Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 39

பறக்கும் கருஞ்சிறுத்தை சாகாரகாந்தன் துஷ்ரிகளின் வீலென்ற சத்தத்தில் திசை திரும்பியிருந்த வளவனை தாக்க ... நிலை தடுமாறி கீழே விழுந்த வளவனை காற்றில் உருவான பந்தொன்று அவன் நிலத்தை அடையும் முன் தாங்கியது...

அங்கே இப்போது இரு கோவன்களுடன் ரவி ரனீஷ் சரண் மற்றும் முகில் வந்திருந்தனர்...

வாளால் எதிரிகளை தடுத்து கொண்டிருந்த வீர் மற்றும் ரித்விக் கோவன்களின் கண்ணசைவினால் கண்ணிமைக்கும் நொடி பொழுதில் பின் வாங்கி கொள்ள க்ரிஷ் அவ்விருவர் முன் நின்றான்...

கருஞ்சிறுத்தை சாகாரகாந்தன் க்ரிஷ் மீது பாயும் முன் சத்தீஷின் காற்றழுத்தத்தில் அவன் காற்றிலே மிதக்க இப்போது சடாரென தன் இமைகளை பிரித்த க்ரிஷ் விஷமமாய் தன் சிகப்பு விழிகளால் அவர்களை நோக்கி சிரித்தான்...

இடது காலை பின் தள்ளி தன் இரு கரத்தையும் முன் கொண்டு வந்து ஒரே நேரத்தில் அவன் பலமாய் அடிக்க ... எகிரி பாய்ந்த அதிர்வில் தீ பற்றி அவ்விருவரையும் ஒரு வளையத்திற்குள் அடைத்தது...

வளவன் : இது போதும்... நாம உடனே போகனும் என துரிதப்டுத்தியதால் அத்துடன் தலையாட்டிய க்ரிஷ் இவர்களை பின் தொடர்ந்து ஓடினான்...

எந்த பக்கம் செல்வதென தெரியாமல் முளித்து கொண்டிருந்தவர்களின் காதுகளை கிளித்தது அர்ஜுனின் அலரல்... ரவி அது எப்புறம் என சுட்டி காட்டி அர்ஜுனை நோக்கி வேகமெடுத்தான்...

இவர்கள் ஒன்பதுவரும் அவன் அலரல் வந்து திசை நோக்கி வேகமாய் ஓட அதனூடே அஷ்வன்த்தின் " அர்ஜுன் " என்ற அலரலும் இப்போது கேட்டது...

தொலைவில் முதுகில் இறங்கியிருந்த வாளின் பாரத்தினால் நிற்க தடுமாறி கீழே விழுந்த அர்ஜுனை அஷ்வன்த் பிடிக்க வலியை பொருக்க இயலாமல் அர்ஜுன் அவன் வாளை இறுக்கி பிடித்து மண்ணில் குத்தினான்...

அஷ்வன்த் அவன் முதுகில் இறங்கிய வாளை உருவி தூர எறிய அவர்களை நோக்கி அந்த காடே அதிர கொக்கரித்த சிறுத்தை மகரகாந்தன் காலை மண்ணில் தேய்த்து தேய்த்து வேகமாய் ஓடி வந்தான்...

அதை கண்டு ஏளனமாய் சிரித்து கொண்டிருந்த பறக்கும் சிறுத்தை மகரகாந்தன் தன்னை ஏதோ ஒன்று தாக்கியதில் சுதாரித்து சுற்றி பார்க்க அவர்கள் இருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் அதி வேகமாய் ஒடி வந்த எட்டு நாயகன்களையும் அவனை நோக்கி வேகமாய் பறந்து வந்து வயிற்றில் கிளித்து விட்டு சென்ற வளவனையும் கவனித்தான்...

ஆயினும் வளவன் அவனது கூரான விரல்களால் அவனது வயிற்றை பதம் பார்த்திருந்ததால் இரத்தம் கொட்ட தொடங்கியிருந்தது... தன் சரிபாதியின் அலரலில் திரும்பி பார்த்த சிறுத்தை மகரகாந்தன் அப்போதே அவனை நோக்கி வேகமாய் ஓடி வந்த நாயகன்களை கவனித்தான்...

அவன் ஓட்டத்தை வேகப்படுத்தும் முன்னே திடீரென நின்ற சரண் அவன் கால்களை நிலத்தில் ஓங்கி அடிக்க அந்த அதிர்வின் பலனாய் புடைத்த பாரை ஒன்று சரியாக மகரகாந்தனை ஓட்டத்திலே இடிக்க வைத்து தள்ளி விட்டது...

அவன் தரையில் தேய்த்து கொண்டு விழும் முன் சத்தீஷ் காற்றில் தூக்கியிருந்தான்...

இப்போது இரு மகரகாந்தனும் இவர்கள் இவ்வளவு தூரம் வந்ததை எண்ணி சற்றே மிரண்டு தான் போயிருந்தனைர்... தங்களை காத்துக்கொள்ள அவகாசம் கூட கொடுக்காமல் சத்தீஷ் அவர்களை மேலே தூக்கி நிலத்தில் அடித்தான்...

அதில் நில்லாமல் முகிலின் ஆணை படி சுற்றியிருந்த ஊதா நிற மரங்களின் வேர்கள் அவ்விருவரையும் கண்ணிமைக்கும் நேரத்தினில் இறுக்கி பிடித்து கொண்டது...

அதன் பிடியிலிருந்து அவர்களால் கனவிலும் வர இயலாதென்பதால் இப்போது அர்ஜுன் மற்றும் அஷ்வன்த்திடம் ஓடினர்...

ஓரளவிற்கு அஷ்வன்த் அர்ஜுனின் காயத்தை பரிசோதித்திருந்தான்... முகில் அர்ஜுனுக்கு எழ உதவ நிற்க இயலாமல் அர்ஜுன் முகில் மீதே சாய்ந்து கொண்டான்...

அனைவரும் அவனை சற்று திகிலுடன் பார்க்க சில வினாடிகள் கண்களை மூடி பெருமூச்சறித்தவாறு நின்ற அர்ஜுன் பின் தன் சகோதரனிடமிருந்து பிரிந்து நிற்க முகில் அவனை சுற்றி கைகளையிட்டு தாங்கி பிடித்து கொண்டான்...

அஷ்வன்த் : ஆர்யு ஓக்கே நௌ...

அர்ஜுன் : மச் பெட்டர்... என தலையசைத்தவன் கீழே குத்திய வாளை எடுத்து அவனது இடையில் பதித்தான்...

அஷ்வன்த் : வாங்க போகலாம் இந்திரன் மட்டும் அங்க தனியா இருப்பான்

இதை கேட்டதும் உடனே அனைவரும் அவரவர் காயங்களை மறந்து கோட்டையை நோக்கி ஓட்டம் பிடித்தனர்...

கண்ணிற்கெட்டிய தூரத்தில் கோட்டை தெரிந்த அடுத்த நொடி அவர்களின் காதுகளை குடைவதை போல் அக்கோட்டையினுள் இருந்து பலமாய் ஏதோ ஒரு ஓசை வெளியேறியது...

அதை பொருட்படுத்தாமல் நகர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாய் அந்த கோட்டையின் மதிலை சுற்றி இந்திரனை பிடிக்க முடியாமல் முட்டி நின்ற நாகமனிதர்கள் இன்னமும் ஒருவரையொருவர் இடித்து அடித்து அந்த மதிலின் மீது ஏற இயலாமல் நின்றிருந்தனர்...

அந்த நாகமனிதர்களின் எண்ணிக்கை அளவு கடந்திருக்க அவர்களிடம் இப்போது எதிர்த்து நின்று போரிடும் அளவு நேரமில்லாததால் சத்தமின்றி வேகத்தை குறைத்தவர்கள் சரசரவென அருகிலிருந்த மரங்களில் ஏறினர்...

அந்த மதிலை நோக்கி பறந்து சென்ற வளவனை அந்த நாகமனிதர்களுள் சீலர் கண்டதால் இப்போது அனைவரும் நாயகன்களையும் கவனித்து அவர்களை தடுக்க முனைந்தனர்...

அதற்கு முன்னமே மரங்களின் மீது ஏறியிருந்த சஹாத்திய சூரர்கள் அந்த நாகமனிதர்களும் ஏறி வருவதை கண்டு கிளைகளை விடுத்தும் அனைத்து மரங்களின் உச்சிக்கு ஏறி க்ரிஷ் சத்தீஷை தேடினர்...

வீர் தன் காலை பிடித்து இழுத்த ஒரு கொடூரமான நாகமனிதனின் முகத்தில் உதைத்து அவனை தள்ளி விட மற்றையவன் ஒருவன் இப்போது வீரை பிடித்து கீழே இழுத்தான்... தடுமாறி எதையோ பிடித்து ஏறி கொண்ட வீர் சிந்திக்காமல் அந்த மரத்தின் உச்சியிலிருந்து கீழே குதிக்க அவனை பிடிக்க கடினப்பட்டு அம்மரத்தில் அடித்து பிடித்து ஏறியிருந்த அந்த நாகமனிதர்கள் அவனை நோக்கி அடி தொண்டையிலிருந்து சீர... திடீரென நிலத்தில் பயங்கரமான அதிர்வு ஒன்று உருவாகி க்ரிஷ் மற்றும் சத்தீஷ் ஒரே நேரத்தில் அவரவர் ஆத்ம சக்தியில் மிளிர்ந்தவாறு மேலே எகிரி அந்த மதிலின் மேல் ஏறினர்....

க்ரிஷ்ஷின் கரத்திலிருந்து பாய்ந்த தீயினால் உருவான கயிறு சரியாக வீரின் கரத்தை சுற்ற அதை தன் மறு கரத்தால் இறுக்கி பிடித்த வீர் கோட்டையின் மதிலை ஒரு முறை உதைத்து பின் வாங்கி எம்பவும் சத்தீஷ் உருவாக்கிய காற்றின் அழுத்தம் வீரை மேலே தள்ளியது...

அதை சரியாய் உபயோகித்து எகிரிய வீர் கீழே விழும் முன் க்ரிஷ்ஷின் கைகளை பிடித்து மேலே ஏறினான்...

இதை கண்டதும் தனிச்சையாய் மற்ற ஏழ்வரின் வதனத்திலும் புன்னகை பூக்க அடுத்தடுத்து இவர்களின் இதே முறையில் அவ்வேழ்வரையும் அந்த மதிலின் மீது ஏற்றியிருந்தனர் கோவன்கள் இருவரும்

வெளிரிய முகத்துடன் நின்ற நாகமனிதர்கள் அந்த மதிலை சுற்றி நின்று ஏற இயலாமல் இயலாமையும் வெறியும் பிரதிபலிக்க ஓருசேர சீரினர்...

பெருமூச்சுடன் கோட்டையின் உட்புறம் திரும்பிய பத்து பேரும் கண்ட காட்சியினால் வளவனுடன் ஒரு குறிப்பிட்ட மாலிகையினுள் இரு குழந்தைகளையும் பாதுகாத்தவாறு நின்றிருந்த இந்திரனுடன் பேரதிர்ச்சியுற்றனர்...

துஷ்ரிகள் விடாது எழுப்பிய அபாய ஒலியினால் நூற்றுக்கணக்கான மிக கொடூரமான உயிரனங்கள் அங்கு கூடியிருந்தது...

பறபறவென சத்தம் எழுப்பி கொண்டு நீண்ட காதுகளுடன் தைக்கப்பட்ட வாயுடன் நீலமும் பச்சையும் கலந்த உடலுடன் கொடூரமான உருவத்துடன் மரண ஓலங்களை எழுப்பியவாறு அந்த மாலிகையை சுற்றி வளைத்திருந்தது சிலரின் கண்களால் மட்டுமே காணப்படும் துஷ்ரந்கள்...

பதட்டத்துடன் நின்றிருந்த இந்திரனின் நீல நிற விழிகளுள் ஒரு நிம்மதி பரவியது அவன் சகோதரன்களையும் தோழன்களையும் கண்டு கொண்டதில்...

வளவன் : யான் வினவும் வினாவிற்கு ஓசையின்றி மெதுவாய் விடையளியுங்கள்... சத்தமிட கூடாது... தம்மால் அந்த உயிரினங்களை காண இயல்கிறதல்லவா என இவன் சற்று மெதுவாய் கேட்க அதற்கு இவர்கள் அனைவரும் ஒரு சேர தலையசைத்தனர்...

சரண் : இவற்றின் நாமம் யாது வளவா... அத்துடன் யாம் ஏன் இவ்வாறு உரையாட வேண்டும் என அதே ஹஸ்கி வாய்சில் கேட்டான்...

வளவன் : அவை துஷ்ரந்கள் என்றழைக்கப்படும் சரண்.. அவை பார்வையற்றது.. ஆயினும் கணக்கச்சிதமாய் ஓசைகளை கைப்பற்றிவிடும்.. மிகவும் கொடூரமான சர்ப்பலோகத்தில் மட்டுமே வாழும் உயிரினம்... இது தான் எந்நேரமும் இச்சர்ப்பலோக கோட்டையை பாதுகாக்கும்..

ரனீஷ் : ஏன் மனித வீரர்கள் இருக்க மாட்டார்களா...

வளவன் : உள்ளனர்.. நாக வம்சத்தில் ஜனித்த நாகமனிதர்கள் அல்லாது சாதாரண மனிதர்களுள் ஆண்களும் பெண்களும் கோட்டையில் பணி புரிக்கின்றனர்...

க்ரிஷ் : கதிரவன் அஸ்த்தமித்து இப்போது மீண்டெழ உள்ளான்.. நாம் அதற்கு முன் பூலோகத்திற்குள் சென்றாக வேண்டும்.. அல்லவே நாளைய அஸ்தமனத்தின் வரை யாம் காத்திருக்கக்கூடும்...

அஷ்வன்த் : அது ஆணித்தரமாய் நமக்கு ஆபத்தாகவே விழையும்...

ரவி : பின் என்ன துவங்கிடலாமா... என அனைவரையும் பார்க்க இப்போது அனைவரின் முகத்திலும் குறும்பு புன்னகை மிளிர்ந்தது...

ரவியின் தலையசைப்பில் வளவன் அங்கிருந்து சற்று ஓரமாய் மறைந்து கொள்ள.. தங்களின் திட்டத்தை அறியாமல் முளிக்கும் இந்திரனுக்கு " நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீ அமைதியாய் மட்டும் இரு " என சைகை கூறி புரிய வைத்தான் முகில்..

அதற்கு இந்திரன் புரிந்து கொண்டு தலையசைத்த மறு நொடி திட்டத்தின் பெயரால் ரவி ரனீஷ் அர்ஜுன் சரண் மற்றும் சத்தீஷ் அந்த பரந்து விரிந்திருந்த நனந்தலை(அகன்ற) கோட்டையின் மறு திசையின் எல்லை வரை கேட்பதை போல் எக்கோ அடிக்காத ரேன்ஞிற்கு ஊஊஊஊஊ என ஒரு சேர ஊளையிட்டனர்...

இதை கேட்ட அடுத்த நொடி இந்திரனிட்ட நீர் வளையத்தை தாண்ட இயலாமல் பறபறவென சத்தமெழுப்பி கொண்டிருந்த அனைத்து துஷ்ரந்களும் சத்தம் வரும் மதிலை நோக்கி திரும்ப... இந்திரன் அரண்டு போய் முளிக்க அஷ்வன்த் வீர் முகில் ரித்விக் மற்றும் க்ரிஷ் சிரிப்பை அடக்கி கொண்டு அந்த மதிலில் இருந்து சத்தமெழுப்பாமல் கீழ் இறங்கினர்...

கண் பார்வையற்ற துஷ்ரந்கள் இவர்களை கவனிக்காமல் இவ்வைவரின் காலடி ஓசை கூட கேட்க கூடாதென அதுகளின் மொத்த கவனத்தையும் திசை திருப்புவதை போலவே மதில் மீது நின்று ஊளையிட்டு கத்தி கொண்டிருந்த ஐவரை நோக்கி படையெடுத்தது

அந்த துஷ்ரந்கள் கவனிக்கவில்லை எனினும் சற்று ஒதுங்கி நின்றிருந்த சேனை வீரர்கள் கீழிறங்கிய ஐவரை கவனித்து விட இந்திரன் அவர்களுக்கு உடனே செய்கை காட்டினான்...

மேல் நின்ற ஐவரால் துஷ்ரந்களும் கீழ் நின்ற ஐவரால் சேனை வீரர்களும் திசை திரும்பியதால் அந்த நேரத்தை உபயோகித்து திட்டத்தின் படி பின் புற மதிலில் இருந்து அம்மாலிகைக்குள் நுழைந்தான் வளவன்...

இந்திரன் : துருவா அப்பா மேல ஏறு சீக்கிரம் என துருவனை துரிதப்படுத்த வளவன் மீது ஏறி கொண்ட துருவனின் முன் பாதி மயக்கத்தில் இருந்த கயலை அமர வைத்தான் இந்திரன்...

வளவன் மீது அமர்ந்ததுமே கயல் நேராய் அமராமல் சாய்ந்து வளவன் மீதே படுத்து கொண்டாள்...

வளவன் : யான் பார்த்து கொள்கிறேன் இந்திரா... நீ வருத்தம் கொள்ளாதே.. விரைந்து வருகிறேன் ... துருவா பிடியை இறுக்கி கொள் என்கவும் துருவனும் அவன் பிடியை இறுக்கி கொள்ள வேகத்தை கூட்டி அதி வேகமாய் அவ்விடத்திலிருந்து சீரி பாய்ந்தான் வளவன்...

அவன் மதிலை தாண்டிய நொடி சேனை வீரர்கள் தங்கள் பாதுகாப்பிலிருந்த குழந்தை தப்பியதென்று மகிழவா இல்லை தங்களின் கடமையில் தவறு நிகழ்ந்ததை எண்ணி சினமுறவா என சில நொடிகள் தடுமாறினர்...

தடுமாறினாலும் அவர்கள் ஓடி வந்த ஐவரை எதிர்க்க ஒரு வீரன் அவனது கேடையத்தினால் முன் ஓடி வந்த வீரை இடித்து கீழே தள்ளி விட்டான்...

வீர் கீழே விழும் முன் அவன் மீது வாளை பாய்ச்ச எண்ணிய வீரன் அப்படியே உறைந்து நிற்க அவர்கள் அனைவரும் திசை மாற்றியது என்னவோ க்ரிஷ்ஷின் சிகப்பு விழிகள் தான்...

வீரின் பின் தன் சிகப்பு விழிகளால் அந்த வீரனை எரிக்க கூடாதென்ற முடிவை இழுத்து பிடித்த படி நின்றான் க்ரிஷ்.. அவன் அருகில் அஷ்வன்த் அர்ஜுன் மற்றும் ரித்விக்கின் பச்சை மற்றும் பலுப்பு மஞ்சள் கலந்த கலவை நிற கண்களுடன் நின்றிருந்தனர்...

ஒரு முறை சேனையின் தலைவன் அந்த மதிலில் வரிசையாய் ஓடி கொண்டிருந்த மற்ற ஐவரையும் நோக்கினான்...

அவனால் முகிலின் பச்சை நிற கண்களையும் சரணின் பலுப்பு நிற கண்களையும் ரவி மற்றும் ரனீஷின் ஊதா நிற கண்களையும் சத்தீஷின் வெண்ணிற கண்களையும் காண முடிந்தது...

அவன் நெஞ்சிலிருந்த நாக முத்திரையில் கை முஷ்டியை முறுக்கி வைத்து கீழே பணிந்தான்... அவனை பின் தொடர்ந்து அவன் பின் நின்ற நூற்றுக்கணக்கான வீரர்களும் அதே போல் வணங்கி பணிந்தனர்...

ஆனால் அவர்களின் நாவிலிருந்து எவ்வகையான வார்த்தையும் வெளி வரவில்லை... அவர்கள் நெஞ்சிலிருந்த கரமே வார்த்தையை வெளிப்படுத்தியது...

ஒரு சேர கூறினால் துஷ்ரந்கள் இவர்கள் புறமல்லவா திரும்பும்... அதனாலே அக்கோட்டையில் துஷ்ரந்கள் இருக்கும் பொழுது அங்கு பணி புரிபவர்கள் எவரும் எதுவும் கூற மாட்டர்...

தன் கோவக்கனலுடன் பின் வாங்கிய க்ரிஷ் வீருக்கு கை கொடுத்து தூக்கி விட அவன் எழுந்ததும் ஐவருமாய் தலை பணிந்து அவர்களை எழ சைகை காட்டினர்...

இப்போது மொத்த சேனையும் இந்திரனை இவர்கள் நெருங்காமல் எதிர்த்து நின்றது... அவர்களின் நடவடிக்கைக்கான காரணம் ஐவருக்கும் தனிச்சையாகவே புரிந்தது...

அவர்களுக்கு வேலையே அளிக்காமல் இந்திரன் கம்பீரமாய் நடந்தே அவர்கள் முன் வந்து நின்றான்...

இந்திரன் இவ்வைவருடன் வந்ததும் க்ரிஷ் அவன் கரத்தை தட்டி மேலே உயரத்த காற்றில் சிறு பொறியென தோன்றிய தீப்பொறி விண்ணில் அழகாய் மிளிர்ந்து கரைய அதை மதிலில் ஒடி கொண்டிருந்த ஐந்து நாயகர்களும் கவனித்து தலையசைத்தனர்...

அந்த சேனை தலைவனை நெருங்கி சென்ற இந்திரன் அவனது தோளில் தட்டி

இந்திரன் : உம் கடமையை எண்ணி அக மகிழ்கிறேன் நண்பா.. மீண்டும் காண நேர்ந்தால் நிச்சயம் உமக்காய் யான் பணிய தயங்க மாட்டேன்.. வருகிறேன் என அவனது கையை இறுக்கி பிடித்து பின் நகர்ந்து நிற்க என்ன நடக்கிறதென்று இவர்கள் கவனிக்கும் முன்னரே மதிலின் மீது நின்றிருந்த சத்தீஷின் காற்று சக்திகள் அஷ்வன்த் ரித்விக் முகில் மற்றும் வீரை அந்தரத்தில் தூக்கியது...

அந்த தலைவனை கண்டு புன்னகைத்த இந்திரன் க்ரிஷ்ஷை நோக்க இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் கால்களை நிலத்தில் அழுத்தி மேலே எம்பினர்...

இவர்கள் நிலத்தில் ஏற்படுத்திய அதிர்வினால் அந்த துஷ்ரந்கள் இப்புறம் திரும்ப இப்போது நாயகன்கள் அனைவரும் மதிலின் மீது ஏறியிருந்தனர்...

அர்ஜுன் : யாம் சென்றாக வேண்டும்... விரையுங்கள் என கத்தவும் ஒரு சேர நாயகன்கள் அனைவரும் அங்கிருந்து கீழே குதித்து மண்ணில் கால் பதியும் முன்னரே அதி வேகமாய் ஓட தொடங்கினர்...

அவர்கள் செல்வதை பார்த்து கொண்டிருந்த தலைவன் அவனது மூடிய கரத்தை திறந்து பார்க்க ... அவனை பார்த்து பஞ்ச பூதங்கள் ஐந்தினது நிறங்களால் ஆன பஞ்சலோக வம்சத்தின் தங்க முத்திரை அழகாய் மின்னியது

அந்த மதிலை சுற்றி சீரி கொண்டிருந்த நாகமனிதர்கள் அவர்களை பின் தொடர முனைய இறுதியாய் ஓடிய இந்திரன் ஒரு குதி குதித்து அவன் இரு கரங்களையும் அசைத்து மண்ணில் ஒரு முறை அழுத்தி விட்டு திரும்பி பாராமல் ஓடினான்...

அவன் உருவாக்கிய அழுத்தத்தில் மண்ணை புடைத்து கொண்டு வந்த நீர் அம்மதிலின் நாழா புறத்திலிரும் படர்ந்து நாகமனிதர்களை அதனுள்ளே சிறை வைத்தது... அங்கங்கு மடிந்து கிடந்தவர்களை வைத்து தாங்கள் வந்த பாதையை நோக்கி ஓடிய நாயகன்களுள் இடையில் யட்சினி சர்ப்ப வம்சத்தின் அமைச்சன்கள் எவனையும் காணாமல் ரனீஷின் நெற்றி சுருங்க இறுதியாய் மரத்தின் அடியில் சிக்கி தவித்து கொண்டிருந்த மனித விஞ்ஞவெள்ளனை கண்டான்...

சரியாக அதே பாதையின் இறுதியில் தான் பூலோக வாயில் இருந்தது... பெருமூச்சு விட்ட நாயகன்கள் திடீரென வீர் கத்தவும் அவனை நோக்க

வீர் : டேய் வாயில் மூட போகுது டா என மீண்டும் கத்த அப்போதே பூலோக வாயில் மூட தொடங்கியிருந்ததை கண்டு பதட்டத்துடன் அதை நோக்கி ஓடினர்...

அந்த வாயிலின் மறு புறத்தில் கயலை எழுப்ப வளவன் முயற்சித்து கொண்டிருக்க சிறிது சிறிதாய் மூட தொடங்கிய வாயிலை எதிர்பார்ப்புடன் நோக்கி கொண்டிருந்தான் துருவன்...

மெல்ல மெல்ல வாயிலை சுற்றியிருந்த ஒளி சுருங்க துருவன் பதட்டத்துடன் நகத்தை கடிக்க தொடங்கினான்...

நொடிகள் கடக்க கடக்க துருவனுக்கே பீப்பி எகிர சரியாக அவ்வாயிலில் இருந்து ரனீஷ் வேகமாய் ஓடி வந்தான்... அவனை பின் தொடர்ந்து அர்ஜுனும் அஷ்வன்த்தும் வர அந்த ஒளி இப்போது இன்னும் சுருங்கியது...

க்ரிஷ் மற்றும் முகில் சற்று தலையை குனிந்தபடி அதிலிருந்து ஓடி வந்தனர்... அதற்கடுத்து இந்திரன் சத்தீஷ் மற்றும் ரவி குதித்து வெளியே வந்தனர்...

இன்னும் சரண் வீர் மற்றும் ரித்விக்கை காணாமல் பெருமூச்சறித்தவாறு நின்ற மற்றவன்களையும் வாயிலையும் துருவன் திரும்பி திரும்பி பார்க்க அவனது உயரத்திற்கு இப்போது அந்த ஒளி சுருங்கியிருக்க அடுத்த நொடி அதிலிருந்து வீர் வெளியே குதித்தான்...

அவனை தொடர்ந்து சரணும் குதிக்க ரித்விக்கிற்கு முன்னமே அந்த ஒளி மிகவும் சுருங்கி விட அதை கண்டு துருவன் சித்தா என கத்த தரையை தேய்த்தபடி அந்த வாயில் முழுதாய் மூடுவதற்கு ஒரு நொடி முன் வெளியேறினான் ரித்விக்...

அவன் தலை அந்த பாரையை விட்டு வெளி வந்த அடுத்த நொடி ழுதாய் அந்த ஒளி மறைந்து அந்த பாரையை சுற்றி சத்தமாய் வெடித்தது...

அதனால் எழும்பிய புழுதியில் உடலில் ஒட்டியிருந்த மண்ணை துடைத்தவாறு எழுந்த ரித்விக்கை துருவ் ஓடி சென்று அணைத்து கொள்ள புன்னகையுடன் அவனை மீண்டும் அணைத்து கொண்டான் ரித்விக்...

அவ்விருவரை கண்டதும் ஒருவரையொருவர் நோக்கி கொண்ட நாயகன்கள் கயலின் ப்பா என்ற சிறு முனகலில் அவளை நோக்கி திரும்பினர்...

பாதி கண் மூடியும் மூடாத நிலையில் வளவனை கண்டு அப்பா என அழைத்த கயல் பின் குட்ட்ட்ட் நைட்ட்ட்ட் என அழுத்தி சிறிய குரலில் கூறி விட்டு அவன் மீதே சாய்ந்து கொண்டாள்...

அந்நிலையிலும் கயலின் சைகை அவர்களை சிரிக்க வைத்தது...

வளவன் : நீங்க யாரும் இப்டியே வர வேண்டாம்.. மொதல்ல ஹாஸ்பிட்டல் போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வாங்க... நா துருவையும் கயலையும் வீட்டுக்கு கூட்டீட்டு போறேன்

அவனுக்கு அனைவரும் தலையசைத்து அமோதித்தவர்கள் வளவன் துருவ் கயலுடன் சென்றதும் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்லாமல் வேதபுர காட்டின் வழியே அதிசய கோட்டைக்கு சென்றனர்...

பின்ன இப்படிப்பட்ட காயங்களுடன் போய் மருத்துவமனையில் நின்றால் என்னவென்று பதில் சொல்வது...

அதிசய கோட்டைக்குள் நுழைந்ததும் நேர் வாயில் வழியாக சென்றால் யாளிகள் எழுந்து விடுமென அவ்வாறு செல்லாமல் ஒரு இரகசிய வாயிலின் வழியாக இவர்கள் நேராக மருத்துவ அறைக்கு சென்றனர்...

இவர்கள் இவ்வாறு குறுக்கு வழியில் வந்திருந்தாலும் " தாங்கள் வந்தது தெரிந்து விட்டது எங்கு இருக்கிறீர்கள் " என சத்தமிட்டது யாளிகள்...

அது புரிந்ததும் க்ரிஷ் சிரிக்க அஷ்வன்த் அதே புன்னகையுடன் க்ரிஷ்ஷின் நெற்றியிலிருந்த காயத்திற்கு மருந்திட தொடங்கினான்..

முதல் வேளையாக வந்த உடனே கோட்டையிலிருந்த மூலிகையை கொண்டு விஷமுறிவு மருந்தை ரவிக்கு புகட்டிய ரனீஷ் அவனின் சட்டையை அவிழ்த்து விட்டு மருந்திட்டு கட்டு கட்டினான்...

பெரும்பாலும் அனைவருக்குமே காயங்கள் இருந்ததால் ஒருவர் மற்றவரை பரிசோதித்து கொள்ள மருத்துவ நாயகன்களான அஷ்வன்த் ரனீஷ் மற்றும் வீர் அனைவருக்கும் மருந்திட்டனர்...

க்ரிஷ்ஷிற்கு தலையில் கட்டு.. சத்தீஷிற்கு தோள்பட்டையில்.. அஷ்வன்த்திற்கு அங்கங்கு சிறு சிறு கட்டுகள்... ரித்விக்கிற்று கையில் கட்டு.. ரவிக்கு வயிற்றிலும் அர்ஜுனுக்கு முதுகிலும் கட்டு சுற்றி கட்டப்பட்டிருந்தது... ரனீஷிற்கு உடலில் அங்கங்கு சிறு சிறு கட்டுகளும் வீருக்கு காலில் கட்டும் சரணிற்கு தலையிலும் கட்டு கட்டப்பட்டிருந்தது...

இந்திரன் மாத்திரமே சற்று காயங்களில் இன்றி சில சீராய்ப்புகளுடன் தப்பித்திருந்தான்...

அரை மணி நேரம் போல் நடந்தவையை பற்றி கலந்துரையாடியவர்கள் பின் அதற்கு மேலும் அங்கிருந்தால் யாளிகள் அனைத்தும் உள்ளே வந்து விடுமென அறிந்து அங்கிருந்து கோட்டையின் உட்புறத்தில் இவ்வளவு நேரமும் விடாமல் கேட்டு கொண்டிருந்த பிளறல் ஓசைகளை பின் தொடர்ந்து சென்றனர்...

இவர்களை கண்ட அடுத்த நொடி ஓடி வந்து அணைத்து கொண்டது சரணின் யாளையாளி.. அதன் ஒவ்வொரு அடியிலும் இவர்கள் அனைவரும் அதிர்வு பெற்று தனிச்சையாய் குலுங்கினர்.. ஒன்றுக்கே இப்படி என்றால் அனைத்தும் ஒருசேர வந்தால் என்ன செய்வதென சத்தீஷ் வாயெடுத்த அடுத்த நொடி ஒரு சேர ஏழு யானையாளிகளின் பிளறலும் கேட்டது...

சற்று தொலைவில் அவ்வேழு யானையாளிகளும் கண்களில் அளவில்லா ஆனந்தத்துடன் ஓடி வர தயாராக அவசர அவசரமாக முன் சென்ற முகில்

முகில் : அங்கேயே நில்லுங்கள் என கத்த... ஏழு யானையாளிகளும் அவனின் கட்டளையினால் சற்று முளித்தபடி தோய்ந்த முகத்துடன் அங்கேயே தொபக்கடீரென அமர அந்த அதிர்விலும் இவர்கள் குலுங்கி அடங்கினர்...

முகில் : நிற்க தானே கூறினேன்.. எதற்காய் இவ்வாறு அமர்ந்தீர்கள் என கேட்கவும் கீழே அமர்ந்த யானையாளிகள் அனைத்தும் முகிலின் யாளையாளியை கெஞ்சலாய் பார்க்க ... அதே நேரம் தன் யானையாளியை முகில் நோக்க அது அவனை கண்டதும் முருக்கி கொண்டு முகத்தை திருப்பி கொண்டது...

அதை கண்டதும் முகில் இறுக்கம் தளர்ந்து சிரித்து விட்டான்... அவனை தாண்டி அஷ்வன்த் ரித்விக் ரவி ரனீஷ் வீர் மற்றும் அர்ஜுன் அவரவர் யானையாளியை நோக்கி சென்றனர்...

முகில் அவனது யானையாளியின் தந்தத்தை தொட அதுவோ அவனை தும்பிக்கையால் தள்ளி நிற்க வைத்து விட்டு மீண்டும் திரும்பி கொண்டது...

முகில் : அடடே என் நண்பனுக்கு எம் மீது சினம் குறையாதன்றோ யான் இங்கிருந்து சென்றிடுகிறேன் என இவனும் அவன் பங்கிற்கு முருக்கி கொண்டு திரும்பவும் தன் ஓரக்கண்ணால் " உண்மையாவே போய்டுவானோ " என்பதை போல் அது பார்க்க முகில் அதை கண்டதும் புன்னகையை மறைக்க இயலாமல் அழகாய் சிரிக்க அவன் சிரிப்பில் அவனை மன்னித்த யானையாளி உடனே அவனை தன் தும்பிக்கையால் தூக்கி தன்னோடு அணைத்து கொண்டது...

மற்ற யானையாளிகளுக்கும் அவரவர் தலைவன்கள் மீது கோவம் இருந்தாலும் அவர்கள் மீண்டும் காண வந்ததால் உடனே மன்னித்து விட்டிருந்தது...

அந்த கண்கொள்ளா காட்சிகளை பார்த்து தங்களையும் மறந்து நின்ற கோவன்களின் தலையில் கல் போன்ற ஏதோ ஒன்று விழ மூவரும் ஒரே நேரத்தில் ஆ என அலரினர்..

தலையை தேய்த்தவாறு சுற்றி பார்த்த சத்தீஷ் இரண்டாம் மாடியில் ஒரு பெரும் நிழல் பின் நகர்வதை கண்டதும்

சத்தீஷ் : யுகி அகி விகி தாம் ஏன் கீழிறங்கவில்லை... தம்மை காண யாம் மூவர் தான் மேலேறி வர வேண்டுமா என நக்கலாய் கேட்க அவர்கள் மீது கல்லை தட்டி விட்டு பின் நகர்ந்திருந்த அகி மெதுவாய் உறுமியது...

அகி : (காண விருப்பமுள்ளோர் வந்து தான் காண வேண்டும்.. யாம் கீழ் வருவதாய் அன்று)

அதை கேட்டதும்

இந்திரன் : ஏனடா தமது சகோதரர்கள்(யானையாளிகள்) வெளியே வர அனுமதியன்றென்றாலும் எமது சகோதரர்களை கண்டதும் எவ்வளவு அன்புடன் தேடி ஓடி வந்தனர்... தமக்கு வெளி வர அனுமதியிருக்கும் தருவாயிலிலும் தமக்கு யாம் மூவர் தான் தேடி வரவேண்டுமோ என கேட்கவும் இப்போது விகி அதன் முன் இரண்டு கால்களையும் காற்றில் தூக்கி வைத்து பலத்த சத்தத்துடன் கீழ் பதித்து உறுமியது

விகி : (தமக்கு எம் மூவரை காண வேண்டுமாயின் தேடி தான் வர வேண்டும்... )

க்ரிஷ் : தற்போதும் யாம் தான டா தம் மூவரை தேடி வரவளித்துள்ளோம் என புன்னகையுடன் மேல் பார்த்தவாறு கூற நிசப்தம் நிலவியது...

ரித்விக் : ஏன்டா அவனுங்க மூணு பேர் பேசுனது புரிஞ்சா கூட பரவாயில்ல ... இப்டி நீங்க மாத்தி மாத்தி பேசி எங்கள வேற குழப்புரீங்க... மாடிக்கு போனா குறைஞ்சா டா போய்டுவீங்க... போங்க டா மாடிக்கு என விரட்டினான்...

ஆனால் இவர்கள் மாடிக்கு ஏறும் முன்னே மாடி படிகளில் தாவி குதித்து பூனை குட்டிகளாய் கீழே வந்தது யுகி அகி விகி

கோவன்கள் மூவரும் ஓடி சென்று அவரவர் பூனைகுட்டியை தூக்கி கொஞ்சினர்... எவ்வளவு தான் கோவமும் வெறியும் கொண்டிருந்தாலும் இன்றும் அந்த ஐந்து வயது சிறுவர்களின் கரங்களில் கிடைத்த அதே பூனைகுட்டிகள் தான் அந்த சிம்மயாளிகள்...

நாயகிகள் அடுத்தடுத்து ஒரு ஒருவராய் கருவுற்றதாலும் குழந்தைகள் பிறப்பெடுத்ததாலும் தொடர்ந்து பதினைந்து மாதங்கள் நாயகன்களால் அதிசய கோட்டைக்கு யாளிகளை காண வர முடியவில்லை... இது தான் நமது யாளிகளின் கோவத்திற்கும் காரணம்...

நாயகன்கள் எப்படியும் இங்கு தான் வந்திருப்பரென அறிந்திருந்ததால் நாயகிகள் புரிந்து கொண்டு அமைதி காத்தனர்...

இரவிலே வீட்டை அடைந்த மகன்கள் பெற்றோரிடம் நன்கு மாட்டி கொண்டு திண்டாடி விட்டே அவரவர் அறைக்கு சென்றனர்....

மறு நாள் என்றும் போல் எழுந்த கயலுக்கு முந்தைய நாள் நிகழ்ந்த எந்த ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை... இது நிம்மதியை தந்தாலும் கொஞ்சம் பயத்தையும் உடன் தூவ தான் செய்தது...

நாயகிகள் தர்மன் ஐயாவை காண செல்லலாம் என கூறினாலும் தர்மன் ஐயா ஏதோ ஒரு காரணத்தினால் ஷேஷ்வமலையை விட்டு என்ன ஏதென்று கூறாமல் எங்கு செல்கிறேனென்றும் கூறாமல் மறைந்திருந்ததால் அவர்களை நாயகன்கள் அனுமதிக்கவில்லை...

நாட்கள் ஓடிட வேலு தாத்தாவின் வீட்டில் மழலைகளின் மொழி அதிகரித்தது.. குழந்தைகள் இப்போது தவழ தொடங்கி அனைவரையும் தங்கள் பின் சுற்ற வைத்திருந்தனர்...

மோகினிக்கு ஆறு மாதத்தில் இரட்டை குழந்தைகளென தெரிய வர குடும்பமே மகிழ்ச்சியில் திழைத்தது... அவர்களின் மகிழ்ச்சியை பொய்க்காமல் மோகினி நல்லபடியாக எந்த ஒரு சிக்கலும் இன்றி இரண்டு ஆண் மகவுகளை பெற்றெடுத்தாள்...

ஒட்டி பிறந்த இரெட்டைகளை போல் அச்சடித்திருந்த குழந்தைகள் இரண்டும் தந்தை தமையன் போலவே தவறாது பின் கழுத்தில் பருந்து குறியீட்டுடன் பருந்து வம்ச வாரிசுகளாய் பிறந்தனர்...

நன்னாள் ஒன்றில் இருவருக்கும் ருமேஷ்யவன் மற்றும் விதுஷ்யவன் என பெயர் சூட்டப்பட்டது

வருடம் கடந்து அன்றோடு க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷின் மகவுகள் இரண்டு வயதை அடைந்திருந்தனர்...

அன்றே கயல் முதல் முறையாக துருவின் நண்பன் கார்த்திக் என்னும் கௌத்தம் கார்த்திக்கை சந்தித்தாள்..

அன்றைய தினம் நாயகர்களுக்கு ஒரு சில அதிர்ச்சிகளுடன் களிய இரண்டு ஆண்டுகள் பின் மீண்டும் கயலின் பஞ்சலோக அச்சு மிளிர்ந்ததையும் கார்த்திக்கின் கழுத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட அச்சையும் கவனித்திருந்தனர்...

அன்றைய இரவை காதல் ஜோடிகள் இனிமையாய் கடத்தினர்

மறுநாள் என்றும் போல் விடிந்த அக்காலை வேளையதில் ஞாயிறென்பதால் வீட்டின் ஆண்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர்... காலை உடற்பயிற்சியை முடித்திருந்த நம் நாயகன்களும் தரையில் அமர்ந்தவாறு தந்தைகளும் தாத்தாக்களும் பேசுவதெற்கெல்லாம் சைடு கேப்பில் கௌன்ட்டர் டித்து கொண்டும் சீரியஸான விஷயத்தில் தலையாட்டி கொண்டும் அமர்ந்திருந்தனர்...

நாயகிகளோ காலை வேலைகளில் கவனமாய் இருக்க அப்போதே தவழ தொடங்கியிருந்த ருமேஷ் மற்றும் விதுஷ் கூடத்தில் நாயகன்களினைடையே ஊரி கொண்டும் அவ்வப்போது அமர்ந்து கொட்ட கொட்ட முளித்து கொண்டும் இருந்தனர்...

மற்றைய குழந்தைகள் அனைத்துமே அதிசயத்தின் அதிசயமாய் தாய்மார்களை அழுது ஆர்ப்பாட்டம் செய்து தொல்லை செய்யாமல் நிர்மலாய் உறங்கி கொண்டிருந்தனர்...

சாதாரணமாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த காலை வேளையில் பதட்டம் சூழ்ந்தது எதற்சையாய் வீர் கண்ட ஒரு காட்சி

வளவன் மோகினியின் அறையிலிருந்து தன் உயரத்திற்கு அல்லாது பெரிய உடையில் கண்களை தேய்த்தபடி ஒரு இரண்டடி உயரத்தில் ஆறு வயது பிள்ளையாய் நடந்து வந்தாள் கயல்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... இன்னைக்கு எனக்கு டெஸ்ட் இருந்துச்சு ... அதான் சீக்கிரம் யூடி போஸ்ட் பன்ன முடியல... எனிவேஸ் .. நெக்ஸ்ட் யூடி ரொம்ப ரொம்ப ரொம்ப பெருசா இருக்கும்... நா அத இரெண்டா போடலாம்னு இருக்கேன்... சோ தட் கொஞ்சம் உங்களுக்கு ஈசியா இருக்கும்... இரெண்டா போடுறதால சின்னதாய்டும்னு நெனக்காதீங்க... கிட்டத்தட்டா நார்மலா நா என்னோட எல்லா கதையோட லாஸ்ட் யூடிய எவ்ளோ பெருசுக்கு எழுதுவேனோ அந்த அளவுக்கு இருக்கும் அந்த யூடி... முடிஞ்சா டயலாக்ஸ குறைக்க ட்ரை பன்றேன்.. சீக்கிரமே Fb ய முடிக்கானும் இல்லையா... நெக்ஸ்ட் யூடி நாளைக்கு நைட் ஆர் நாளன்னைக்கு வந்துடும்.. ஸ்டே ட்யூண் குட் நைட் ... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro