மாயம் - 36
அன்றைய வெள்ளியின் பின் சனி ஞாயிறு இரு நாட்களும் பள்ளி விடுமுறை என்பதால் தன் காலை பிடித்து தொங்கிய கயலை கடினப்பட்டு எழுப்பி துருவுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் ஒவீ..
கயல் என்ன தான் அம்மா அம்மா என மோகினியுடன் ஒட்டி கொண்டாலும் அவளுக்கு காலையில் எழுவது முதல் உறங்குவது வரை அனைத்திற்கும் தேவை ஒவீமா தான்.. ஒவீயே கயல் மோகினியுடன் இருக்க வேண்டுமென எண்ணினாலும் மோகினியும் கயலுடன் இணைந்து கொண்டு கயலுடன் இருக்க கோரி அடம் பிடிப்பாள்.. மோகினியும் கயல் ஒவீயுடன் இருப்பதை மனதார விரும்பினாள்... அதனாலோ என்னவோ குடும்பத்தாருக்கு கயல் மற்றும் ஒவீயினிடையே உள்ள அன்பு தூய்மை மிக்கதாய் தெரியும்...
துருவுடன் தினமும் கயல் பள்ளிக்கு செல்வாள்... மாலை நாயகன்கள் எவரேனும் கயலை அழைத்து வருவர்.. துருவ் அவன் நண்பனுடன் விளையாடி விட்டு வருவான்... அல்லது துருவே கயலை அழைத்து வருவான்...
நான்கரை மணிக்கெல்லாம் வீட்டிலிருக்கும் குழந்தைகள் மணி ஐந்தாகியும் இன்னும் வராதது அவ்விருவரையும் வாயிலில் நின்றே அழைத்து வரும் ஒவீக்கு மனதை உருத்தியது...
இதற்கு மேலும் தாமதிக்க எண்ணாமல் உடனே வீட்டிற்குள் நுழைந்தவள் தன் அண்ணன்களோ அத்தான்களோ எவராவது இருக்கின்றனரா என தேடினாள்.. அவள் நேரம் அனைவரும் வெளியே சென்றிருக்க... பத்து நிமிடத்தில் நல்ல வேளையாக ரனீஷ் விசிலடித்து கொண்டே வீட்டிற்குள் வந்தான்...
ஒவீ : மச்சான் அடேய் அத்தான்...
ரனீஷ் : ஹான் எஸ் ஒவீமா... என்ன பதட்டமா இருக்க...
ஒவீ : அது... கயலும் துருவும் இன்னும் வீட்டுக்கு வரல அத்தான்...
ரனீஷ் : இன்னும் வரலையா.. துருவ் காலைல கூட விளையாட போறேன்னு சொல்லலையே... திடீர்னு எதாவது ஃப்ரெண்ட பாக்க போய்ர்ப்பான் டா...
ஒவீ : ம்ச் இருக்காது அத்தான்.. அப்டியே திடீர்னு விளையாட போறதா இருந்தாலும் நம்ம துருவ் கயல வீட்ல விட்டுட்டு தான் போவான்.. ஆனா புள்ளைங்க இரெண்டு பேருமே இன்னும் வரல...
இவர்களின் சத்தத்தில் உள்ளிருந்த தாத்தாக்கள் இருவரும் வெளியே வர மாடியிலிருந்து மாதவன் இரமனன் முரளியும் கீழே வந்தனர்...
வேலு தாத்தா : என்னாச்சு கண்ணு.. ஏன் கவலையா இருக்க...
ஒவீ : அது தாத்தா இன்னும் கயலும் துருவும் வீட்டுக்கு வரல...
மாதவன் : வீட்டுக்கு வரலையா.. புள்ளைங்க விளையாட போய்ர்க்கலாம்லடா...
ஒவீ : சொல்லாம கொள்ளாம இரெண்டு பேரும் போ மாட்டாங்க மாமா
முரளி : நம்ம பசங்க யாராவது கூட்டீட்டு போனாங்களான்னு கேட்டியா டா...
ரனீஷ் : அதுக்கு வாய்ப்பே இல்ல மாமா.. அப்டி எங்கள்ள யாராவது கூப்ட்டு போறதா இருந்துர்ந்தா கண்டிப்பா அது எனக்கு தெரிய வந்துருக்கும்... ஆனா யாரும் எனக்கு எதுவும் இன்ஃபார்ம் பன்னல... அப்போ அவனுங்களும் இன்னும் அழைக்க போகல...
சங்கரன் தாத்தா : அப்போ புள்ளைங்க எங்க டா போய்ர்ப்பாங்க... என பதட்டத்தில் கேட்க இவரின் பதட்டம் நிறைந்த குரலில் பெரிய பெண்மணிகள் என்னவோ ஏதோவென வெளியே வந்தனர்...
அதே நேரம் கடைக்கு பால் வாங்க சென்றிருந்த மோகினி தெய்வானை பாட்டியும் உள்ளே வந்தனர்...
தெய்வானை : என்னாச்சு ... ஏன் எல்லாரும் இங்க கூடீர்க்கீங்க.. என கேட்டவருக்கு மீண்டும் நிலமையை ஒவீ விளக்க ... மொட்டை மாடியில் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்த நாயகிகள் அனைவரும் கீழே இறங்கி வந்தனர்...
ரனீஷ் : யாரும் பயப்புடாதீங்க... நானௌ மொதல்ல எல்லாருக்கும் காள் பன்றேன் என ஃபோனை எடுத்த படி வெளியே சென்றான்...
வீட்டில் அனைவருக்குள்ளும் சலசலப்பு ஏற்பட அனைவரும் சஞ்சலத்தில் சுழன்றனர்... துருவை விடுத்தும் கயலுக்கு முன்பை போல ஏதேனும் ஆகிவிடுமோ என்றே அனைவரும் ஐயமடைந்தனர்... ஏனெனில் துருவை பற்றி அறியாதவர்கள் அல்ல அவர்கள்...
இவர்கள் இவ்வாறு பயத்தில் சுழன்ற போது வேர்த்து விருவிருக்க பதட்டத்துடன் உள்ளே வந்தான் வளவன்...
வனித்தா : என்னாச்சு தம்பி.. ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்கீங்க...
வளவன் : ஒ..ஒன்னுமில்ல அத்தை.. துருவும் கயலும் எங்க... வீட்டுக்கு வந்துட்டாங்களா...
தான்யா : அவங்க இரெண்டு பேருமே இன்னும் வரல அத்தான்..
மோகினி : துருவ் எங்க ராஜ் என உடனே அவனிடம் கேட்க எச்சிலை கூட்டி விழுங்கிய வளவன்...
வளவன் : எனக்கும் தெரியலமா... ஆனா அவன் பாதுகாப்பா இல்லன்னு தோனுச்சு.. அதான் உடனே வந்தேன்..
ரவி : பருந்து வம்ச கலை படி துருவ் எங்க போனான்னு உன்னால கண்டுப்பிடிக்க முடியுமே வளவா என்றபடி வேகவேகமாய் உள்ளே வந்தான்...
அவனை அடுத்து நம் நாயகன்கள் அனைவரும் பரபரப்பாய் வீட்டின் உள்ளே வந்தனர்...
வளவன் : உண்மை தான் ரவி.. ஆனா..
வீர் : என்ன ஆனா
வளவன் : மோகினி இப்போ இருக்குர நிலமைல என்னால அவ்ளோ சீக்கிரம் துருவன கண்டுப்புடிக்க முடியாது டா...
வீர் : துருவ கண்டுப்புடிக்கிரதுக்கும் மோகினி அக்காக்கும் என்ன டா சம்மந்தம்...
வளவன் : அவளுக்குள்ள இருக்க பருந்து வம்ச சக்தி என்ன அது பக்கம் தான் டா இழுக்கும்.. என போட்டுடைக்க அனைவரும் அவனின் கூற்று புரியாமல் முளிக்க மோகினியோ இந்த நிலமையிலா இவ்வுண்மை தெரிய வர வேண்டுமென நொந்து கொண்டு தான் கருவுற்ற செய்தியை அனைவருக்கும் தெரிவித்தாள்...
ஒரு நொடி எப்படி நடந்து கொள்வதெனவே தெரியாமல் அனைவரும் முளித்தனர்... பின் தங்களை தானே மீட்டெடுத்து கொண்ட நாயகன்களை மோகினியையும் நாயகிகளையும் வீட்டிலையே பத்திரமாய் இருக்க கூறி விட்டு வளவனுடன் வீட்டை விட்டு வெளியேறினர்..
மாதவன் இரமனன் மற்றும் முரளி பள்ளியிலும் விளையாட்டு மைதானங்களிலும் எங்காவது உள்ளனரா என தேட சென்றனர்... பெண்மணிகள் இறைவனை பிரார்த்தித்தபடி காத்திருக்க கட்டிலில் படுத்து விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை அருகில் அமர்ந்தபடி பார்த்து கொண்டிருந்த ப்ரியாவின் மனக்கண்ணில் ஒரு சிறிய காட்சி மின்னலென கடந்து சென்றது...
அதிர்ச்சியை வெளி காட்டாமல் அக்காட்சியை மீண்டும் ஓட விட்டு பார்த்த ப்ரியா பதறி போய் வெளியே ஓடி வந்தாள்...
பதறியடித்து ஓடி வரும் ப்ரியாவை அனைவரும் காண .. அவளின் விழி வழி மனதில் உள்ளதை அறிந்து கொண்ட அனு அவளை கண்கள் விரிய நோக்கினாள்...
ப்ரியா : கயல்... கயல் ஏதோ ஒரு இருள் நிறைந்த இடத்துல இருக்கா.. அவள சுத்தி.. அவ..ள சுத்..தி.. க..க..ட..ம்.பர ச..ர்..ப்..பம் இருக்கு என திக்கி தினறி கூறி முடித்திருந்தவளை அனைவரும் திடுக்கிட்டு நோக்கினர்...
ப்ரியாவின் மனக்கண்ணில் ஓடிய காட்சி இப்போது அனைவரின் கண்கள் முன்னும் ஓடியது...
இருள் சாயம் பூசி கொண்டிருந்த அந்த கல்லறையில் தன் கால்களை உடலோடு ஒடுக்கி கொண்டு மெதுவாய் மூச்சு விட்டவாறு பள்ளி சீருடையில் மயங்கியிருந்தாள் கயல்... அவள் நெற்றியில் சிறிதாய் காயம் ஏற்பட்டிரிருக்க .. அக்காயத்தில் கசிந்த இரத்தம் புதியாய் உரு பெற்று அவளுக்கு பாதுகாப்பாய் அமைந்திருந்தது... கயலின் குறுதி அவளை சூழ்ந்து ஒரு மஞ்சள் நிற கட்டமாய் ஒளிர்ந்து வளைத்திருக்க அவ்வளையத்தின் வெளியிலோ ஊதா நிற நீண்ட வால்களை கொண்டு தலையில் பெரிய முட்களுடன் கன்னத்தில் செதில் முளைத்து பாதி மீனாகவும் பாதி சர்ப்பமாகவும் நீரில் வாழும் ஏதோ ஒரு உயிரினம் பரினாம வளர்ச்சி அடைந்ததை போல் இருந்த சில சர்ப்பகள் அந்த வளையத்தை தாண்ட இயலாமல் சீரி கொண்டிருந்தது...
நிரு : இத நாம உடனே கோவன்களுக்கும் சஹாத்திய சூரர்களுக்கும் தெரிய வச்சாகனும்...
வீனா : ஆனா எப்டி... ஃபோன் ட்ரை பன்ன முடியாது.... நேர்லையும் போய் சொல்ல முடியாது... திவ்யாவோட சக்திய உபயோகிச்சாலும் அவங்க எங்க இருக்காங்கன்னே நமக்கு தெரியாதே என யோசனையாய் கூற
திவ்யா : ஆனா அனுவால முடியுமே என கூறவும் இப்போது அனைவரும் அனுவை நோக்க அனு மெதுவாய் தலையசைத்து விட்டு தன் இமைகளை மூடி யுவா என உரக்க உச்சரித்தாள்...
வேதபுர காட்டின் மையத்தில் வளவன் பருந்தாய் மேலே பறந்து கொண்டிருக்க அவனை பின் தொடர்ந்து நம் நாயகன்கள் ஓடி கொண்டிருந்தனர்... அனைவருக்கும் முன்னாக ஓடி கொண்டிருந்த க்ரிஷ் திடீரென கண்களை மூடி நிற்க அவனுள் அனுவின் யுவா என்ற அழைப்பு உரக்க எதிரொலித்தது...
இவன் திடீரென நின்றதும் அனைவரும் தங்களின் ஓட்டத்திற்கு தற்காலிகமாய் தடுப்பு வைக்க வளவனும் தன் மனித உருவில் கீழே குதித்தான்...
தன் கண்களை மூடி எதையோ கனிக்க முயன்ற க்ரிஷ்ஷை அனைவரும் சுற்றி நிற்க இப்போது க்ரிஷ் ரது என அழைத்தான்...
அங்கு தன்னவனின் குரலை கேட்டதும் ஒரு புன்னகையுடன் கண் திறவாமல் தலையசைத்து தோழிகளுக்கு புரிய வைத்தாள் அனு...
அனு : யுவா.. கயல் பேராபத்தில் இருக்கிறாள்..
க்ரிஷ் : என்(ன) கூறுகிறாய் ரது...
அனு : எம்மை கூற அனுமதியுங்கள்... அவளுடன் துருவன் இல்லை.. தன்னந்தனியாய் எவரோ கயலை கிடத்தி சென்றுள்ளனர்... தாம் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் கயலின் குறுதி அங்கு கசிந்து கொண்டிருக்கிறது... அவள் உடலில் இருந்து கசியும் ஒவ்வொரு துளி உதிரத்திலும் பஞ்சலோக வம்சத்தின் அதீத சக்தி உள்ளது...
க்ரிஷ் : என்(ன) கூற வருகிறாய் நீ.. என்றவனின் குரலிலே அவன் நெருங்கி விட்டான் என்பதை உணர்ந்த அனு ஒரு பெருமூச்சை வெளியிட்டு...
அனு : கொடிய சக்தி ஏதோ ஒன்று விடுப்பெற்றுள்ளது... நேரம் கடத்தாமல் விரைந்து கயலை காத்திடுங்கள்.. தாம் உள்ள திசையின் மேற்கு பகுதியில் எங்கோ தான் கயல் இப்போதிருக்கிறாள்... எச்சரிக்கையாய் செல்லுங்கள் என்றதோடு அனு கண்களை திறக்க அங்கு க்ரிஷ்ஷும் விழிகளை பிரித்து நாயகன்கள் அனைவரிடமும் அனு தெரிவித்த அனைத்தையும் விவரித்தான்..
அர்ஜுன் : கயல் உடன் துருவனில்லை எனின் துருவ் எங்ஙனம் உள்ளான்...
வளவன் : வெகு அருகில் என்றவன் சட்டென தன் கரங்களை இரு புறமும் உரசி அடுத்த நொடி பருந்தின் உரு கொண்டு மேல் நோக்கி பறந்தான்...
ஒருவர் மற்றவரின் கண்களை நோக்கி கொண்ட நாயகன்கள் மீண்டும் வளவனை பின் தொடர்ந்து ஓடினர்...
இவர்கள் ஓட தொடங்கிய ஐந்தே நிமிடத்தில் திடீரென வளவன் தன் சிறகுகளை முடக்கி கீழ் பணிவதை கண்டு அத்திசையில் ஓடினர்...
ஓடுகையிலே தன் கண்களை கூராக்கி பார்த்த வீர் அவர்களை விட தொலைவில் சில புதர்களிடையே கிடந்த துருவை சுற்றி கருநாகங்கள் படையெடுப்பதை கண்டு இன்னும் வேகமெடுத்தான்...
நீண்ட கருமையான வால்.. இடை வரை சுற்றியிருந்த பச்சை நிற துணி.. முதுகில் சொருகபட்டிருந்த வில் அம்பு.. தலையில் மெருகேறி மேலேறியிருந்த அழுத்தமான கொம்பு.. நீண்ட காது.. கன்னத்தில் வளர்ந்திருந்த விஷ முட்களென அந்த நாகமனிதர்ள் பாதி நீரில் வாழ்பவர்களை போன்றும் காட்சி அளித்தனர்
கீழ் விழுந்திருந்த துருவை பதம் பார்க்க முன்னேறி தன் நீண்ட பற்களை அவன் கரத்தில் இறக்கும் முன் சட்டென திரும்பி நோக்கிய நாகமனிதன் ஒருவன் அவர்களை நோக்கி சீரி கொண்டு நாயகன்கள் ஓடி வருவதை கண்டு ஸ்ததம்பித்தான்...
அந்த நாகமனிதன் சுதாரிக்கும் முன் வளவன் அதிவேகத்துடன் அவன் நெஞ்சில் தன் காலால் உதைத்தான்...
தடுமாறி பின் சாய்ந்த நாகமனிதன் மண்ணை சீரி கொண்டு செல்லவும் மற்ற நாகமனிதக்களும் தங்களை சுதாரித்து கொண்டு கவனத்தை சுழல விட அந்த நாகமனிதர்களுக்கு முன் இப்போது பெருமூச்சறித்தவாறு வந்து நின்றிருந்தனர் நம் நாயகன்கள்...
வளவனும் அவனது மனித உருவிலே கீழே குதிக்க.. சற்று பின் வாங்கிய நாகமனிதர்களுள் ஒருவன் துருவை தொட போக.. இடையில் தன் காலால் அவன் கரத்தை தட்டி முகத்தில் ஓங்கி குத்தினான் அஷ்வன்த்...
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நாகமனிதன் கீழே சரிய மற்ற நாகமனிதர்கள் அதற்கும் மேல் தாமதித்தால் பாடை கட்ட வேண்யது தான் என அறிந்து உடனே நாயகன்களை தங்களின் ஆயுதங்களால் தாக்க முயன்றனர்...
நம் நாயகன்களிடம் எந்த ஆயுதமும் இல்லையென்பதால் தானகாவே களத்தில் இறங்கினர்...
முகில் கீழ் விழுந்திருந்த துருவை உடனே தூக்க.. துருவோ அரை மயக்கத்தில் " மாமா பாப்பா " என ஏதோ பிதற்றி விட்டு அவன் தோளிலே சாய்ந்து கொண்டான்...
அவன் தலையோடு சேர்த்து இறுக்கி பிடித்தி கொண்ட முகில் அவ்விடத்தை சுற்றி தன் கண்களால் அலச இவர்கள் இருந்த இடத்தை விட்டு சற்றே தொலைவில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அகன்ற விரிசல் அவன் மூளையில் விளக்கெரிய வைத்தது...
நேரம் தாழ்த்தாமல் அதை நோக்கி ஓடினான்... முகிலின் எண்ணம் புரிந்ததால் துருவை நோக்கி நகர எத்தனித்த இரு நாகமனிதர்களை இடையில் சென்று தடுத்தான் வீர்...
வீர் இருவரில் ஒருவனை சமாளித்தாலும் பின்னிருந்து மற்றொருவன் தாக்குவதால் சற்றே தடுமாற அந்த இன்னோறு நாகமனிதன் பின் கழுத்தை பிடித்து அருகிலிருந்த மரத்தில் பலமாய் இடித்தான் இந்திரன்...
துருவை அந்த மரத்தின் பொந்தில் மெதுவாய் படுக்க வைத்த முகில் எழுந்து நின்று அந்த மரத்தில் தன் கரத்தை பதித்து கண்களை மூடி திறந்தான்...
சில நொடிகளில் அம்மரத்தை சுற்றியிருந்த செடி கொடிகள் மெதுவாய் ஊர்ந்து வந்து அந்த பொந்தின் வாயிலை கதவை போல் அடைத்து கொண்டு துருவை பாதுகாத்தது...
தன் அம்பை வில்லில் பொருத்தி அந்த கொடிகளை அறுக்க ஒரு நாகமனிதன் குறி வைக்க அவன் முதுகில் தாக்கி கீழே தள்ளி விட்டான் சரண்... இருந்தும் அந்த அம்பு வில்லை விட்டு பாய்ந்திட திடீரென குறி மாறியதால் திசை மாறி சரியாக ரவியின் முதுகை பதம் பார்த்தது அந்த அம்பு..
வலியில் திரும்பி சரணை முறைத்த ரவி அந்த அம்பை முதுகை விட்டு பிடுங்கி ஓரமாய் எறிந்து விட்டு இவன் திரும்பிய நேரம் கடிக்க வந்த நாகமனிதனின் கழுத்தில் அடித்து அவன் கீழ் நோக்கி சரியவும் தன் முட்டியால் குமட்டில் இடித்து மேலே தள்ளினான்...
இவர்களின் சண்டையிலிருந்து தப்பிக்க முயன்ற சில நாகமனிதர்களை துரத்தி ஓடி கொண்டிருந்தான் ரித்விக்.. அவனை பின் தொடர்ந்து மரம் விட்டு மரம் தாண்டி வந்து கொண்டிருந்த ரனீஷ் சரியாய் எம்பி குதித்து ஒரு நாகமனிதனின் முகத்தில் ஓங்கி அடித்தான்...
ரனீஷின் கால் மண்ணில் பதியவும் அந்த நாகமனிதனின் முகம் மண்ணில் புதைந்தது... ஊர்ந்து ஓடி கொண்டிருந்த மற்றைய நாகமனிதர்கள் திடுக்கிட்டு திரும்பி நோக்க அவர்கள் சுதாரிக்கும் முன் சற்று காலை மண்ணில் அழுத்து மேலெழும்பி குதித்த ரித்விக் அவனுக்கு மேலிருந்த பெரிய கிளையை பிடித்து இழுக்க அவனின் இழுப்பிற்கும் வேகத்திற்கும் மொடக்கென முறிந்த அந்நீண்ட கிளை மற்ற இரு நாகமனிதர்கள் மீது மொத்தமாய் விழுந்தது....
அதிலிருந்தும் தட்டுத்தடுமாறி எழுந்த ஒரு நாகமனிதனை அந்த கிளையை விட்டு தாண்டி போக முடியாததால் ரனீஷும் ரித்விக்கும் நின்ற இடத்திலே நின்றபடி புருவம் உயர்த்தி பார்த்து கொண்டிருந்தனர்...
தான் தப்பியதாய் எண்ணி பெருமையுடன் திரும்பிய அந்த நாகமனிதன் அவன் முன் தன் இரு கைகளையும் கட்டி கொண்டு புருமுயர்த்தி பார்த்தவாறு நின்ற சத்தீஷை கண்டு பேந்த பேந்த முளித்தான்...
சத்தீஷ் தன் காலை ஓரடி முன் வைக்கவும் சட்டென நொடி கூட தாமதிக்காமல் தன் அம்பை எடுத்து வில்லில் பொருத்தி சத்தீஷை தாக்கினான்...
சத்தீஷின் தோளை அவ்வம்பு பதம் பார்த்திருக்க சத்தீஷ் தடுமாறிய அந்த நொடி அந்த நாகமனிதன் அவன் இருந்த இடத்திலிருந்து துருவ் இருந்த இடத்தை நோக்கி தன் அம்பினால் குறி வைத்தான்...
ஆனால் அவனை தாக்க முன்னேறிய சத்தீஷும் அவன் முன்னே அந்த முறிந்த கிளையின் மறுபுறம் நின்றிருந்த ரனீஷ் ரித்விக்கும் தன்னை ஏன் தடுக்கவில்லை என்பதை கவனிக்காத அவன் அம்பை ஏவி விடவும் சத்தீஷ் தன் தோளில் இருந்த அம்பை பிடுங்கி விட்டு அந்த நாகமனிதனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றான்...
என்ன தம்மை இவன் கவனிக்கவில்லை என முளித்த அந்த நாகமனிதன் ஒரு நொடி நாயகன்கள் அனைவரும் அவனை பரிதாபமாய் பார்ப்பதை கவனிக்க அவனின் அம்பு துருவை பாதுகாத்து கொண்டிருந்த கொடியை தாக்கிய அடுத்த நொடி அந்த மரத்தின் வேர் மண்ணிலிருந்து புடைத்து அனைத்தையும் தாண்டி சீரி வந்து அந்த நாகமனிதனை பிடித்தது...
இவன் என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ளும் முன்னே அவன் கதற கதற மண்ணில் சரசரவேன இழுத்து சென்ற அந்த வேர் அவனை உயிருடன் மண்ணுக்குள் இழுத்து கொண்டு புடைத்து வந்த விரிசலை மறைய செய்து அவனை உயிருடனே மண்ணுக்கு இரையாக்கியது....
மீதம் இருப்பது அஷ்வன்த்தை தன் விஷத்தால் தாக்க எண்ணி அவன் விளையாடுகிறான் என்பதை கூட அறியாமல் தீவிரமாய் சண்டை போட்டு கொண்டிருந்த ஒரே நாகமனிதன் தான்...
மீதமிருந்தவர்களை அடித்தே மடிய செய்திருந்தனர்.. தொடக்கத்தில் வளவனிடம் உதை வாங்கியிருந்தவன் தான் அர்ஜுன் மற்றும் வளவனிடையே சின்னா பின்னமாகியிருந்தான்...
ஒரு கட்டத்தில் சலித்து போன அஷ்வன்த் சரியாக அந்த நாகமனிதன் பின்னிருந்து அவன் கழுத்தை கடிக்க வரும் போது தன் கரத்தை மேலுயர்த்தினான்.. அவன் கழுத்தை பிடித்த அஷ்வன்த் சுழற்றி முன் கொண்டு வந்து தலையை உடலின் பின் இழுத்து ஓங்கி உதைத்தான்...
அந்த நாகமனிதன் தலை டமாரென மண்ணில் இடிக்க உடல் விதிர்விதிர்க்க கீழே விழுந்தான்...
இப்போது அனைவரும் அவனை வளைக்க அந்த நாகமனிதனோ நடுநடுங்கி அமர்ந்திருந்தான்...
அர்ஜுன் : சொல்... யாவரால் அனுப்பப்பட்டவன் நீ.. எவர் கூறி துருவனை வதம் செய்திட வந்தாய்...
நாகமனிதன் : இல்லை.. யா..யான் அச்சிறு..வ..னை வ..தம் புரிய வர..வி..ல்..லை... அவனை எம் லோகத்திற்கு கிடத்தி சென்றிடவே வந்தோம்...
அஷ்வன்த் : என்ன.. உம் லோகமா...
நாகமனிதன் : ஆ..ஆம் .. எம்மை போன்ற நாக..ங்களி..ன் உரைவிடம்.. அங்..ஙனமே இ..இச்சிறுவனை கிடத்தி வர எமக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டது...
இந்திரன் : எஞ்ஞாலத்தை பற்றி கூறுகிறாய் நீ
நாகமனிதன் : சர்ப்பலோகம்...
ரவி : சர்ப்பலோகமா.. அஞ்ஞாலத்தில் உமக்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவு நாகமனித தலைவனை அன்றி வேறெவரும் இல்லை.. அவ்வாறெனினும் நாகமனித தலைவனுக்கு துருவன் எக்காரணத்திற்காய் வேண்டும்...
நாகமனிதன் : இ..ல்..லை.. எமக்கு உத்தரவு பிறப்பித்தது தலைமை அமைச்சன் மிதரவர்தனன் என கூறவும் ஒரு நொடி நம் நாயகன்களால் அவர்களின் காதுகளை நம்ப முடியவில்லை..
என்ன தான் நம் நாயகன்களுக்கு சர்ப்பலோகத்தை பற்றி எதுவுமே தெரியாதென்றாலும் பலாயிரம் வருடங்கள் முன்பு அச்சர்ப்பலோகம் சிலரால் தான் ஆளப்பட்டதென்றும் அதில் ஒருவரே மிதரவர்தனன் என்றும் அறிந்திருந்தனர்...
சரண் : பொரு.. அவ்வாறெனில் கயல் எங்கே.. அவளை என்(ன) செய்தீர்கள்..
நாகமனிதன் : யானறியேன்... யான் அச்சிறுமியை பற்றி ஏதும் அறியேன்...
முகில் : மெய்யை பறைகிறாயா அல்ல இங்கேயே உம்மை புதைத்திடவா...
நாகமனிதன் : மெய்யாகவே தான் கூறிகிறேன்.. யாம் அச்சிறுமியை பற்றிய எந்த ஒரு விசனமும் அறியேன்..
க்ரிஷ் : சரி இதற்கு விடையளி.. துருவனை எக்காரணத்திற்காய் கிடத்த கூறினர்...
நாகமனிதன் : அது ..
க்ரிஷ் : சொல் என இவன் நாகமனிதனின் கால் மீதிருந்த தன் காலின் அழுத்தத்தை கூட்ட அவனை நோக்க வலியுடன் நிமிர்ந்த அந்த நாகமனிதன் செக்கசெவேளென சிவந்திருந்த க்ரிஷ்ஷின் விழிகளை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கினான்...
நாகமனிதன் : தையை கூர்ந்து எம்மை விடுவித்துடுங்கள் என கை கூப்பு கேட்டான்...
ரவி : வினவியதற்கு பதிலளிக்கிறாயா அல்ல என அனைவரையும் காண நாயகன்கள் அனைவரின் கண்களும் நிறம் மாறியது...
நாகமனிதன் : வே..வேண்டாம்... கூறி விடுகி..றேன்..
சத்தீஷ் : விரைந்து கூறு...
நாகமனிதன் : அச்சிறுவனுள் பலாயிரக்கணக்கான வருடங்களாய் இன்னுயிர் நீக்காது வாழும் ஒரு நாகத்தின்(மோகினி) நஞ்சும் குறுதியியும் உள்ளது... அத்துடன் அச்சிறுவனுள் அதீத பருந்தின் சக்தியும் உள்ளதால் சாதாரண அதிசய குழந்தைகளை விடுத்தும் அவன் வித்யாசமானவன் என்கவும் அனைவரும் அப்படியா என்பதை போல் வளவனை நோக்க அவனும் ஒரு குழப்பத்துடன் தலையாட்டினான்...
ரித்விக் : அவ்வாறிருந்தால் என்ன...
நாகமனிதன் : அது.. அச்சிறுவனை தீயசக்தியின் பால் ஈர்த்து அர்ப்பணம் செய்ய உள்ளதாகவும் பின் அவன் தமக்காய் வினை புரிவான் என்றும் கூறினர்...
இதை கேட்டதும் தனிச்சையாகவே அனைவருக்கும் சினம் தலைக்கேற ரவி துருவனின் சிறு முனகலை கேட்டு திரும்பி பார்த்தான்...
துருவ் கண் விழித்து அந்த கொடிகளை தட்டி கொண்டிருந்தான்...
ரவி : இரு துருவ் நா வரேன்
ரவி உடனே துருவருகில் செல்ல இவர்கனைவரும் அந்த நாகமனிதனை நோக்கினர்...
நாகமனிதன் : தாம் வினவிய அனைத்திற்கும் தான் விடை கூறிவிட்டனே... தையை கூர்ந்து எம்மை விடுவியுங்கள் என இரைஞ்சும் பார்வை பார்த்தான்...
ரித்விக் : உம்மை விடுவிக்க தான் போகிறோம்... ஆயினும் நீவீர் யமக்கு ஒரு சகாயம் புரிய வேண்டும்...
நாகமனிதன் : தாரளமாக...
முகில் : உம்மை ஏவியவனிடம் சென்று கூறு.. அவனது எண்ணம் என்றும் ஈடேற போவதில்லை ... அதற்கு கோவன்களும் சஹாத்திய சூரர்களும் அனுமதிக்கவும் மாட்டரென்று என ஒரு புன்னகையுடன் இறுக்கமாய் கூறவும் பதட்டத்துடன் தலையசைத்த அந்த நாகமனிதன் அங்கிருந்து சென்றான்..
மாயம் தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro