Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 35

அனைவரும் பேரதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த வேளையில் க்ரிஷ்ஷின் பின் ஒரு இளம் பெண் நடந்து வந்தாள்.. அவளருகில் வேறொரு ஆணும் நடந்து வந்தான்...

வாயே திறக்காமல் நின்ற க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவரும் சொல்லி வைத்ததை போல் அவரவர் அறைக்கு செல்ல நகர சரியாக அப்பெண் மற்றும் அந்த ஆணின் கைகளில் இருந்த இரண்டு குழந்தைகளின் மீது அனைவரின் பார்வையும் பதிந்தது...

குழந்தைகள் இருவரின் முகமும் மறைந்திருக்கையில் சரியாக சற்று வேகம் கூட்டி கீழே இறங்கி வந்த க்ரிஷ் உடனே வாயிலுக்கு விரைந்தான்...

சில பல நொடிகளில் மாடியிலிருந்து வந்த இந்திரனும் சத்தீஷும் அந்த இளைஞர்களிடமிருந்து ஆளுக்கொரு குழந்தையை வாங்கி கொள்ளவும் சரியாக க்ரிஷ்ஷும் ஒரு குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே வந்தான்...

பார்ப்போர் எவருக்கும் இம்மூவரின் நடவடிக்கை எதற்கும் அர்த்தம் புரியவில்லை... சிந்தனை பலவாறு பரவ கற்பனை குதிரை லாடம் பொருத்தப்பட்டு அதி வேகத்தில் துள்ளி குதித்து எங்கெங்கோ ஓடி கொண்டிருந்தது...

இப்போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட சகோதரன்கள் மூவரும் பின் பெருமூச்சை எடுத்து விட்டு தங்கள் வரிசையில் வீட்டின் பெரியவர்களை நெருங்கினர்..

முதலில் வேலு தாத்தாவின் அருகில் நெருங்கிய க்ரிஷ் தன் கைகளில் இருந்த குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு இந்திரனை நோக்க... அவன் அவனது கரத்திலிருந்த குழந்தையை சந்திரன் தாத்தாவிடம் கொடுத்து விட்டு சத்தீஷை நோக்க... சத்தீஷ் அவனிடமிருந்த குழந்தையை தெய்வானை பாட்டியிடம் கொடுத்து விட்டு தள்ளி வந்து தன் சகோதரன்களுடன் நின்று கொண்டான்...

வேலு தாத்தா : யாரு குழந்தைங்க டா இது.. மூ..மூணு பேரும் ஏன் சிலை மாரியே நிக்கிறீங்க... வாய திறந்து பேசுங்களேன் டா.. நீண்ட பெருமூச்சை விட்ட க்ரிஷ் முகத்தில் அரும்பிய ஒரு புன்னகையுடன்...

க்ரிஷ் : உங்களோட கொள்ளு பேரனுங்க தாத்தா.. என கூற அனைவரும் அவனை கண்டு முளிக்க தவறவில்லை...

வனித்தா : டேய் என்ன டா ஒளறுர.. என் மருமகளுங்களுக்கு முதல்ல என்ன ஆச்சு..தெளிவா சொல்லு... அதற்கு இம்மூவர் வாய் திறக்கும் முன் அவர்களுடன் வந்திருந்த அபெண்...

அப்பெண் : ஒன்னும் இல்லம்மா.. அவங்களுக்கு மதியம் தான் பிரசவமானாதால மயக்கத்துல இருக்காங்க... காலைல எழுந்துடுவாங்க என அமைதியாய் ஒரு அணுகுண்டை வீசினாள்...

மாதவன் :யாரு மா நீ.. எ..என்.னென்னமோ சொல்லுர..

இந்திரன் : அப்பா அவங்க லீலாவதி..அவரு அவங்களோட ஹஸ்பண் கனேஷ்..

அஷ்வன்த் : டேய் இந்த குழந்தைங்க யாரோடது.. மொதல்ல என்ன நடந்துச்சு.. எங்க போனீங்க...

சத்தீஷ் : உன்னோட மருமகனுங்க டா... மருமகனுங்கன்னா எங்க மூணு பேரோட புள்ளைங்க... இன்னைக்கு நாங்க போன இடத்துல எதிர்பாராத விதமா ஒரு அக்ஸிடென்ட்.. அதனால குழந்தைங்க பொறக்குர நிலமை உருவாகீடுச்சு...

இரமனன் : என்ன டா சொல்றீங்க... என் பொண்ணுங்களுக்கு என்ன ஆச்சு...

இந்திரன் : மாமா ஒய் டென்ஷன்.. எங்க மனைவிகளுக்கு ஒன்னும் இல்ல அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க... நீங்க உங்க பேரனுங்கள பாத்தீங்களா இல்லையா...

க்ரிஷ் : இவங்க பாக்க மாட்டாங்க போல... வாங்க டா நம்ம பசங்களுக்கு அவங்க தாத்தா பாட்டி அவங்க பொறந்தப்ப பாக்கவே இல்லன்னு வளந்ததும் சொல்லிக்களாம் என குழந்தையை வாங்க முன் வந்தவனை முறைத்த வேலு தாத்தா...

வேலு தாத்தா : உரிச்சிடுவேன் படவா... நா எப்போ டா சொன்னேன் அப்டி.. போடா என் பேரனுங்கள நா வளத்துக்குறேன்... என திரும்பி நின்று கொள்ளவும் நம் கோவன்களின் முகத்தில் புன்னகை படர்ந்தது...

முதலில் அனைத்து அதிர்ச்சியிலிருந்தும் வெளி வந்த ரித்விக் மூவரையும் தாவி வந்து அணைத்து கொண்டான்...

ரித்விக் : கங்ரட்ஸ் மச்சான்ஸ்..

இந்திரன் : தன்க்ஸ் மச்சான்... உனக்காவது புரிஞ்சிதே டா..

சரண் : இப்டி திடுதிபுனு வந்து நின்னா எப்டி டா பயப்புடாம இருக்குரது... எருமைங்களா இனிமே சொல்லாம கொள்ளாம எங்கையாவது போயி பாருங்க வந்து மிதிக்கிறேன்.. என முறைத்த படியே வந்தவன் மூவரையும் அணைத்து தன் மகிழ்ச்சியை உணர்த்தினான்...

பின் என்ன நாயகிகள் இம்மூவருக்கும் வாழ்த்தை கூறி கொண்டாடி விட்டு நேரம் தாமதிக்காமல் அனு திவ்யா ப்ரியாவை பரிசோதிக்க சென்றனர்... தாய் மற்றுமல்லாது நான்கு மாதத்தில் பிறந்திருந்த குழந்தைகள் மூவரும் கூட ஆரோக்கியத்துடன் இருந்தனர்...

அரை மணி நேர பரிசோதனையின் பின் மருத்துவ நாயகிகள் வீனா ரக்ஷா மற்றும் தான்யா மூவரும் சற்றே குழப்பத்துடனே வெளி வந்தனர்...

காவியா : என்னாச்சு டா மா.. ஏன் ஒரு மாரி இருக்கீங்க... எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்டும் போதே அனைவரின் முகமும் மாற

ரக்ஷா : அச்சோ அம்மா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல... ஆறு பேரும் ரொம்பவே நல்லா இருக்காங்க.. ஒரு பிரச்சனையும் இல்ல...

முரளி : உண்மையா தானா டா..

வீனா : நாங்க ஏன்ப்பா பொய் சொல்ல போறோம்... உண்மையாவே எந்த பிரச்சனையும் இல்ல...

தெய்வானை : குழந்தைங்க ஏன் டா ரொம்ப நேரமா அழவே இல்ல.. என கேட்ட மறு நொடி புன்னகையுடன் நின்ற க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவரின் முகமும் மாற மறு நொடி இந்திரனை தவிர்த்து மற்ற இருவரும் முகத்தை சீராக்கி கொண்டனர்...

தான்யா : அது எங்களுக்குமே என்னன்னு புரியல பாட்டி.. ஆனா அவங்களுக்கு எந்த ப்ராப்லமும் இல்ல...

வனித்தா : ஏன் டா பொறந்தப்போ தான் பேரனுங்க அழுதானுங்களா என கவலையுடன் தன் மகன்கள் மூவரையும் ஏறிட தன் முக மாறுதலை மாற்றாமல் நின்றிருந்த இந்திரன் ஏதோ கூற வரும் முன் அவன் கரத்தை அழுத்தி பிடித்து தடுத்து நிறுத்தினான் சத்தீஷ்...

சத்தீஷ் : இல்ல அம்மு.. அப்போ அழுதாங்க தான்.. அப்ரம் நாங்க வீட்டுக்கு வர வரைக்குமே ரொம்ப அழுதாங்க.. அப்ரம் தூங்கீட்டாங்க...

சங்கரன் தாத்தா : தூங்குனாங்களா.. வந்ததுலேந்தே கொட்ட கொட்ட முளிச்சிட்டு தான டா கெடந்தானுங்க... என அவனை புருவம் சுருங்க பார்க்கவும் சரியாக அந்த நேரம் பள்ளியிலிருந்து வந்த கயலும் துருவும் காலையிலே காணாமல் போன மாமாக்கள் மூவரும் இப்போது கண்ணில் பட்டதால் ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டு தெரியாத் தனமாய் தாய் மாமாக்களை காப்பாற்றி விட்டனர்...

துருவ் : எங்க மாமா போனீங்க... காலைல நாங்க எவ்ளோ தேடுனோம் தெரியுமா...

இந்திரன் : ஒன்னும் இல்ல டா துருவ்.. இப்போ போய் நீங்க சமத்தா ஃப்ரெஷ்ஷப் ஆகுங்க... நாங்களும் குளிச்சிட்டு வரோம் ஓடுங்க...

கயல் : நாங்க போறது இருக்கட்டும் மாமா... அத்தை எங்க..

இந்திரன் : அத்தை தூங்குறாங்க கயல் குட்டி... நீ சீக்கிரம் ஃப்ரெஷ்ஷப் ஆய்ட்டு வந்தா மாமா இரெண்டு பேருக்கும் ஒரு ஸர்ப்ரைஸ் காட்டுவேன்

கயல் : ஸர்ப்ரைஸா... என்னது அது

மோகினி : போய் ஃப்ரெஷ்ஷப்பாகி வா குட்டி.. மாமா காட்டுவான்...

கயல் : சரிமா... வா என் கூட என அவளை இழுத்து கொண்டு அவர்களறைக்குள் சென்றாள்...

அதன் பின் அனைவரும் பழைய நிலைக்கு திரும்பி கீழே செல்ல க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் குளித்து விட்டு அவரவர் மனைவியின் உடைகளையும் மாற்றி விட்டு கீழே வந்தனர்...

கயல் துருவ் இருவரும் ஸர்ப்ரைஸிற்காய் ஆவலாய் காத்திருந்ததால் குழந்தைகளை கீழேயே தூக்கி வந்திருந்தனர்...

கண்களை திறந்து வைத்து கொண்டு தங்கள் கரங்களால் ஒன்றை மற்றொன்று இடித்து கொண்டு தரையில் படுத்தவாறு சுற்றி உள்ளதை பார்த்த குழந்தைகளை ஆசையாய் பார்த்தனர் வளர்ந்த இரு குழந்தைகள்...

முதலாமவன் கருவண்டு விழிகளால் அனைத்தையும் தன்னுள் நிறப்பி கொண்டிருந்தான்... இரண்டாமவன் எதையும் கவனிக்காமல் பொருமையாய் மூச்சை இழுத்து விட்டவாறு ஜன்னல் வழியே தெரிந்த வாணை இமைத்து இமைத்து பார்த்து கொண்டிருந்தான்... மூன்றாமவனோ கண்கள் பாதி திறந்தும் திறவாத நிலையில் இரு கைகளையும் சுருக்கி கொண்டு உறங்கி கொண்டிருந்தான்...

அம்மூவரை இரசிக்க கண்கள் போதாதிருந்தவர்களுக்கு அம்மூவரை இரசிக்கும் கயல் துருவையும் சேர்த்து இரசிக்க மொத்த கண்களும் பத்தாமல் போனது...

நாயகர்கள் அனைவருக்கும் ஏதோ சந்தேகம் இருந்தாலும் கோவன்களின் அமைதிக்கான காரணம் தெரிந்ததும் பேசி கொள்ளலாம் என அமைதி காத்தனர்... வீட்டின் பெரியோர்களோ பெண்களும் குழந்தைகளும் நலமாய் உள்ளதிலே நிம்மதி அடைந்திருந்தனர்...

தங்கைகள் வர்ஷி பவி மற்றும் தான்யா மடியில் தவழும் தங்களின் பச்சிளம் குழந்தைகளை குடும்பமே சேர்ந்து இரசித்து விளையாட்டு காட்டுவதை ஒரு ஓரமாய் நின்று பார்த்து கொண்டிருந்த சோவன்களை தன் நிம்மதி கலந்த பார்வையுடன் ஏறிட்டனர் வளவன் மோகினி தம்பதியினர்...

கனேஷ் மற்றும் லீலாவதி நம் கோவன்களால் ஷேஷ்வமலையில் தங்க வைக்கப்பட்டனர்..

மறுநாள் விடியும் முன்பே கண் விழித்த நாகனிகள் மூவருக்கும் நேற்றைய தினம் என்ன நடந்ததென்ற எந்த ஒரு நினைவும் இல்லை...

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியோ ஆச்சர்யமோ கிடைத்ததாய் தெரியவில்லை... ஏதோ எதிர்பார்த்ததை போலவே தான் தாங்கள் பெற்றெடுத்த மகவுகளை இரசித்தனர்...

நாட்கள் நகர்ந்தது... கோவன்கள் அவர்களின் நாயகிகளை கால் தரையில் படாதவாறு நெஞ்சில் வைத்து தாங்கினர்.. இந்த நான்கு மாதத்தில் குழப்ப இரேகைகளுடன் சுழன்றதை போல் அவர்கள் சுழலாததே அனைவருக்கும் போதுமானதாய் இருக்க இம்மூவருமே அனைவருக்கும் மேல் அவர்களின் மனைவிகளையும் பார்த்து கொண்டு குழந்தைகளையும் பார்த்து கொண்டனர்...

ஆனால் வீட்டின் பெண்மணிகள் சகோதரன்களுக்கு இன்னல் கொடுக்காமல் குழந்தைகள் மூவரை அன்புடன் கவனமாய் பார்த்து கொண்டனர்...

அனு திவ்யா ப்ரியாவினால் குழந்தை பிறந்து இரண்டு வாரம் கடந்தும் நடக்க முடியவில்லை... அதற்கு காரணத்தையும் மருத்துவரீதையில் எவராலும் கண்டறிய முடியவில்லை...

ஆனால் அதற்காய் நம் நாகனிகள் மூவரும் கவலை பட்டதாய் தெரியவில்லை...  ஒரு மாதத்திலே குழந்தைகள் மூவருக்கும் எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி பெயர் சூட்டினர்.. பெயர்களையும் க்ரிஷ் இந்திரன் சத்தீஷை தெவிர்த்து வேறெவரும் தேர்ந்தெடுக்கவில்லை... அதற்கு அம்மூவர் அனுமதிக்கவும் இல்லை...

முதலாமவனுக்கு சித்தார்த் நாயக் என்றும்

இரண்டாமவனுக்கு ருத்ராக்ஷ்ய நாயக் என்றும்

மூன்றாமவனுக்கு ஆதியன்த்த நாயக் என்றும்

பெயர் சூட்டப்பட்டது...

ஆனால் கோவன்கள் மூவரிலும் கூட இம்மூன்று பெயர்களை தேர்ந்தெடுத்து நாமம் சூட்டியது க்ரிஷ் தான்... அவனின் எந்த ஒரு செயலுக்கும் அவனின் இளவல்கள் எதிராய் நிற்கவில்லை...

இவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காது அடுத்த வாரமே மதுவின் மகன் இப்புவியில் தன் காலடியை பதித்தான்...

மது கதறிய கதறலுக்கு ரித்விக்கும் மயங்கி விழுந்து விட்டான்... அவன் கண்விழிக்கையில் மதுவே எழுந்திருந்தாள்.. அன்றைய தினம் அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும் ரித்விக்கிற்கு பாதி மகிழ்ச்சி பாதி மயக்கமெனவும் களிந்தது...

ரித்விக் மற்றும் மதுவின் மகனிற்கு ஊரார் அனைவரின் முன்னிலையிலும் அஷ்வித் கரண் என பெயர் சூட்டப்பட்டது...

மாதங்கள் களிய நேரம் தாழ்த்தாமல் நம் இரண்டாம் அணி நாயகன்கள் அனைவரும் அவரவர் பெற்றோரை தங்கள் பிறந்த நாளில் அழ வைத்து பின் சிரிக்க வைக்க அழுகுரலுடன் தங்கள் காலடியை புவியில் பதித்தனர்...

இதற்கிடையில் அர்ஜுனன் ப்ரதர்ஸ் எனப்படும் இரெட்டையன்களான முகிலர்ஜுனன் மற்றும் நகுலர்ஜுனனின் மகன்கள் ஒரே நாளில் சில நிமிட இடைவேளையிலே பிறப்பெடுத்து தங்களையும் இரெட்டையன்கள் பட்டத்தில் சேர்த்து கொள்ள வீரிட்டனர்...

நேரம் மட்டுமல்ல அவர்ளின் உருவ ஒற்றுமையும் முக ஜாடைகளுமே இருவரையும் இரெட்டையன்களாகவே கருத வைத்தது.. அந்தளவிற்கு இருவருள்ளும் ஒற்றுமை இருந்தது...

பிறகென்ன... நம் வேலு தாத்தாவின் வீடே குழந்தைகளின் மழலை மொழியிலும் அழுகையிலும் சிரிப்பிலும் நிறைந்து போனது...

கயல் மற்றும் துருவ் இரண்டு கால் பத்தாமல் ஒரு குழந்தை தூங்கி விட்டால் உடனே மறு குழந்தையிடம் தாவி தாவி ஓடி விளையாடி கொண்டிருந்தனர்...

அஷ்வன்த் மற்றும் பவியின் மகனுக்கு மதி மித்ரன் என பெயர் சூட்டப்பட்டது...

ரவி மற்றும் வீனாவின் மகனிற்கு வருண் ஷிவ் என பெயர் சூட்டப்பட்டது...

ரனீஷ் மற்றும் ரக்ஷாவின் மகனிற்கு அருண் தேவ் என பெயர் சூட்டப்ட்டது...

வீர் மற்றும் தான்யாவின் மகனிற்கு ஆதவ்தரண் என பெயர் சூட்டப்பட்டது...

முகில் மற்றும் ஒவீயின் மகனிற்கு ராகவசரண் என பெயர் சூட்டப்பட்டது...

அர்ஜுன் மற்றும் நிருவின் மகனிற்கு ராம்சரண் என பெயர் சூட்டப்பட்டது...

சரண் மற்றும் வர்ஷி மகனிற்கு தேவமிதுன் என பெயர் சூட்டப்பட்டது...

அனைவரின் வாழ்வும் அதீத மகிச்சியுடன் சீராய் சென்று கொண்டிருக்க அவர்களின் முதல் இன்னலாய் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் இருவரும் பள்ளி விட்டு ஒரு மணி நேரமாகியும் இன்னும் வீடு திரும்பாதிருந்தனர்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... முதல்ல அத்யாயத்திற்காக காத்திருந்த அனைவருக்கும் பெரிய நன்றி... எனக்கு இரெண்டு நாள்ள சில பல பிரச்சனை வந்துட்டு போய்டுச்சு... எனக்கு காலைல வர எழுத தோனவே இல்ல... ஐ மீன் எனக்கு எழுத நேரமும் அமையல... என்னால எழுதவும் முடியல... அதே நேரத்துல உங்கள காக்க வைக்கவும் முடியல... அதான் கொஞ்சமாவது போடலாம்னு இப்போ உக்காந்து எழுதுனேன்... நாளைக்கு கண்டிப்பா பெரிய யூடியா ககுடுக்குறேன்... இப்போ படிக்க போறேன்... அதான் குட்டி அப்டேட்...

முக்கியமான விஷயம்... மேலுள்ள படங்கள் அனைத்திற்கும் கொடுக்கப்பட வேண்டிய வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் உரியவர் எழுத்தாளர் மதுவன்தி (வான்மதி) spellWritezz12

ஓக்கே இதயங்களே... குட் நைட்... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro