மாயம் - 34
பவியை வீட்டினர் அனைவரும் நலமாய் பார்த்து கொண்டனர்... அடுத்தடுத்த மாதங்கள் வீட்டின் மகிழ்ச்சியை பெருக்கவே நாயகிகள் அடுத்தடுத்து கருத்தரித்தனர்...
நாயகன்களுக்கு சொல்லவா வேண்டும்... அவரவர் மனைவியை நெஞ்சில் வைத்து தாங்கினர்..
எந்த ஒரு மன உளைச்சலும் இன்றி குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் மகிழ்ச்சியில் தத்தளித்தனர்.. மதுவிற்கு வளைகாப்பும் ஈடேறி இரண்டு மாதங்கள் கடந்திருந்தது...
இப்போது மது எட்டு மாதமாகவும்... அனு திவ்யா ப்ரியா நான்கு மாதத்திலே எட்டு மாத குழந்தை சுமப்பதை போலும் இருந்தனர்...
பவிக்கு மூன்றாம் மாதம் நடந்து கொடிருந்தது.. அவளையடுத்து தான்யாவிற்கு இரண்டு மாதம் நடந்து கொண்டிருந்தது... அவளுக்கு பின் வீனா அன்றே கருத்தரித்தாள் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்...
மதுவிற்கு பத்தாம் மாதத்தின் இறுதியிலே குழந்தை பிறக்கும் என ரக்ஷா கூறியிருந்ததால் அனைவருக்கும் சற்று மனம் இளகினாலும் ரித்விக் சற்றே பயத்துடன் தான் சுற்றி கொண்டிருந்தான்...
அடுத்த மாதத்தில் ரக்ஷா தாயாகினாள்.. வீட்டில் அடுத்தடுத்து வந்த குழந்தைகளின் வரவு அனைவரையும் ஆனந்தத்தில் திழைக்க வைத்தது...
ஆனால் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்ததாலோ என்னவோ விரைவில் தங்களின் அனைத்தையும் பரித்து கொள்வேன் என்ற குரோதத்துடன் காத்திருந்தது விதி...
அன்று மதுவிற்கு ஒன்பதாம் மாதம் தொடங்கவிருந்தது.. அனைவரும் எப்போதடா மதுவின் குழந்தை பிறக்குமென ஆவலாய் காத்து கொண்டிருந்தனர்...
நாயகிகள் மாத்திரமல்ல.. அந்த யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள் கூட குழந்தைகளின் பிறப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர்..
பிறக்க உள்ளது பராக்ரம வீரன்களும் இரட்சகளும் தானென இன்னமும் எவருக்கும் தெரியாது.. கோவன்களை தவிர்த்து.. ஆம் அம்மூவரும் நன்றாகவே அறிந்திருந்தனர் பிறக்க உள்ளது அதிசய குழந்தைகள் என்று...
க்ரிஷ் ஆழ்ந்த யோசனையில் அவன் தோள் மீது சாய்ந்து வையிற்றிலிருந்த குழந்தையிடம் ஏதோ உரையாடி கொண்டிருந்த அனுவின் கேசத்தை வருடி கொண்டிருந்தான்...
அனு தன் நான்கரை மாத குழந்தையிடம் அவன் தந்தையை பற்றி குற்றம் சாடி கொண்டிருந்தாள்...
அனு : பாரு குட்டி.. உன் அப்பாக்கு அம்மா மேல பாசமே இல்ல.. என் கிட்ட சரியா பேசியே நாழு மாசமாச்சு குட்டி... நீ வந்ததும் உன் அப்பாக்கிட்ட நாம பேச வேணாம் சரியா.. அவளின் செல்ல கோவம் கலந்த குழந்தை குரலில் திரும்பி பார்த்தான் க்ரிஷ்..
க்ரிஷ் : அட என் புள்ளைய என் கிட்டயே பேச விடாம பன்னீடுவியா நீ..
அனு : ஹ்ம் இப்ப மட்டும் என்ன புதுசா புள்ள மேல கரிசனம்... நீங்க ஒன்னும் எங்க கிட்ட பேச வேண்டாம்...
க்ரிஷ் : அப்போ மேடம் ஏன் என் மேல சாஞ்சிருக்கீங்க...
அனு : அது என் ப்ராப்பர்ட்டி என் உரிமை...
க்ரிஷ் : ஆஹான்...
அனு : ஆஹான் தான்.. நீங்க உங்க இமேஜினேஷன் வல்ட்லையே இருங்க... நானும் என் புள்ளையும் எங்க வல்டுக்கு போய்க்கிறோம்...
க்ரிஷ் : அப்பாவ விட்டுட்டு என் புள்ள உன் கூட வர மாட்டான் டி...
அனு : ம்ஹும் என் புள்ளைக்கு அம்மாவ தான் புடிக்கும்.. என் கூட தான் வருவான்...
க்ரிஷ் : ஹான் இரு உனைக்கு ப்ரூவ் பன்றேன்.. டேய் நீ அப்பாவ விட்டுட்டு அம்மாக்கூட போக மாட்ட தானே.. என அனுவின் வயிற்றின் மீது கை வைத்து கேட்க
அனு : போ மாட்டேன்னு தான் சொல்லுவான் ... என இவள் முடிக்கும் முன் தந்தையின் கேள்விக்கு தனையனவன் தாயின் வயிற்றில் உதைத்து பதில் கொடுத்தான்...
க்ரிஷ் : பாத்தியா என் மகன் என்ன விட்டு போ மாட்டேன்னு சொல்லிட்டான்..
முதலில் குழந்தையின் அசைவை உணர்ந்து தனிச்சையாய் சிரித்த க்ரிஷ் அனுவின் முகம் அடுத்த நொடி வெவ்வேறு உணர்வுகளை வெளிகாட்டியது...
அனுவின் முகம் அதிர்ச்சியில் வெளிர.. க்ரிஷ்ஷின் முகமோ தான் செய்த மடத்தனத்தை எண்ணி கருத்தது...
அனு : யு..யுவா .. உ..உனக்கு குழந்தை உதச்சிது தெரிஞ்சுதா.. என கேட்டவளுக்கு எவ்வித பதில் அளிக்க என்பதை போல் க்ரிஷ் தினறினான்...
க்ரிஷ் : அ..து ரது .. இ..ல்ல...
அனு : இல்ல உங்களுக்கும் தெரிஞ்சிது.. ஆனா ஆனா...
க்ரிஷ் : ரது கூல் டி.. ஒன்னும் இல்ல என உடனே அவளை சமாதானம் செய்ய முயன்றான்..
அனு : இல்ல.. இ..து எப்டி சாத்தியம்... நாழு மாச குழந்தையால எப்டி உதைக்க முடியும்..
க்ரிஷ் : இல்ல ரது அது உன் பிரம்மை தான்...
அனு : நம்ம இரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல பிரம்மை வராது யுவா.. நிறைமாசமா இருக்க மதுக்கே இது வர குழந்தை உதைக்கல.. குழந்தையோட பாடி மூவ்மென்ட்ஸ மட்டும் தான் நாம பாத்துர்க்கோம்.. ஆனா ஆனா
க்ரிஷ் : ரது ப்லீஸ் காம் டௌன்...
அனு : உண்மைய சொல்லுங்க யுவா... நாழு மாசமா என் கிட்ட என்ன மறைக்கிறீங்க.. அதோட இது நாழாவது மாசம் தான்... பட் இப்பவே எங்களுக்கு ஒன்பதாவது மாசத்துல இருக்க மாரி இருக்கு.. எதாவது எங்க கிட்டேந்து மறைக்கிறீங்களா.. ப்லீஸ் சொல்லுங்க...
க்ரிஷ் : ரது என இவன் சட்டென கத்தவும் உடல் அதிர அனு அவனை நோக்கினாள்.. அவனின் கோவத்தை கண்டு அவள் கண்களில் முதல் முறையாக பயம் தெரிந்தது..
கண்களை மூடி தன்னை அசுவாசப்படுத்திய க்ரிஷ் அவளை அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டு அவள் சேகத்தை வருடி விட்டான்.. பிதற்ற மனமின்றி க்ரிஷ்ஷின் மார் மீது சாய்ந்து கண் மூடி கொண்டாள் அனு..
க்ரிஷ் : ரது..
அனு : ஹ்ம்...
க்ரிஷ் : என்ன நீ நம்புரியா
அனு : எனக்கும் மேல உங்கள தான் நம்புறேன் யுவா...
க்ரிஷ் : உனக்கும் நம்ம குழந்தைக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்னைக்கும் எதுவும் ஆக விட மாட்டேன் சரியா என மெதுவாய் கேட்க கண்களை மூடி கண்ணீரை வெளியிட்ட அனு மெதுவாய் தலையயைத்தாள்...
அவள் உறங்கியதை உறுதி படுத்தியதும் கட்டிலில் வாகாய் படுக்க வைத்த க்ரிஷ்ஷின் பார்வை இப்போது அனுவின் நிறைமாத வயிறை ஏறிட்டது...
சில நொடிகளில் வெளியே வந்தவன் பால்கெனிக்கு செல்லும் வழியில் நிலவை இரசித்து கொண்டிருந்த சத்தீஷை கண்டான்...
க்ரிஷ் : சத்தீஷ்... இவனின் குரலில் அதே சந்தோஷத்துடன் திரும்பிய சத்தீஷ் அவனை பிடித்து கொண்டு சுற்று சுற்றென சுற்றினான்...
சத்தீஷ் : டேய் உனக்கு ஒன்னு தெரியுமா.. இன்னைக்கு இன்னைக்கு தேவி சீக்கிரம் தூங்கீட்டா டா.. அதனால அவ எழுந்துக்காத மாரி மெதுவா நா குழந்தைகிட்ட பேசிக்கிட்டு இருந்தேனா அப்போ அப்போ குழந்தை கையோட அச்சு தெரிஞ்சிது.. அஞ்சு விரல் குட்டி குட்டியா.. என இவன் அவனது தனி உலகில் சஞ்சரித்து கூறி கொண்டே போக இவ்விருவரின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திரனின் அழைப்பிலே வெளி வந்தான்...
இந்திரன் : டேய்...
சத்தீஷ் : நீயும் வந்துட்டியா டா.. இத கேளேன்.. தேவி என இவன் மீண்டும் ஆரம்பிக்கும் முன்...
இந்திரன் : மூளை கொழம்பீடுச்சா டா உனக்கு.. நாழு மாச குழந்தை முழுசாவே உருவாகியிருக்காது டா என கூறியதும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த சத்தீஷின் முகத்தில் அதிர்ச்சி இரேகை பரவியது...
சத்தீஷ் : அதான
இந்திரன் : எங்களுக்கு தெரியாம சரக்கடிச்சியா என அவன் சட்டையை பிடிக்க...
சத்தீஸ் : சரக்கா என சத்தீஷ் இன்னும் அதிர்ச்சியடைய க்ரிஷ் இருவருள்ளும் புகுந்து சத்தீஷை காப்பாற்றினான்...
க்ரிஷ் : டேய் இல்ல டா சத்தீஷ் சொல்றது உண்மை தான்...
இந்திரன் : க்ரிஷ் உனக்கும் மூளை கொழம்பீடுச்சா.. நாழு மாச கொழந்த எப்டி டா ..
க்ரிஷ் : குழந்தை உதைச்சான் டா. அத நா ரது இரெண்டு பேருமே ஃபீல் பன்னோம்.. என இடையில் கத்தவும் இந்திரன் சத்தீஷ் இருவரும் அவனை விசித்திரமாய் நோக்கினர்...
சத்தீஷ் : என்ன டா சொல்ல வர...
க்ரிஷ் : நம்ம குழந்தைங்க இன்னும் கொஞ்ச நாள்ளையே பொறக்க போறாங்கன்னு சொல்ல வரேன்... என தீவிரமாய் கூறினான்..
இந்திரன் : ஆர் யு சீரியஸ் க்ரிஷ்..
க்ரிஷ் : ஐம் டம் ஷ்வர் சீரியஸ் ... நாம இனி மேலும் தாமதிக்கிரது வேஸ்ட்டு...
சத்தீஷ் : அப்போ நம்ம ப்லன் படி நடக்கனும்னு சொல்றியா என கேட்டவனின் முகத்திலும் இப்போது அதிர்ச்சி நீங்கி தீவிரம் ஆட்சியை தொடங்கியது...
க்ரிஷ் : ஆமா.. அதுவும் நாளைக்கே...
சத்தீஷ் : பட் இதனால ப்ராப்லம் வராதே டா...
இந்திரன் : நாம இத செய்யாம போய் வர பிரச்சனைகள விட செஞ்சு வர பிரச்சனைகள் பெருசா இருக்காது டா என கை சட்டையை மடக்கி விட்டு கொண்டே கூறினான்...
க்ரிஷ் : ஹ்ம்.. நாளைக்கே எல்லா உண்மைகளையும் அவங்க கிட்ட சொல்லிடளாம்.. எது நடந்தாலும் நாம பாத்துப்போம்... என சகோதர்கள் மூவரும் ஒரு பார்வையை பரிமாறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றனர்..
அனைத்தும் மீண்டும் தன் முதல் புள்ளியிலிருந்து தொடங்க இருந்த அந்த நாள் ஆரவாரம் இன்றி இனிதாய் விடிந்தது... விடியும் முன்னே க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷ் வீட்டில் பலவாறு ஏதேதோ கதையடித்து விட்டு அனு திவ்யா ப்ரியாவை அவர்களுடன் அழைத்து சென்றிருந்தனர்...
பெரியவர்களால் அவர்களை தடுக்க முடியவில்லை.. மூவரும் தாங்கள் பிடித்த பிடியிலே நின்றதால் பற்பல அறிவுரைகளை கூறி பெண்கள் மூவரையும் அனுப்பி வைத்தனர்...
இவையாவையும் அறிந்து மூவரையும் தடுக்கும் நிலையில் நம் மற்ற நாயகர்கள் இல்லை... ஏனெனில் அவர்கள் அனைவரும் விழிக்கும் முன்னே இம்மூவர் அவரவர் ஜோடி புறாவுடன் தப்பித்து விட்டனர்...
அலட்டலின்றி எட்டு மணிக்கும் மேலாக கீழே வந்த நாயகர்கள் அனைவரும் கோவன்கள் மற்றும் நாகனிகளை காணாமல் கேள்வி எழுப்பி விட்டு பதில் தெரிந்ததும் தாம் தூமென குதித்தனர்...
அஷ்வன்த் : ஏன் ப்பா இப்டி விடியகாலைல எங்க போற ஏது போறன்னு கேக்காமையா அனுப்புனீங்க...
இரமனன் : எங்கள என்ன டா பன்ன சொல்ற.. மூணு பேரும் ஒத்த கால்ல நின்னு தூக்கீட்டு போய்ட்டானுங்க...
முகில் : ஏன் தாத்தாஸ் நீங்களுமா ஒன்னும் சொல்லல...
வேலு தாத்தா : அப்டியே உன் அண்ணனுங்க நா சொல்றத கேட்டுட்டு தான் மறுவேலை பாப்பானுங்க.. போ டா
மரகதம் பாட்டி : சரி விடுங்க டா.. பேராண்டிங்க ஆசை பட்டானுங்க... அதான் அனுப்பீட்டோம்...
ரக்ஷா : ஆனா எங்க ஏதுன்னு கூடவா கேக்கல பாட்டி ...
முரளி : அவனுங்க அதுக்கு வாய திறக்கனுமே டா.. நீங்க பதறாதீங்க.. எதுவும் ஆகாது.. அவங்க நல்ல படியா வந்துடுவாங்க... என ஆறுதல் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்...
ஆனாலும் நம் நாயகர்களுக்கு இருந்த ஏதோ ஒரு பதட்டம் குறையவில்லை... இவ்வாறு எங்கு சென்றனர் என்றும் தெரியாமல் ஃபோன் அடித்தால் அதையும் ஏற்காமல் தங்களிடமும் கூறாமல் சென்ற கோவன்கள் மூவரையும் வருத்தெடுத்து கொண்டிருந்தனர்... மணி மதியத்தை தொடவிருந்த கத்திரி வெயில் நேரத்தில் வீட்டிற்குள் தன் மயங்கியிருந்த மனையாளை கைகளில் மென்மையாய் ஏந்தி கொண்டு நுழைந்தான் இந்திரன்..
அவன் பாதி சட்டை இரத்தத்தால் நனைந்திருக்க திவ்யாவின் உடையும் நனைந்து போயிருந்தது.. அதை முதலில் கவனித்த சந்திரன் தாத்தா பதறி போய் இந்திரா என கத்த மற்ற அனைவரும் பதட்டத்துடன் என்னவோ ஏதோவென ஓடோடி வந்தனர்..
அவனின் பின் இன்னும் பதட்டத்தை கூட்டவே மயங்கியிருந்த ப்ரியாவை தூக்கி கொண்டு சத்தீஷ் அதே இறுக்கமான முகத்துடன் உள்ளே வந்தான்...
அவன் பின் க்ரிஷ் அனுவை பார்த்தவாறே அவளை ஏந்தி கொண்டு உள்ளே வந்தான்...
அதோடு க்ரிஷ் இந்திரன் சத்தீஷிற்கும் உடலில் பலமான காயங்கள் இருந்தது... அனைவரும் பதட்டத்தில் அவர்களை கண்களாலே அலசி அனு திவ்யா ப்ரியாவின் மேடிட்ட வயிறு சுருங்கி பழைய நிலைக்கு சென்றிருந்ததை கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்..
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே.. ஐம் ரியலி சாரி... இந்த யூடி ரொம்ப மொக்கையா இருக்கும்.. ஐ டின்ட் மீன் டு டூ லைக் திஸ்... பட் என்னால முடியல.. ஃப்ரன்க்கா சொல்லனும்னா திடீர்னு FB ய எப்டி கொண்டு போறதுன்னு எனக்கு தெரியல.. அதாவது இந்த பார்ட்ட (இரட்சகன்கள் மற்றும் பராக்ரம வீரன்களின் பிறப்பு) மட்டும் சொல்றேன்... சம்த்திங் ரொம்ப இழுக்குறேனோன்னு தோனுது.. டக்கு டக்குன்னு தான் காமிக்கனும்னு நினைக்கிறேன்... பட் அதுலையும் ஏதோ மிஸ்ஸாகுர மாரியே இருக்கு.. என்னோட மைண் செட்ட இப்போதிக்கு என்னால மாத்த முடியல... அதனால குறை தெரிஞ்சா மன்னிச்சிக்கோங்க... எப்பவும் காரணம் சொல்லி எக்ஸ்க்யூஸ் கேக்குர மாரி நா சொல்றது எனக்கே புடிக்கல... பட் இது ஒரு கடமை.. உங்க கிட்ட நா தெரிவிச்சு தான் ஆகனும்.. ஹ்ம் ஓக்கே இதயங்களே.. முடிஞ்ச அளவு என்ன மாத்திக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு எனக்கே தெரியல... நாளைக்கு யூடில பாப்போம்.. டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro