டி சூப்பர் சூப்பர் என கத்தி கொண்டிருந்தாள்... அவளுக்கு அருகிலே தன் இரு கைகளை தூக்கி மகிழ்ச்சியாய் எம்பி கொண்டு உறுமி தன் ஊக்கத்தையும் தெரிவித்தது யுகி

யுகிக்கு நேரெதிரே விகியும் அகியும் தலைகால் புரியாமல் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தது.... மைதானத்திலோ ரக்ஷவும் சரணும் ஒருவர் மற்றவரின் வாளை எதிர் கொண்டு நின்றிருந்தனர்...

யுகியின் ஊக்கம் ரக்ஷவிற்கு தான் என அறிந்திருந்தவர்கள் அகி விகி ஏன் ஓட்டமாய் ஓடிகிறதென தெரியாமல் முளிக்க ஆதியன்த் சத்தமிட்டதும் இரண்டும் ஓட்டத்தை நிறுத்தி விட்டு அவனை நோக்கியது...

ஐலா : ஹே வாங்கப்பா... எல்லாரும் என் தம்பி செல்லம் எவ்ளோ சூப்பரா சண்ட போடுறான் தெரியுமா... சரணப்பாவே தினறி போய்ட்டாரு என குதியாய் குதித்தவள் சரணின் தாக்குதலை ரக்ஷவ் எதிர்த்ததும் மீண்டும் சத்தமாய் கத்தினாள்...

அஜய் : ஏ லூசு காச்சு மூச்சுன்னு கத்தாத டி... யுகி உன் மேல காண்டாகி பாஞ்சிட போகுது... என காதை மூடியவாறு கூற முதலில் பதறி போய் முளித்த ஐலா பின் சகஜமாகி

ஐலா : ப்ப யுகி செல்லம் என்ன எதுவும் செய்யாது.. இப்போ நீ பேசி பேசி ரக்ஷவ டிஸ்ற்றக்ட் பன்னா யுகி காண்டாகி உன் மேல தான் பாயும் என கூறவும் அஜய் தீவிரத்தை உணர்ந்து உடனே வாயை மூடி கொண்டான்...

ரக்ஷவ் மற்றும் சரணின் யுத்தம் தீவிரமாய் சென்று கொண்டிருக்க திடீரென கேட்ட ஒரு குதிரையின் கனைத்தலில் கவனம் சிதறிய ரக்ஷவ் ஏதோ ஒரு திசையில் திரும்பி பார்க்க " ரக்ஷவ் கவனத்த சிதற விடாத " என உரக்க கூறிய சரண் அவனது வாளால் ரக்ஷவை தாக்க அவனது கட்டளையினால் வெளி வந்து அவன் வாளை கணநொடியில் எதிர்த்தான் ரக்ஷவ்...

இருவரும் மாற்றி மாற்றி ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் யுத்தத்தை நீட்டி கொண்டே செல்ல இறுதியாய் திடீரென யுகி ஒரு பெரும் உறுமலுடன் எங்கோ ஓடுவதை கண்டு இருவரும் யுத்தத்தை இடையிலே நிறுத்தி விட்டு திரும்பி நோக்கினர்...

அனைவரின் கவனமும் திரும்ப அங்கோ கோட்டையின் வாயிலை திறந்து கொண்டு யுகி நின்றிருந்தது... அந்தி சாயும் அந்த மாலை வேளையின் ஒளியில் நிழலாய் ஒரு புரவி மெதுவாய் நடந்து வர அதன் மீது அமர்ந்திருந்தவர் புரவியிலிருந்து கீழே குதித்தார்...

அனைவரும் யாரென தெரியாமல் அந்த நிழலையே பார்த்து கொண்டிருக்க வெகு நேரம் சிந்திக்க வைக்காமல் அந்த வெண்புரவி முதலில் நிழலை விட்டு வெளியே வந்து ஒரு முறை தன் முன்னங்கால்களை உயர்த்தி கனைத்தது...

தீரா : அநியாயத்துக்கு கண்ணு வைக்காதீங்க டா... நான் தான் வந்துர்க்கேன் என நிழலை விட்டு வெளியேறியதும்...

முகில் : அடச்செய் நீ தானா.. நாங்க கூட ஏதோ புது வரவு போலன்னு நினைச்சோம்...

தீரா : ம்க்கும் இருக்குர வரவையே சமாளிக்க முடியல.. இதுல புது வரவெல்லாம் கொண்டு வந்தா பாக்குரவங்க என்ன குழி தோண்டி புதச்சிடுவாங்க... என்றபடி அந்த புறவியுடன் கோட்டைக்குள் நுழைந்து அவளது முகத்திறையை அகற்றி கரத்திலிருந்த வாளை இடையில் பத்திரப்பிடத்தினாள்..

அஷ்வன்த் : ஹ்ம்ம்ம் பெண் வீராங்கனை மற்றும் தர்ம ராஜ்ஜியத்தின் பெண் தளபதி... இதுக்கு தான் எங்க கிட்ட அப்போ பயிற்சி எடுத்த என புருவம் உயற்றி கேட்க அவள் இளித்தாள்...

நிரு : இளிக்காத எரும.. எதுக்கு டி நீ மறுமை பூமி வாசின்னு எங்க கிட்ட சொல்லல என தலையில் நங்கென கொட்டினாள்...

தீரா : ஆ.. சொன்னா எனக்கு ராஜ மரியாதையா டி செய்ய போறீங்க என வலிக்காத தலையை எக்ஸ்ப்ரஷனுடன் தேய்த்து விட்டு கொண்டாள்...

ருமேஷ் : இல்லனா மட்டும் நாங்க உனக்கு மரியாதை குடுக்கவா போறோம்... சொல்லி தொல

தீரா : உனக்கும் உன் சகோதரனுக்கும் கட்ஸ் கூடி போச்சுல்ல... பாத்துக்குறேன் உங்கள என பேசி கொண்டே இருந்தவளை அவளுடன் வந்திருந்த வீரா " நீ வெட்டி வீராப்பு பேசுனது போதும் என் விஷயத்துக்கு வந்து தொல " என கனைத்து கொண்டு தன் தலையால் தோளில் இடித்தது...

தீரா : உனக்கு உன் அவசரம் இரு டா ... என பொருமையாய் கூறியவள் இங்கு திரும்பவும்

ரக்ஷவ் : சரி பாப்பா இது என்ன குதிரை... இதுல தான் வந்தியா

தீரா : ஹான் ஆமா ஆமா.. இவன் பேரு வீரா.. கல்கி வீராவோட வாகனம் என அறிமுகம் செய்ய சஹாத்திய சூரர்கள் ஒரு தீவிரமான பார்வை உரையாடலை தீராவுடன் பரிமாறிக் கொள்ள மற்றவர்களுக்கோ அப்பெயர் அவர்களின் மனதில் ஆழ புதைந்து கிடக்கும் எதோ ஒன்றை தூண்டி விட்டது..

ஆதியன்த் : கல்கி வீரனா... கல்கி அவதாரமெடுக்குர ஒருத்தன பத்தியா சொல்ற தீரா என இவன் கேட்டே விட

தீரா : ஆ..ஆமா..

ஐலா : வாட் டு யூ மீன் அப்போ அந்த ப்ரெடிக்ஷன்ஸ்லாம் உண்மையா... மூன்று கடல் சேருர ஒரு இடத்துல ஒருத்தன் ஆர் ஒருத்தி பிறந்து உலகத்த அவன் பின் நல்வழிக்கு கொண்டு வருவான்னு புராணங்கள்ள இருக்குரதெல்லாம் உண்மையா...

தீரா ம.வ : இவ இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்குரது தப்பாச்சே என முளிக்க

கார்த்திக் : என்ன பாப்பு முளிக்கிர...

ராகவ் : சொல்லேன் பாப்பு.. உண்மையா

அர்ஜுன் : நாட் லைக் தட்.. எதாவது கற்பனை பன்னாதீங்க டா... பாப்பு நீ சொல்ல வந்தத சொல்லு என தீராவை காப்பாற்றினான்...

ரக்ஷவ் வீராவின் தலையை வருடி விட வீராவோ கண்களை மூடி அவன் அருகாமையையும் தொடுகையும் மனம் நெகிழ உணர்ந்து கொண்டிருந்தது...

வீராவின் நிலையை கண்ட தீராவும் ஒரு புன்னகையுடன் இவர்கள் புறம் திரும்ப சிம்மயாளிகள் ஏதோ ரக்ஷவுடன் வீரா இருப்பதை கண்டு பொஸெஸ்ஸிவ்வான கெள்ஃப்ரெண்டை போல் பார்த்து விட்டு பின் அவனுடனே சென்று விளையாட தொடங்கியது...

நம் நாயகர்களும் ரக்ஷவ் இந்த உரையாடலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாததால் அவனை அவன் போக்கில் மற்ற நாழ்வருடன் விட்டு விட்டனர்...

இப்போது ரக்ஷவ் கோட்டையின் வெளியே சிம்மயாளிகளுடனும் வீராவுடனும் விளையாட தொடங்கினான்...

தீரா : ஹான் நா எதுக்கு வந்தேன்னா...

ப்ரியா : நீ மறைச்சத பத்திலாம் எக்ஸ்ப்லைன் பன்ன வேணாம் டி... வி நோ அபௌட் யு.. இப்போ அத விட வேற ஒரு விஷயம் இருக்கு

தீரா : அப்டி என்ன முக்கியமான விஷயம்...

மது : அத பாத்துமா பட்டு உனக்கு இப்டி ஒரு கேள்வி ... என சிரித்து விளையாடி கொண்டிருந்த ரக்ஷவ் மற்றும் சிம்மயாளிகளை சுட்டி காட்டினாள்....

தீரா : ஹான் அதுவா.... ரக்ஷவ் இங்க வந்த புதுசுல சிம்மயாளிங்கன்னு தெரியாம சிம்மயாளிங்க பூனைகுட்டியா இருந்தப்போ அதுங்க கூட விளையாடுனான் ப்ரிமா... இத்தன வர்ஷம் களிச்சு சிம்மயாளிகளுக்கும் ரக்ஷவ் கிட்ட மட்டும் தான் போக மனசு வந்துருக்கு... அதனால தான் நேத்து அந்த போர்களத்துல பாத்ததும் அவன உடனே தூக்கி வச்சு விளையாட ஆரம்ச்சிடுச்சு அகி...

முதலணி நாயகர்கள் : ஹ்ம்ம்ம் என கோரஸாய் ம்ம் போட மோகினி வேறொரு கேள்வி கேட்கும் முன்பாக

ஐலா : அதெல்லாம் சரி.. ஆனா நாங்க சொல்லாமையே அகி அவன தூக்கி வச்சு விளையாடுச்சுன்னுலாம் உனக்கு எப்டி தெரியும்...

தீரா : இதெல்லாம் ஒரு கேள்வியா.. எனக்கு தெரியாம இங்க எதுவுமே நடக்காது தங்கம்

மோகினி : சரி சரி யுத்தப்பயிற்சி எப்போ எடுத்த குட்டிமா...

தீரா : ஓக்கே காத்துற்றுந்த நேரம் வந்துடுச்சு.. கமான் லெட்ஸ் கோ டு த ஃப்லஷ்பக்...

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னே வேந்தன்யபுரத்தின் (இன்றைய வேதபுரத்தின் ) ஆட்சி ராணி தேவசேனையிடமிருந்த காலமது...

கோவன்கள் இளவரசர்களாகவும் சஹாத்திய சூரர்கள் துணை தேவன்களாகவும் இருந்தனர்... அவர்களின் இருவத்தி மூன்றாம் வயதிலிருந்து இருவத்தி ஆறாம் வயது வரை பதினோறு பேரும் கானகத்தில் (காட்டில் ) தான் வாழ்ந்து வந்தனர்...

அப்போது தான் தீராவிற்கும் அவர்களின் பயிச்சியின் போது கற்று தர தொடங்கினர்... அப்போதைய இளவரசர்களும் துணை தேவன்களும் தங்கைக்கு கற்று தருவதற்கு காரணம் தேடாததால் சிறு வயதிலே தமையன்களால் போர்களையின் அனைத்து நுனுக்கங்களையும் வியூகங்களையும் வேகம் மற்றும் விவேகத்துடன் கற்று தேர்ந்தாள் தீரா..

மறுமைபூமி வாசிகளிலே தீராவும் அபிஜித் மாத்திரம் தான் மாயமந்திரத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள்... அதே காலத்தில் க்ரிஷ் மாத்திரம் அவனது சகோதரர்கள் மற்றும் தோழர்களின் அருகாமையில் ஒரு சிறுவனை திறம் பட பயிற்சி தந்து வளர்த்தது இன்னமும் தீரா அறியாத ஒன்று...

தீரா ம.வ : எனக்கு தெரியலன்னு நானே சொல்றேன் பாருங்க... எல்லாம் என் விதி...

தீரா : அவ்ளோ தான் ஃப்லஷ்பக் முடிஞ்சு கீழ பாருங்க

சித்தார்த் : உன்ன பாக்கனும்னா நாங்க கீழ குனிஞ்சு பாத்து தான் ஆகனும் என சிரிக்காமல் சீரியஸாய் கூறவும் தீரா அவனை முறைத்தாள்...

வளவன் : சரி சரி விடு பட்டு... வேற எதாவது சொல்லனுமா...

தீரா : ஆமா வளவனண்ணா... வீரா இங்க வா டா என விளையாடி கொண்டிருந்த வீராவை நோக்கி கத்த அங்கிருந்த ஐவரும் இவளை திரும்பி பார்க்க ஒரு முறை ரக்ஷவின் தோளில் தன் கழுத்தை பதித்த வீரா அவனது கரத்தால் வீராவின் கழுத்தை அணைத்து கொண்டதும் பின் பிரிந்து தீராவை நோக்கி ஓடி வந்தான்...

பின்னே சிம்மயாளிகளுடன் ரக்ஷவும் கோட்டைக்குள் ஓடி வர ... ஓடி வந்த வீராவின் மிதேறி கொண்ட தீரா அவளது முகத்திறையை அணிந்து கொண்டாள்...

" காலம் தாழ்த்தாது வாயிலின் பால் விரையுங்கள்.. விடியலதில் காத்திருக்கும் வெகுமதியும் ஒரு படி தான்..  வெற்றி கனி பழுக்க நாழிச் சக்கரம் சுழல தொடங்கியாயிற்று.. பின் வருமாறு சுழலும் முன் மறு விம்பத்தை அடைந்தனன்றோ பாதை தன்னால் கிட்டும் "

தீரா : வரேன் என கூறியதோடு வீராவுடன் கானகத்தினுள் மறைந்தாள்....

அவளின் சொற்கள் காற்றில் மறையும் வரை அனைவரும் ஏதோ மாயைக்கு கட்டுப்பட்டதை போல் நிற்க அவள் காற்றை போல் சென்று மறைந்த பின்னரே தன்னிலை பெற்று ஒருவரை ஒருவர் நோக்கினர்...

பிறை : அவள் எதை குறிப்பிட்டு சென்றாள் என இன்னும் புரியாமல் முளிக்க...

துருவ் : நமக்கான பாதை திறந்துட்டதா சொல்லாம சொல்லீட்டு போறா என கூறியவனின் வதனத்தில் மென் புன்னகை தவழ்ந்தது...

அஷ்வித் : அதுக்கு எதுக்கு டா ஏதோ லட்டுவ பாத்த குள்ளநரி மாரி இளிக்கிர என முகத்தை அஷ்டகோணலாக்கி கேட்டான்...

ரனீஷ் : உலகத்த காப்பாத்த போறவன் மாரி பேசு டா... சுட்டி டீவி பாக்க போறவன் மாரி குள்ளநரி டோரா புஜ்ஜின்னுற்றுக்க என அவன் கால் வாரினான்

ரக்ஷா : ஹ்ம் அங்க மட்டும் என்ன வாழுதாம்... மொதல்ல உங்கள பாத்துட்டு என் மருமகன பத்தி பேசுங்க... அம்பத்தாறு வயசு அப்பா மாரியா இருக்கீங்க என கணவன் காலை வாரினாள்...

வீரா : அம்முமா... நீ காலவாரலாம்... அதுக்குன்னு ஏஜ வச்சுலாம் மட்டம் தட்ட கூடாது... நாங்க இப்பவும் யங்கு தான்...

தான்யா : உண்மை கசக்க தான் செய்யும் நீங்க வாங்க டா... இன்னைக்கப்ரம் எப்போ நீங்க போரெல்லாம் முடிஞ்சு வயிறாற சாப்டுவீங்களோ... நாங்க இன்னைக்கு சமச்சு அசத்தீடுறோம் ....

பவி : ரக்ஷவா ஐலா சேவா மயூரா நீலி பிறை வாங்க டா தனியா சொல்லனுமா உங்களுக்கு

இளைஞர்கள் மற்றும் குட்டி நாயகர்கள் : ஹை செம்ம... தோ வந்துட்டோம் என்றபடி உள்ளே சென்றவர்களை பின் தொடர்ந்து ஓடினர்

சஹாத்திய சூரர்கள் : ஹே அப்போ எங்களுக்கு சோறு என ஒரு சேர கத்தியதற்கு எந்த பதிலும் இல்லை...

ரவி : புள்ளைங்க வந்ததும் புருஷன மறந்துட்டாளுங்க பாருங்க டா என அழுகாத குறையாக கூற அதற்கு மற்ற ஏழ்வரும் அதே அழும் ரியக்ஷனுடன் தலையாட்டி அமோதித்தர்

ரக்ஷவ் : வந்தா உங்களுக்கும் சோறு இல்லனா அதையும் நா யாளிகளுக்கு எக்ஸ்ற்றாவா குடுத்துடுவேன் குருவே எப்டி வசதி என இறுதியாய் எச்சரிக்கை கொடுக்க இனிமேலும் அவர்கள் அங்கு இருப்பர் எண்வரும் உள்ளே ஓடி இருந்தனர்..

அன்றைய வேளையை கேலியும் கிண்டலுமாய் மனமாற கடத்திய நம் நாயகர்களுக்கு மறுநாள் விடியலிலே பூகம்பமாய் வந்து விழுந்தது ஐலா இல்லாமல் வெறுச்சோடி கிடந்த அவளின் அறை...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... இந்த யூடி சுமாரா இருந்தா அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க... பெஸ்ட்டா அப்ரம் குடுக்குறேன்... அடுத்த யூடி சீக்கிரம் குடுக்க முடியுமான்னு தெரியல.... இன்னும் படிக்க வேண்டியது நிறையா இருக்கு.... அப்டியே நா யூடி குடுக்குரதா இருந்தாலும் நெக்ஜ்ட் ஃபோர் டேஸ்ல வந்தா ஒரே ஒரு யூடி தான் வரும்.... நா ட்ரை பன்றேன்... கொஞ்சம் சீரியசா படிக்கனும் இல்லையா... சோ புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்.... குட் நைட் டாட்டா...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro