Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 37

தன்னை அடைத்து வைத்திருந்த கொடிகள் மெதுமெதுவாய் விலகி அதில் ரவியின் விம்பம் தெரிந்த பின்னே துருவ் நிலையடைந்தான்...

மெதுமெதுவாய் அந்த செடி கொடிகளை அறுத்தெறிந்த ரவி " துருவ் " என அழைக்கவும் அழுது கொண்டே மாமா என தாவி அணைத்து கொண்டான் துருவ்...

ரவி : ஷ் ஷ் துருவ்.. நீ பாதுகாப்பா இருக்க... பயப்புடாத... நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம் என அவனின் முதுகை நீவி விட்டு தலையை கோதி விட்டான்...

துருவ் : மாமா என இன்னும் அவன் அழுதான்...

ரவி : ஒன்னும் இல்ல எழுந்திரி வா என மெதுவாய் எழ வைத்தான்... ஆனால் அப்போதும் துருவ் ரவியின் அணைப்பிலிருந்து விலகாமலே ஒன்றி நின்றான்...

மற்ற நாயகன்களும் அந்த நாகமனிதன் சென்றதும் இவர்களிடம் ஓடி வந்தனர்...

வளவன் துருவிற்கு ஏதேனும் காயம் உள்ளதா என ஆராய்ந்து அவனோடு அணைத்து கொண்டான்...

துருவ் : அப்பா அப்பா கயல் பாப்பாவ அவங்க தூக்கீட்டு போய்ட்டாங்க என அதே அழுகையுடன் கூற அனைவரும் சற்றே திடுக்கிட்டனர்...

வளவன் : பாப்பாவ யாரு டா தூக்கீட்டு போனது...

துருவ் : அவங்க தான்... நாகமனிதர்கள் கிடத்தவில்லை என கூறுகியையில் இவன் யாரை குறிப்பிடுகிறானென்று தெரியாமல் குழப்பம் அதிகரித்தது...

ரவி : அவங்கன்னா யார துருவ் சொல்ற...

துருவ் : தெ..தெரி..யல மாமா.. ஆ..ஆனா அவங்க எல்..லாரும் ப்லூ கலர்ல இருந்தாங்க...

வீர் : துருவ் என்ன நடந்துச்சுன்னு உனக்கு நியாபகம் இருக்கா...

துருவ் : நா கயல் பாப்பாவ அழச்சிட்டு வீட்டுக்கு தான் வந்துட்டு இருந்தேன் சித்தா.. அப்போ யாரோ கயல் பாப்பாவ கூப்ட்டாங்க.. அந்த குரல கேட்டப்போ அது சாதாரண மனிஷனோட குரல் மாரி தெரியல.. பாப்பா நா கூப்ட கூப்ட கேக்காம இந்த காட்டுக்குள்ள வந்துட்டா... நானும் அவ பின்னாடியே வந்தேன்.. அவ எங்கயோ வேகமா ஓடுனா.. திடீர்னு என்ன ஏதோ தள்ளி விற்றுச்சு.. பாப்பா கத்துனத கேட்டுட்டு நா எழுந்து பாத்தேன்... யாரோ பாப்பாவ தூக்கீட்டு வேகமா ஒரு சுழல்க்கு உள்ள போனாங்க... என்னால சரியா பாக்கவே முடியல.. அப்ரம் மயங்கீட்டேன்.. அதுக்கப்ரம் என்ன நடந்துச்சுன்னே எனக்கு தெரியல...

வளவன் : சரி துருவா.. ஒன்னும் இல்ல.. சீக்கிரம் நாங்க பாப்பாவ கண்டு புடிச்சிடுவோம் என அவனை தோளில் சாய்த்து அறுதல் படுத்தினான்...

ஒரு முறை தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்ட நாயகன்கள் அந்தி சாய்ந்து கொண்டிருக்கும் சூரியனை ஏறிட்டனர்...

திடீரென ரனீஷின் சிந்தனை ஒன்றில் நிலைத்து அவனுக்கு ஐடியாவை அள்ளி கொடுத்தது...

ரனீஷ் : நாம இப்போ சர்ப்பலோகத்துத்துள்ள போகனும்...

அர்ஜுன் : சர்ப்பலோகத்துக்குள்ள போறது அவ்ளோ சுலபமான விஷயம் இல்ல டா.. நம்மாளால அங்க போக முடியாது...

ரனீஷ் : போக முடியாது தான் டா.. ஆனா போகவே முடியாதுன்னு இல்ல...

முகில் : இருக்குர கொழப்பம் பத்தாதுன்னு நீ வேற கொழப்பாத டா.. தெளிவா சொல்லு...

ரனீஷ் : டேய் இருள் தன் ஆட்சிய தொடங்கீடுச்சு டா... இந்த நேரத்துல நம்மளால நம்ம சக்திகள வச்சு சர்ப்பலோகத்தோட வாயில திறக்க முடியும்...

சரண் : கிளிக்க முடியும்.. லூசா டா நீ .. இருள் ஆக்ரமிக்க தொடங்குர நேரத்துல தான் நம்மள எதிர்க்குர வம்சத்துக்கு சக்தி கூடும்..

ரனீஷ் : ஆமால்ல.. ஆனாலும் அதே நியதி தான டா நமக்கும்.. நா சொல்ல வர்ரத முழுசா கேளுங்க.. இந்த நேரத்துல நிச்சயமா சர்ப்பலோகம் சக்தி குறைஞ்ச நிலையில தான் இருக்கும்.. நம்மளால பூலோகத்துக்கும் சர்ப்லோகத்துக்கும் ஒரு வாயில உருவாக்க முடியும்.. அதுக்கான சரியான நேரந்தான் இது... நாம தாமதிக்காம ட்ரை பன்ன ஆரம்பிச்சா நிச்சயமா நம்மளால சர்ப்பலோகத்துக்குள்ள போக முடியும்..

அவனின் பேசிச்சிலிருந்த உறுதியும் அவனது சிந்தனை திறணும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துழைக்க வைத்தது... ரவியின் சக்தி கேட்பதிலும் ரனீஷின் சக்தி சிந்திப்பதிலும் வீரின் சக்தி பார்ப்பதிலும் இருக்கையில் அர்ஜுனின் சக்தி உணர்விலும் முகிலின் சக்தி தாவரங்களிடம் பேசுவதிலும் ரித்விக்கின் சக்தி எச்சரிக்கையிலும் அஷ்வன்த்தின் சக்தி ஆகாய நிலைகளிலும் சரணின் சக்தி நில அசைவுகளிலும் இருந்தது...

அஷ்வன்த் : வளவா நீ துருவ அழச்சிட்டு வீட்டுக்கு போ.. நாங்க கயல தேடி போறோம்...

வளவன் : ஆனா

சரண் : நீ போய்ட்டு வா வளவா.. வீட்ல பதட்டமா இருப்பாங்க... என்ன ஏதுன்னு சொல்ல யாராவது அங்க போய் தான் ஆகனும்... உன்னால மட்டும் தான் இப்போதிக்கு சீக்கிரமாவும் போக முடியும்... நாங்க கயலோட நைட்டுக்குள்ள திரும்பீடுவோம்... நீ தைரியமா போய்ட்டு வா என கூறவும் ஒரு மனதாய் சம்மதித்த வளவன் துருவனை தன் முதுகில் ஏந்தி கொண்டு அங்கிருந்து விடை பெற்றான்...

ரனீஷின் சொல் படி அனைவரும் அந்த இடத்திலே சர்ப்பலோகத்தின் வாயிலை திறக்க முடிவெடுத்தனர்... ஆனால் அதற்கு நாக சக்தி அவசியமென்பதே இவர்களின் மனதை உறுத்த சரியாக அந்த நேரம் எதற்சையாய் அங்கு வரவளித்தாள் லீலாவதி..

வளவனுடன் வந்த துருவை கண்டு அனைவரும் சற்றே நிம்மதியடைய அங்கு நிகழ்ந்த அனைத்தையும் வளவன் கூறியதும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்..

வீனா : நாகமனிதர்கள் எப்டி பூமிக்கு வர முடியும்.. அதுக்கு சாத்தியமே இல்ல என கூறவும் வளவன் அவளை குழப்பமாய் பார்த்தான்...

வளவன் : ஏன் மா.. அவங்களால வர முடியாதா...

வீனா : நிச்சயமா முடியாது அண்ணா.. சர்ப்பலோகத்தோட எல்லா வாயிலுமே ஆறாயிரம் வருடம் முன்னாடியே அழிஞ்சிடுச்சு...

துருவ் : அத்த இப்போ கூட மாமாஸும் சித்தாஸும் எப்டி சர்ப்பலோகத்துத்துள்ள போறதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்காங்க...

வளவன் : ஆமா ரனீஷ் தான் புது வாயில இப்போ உருவாக்க முடியும்னு சொன்னான்...

மோகினி : என் இளவல்கள் யாருக்குமே நாக சக்தி இல்லையே.. அப்ரம் எப்டி வாயில உருவாக்க முடியும்...

தான்யா : ஆனா அதுக்கு இப்போ அவசியமில்லக்கா.. சர்ப்பலோகத்தோட ஏதோ ஒரு வாயில் திறந்திருக்குரப்போ அவங்க கஷ்டப்பட வேண்டாம்.. அந்த வாயில கண்டுப்புடிச்சாலே போதும்...

அனு : ஆனா அத எப்டி கண்டுப்புடிக்கிரது...

துருவ் : என்னால முடியும் என கூறவும் அனைவரும் அவனை நோக்கினர்...

மது : என்ன துருவ் சொல்ற...

துருவ் : ஆமா சித்தி.. என்னால முடியும்.. என்னால கயல் எங்க இருக்கான்னு கண்டுப்புடிக்க முடியும்.. அதனால அந்த வாயில என்னால கண்டுப்புடிக்க முடியும்... நான் அங்க போறேன்...

இவ்வளவு நேரமும் இவர்களின் உரையாட்டில் பங்கேற்காமல் பயத்துடனே அமர்ந்திருந்த பெரியவர்கள் துருவனின் இக்கூற்றை கேட்டதும் பதறினர்...

தெய்வானை பாட்டி : இல்ல கண்ணா நீ போக கூடாது...

ப்ரியா : என்னாச்சு பாட்டி உங்களுக்கு...

சங்கரன் பாட்டி : ஒரு வர்ஷத்துக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு தான டா நெனச்சோம்.. இப்போ திரும்ப ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கீங்க.. இதுக்கெல்லாம் என்ன டா அர்த்தம்... திரும்ப எங்க பேரப்புள்ளைங்க ஆபத்துல இறங்க நாங்க எப்டி டா அனுமதிப்போம் என்றவரின் வலியும் அவர்களுக்கு புரிந்தது...

பவி : புரிஞ்சிக்கோங்க தாத்தா ... இப்போ இருக்க ஒரே வழி அது தான்... கயல நாங்க காப்பாத்தனும்...

இலக்கியா : என் புள்ளைங்களுக்கு நிம்மதியான வாழ்கையே இருக்காதா டா

வர்ஷி : இப்டிலாம் பேசாதீங்க அத்தை... எங்கள நம்புங்க... எல்லாமே முடிஞ்சிடும்... என எப்படியோ அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்...

பெரியவர்களின் ஒவ்வொரு கேள்வியும் உருக்கமான குரலும் மோகினி மற்றும் வளவனை துணுக்குற செய்தது... அவ்விருவர் தானே அறிந்திருந்தனர் இது முடிவல்ல ஆரம்பமென்று...

வளவன் : துருவா போலாமா

நிரு : ஒரு நிமிஷம் அத்தான்.. இத அஷ்வன்த் அண்ணா கிட்ட குடுங்க என ஒரு சந்தன நிறத்திலிருந்த கல்லை கொடுத்தாள்...

வளவன் : எதுக்கு டா இது...

நிரு : துருவோட பருந்து கலை நாகங்கள் இருக்குர இடத்துல சில நேரம் சக்தியற்று போகலாம்.. அப்டி இருக்குரப்போ உங்களால இந்த கல்ல பயன்படுத்தி நாகங்களோட விஷமுள்ள திசைய கண்டுப்புடிக்க முடியும்... நாகங்களோட விஷம் அதிகமா உள்ள இடத்துல தான் கயலும் இருக்கா...

வளவன் : ஆனா விஷம் அதிகமுள்ள திசைன்னு எப்டி நிருமா கண்டுப்புடிக்க முடியும்...

திவ்யா : அது அஷ்வன்த் அண்ணாக்கு தெரியும் அண்ணா..

வளவன் : சரிமா நீங்க பத்திரமா இருங்க... துருவா வா என அந்த கல்லை பத்திரப்படுத்தி விட்டு துருவை அவன் முதுகில் ஏந்தி கொண்டவன் வாயிலை நோக்கி ஓடி வாயிலை கடந்த அடுத்த நொடி கால் மண்ணில் பதியாமல் தன் சிறகை விரித்து விண்ணை நோக்கி பறந்தான்...

முகிலும் சரணும் வெவ்வேறு திசையை நோக்கி ஒன்றாய் திரும்பி நின்று கண்களை மூடி எதையோ உன்னிப்பாய் தேடி கொண்டிருந்தனர்...

தாவரத்தின் கவனத்தை தன் புறம் கொண்டு வந்த முகில் அதை தன் வசப்படுத்தவும் அதே போல் சரண் நிலத்தை தன் வசப்படுத்தியிருந்தான்...

இருவரும் ஒரே நேரத்தில் கண்களை திறக்கவும் முகிலின் கண்கள் பச்சை நிறத்திலும் சரணின் கண்கள் பலுப்பு நிறத்திலும் ஒளிர்ந்தது...

சரண் அவனது கரத்தை இறுக்கி மூடி பலமாய் தன் காலை நிலத்தில் வேகமாய் பதிக்கவும் அவன் கால் பதித்த இடத்திலிருந்து வேகமாய் பாய்ந்த அழுத்தமொன்று அவர்களை விடுத்து சற்றே தூரத்தில் ஒரு பெரும் பாரையை நிலத்தின் மேல் புடைக்க செய்தது....

அதன் அதிர்வில் மற்றவர்கள் தள்ளி நிற்க முகில் தன் தலையசைத்து ஒரு நீண்ட மரத்தில் தன் கரத்தை வேகமாய் பதிக்கவும் அந்த மரத்தின் நீண்ட செடிகளும் கொடிகளும் ஒன்றோடொன்று இணைந்து பிண்ணி பிணைந்து அந்த பாரையை நோக்கி வேகமாய் பரவி அதை சுற்றி கொண்டது...

முகிலும் சரணும் தங்களின் கடமை முடிந்ததாய் பின் நகர்ந்து நிற்க இப்போது அஷ்வன்த் மற்றும் ரவி முன்னேறினர்...

அஷ்வன்த்தின் கண்கள் அழகிய ஆகாய நிறத்தில் ஒளிர ரவியின் கேட்டல் திறணின் உதவியால் அந்த கொடி செடிகள் மெல்ல ஊர்ந்து நகர்ந்து அந்த பாரையை சுழலும் அந்த நொடியில் அவன் கரங்களை இறுக்கி அப்பாரையை நோக்கி அழுத்தி ஆகாய நிலைகளை தன் வசம் கொண்டு வந்து அப்பாரையை நோக்கி செழுத்தினான்...

அடுத்தடுத்து அர்ஜுன் மற்றும் ரித்விக் அவர்களை போலவே வேறு ஒரு திசையில் திரும்பி நின்றிருந்தனர்...

இருவரின் கண்களும் பச்சையும் மஞ்சளையும் கலந்த கலவையில் இருந்தது.. அர்ஜுனின் உணர்வு சக்திகளும் ரித்விக்கின் எச்சரிக்கை சக்திகளும் ஒன்றோடு ஒன்றிணைய இருவரும் நிமிர்ந்து வீரை தேடினர்...

வீர் அவன் கூரான கண்களால் அப்பாரையை பார்த்து கொண்டிருக்க அப்பாரையினை முழுதாய் அக்கொடி சூழ்ந்த மறுநொடி இவன் தலையசைக்கவும் அர்ஜுன் ரித்விக்கின் சக்திகள் ஒரே நேரத்தில் வேகமாய் சென்று அப்பாரையை தாக்கி அதற்கு உணர்வுகளையும் எச்சரிக்கையையும் கொடுத்தது....

இப்போது அனைவரும் கண்களை மூடி தங்களை தயார் படுத்தி கொண்டு நின்றிருந்த கோவன்களை நோக்கினர்..

சத்தீஷ் அவனின் வெண்ணிற கண்களால் அப்பாரையை நோக்கி ஒரு வேகமான அலையசைவை ஏற்படுத்தியனுப்ப ... அவனின் காற்றலை அப்பாரையை தொடும் முன் சரியாக தன் நீல நிற கண்களை திறந்து தன் கரம் வழியே ஆழி அலையை இந்திரன் நொடி பொழுதில் செழுத்த நொடி தாழாது தன் சிகப்பு விழிகளை அப்பாரையை நோக்கி க்ரிஷ் திருப்பவும் ஒரே நேரத்தில் நீரலையும் காற்றலையும் அப்பாரையை அடையவும் அப்பாரை பற்றி எரியவும் சரியாய் இருந்தது

மூவரின் சக்திகளும் ஒரே நேரத்தில் அப்பாரையை அடைந்த மறுநொடியே தீ நீர் காற்று ஆகாயம் நிலம் ஐந்தும் அப்பாரையை சூழ்ந்து ஒரு புதிய ஒளியை உருவாக்கியது...

அந்த ஒளியின் முன் லீலாவதி கண்களை மூடி நின்று அவளின் நீண்ட நாவை நீட்டி ஒரு முறை சீரினாள்.. மெதுமெதுவாய் அவ்வொளி அவ்விடத்தில் பரவும் முன் தன் கருமையான விழிகளை அதை நோக்கி உயர்த்திய லீலாவதி அவள் கரத்தை மண்ணில் பதித்து ஒரு முறை சரணை நோக்க நிலத்தின் அசைவினால் மண்ணில் பதிந்த லீலாவதியின் நாக நஞ்சு தனிச்சையாய் அப்பாரையை அடைந்து அந்த ஒளியை முழுமையாக்கிட அதே நேரம் வெகு தொலைவில் பளிச்சென்று தெரிந்த அந்த ஒளியை நோக்கி துருவனுடன் வேகமெடுத்து சீரி வந்திறங்கினான் வளவன்....

அவன் இறங்கிய சில நொடிகளில் அப்பாரையிலிருந்து அபாரமான சத்தயொன்று வெளியேற அந்த ஒளி மின்னல் வேகத்தில் மறைந்ததும் அனைவரும் அவர்கள் முன் ஒளிர்ந்த அந்த வாயிலை நோக்கினர்...

அந்த பாரையினுள் தீ நீர் காற்று ஆகாயம் மற்றும் நிலம் ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களின் சின்னமும் அலையலையாய் அசைந்து நடுவிலிருந்த ஒரு நாக சின்னத்தை சுற்றி அமைந்திருந்தது ... கண்களை கூசிடும் அழகுடன் மின்னி மறைந்த அது பஞ்சலோக வம்சத்தின் அச்சு...

மாயம் தொடரும்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro