மாயம் - 26
தலைவனின் வருகைக்காய் காத்து கிடந்து சோர்வுற்ற கதிரவன் தன் நிலமகளடி சாய்ந்து கண் மூடிட தலைவிக்காய் வெகு தூரம் பயணித்து வந்து அவளின் நிழலின்றி சோர்ந்து வென்மேகத்தினுள் தோய்ந்து மறைந்து கொண்டான் அன்றைய மதி...
அதே நிலையில் தன் தலைவனை இன்னும் கண்டிராது கண்களில் கண்ணீர் முட்ட அப்பாரை மீது சிலையென அமர்ந்திருந்தாள் ஆருண்யா...
ஆளை மயக்கும் மை விழி கண்ணீர் சிந்தி அவனுக்காய் காத்திருக்க.... அவளவனின் வருகையோ நீண்டுக் கொண்டே இருக்க... இன்னும் அவன் வந்தபாடில்லை...
மன்னவனுக்காய் காத்திருப்பவளை தோள் தொட்டு நிலை கொண்டுவந்த ஆருண்யா.. தன் காத்திருப்பும் விணானதாய் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருக்கு இட்ட அணையை திறந்து உணர்த்தினாள்.. அவ்விருவரையும் வெறுமையான உணர்வுடன் வந்தணைத்துக் கொண்டாள் அதித்தி.. " நம் காத்திருப்பை அறிந்தால் நிச்சயம் நம்மை தேடி வருவர்... காத்திருப்போம்... நம் விதி முடிவுபெரும் வரை காத்திருப்போம்... வெல்வது விதியா.. அல்ல நம் காதலா என்று பார்த்துவிடுவோம்..." என்று கூறினாள்....
வெகு தொலைவில் நிலவை வெறித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தமர்ந்த இருவரின் விழிகளும் எவரையோ தேடி தேடி அலைந்து சோர்ந்திருந்தது...
அவர்கள் வந்ததை திரும்பாமலே அறிந்திருந்த சித்தார்த் அவர்களை நோக்கி திரும்பினான்...
சித்தார்த் : தாம் வினவவுள்ள வினாக்களுக்காய் காத்திருக்கிறேன் இளவல்களே..
ருத்ராக்ஷ் : எவ்வினாவிற்கும் யாம் விடை வேண்டவில்லை சித்து.. இதற்கு மாத்திரம் விளக்கமளி.. இன்னமும் எத்துனை நாழி நாம் நம் வீட்டினரை விடுத்து தனித்து இருத்தல் வேண்டும்... என்றவனின் முகமே காட்டி கொடுத்தது சித்தார்த்தின் மீதிருந்த சினமெல்லாம் எப்போதோ வடிந்து விட்டதென்று...
சித்தார்த் : ஹ்ம் தந்தைகள் மூவரும் நம் மூவரை எதற்காய் முவ்வேறு திசையில் பிரித்து வாழ செய்தனர் என்பதற்கான காரியத்தை(காரணத்தை) என்(ன) வினை செய்தும் எம்மால் கண்டறிய முடியவில்லை.. ஆதலின் யாம் காத்தருள்வதே நலம்...
ஆதியன்த் : நமது இளவல்கள் ஒன்பதுவரையும் அக்கயவர்கள் கிடத்தி சென்றுள்ளனர் என்பதையறிந்தும் எவ்வாறடா காத்தருள கூறிகிறாய்...
சித்தார்த் : யமக்கு வேறு வழியும் அன்று அத்து.. அத்துடன் நமது இளவல்கள் ஒன்பதுவர் அன்று.. பனிரெண்டு என திரும்பி நின்றான்... ருத்ராக்ஷும் ஆதியன்த்தும் என்ன என்பதை போல் அவனை பார்த்தனர்...
சித்தார்த் : ஆம்.. சித்.. சித்ரியா வே..வேதி.த்யா மற்றும் எழி..லி.னியாவும் உடன் அங்கு தான் இருந்து வருகின்றனர் என அவன் கடினப்பட்டு கூறிவிட்டு திரும்ப அவன் நினைத்ததை போலவே ருத்ராக்ஷ் மற்றும் ஆதியன்த் அசைய மறைந்து சமைந்து நின்றிருந்தனர்..
ஆதியன்த் : மெ..மெய்யாவே பறைகிறாயா சித்து.. நம் இள..வ.ல்கள்.. என கண்களும் முழுவதும் ஏக்கத்தை தேக்கி கேட்க ருத்ராக்ஷும் அதே போல் கண்கள் முழுவதும் ஒரு வலியை தேக்கி அவனை நோக்க கண்ணீர் தேங்கிய கண்கள் சிரிக்க புன்னகைத்த சித்தார்த் ஆம் என தலையசைத்து அமோதித்தான்...
சகோதரன்கள் மூவரின் இதயத்தில் பரவசம் ஒன்று வேகமாய் பரவ ஒரே நேரத்தில் மூவரும் தாவி அணைத்து கொண்டனர்... கண்ணீரை துடைத்து பம்மி கொண்டிருந்த நிலவை ஏறிட்டயவர்களுள் பெருமூச்சு விட்ட சித்தார்த்
சித்தார்த் : நாம் தேட வேண்டிய இடத்தினை இன்னமும் அடையவில்லை போலும்... நமக்கான காலம் நம்மை நெருங்கியதன்றோ... நம் பாதை நேர் வழியில் திரும்பிடும்... அதுவரை காத்திருப்போம்... நமக்கான பாதையை நிச்சயம் அவர்களே வகுத்திருப்பர்... அதை கண்டறிவோம் என்றதுடன் மூவரின் விழுகளும் தெளிவடைந்தது....
தங்கள் மூவருக்காகவே தினம் தினம் இரவு பகல் பாராமல் மூன்று ஜீவன்கள் லிட்டர் கணக்கை கூட பார்க்காமல் கண்ணீர் சிந்துவதை அறியாமல் இருக்கும் இம்மூவரும் அம்மூவரின் காதலை ஏற்பரா... விதியின் கைகளில் முடிவு
கண்கள் கூசும் ஒளி அச்சிறை முழுவதிலும் பரவிட பயத்தில் அழுது சிவந்திருந்த கன்னத்தை மெல்ல துடைத்தவாறு மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள் மாயா...
அவளை அன்றி காலை விடிந்தும் கூட இன்னமும் மற்ற எவரும் கண் திறக்கவில்லை...
தன் முன் நேற்று கண்கள் முன்னே தரதரவென இழுத்து செல்ல பட்ட அதே பெண் இன்னும் இரு பெண்களுடன் நிற்பதை கண்டு மாயாவின் கண்களில் ஒரு பயம் பரவியது...
வேதித்யா : எம்மை கண்டு அச்சமடைய வேண்டாம்.. யாம் தமக்கு உதவவே இவ்விடம் விரைந்துள்ளோம்.. என அவள் பொருமையாய் கூற மாயாவிற்கு தான் அவள் கூறியது பாதி புரிந்தும் மீதி புரியாத நிலை...
மாயா : நீ..ங்களா..ம் யா..ரு.. என இவள் பயத்துடனே வினவ...
சித்ரியா : அச்சமடையாதீர் சகோதரியே.. யான் சித்ரியா.. இவள் வேதித்யா.. அவள் யமது இளவல் எழிலினியா..
இப்பெயர்களை எங்கோ கேட்டிருக்கிறோமே என்று மாயாவின் மூளை லைட்டாய் பயம் விலகி சிந்தனை பக்கம் செல்ல பார்க்க சட்டென உள்ளே வந்த மிதரவர்தனனின் வருகையில் மீண்டும் பயத்திறைக்குள் பதுங்கியது...
மிதரவர்தனன் : பொழுது புனர்ந்து மதிய வேளை வர உள்ளது இன்னமும் என்ன நித்திரை வேண்டி கிடக்கிறது தமக்கு
தீரா : மிதரவர்தனன் மிதரவர்தினியா மாறி நம்ம ஹீரோயின்ஸுக்கு மாமியார் பொஷின வெலைக்கு வாங்கி முழு மாமியாரா நிக்கிரத நல்லா பாருங்க..
எழில் : பொருத்தருளுங்கள் தலைமை அமைச்சரே.. இன்னும் சில நாழிகையில் அவர்களை எழுப்பி வெளியடைய செய்கிறோம்... தாம் சினம் கொள்ள வேண்டாம்.. தையை கூர்ந்து பெண்டிர்(பெண்கள்) வீற்றிருக்கும் இடங்களுக்கு அறிக்கையின்றி உள் நுழையாதீர்.. தமக்கே புரிபடும் என அவள் கை கூப்பி பணிந்து கூறினாள்...
என்ன தான் கோவமாய் இருந்தாலும் பெண்கள் உள்ள இடத்தில் இவ்வாறு வருவது தவறென உணர்ந்த மிதரவர்தனன் " விரைந்து பணியை முடிய செய்யுங்கள் " என உத்தரவிட்டு விட்டு வெளியே சென்றான்...
மிதரவர்தனனின் அதட்டலில் மாயா செவுரோடு பசை வைத்ததை போல் ஒட்டியிருந்தால் என்றால் நம் மற்ற நாயகிகளோ திடுக்கிட்டு மயக்கத்திலிருந்து பாதி தெளிந்திருந்தனர்...
மயக்கம் தெளிந்தும் தெளியாமல் அவர்கள் தள்ளாடவும் அதை கண்ட வேதித்யா உடனே சிறைகளின் செவுரில் கை வைத்து.. " கருங்கல் சீடர்களே .. மதி தெளிவடைய நீர் பாய்ச்ச வேண்டுகிறோம் " என கூற சில நொடிகளில் அச்சிறை செவுருகளின் இடையே ஏதோ உருளும் ஓசைகள் வெளி வர கற்களில் இருந்து மழை போல் நீர் தூரலாய் பொழிந்து நாயகிகளின் மயக்கத்தை முழுதாய் தெளிய வைத்தது...
நிலமை உணர்ந்ததும் ஏழ்வரும் திடுதிபுவென எழுந்து நிற்க... கயல் மாத்திரம் இன்னும் மாயாவின் அருகில் மயக்கத்தில் இருந்தாள்...
நந்தினி : யாரு நீங்க என்ன இடம் இது... நாங்க எப்டி இங்க வந்தோம்... எங்க அம்மா அப்பாலாம் எங்க.. நாங்க எப்டி நனஞ்சோம்.. நீங்க ஏன் இங்க இருக்கீங்க.. ஏதோ பெரிய சத்தம் கேட்டுச்சே என " நாங்காள் யார் " என்ற கேள்வியை தவிர்த்து ஒரு நிமிடத்தில் இவ்வனைத்து கேள்விகளையும் கேட்டிருந்தாள் அவள்...
எழில் : பொருமை பொருமை.. ஏன் இவ்வாறு பதைபதைக்கிரீர்கள்.. தாம் வீற்றிருப்பது பாதால சிறையில்... யாம் மூவரும் இங்கு பணிபுரியும் பணிப்பெண்டிர்கள்(பணிப்பெண்கள்).. இது பூலோகத்தின் பிரதியை போல் உருவான சர்ப்பலோகம்
நவ்யா : சர்ப்பலோகமா என்ன சொல்றீங்க நீங்க...
ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நாயகிகள் எவருக்கும் ஒன்றும் புரியவில்லை... தன்னால் மெதுவாய் இப்போது கயல் கண் விழிக்க மீண்டும் அவளால் ஒரு வினாவிடை ஆற்றல் நடந்து முடிந்தது...
சித்ரியா : தாம் எதற்கும் ஐயமெய்த அவசியமில்லை.. இவ்வுடைகளை மாற்றி விட்டு வெளியேறுங்கள்... தமக்காய் காத்திருக்கிறோம் என சில உடைகளை கொடுத்து விட்டு மூவருமாய் வெளியே சென்றனர்...
மாயா : இங்க என்ன நடக்குதுன்னே தெரியல டி.. நேத்தே வேதித்யா இங்க வந்தா.. அவ உள்ள வரத்துக்குள்ள ஒரு பாதி மலை மாரி இருந்த ஒருத்தன் அவள அடிச்சு இழுத்துட்டு போனான்... ஆனா திரும்ப நம்மள பாக்க வந்துருக்கா...
நித்ரா : அப்போ இந்த பொண்ணுங்கள நம்பலாம்ங்குரியா டி...
இக்ஷி : அவங்கள பாக்க தப்பா எதுவும் தெரியலடி.. ஏதோ ஒரு நெருங்கிய சொந்தம் மாரி தான் தெரியிது..
மதி : நீ உடனே பாசம் வைக்காத டி.. இதுல ஏதோ பெரிய கதை பின்னாடி இருக்கு.. நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும்..
கயல் : எனக்கு அப்டி எதுவும் தோனலையே என இவள் சாதாரணமாய் கூற மற்ற எட்டு பேரும் சற்றே வித்யாசமாய் நோக்கினர்...
வைஷு : சரி பயமாவே இருந்தாலும் முகத்துல காட்டிக்காதீங்க.. பாத்துக்கலாம்.. கெளம்புங்க..
காலை கதிரவனின் செங்கதிரால் வேர்வையில் பாதி குளித்தும் விடாமல் கேசம் அலை பாய காட்டில் ஓடி கொண்டிருந்தான் ரக்ஷவ்... அவன் பின்னே ராகவ் மற்றும் அஜய் மிதுன் ஓடி வந்து கொண்டிருக்க அவர்கள் பின் வந்து கொண்டிருந்த மித்ரன் வருண் அருண் ஆதவ் சற்றே வேகத்தை குறைத்து ஓடி வந்து கொண்டிருக்க அவர்கள் பின் கார்த்திக் அஷ்வித் மற்றும் ராம் நின்று நின்று ஓடி வந்து கொண்டிருந்தனர்...
அவர்கள் பின்னோ குச்சியை வைத்து விரட்டியவாறு முகிலும் அர்ஜுனும் ஓடி வந்து கொண்டிருந்தனர்...
இப்படி ஒரு வாரம் ஓடியதால் அதில் பழகி ரக்ஷவ் முன்னே ஓடி கொண்டிருந்தான்... ராகவ் அஜய் மற்றும் மிதுன் மூவரும் காவல் வேலையில் இருப்பதாலும் அதற்காய் என்றும் உடற்பயிற்சி செய்வதாலும் சுலபமாய் ஓடி கொண்டிருந்தனர்... மித்ரன் வருண் அருண் மற்றும் ஆதவ் அவ்வளவாய் உடற்பயிற்சி செய்து பழக்கமில்லாததால் சற்றே மெதுவாய் ஓடி வந்து கொண்டிருந்தனர்.. அஷ்வித் கார்த்திக் மற்றும் ராம் உடற்பயிற்சி பக்கமே சில வாரங்களாய் செல்லாதலால் அவ்வப்போது சோர்வுற்று நிற்கவும் முடியாமல் முகில் மற்றும் அர்ஜுனிடம் அடியும் வாங்க முடியாமல் ஓடி கொண்டிருந்தனர்..
இவர்கள் ஓட்டப்பந்தையத்தை முடிக்கவும் அவர்கள் முன் கைகளை பின் கட்டியடி சிரித்தவாறு நின்றிருந்தனர் அஷ்வன்த் மற்றும் வீர்..
சுற்றி பல பச்சை மரங்களும் பச்சை புல்வெளிகளும் சூழ்ந்து இயற்கையும் அவர்களுடன் பயனிக்க.. அந்த அழகான சூழலில் அஷ்வன்த் வீர் முன்னிலையில் நாயகன்களும் ரக்ஷவும் அமர்ந்து மூச்சு பயிற்சியில் இருந்தனர்...
இப்படி எதிலும் கவனத்தை சிறத விடாமல் மூச்சில் மாத்திரம் தம் கவனத்தை வைத்திருப்பவர்களால் எந்த காரியத்திலும் எது நடந்தாலும் கவனம் சிதறாமல் சரியாக நேர்த்தியாய் செய்து வெற்றியை ஈட்ட முடியுமென நேற்றே ரனீஷ் இவர்களுக்கு பாடம் எடுத்திருந்தான்... அதன் விழைவே இப்பயிற்சி...
மூச்சு பயிற்சி முடிந்து எழுந்ததும் நம் அஷ்வித் கார்த்திக் மற்றும் மிதுன் கூட சற்றே உற்சாகமாய் உணர இப்போது வாள்களுடன் சரணும் ரவியும் வந்தனர்... அவர்கள் பின்னே குறுவாள்களை ஏந்தாயவாறு ரித்விக் மற்றும் ரனீஷ் வந்தனர்...
நிலப்பிறிவின வீரன்களுக்கும் ரக்ஷவ்க்கும் வாள் பயிற்சியும்.. அகாயப்பிறிவின வீரன்களுக்கு குறுவாள் பயிற்சியும் அழகாய் தொடங்கியது..
அப்போதே நீலி உறக்கம் கலைந்து அழகாய் வெளியே பறந்து வந்தாள்... சேவனும் மயூரனும் மரத்தின் கிளையில் அமர்ந்து காலார பேசி கொண்டிருந்ததை கண்டவள் சேவனின் அருகிலே ஒரு அழகிய குட்டி பெண் அமர்ந்திருப்பதை கண்டாள்...
அப்போதே சேவன் பிறையுடன் அங்கு வந்திருந்தான்.. மற்றவர்களிடம் செல்லாமல் முதல் வேலையாக மயூரனிடம் " ஏன் பிறையை நீ தன்னந்தனியா இவ்வளவு தொலைவு பயனித்து வர கூறினாய் " என சண்டையிட்டு கொண்டிருந்தான்...
மயூரன் திருத்திருவென விழித்து கொண்டிருக்க பிறையோ வாயை மூடி சிரித்து கொண்டிருந்தாள்...
தன் இறெக்கைகளால் சீரி வந்து சேவனை இடித்த நீலி அவன் கிளையை விட்டு தடுமாறி கீழே விழவும் உடனே அவன் ஆடையை இறுக்கி பிடித்து மேலே பறந்தவாறே அலேக்காக தூக்கினாள்...
சேவன் : அடியே நீலி... என்(ன) செய்கிறாயடி..
நீலி : நீர் எங்கனம் சென்றிருந்தாய் சேவா.. தமக்கு நமது இருப்பிடம் வந்தடைய ஒற்றை தினம் தேவைப்பட்டதோ என கோவமாய் கேட்க...
பிறை : அட சினம் கொள்ள வேண்டாம் அண்ணியாரே.. எம்மாலே தம் மன்னவர் கோட்டையை அடைய தாமதப்படுத்தினார் என கூற சேவனோ " ஆஹா இவ எத ஒளற போறாளோ தெரியலையே... இவ ஓட்டவாய விட்டு இன்னும் நீலி கோவத்த ஏத்தி விற்றுவாளோ " என்பதை போல் அவளை பார்க்க அவளோ " நான் பாத்துக்குறேன் பாஸ் " என்பதை போல் கண்கள் மூடி அசுவாசப்படுத்தி பறந்து வந்தாள்...
நீலி : அண்ணியாரா.. தாம் யாரம்மா...
பிறை : யான் தமது மன்னவரின் தங்கையானவள் அண்ணியாரே...
மயூரன் : அத்துடன் எமக்கு மனைவியாய் அமைய போகும் துணைவி தங்கையே என கூற சேவனை அப்படியே காற்றில் விட்ட நீலி பறந்து வந்து பிறையின் இரு தோளையும் பிடித்து சர்ரென ஒரு சுற்று சுற்றினாள்..
நீலி : ஹான் வரவேற்கிறேன் அண்ணியாரே... தாம் எம் தமையன் பறைந்ததை விடுத்தும் மிகவும் அழகாய் உள்ளீரே என உற்சாகத்துடன் கூறியவளுக்கு சேவனின் அலரல் காதை எட்டவில்லை... அவன் கீழே விழும் முன் மயூரன் பறந்து சென்று காப்பாற்றி மேலே தூக்கி வந்தான்...
பிறை : அன்று அன்று அண்ணியாரே... தாமே பேரழகாய் இருக்கிறீர்.. எமது கண்ணே பட்டு விடும்.. என இரு கண்களையும் சிமிட்டு சுண்டு விரலினான் தன் கருமையை எடுத்து நீலியின் காதோரம் வைத்து விட்டாள்..
அவளின் சுருக்கிய அழகான கண்கள் நீலிக்கு மிகவும் பிடித்து விட நொடிகளை கை விட்டு எண்ணும் முன்னே இருவரும் நெருங்கிய தோழிகளாயினர்...
அவர்களை பார்த்து புன்னகைத்த சேவன் இப்போது போர்க்கலை கற்று கொள்ளும் நாயகன்களை ஏறிட்டான்...
சரணின் முன் ராகவ் ராம் மற்றும் ரக்ஷவ் வாள்களை பிடித்து சுழற்ற கற்று கொண்டிருந்தனர்... ரவியின் முன் அஷ்வித் மிதுன் மற்றும் கார்த்திக் வாள்களை உபயோகிக்க கற்று கொண்டிருந்தனர்...
ரித்விக்கின் முன் ஆதவ் அருண் வருண் மூவரும் குறுவாள்களை எவ்வாறு இடையிடையே பயன்படுத்துவதென பழகி கொண்டிருக்க... ரனீஷின் முன் மித்ரனும் அஜயும் அந்த குறுவாள்களால் ஒருவர் மற்றவருடன் எப்படி எப்படியெல்லாம் தாக்க முடியுமென பயிற்சி எடுத்து கொண்டிருந்தனர்...
சர்ப்பலோகம்
பணிப்பெண்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்ட நாயகிகளுக்கு ஏனோ அவர்கள் நார்னியா படத்திற்குள் உள்ள சூழலுக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு எழுந்தது...
ஏனெனில் அந்த ஆடைகள் விரிந்த பெரிய கௌன் போல் இருக்க... இடை பகுதியில் இரு பக்கமும் ஒரு துணி வெவ்வேறு வண்ணத்தில் அழகாய் வளைந்து முதுகு புறத்தில் தையிலடப்பட்டிருந்தது...
கழுத்து பகுதியில் முழுவதும் சில முத்துக்களாலும் பல வண்ண கற்கலாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது... அவர்களின் கார்கூந்தல் அனைத்தும் விரித்து விடப்பட்டிருந்ததாலோ என்னவோ அவ்வாடைக்கு இன்னும் எடுப்பாய் காட்டியது...
இவர்கள் ஒன்பது பேரும் ஒரு சேர வெளியே வர... அவர்களை போலவே சிகப்பு நீலம் மற்றும் வெண்மை நிற ஆடைகளில் மூன்று பெண்கள் வெளியேறி கொண்டிருந்தனர்..
அவர்களை யாரோ இழுத்து சென்றனர் போலும்.. இவர்கள் சற்றே எழுந்த நடுக்கத்தை மறைத்தவாறு நகர முயல சட்டென அருகிலிருந்த சிறை சாலையின் கம்பியின் இடையிலிருந்த வந்த கரமொன்று கயலின் கரத்தை பிடித்தது...
மிரண்டு போன கயல் திரும்பி பார்க்க மற்றவர்களும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்... கயலின் கரத்தை பிடித்தது வளரி பாட்டி தான்...
வளரி பாட்டி : வந்துட்டியா தாயி... உன்ன என் கண்ணால பாப்பேன்னு நெனச்சே பாக்கலையே கண்ணு... நீ எப்டி ராசாத்தி இருக்க... இவங்க இவங்க.. யாருன்னு எனக்கு தெரியுமே... ஹாஹா எல்லாரும் வந்துட்டீங்களா... வந்துட்டீங்களா... வாங்க வாங்க... ஆனா ஆனா யாரோ ஒருத்தர காணுமே... பரவால்ல அவங்களும் வந்துடுவாங்க... அவங்களும் வந்தா தான பஞ்சலோக விந்தைகளோட முழு சக்தி பெருகும்... அப்ரம் எல்லாரும் வருவாங்களே.. எல்லாரும் வருவாங்களே.. என இவர் கயலின் கரத்தை பிடித்து கொண்டு அதீத மகிழ்ச்சியில் பிதற்ற அவரின் குரலும் அவர் தோற்றமும் கயலின் மனக்கண்ணில் ஏதேதோ நிழற்படங்களை ஓடவிட மற்றவர்ளுக்கோ இலவசமாய் உடல் நடுக்கம் கொடுத்திருக்க சட்டென வளரி பாட்டியின் கரத்திலே ஒரு அடி விழுந்தது...
அந்த அடியில் சட்டென அவர் கரத்தை உள் இழுத்து கொள்ள தன் நிலை பெற்று கயல் திரும்பி பார்த்தாள்... அங்கு வளரி பாட்டியை முறைத்தவாறு வெள்ளி நிற ஆடையில் ஒரு மரத்தாலான மந்திர கோளை போன்ற தடியுடன் தன் வெண்ணிற கூந்தலை விரித்து விட்டு நின்றது விஞ்ஞவெள்ளனின் அடிமை சாம்பரா...
சாம்பரா : கூறுகெட்ட கிழவி.. என இவள் வளரி பாட்டியை கண்டு முனுமுனுக்க நம் நாயகிகளுக்கு ஏனென்றே தெரியாமல் அவள் மீது கோவம் வந்தது..
வளரி பாட்டி : அடடே வா சாம்பரா வா.. தாம் விடுதலை பெற்றதாய் விசனம் வந்ததம்மா.. ஏனடா உம்மை இன்னமும் காணவில்லை என எதிர்நோக்கினேன்... இதோ தற்போது வந்தாயிற்றே என சட்டென இகழ்ச்சியுடன் உரையாடினார்...
அனைவரும் இவரா சில நொடிகள் முன் பிதற்றியது என்பதை போல் பார்த்தனர்...
சாம்பரா : இருவது வருடாந்திரங்களாய் இந்நான்கு கருஞ்சுவர்களுள் சிறை பட்டு கிடந்தும் உமக்கு மதி கிட்டவில்லையா கிழவி...
வளரி பாட்டி : இருவது ஆண்டு காலமாய் மண்ணில் உயிரற்று கிடந்த நீயே இவ்வாறு ஆணவத்துடன் நிற்கையில் எம் வாய்மொழி அனைத்தும் உயிர்க்கும் இக்காலத்தில் எமக்கு ஏனடி மதி கிட்ட வேண்டும்... கூருக்கெட்ட கிழவியாகவே காலத்தை களித்திடுவேன் நான்
சாம்பரா : ஹ்ம் வாய்ஜாலத்தில் உம்முடன் போட்டியிட யான் இங்கு வரவில்லை... தூரப்போ என இவள் கைகளை வளரி பாட்டியை நோக்கி வீசவும் அவள் விரல் நுனியிலிருந்து வீசிய வெள்ளி துகள்கள் வளரி பாட்டி பிடித்திருந்த சிறை கதவில் சென்று பதிய அதில் வளரி பாட்டி தவறுதலாய் கை பதிக்கவும் மின்சாரம் உயிர் வரை சென்று தீண்டியது...
வளரி பாட்டி அலரி கொண்டு கீழ் விழ கயல் பதறியடித்து அக்கதவை தொடும் முன் சாம்பரா அவள் கரத்தை இறுக்கி பிடித்து வாயிலை நோக்கி இழுத்து சென்றாள்...
நம் நாயகிகள் என்ன செய்வதென தெரியாமல் முளிக்க...
வளரி பாட்டி : எமக்கொன்றும் நேரவில்லை தேவதைகளே... தாம் அவரை பின் தொடருங்கள்... அனைத்தும் நலம் பெரும் என கூறவும் இவர்களும் சாம்பராவை பின் தொடர்ந்து ஓடினர்...
மெல்ல மெல்ல இருள் சூழ்ந்திருந்த பாதாலத்தின் நுழைவாயில் வழியே மெதுவாய் ஒளி உள் நுழைய முனைய மெதுவாய் நம் நாயகிகள் அனைவரும் வெளியே சென்றனர்...
அவர்களை ஒளியை கண்டு சில வினாடிகள் கடக்கும் முன்னே மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டது... மௌனத்துடன் இருளுமே இப்போது தங்களின் ஆட்சியை தொடங்கியது....
மௌனம் ஆட்சி செய்த அப்பேரவையில் எங்கும் அகோரமாய் ஒளித்தது ஒரு பயங்கர சிரிப்பொலி.... அதனை தொடர்ந்து வந்தது இன்னும் சில சிரிப்பொலிகள்.... அங்கு திடீரென ஒளியூட்டப்பட.... பலாயிரக்கணக்கான மனிதர்கள் கூடியிருந்த மிகப்பெரிய அவையாய் காட்சியளித்தது ....
இவர்கள் ஏதோ ஒரு சோபா போன்ற இருக்கையில் வரிசையாய் அமர வைக்கப்பட்டிருந்தனர்... அவர்கள் ஒன்பது பேர் அமர்ந்தும் அதில் இன்னும் ஐந்து பேர் அமரும் அளவிற்கு இடம் இருந்தது...
நாயகிகளின் பார்வை அவ்விடத்தை இடையிட தொடங்கியது... அனைத்திற்கும் மையத்தில் மூன்று பெரிய கண்ணாடி சவப்பெட்டிகள் நேர்த்தியாய் நேர் கோட்டில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..... அதற்குள் இருப்பது அனைத்தும் வெளியில் வெறும் மாயம் தான்.... எவராலும் காண இயலாது..
அந்த பெரிய அவையில் மிக நுனுக்கமாய் அமைக்கப்பட்ட பெரும் மேடையில் பனிரெண்டு சிம்மாசனங்கள்... அதில் நடுவில் மூன்று மிகப்பெரிய சிம்மாசனங்கள்... அங்கு கூடியிருந்த மனிதர்களனைவரின் வதனத்திலும் ஒரு வித ஏக்கம்... பயம்... பரிதவிப்பு... பதட்டம்... என மகிழ்ச்சி என்ற உணர்வு இருப்பதையே மறந்தவர்கள் போலிருந்தனர்....
மனிதர்கள் என்றாலும் சற்றே வித்யாசமானவர்களாய் இருந்தனர்... கிட்டத்தட்ட அனைவரும் பழங்கால கதைகளில் இருந்து திடீரென எழுந்து இங்கு வந்து அமர்ந்ததை போல் இருந்தது...
மையத்தில் இருந்த அம்மூன்று சவப்பெட்டிகளிலும் ஒரு ஒரு அச்சு இருந்தது.. அத்துடனே அதை விழுங்க துடிக்கும் மாபெரும் சர்ப்பம்.. வானுயரத்திற்கு இருந்த ஓர் மாபெரும் உருவம் அம்மைதானத்தை மேலிருந்து பார்ப்பதை போல் சிலை அமைக்கப்பட்டிருந்தது...
அச்சிலையோ பயங்கரமான அகோர முகம் கொண்ட ஒரு அதிபயங்கரமான சர்ப்பத்தை போல் இருந்தது... அதை தான் இவர்கள் அவர்களின் பிரபுவாய் கருதுகின்றனர்.. ஒரு ஆளுயர வாளை ஏந்திய ஓர் கரும்போர்வை போர்த்திய உருவம் அச்சவபெட்டிகளை தன் பொருமையான அடிகளுடன் நெருங்கியது... ஆளுயர வாள் வாளா அல்ல கோடாரியா என்று சந்தேகத்தை எழுப்பம் அளவிற்கு இருக்க... அதனை ஏந்திவாறு வந்த அவ்வுருவம் அச்சவபெட்டிகளை நோக்கி அதிவேகமாய் ஓங்கியது..
அக்காட்சியை கண்டு தன்னிச்சையாகவே தான் அமர வைக்கப்பட்டிருந்த பெரும் சோபாவை போன்ற இருக்கையிலிருந்து பதறி எழுந்த கயல் " வேண்டாம் " என அடி தொண்டையிலிருந்து அலரினாள்...
அவள் அலரலினூடே அவ்வாளை ஜ்ஜக் என்ற பெரிய சத்தத்துடன் மூன்று சவப்பெட்டிகளிலும் சமமாய் ஓங்கி பொத்துக் கொண்டு செல்லும் அளவு வெட்டியது அவ்வுருவம்...
கூடியிருந்த மக்கள் அனைவரும் அவ்வெட்டு தங்களுக்கே விழுந்ததை போல் கண்களை இறுக்கி மூடி கொண்டனர்.. அந்த சவப்பெட்டிகள் மூன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து சிதற கயல் அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கீழே ஓடி வந்து அச்சவப்பெட்டிகளின் முன் மண்டியிட்டு காரணமின்றி கதறி அழுதாள்...
நம் நாயகிகள் அனைவரும் அவளை புரியாது நோக்க... இப்போதே அச்சவப்பெட்டிகளை நன்கு கவனித்த கயல் அதில் எவருமே இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்று திரும்பி பார்க்க அந்த அவையே நடுங்கும் அளவு அப்பெரும் மேடையில் இரண்டிரண்டு கலர் ஜெராக்சுகளாய் நடந்து வந்தனர் சாகாரகாந்தன் மகரகாந்தன் விஞ்ஞவெள்ளன் மிதரவர்தனன் மற்றும் அருளவர்தனன்...
அனைத்து மக்களும் அவர்களை கண்டு அஞ்சி நடுங்க... நம் நாயகிகளோ " மயக்கம் இன்னும் தெளியலையா ஏன் இரெண்டு இரெண்டா தெரியிரானுங்க " என தலையிலடித்து பார்த்து கொண்டிருந்தனர்...
கயலுக்கு அருகிலே கோரமாய் சிரித்து கொண்டு நின்ற அந்த உருவம் அந்த சவப்பெட்டிகளின் கட்டைகளை நோக்கி அவன் கைகளை உயரத்த அவன் கைகளிள் ஒளிர்ந்த பச்சை நிறம் அச்சவப்பெட்டிகளின் துண்டுகளையும் தொற்றி கொள்ள.. சில நொடிகளிளே அச்சவப்பெட்டிகளின் துண்டுகள் ஒன்றிணைந்து ஒரு சிம்மாசனமாய் மாறி அப்பெரும் மேடையிலே இடம் பெற இப்போது இடது புறமிருந்த ஐந்து சிம்மாசனங்களில் ஐவரும் வலது புற ஐந்து சிம்மாசனங்களில் ஐவரும் அமர்ந்து பத்து பேருமாய் கை கொட்டி சிரித்தனர்... சாம்பராவின் சக்திகளால் ராஜ உடையில் பேரழகிகளாய் அலங்கரிக்கப்பட்டிருந்த நித்யா ஆருண்யா மற்றும் அதித்தி மூவரும் வலுக்கட்டாயமாய் அங்கு இழுத்து வரப்பட்டு நடுநயமாய் இருந்த மூன்று பெரும் சிம்மாசனங்களில் அமர வைக்கப்பட்டனர்...
நாயகிகள் அனைவரும் அம்மூவரை கண்டு அதிர்ச்சியடைய அவர்களை இன்னும் அதிர்ச்சியடைய செய்வதை போல் கயலின் அருகில் நின்றிருந்த உருவம் கயல் எதிர்பாராத நேரம் அவள் கரத்தை இறுக்கி பிடித்து அதன் வாளால் அவள் கரத்தை சரக்கென கிளித்தது...
மாயம் தொடரும்...
ஹல்லோ இதயங்களே... எப்டி இருக்கு யூடி... நாளைக்கு பாப்புக்கு எக்ஸம் இருக்கு... சோ எல்லாரும் மறக்காம ப்ரே பன்னிக்கோங்க... அப்ரம் நாளைக்கு யூடி இருக்குமான்னு எனக்கே தெரியல... பாக்களாம்... நல்லா தூங்குங்க குட் நைட் .. டாட்டா..
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro