Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 27

கயலின் உதிரம் தரையை நனைக்க வெட்டு பட்ட இடத்தையே இறுக்கி பிடித்தது அவ்வுருவம்.. கயல் வலியில் அலரிட அவ்வுருவம் சிரித்து கொண்டே அதன் முக்காடை அகற்றவும் இக்காட்சியை கண்ணீர் ததும்ப பார்த்து கொண்டிருந்த யட்சினிகள் மூவரும் அதிர்ச்சியுற்றனர்...

அவ்வுருவம் நித்யா ஆருண்யா மற்றும் அதித்தியின் வளர்ப்பு தந்தை யமதர்மன்.... விந்வார்ந்த யஷ்டிகளின் அடியேன் அவன்..

சாகாரகாந்தன் : ஹாஹா சபாஷ் யமதர்மா அப்பெண்டிரின் உதிரத்தை குடுவையில் சேகரித்து வா டா என் மகனே என இவன் உற்சாகமாய் எழுந்து நின்று கத்தினான்...

யமதர்மன் : அவ்வாறே ஆகட்டும் ஐயனே... என கயலை தூர தள்ளியவன் அவளின் உதிரத்தை சேமிக்க தொடங்கினான்... கயல் கீழே விழும் முன் ஓடி வந்து அவளை தாங்கினாள் சித்ரியா...

கயலின் ஆடையும் நொடி பொழுதில் அவள் உதிரத்தினால் நனைய சித்ரியா கயலை உடனே கோட்டையின் உட்புறம் அழைத்து சென்றாள்... நம் நாயகிகளும் கயலை தேடி அங்கே ஓடியிருந்தனர்..

இப்போது அனைவரும் கனத்த மனதுடன் இருக்க நடு சிம்மாசனத்தில் வலுக்கட்டாயமாய் அமர வைக்கப்பட்டிருந்த ஆருண்யா நிகழ்ந்த அட்டூழியங்களினால் ஆத்திரமடைந்து திமிறினாள்...

அவளின் கண்கள் என்றுமில்லாது இன்று அழகிய நீல நிறத்தில் ஒளிர அமைதியே உருவாய் இருந்தவள் அந்த அவையே அதிரும் படி கர்ஜித்தாள்...

ஆருண்யா : தவறிழைக்கிரீர்கள் சாமான்யர்களே.. தாம் பெரும் தவறிழைக்கிரீர்... அப்பாவை தமக்கு என்(ன) வினை புரிந்ததால் இக்கொடிய தண்டனை விதித்தீர்கள்.. அவளின் உதிரத்தை கொண்டு என்(ன) யாகம் செய்ய உள்ளீரோ..

அருளவர்தனன் : தமக்கையின் தைரியம் தமக்கும் தொற்றி கொண்டது போலவே ஆருண்யா.. ஹ்ம் நீவீர் கூறிவில்லையெனினும் யாம் ஈட்ட உள்ளது யாகமே தானடி... அதுவும் எய்யாகமென அறிவீரா.. இன்னும் ஒரெ திங்களில் நிகழவிருக்கும் தம் மரண தினத்தின் யோகபரிபூஜன தின யாகம் என கூற இம்மூவருக்கும் யோகபரீபூஜன யாகம் எதற்காய் செய்யப்படுகிறதென தெரியாவிட்டாலும் அது மிகவும் வீரியமுள்ளதென அறிந்திருந்தனர்...

அதித்தி : எம் மூவரை அடக்கியாளும் காலங்கள் கடந்து விட்டதடா.. உமக்கான பேரழவி தொடங்கியாயிற்று..

விஞ்ஞவெள்ளன் : ஹா.. தமது தைரியத்தை எண்ணி அகமகிழ்கிறேன் இளவரசியே.. ஆயினும் இது யமக்கான பேரழிவல்ல... உம் பஞ்சலோகத்தவர்களின் அழிவு காலம்...

நித்யா : ஊழி(யுகம்) கடந்தாயினும் விதி மாறப்போவதில்லை .. ஆறாயிரம் வருடாந்திரங்கள் முன் தம் வம்சத்தினருக்கு என்(ன) நிகழ்ந்ததோ அதுவே முன்பிற்கும் அதிக வலிமையுடன் மீண்டும் நிகழ உள்ளது.. தாம் இம்மண்ணில் மடிய தான் போகின்றீர்..

சாகாரகாந்தன் : இந்த ஊழ்(முறை) அவ்வாறு எதுவும் நிகழப்போவதில்லை... நிச்சயம் யட்சினி சர்ப்ப வம்சத்தவர்களே வெற்றியை ஈட்ட போகிறோம்...

நித்யா : ஹான்.. அதிரதீர இரட்சகன்களாகவும் பராக்ரம வீரன்களாய் இருந்த பொழுதே தம்மை மண்ணில் புதைத்தவர்கள் இப்பொழுது அதீத சக்தி படைத்த முக்கோவன்களின் மகன்களாகவும் ... வீரதீர சஹாத்திய சூரர்களின் மகன்களாகவும் இருக்கையில் தோல்வியை தழுவுவர் என சொப்பனம் (கனவு) காண்பது நிச்சயம் வீண் தானே...

கூடியிருந்த மக்கள் அனைவரும் " கோவன்கள் மற்றும் சஹாத்திய சூரர்களின் மகன்கள் " என கேட்டதில் " தாங்கள் செவி சாய்த்தது மெய் தான் அப்போது நமக்கு விடிழு காலம் பிறக்கும் காலம் நெருங்கியாயிற்று " என்று ஏதோ புது தைரியம் கிடைத்ததை போல் கண்களில் எதிர்பாப்ர்ப்புடன் அவர்களை நோக்கினர்...

மிதரவர்தனன் : நிறுத்தடி உம் உளறல் மொழிகளை... நீர் பறைவது மெய்யாகவே இருப்பினும் அவர்களையும் மிஞ்சிய பரம சக்தி எம்மிடம் உள (உள்ளது)

அதித்தி : உளறல் மொழி பறைவது எம் சகோதரியல்லடா நீர் தான்... அதிசக்தி படைத்த கோவன்களையும் மிஞ்சிய சக்தி உம்மிடம் உள்ளதோ... செவி மடுப்பது உம்மை போன்ற மூடர்கள் அன்று..

மகரகாந்தன் : ஏய் கோவன்களின் மகவுகளை எதிர்க்க அதே கோவன்களின் மகவுகளை எம்மால் எதிர்க்க செய்திட இயலுமடி... கோவன்கள் மாத்திரமா... சஹாத்திய சூரர்களின் உதிரத்தையே எம்மால் பராக்ரம வீரன்களுக்கு எதிராய் திருப்பிட செய்ய இயலும்...

" இல்லை... இல்லை அதற்கு துளியும் வாய்ப்பன்று.. வீரர்களின் மகவுகள் இப்புவியின் பால் வெறுப்பை உமிழ மாட்டர்.. " என திடீரென கேட்ட ஒரு பெண்மணியின் பயம் கலந்த உரத்த குரல் ஒன்று ஒளித்தது...

அங்கு வெளுத்திருந்த ஒரு பழைய சேலை அணிந்தவாறு நிற்க திராணி அற்று போய் இரு காவலாளிகளின் பிடியில் தலையை தூக்கி நிமிர்ந்து பார்க்க இயலாமல் தொங்க விட்டபடி தள்ளாடி கொண்டு நின்றிருந்தார் அப்பெண்மணி...

அவரின் குரலை கேட்டதிலே அதிர்ந்து போன யட்சினிகள் மூவரும் ஒரு வித புது அதிர்வுடன் நிமிர்ந்து அத்திசையில் நோக்கினர்...

சாம்பரா : உமது வாய் மொழிகள் என்றும் நிகழ்ந்ததாய் சரித்திரமில்லை என நன்றாய் அறிந்தும் எதற்காய் பிதற்றுவதை மாத்திரம் விட மறுக்கிறாய் லீலா என வக்கிரமத்தை குரலில் நீவி விட்டு கேட்டாள்...

அவளின் வக்கிரமம் நிறைந்த குறலை அடையாளங்கண்டு அவளிருக்கும் திசை புறம் மெல்ல தன் தலையை உயர்த்தினார் நம் யட்சினிகளை ஈண்டு இத்துனை வருடங்களாய் அம்மூவரை காப்பதற்காய் சர்ப்பலோகத்திலே அடைந்து கிடந்து தன் வாழ்வை அழித்து கொண்ட வீரத்தாய் லீலாவதி

வேதபுரம்

வீசும் குளிர் காற்றில் என்றும் இரு பற்களுக்கிடையே அடங்கும் கார்கூந்தல் க்ளச் இல்லாத காரணத்தினால் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை வீணடிக்காமல் பறந்து அலையாடி கொண்டிருந்தது...

ப்ரியா கண்களை மூடி எதற்காகவோ காத்து கொண்டு அமர்ந்திருந்தாள்... அவளருகில் அனு ஆழ்ந்த தியானத்தில் தன்னை மறந்து சிந்தனைக்குள் உளாவி கொண்டிருந்தாள்..

அவர்கள் முன் திவ்யா அதே போல் கண்களை மூடி யாருக்காகவோ காத்திருந்தாள்...

அவர்களையே எதிர்பார்ப்புடன் நோக்கியவாறு பவியும் வர்ஷியும் ஒரு பாத்திரத்தில் நீருடனும் ஒரு காலியான கண்ணாடி குடுவையுடனும் நின்றிருந்தனர்...

தான்யா அவர்களையே உருத்து நோக்கி கொண்டு நின்றிருந்தாள்.. ஐலா இவர்கள் சொல்வதனைத்தும் உண்மையா என்ற குழப்பத்திலே அவர்களருகில் அமர்ந்திருந்தாள்... வீட்டு வேலைகளை முடித்து விட்டு வேகவேகமாய் மது மோகினி நிரு மாடியேறி வர மருத்துவமனையிலிருந்து ஷிஃப்ட்டை முடித்து விட்டு வேகவேகமாய் வீட்டை அடைந்தனர் வீனா ரக்ஷா இருவரும்...

ரக்ஷா : ஹே என்னடி ஆச்சு எதாச்சும் தெரிஞ்சுதா...

பவி : கூல் மச்சி... இப்பவர எதுவும் தெரியல...

வீனா : ஃபு இவளுங்க ஹெல்த்த பத்தி கேர் பன்னிக்கவே மாற்றாளுங்க டி.. இப்டி விடிஞ்சதுல இருந்து கண்ண மூடி அசையாம உக்காந்துர்ந்தா இவளுங்க உடம்பு என்னத்துக்கு ஆகுறது... என அவர்களின் உடல் நிலையை எண்ணி கோவம் கொண்டாள்...

மது : வேற வழியும் இல்லையே டி.. அவளுங்க நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கே வந்தாளுங்க... என அம்மூவரை பார்த்து கவலை தேய்ந்த குரலுடன் கூறினாள்...

தான்யா : ப்ரியா திவ்யா கூட பரவால்ல அனுக்கு இது ரொம்பவே கஷ்டமா இருக்கும்.. அவ உடல வருத்திக்கிட்டு இந்த தியானத்துலையே உக்காந்துருக்கா...

மோகினி : சரி தான்யமா... அவங்க மூணு பேரோட முயற்சி நல்ல படியா நிறைவேறனும்னு வேண்டிக்குவோம்..

உண்மையில் இவர்களை எதிர்பார்த்ததை விடுத்தும் அம்மூவர் புரியும் செயல்கள் மிகிவும் வீரியமுள்ளதாய் தெரிந்தது ஐலாவிற்கு..

நாகனிகள் மூவரும் அவரவர் கரத்தை இறுக்கி பிணைத்து மூவரின் மணக்கண்ணின் மூலமாக சர்ப்பலோகத்தை உணர முயன்று கொண்டிருந்தனர்...

ப்ரியா அவள் விழிகள் மூலம் அவளின் சக்திகளை பயன்படுத்தி எதிர்காலத்தை பார்க்க திவ்யா அவள் காணும் அதே எதிர்காலத்தை ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்றி காண முயல அனு அவ்விருவரின் கவனத்தையும் சிதறவிடாது அதே நேரம் ப்ரியாவினால் தங்கள் மனக்கண்ணிலும் பிரதிபலிக்கும் எதிர்கால காட்சியில் காட்சி படும் மனிதர்களின் மனதை வாசிக்க முயன்று தோர்த்து கொண்டிருந்தாள்...

க்ரிஷ் இறந்ததாலோ என்னவோ அனு அவளது சக்தியை மொத்தமாய் தலை முழுகியிருந்தாள்... அன்றைய கசப்பான உணர்வுகளை மீண்டும் வெளி கொணர முயலாதவள் அச்சம்பவத்தை நினைவு படுத்துவதை போலிருந்த அனைத்தையும் அவளிடமிருந்து தூர தள்ளி நிறுத்தினாள்... அவளுக்கு இறைவன் அளித்த அற்புத அதிசய வரங்கள் என போற்றப்படும் முதல் நாகனி என்னும் பட்டத்தையும் அவள் சக்திகளையும் தான்... ஆனால் விதியோ சதியோ அவளின் இதயத்திருடன் யுவா அவளை விட்டு நினைவுகளில் கூட அகலவில்லை...

திடீரென ஒரு மின்னல் இடித்த அரவத்தில் சட்டென மூவரும் கண்களை பிரித்து மூச்சை இழுத்து இழுத்து விட்டனர்... கண்கள் ஆர்ப்பரிக்க மூவரின் பாதையும் ஒரு திசையில் கதிரவன் தன் ஆட்சி முடிந்து ஆயுட்காலம் தேடும் தன் மன்னவளை நாடி மலைகளிடையே நிலமகளடி சாயும் அந்த இரம்மியமான காட்சியின் முன் சீரிப்பாய்ந்து மறைந்தது மூன்று புள்ளிகள்...

அதை இவர்கள் கூர்ந்து நோக்கும் முன் மற்ற நாயகிகள் பதட்டத்துடன் இவர்களை அனுகியிருந்தனர்...

பவி : ஹே என்னாச்சு டி.. ரிலக்ஸ் ரிலக்ஸ்...

வீனா : வர்ஷி மூணு பேருக்கும் தண்ணிய குடு உடனே என்க மூவரும் அவள் கொடுத்த நீரை மடமடவென விழுங்கினர்...

நிரு : என்னாச்சு டி.. எதாவது பிரச்சனையா...

திவ்யா : ரொம்ப பெரிய பிரச்சனை.. அ..தோட... நம்ம.. நம்ம என ஏதோ கூற முயன்றவளின் வதனத்தில் பல விதமான மகிழ்ச்சியின் சாயல் இரேகைகள் தாண்டவமாடியது...

மோகினி : பொருமைமா.... ஒன்னும் இல்ல பொருமையா சொல்லு...

அனு : அது சொல்ற அளவுக்கு இல்ல அண்ணி... அது தந்த அதிர்ச்சி அன் மகிழ்ச்சியோட வீரியமே இன்னும் எங்க கண்கள விட்டு மறையல என ஏதோ ஒரு மாயையிற்கு கட்டுண்டதை போல் கூறினாள்...

மற்றவர்கள் மூவரையும் குழப்பமாய் பார்க்க...

ப்ரியா : அங்க என்ன ஆச்சுன்னு நானே காட்டுறேன் ... திவி என அவளை பார்க்க தலையசைத்து அவள் கரத்தை பிடித்து கொண்ட திவ்யா ப்ரியாவுடன் அனுவை பார்க்க தன் சகோதரிகளுக்கு தன்னாலான உதவியை செய்ய முன் வந்து இருவரின் கரத்தையும் தன் இரு கரத்தால் பிடித்து கொண்டாள் அனு...

இவர்கள் மூவரும் நிற்பதற்கு இடமளித்து மற்றவர்கள் நகர்ந்து நிற்க.. மூவரின் விழிகளும் அவரவரது ஆத்ம நிறங்களை தத்தெடுத்து இத்துனை வருடங்கள் பின் அவ்வளவு தெளிவாய் ஜொளித்தது... ஐலா அதை வாயை பிளந்து உடல் சிலிர்த்து போய் நோக்கினாள்...

அனுவின் கருநீல நிற காந்த விழியுள்ளிருக்கும் காந்தம் அவள் தங்கைகளை அவள் கட்டுப்பாட்டிற்குள் வைத்தது... திவ்யாவின் நீல நிற அழகிய விழி ப்ரியாவின் கண்களுள் உள்ள காட்சியை அனுவின் சிந்தனைகள் வழி அறிந்து மேலே பரப்பியதூ... ப்ரியா அவள் கண்ட காட்சியை அவள் கண்கள் முன் மீண்டும் நினைவுக்கு வர வைத்தாள்... கைகளும் காற்றில் மிதக்க தொடங்கி மூவரும் அந்தரத்தில் பறக்க தொடங்கினர்...

மூவரை சுற்றியும் ஒரு நீல நிற வளையம் சூழ்ழ்து கொள்ள மூவரின் வழியே பாய்ந்த நிறங்கள் ஒரே புள்ளியில் இணைந்து மேலே படம் போல் உருவெடுத்தது...

பலாயிரக்கணக்கான நெடுந்துயர்ந்த மரங்கள் மதிலாய் சுற்றி வளைத்து வெளி உள்ளோரை உள்ளே அனுமதிக்காமல் தன்னுள்ளே காத்து நின்றது... அதனிடையே புழுதி அனலாய் பறந்து கொண்டிருக்க இவர்களின் எதிர்பார்ப்பிற்க்கெல்லாம் மிஞ்சிய அதி வேகத்துடன் சீரி பாய்ந்தன சிறுத்தைகளும் புலிகளும் ஓநாய்களும்... அவர்களை சுற்றி உலகை உளுக்கி கொண்டு சஹாத்திய சூரர்களை தங்கள் மீது ஏந்தி கொண்டு தன் ஒவ்வொரு அடியிலும் எதிரிகளை சாதாரணமாய் அசைத்து பார்த்து கொண்டு வந்தது எட்டு யானையாளிகள்...

அதன் வேகத்தை மிஞ்ச இயலாமல் காற்றும் புயலாய் உருவெடுக்க தொடங்கிய அதே வேளையில் அவர்களை எதிர்த்து மனித மிருக உருவில் ஓடோடி வந்தனர் யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள்... அவர்களின் பின்னோ நாகமனிதர்கள் சீரி கொண்டு வந்தனர்... அஜானுபாகுவான நாப்பதடி உயரத்தில் விண்ணை தொட்டு விடும் நோக்கத்தை பிறப்பிலே கொண்டதை போல் ஊதா நிற மயக்கும் கண்களுடன் ஒரு மிருகமுமிருந்தது...

இவைகள் அனைத்திற்கும் எதிராய் தங்கள் அற்புத வாள்களை ஏந்தி கொண்டு நாகங்களின் மீது இறுகிய வதனத்துடன் வெற்றி தங்களுக்கே என்ற ஆழ்ந்த நப்பபிக்கையுடன் எதிரிகளை விளாசி கொண்டு வந்தனர் யாளி வம்சத்தின் அசாதாரண வீரம் கொண்ட எட்டு மாபெரும் வீராங்கனைகள் ...

அவர்களின் மேலோ நம் நாகனிகள் அவர்களின் அதே சக்திகளுடன் எதிர்த்து வந்தனர்...

இவை அனைத்திற்கும் நேரெதிரில் அதிவேகத்தில் சிகப்பு நீலம் மற்றும் வென்மை நிறத்தில் மூன்று பெரிய விலங்குகள் தங்கள் முதுகில் யாரையோ சுமந்து கொண்டு புழுதி பறக்க ஓடி வருவது மங்களாய் தெரிய பார்க்கும் நாயகிகளால் தெள்ளத்தெளிவாய் கூற முடிந்தது அது சிம்மயாளிகள் தான் என்று...

ஆயினும் அச்சிம்மயாளிகள் கோவன்களினது சிம்மயாளிகளை விடுத்தும் வித்யாசமாய் இருக்க அவ்வாறெனில் இது சிம்மயாளிகளை போலுள்ள வேறொரு பரினாம வளர்ச்சி அடைந்த மிருகமோ என புருவத்தை சுருக்கும் போது அந்த சிம்மயாளிகளின் மீது பயணித்து வரும் மூவரின் விழிகளும் சிகப்பு நீலம் மற்றும் வென்மையிலிருப்பது அவர்களின் இதயத்தை நடுங்க வைத்தது...

சிம்மயாளிகளை இறைவனே வந்தாலும் அவைகளை கோவன்களையன்றி வேறு எவராலும் அடக்க முடியாதே என ஒரு பக்கமிருந்த சந்தேகம் இப்போது இவ்விழிகளை கண்டு " கோவன்களா " என அதிர்ச்சியாக அடுத்த நொடியே அது இல்லையென அச்சிம்மையாளிகளே நிரூபித்தது...

அடுத்த சில நொடிகளில் திடீரென அக்காட்சி மாறிட... அதே சிம்மயாளிகளின் மீது அமர்ந்திருந்த அம்மூவர் மொத்த எதிரி கூட்டத்தினரிற்கும் எதிரே நம் சஹாத்திய சூரர்கள் நாகனிகள் யாளி வம்ச வீராங்கனைகள் மற்றும் பராக்ரம வீரன்களின் முன் நின்றிருந்தனர்...

சிம்மயாளிகளின் நிறமே அப்புழுதியில் அவர்களை காட்டி கொடுத்தது.. இருந்தும் யாவர் வதனமும் தெளிவில்லை...

சிம்மயாளிகள் போன்ற அவ்விலங்குகளின் உறுமல் குழை நடுங்க வைக்க அதனூடே அம்மூவரின் " இப்புவியின் கோவன்களை அழித்தாலும் அம்மூவரின் வம்சா வழிகளில் தோன்றிய மூவ்வீரட்சகன்களான எம்மூவரை தாண்டியே உம்மால் சஹாத்திய வம்சத்தையும் யாளி வம்சத்தையும் நெருங்க இயலும் " என்ற கர்ஜனை இரட்சகன்கள் இம்மண்ணை விரைவிலே அடைய உள்ளனர் என்பதை தெளிவாய் எடுத்து காட்ட அக்காட்சியை பொய்க்காது நாகனிகளின் கூரான கண்களிலிருந்து தப்பித்த அம்மூன்று கரும்புள்ளிகள் புயலென சுழன்றடித்தது ..

வேதபுரத்தின் மண்ணில் கந்தர்வ காட்டின் முன் இருவது வருடங்கள் பின் முதல் முறையாய் தங்கள் காலடியை அவர்கள் பதித்த அடுத்த நொடியே ஷேஷ்வமலையில் இருந்தே ஒரே யத்ரவரத்தின் அத்துனை வெள்ளை இலைகளும் தீ பற்றி எரிந்திட அவ்வூர் முழுவதும் திடீர் மழை பொழிந்து சுறாவளி காற்றடித்து வெயில் நிலையை மாற்றி காலநிலையே சுழற்றி கண்ணிமைக்கும் நொடி பொழுதுகளில் சர்ப்பலோகம் பூலோகமென இரண்டிற்கும் மையமாய் அமைந்துள்ள வேதபுரத்தின் வானிலை மாற இவை அனைத்தையும் தங்கள் விழிகளுள் எந்தளவிற்கு நிறப்ப முடியுமோ அந்தளவிற்கு வியப்பை நிறப்பி மாடியிலிருந்து பார்த்து கொண்டிருந்த நாயகிகளின் எண்ணத்தை பொய்க்காமலே வேதபுரத்திற்குள் நுழைந்தனர் நமது இரட்சகன்கள்..

வெவ்வேறு திசைகளில் இருந்த சஹாத்திய சூரர்களுக்கும் தர்மன் ஐயாவிற்கும் சர்ப்பலோகத்தில் சிக்கி தவித்த வளரி பாட்டிக்குமென இப்போது நான்கு திசையிலும் இரட்சகன்களின் வரவு அதன் வீரியத்தை காட்டி அனைத்தையும் தலை கீழாய் மாற்ற அனைவரும் வெற்றி புன்னகையுடன் அவ்விண்ணை ஏறிட்டனர்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... டூ டேஸ் லேட் பன்னிட்டேன்... ஈஈஈஈஈ கவலப்படாதீங்க... அடுத்த யூடி நைட்டே வந்துடும்... அதுக்கு முன்னாடி முடிஞ்சாலும் குடுத்துடுறேன்... சரியா டாட்டா...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro