Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 41

இந்திரனின் வெளிரிய முகத்தை கண்டு எதுவும் புரியாமல் அனைவரும் அமர்ந்திருக்க அஜயதீபனையும் அவன் கழுத்திலிருந்த முத்திரையையும் கண்டு க்ரிஷ்ஷும் இப்போது அதிர்ந்தான்...

தர்மன் ஐயா : தாம் எண்ணுவது மெய் தான் கோவன்களே.. கார்த்திக் மற்றும் அஜயதீபன் இருவரின் தந்தை சர்ப்பலோக கோட்டையின் சேனை தலைவன் மருதீபனே ஆவான்

இப்போது சஹாத்திய சூரர்களும் அத்தலைவனை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர்...

க்ரிஷ்  : மருதீபனுக்கு என்(ன) நேர்ந்தது தர்மன் ஐயா.. அவன் மைந்தனா நம் கார்த்திக்.. ஆயின் இதை ஏன் எம்மிடம் தாம் முன்பே அறிவிக்கவில்லை...

தர்மன் ஐயா : அறிவிக்காததற்கு மன்னியுங்கள் கோவனே.. மாவீரன் மருதீபன் ஒரு வருடம் முன்பு சர்ப்பலோகத்தின் அமைச்சன்களால் தூக்கிலிடப்பட்டான்...

வீர் : என்ன... எதற்காய் மருதீபன் தூக்கிலிடப்பட வேண்டும்.. அவனை போன்ற தலைவனும் விசுவாசமுள்ள சேவகனும் கிடைக்க சர்ப்பலோகம் தவமிருந்தாலும் பளிக்காதையா...

தர்மன் ஐயா : அதை யானறிந்தலும் அவ்வைவர் அறியவில்லை சூரரே.. ஒன்றரை வருடம் முன்பு தாம் அனைவரையும் சர்ப்பலோகத்லிருந்து கயலுடன் தப்ப விட்டதாலும் சர்ப்பலோக சேனை தம்மை வணங்கியதாலும் அவர்களின் தலைவன் மாவீரன் மருதீபனுக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.. அச்சமயத்தில் அஜயதீபன் மியாரகியினுள் நான்கு மாத சிசுவாய் இருந்தானென்றாலும் எதனாலோ மருதீபன் அஜயதீபனை பற்றி அறிந்திருந்தான் போலும்.. அதனாலே அஜயதீபனையும் அந்த பஞ்சலோக முத்திரையையும் தங்களிடம் ஒப்படைக்க மியாரகிக்கு கட்டளை பிறப்பித்துள்ளான்...

நாயகிகளுக்கு மருதீபன் யாரென்று தெரியவில்லை என்றாலும் தம் கணவர்களின் சொல்படி நிச்சயம் அவன் ஒரு உண்மையான மெய்காப்பளனகாவும் தலைவனாகவும் இருந்திருக்கக் கூடும் என சிந்திக்க நாயகர்களோ இறுகி போயிருந்தனர்...

நம் நாயகன்கள் கயலை காப்பாற்றி பூலோகம் சென்றதும் மருதீபனின் தலைமையில் நாகமனிதர்களும் சேனை வீரர்களும் சர்ப்பலோத்தில் அங்கங்கு சுயநினைவற்று உயிருக்கு போராடி கொண்டிருந்த அமைச்சன்கள் அனைவரையும் காப்பாற்றி கோட்டையில் சேர்த்தனர்...

தன் மனையாள் பதினைந்து வருடங்களின் பின் மீண்டும் கருவுற்றிருக்கிறாள் என்பதில் அகமகிழ்ந்த அவனால் அவளுடன் நேரம் செலவழிக்க இயலவில்லை.. மியாரகியும் கணவனின் நிலை புரிந்து அவனுக்காய் காத்திருந்தாள்...
ஆனால் இருவராலும் காணவே முடியாதென்ற நிலை உருவாகுமென தெரிந்திருந்தால் ஒரு முறையாவது சில மாதங்கள் முன் கட்டிய மனைவியை காண வந்திருப்பான்...

தீவிர சிகிச்சையிலிருந்த அமைச்சன்கள் ஐவர் உடல் நலம் பெற்று மீண்டெழுந்திட நான்கு மாதங்களாகியது... அவர்கள் மீண்டெழுந்த மறுநாளே ஒரு மக்களவை கூட்டத்தை திரட்டி அனைத்து மக்களையும் சர்ப்பலோக அரண்மனை மைதானத்தில் கூட்டினர்...

ஆனாலும் ஆசை ஆசையாய் நான்கு மாதம் பின் கணவனை காண போகும் ஆவலில் அமைச்சன்களின் மக்களவை கூட்டத்திற்குக் கூட செல்லாமல் வீட்டில் காத்திருந்த மியாரகிக்கு அந்த மக்களவை கூட்டம் முடிந்த பின் வந்ததென்னவோ அவள் கணவனின் உயிரற்ற உடல் தான்...

அதற்கு பின்னே அந்த மக்களவை கூட்டத்தில் அமைச்சன்கள் சர்ப்பலோகத்தை பாதுகாக்காததற்கும் கயலை தப்ப விட்டதற்கும் கோவன்களுக்கும் சஹாத்திய சூரர்களுக்கும் சேனையை வணங்க அனுமதித்ததற்கும் மரண தண்டனை விதித்ததை அறிந்து கொண்டாள்...

மருதீபன் மரணித்த ஒரு திங்களில் அடுத்த சேனை தளபதியாய் பொறுப்பேற்ற தலைவன் மியாரகியை சந்தித்து மருதீபன் இறக்கும் முன் அவளிம் இறுதி ஆசையாய் கொடுக்க கூறிய கடிதத்தையும் ஒரு சிறிய குடுவையையும் கொடுத்து விட்டு விடை பெற்றான்...

அக்கடிதத்தில் மருதீபன் தான் தனது மரணத்தை முன்னமே அறிந்திருந்ததாகவும் குழந்தையை பற்றியும் அவனை பூலோகத்தில் உள்ளோரிடம் சேர்க்கும் படியும் சில மாதங்கள் முன்பு கயலை கோவன்களும் சஹாத்தியசூரர்களும் காத்து சென்ற நிகழ்வையும் எழுதியிருந்தான்... அந்த குடுவையிலோ ஒரு துணியில் மடிக்கப்பட்டு பத்திரமாய் இருந்தது அந்த பஞ்சலோக தங்க முத்திரை...

ஆறு மாதங்களில் அஜயதீபனை ஈண்டெடுத்த மியாரகி தக்க சமயத்திற்காய் பூலோகம் வர காத்திருந்தாள்.. ஆனால் துரதிர்ஷட வசமாய் பூலோக வாயில்கள் எதுவும் திறக்க கூடிய நிலையில் இல்லை..

வேறு வழியின்றி ஆழி கடலின் தேவர்களிடம் உதவி கேட்டு ஆழியின் வாயிலாக பூலோகத்தை அடைந்தாள் மியாரகி.. அங்கிருந்து லீலாவதி மியாரகியை மீட்டு ஷேஷ்வமலை அழைத்து வந்திருந்தாள்...

அனைவரும் இப்போது அமைதியாய் அமர்ந்திருக்க அஜயின் அழுகை அவர்களை நிலைக்கு கொண்டு வந்தது... அஜயை தோளில் போட்டு கொண்டு தட்டி கொடுத்த இந்திரன் அவன் அழுகையை நிறுத்தியதும் அவன் தன்ன கண்டு சிரிப்பதை கண்டு தானும் புன்னகைத்தான்...

தர்மன் ஐயா : லீலா தாம் அஜயதீபனை அழைத்து செல்லலாம் என கூறவும் சரியென தலையசைத்த லீலாவதி அஜயை இந்திரனிடமிருந்து வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்...

பவி : தர்மன் ஐயா.. யாரிந்த லீலா.. லீலா எதற்காய் சர்ப்பலோகத்தை விடுத்து ஷேஷ்வமலையில் குடியிருக்கிறாள்..

தர்மன் ஐயா : லீலாவதி சர்ப்பலோகத்தின் அமைச்சன்களின் ஒரே தங்கை மகளே என கூறியதும் அனைவரும் அவனுங்களுக்கு தங்கச்சிலாமா இருக்கு என அதிசயத்து நோக்கினர்...

துருவ் : அவ்வாறெனில் அவரும் நமக்கு சத்ருவா (எதிரியா)...

தர்மன் ஐயா : இல்லை இல்லை துருவா... லீலா நமக்கு அன்பரே.. லீலாவதி நற்குணங்களுடன் பிறந்த சக்தி வாய்ந்த நாகம்.. தங்கையையும் தங்கள் வசப்படுத்த எண்ணிய அமைச்சன்கள் ஐவரால் லீலாவின் நற்குணங்களை எதிர்த்து போராட இயலவில்லை.. ஆதலால் அவளை அவள் போக்கிலே விட்டு விட்டனர்.. ஆனால் அவர்கள் அடைந்து கிடந்த வேளையில் பூலோகம் வந்திருந்த லீலா சர்ப்பலோகத்தினுள் நுழைய இயலாததால் ஆழிலோகத்தில் வாழ்ந்தாள்.. அந்த சமயத்தில் மனித பிறவியான கனேஷை சந்தித்து இருவரும் காதலிக்க தொடங்கினர்.. இப்போது இருவரும் வாழவும் தொடங்கி விட்டனர்.. கனேஷ் லீலாவின் உண்மைகளையும் வாழ்கையையும் அறிந்து கொண்டதும் லீலா அவனையும் இங்கு அழைத்து வந்தாள்.. சர்ப்பலோகத்தில் இவர்களுக்கு வாழ இடமில்லை.. ஏனெனில் ஒரு நாகத்திற்கு மனிதனுடன் வாழ அனுமதியில்லை..

ரனீஷ் : தங்கை ஒரு மனிதனை காதலித்து மணந்து கொண்டாள் என்பதை அறிந்தும் அவர்கள் சாதாரணமாய் இருப்பதில் ஏதேனும் உள்காரியம் இருக்கிறதா ஐயா...

தர்மன் ஐயா : ஆம் சூரரே.. லீலாவின் விதி இதுவே.. லீலா கனேஷின் உதிரத்தில் உதிக்கும் உயிர்களை இவ்வுலகிற்கு கொண்டு வருவாள்.. அவ்வுயிர்களை வதம் செய்ய பயிற்வித்துவிட்டு பலியிட காத்திருக்கின்றனர் அவளின் ஐந்து தமையன்கள்...

தான்யா : என்ன... அக்குழந்தைகளை எதற்காய் பலியிட வேண்டும்.. ஒன்றும் அறியா அக்குழந்தைகள் என்(ன) செய்தது...

தர்மன் ஐயா : அக்குழந்தைகள் சாதாரண விந்தைகள் அல்ல மகளே.. சர்ப்பலோகத்தின் இப்போதைய ஒரே தலைமை வம்சமான யட்சினி வம்சத்தின் முதல் மூன்று விந்தைகள்... அதாவது உண்மையான யட்சினிகள் என கூற நம் நாயகர்களுக்கு முந்தைய வருடங்களில் தர்மன் ஐயா " நாககுடும்பத்தின் முதல் வம்சமான நாகதாரணி வம்சத்தின் முதல் மூன்று பெண்கள்.. நாகனிகளெனப்படுவர் " என்றது நினைவில் வந்து சென்றது...

ரனீஷ் : யட்சினி வம்சத்திற்கும் யட்சினி சர்ப்ப வம்சத்திற்கும் வேறுபாடு உள்ளதா

தர்மன் ஐயா : உள (உள்ளது)  யட்சினி வம்சம் நாகதாரணி வம்சத்தை போன்றது தான்... எவ்வாறு நாகதாரணி வம்சத்தில் நாகனிகள் மூவரை தவிர்த்து வேறெவரும் பிறக்க மாட்டரோ அதே போல் யட்சினி வம்சத்தில் குறிப்பிட்ட அம்மூன்று யட்சினிகளை தவிர்த்து வேறெவரும் பிறக்கமாட்டர்... ஆனால் யட்சினி சர்ப்ப வம்சம் அவ்வாறல்ல.. அது தீயசக்திகளுக்காகவே பொறாமை ஆணவம் பேராசையில் உரு கொண்டது.. அதாவது செயற்கையாகவே உருவானது.. மற்ற வம்சங்களை போல இயற்கையாய் உருவானதல்ல..

அனு : அதனால் சக்திகளை பெருக்கவும் அது நிலைப்பதற்காகவும் யட்சினிகளை பிறக்க செய்து அவர்களை பலியிட உள்ளனர்.. அப்படி தானே ஐயா...

தர்மன் ஐயா : ஆம் மகளே.. இக்காரணத்தினாலே லீலாவதியை ஷேஷ்வமலையை விட்டு யான் வேறெங்கும் செல்ல அனுமதிக்கவில்லை...

அஷ்வன்த் : வேறேதேனும் கூற வேண்டுமா தர்மன் ஐயா..

தர்மன் ஐயா : எனது யூகத்தின் படி தம் நான்கு வம்சத்தவர்களுள் ஏதோ ஒரு வம்சத்தில் மரணம் விழ உள்ளது சூரரே.. அதை தடுக்கவோ நிறுத்திடவோ எவராலும் முடியாது.. ஆதலால் தாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

சத்தீஷ் : அந்த யட்சினி சர்ப்ப வம்சம் எதற்காய் எங்களை தாக்க வேண்டும் ஐயா..

தர்மன் ஐயா : அவர்களை பொருத்தமட்டில் தற்போது பூலோகத்தில் பஞ்சலோக வம்சத்தவர்களான இரட்சகன்களும் பராக்ரம வீரன்களும் இல்லையென்பதால் கங்கனம் கட்டி ஆடுவர்.. அவர்களுக்கு சக்திகள் பெருக வேண்டுமென்பதாலும் தாங்கள் அதை தடுத்து அழித்தாலும் அழித்து விடுவீர்களென்பதால் உங்களை அழிக்க முயல்வர்... அதே நேரம் தமக்கு இப்போது குழந்தைகளும் பிறந்துள்ளதால் அக்குழந்தைகளுக்கு தம்முடைய சக்திகள் இரத்தத்தில் ஊரியிருக்கும் என அவர்களை வதம் செய்ய தான் முன்வருவர்... ஆனால் அவர்களுக்கு சஹாத்திய சூரர்கள் மற்றும் யாளி வீராங்கனைகளின் மகவுகளும் கார்த்திக் மற்றும் அஜயதீபன் தான் பராக்ரம வீரன்களென இன்றளவும் தெரியாதது நன்றாய் போனது... ஆதலால் தம் குழந்தைகளையும் இவ்வுலகையும் காக்கும் பொருப்பு தம் கரமே மீண்டும் சேர்கிறது என கூறவும் இப்போது நாயகர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்...

நிரு : தமக்கு அதற்குண்டான எவ்வொரு கவலையும் இருக்க வேண்டிய அவசியமன்று ஐயா.. இன்னுயிர் நீத்தாலும் இப்புவியை தீமையின் பால் என்றும் விட மாட்டோம்.. எம் புதல்வர்களையும் இப்புவியையும் காப்பது எங்கள் கடமை என நிமிர்ந்து நின்று உரக்க கூறினாள்...

தர்மன் ஐயா தன் மனதில் இவ்வளவு வருடங்களும் இருந்த பாரம் நீங்கியதாய் பெருமூச்சை விட்டார்...

பின் கயலை அழைத்து கொண்டு அனைவரும் வேலு தாத்தாவின் வீட்டிற்கு புரப்பட அப்போதும் நம் கோவன்களை தர்மன் ஐயா கவனிக்காதது தான் ஆச்சர்யமே..

வீட்டில் கயல் இவ்வாறனதற்கு காரணத்தை மட்டும் கூறியவர்கள் துருவன் சில வருடங்கள் முன்பே மனிதனானதால் இப்படி கோளாறு ஏற்படுகிறது ஆனால் இனி எதுவும் ஆகாதென பொய்யுரைத்து நம்பவைத்தனர்...

அஜயை நண்பரின் குழந்தை என்றும் அவர் இறந்ததால் தாங்களே வளர்க்க உள்ளதாய் கூறியதற்கு பெரியவர்கள் எவரும் எதிர்ப்பு கூறாமல் அஜயை அவர்களின் பேர குழந்தையாகவே ஏற்று கொண்டனர்...

பராக்ரம வீரன்களின் எதிர்காலத்தை பற்றியும் தமக்காய் காத்திருக்கும் மரண அறிவிப்பை பற்றியும் கூறி அவர்களை கவலை கொள்ள வைக்க இவர்கள் எவரும் விரும்பவில்லை..

இவர்கள் வீட்டை அடைந்து ஒரு மணி நேரம் அனைத்து அதிர்ச்சிகளையும் தாங்கி கொள்ள ஓய்வெடுக்கும் முன் அவர்களின் மருத்துவமனையிலிருந்து அஷ்வன்த்திற்கு அழைப்பு வந்தது...

சாதாரண சிகிச்சையென என நினைத்து மருத்துவமனைக்கு கிளம்பி சென்ற ஏழு மருத்துவ நாயகர்களிடமிருந்தும் நேரம் தாமதிக்காமல் வீட்டிற்கு அபாய அழைப்பு வந்தது...

பெரியவர்ளையும் நாயகிகளையும் குழந்தைகளுடன் வீட்டிலேயே விட்டு விட்டு மற்ற ஏழு நாயகன்களும் வளவனுடன் மருத்துவமனைக்கு சென்றனர்...

அங்கோ அவசர சிகிச்சை பிரிவின் வெளியே பித்து பிடித்ததை போல் அமர்ந்திருந்தான் ரனீஷ்.. க்ரிஷ் ஓடி சென்று அவனை பிடித்து உலுக்க தன் நிலை பெற்று க்ரிஷ்ஷை நோக்கிய ரனீஷ் அவர்கள் தொடுக்கும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்காது அவசர சிகிச்சை பிரிவை காட்டினான்...

வளவன் உடனே கதவிலிருந்த சிறிய வழி வழியாக உள்ளே நோக்க மருத்துவ நாயகிகள் மூவர் ஒரு நோயாளியை வேகவேகமாய் பரிசோதித்து கொண்டிருக்க உடன் ரவி வீர் அஷ்வன்த்தும் இருந்தனர்..

இன்னும் தன் கண்களை கூராக்கி பார்த்த வளவன் படுக்கையில் நோயாளியாய் வீற்றிருந்த கார்த்திக்கின் வளர்ப்பு பாட்டி மாதவியை கண்டு அதிர்ந்தான்...

ரனீஷ் : கார்த்திக்கும் மாதவி அம்மாக்கும் அக்ஸிடென்ட்டாய்டுச்சு டா

சத்தீஷ் : என்ன டா சொல்ற.. எப்டி நடந்துச்சு.. எப்போ.. கார்த்திக் எங்க... மாதவி அம்மாக்கு என்ன ஆச்சு..

ரனீஷ் : மாதவி அம்மா காலைல நம்மள பாக்க தான் வேகமா கெளம்பி வந்துருக்காங்க.. பட் எதிர்பாராம அக்ஸிடென்ட் ஆய்டுச்சு... மாதவி அம்மா ரொம்ப க்ரிட்டிக்கலா இருக்காங்க.. ஆனா கார்த்திக்.. என நிறுத்த

ரித்விக் : கார்த்திக்கு என்னாச்சு.. ஈஸ் ஹி ஆல் ரைட்...

ரனீஷ் : பாத்தே தெரிஞ்சிக்கோங்க வாங்க என வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றான்...

ஒரு அறைக்குள் நுழைந்த ரனீஷ் யாரோ ஒருவர் உடல் முழுவதையும் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு படுத்திருந்த படுக்கையருகில் சென்று நிற்க இவர்கள் ஏழ்வருக்கும் இதயம் வெடவெடக்க அந்த போர்வையை ரனீஷ் விலக்கியதும் சிறு சிறு சீராய்ப்புகளும் அங்கங்கு காயங்களுடன் மயக்கத்திலிருந்த பத்து வயது கார்த்திக்கை கண்டு அதிர்ந்தனர்...

ரனீஷ் : கயல் துருவ் மட்டும் இல்ல.. கார்த்திக்கும் என அதற்கு மேல் எதுவும் கூறாமலே நிறுத்தி கொண்டான்...

கொட்ட கொட்ட கார்த்திக்கையே இவர்கள் பார்த்து கொண்டிருக்க சரியாக அஷ்வன்த் இவர்ளை தேடி உள்ளே வந்தான்...

அஷ்வன்த் : வந்துட்டீங்களா டா என்ற இவனின் குரலில் அனைவரும் நிலையடைந்து அவனை நோக்கி திரும்பினர்...

அர்ஜுன் : மாதவி அம்மா எப்டி இருக்காங்க மச்சான்..

அஷ்வன்த் : தலைல பலமா அடிப்பற்றுக்கு டா.. ஹெவி ப்லட் லாஸாய்ருக்கு.. நௌ ஷி ஈஸ் இன் அப்சர்வேஷன் மச்சான்.. ட்வென்ட்டி ஹார்ஸ் அப்ரமும் அவங்க எந்திரிக்கலன்னா கோமாக்கு போய்டுவாங்க... என வருத்தத்துடன் கூறினான்..

முகில் : இப்போ நாம என்ன டா பன்றது.. எல்லாமே கை மீறி போய்ற்றுக்கு..

ரவி : நாம தான் அத கை மீறாம பாத்துக்கனும் டா.. என்றபடி அவனது வெள்ளை உடையில் உள்ளே வந்தான்

ரனீஷ் : என்ன டா பாத்துக்க சொல்ற.. கயல் சீரியஸ்னெஸ் தெரியாம நார்மலா இருக்கா.. ஆனா கார்த்திக்கையும் மாதவி அம்மாவையும் எப்டி சமாளிக்கிறது.. இப்போ இவ்ளோ வர்ஷமா துருவும் கார்த்திக்கும் படிச்ச ஸ்கூல எப்டி சமாளிக்கிரது... இது சாதாரண விஷயமே இல்ல டா

இந்திரன் : நீ ஏன் டா டென்ஷன் ஆகுர.. எதாவது வழி இருக்கும்

ரக்ஷா : கத்துரதுக்கு இது என்ன நம்ம வீடா.. வெளிய வாங்க லூசுங்களா... கார்த்திக் எழுந்துடுவான் என ரக்ஷா அவள் பங்கிற்று கத்தி விட்டு செல்ல இப்போது இவர்களும் வெளியே சென்றனர்... இவர்கள் வெளியே வந்த உடனே

வீனா : கார்த்திக்க பத்தி வீட்ல என்ன பொய் சொல்லலாம் என சாதாரணமாய் வினவ அவள் தலையில் தட்டிய வீர்..

வீர் : பொய் சொல்லனும்னு முடிவே பன்னிட்டியா குட்டிமா

வீனா : ஆ.. வேற என்ன டா அண்ணா பன்றது... மியாரகிக்கு நாங்க வாக்கு குடுத்துர்க்கோம்... கார்த்திக்க தன்னந்தனியா விட மாட்டோம்...

சரண் : அதென்ன எங்கள கூட்டுல விட்டுட்ட குட்டிமா... நாங்களும் சேந்து தான் வாக்கு குடுத்துர்க்கோம்... கார்த்திக்க நம்ம வீட்டுக்கு கூட்டீட்டு போய்டலாம்.. மாதவி அம்மா குணமானதும் அவங்களுக்கு கார்த்திக் கயல் பத்தின உண்மைய பத்தி சொல்லி புரிய வைப்போம்...

தான்யா : அவங்க புரிசிக்கலன்னா ... கார்த்திக்க நம்ம கிட்டேந்து பிரிச்சு கூட்டீட்டு போய்ட்டாங்கன்னா...

க்ரிஷ் : நெகட்டிவாவே யோசிக்காத குட்டி.. பாசிட்டாவா யோசிப்போம் என அவள் தலையை கலைத்து விட்டான்...

அனைவரும் ஒரு மனதாய் சரியென தலையசைக்க இப்போது இங்கிருந்து க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் சரண் மற்றும் வளவன் வீட்டிற்கு கிளம்பினர்...

வீட்டில் நிலமையை கூறியதும் நாயகிகள் உடனே மாதவி அம்மாவையும் கார்த்திக்கையும் காண கிளம்பி விட்டனர்.. கார்த்திக்கிற்கு விபத்தென கூற தொடங்கியதிலே துருவ் அழ தொடங்கியதால் அவனை அழைத்து செல்ல வளவனும் அவர்களுடன் சென்றான்...

இப்போது வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தைகளும் அவ்வப்போது முளித்திருந்த பேரன்களுடன் விளையாடி கொண்டிருந்த பெரியவர்களும் மாடியில் க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மற்றும் வளவன் மாத்திரமே இருந்தனர்...

தெய்வானை பாட்டி உறங்கி கொண்டிருந்த ருத்ராக்ஷ் ஆதவை அருகில் அமர்ந்தடி பார்த்து கொண்டிருந்தார்... வேலு தாத்தா ராகவையும் சங்கரன் தாத்தா ராமையும் வைத்தவாறு விளையாட்டு காட்டி கொண்டிருந்தனர்...

மாதவன் இரமனன் மற்றும் முரளி சோபாவில் அமர்ந்து நாட்டு நடப்பை பற்றி பேசி கொண்டிருக்க அவர்களின் நடுவில் அருண் வருண் ஆதியன்த் அங்குமிங்கும் ஊரி கொண்டிருந்தனர்...

வனித்தாவிடம் ருமேஷ் அழுது கொண்டிருக்க காவியாவிடம் விதுஷ் சமத்தாய் உறங்கி கொண்டிருந்தான்.. இலக்கியா அஷ்வித்தை உறங்க வைக்க முயற்சித்து தொண்டிருந்தார்...

மீதம் சித்தார்த் சத்தீஷின் மடியில் தவழ்ந்து கொண்டிருந்தான்... சரண் அஜயை நெஞ்சோடு ஒற்றி வைத்து அவனை உறங்க வைத்து கொண்டிருந்தான்... க்ரிஷ் தன் மடியிலே உறங்கிய மித்ரனுக்கு மெதுவாய் தட்டி கொடுத்து கொண்டிருக்க இப்படி அனைத்து குழந்தைகளும் அனைவரையும் பிசியாகவே வைத்து கொண்டனர்...

மித்ரன் முழுதாய் உறங்கியதும் க்ரிஷ் அவனை கீழே தெய்வானை பாட்டியிடம் விட்டு விட்டு மீண்டும் மேலே வர சரியாக அஜய் அழ தொடங்கினான்...

சரண் அஜயின் அழுகை காரணம் புரியாமல் அவனை தூக்கி கொண்டு அங்குமிங்கும் நடக்க அஷ்வித்தை உறங்க வைத்திருந்த இலக்கியா சரணை கத்தி அழைத்தார்...

இலக்கியா : டேய் புள்ள அழுவுரான் என்ன டா பன்ற நீ..

சரண் : மா நா என்ன செய்ய.. உன் பேரன் அழுகைய நிறுத்த மாற்றான்...

இலக்கியா : பச்சப்புள்ள மேல பழி போடாத.. உனக்கு சமாதானம் பன்ன தெரியலன்னு சொல்லு என கூற அதை அமோதிப்பதை போல் அஜய் இன்னும் வீரிட்டு அழுதான்...

சரண் : இப்டி மாமாவோட இமேஜ் டமேஜ் பன்றியே டா.. நீ பாட்டி கிட்டையே போ .. என புலம்பியபடி கீழே அழைத்து சென்றான்...

இலக்கியா : குடு என் பேரன... என் தங்கமே.. ஏன் டா ராசா அழரீங்க... இங்க பாரு இங்க பாரு பூச்சாண்டி பாரு டேய் சரண் உன் முகத்த தான் புள்ளைக்கு காமியேன் டா... இவ்வளவு நேரமும் அழுப்பாய் நின்ற சரண் தன் தாயின் இறுதி கூற்றில் அவரை மூக்கு முட்ட முறைத்தான்...

சரண் : மா உனக்கே ஓவரா இல்ல.. மாமாவ பாருன்னு சொல்லி குடுக்காம பூச்சாண்டிய பாருன்னு சொல்லி குடுர... என கேட்டதற்கு அனைவரும் வெடித்து சிரித்தனர்...

இலக்கியா : இப்பையும் சரியா தான் டா சொல்லி குடுத்துர்க்கேன்... இன்னும் சரியா சொல்லி குடுக்குவா.. அஜய் கண்ணா உன் அம்புலி மாமாக்கு ஹாய் சொல்லு பாப்போம் என அஜயின் கையை ஆட்ட அஜய்க்கே சரணின் முறைப்பையும் உடைந்த மூக்கையும் கண்டு சிரிப்பு வந்து விட்டது போல

சரணுக்கு நடக்கும் அவமானங்களை கண்டு சிரித்த சகோதரன்கள் மூவரும் ஒரு சேர சித்தார்த்தின் " அப்பா " என்ற கத்தலில் திரும்பி பார்த்தனர்...

அவனின் குரல் கேட்டதில் இம்மூவரின் சிரிப்பு உடனே மறைய அழகாய் அழைத்த சித்தார்த்தோ அவர்களின் முக மாறுதலை கண்டு பயத்துடன் ஆழ தயாராவதை போல் நோக்கினான்...

அதை உணர்ந்த உடனே சிரித்த சத்தீஷ் அவனை தூக்கி கொஞ்சி விளையாட்டு காட்டவுமே பழைய நிலைக்கு திரும்பி சத்தீஷின் கேசத்துடன் விளையாடினான்...

இப்போது சித்தார்த் நன்றாகவே பல வார்த்தைகளை கூற கற்று கொண்டான்.. வாய் விட்டு கூறவும் தொடங்கியிருந்தான்... ஆனால் நேற்றைய நிகழ்வை இன்னமும் அவர்களால் மறக்க முடியவில்லை...

இரண்டு வயது குழந்தை சரளமாய் அல்லவா பேசியது... ஹ்ம் மற்றவர்கள் அதை மறந்திருந்தாலும் முதலில் கேட்டவர்களால் அதை மறக்க முடியவில்லை...

சத்தீஷ் : என்ன டா முடிவெடுத்துர்க்க என சித்தார்த்தை கைகளில் சாய்த்து அவன் நெற்றியில் மெதுவாய் விரலால் நீவி கொண்டே நடுவில் அமர்ந்திருந்த க்ரிஷ்ஷிடம் கேட்க முதலில் அவன் பிடியிலிருந்து எழுந்து விளையாடவே எண்ணிய சித்தார்த் சத்தீஷின் மென்மையான விரல் நீவலில் அமைதியானான்...

க்ரிஷ் : எத பத்தி டா

இந்திரன் : ஏன் உனக்கு தெரியாதா... நாங்க இரெண்டு பேருமே உன் முடிவுக்காக தான் காத்திருக்கோம்னு என க்ரிஷ்ஷின் மறு புறமிருந்தவன் புருமுயர்த்தி வினவினான்..

க்ரிஷ் : ஹ்ம் என்ன டா முடிவெடுக்க சொல்றீங்க எல்லாமே இடியாப்ப முடிச்சு போல இருக்கு.. சித்து ருத்து அத்து பத்தி சொல்லலாமா வேண்டாமான்னே தெரியல...

இந்திரன் : ஹ்ம் சித்து ருத்து அத்து பிறக்கும் போது நடந்த எல்லாமே இன்னும் என் கண்ணுல நிக்கிது.. அத மறந்துட்டு இவங்கள பத்தின உண்மைய சொல்ல எனக்கு மனசு ஒத்துழைக்க மாட்டுது டா

சத்தீஷ் : ஆமா.. நம்ம மூணு பேர தவிற வேற யாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சாலும் அது சர்ப்பலோகத்துக்கு போய்டும்.. இத மறைக்கிரத தவிற நம்மக்கிட்ட வேற வழியே இல்ல... ஹ்ம் நம்ம பசங்க இப்டி ஒரு நியதியோட உருவாகாமையே இருந்துர்க்களாம் என பெருமூச்சுடன் சித்தார்த்தின் நெற்றியை நீவ மூடியிருந்த இமைகளை சட்டென பிரித்த சித்துவின் கண்கள் இப்போது சிகப்பாய் இருந்தது...

அதை சத்தீஷ் முழுதாய் கவனித்து சுதாரிக்கும் முன் சட்டென சித்துவின் கண்களில் இருந்து நெருப்பு பாய சத்தீஷ் கண நேரத்தில் தன் தலையை சாய்த்து அவன் கண்களை காப்பாற்றி கொண்டான்...

இந்த எதிர்பாரா நிகழ்வில் மற்ற இருவர் திடுக்கிட சத்தீஷின் மடியில் இரு கண்களிலும் தீ பிழம்பின் பொறி தெரிக்க சாய்ந்திருந்த சித்தார்த்தை இமைக்க மறந்து நோக்கினான் க்ரிஷ்..

இந்திரன் அதிர்ச்சியிலிருந்த சத்தீஷிடமிருந்து உடனே சித்தார்த்தை வாங்க இந்திரனிடம் சென்றதும் தனிச்சையாய் சாந்தமடைந்த சித்தார்த் இப்போது அப்பா ப்பா என ஆசையாய் அழைத்தவாறு சத்தீஷை நோக்கி தன் பிஞ்சு கைகளை நீட்டினான்...

ஒரு சில நொடிகளுக்கு ஒன்றும் புரியாமல் மூளையிலும் பதியாமல் கோவன்கள் மூவரும் அவன் கண்களை நோக்கியபடி இருந்தனர்...

பின் இந்திரன் சத்தீஷை அழைக்கவும் தலையை சிலிப்பு கொண்ட சத்தீஷ் தன்னை நோக்கி தாவ எத்தனித்து வர இயலாமல் அழ தயாரான சித்துவை இந்திரனிடமிருந்து வாங்கி கொண்டான்..

இந்திரன் : நம்மளோட அதிசக்திகளும் இவங்களுக்கு இருக்கும்னு நினைக்கிறேன் டா என கூறவும் க்ரிஷ் சத்தீஷ் இருவரும் அதே நிலையில் தலையாட்டினர்...

அன்றைய இரவு அதே நிலையில் நகர மறுநாள் விடிந்தது... மாதவி அம்மா சுயநினைவுக்கு திரும்பாமலே இருந்ததால் மயக்கம் தெளிந்து எழுந்த கார்த்திக்கை வேலு தாத்தாவின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்..

உடல் மாற்றத்தினை உணர்ந்தும் கூட கார்த்திக் எதுவும் கூறவில்லை... எதையோ தொலைத்ததை போல் தான் இருந்தான்... தங்களால் முடிந்த வரை கார்த்திக்கை பழைய படி மாற்ற முயன்று அதில் வெற்றியும் ஈட்டினர் குடும்பத்தினர்...

கயல் எந்த ஒரு கவலையும் இன்றி அவள் பாட்டிற்கு சுற்றி வந்தாள்... பள்ளி செல்ல வேண்டாமென கூறியதால் வந்த குஷி அவளுக்கு.. குடும்பத்தினருக்கு தான் இவள் எந்த நேரம் எந்த வயதிற்கு மாறுவாளோ என்று பரபரப்பாகவே இருந்தது...

நாட்களும் ஓடியது.. மாதவி அம்மா ஒரு நிலைக்கு மேல் தாங்க இயலாமல் ஆழ்ந்த நித்திரையிலே இயற்கை எய்தினார்... கார்த்திக்கையே அவருக்கு அனைத்தையும் செய்ய வைத்து அடக்கம் செய்தனர்.. முதல் ஒரு வாரம் கார்த்திக் அவன் நிலையிலே இல்லை.. துருவிடம் மட்டும் தான் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினான்..

இதற்கு மேலும் விட்டால் தாங்காதென தன்னை பற்றிய உண்மையையும் அவர்களின் வாழ்கை பற்றிய அனைத்து உண்மையையும் துருவ் கார்த்திக்கிடம் ஒப்பித்து விட்டான்... பத்து வயதானாலும் பதினைந்து வயதுக்குண்டான பக்குவமிருந்ததால் முதலில் நம்ப மறுத்த கார்த்திக் அவர்களின் உடல் மாற்றத்தை உணர்ந்து சரியென நம்பி அஜயையும் ஏற்று கொண்டு பழைய நிலைக்கு திரும்ப முயற்சித்தான்...

வீட்டினர் அவனிடம் வேறுபாடு பார்க்காமல் அவனை அன்பாய் பார்த்து கொண்டனர்.. ஆனால் அனைவரின் பீப்பியையும் ஏற்றுவதை போல் ஒரு வருடம் பின் ஒரு நாள் விடிந்தது... அன்று துருவ் மற்றும் கார்த்திக் பதினோறு வயதிலிருந்து ஐந்து வயதிற்கு மாறினர்... கயல் ஒரு வயது குழந்தையாகியிருந்தாள்...

வீட்டினர் பயத்தின் உச்சியை அடைந்திருந்தனர்... ஆனால் தர்மன் ஐயாவை வைத்து ஏதோ கூறி அவர்களையும் சமாளித்தனர் நம் நாயகர்கள்.. அடுத்தடுத்த நாட்ளிலும் இம்மூவரின் வயது குறைந்து கொண்டே இருக்க மற்ற குழந்தைகள் வளர தொடங்கியிருந்தனர்...

துருவ் கார்த்திக்கின் நான்கு வயதில் அவர்களின் குறைந்த வளர்ச்சி தடைப்பட்டு அதே வயதில் நிற்கவும் கயல் வீட்டில் மாயமாய் மறைந்திருந்தாள்... இரவு மோகினி அரைகுறையாய் கண்டது என்னவோ அவளோடு ஒட்டி படுத்திருந்த குழந்தையை ஏதோ ஒரு வெண்ணிற ஒளி சூழ்ந்ததை தான்...

கயலை காணாமல் வீடே பறபறப்பாய் இருக்க தர்மன் ஐயா வீட்டிற்கு வரவளித்தது மட்டுமல்லாமல் கயல் இன்னும் ஒரு வருடத்தில் உங்களிடம் வந்து விடுவாள் என சாதாரணமாய் கூறி அவர் பாட்டிற்கு வந்த வழியிலே சென்று விட்டார்...

இப்போது குழந்தைகளாய் துருவ் கார்த்திக்கும் மற்ற குழந்தைகளுடன் வளர கயல் இன்றி அந்த வருடம் அவர்கள் எண்ணியதை போல் இறைவனின் அருளால் வேகமாய் ஓடிவிட்டது..

என்ன தான் இவர்கள் படபடப்புடன் இருந்தாலும் நாயகிகளும் நாயகன்களும் அவரவர் மகன்களுடனும் அவரவர் சகோதர சகோதரிகளின் மகன்களுடனும் நேரம் செலவழிக்க ஒரு நாளும் தவறியதிலை...

குடும்பமே ஒரு வருடம் தவமாய் இருந்து காத்திருந்ததற்கு பலனாய் மோகினி கருத்தரித்தாள்... அவளின் மகிழ்வை கூற வேண்டுமா... தான் குதிக்க முடியாததால் குழந்தைகள் அனைவரையும் குதிக்க விட்டு சிறு பிள்ளை போல் ஒரே நாளில் வீட்டையே இரனகளமாக்கி விட்டாள்...

பராக்ரம வீரன்கள் பத்து பேரும் வளர வளர அனைவருக்கும் உடன் வருடா வருடம் பயமும் வளர்ந்தது... நம் கோவன்களின் நிலை தான் அந்தோ பரிதாபம்... சித்தார்த் ருத்ராக்ஷ் ஆதியன்த்தின் சக்திகளை மறைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டதூ அம்மூவருக்கு..

பராக்ரம வீரன்களை போல் அல்லாது இரட்சகன்களுக்கு உலகின் அதிசக்திய மூச்சங்களான கோவன்களின் சக்திகள் உள்ளதால் அதை குறிப்பிட்ட வயது வரைக்குமே யாராலும் தடுக்க முடியாது... ஆனால் அந்த குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டால் அவர்களின் சக்திகள் குழந்தைகள் பக்குவமடையும் வரை என்றும் தன்னால் வெளி வராது...

அந்த குறிப்பிட்ட காலம் வரை இம்மூவரை காக்காது வேறேதேனும் இன்னல் ஏற்பட்டால் அது இம்மூவர் மட்டுமல்லாது பராக்ரம வீரன்கள் பத்து பேரின் சக்திகளையும் வெளி கொணர்ந்து அவர்களுக்கும் ஆபத்தாகிவிடும்...

மோகினியின் பத்தாம் மாதத்தில் சரியாக அவளுக்கு வலியெடுத்தது.. முதல் இரண்டு பிரசவங்களை போல் அல்லாது இது மிகவும் சிக்கலுடன் இருந்தது... வேறு வழியின்றி சிசேசியரியேனென முடிவெடுத்தனர்...

வீனா ரக்ஷா தான்யா தான் பிரசவம் பார்த்ததென்பதால் மோகினியின் நாக உருவம் மாறினாலும் அது பிரச்சனையை தரவில்லை... இறுதியாக இரண்டு மணி நேர தீவிற பரிசோதனையின் பின் தன் அழுகுரலுடன் மீண்டும் தன் காலடியை அப்புவியில் பதித்தாள் கயல்விழி..

குடும்பத்தினர் அவளின் அழுகுரலில் அளவில்லா மகிழ்ச்சியடைய அவசர சிகிச்சையயிலிருந்த மருத்துவ நாயகிகள் அவளை கண்டு அழுதே விட்டனர்..

அது கயலே தான்... முன்பு எவ்வாறு இருந்தாலோ அதே கயல் தான் என குதியாய் குதித்து அவளுக்கு கயல்விழி என்றே பெயரும் சூட்டினர் நம் நாயகன்கள்...

ஒரு வாரத்திற்கு பின் தாய் சேய் இருவரும் நலமாய் வீடு திரும்பினர்...

அஜய் ருமேஷ் விதுஷ் மூவரும் நான்கு வயதையும் துருவ் கார்த்திக் ஆறு வயதையும் மற்ற அனைவரும் ஐந்து வயதையும் அடைந்த நேரமது...

வேலு தாத்தா முன்பிற்கு மிகவும் மெலிந்து ஓய்விலே தான் இருந்தார்... அவரை தினமும் வீர் தவறாமல் பரிசோதித்து விட்டு தான் மற்ற வேலையை பார்க்க செல்வான்...

அன்று வீருக்காய் சோபாவில் அமர்ந்து காத்திருந்த ரனீஷ் அவனருகில் அமர்ந்து அவன் மகன் சித்தார்த் வரையும் ஒரு படத்தை பார்த்து கொண்டிருந்தான்...

பதினைந்து குச்சியை வரைந்து அதற்கு கை காலும் தலைக்கு ஒரு வட்டத்தையும் போட்டு அனைத்திற்கும் மேல் அவன் பெயரையும் அவனது மொத்த சகோதரன்கள் பெயரையும் எழுதி கொண்டிருந்தான் குட்டி சித்தார்த்..

சித்தார்த் என்ற அவன் பெயரில் சித்து என்றும் அடுத்து இறுதியாய் நின்ற இரு பொம்மைகளில் ருத்து அத்து என்றும் எழுதினான்... இறுதியில் ஒரு குட்டி குச்சியை வரைந்து அதில் கயல் என எழுதி முடித்ததும்

சித்தார்த் : சிச்சா சிச்சா.. எப்தி இருக்கு என அப்படத்தை காட்டி வாயெல்லாம் பல்லாய் கேட்க

ரனீஷ் : வாவ்வ்வ் சூப்பரா இருக்கு மை டியர் ப்ரின்ஸ் என கூறி அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க சித்துவும் பதிலுக்கு அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்...

சித்தார்த் : நா போய் ரச்சா (ரக்ஷா)  சித்திட்ட கேட்டுட்டு வரேன் என ஓட போனவனை விடாமல் பிடித்து கொண்டு

ரனீஷ் : சித்து ருத்ராக்கும் ஆதிக்கும் ருத்து அத்துன்னு ஏன் எழுதியிருக்க என அதை சுட்டி காட்டியபடி கேட்டான்

சித்தார்த் : ஏன்னா நா ருத்துயும் அத்துயும் அப்தி தான் சித்தா கூப்டுவேன்.. என அவன் மழலை மொழியில் அழகாய் கூறினான்...

ரனீஷ் : அப்டியா... அப்போ நானும் அப்டியே கூப்டட்டா என விளையாட்டாய் அவன் என்ன சொல்வான் என தெரிந்து கொள்ள கேட்க இதை கேட்டதும் ரனீஷை உதட்டை சுருக்கி முறைத்த சித்தார்த்

சித்தார்த் : சிச்சா கூடாது... நா மட்டும் தான் அப்தி கூப்டுவேன் என்றான் காட்டமாய் இதை எதிர்பார்க்காத ரனீஷோ " பார்ரா அப்பன மாரியே மொறைக்கிரத.. விட்டா அவன மாரியே கண்ணுல நெருப்ப வச்சு எரிச்சிடுவான் போலருக்கே ... ஆனா என் செல்லக்குட்டியால தான் முடியாதே " என உண்மை அறியாமல் மனதுக்குள்ளே தன் செல்ல மகனை கொஞ்சிய ரனீஷ் அதே நக்கலுடன்

ரனீஷ் : ஹான் ... நான் அப்டி தான் கூப்டுவேன் நீ என்ன செய்வ என கேட்கவும் அவன் அருகில் இவர்கள் சம்பாஷனையெல்லாம் கேட்டு கொண்டு மித்ரனுக்கு தண்ணியை புகட்டி கொண்டிருந்த வளவன் ரனீஷிடம்

வளவன் : டேய் அவன் கிட்ட விளையாடாத டா என அபாய மணி அடிக்க அதற்கு ரனீஷோ கண்ணடித்து விட்டு

ரனீஷ் : சொல்லு சித்து .. சிச்சாவ என்ன செய்வ..

வளவன் ம.வ : நாம இனிமே இங்க உக்கார்ரது டேன்ஜரு.. என மனதிலே கூறியவாறு மித்ரன் தண்ணீரை குடித்து விட்டு ஓடியதும் அவனும் அங்கிருந்து எஸ்ஸானான்...

வேக பெருமூச்சு விட்டவாறு ரனீஷை ஏறிட்டு கொண்டிருந்த சித்தார்த் " பாய்ஸ் புடிங்க சிச்சாவ " என கத்தவும் வெவ்வேறு இடங்களில் விளையாடி கொண்டும் லூட்டி அடித்தும் கொண்டும் இருந்த குழந்தைகள் அதை அப்படியே விட்டு விட்டு சித்தார்த்திடம் ஓடி வந்தது மட்டுமல்லாமல் முளித்து கொண்டிருந்த ரனீஷை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து அந்த சோபாவிலே அமர வைத்தனர்...

இப்படி அனைவரும் அங்கு ஓடுவதை அங்கங்கு இருந்த நாயகர்கள் வித்யாசமாய் பார்த்து கொண்டு வெளியே வர நேராக சமையற்கட்டிற்கு சென்ற சித்தார்த் ஒரு தோசை கரண்டியின் பிடியை அடுப்பில் சூடாகி கொண்டிருந்த அரிசி பானையின் கீழே வைத்தான்...

வர்ஷி : ஹே சித்து கண்ணா இங்க என்ன செய்ர என காய்கறி வெட்டி கொண்டிருந்த வர்ஷியும் அந்த அரிசி பானையில் சாதத்தை பார்த்தவாறு குழம்பு வைத்து கொண்டிருந்த இலக்கியாவும் ப்ரியாவும் அவனை வித்யாசமாய் நோக்கினர்...

இம்மூவரையும் கவனிக்காமல் அந்த கரண்டியை வேகமாய் உருவி கொண்டு ராஜநடையிட்டு இவன் வெளியேற இம்மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அவசரமாய் வெளிய வர மகன் மருமகன்களால் சிறை வைக்கப்பட்டிருந்த ரனீஷை நோக்கி சென்றான் சித்தார்த்...

ரனீஷென்ன இவன் சைகையை பார்த்து கொண்டிருந்த எவருமே சித்தார்த்தின் இந்த அதிரடியை எதிர்பார்த்திருக்கவில்லை...

சித்தார்த் : சொல்லு சிச்சா இனிமேலும் ருத்து அத்துன்னு அவங்கள சொல்லுவியா என ஆழ்ந்த குரலில் வில்லன் கணக்காய் கேட்டபடி முன்னேறியவனை கண்கள் வெளியேறும் நிலையில் பார்த்த ரனீஷால் அங்கிருந்து எழுந்திருக்க முடியும் இருந்தும் அவன் அமர்ந்திருக்க அவன் கரத்தில் அந்த கரண்டியை சித்தார்த் வைக்க போன கண சமயத்தில் மாடியிலிருந்து ஓடி வந்த க்ரிஷ் அதை தூக்கியெறிந்தான்...

க்ரிஷ் : என்ன காரியம் செய்ய பாத்த சித்து என க்ரிஷ் கத்திய கத்தில் அனைவரும் அரண்டு விட சித்தார்த் அவனை இன்னும் அதே முறைப்புடன் பார்த்து கொண்டிருந்தான்...

எஞ்சியிருந்த மற்றவர்களும் க்ரிஷ்ஷின் இந்த கடுங்கோபமான கர்ஜனையில் அவ்விடத்தில் கூட.. ரனீஷை பிடித்திருந்த மற்ற குழந்தைகள் உடனே அவனுக்கு விடுதலை கொடுத்தனர்...

க்ரிஷ்ஷின் கர்ஜனையில் நாயகன்கள் அனைவரும் அவன் சித்து மீதா கோவமடைந்திருக்கிறான் என அதிர்ச்சியடைந்திருக்க

இந்திரன் : டேய் குழந்தை கிட்ட ஏன் டா கத்துர

க்ரிஷ் : உன் புள்ள இப்போ என்ன செய்ய பாத்தான் தெரியுமா... நா கொஞ்சம் லேட்டா வந்துருந்தா என்ன ஆகுறது இப்போ என்ன கோவம் இவனுக்கு என இந்திரனிடம் கத்த இப்போது சித்தார்த்திற்கும் உடலில் பயம் பரவியது

சித்தார்த் : சிச்சா தான் ருத்துயும் அத்துயும் என முழுதாய் முடிக்கும் முன்னே

க்ரிஷ் : அவன் என்ன செஞ்சிருந்தாலும் நீ பழுக்க வச்ச கரண்டிய எடுத்து வந்தது தப்பு தான சித்து .. உன் சிச்சாவ நீ எதிர்த்து நிக்கலாமா என சற்று கோவத்தை அடக்கினாலும் காட்டமாய் கேட்டான்...

ரனீஷ் : டேய் சும்மா இரு டா... குழந்தை கிட்ட போய் இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்க... அவனுக்கு என்ன தெரிய போகுது இப்போ... உன் மகன் உன்ன மாரியே தான டா இருப்பான்... இதெல்லாம் ஒரு விஷயம்னு கத்திக்கிட்டு இருக்க... சித்து கண்ணா சிச்சாக்கிட்ட வா என அழைக்கவும் அடுத்த நொடியே சித்தார்த் ஆழுது கொண்டே ரனீஷை கட்டி கொண்டான்...

சித்தார்த் : சிச்சா.. அப்பா என இன்னும் அவர்களை அதே கோவத்துடன் பார்த்து கொண்டிருந்த க்ரிஷ்ஷை காட்ட

ரனீஷ் : ஷ் ஏன் டா அழர ... அவன் கெடக்குரான்... நீ சிச்சா கிட்ட வந்துட்டல்ல... சிச்சாவ மீறி உன் அப்பா உன்ன அடிச்சிறுவானா.. என அவன் கை வளைவில் தூக்கி மடியில் அமர வைத்து சித்தார்த்தை சமாதானம் செய்தான்...

இன்னும் தன் கோவத்தில் தன்னையே அன்னாந்து பார்த்து கொண்டிருந்த மகன்களையும் மருமகன்களையும் கண்ட க்ரிஷ் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு சித்தார்த்தின் தலையை வருடினான்..

க்ரிஷ் : இனிமே அப்டி செய்ய மாட்ட தானே.. என பொருமையாய் கேட்க கண்ணீரை துடைத்தவாறு தலையசைத்த சித்தார்த் க்ரிஷ்ஷை காணாமல் ரனீஷை மீண்டும் கட்டி கொண்டான்...

சித்துவை தானும் கட்டி கொண்ட ரனீஷ் க்ரிஷ்ஷிற்கு தான் பார்த்து கொள்வதாய் கண்கள் மூடி திறந்து அவனை சமாதானம் செய்தான்...

பின் நிலை சகஜமாகியது.. இருந்தும் சித்தார்த் க்ரிஷ்ஷிடம் பேசாமலே இருக்க தந்தையின் கோவம் தனையனுக்கும் இருக்குமென குடும்பமே க்ரிஷ்ஷிற்கு பாடம் வேறு எடுத்தது...

அதற்கு பின் எப்படியோ சித்தார்த்திடம் கெஞ்சி கொஞ்சி க்ரிஷ் மன்னிப்பு கேட்டு அவனை பேச வைத்தான்...

கயல் பிறந்த இரண்டு மாதங்களிலே தர்மன் ஐயா மீண்டும் நம் நாயகர்களை எச்சரித்து சென்றார்... இதற்கு மேல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்பதற்காய் பெரியவர்கள் அனைவரையுமே வலுக்கட்டாயமாய் கெனடாவிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.. அவர்களை வீட்டிற்கே வரவிடாமல் அங்கேயே இருக்கவும் வைத்தனர்...

அவர்களை ஊருக்கு வர விடாமல் நாயகன்கள் மாறி மாறி சென்று அவர்களை பார்த்து விட்டு வந்தனர்...

யட்சினி சர்ப்ப வம்சத்தினர் எதற்காகவோ காத்து கொண்டிருந்தனர்... நாயகர்கள் சோர்வுற்ற நேரத்தில் தான் நேரம் பார்த்து அடிக்க வேண்டுமென அவர்கள் காத்திருந்த அந்த நாளும் விடிந்தது...

நாட்களும் ஓடிட நாயகிகள் மீண்டும் கருவுற்றனர்... வைஷ்ணவி இக்ஷிதா நந்தினி மற்றும் மதி பிறந்து அறு மாதம் கடந்திருந்தது... மது எட்டு மாதமும்... வர்ஷி ஆறு மாதமும் வீனா ஐந்தரை மாதமும் தான்யா ஐந்தரை மாதமும் கருவுற்றுரிருந்தனர்...

அனு திவ்யா ப்ரியா அவர்களின் இரண்டாவது குழந்தையின் நிறைமாதத்தில் இருந்தனர்...

மதுவின் வளைகாப்பிற்காக நாயகன்கள் நகரத்துக்கு செல்ல உடன் நம்ம சின்ன மகன்களும் சென்றிருந்தனர்.. துருவ் கார்த்திக் அஜய் ருமேஷ் விதுஷ் வீட்டிலே இருந்து விட்டனர்...

நம் சீபிஐ நாயகன்களும் முகில் சரணுடன் பதவி ஆசைக்காக குழந்தைகளை கடத்தி பலியிட்ட ஒரு அரசியல்வாதியை சட்டத்தின் முன் பிடித்து குற்றத்தை நிரூபித்திருந்தனர்... அதில் ஆத்திரமடைந்த அந்த அரசியல் வாதியின் கட்டளையினால் அவர்களின் அடியாட்களால் காட்டின் இடையில் நம் நாயகன்களின் மீது துப்பாக்கி சூட்டு நடந்தது...

குழந்தைகளை எப்படியோ காட்டிற்குள் பதுக்கி காத்தவர்கள் தங்களை காக்காமல் இருந்து விட பலத்த காயங்களை பெற்று அடியாட்களையும் அடித்து விலாசி மடிய வைத்தனர்... ஆனால் எதிர்பாராத விதமாக க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவரும் குண்டடி பட்டு தீவிர நிலையில் தள்ளப்பட்டனர்...

நாயகர்கள் நேரம் தாமதிக்காமல் குழந்தைகளையும் தூக்கி கொண்டு உடனே மருத்துவமனைக்கு சென்றனர்... கருவுற்ற நாயகிகளை விட்டு விட்டு மற்ற நாயகிகளும் மோகினி வளவன் மற்றும் மற்ற ஐந்து குழந்தைகள் மாத்திரம் மருத்துவமனைக்கு வர அனு திவ்யா ப்ரியா அடம் பிடித்து அங்கும் வந்து அவரவர் கணவனின் நிலை கண்டு கதறினர்...

க்ரிஷ்ஷின் நிலை மோசமாகி கொண்டிருக்க இதயத்தில் பட்ட குண்டை எடுத்து அவனை உடனே அப்சர்வேஷனில் வைத்தனர்...இந்திரன் மற்றும் சத்தீஷ் கவலை கிடமாய் இருந்தனர்... இரத்தத்தின் குறைபாடு அவர்களை இன்னும் பலவீனமாக்கியது...

ஆனால் பத்து மணி நேர போராட்டத்தின் பின் தன் தோழன்களை கை விடாது மூவரையும் உயிர் பிழைக்க வைத்தனர் ரவி ரனீஷ் வீர் மற்றும் அஷ்வன்த்... அதன் பின் தான் அனைவருக்கும் உயிரே வந்தது...

ஆனால் விதி அவர்களை நிம்மதியாய் விடுவதை போல் தான் தெரியவில்லை... அந்த அவசர சிகிச்சை அறையின் மேல் பக்கத்தை பொத்து கொண்டு உள்ளே குதித்தான் விஞ்ஞவெள்ளன்...

அவன் குதித்த வேகத்தில் சகோதரன்கள் மூவரும் இருந்த படுக்கை தள்ளி விழ அவர்களை பரிசோதித்து முடித்திருந்த மருத்துவ நாயகன்கள் அதிர்ந்து போயினர்...

விழுந்த வேகத்திற்கு தலை தரையில் இடிக்க அரை குறை மயக்கத்தில் தட்டு தடுமாறி எழுந்தான் இந்திரன்... அவனது மங்களான கண்களில் வெள்ளி வேடம் அணிந்த விஞ்ஞவெள்ளன் வெளிச்சமாய் தெரிய நொடிகளில் இந்திரனின் கண்கள் நீலத்தால் சூழ்ந்து அவன் பார்வையை தெளிவாக்கி மயக்கத்தை மட்டுப்பட செய்தது...

ஏளனமான புன்னகையுடன் இந்திரனை விஞ்ஞவெள்ளன் ஏறிட அவனுக்கு நிகராய் ஏளனமாய் புன்னகைத்த இந்திரன் அவன் கழுத்தை பிடித்து தன் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து மேலே எம்பி விஞ்ஞவெள்ளனை காட்டை நோக்கி தூர எறிந்தான்...

ரனீஷ் : வளவா நீ குழந்தைங்களையும் மோகினி அக்காஅனு திவ்யா ப்ரியாவையும் கூட்டிக்கிட்டு உடனே ஷேஷ்வமலைக்கு போ.. அங்க கர்ப்பமா இருக்க லீலாவதிய பாதுகாக்க சொல்லு.. போ என வெளியே வந்து கத்தினான்...

அஷ்வன்த் : ரக்ஷா பவி ஒவீ நிரு நீங்க மது வீனா தான்யா வர்ஷிக்கு பாதுகாப்பா இருங்க... நாங்க இவங்கள பாத்துக்குறோம்.. முடிஞ்சா அவங்க நாழு பேரையும் ஷேஷ்வமலைக்கு கூட்டீட்டு போங்க... கோ என்றதும் ஆறுவரும் தலையசைத்து வர மறுத்த நாகனிகளையும் இழுத்து கொண்டு உடனே அங்கிருந்து ஷேஷ்வமலைக்கு கிளம்பினர்...

இந்திரன் வெளியேறிய வேகத்திற்கு கருஞ்சிறுத்தை சாகாரகாந்தன் அவன் மீது வெறி கொண்டு பாய்ந்து கீழே தள்ளினான்...

இந்திரனின் வேற்று முதுகு மண்ணில் தேய ஒரு மரத்தில் இடித்து நின்ற இந்திரன் கருஞ்சிறுத்தை சாகாரகாந்தனின் வைற்றில் எட்டி உதைத்தான்..

கருஞ்சிறுத்தை சாகாரகாந்தன் விழுந்து வேகத்திற்கு மீண்டும் இந்திரன் மீது பாய இடையில் தன் கூர்மையான வாளால் அவன் நெஞ்சை கிளித்தான் ரித்விக்...

ரித்விக் : மச்சான் உள்ள போய் க்ரிஷ் சத்தீஷ எழுப்பு.. நமக்கு காத்திருக்க நேரமில்ல என அவன் மீது மீண்டும் கொலைவெறியுடன் கடிக்க பாய்ந்த கருஞ்சிறுத்தை சாகாரகாந்தனின் கழுத்தில் ஒரு வெட்டிட்டு அவன் தடுமாறிய நேரம் எட்டி உதைத்தான்...

இந்திரன் உடனே அங்கிருந்து நகர எத்தனிக்க அதற்கு முன்னமே அவனை தடுப்பதை போல் அவன் மீது பாய்ந்தான் ஓநாய் விஞ்ஞவெள்ளன்..

அவன் பெரிய வாயை பிடித்து அவனை தள்ள முயன்று கொண்டிருந்த இந்திரனை அவன் கால்களின் கூரிய நகங்களால் இவன் பதம் பார்க்க அந்த வலியில் பல்லை கடித்த இந்திரன் ஒரேடியாய் அழுத்தி அவனை கீழே தள்ள அவன் மீண்டும் எழும் முன் அவனது வயிற்றில் மிதித்து அவனது வாளால் எதிர்கொண்டு நின்றான் அஷ்வன்த்..

இந்திரன் அஷ்வன்த் வந்ததும் உடனே மருத்துவமனை நோக்கி ஓட அவனுக்கு தடையாய் மேலிருந்து குதித்தான் பறக்கும் சிறுத்தை புலி மிதரவர்தனன்...

இவனை எதிர்பார்க்காததால் இந்திரன் சட்டென பின் நகர சரியாக இந்திரனின் பின்னிருந்து பாய்ந்தான் சிறுத்தை புலி மிதரவர்தனன்...

அவன் பாய்ந்ததில் அவனது இரு கைகளையும் பிடித்தவாறு கீழே விழுந்த இந்திரன் தன்னை கடிப்பதிலே குறியாய் இருப்பவனை கடினப்பட்டு தடுக்க ஒரு கட்டத்தில் இந்திரனின் கைகள் அவனின் மொத்த இடையை தாங்க இயலாமல் வலி கொடுக்க இந்திரன் ஒரு அதீத அலரலுடன் அவன் கைகளை உயர்த்தி காலால் அவனை உதைத்து அவன் அசந்த நொடியில் எம்பி எழுந்து நின்றான்...

பறக்கும் மிதரவர்தனன் : ஹா சகோதரர்களான எம் இருவரிடமிருந்து தாம் தப்ப போவதில்லை திரவக்கோவனே என இந்திரனின் பின் இருந்தவாறு குரல் கொடுக்க அவனை நோக்கி திரும்பிய இந்திரன் அடுத்த நொடி நக்கலாய் புன்னகைத்தான்...

அதன் அர்த்தத்தை யோசிச்சாமல் வெறி ஏறி பறக்கும் சிறுத்தை புலி மிதரவர்தனன் ஒரு உறுமலுடன் இந்திரன் மீது தாவ அவன் ஓரடி நகரும் முன்னே சடாரென மேலே தூக்கப்பட்டு ஒரு பெரும் பாரையில் சென்று இடித்து கீழே தள்ளப்பட்டான்...

சிறுத்தை புலி மிதரவர்தனன் தன் சகோதரனின் இந்நிலையை கண்டு அதிர்ச்சியுடன் இந்திரனை நோக்க இவனுக்கு முன் திரும்பி நின்றிருந்த இந்திரனிற்கு மேல் தொலைவில் தன் வெண்ணிற கண்கள் ஒளிர முகம் இறுக காற்றில் எகிரினான் மூன்றாம் கோவனான சத்தீஷ்...

சத்தீஷ் இந்திரனுக்கு தலையசைத்ததும் இந்திரன் உடனே அங்கிருந்து வேகமாய் மருத்துவமனைக்கு சென்றான்... இடையில் புலி அருளவர்தனனும் சிறுத்தை மகரகாந்தனும் அவனை தடுக்க முகில் மற்றும் அர்ஜுன் அவர்களை தடுத்து இந்திரனுக்கு வழி வகுத்தனர்...

சத்தீஷ் அவன் கரத்தை உயர்த்தியதும் அதன் மூலம் பாய்ந்த சக்தி காற்றை கட்டுப்படுத்தி பறக்கும் சிறுத்தை புலி மிதரவர்தனனை மீண்டும் தூக்கி காற்றில் ஒரு சுழற்று சுழற்றி வேமாய் சிறுத்தை புலி மிதரவர்தனன் மீதே அடித்தது

மேலிருந்து அந்த பெரும் ஓட்டையின் வழியே உள்ளே கண்ட இந்திரன் அரை மயக்கத்தில் கீழே விழுந்ததில் எழ இயலாமல் தட்டு தடுமாறி மீண்டும் விழுந்து கொண்டிருந்த தன் சகோதரனை சுவைக்க எண்ணி சத்தமின்றி நகர்ந்த பறக்கும் கருஞ்சிறுத்தை சாகாரகாந்தனை கண்டு அவன் மீதே எகிரி குதித்தான்...

இந்திரனை சற்றும் எதிர்பார்க்காத பறக்கும் கறுஞ்சிறுத்தை சாகாரகாந்தன் கீழே நொடிந்து விழுந்ததில் அடி தொண்டையிலிருந்து உறுமினான்... அவன் கழுத்தை மிதித்து சுற்றிய இந்திரன் அவனது கால்கள் இரண்டையும் இரு கைகளால் இறுக்கி பிடித்து அதே ஓட்டையின் வழியாக வெளியே தூக்கி எறிந்தான்...

இவன் எப்போதடா வந்து விழுவான் என காத்திருந்ததை போல அவன் விழுந்ததும் எழும் முன் தன் வாளால் குறிக்கிட்டு அவனை எதிர்த்து நின்றான் வீர்..

இந்திரனின் நீர் சக்தி க்ரிஷ்ஷின் இதயத்தில் ஊடுருவி மருந்தாய் மாறி கொண்டிருக்க க்ரிஷ்ஷின் மயக்கமும் மெதுமெதுவாய் மட்டுப்பட்டது...

திடீரென கேட்ட உறுமலில் நிமிர்ந்து நோக்கிய இந்திரன் உள்ளே குதித்த பறக்கும் ஓநாய் விஞ்ஞவெள்ளனை கவனிக்க இப்போது இந்திரனுக்கு முன்பாக ஓடி வந்து தன் வாளால் அவனை தடுத்தி நிறுத்தி அரணாய் நின்றான் ரவி..

அவனை கண்டு ஏளனமாய் நகைத்த பறக்கும் ஓநாய் விஞ்ஞவெள்ளன் அவன் கால்களை பின் உதைத்து ரவியை மோத இதை தன் வாளால் சமாளிக்க இயலாததால் வாளை கேடையமாய் முன் வைத்து இந்திரனையும் க்ரிஷ்ஷையும் நெருங்க விடாமல் ரவி காக்க ஒரு கட்டத்தில் ரவி அழுத்தத்தை குறைக்காததால் திடீரென பறக்கும் ஓநாய் விஞ்ஞவெள்ளன் பின் வாங்க ரவி தடுமாறி கீழே விழுந்தான்...

இதை எதிர்பார்க்காத்த விஞ்ஞவெள்ளன் ரவியின் தோளை தன் வாயால் பற்றி அவன் வலியில் அலருவதை இரசித்து கொண்டே அந்த ஓட்டையின் வாயிலாக தூக்கி எறிந்தான்...

இந்திரன் ரவியை காப்பதற்காய் உடனே வெளியே வர ஹாஹாஹா என கோரமாய் சிரித்து கொண்டே எகிரி குதித்த பறக்கும் ஓநாய் விஞ்ஞவெள்ளன் அந்த கட்டிடத்தின் மீது கம்பீரமாய் நின்று கீழ் கிடந்த ரவியையும் அவனை தூக்க முயற்சித்த இந்திரனையும் நோக்கினான்...

பறக்கும் ஒநாய் விஞ்ஞவெள்ளன் : ஹாஹா இதே போல்.. இதே போல் தாம் அனைவரையும் இன்று இரத்தம் சிந்திட வைப்போம் ஹாஹாஹா என கொக்கரித்தவன் முதுகில் பட்டு தெறித்த தீயில் பதறி போய் அந்த கட்டிடத்திலிருந்து சடாரென கீழ்  விழுந்தான்...

பறக்கும் ஒநாய் விஞ்ஞவெள்ளன் விழுந்த வேகத்திற்கு நிமிர்ந்து பார்க்க தன் சிகப்பு கண்கள் பளபளக்க உடல் முழுவதையும் சூழ்ந்த தீயுடன் அவன் முன் பத்தடி மேல் பறந்து கொண்டிருந்தான் க்ரிஷ்...

க்ரிஷ் எழுந்ததை உணர்ந்ததும் இவ்வளவு நேரமும் தங்கள் எதிரிகளுடன் போராடி அவர்களை தடுத்து கொண்டிருந்த அனைத்து நாயகர்களின் முகத்திலும் விஷமமான புன்னகை இலையோட .. க்ரிஷ் அதே விஷமமான புன்னகையுடன் " இப்போது தொடங்குவோமா நம் ஆட்டத்தை " என கர்ஜித்து அவன் இரு கரங்களையும் ஒன்றிணைத்து ஒரு தட்டு தட்டி எதிரிகளை நோக்கினான்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... இதுலையே முடிச்சிடுவன்னு சொன்னியே என்னாடி இதுன்னு கேக்காதீங்க... உங்கள டிசப்பாய்ன்ட் பன்னனும்னு நினைக்கல... பட் பெருசா போறதால யாருக்காவது புடிக்காம போய்டுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இந்த யூடி இப்போ 4000 வார்த்தைகள தாண்டீடுச்சு... என்னால இந்த ஃப்லஷ்பக்ல நடந்த போர சின்னதா காட்டவே முடியாது... அதனால அதுக்கு தனி யூடி தான் எழுதியாகனும்... கவலப்படாதீங்க... அடுத்த யூடி ரொம்ப லேட் ஆகாது.. பட் நைட்க்குள்ள ஷ்யுரா வந்துடும்...  சோ புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்.. டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro