Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 47

ஆதியன்த் உள்ளே நுழைந்ததும் முகிலின் பின் மற்றவர்களும் உள் நுழைந்திருந்தனர்... ஆயுத கள அறையே இருளில் மூழ்கியிருந்தது...

அந்த அறையின் ஒரே ஒரு மூலை தான் எப்போதுமே சிம்மயாளிகளின் சக்தியினால் அப்படி இருள் சூழப்பட்டிருக்கும் ஆனால் முழு அறையும் இதுவரையில் இருள் சூழ்ந்து சஹாத்திய சூரர்களே கண்டதில்லை...

ஆதியன்த் அந்த வாயிலருகிலே உள் செல்லாமல் தடைப்பட்டு நின்றிருந்தான்... அந்த அறை முழுவதிலும் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவ ரவியினால் மாத்திரமே சிம்மயாளிகளின் ஆக்ரோஷமான ஏக பெருமூச்சுக்களை செவி சாய்க்க முடிந்தது...

ஆனால் அது சரியாக எங்கிருந்து வருகிறதென தெரியாமல் முளித்தவனுக்கு வழி காட்டுவதை போல் சட்டென அங்கு ஒரு தீ பந்து மெதுவாய் எழும்ப இவர்கள் அனைவரும் தீயின் மஞ்சளும் சிகப்பும் கலந்த ஆரஞ்சு நிறத்தில் தெரிந்த சித்தார்த்தின் முகத்தை கண்டனர்...

தன் கரத்தில் மெல்லமாய் ஒரு தீ பந்தை உருவாக்கி அதனால் உருவான சிறு ஒளியில் சித்தார்த்துடன் அனைவரும் குழப்பமாய் அந்த அறையை நோட்டமிட ஏதோ ஒரு திசையிலிருந்து வந்த ஒரு பெரிய நீர் பந்து அனைவருக்கும் முன் ஒளியாய் நின்றிருந்த சித்தார்த்தை மொத்தமாய் நனைத்து விட்டு அவன் தீயை அணைந்து க்ரிஷ்ஷை போல் அவன் இன்னும் நீர் சக்திக்கு பழக்கப்படவில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தியது...

ஏனெனில் எப்படிப்பட்ட சுனாமியே ஆனாலும் க்ரிஷ்ஷின் அனுமதியில்லாது அவனை சூழ்ந்திருக்கும் தீயோ அவனால் உரு பெற்று அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீயோ அவ்வளவு எளிதில் நீருக்கு அடங்கி அணைந்து போகாது... க்ரிஷ்ஷினால் நீரின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்த அளவு சித்தார்த் இன்னும் கற்றுத்தேரவில்லை...

இந்த நீர் தாக்கல் இந்திரனுடைய சிம்மயாளியான இரண்டாம் சிம்மயாளி அகியாய் தான் இருக்கும் என தெரிந்ததுமே அனைவரும் உணர்ந்து கொண்டனர் விகி மட்டுமல்லாது இப்போது யுகி அகியும் உடன் இணைந்து விட்டதென்று

சித்தார்த் அந்த நீரில் நனைந்ததனால் இருமுவதை கண்டு பெருமூச்சு விட்ட ப்ரியா அவளின் கரத்தை உயர்த்தி ஒரு வெள்ளை பந்தினை வெளியேற்றினாள்...

சிம்மயாளிகளால் அதுகளின் சக்திகளை உபயோகித்து இவளது மந்திர பந்தை அழிக்க முடியாதென அனைவரும் அறிந்திருந்ததால் இப்போது அந்த ஒளியின் வழியே சிம்மயாளிகளை தேட இறுதியாய் வீர் மங்களாய் தெரிந்த சிகப்பு நீலம் மற்றும் வெள்ளையும் சாம்பலும் லந்த நிறங்களில் இருந்த பெரும் உருவங்களை கண்டு கொண்டான்...

என்ன தான் இருவது வருடங்களாய் வீர் அம்மூன்றிற்கும் மருத்துவம் பார்த்திருந்தாலும் அவனுமே இப்போது தான் அதுகளின் நிறத்தை இருவது வருடங்களுக்கு பிறகு மீண்டும் காண்கிறான்....

அகி ப்ரியாவின் சக்தியை எதிர்க்க வேண்டாமென்பதால் மெதுவாய் எச்சரிப்பதை போல் உறுமியது...

திவ்யா : அகி தாம் நாகனிகளின் சக்தியை எதிர்க்க இயலாதென்பதை அறிவாய்.. ஆதலின் தற்போது தாம் மூவர் ஒளியிடம் வருவதே சிறத்தை.. அதற்கான நாழியும் நெருங்கியாகிவிட்டது என காட்டமாய் கூறியதற்கு சிம்மயாளிகள் மூன்றும் மறுப்பாய் உறுமியது...

ப்ரியா : தம்மிடம் அனுமதி கேட்கவில்லை .. கட்டளையிடுகிறோம்.. நாகனிகளாய் எம்மை மதிக்க வேண்டா.. கோவன்களின் சரிபாதிகளாய் எம் உத்தரவை பின்பற்றி மூவரும் வெளியேறுங்கள் .. தற்போதே என கர்ஜித்தும் பயணில்லை...

ரவி : விகி மருத்துவம் அளிக்கப்பட்டும் தற்போது நீ முனகுகிறாய் எனில் தம்மை தெளிவுற கண்டாலே ஒழிய எம்மால் சரியான சிகிச்சையளிக்க இயலும் என்றதிற்கு இரைஞ்சலாய் வெளிவந்தது விகியின் உறுமல்...

ஆதி : சித்தா.. அவனுக்கு உடம்புல ப்ராப்லம் இல்ல... என சிந்தனையுடன் கூறியவனை அனைவரும் ஒரு மாதிரியாக ஏறிட்டனர்...

ருமேஷ் : உனக்கு சிம்மயாளியோட பாஷை புரியிதா ஆதி என கேட்டதற்கு அவன் ஏதோ பதிலளிக்கும் முன்

மோகினி : அது அவனால முடியாது ருமி என மோகினி கூறினாள்..

அனு : மகா வம்ச கோவன்களை தவிர்த்து எம் மைந்தன்களுக்கும் கூட அவர்களின் எட்டாம் அறிவான யாளியின் பாஷை அல்லன்.. ஆதலின் இரட்சகன்களாலும் அவர்களின் மொழியை புரிந்து கொள்ள இயலாது

ருத்ராக்ஷ் : ஆனா எங்களால ஏதோ உணர முடியாதும்மா என கூறியதும் அனு சற்று ஆச்சர்யத்துடன் அவர்களை நோக்கினாள்...

ஆதி : ஆமா... எனக்கு அவங்க மொழி புரியல தான்.. ஆனா ஏதோ உணர முடியிது...

சரண் : சித்து உனக்கு இதப்பத்தி எதாவது தெரியுமா என தொப்பலாய் நனைந்திருந்தவனை ஏறிட அவனும் இடவலதாய் தலையசைத்தான்...

வளவன் : கோவன்களுக்குக் கட்டுப்படும் சிம்மயாளிகள் இரட்சகன்களுக்குக் கட்டுப்பட வாய்ப்புள்ளதா ?? என அதே சிந்தனையுடன் அந்த அறையில் கண்மணிகளை சுழல விட்டவாறு வினவினான்...

ரக்ஷவ் : அல்ல... ஆனால் கோவன்களின் மைந்தன்களுக்குக் கட்டுப்பட வாய்ப்பு உள (உள்ளது) என்றவனின் கூற்றை நம்ப அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது...

ரக்ஷவ் : ஏன் இப்போ எல்லாரும் இப்டி குருகுருனு பாக்குறீங்க... நான் சரியா தானே சொன்னேன்...

அர்ஜுன் : இவ்ளோ நாள் நாங்க சித்து ருத்ரா ஆதி இங்க இல்லாததால அத யோசிச்சு பாக்கல... பட் ஹி ஈஸ் ரைட்...

ரக்ஷவ் : அப்ரம் என்ன அண்ணா... போங்க போய் அவங்கள கூட்டீட்டு வாங்க என தன் முன் நின்ற மூவரை முன்னே தள்ளினான்...

மூவரும் தங்கள் கண்களை அகல விரித்து அந்த சிறிய ஒளியின் வழியே நோக்க அனு தன் மகன்களின் முளியில் நகைத்தாள்...

அனு : டேய் உங்க அப்பா இருக்க ஏன் டா பயப்புடுரீங்க.. யுகி அகி விகி கோவத்துல தான் இருக்காங்களே தவிர உங்க மேல வெறியா இல்ல.. கோவன்களோட பசங்கங்குரதால உங்கள எதுவும் செய்ய மாட்டாங்க என இவள் பங்கிற்கு தைரியமூட்டினாள்...

பவி : ஆனாலும் அண்ணாஸ் இருக்கும் போதே சிம்மயாளிகளுக்கு ட்ரெய்னிங் குடுத்துர்க்கனும் ஹ்ம் என சலித்து கொண்டாள்..

ஆதவ் : டேய் சீக்கிரம் தான் போய் தொலைங்களேன் டா... ஈகரா இருக்குல்ல என நகத்தை கடித்து கொண்டே கத்தினான்...

ருத்ராக்ஷ் : கழுத்து மேல கத்தி தொங்குரது எங்களுக்கு டா... உனக்கு ஈகரா தா இருக்கும் என பதிலுக்கு கத்தினான்...

தான்யா : ருத்ரா ஷ்ஷ்ஷ் கத்தாத

ருத்ராக்ஷ் : அட ஏன் அத்த நீ வேற எங்க கஷ்டம் புரியாம.. என சகோதரன்கள் மூவரும் மெதுவாய் உள்ளே செல்ல .. அந்த பளிச்சென்ற ஒளியை தாண்டி நிழல் உலகமாய் தெரிந்த இருளில் அவர்கள் கால் வைத்த நொடி சிம்மயாளிகள் மூன்றும் ஆக்ரோஷமாய் உறும அந்த அதிர்வில் இரட்சகன்கள் பின்னோக்கி தூக்கி அடிக்கப்பட்டனர்...

பராக்ரம வீரன்கள் அவர்களை காண செல்ல நாகனிகள் இதற்கு மேல் விட்டால் சரியில்லை என்பதை உணர்ந்து அவரவர் கண்களை ஒளிர விட அவர்களின் ஆத்ம நிறம் மாய ஒளியாய் மூவரின் கரங்களையும் சூழ்ந்தது...

யாளி வீராங்கனைகள் அவரவர் வாளை தயாராய் பற்றி கொள்ள சஹாத்திய சூரர்கள் இப்போது முன்னோக்கி சென்றனர்... ரக்ஷவ் எதற்கும் எச்சரிக்கையாய் எச்சிலை கூட்டி விழுங்கியவாறு அவனது வாளின் பிடியை இறுக பற்றியிருந்தான்...

அந்த அறை சிம்மயாளிகளுக்கென்றே பல்லாயிரம் வருடம் முன்பு உருவாக்கப்பட்டதால் இரட்சகன்கள் சென்று இடித்ததும் சுவற்றிற்கு ஒன்றும் ஆகவில்லை...

முதலில் கையை ஊன்றி எழுந்து கொண்ட சித்தார்த் அவனது முஷ்டியை இறுக்கி நிமிர்ந்து நோக்கினான்... அவன் வேங்கையென சிறும் முன் அவனது கரத்தை பிடித்து தடுத்து நிறுத்திய ருத்ராக்ஷ் அவனது நீல நிற விழிகளால் அவனை நோக்கினான்...

பராக்ரம வீரன்கள் ருத்ராக்ஷின் விழிகளை கண்டதும் தனிச்சையாய் விலகி நிற்க ஆதியன்த்திற்கும் எழ உதவிய ருத்ராக்ஷ் இருவரின் கரத்தையும் பிடித்து கொண்டான்...

சிம்மயாளிகளை நெருங்கிய சஹாத்திய சூரர்கள் சட்டென நாகனிகளின் சக்திகளின் தாக்கம் அந்த அறையில் குறைவதை கண்டு திரும்ப நாயகிகள் அனைவரும் இப்போது அறையின் ஒரு முடுக்கில் கை கோர்த்து கண்களை மூடி நின்ற இரட்சகன்களை நோக்கி கொண்டிருந்தனர்...

ஒரே நேரத்தில் கண்களை திறந்த இரட்சகன்களின் விழிகள் அவரவர் ஆத்ம நிறத்தில் ஒளிரியது... சஹாத்திய சூரர்களுக்கும் அவர்களின் நோக்கம் புரிந்ததால் சிம்மயாளிகளின் பாதையிலிருந்து விலகி நின்றனர்...

ரக்ஷவ் ஆச்சர்யத்துடன் பார்க்கும் எதையும் விடாமல் அவன் நினைவுகளில் சேமித்து கொண்டிருந்தான்... நடுவில் நின்றிருந்த ருத்ராக்ஷ் அவன் சகோதரர்களின் கரத்தை விடவும் மூவரும் மெதுவாய் முன்னோக்கி நடந்து வந்தனர்...

முன்பை போல் சிம்மயாளிகள் உறுமவில்லை... அதற்கு பதில் ப்ரியாவினால் உருவான அந்த ஒளியில் சிம்மயாளிகளின் கண்கள் கோவன்களின் ஆத்ம நிறங்களை இரட்சகன்களின் விழிகள் வழியாக கண்டு கொண்டதினால் சிகப்பு நீலம் மற்றும் வெண்மை நிறத்தில் ஒளிர்ந்து காணப்பட்டது....

முன்னோக்கி வந்த இரட்சகன்களின் ஒவ்வொரு காலடிகளுக்கும் சிம்மயாளிகளும் உடன் வந்தது... ஆனால் எதிர்பார்க்காத ஒரு நாழியில் சட்டென விகி அவர்களை நோக்கி பாய ஆதியன்த் இலக்கே இன்றி பாயும் மங்களான அந்த உருவை நோக்கி தாவி அதன் கழுத்தை பிடித்து திரும்பி மேலமர்ந்த அடுத்த நொடி தன் கரங்களை கீழழுத்தி எம்பிய விகி அங்கிருந்து ஆதியன்த்துடன் மாயமாய் மறைந்தது...

அதை கண்டும் நேரத்தை தாழ்த்தாமல் சித்தார்த் யுகியை நோக்கியும் ருத்ராக்ஷ் அகியை நோக்கியும் ஓட அவர்களே எதிர்பாராமல் அவர்களை நோக்கி தங்கள் கால்களை நிலத்தில் தேய்த்து வெறியுடன் ஓடி வந்தது யுகி மற்றும் அகி..

சிம்மயாளிகள் தங்களை தாக்கும் முன் துரிதமாய் செயல்பட்ட சகோதரர்கள் தங்களின் வியூகங்களை உபயோகித்து அவைகளின் மீதமர்ந்த அடுத்த நொடி சிம்மயாளிகளுடன் அவர்களும் மறைந்திருந்தனர்...

விதுஷ் : நாம உடனே அவங்க போன அதே இடத்துக்கு போயாகனும்...

மிதுன் : ஆனா அது எந்த இடம்... அங்க எப்டி போறது...

அஷ்வன்த் : இப்போ வெளியேறுனது நிச்சயமா சித்து ருத்ரா ஆதியோட சக்திகள்னால இல்ல... சிம்மயாளிகள் தான் மறஞ்சிருக்கு...

ரக்ஷா : சிம்மயாளிகள இந்த இடத்த விட்டு வெளியேறுனா எந்த இடத்துக்கு போகனும்னு நெனைக்கும்...

வருண் : அது எப்டி மா எங்களுக்கு தெரியும்...

வீனா : நீ நீயா யோசிக்காம சிம்மயாளி சைட்ல இருந்து யோசின்னு சொல்றா டா உன் அம்மா என கூறவும் அனைவரும் சில பல நொடிகளில் அனைத்தையும் அலசவும்

அருண் : கோவன்கள் இறந்த இடத்துக்கு என கூற அவன் தந்தை

ரனீஷ் : நம்மளோட கடைசி போர்களத்துக்கு என்றான்...

அடுத்த நொடியே திவ்யாவின் சக்திகளினால் அனைவரும் இறுதியாய் நிகழ்ந்த போர்களத்திற்கு சென்றிருந்தனர்...

ஆம்.. இந்த இருவது வருடத்தில் சிம்மயாளிகள் அந்த கோட்டையை விட்டு வெளியேறினால் கோவன்களுக்கு உதவ தான் உடனே செல்ல உள்ளும் (நினைக்கும்)  இறுதியாய் கோவன்கள் இருந்தது அந்த ஒரு போர்களத்தில் தானே...

எவரையும் ஏமாற்றாமல் அங்கே தான் புழுதி பரந்து விரிந்திருந்த நிலத்தில் பரவியிருந்தது...

சிம்மயாளிகளின் உறுமலும் அவைகளின் அதிவேகமான மின்னல் வேக ஓட்டமும் மேலும் மேலும் அந்த புழுதியினை கூட்டி கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் குழம்பி தவித்து முடித்திருந்த அஷ்வன்த் அவனது காலை ஓங்கி நிலத்தில் ஒரு அடி அடித்தான்...

அவனது ஆகாய சக்தி சூழ்ந்திருந்த புழுதியை மேலிழுக்க ப்ரியா அவளது சக்திகளை உபயோகித்து அனைத்தையும் கரைய வைத்து அனைவருக்கும் பார்வையை தெளிவாக்கினாள்...

அவர்களை சுற்று ஒரு பெரும் வட்டமாய் சிம்மயாளிகள் மூன்றும் நிற்காமல் இரட்சகன்களை தங்கள் மீது அமர வைத்து கொண்டு பார்வையில் சிக்காமல் மின்னல் வேகத்திற்கு ஓடி கொண்டிருந்தது...

அந்த சூரிய வெளிச்சத்திலும் அவர்கள் தெளிவாய் கண்டது சிம்மயாளிகளின் உடல் நிறத்தை மட்டும் தான்...

இரட்சகன்கள் அவர்களால் முடிந்த அளவு சிம்மயாளிகளை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்...

ரித்விக் : சுற்றி வளைப்போம் என கர்ஜித்தவன் ஒரு திசையை நோக்கி ஓட அவனது கட்டளைக்கேற்ப மற்ற ஏழ்வரும் அதே போல் ஏழு பக்கத்திற்கு செல்ல யாளி வீராங்கனைகளும் அவர்களை போலவே வரிசையாய் ஒரு வட்டமென கணவன்மார்களுக்கு சுற்றி வளைக்க உதவ நாகனிகள் மூவரும் விண்ணுக்கு தாவினர்...

மோகினி : தமக்கான நாழி நெருங்கியாயிற்று தமது உருவிற்கு மாறுங்கள் என பராக்ரம வீரன்களிடம் உரக்க கூறியவள் அவளது நாக உருவிற்கு மாறினாள்...

வளவன் துருவன் ருமேஷ் மற்றும் விதுஷும் அவரவரது பருந்து உருவினை எடுத்தனர்...

முதல் முதலாய் இப்போதே அனைவரும் பருந்து சகோதரர்களின் பருந்து உருவை காண்கின்றனர்...

துருவனின் சிறகுகள் தங்க நிறத்தால் ஒளிர்ந்து அவனது பலுப்பு நிற உடலில் வெள்ளி நிற தழும்புகள் அலங்கரித்திருந்தது... அவனது விழிகளோ சாதாரண பருந்துகளை போலல்லாது தங்கம் மற்றும் பலுப்பு நிறம் கலந்திருந்தது...

அவனுக்கு நேர் மாறாய் இரெட்டையன்களான ருமேஷ் மற்றும் விதுஷின் சிறகுகள் அடர் பச்சை நிறம் கலந்த வெள்ளி நிறத்தில் ஒளிர கண்களோ அழகிய மஞ்சளாய் இருக்க அதை வெள்ளி நிறம் சுற்றி வளைத்திருந்தது...

வளவன் என்றும் போல் சிகப்பு நீலம் மற்றும் வெண்மை கலந்த நிறத்தில் செஞ்சூரியனென அந்த விண்ணில் மிளிர்ந்தான்...

நாக உருவிற்கு மாறியிருந்த மோகினியை ஒரு புதிய ஒளி அழகாய் சூழ்ந்து கொள்ள அவள் கண்களை திறந்த போது அவளது கருமையான கண் மணிகளை தங்க நிறம் அழகாய் அலங்கரித்திருக்க அவள் முதுகிலோ பருந்து இணத்தின் பெண்களுக்கே உண்டான ஊதா நிற சிறகுகள் பச்சை நிறம் கலந்து அழகாய் அசைந்தது...

இப்போது மோகினி நீண்ட நாவை நீட்டி சீறி விட்டு அவள் இறெக்கைகளை விரித்து மேல் நோக்கி பறந்து பாதி நாகமாகவும் பாதி பருந்தாகவும் உருமாறினாள்...

பராக்ரம வீரன்கள் அவளின் உத்தரவை கேட்ட நொடிகளில் அவரவர் மிருக உருவில் தாவி வர இடையில் பேந்த பேந்த முளித்து கொண்டிருந்த ரக்ஷவை தன் கரங்களால் தூக்கி தன் முதுகில் அமர வைத்தான் பறக்கும் புலியான மித்ரன்...

மித்ரன் : இறுக பற்றி கொள் ரக்ஷவா என உறுமியதும் உடனே தலையசைத்த ரக்ஷவ் அவன் மீது சாய்ந்து அவன் கழுத்தை இறுக பற்றி கொண்டான்...

பராக்ரம வீரன்கள் பத்து பேரும் இப்போது சஹாத்திய சூரர்கள் மற்றும் யாளி வீராங்கனைகள் உருவாக்கிய வட்டத்தின் முன் இன்னோறு வட்டமாய் சிம்மயாளிகளை சுற்றி அதிவேமாய் ஓட தொடங்கினர்...

நாகனிகள் அனைவரது நிலையும் சரியாய் இருப்பதை கண்டதும் அவரவர் சக்திகளை உருவாக்க தொடங்க அதை அடையாளமாய் கருதி கொண்ட சஹாத்திய சூரர்கள் ஒரு சேர அவர்களின் வாள்களை உயர தூக்கி மண்ணில் பலத்த சத்தத்துடன் இறக்கினர்...

அவர்களை பின் தொடர்ந்து அதே போல் யாளி வீராங்கனைகள் அவரவர் வாளை ஒரு சேர நிலத்தில் குத்த சஹாத்திய சூரர்கள் உருவாக்கிய அந்த அதிர்வும் யாளி வீராங்கனைகள் உருவாக்கிய அதிர்வும் ஒன்றாய் இணைந்து பராக்ரம வீரன்களின் ஓட்டத்தினால் உருவான அதிர்வுகளுடன் அதிவேகமாய் பயணித்து சிம்மயாளிகளை சென்றடைய ... அந்த வட்டத்தை ஒரே நேரத்தில் கருநீலம் நீலம் மற்றும் வெண்மை நிறங்கள் சுற்றி ஒரு பந்தை போல் உருவாக்கி அதிலே சிம்மயாளிகளை சிறை வைக்க இப்போது நாயகர்கள் உருவாக்கிய அதிர்வுகள் அந்த பந்தினுள் எதிரொளித்ததால் சிம்மயாளிகள் தடுமாறி ஓட இயலாமல் தினற நாகனிகள் மூவரும் அந்த பந்து உடையாமல் பார்த்து கொண்டனர்...

வளவன் மோகினி துருவன் ருமேஷ் விதுஷ் ஐவரும் அதே வட்டத்திற்குள் அதிவேகமாய் அவர்களின் சிறகுகளை அசைத்து காற்றழுத்தத்தை சிம்மயாளிகளின் புறம் திருப்பி அவைகளின் ஓட்டத்தை நிறுத்த முயல அவையை தன் ஒரே கையசைவில் தூக்கியெறிந்தது விகி

ஆனால் அவர்களும் அந்த பந்திற்குள் இருந்ததால் விகியின் அசைவு அவர்களை அந்தளவிற்கு பாதிக்காது போனது..

இரட்சகன்கள் இப்போது தங்களது முறையென சிம்மயாளிகளின் கழுத்தை இறுக்கி பிடித்திருந்த பிடியை இன்னும் இறுக்கினர்...

சிம்மயாளிகள் அந்த வலியில் மீண்டும் ஆக்ரோஷமாய் உறும அதற்கு மேலாக இருந்தது இரட்சகன்களின் கர்ஜனைகள்...

ஒரு கட்டத்தில் இரட்சகன்கள் மூவரது கண்களும் சிம்மயாளிகளின் கண்களை சிறை பிடிக்க ஒரே நேரத்தில் மூன்றும் எம்பி அந்த நிலத்தில் பலத்த அதிர்வுடன் குதிக்க அடுத்த நொடி அவைகளினால் உருவான அதிர்வு அந்த பந்தையும் தாண்டி வெளியேறி அனைவரையும் நிலை குழைய செய்ய பராக்ரம வீரன்கள் மெதுமெதுவாய் அவர்களை ஓட்டத்தை குறைக்க சஹாத்திய சூரர்களும் யாளி வீராங்கனைகளும் அவரவர் வாளின் பிடியை இறுக பற்றி கொண்டு ஒரு காலை பின்னோக்கி அழுத்தி பதித்து நின்றிருந்தனர்...

பராக்ரம வீரன்கள் தங்களது ஓட்டத்தை நிறுத்தி முடித்ததும் அனைவரும் அந்த பந்தை நோக்க மித்ரனை இறுக்கி பிடித்தபடி கண்களை இறுக முடியிருந்த ரக்ஷவ் மெதுவாய் எழுந்து அனைவரையும் சுற்றி பார்க்க அவனது கண்களை மையத்திலிருந்த அந்த மூன்று நிறங்கள் வெகுவாய் ஈர்த்தது...

பராக்ரம வீரன்கள் மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கி கொண்டு அவரவர் மிருக உருவில் அந்த பந்தை ஏறிட நாகனிகள் அந்த பந்தை தெளிவாய் கண்டதும் புன்னகைக்க அடுத்த நொடி ஏதோ ஒன்றை உணர்ந்ததாய் அம்மூவரின் கண்களில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் போட்டியிட்டது...

அந்த மாய பந்தை உடைத்த நாகனிகள் நிலத்தில் இறங்க பருந்து குடும்பத்தினரும் அவரவரது மனித உருவிற்கு திரும்பி கீழே குதித்தனர்...

சஹாத்திய சூரர்களும் யாளி வீராங்கனைகளும் இவர்களை நோக்கி ஓடி வர பராக்ரம வீரன்களும் அவரவர் மனித உருவிற்கு மாறி இவர்களை நெருங்கினர்...

இன்னமும் மித்ரனின் கழுத்தை பிடித்தபடி அவன் முதுகில் தொங்கி கொண்டிருந்த ரக்ஷவ் தலையை எட்டி அந்த பந்தை ஆர்வமாய் நோக்கினான்...

சூழ்ந்திருந்த புழுதி பார்வையை விட்டு மறைய அனைவரின் வதனங்களிலும் இப்போது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டு கொண்டு தாண்டவமாடியது...

இரட்சகன்கள் மூவரும் பெருமூச்சறித்தவாறு இருக்க அவர்களுக்கு இணையாக சிம்மயாளிகளும் பெருமூச்சறித்து கொண்டிருந்தது...

அந்த புழுதி மறைய மறைய சிம்மயாளிகளின் உருவமும் தெளிவாவ் தெரிய தொடங்கியது... அதே சிங்க தலை... ஆனால் அதில் புதியாய் உடனிருந்த நீண்ட கூரிய பற்கள்... குதிரையின் உடல் .. அத்துடன் புலியின் கருப்பு கோடுகள் புதியாய் விழுந்திருந்தது... சிங்கத்தின் கால்கள்.. அத்துடன் கம்பீரமான உடல்வாகுடன் பரிணாம வளர்ச்சி அடைந்ததை போல் ப்ரியாவின் மணக்கண்ணில் காட்சியளித்த அதே சிம்மயாளிகளாய் காட்சியளித்தது...

ஆதியன்த் : வெல் டன் என கூறி விகியின் தலை வருடினான்...

அதற்கு விகி எதுவும் பதில் கூறவில்லை அதே போல் எதிர்க்கவுமில்லை...

இரட்சகன்களின் முகத்தில் வெற்றியின் மகிழ்ச்சி புன்னகையாய் மிளிர்ந்தது... சிம்யாளிகள் அவர்களுக்கு கட்டுப்படவில்லை என்றாலும் அடங்கியதே பெரிய விஷயம் தான் என பட்டது அனைவருக்கும்...

அவைகளிடம் நெருங்க சென்ற வீர் அகியின் தலையை வருட கண்களை மூடி அவனது தொடுகையின் பரிட்சையத்தை உணர்ந்து கொண்டது அகி..

நிரு : நம்ம பாதைல இருந்த பெரிய தடுப்பும் நீங்கீடுச்சு... இப்போ பசங்கள தயார் படுத்துரது மட்டும் தான் பாக்கி...

மித்ரன் : இன்னுமா அத்த நாங்க தயாராகனும்...

மோகினி : கண்டிப்பா மித்து.. நீங்க மாய வழியில தயாராகியிருக்கலாம்... ஆனால் நூறு சதவீதம் தயாராகனும்னா போர்களைகளில் தேரனும்... அதுல இப்போ முதல் படியில தான் இருக்கீங்க...

ரக்ஷவ் : எங்களுக்கு உடனே பயிற்சிய ஆரம்பிங்க குருவே... என பேச்சிற்கு முற்றுப்புள்ளியாய் வழியை வைக்க சஹாத்திய சூரர்கள் அவனை கண்டு கர்வமாய் புன்னகைத்தனர்...

சித்தார்த் : கோட்டைக்கு போகலாம்.. ஐலாவ விட்டுட்டு வந்துட்டோம்... என யுகியை விட்டு கீழே இறங்கினான்....

வர்ஷி : பரவாயில்லையே .. சித்து ஐலாவையும் கவனிச்சிருக்கானே...

சித்தார்த் : ஐலாவும் எனக்கு தங்கை தானே அத்த.. அப்ரம் எப்டி கவனிக்காம இருப்பேன்... என புன்னகையுடன் கூற

கார்த்திக் : ப்பா.. சிரிச்சிட்டே இரெண்டு சென்ட்டென்ஸ முழுசா பேசீட்டானே... அதிசயம் தான் என கூறியதும் சித்தார்த் அவனை முறைக்க கார்த்திக்கின் கூற்றில் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பி கோட்டையை நோக்கி நடை போட்டனர்...

ரக்ஷவ் : ஹலோ என்ன எல்லாரும் என்ன விட்டுட்டு போறீங்க என இடையில் கை வைத்து முறைக்க

ரக்ஷா : நீ வரலையா டா எங்க பின்னாடி...

ரக்ஷவ் : தலை சுத்துது தாயே.. என்ன யாராவது தூக்கீட்டு போங்க என பாவமாய் கூறினான்...

மித்ரன் : மொத்த ரௌண்ட்லையும் உன்ன நான் தான டா தூக்கீட்டு சுத்துனேன்...

ரக்ஷவ் : ம்க்கும் நீ என்ன இதுக்கு கீழேயே இறக்கி விற்றுக்கலாம் அண்ணா என குறைப்பட்டுக் கொண்டான்...

ருத்ராக்ஷ் : சரி அதுனால என்ன டா... வா அகி மேல உக்காந்துக்கோ... என கூற நம் ரக்ஷவிற்கோ மயக்கம் பறந்தே விட்டது...

ரக்ஷவ் : ஏதெ அகி மேலையா... வேணா வேணா என கண்களை அகல விரித்தான்...

இவன் அகி என குறிப்பிட்டதால் அகி இவனை திரும்பி பார்க்க சகோதரனுடன் ரக்ஷவை ஏறிட்ட யுகி விகியின் கண்களிலும் அவனை கண்டதும் ஒரு சிறு மின்னல் வெட்டியது...

திவ்யா : அகி எதுவும் செய்ய மாட்டான் ரக்ஷவா..

ரக்ஷவ் : நோ நோ நோ அம்மா.. நா நடந்தே போய்க்கிறேன் என அவர்களை தாண்டி ஓட போனவனை நோக்கி எவரும் எதிர்பார்க்காத வகையில் அகி திடீரென உறுமியது...

அதில் பகீரென உணர்வு எழ சமைந்து நின்ற ரக்ஷவ் " வம்ப வாய குடுத்து வாங்கீட்டியே ராசா " என சிரித்த அவன் மனசாட்சியை காண நம் நாயகர்களோ சிம்மயாளிகள் மூன்றும் ரக்ஷவை பார்ப்பதை கண்டு தீவிரமாயினர்...

அகி மெதுவாய் செல்வதை போல் சென்று சட்டென அதன் வேகத்தை கூட்டி ரக்ஷவிடம் ஓட நாயகர்கள் அதிர்ந்து ரக்ஷவ் என கத்த ரக்ஷவ் பயந்து கத்தும் முன் அவனை தன் முதுகில் ஏற்றி கொண்டு ஓடியது அகி...

ரக்ஷவ் என கத்தி கொண்டிருந்த அனைவரும் இப்போது முளிக்க யுகி விகியும் அகியை பின் தொடர்ந்து ஓடினர்.. ரக்ஷவோ பஞ்சு போலிருந்த அகியின் தோளில் அமர்ந்து கொண்டு முளித்து முளித்து பார்க்க அவன் முன்னோ யுகியும் விகியும் அவனிடம் விளையாட முயன்று கொண்டிருந்தது...

ஒரு கட்டத்தில் ரக்ஷவின் வதனத்தில் அழகிய புன்னகை இலையோட யுகி அகி விகி மூன்றும் அவனை வைத்து கொண்டு அனைவரையும் சுற்றி வந்து விளையாடியதோடு நில்லாமல் மகிழ்ச்சாயாய் காணப்பட்டது...

ப்ரியா : இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரக்ஷவ சிம்மயாளிங்க முன்னாடி நிக்க வச்சிருக்களாம் போலையே என அந்நாழ்வரையும் பார்த்தவாறு கூறினாள்...

விதுஷ் : என்ன நடக்குதுன்னு கொஞ்சம் யாராவது சொல்றீங்களா...

அனு : சிம்மயாளிகள் ரக்ஷவ ஏத்துக்குட்டதுக்கு அர்த்தம் தான் இது.. ரக்ஷவன அதுங்க வெளியாளா பாக்கல... அவன் கூட விளையாட தான் ஆசைப்படுது... அவங்க மூணு பேர் கண்ணுல தெரியிர சந்தோஷம் கோவன்களோட விளையாடுரப்போ இருந்த மாரியே இருக்கு... என அவர்களை புன்னகையுடன் பார்த்தவாறு கூறினாள்...

ராம் : பட் ஹவ் ஈஸ் திஸ் பாசிபில் அம்மீ... ரக்ஷவ அவங்க மூணு பேருக்கும் யாருன்னே தெரியாது...

மது : அதானே... ரக்ஷவ் இதுக்கு முன்னாடி சிம்மயாளிகளையும் பாத்ததில்லையே...

ரவி : இல்ல மது.. அனு ஈஸ் ரைட்.. இப்போ யுகி அகி விகியோட கண்ணுல தெரியிர சந்தோஷத்த நாங்க கடைசியா இருவத்தியாறு வர்ஷத்துக்கு முன்னாடி கடைசியா க்ரிஷ் இந்திரன் சத்தீஷோட இருக்கப்போ பாத்துர்க்கோம்... சிம்மயாளிகள் ரக்ஷவ ஏத்துக்குச்சு...

ராகவ் : ஆனா எப்டிப்பா... அதுக்கு விளக்கம் சொல்லுங்க...

முகில் : ஹ்ம் தெரியல... பட் கன்ஃபார்மா சிம்மயாளிகளுக்கு ரக்ஷவ முன்னாடியே தெரிஞ்சிருக்கு ஆனா எப்டின்னு தான் தெரியல...

அஷ்வன்த் : பட் ரக்ஷவ் கவலையில்லாம சிரிக்கும் போது சந்தோஷமா இருக்கு...

ஒவீ : ரக்ஷவோட பாஸ்ட் உங்களுக்கு தெரியுமா...

அஷ்வன்த் : எல்லாமே தெரியாது... ஆனா அவன் இங்க வந்த அன்னைக்கு தான் அவனுக்கு இருந்த ஒரே உறவான அவனோட அம்மாவ இழந்துருக்கான்... பட் நாம எப்பவும் அவனுக்கு உறவா இருப்போம்.. அவன தனியா யாரும் வாழ விடமாட்டோம்...

ஆதவ் : ஒரு நிமிஷம் ரக்ஷவ் நமக்கு தூரத்து சொந்தம்னு சொன்னீங்க... அப்போ அது பொய்யா...

வீர் : வெல்... ஆமா பொய் தான்... நாம காலைல தீரா கிட்ட பேசும் போது சொன்ன மாரி தீரா தான் ரக்ஷவ இங்க கூட்டீட்டு வந்தா... தீரா இப்போ அங்க தளபதியா பொறுப்பேற்றிருக்குரதும் ரக்ஷவ பாதுகாக்க தான்...

ஆதியன்த் : அப்போ தீரா சொன்ன அந்த வீரன் நம்ம ரக்ஷவா...

ரனீஷ் : ஆமா டா... ஆனா இது ரக்ஷவ்க்கு தெரிய கூடாதுன்னும் தீரா சொல்லீர்க்கா... நாம சிம்மயாளிகள் எதனால ரக்ஷவ ஏத்துக்குச்சுன்னு ரக்ஷவ் கிட்ட கேக்கனும் இல்லனா தீராவா வந்து சொன்னா தான் உண்டு...

அஜய் : சிம்மயாளிகள்ட்ட கேட்டா என்ன...

கார்த்திக் : சிம்மயாளியோட மொழிக்கு ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷ்னரி எழுதுன மாரி பேசாத ... கேட்டு அவங்க பதில் சொன்னாலும் நமக்கு ஒன்னும் புரியாது டா எரும

அஜய் : ஆமால்ல... என கார்த்திக் கொட்டிய இடத்தை தேய்த்து கொண்டான்...

சித்தார்த் : சரி இதுக்கு மேலையும் நாம இங்க இருக்க வேண்டாம் கோட்டைக்கு போய்டலாம் என கூறியவன் அனைவரும் தலையசைத்ததும் சிம்மயாளிகள் மற்றும் ரக்ஷவ் இருந்த திசை நோக்கி " ரக்ஷவா கோட்டைக்கு போகலாம்.. நேரமாச்சு " என கத்தினான்...

அதை கண்டதும் சரி என தலையசைத்த ரக்ஷவ்

ரக்ஷவ் : கோட்டைக்கு போகலாம் யுகி அகி விகி என அவைகளிடம் கூற சரியென தலையசைத்த மூன்றும் அடுத்த நொடி ரக்ஷவுடன் அங்கிருந்து மறைந்திருந்தது..

அனைவருக்கும் ஆச்சர்யம் தான்... அனைவரும் காட்டு கத்து கத்தியும் ஒரு அடி நகராத மூன்று சிம்மயாளிகளும் அவனது ஒரே வார்த்தையில் கட்டுப்பட்டுவிட்டதே... அனைவரும் முளிப்பதை கண்டு ரக்ஷவை எணி சிரித்தனர்... இவர்களும் இப்போது கோட்டையை நோக்கி பயணித்தனர்... இங்கு தங்களை அழிக்க பெரும் பலம் கூடி கொண்டிருக்கிறதென்றே தெரியாமல் யோகபரிபூஜன யாகத்திற்காய் அனைத்தையும் தயார் செய்து கொண்டிருந்தனர் யட்சினி சர்ப்ப ஐந்து அமைச்சன்கள்...

இப்போது நமது நாயகிகள் சர்ப்பலோக கோட்டையில் இளவரசிகளை போல மதிக்கப்படுகின்றனர்... அவர்களுக்காய் பணி புரிய காலை மாலை வேளைகளில் அவர்களை சுற்றி பணிப்பெண்கள் இருந்து கொண்டே இருந்தனர்...

இரா(ர)வு நேரத்தில் சித்ரியா வேதித்யா மற்றும் எழில் மாத்திரம் தான் இருந்தனர்... ஆனாலும் அவர்கள் அந்த கோட்டையை விட்டு தாண்டினால் காலை வெட்டி விடுவோம் என சொல்லாமல் சொல்வதை போல் தான் வலம் வந்தனர் அமைச்சன்கள்...

மரணத்தின் விழும்பில் வாழ்ந்தாலும் இளவரசிகளின் துணையுடனும் தாயாய் அரவணைத்து அன்பு காட்டும் பத்யரூனாவினாலும் சற்று தைரியமாகியிருந்தனர்...

அவர்கள் இங்கு வந்து அத்தோடு இரண்டு நாள் முடிந்து மூன்றாம் நாள் தொடங்கியிருந்தது... யோகபரீபூஜன தினம் தொடங்க சரியாய் ஆறு நாட்கள் இருந்தது...

இந்த இரண்டு நாட்களிலும் பலிபீடத்தை தவிர்த்து வேறெங்கும் நம் நாயகிகளால் யட்சினிகளை காண முடியவில்லை... குட்டி நாயகர்கள் எச்சிரித்து நம்பிக்கையூட்டி சென்ற பின் அவர்களும் யட்சினிகளை தேடி கொண்டு தான் இருக்கின்றனர்...

ஆனால் அந்த அமைச்சன்கள் இவர்களின் கண்களிலே அவர்களை படவிடாமல் அறைக்குள்ளே ஒரு நாள் முழுக்க பூட்டி வைத்திருந்தனர்...

அன்றைய தினமும் எப்பொழுதும் போல் விடிய விடியற்காலையிலே ராஜ்ஜிய உடைகளுடன் அவர்கள் முன் வந்த எழில் அன்றைய அரசவையில் அவர்களும் கலந்து கொள்ள வேண்டுமென கூறிவிட்டு புயலின்றி பூகம்பத்தை மூட்டி விட்டு சென்றாள்....

மாயம் தொடரும்...

ஹப்பா... போதுமா பெரியயயயயயயயய யூடியா போற்றுக்கேன்... இதுக்கு மேல பெருசா போட்டா சில பேருக்கு போரடிக்கும்ப்பா ... சரி விடுங்க... எப்டியிருக்கு யூடி... நீட் எனி சேஞ்ஜஸ்...?? மேல சொன்ன மாரி ஆறு நாள்ள யோகபரீபூஜன தினம் இருக்கு... அனேகமா என் எக்ஸம் ஸ்டார்ட் ஆகுர அன்னைக்கு தான் இவனுங்க அந்த பூஜைய போடுவானுங்க போலயே... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் பாப்போம் சரி ஓக்கே டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro