Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 29

அவர்களை சுற்றி இருந்த மரங்களுக்கிடையே ஒரே நேரத்தில் பயங்கரமாய் சீரும் ஓசைகள் வலு பெற ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட மித்ரன் வருண் அருண் ஆதவ் நாழ்வரும் ஒரே நேரத்தில் அவரவர் மிருக உருவத்தை தத்தெடுத்து ஆகாயத்தை நோக்கி பறந்தனர்...

யாளி வம்ச வீராங்கனைகள் காற்றில் ஒரு முறை அவர்களின் வாள்களை சுழற்றி அதன் வேகத்தையும் ஜொளிப்பையும் கண்டதும் ஒரு ஏளனப்புன்னகையுடன் போருக்கு தயாரென தயாராய் வருவோரை எதிர்த்து நின்றனர்...

நாகனிகள் மூவரும் அவரவர் சக்திகள் உயிர் பெற்று விண்ணில் அனு கரு நீல ஒளியிலும் திவ்யா நீல நிற ஒளியிலும் ப்ரியா வெண்ணிற ஒளியிலும் பறந்தவாறு கண்களாலே வருவோரை கொல்ல காத்திருக்க.. நம் சஹாத்திய சூரர்களுக்கு சமமாய் ரக்ஷவும் அவனது வாளுடன் " எவன் தான் வரான்னு நானும் பாக்குறேன் " என எதிர்த்து நின்றான்...

ஆரவாரம் இன்றி பலமாய் எம்பி குதித்து அவர்கள் முன் வந்து நின்றான் ஓநாய் உருவத்திலிருந்த விஞ்ஞவெள்ளன்... அவனுக்கு மேல் தன் நீண்ட இறெக்கைகளை நீட்டி விரித்து கொண்டு ஆகயத்திலே ஒரு டைவ் அடிப்பதை போல் ஒரு சுற்று சுற்றி விட்டு சென்றான் இறெக்கைகளுள்ள ஓநாய் உருவத்திலிருந்த இரண்டாம் விஞ்ஞவெள்ளன்...

இரண்டாம் விஞ்ஞவெள்ளன் காற்றை கிளித்து எம்பும் முன் அவனது நெஞ்சிலே தன் ஒரு காலால் இடித்து மறு காலால் அவன் முகத்திலே ஒரு எத்து விட்டான் அஜய்...

இதை சற்றும் அவன் எதிர்பார்க்காததால் அடி தொண்டையிலிருந்து குரூரமாய் ஊளையிட்டான்... அவனது அந்த குரூர ஊளை நம் நாயகர்களே எதிரிபாராத வகையில் வேதபுரத்து காட்டின் அடர்ந்த பகுதியிலிருக்கும் எண்ணிலடங்கா ஓநாய்களை சுரண்டி எழுப்பி விட்டது...

இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் எதிர்பார்க்காத ஓநாய் விஞ்ஞவெள்ளன் சற்றே பின் வாங்க முயற்சிக்கும் முன் தூர கேட்ட அந்த பல ஓநாய்களின் ஊளை சத்தம் அவனது இதழில் எகத்தாளமான புன்னகையை பூக்க செய்தது...

மிக அருகில் ஒரு சேர கேட்ட ஊளைகளை உணர்ந்து அனைவரும் அத்திசையில் திரும்பி பார்க்க .... அதிர்ச்சியில் நேரம் கடத்துவது வீண் என்பதாய் சீரி வந்த நாகமனிதன் ஒருவனை தன் வாளால் தாக்கி பின் தள்ளி முன்னோக்கி சென்றாள் தான்யா...

அவளின் தாக்குதலை எதிர்ப்பதை போல் சட்டென சிறுத்தை புலியின் உருவத்தில் மிதரவர்தனன் தான்யா மீது பாய தன் காலை மடக்கி கீழே குனிந்த தான்யா தன் வாளால் மிதரவர்தனின் வயிற்று பகுதியில் கீற அது சற்றே தவறி அவனது காலின் மேல் விழுந்தது...

இந்த திடீர் தாக்குதலில் சுழன்றடித்து கீழ் விழுந்த மிதரவர்தனன் எழும் முன் அவனது அடிப்பட்ட இடத்திலே தன் வாளால் மீடும் ஒரு வெட்டிட்டான் ரனீஷ்...

அதில் அதிக சினமுற்ற மிதரவர்தனன் ரனீஷ் அசந்த நொடி அவன் மீது பாய இதை சற்றும் எதிர்பார்க்காத ரனீஷோ தவறி கீழே சரிந்து அவன் வாளை தவற விட்டான்...

அவன் கரத்தை விட்டு பிரிந்த வாள் சீரி சென்று ஒரு புதருக்குள் நுழைய தன்னை பற்றி சிந்திக்காத ஐலா உடனே மரத்தின் கிளையிலிருந்து குதித்து அந்த வாளை தேடவென்றே ஒரு புதருக்குள் நுழைந்தாள்..

அதை கண்டதும் சேவனும் மயூரனும் அவளுடனே கீழே குதிக்க மயூரன் சட்டென அவனது வெண்ணிற இறெக்கைகளை விரித்து சேவன் கீழே விழும் முன் பிடித்து கொண்டு பத்திரமாய் தரையிறங்கினான்...

நம் நாயகர்கள் எதிர்பார்க்கும் முன் அவர்களை ஒநாய்களும் நாகமனிதர்களும் சுற்றி வளைத்திருந்தனர்...

யாளி வம்சத்து வீராங்கனைகளும் ராகவ் ராம் மிதுன் மற்றும் ரக்ஷவும் நாகமனிதர்களை விளாசி கொண்டிருந்தனர்...

அஜய் மித்ரன் வருண் அருண் ஆதவ் அவர்களுடன் அனு திவ்யா ப்ரியா என இவர்கள் பறக்கும் விஞ்ஞவெள்ளன் மற்றும் மிதரவர்தனனையும் எதிர்த்து போரிட்டனர்...

சஹாத்திய வம்ச ஓநாய் விஞ்ஞவெள்ளன் மற்றும் சிறுத்தை புலி மிதரவர்தனனையும் எதிர்த்து நாகமனிதர்களையும் எதிர்த்தனர்... என்ன தான் இவர்கள் வெவ்வேறு ஆட்களுடன் மூச்சு விடவும் நேரமின்றி போரிட்டாலும் அனைவரின் கண்களும் ரக்ஷவை நொடிக்கு நொடி தீண்டி கொண்டு அவன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே இருந்தது...

அதே போல் அவன் பாதுகாப்பை முதலணி நாயகர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் எச்சரிக்கையுடன் இருந்து உறுதி படுத்தி கொண்டே அவனுக்கே தெரியாமல் யாரேனும் பின்னிருந்து தாக்க வந்தால் அவர்களை மடிய வைத்தனர்...

ரக்ஷவின் மனம் உள்ளுக்குள் ஒரு சிறிய பயத்துடன் கதக்களி ஆடினாலும் அவன் கரங்களில் பிணைந்திருந்த வாளை அவன் விடுவதாய் தெரியவில்லை... பராக்ரம வீரன்கள் எதற்கும் அசராமல் அனைவரையும் எதிர்த்தனர்...

அங்கு இவ்வனைத்து காட்சிகளையும் ஆச்சர்யமும் திகிலும் கலந்து பார்த்து கொண்டிருந்தது வான்மதி மட்டுமே...

தீரா ஐலாவை கண்களாலே வலை வீசி தேடி கொண்டிருந்தாள்... அவள் தான் எலியை தேடும் பூனை போல் புதருக்கு புதர் தாவி கொண்டிருக்கிறாளே...

அங்கு இப்போது நம் நாயகர்கள் மூன்று அணியாய் செயல் பட்டு கொண்டிருந்தனர்.. முதலில் ஆகாய அணியில் மித்ரன் வருண் அருண் ஆதவ் அஜயும் அவர்களை அனைத்து திசைகளில் இருந்தும் காத்து போரிட நாகனிகளும் இருந்தனர்...

இரண்டாம் அணியாக ரக்ஷவ் ராகவ் ராம் மிதுன் மற்றும் அவர்களை காத்தருளியவாறே யாளி வீராங்கனைகளும் இருந்தனர்...

மூன்றாம் அணியாக ஓநாய் உருவில் கார்த்திக் சிறுத்தை உருவில் அஷ்வித் மற்றும் சஹாத்திய சூரர்கள் நாகமனிதர்களை எதிர்த்து அதோடு மிதரவர்தனன் மற்றும் விஞ்ஞவெள்ளனை அவர்களை தாண்ட விடமால் போரிட்டு கொண்டிருந்தனர்...

நொடிக்கு நொடி போர் தீவிரமடைந்து கொண்டே இருக்க பராக்ரம வீரன்களும் ரக்ஷவும் சோர்வடைய தொடங்கினர்..

ரனீஷ் வாளின்றியே காலும் கையையும் வைத்து கொண்டே
கை கால் அனைத்திலும் பலத்த அடிகளை பெற்றவாறே போரிட்டு கொண்டிருந்தான்...

மிதரவர்தனன் மற்றும் விஞ்ஞவெள்ளன் இருவருக்கும் உடலில் இரத்த காயங்கள் அதிகரிக்க அதிகரிக்க கோவமும் வெறியும் பெருகி கொண்டே இருந்தது...

ஒரு கட்டத்தில் இருவருமே மனித உருவை எடுத்து விட அவ்விருவரை விட்டும் கார்த்திக் மற்றும் மிதுனை தூர அனுப்பிய சஹாத்திய சூரர்களுள் சரணும் ரவியும் அவர்களுடன் வாள் வீச்சில் களமிறங்கினர்...

அர்ஜுன் முகில் அஷ்வன்த் ரித்விக் ரனீஷ் மற்றும் வீர் அவர்களை நாகமனிதர்களும் பராக்ரம வீரன்களும் நெருங்க அனுமதிக்காமலே தங்கள் வாளால் சண்டையிட்டு கொண்டிருந்தனர்...

அவ்விருவரிடம் வாள் சண்டையிடும் அளவு பராக்ரம வீரன்கள் கற்று கொள்ளவில்லை என்பதே அவர்களின் பயமாய் இருந்தது...

நாகனிகள் மூவருக்கே சக்திகள் குறைந்தாலும் மித்ரன் வருண் அருண் ஆதவ் மற்றும் அஜயை ஆகாயத்தில் அம்மூவரால் தான் காக்க இயலும் என்பதால் தங்களை சோர்வடைய விடாமல் வேண்டுமென்றே அவர்களே அவர்களின் கோவத்தை தூண்டும் விதமாய் கோவன்களின் மரண நினைவுகளை எண்ணி கொண்டு அவர்களின் வலுவை ஏற்றினர்...

நாகமனிதர்கள் எவ்வளவு தான் சக்தி கொண்டவர்களாய் இருந்தாலும் அவர்கள் யாளி வீராங்கனைகள் முன் ஒன்றும் பெரிதில்லையே...

நாகமனிதர்கள் அனைவரும் மடிந்திருக்க மீதம் ஒருவனேயான யமதர்மன் கார்த்திக்கின் கோரமான கடியால் திண்டாடி கொண்டிருந்தான்...

அஷ்வித்தும் கார்த்திக்கும் யமதர்மனை பந்தை போல் உருட்டி கொண்டு விளையாடினர்... இடையில் ரக்ஷவும் அவர்களுடன் நின்று கொண்டு யாராவது தாக்க வந்தால் அவர்களை தாக்குவதும் இல்லையென்றால் யமதர்மன் கார்த்திக் மற்றும் அஷ்வித் இருவரிடமிருந்து தாவும் போது இவன் இடையிலே குரங்காய் நின்று அவனது வாளால் அவரை ஏதோ துணியை கிளிப்பதை போல் கிளித்து கிளித்து பயிற்சி எடுத்து கொண்டிருந்தான்...

நம் வான்மதிக்கு அதை காண கவலையாய் இருந்தாலும் கயலின் கரத்தையே அறுத்ததும் யட்சினிகளின் தாயான லீலாவிற்கு அவன் செய்த பெரும் துரோகத்தை எண்ணி நல்லா வாங்கட்டும் என கரித்து கொட்டினாள்...

ரவி மற்றும் சரணை வாள் சுழற்சியில் எதிர்பது கடினமே என அறிந்திருந்தாலும் மிதரவர்தனனும் விஞ்ஞவெள்ளனும் துணிந்து முன் வர நாழ்வருக்கும் இடையில் பெரும் போர் நிகழ்ந்தது...

விஞ்ஞவெள்ளனின் வெள்ளி வாள் ரவியின் கையை சரெக்கென கிளிக்க அவன் கரத்தில் சிவப்பு காயத்திற்கு பதில் வெள்ளி காயமொன்று விழுந்தது... அதை கோவத்துடன் கண்ட ரவி பொருக்காமல் அவன் வாளை அதிவேகமாய் சுழற்றி விஞ்ஞவெள்ளனின் மீது ஓங்கினான்...

அதை தடுக்கவென தன் வாளை முன்னுயர்த்திய விஞ்ஞவெள்ளன் ரவியின் அழுத்தமான பலத்தை தாங்க இயலாமல் காலை நிலத்தில் அழுத்தி பிடிக்க ஒரு முறை ரவி தன் வாளை மேலுயர்த்தி மீண்டும் அழுத்தத்துடன் ஓங்கி அவன் வாளில் இடித்ததில் விஞ்ஞவெள்ளன் எழும் முன்னே கால் நொடிந்து கீழே விழுந்தான்...

அதை கண்டு சரண் விஞ்ஞவெள்ளன் ரவியின் காலின் மீது வாளை ஓங்கும் முன் இவனது வாளை குறுக்கே விட்டு தடுத்து மிதரவர்தனனிடமிருந்த கவனத்தை சிதற விட... மிதரவர்தனன் குரூர புன்னகையுடன் சரணின் கழுத்தில் வாளை ஓங்கும் முன் இக்காட்சியை கண்டிருந்த ரக்ஷவ் ஓடி வந்து மிதரவர்தனனே எதிர்பார்க்காத நேரம் தன் கால்களை மடக்கி கீழே சரிந்து சரணின் கீழ் மண்ணை தேய்த்து கொண்டே சென்றவன் தன் தலையை தாண்டி செல்லும் வாளை தன் வாளால் தட்டி விட்டு அதே சுழற்றில் நொடியை தவற விடாமல் வாளை திருப்பி மிதரவர்தனனின் வயிற்றில் வெட்டி அவன் முதுகையும் பதம் பார்த்தான்....

இதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் ஒரு நொடி அதிர்ந்து தான் போயினர்... தன் முதுகை அதிர்ச்சியுடன் தொட்டு பார்த்த மிதரவர்தனன் சற்றே குறி தப்பியிருந்தாலும் தன் உயிரே போயிருக்குமே என பெருமூச்சு விட்டு விட்டு கொலை வெறியுடன் ரக்ஷவை நோக்கி திரும்பினான்...

ரவி இப்போது அவன் காலால் மிதரவர்தனனை எட்டி உதைக்க கீழ் காலை தேய்த்து கொண்டு அமர்ந்திருந்த ரக்ஷவின் மேல் மிதரவர்தனன் விழ போக " ரக்ஷவ் எந்திரி டா " என சரண் கத்த ரக்ஷவ் சுதாரித்து எழும் முன்னே தன் வாய்ப்பை தவற விட எண்ணாத மிதரவர்தனன் அவன் வாளை சற்றே பின்னோக்கி இழுத்து ரக்ஷவின் முதுகில் சொருக போன நேரம் இடையில் விஞ்ஞவெள்ளனை தாக்கவென்று கீழே விழுந்த சரண் தன் காலாலே மிதரவர்தனின் வாளில் இடிக்க... அவன் ரக்ஷவை தொடும் முன்னே அவனை இழுத்து பிடித்து தன் பலம் கொண்டு தூக்கி எறிந்தாள் மது...

அதே நேரம் சரியாக ரனீஷின் வாளை கண்டு பிடித்து புதரை விட்டு நிமிர்ந்தாள் ஐலா... அவளுக்கு முன் மிதரவர்தனன் போய் விழுந்திருக்க வாளை எடுத்ததும் மலர்ந்த முகத்துடன் எழுந்த ஐலா அவனின் கோர முகத்தை கண்டு அலரியே விட்டாள்...

அனைவரும் பதறி போய் அவள் புறம் திரும்ப மிதரவர்தனன் ஐலாவை பிடிக்கும் முன் அவள் திரும்பி பின் புறம் ஓட அவளை பாய்ந்து பிடிக்க எண்ணியவனின் மீது உறுமி கொண்டு பாய்ந்தான் அஜய்...

மிதரவர்தனன் பின் விழவும் இவன் இறெக்கையை விரித்து மேலே பறந்து மீண்டும் அதே வேகத்துடன் வந்து மிதரவர்தனின் மீது பாய்ந்து அவன் கழுத்தை கடித்தான்...

நாகனிகளின் சக்திகள் வடிந்து மூவரும்  சட்டென வடிய மூவரும் ஆகாயத்திலே தள்ளாட தொடங்கினர்... அதை கண்டு தொலைவில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து நாகனிகள் மூவரையும் தன் வெள்ளி சக்தியால் சக்திகளை இழக்க வைத்திருந்த சாம்பராவை கண்டு சிரித்தான் விஞ்ஞவெள்ளன்.. எவருமே எதிர்பார்க்காத வகையில் பறக்கும் மிதரவர்தனன் ஐலாவை சட்டென பிடித்து விண்ணை நோக்கி பறந்தான்...

ஐலாவின் அலரலில் திரும்பி பார்த்த அஜயை தூக்கி இரு சுழற்று சுழற்று தூர வீசினான் கீழிருந்த மிதரவர்தனன்... அஜய் தடுமாறி விஞ்ஞவெள்ளனை தன் பற்களால் குதரி கொண்டிருந்த பறக்கும் சிறுத்தையான அருணின் மீது இடித்து இருவருமாய் அப்பக்கம் கீழே விழுந்தனர்...

அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டு ஐலா என பெருங்குரலெடுத்து கத்த... அதே நேரம் நாகனிகள் மூவரும் கீழே விழுந்ததால் விண்ணில் பறந்து கொண்டிருந்த மித்ரன் வருண் ஆதவ் மூவரும் அவர்களை பிடிக்க கீழே தாவினர்...

ஐலாவை காக்க எவரும் ஆகாயத்தில் பறக்கவில்லை என்பதை உறுதி செய்ததும் பறக்கும் விஞ்ஞவெள்ளனும் தப்பிக்க முணைந்த அந்த நேரம் கீழிருந்து எம்பிய அருண் அவனது வாளாள் விஞ்ஞவெள்ளனின் உடலை காயப்படுத்த அவன் அலரிய அலரலில் பறக்கும் மிதரவர்தனன் வேறு வழி இன்றி இப்புறம் திரும்பிய அந்த நேரம் கீழிருந்து அவனை நோக்கி எம்பி பறந்து வந்த அஜய் ஒரே இழுப்பில் ஐலாவை அவனிடமிருந்து பிரித்து அவளை அவனோடு அணைத்தவாறே கீழே வர பறக்கும் மிதரவர்தனன் சுதாரித்து அஜயை தாக்க வரும் முன் எங்கிருந்தோ வந்த தீ சுழல் ஒன்று பிழம்பாய் உருவெடுத்து மிதரவர்தனனை தூர தள்ளியது...

அனைவரும் அதிர்ச்சியில் எங்கிருந்து இந்த தீ வருகிறதென பார்க்க அருணும் ஏதோ ஒரு திசையில் திரும்பியவன் சட்டென தன் இறெக்கைகளை மடித்து கீழே தரையிறங்கிட அடுத்த நொடி ஒருங்கே வந்த நீரும் காற்றும் கலந்த ஒரு சூறாவளி விஞ்ஞவெள்ளனை அதிவேகத்தில் சுழற்றி மீண்டும் எழுந்து வந்த பறக்கும் மிதரவர்தனன் மீதே எறிய அந்த நீர் கலந்த காற்று சுழல் கலந்த அடுத்த நொடி ஒரு பயங்கரமான சத்தத்துடன் அவர்களை நோக்கி வந்த தீ பிழம்பு இருவரையும் தூக்கி எரிந்து சாம்பலாக்கியது...

கீழே இரத்த கிளரியாய் இருந்த அனைவரும் அதிர்ந்து போய் மறு திசையில் காண அங்கோ சிகப்பும் நீலமும் வெண்மையும் கொண்ட மூன்று இறெக்கைகள் மெதுவாய் அசைய அந்த சிகப்பு நீலம் மற்றும் வென்மை நிற கண்கள் பளபளத்தது...

நாகனிகளும் இப்போது தங்களை நிலை படுத்தி மேலே காண அனைவரின் எண்ணத்திலும் ஏதேதோ சிந்தனைகள் ஓட ஓநாய் விஞ்ஞவெள்ளனும் சிறுத்தை புலி மிதரவர்தனனும் " கோவன்களாக இருக்க வாய்ப்பே இல்லை " என அலர புழுதி மறைந்ததும் கோவன்களின் அதே உருவில் முகமிருக நின்றிருந்தது அவர்களின் மகவுகளான அதிரதீர இரட்சகன்கள் சித்தார்த் ருத்ராக்ஷ் மற்றும் ஆதியன்த்

மாயம் தொடரும்...

இந்த யூடி எப்டி இருக்கு ஓக்கே தான... தென் நீங்க எல்லாரும் ரொம்ப நாள் காத்திருந்த (காத்திருந்தீங்களான்னு சரியா தெரியல.) அந்த எப்பி அடுத்த எபில ஸ்டார்ட் ஆகுது... புரியலையா.. நீங்க எலாரும் போட்டு ஆரம்பத்துல குடைஞ்ச கேள்விகளுக்கான பதில்.. கோவன்களுக்கு இருவது வர்ஷம் முன்னாடி என்ன தான் ஆச்சு அப்டீன்னு தெரிஞ்சுக்க போற ஃப்லஷ்பக்க நாளைக்கு ஆரம்பிக்க போறோம்... யாஹுஹுஹு... எப்டியோ ஃபர்ஸ்ட் ஃபலஷ்பக் வர வன்ட்டனே அது வர எனக்கு சந்தோஷம் தான்... ஓக்கே இதயங்களே... நாளைய யூடியோட உங்கள சந்திக்கிறேன்... நல்லா தூங்குங்க... குட் நைட்... டாட்டா...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro