மாயம் - 25
சித்தார்த் : மெய்யாகவே எமது இளவல்கள் சர்ப்பலோகத்தில் உயிருடனுள்ளனரா என சேவனை நேருக்கு நேர் பார்த்து இவன் பதட்டத்துடன் வினவிட சேவன் ஒன்றும் புரியாமல் முளித்தான்...
சித்தார்த் : அ.. அதாவது ம்க்கும் இளவரசிகளென தாம் கோவன்களின் பெண் மகவுகளையா குறிப்பிட்டீர் என இவன் எந்த ஒரு உணர்வையும் முகத்தில் காட்டாமல் மறைத்து வைத்து கேட்க ஒரு நொடி சேவன் இவன் எப்படி அறிந்தான் என்ற அதிர்ச்சியில் அவன் முன்பு கூறிய வாக்கியத்தை மறந்தான்...
சேவன் : உ..உமக்கு ..
சித்தார்த் : மெய்யை பறைவது சிறத்தை .. கூறுங்கள் தாம் இளவரசிகளென குறிப்பிட்டது இருவது வருடங்கள் முன் கோவன்களுடனே உயிர் நீத்ததாய் நம்பப்படும் அந்த மூன்று குழந்தைகளா என கண்களில் ஆர்வத்தை காட்டி கேட்டிட சேவனாலும் மறைக்க முடியவில்லை...
சேவன் : ஆம் இரட்சகனே.. எமக்கும் இம்மெய் சில தினம் முன்பே தெரியவந்தது.. யட்சினிகளை காண சென்ற பொழுது அச்சர்ப்பலோகத்தில் மூன்று மனித பெண்டிர்கள் பிறந்தது முதல் உள்ளதாய் அறிந்து கொண்டேன்.. அவர்களை முதல் முறை கண்ட பொழுதே எமது சித்தத்தில் அது இளவரசிகளே தான் என புரிந்தது.. இருந்தும் மெய் அறியாது யாவரையும் ஏமாற்ற வேண்டாமெனவே இதை எவரிடமும் தெரிவிக்காமல் மறைத்து வைத்தேன்... என தலை குனிந்து கவலையுடன் கூறினான்...
சித்தார்த் : தாம் தலை குனிய வேண்டிய எவ்வொரு அவசியமும் அன்று.. தாம் எத்துனை பெரிய விசனத்தை கூறியுள்ளீர் .. இவ்விசனத்தால் யான் உணர்ந்த மகிழ்வே ஏன்றும் மாளாது(நீளாது).. என சந்தோஷ மிகுதியில் கத்தி கூச்சலிட்டான்...
சேவன் : ஆயின் கோவன்களின் பெண் மகவுகள் உயிர் வாழ்கின்றனர் என்பதற்காய் தாம் ஏன் இத்துனை மகிழ வேண்டும் இரட்சகனே என குழப்பமாய் வினவ சித்தார்த் அப்போதே தனது மூடத்தனத்தை எண்ணி தன்னையே கரித்து கொண்டான்...
சித்தார்த் : ஹா.. அது .. கோவன்களின் ஆண் மகவுகளுக்கு என்னானது.. என பேச்சை மாற்ற..
சேவன் : அது... அன்றே கோவன்களின் ஆண் மகவுகளை கிடத்தி செல்ல தான் யஷ்டிகள் புவிக்கு வரவளித்தனர்.. ஆயினும் கோவன்களும் சஹாத்திய சூரர்களும் குழந்தைகள் மூவரின் நிழலையும் அவர்களை அண்ட அனுமதிக்கவில்லை.. ஆனால் அம்மூன்று ஆண் மகவுகளும் உயிர் நீத்ததாய் சஹாத்திய வம்ச சூரர்கள் இறுதியில் உரைத்தனர்... நாகனிகள் கணவன்களும் அல்லாது மைந்தன்களும் அல்லாது அந்நொடியே தங்களை விட்டு பிரிந்த சிசுக்களும் அல்லாது அல்லோலப்பட்டனர்... தன் தாய்கள் அந்நொடி எவ்வளவு வலி அனுபவித்திருப்பர் என எண்ணிய சித்தார்த்தின் கண்களில் கண்ணீர் தானாய் ஊற்றெடுக்க அதை அணை கட்டி நிறுத்தியவன் சினம் தலை தூக்கிட அடுத்த வினாவை முன் வைத்தான்...
சித்தார்த் : இளவரசிகள் எவ்வாறு சர்ப்பலோகம் கிடத்தப்பட்டனர்...
சேவன் : அந்நாழிகையிலே எதிர்பாராத விதமாய் நாகனிகளுக்கு பிரசவம் நிகழ்ந்து இளவரசிகள் இப்புவியில் ஜனித்தனர்... சஹாத்திய வம்ச சூரர்கள் நாகனிகள் மூவரை காக்க முனைந்ததாலே கோவன்கள் தனித்து விடப்பட்டு பிறந்த புதிய சிசுக்களை காக்க போராடினர்.. ஆயினும் நேரம் தாழ்ந்தமையால் கோவன்கள் மடிந்ததும் இறுதியாய் உயிர் மீண்ட சாகாரகாந்தன் ஒருவன் மாத்திரம் மூன்று பச்சிளம் குழந்தைகளை கிடத்தி சென்றுள்ளான் என உள்ளுகிறேன் (நினைக்கிறேன் )..
சித்தார்த் : எமக்கு உமது வாய் மொழியிலே அன்று நிகழ்ந்த. பாதிக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் தெரிந்து விட்டது.. மீதத்தையும் கூறலாமல்லவோ..
சேவன் : தாம் எண்ணுவதை போல் இது நிகழ்ந்ததில் பாதி அல்ல இரட்சகனே.. அன்று ஒரே தினத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு பட்டியல் கூட இடலாம்... அவ்வாறிருக்கையில் யாம் உமக்கு பறைந்ததை விரல் நீட்டி எண்ணிவிடலாம்...
சித்தார்த் : ஹ்ம் வேந்தன்யபுரத்திற்கே கட்டன அமைச்சனாய் இருந்தவர்.. தம்மை ஏமாற செய்வது சற்று கடினம் தான்.. என ஒரு சிறு புன்னகையுடன் கூறினான்...
சேவன் : சரி இரட்சகனே தமது நாமம் யாது என அதே புன்னகையுடன் சிநேகமாய் வினவ
சித்தார்த் : சித்தார்த்.. சித்தார்த் நாயக் என கர்வப்புன்னகையுடன் கூறியவன் சட்டென பின் நகர அப்பெயரை உள் வாங்கியதால் சேவன் சற்றே குழம்பி நிமிரும் முன்னே அவனது அபார இறெக்கைகள் சட்டென விரிந்திட அவனை சுற்றி சூழ்ந்து மறைந்திருந்த கருப்பு துணி விலகவும் விண்ணை நோக்கிய சித்தார்த் அவனது சிகப்பு இரத்தினக்கல் விழிகளால் சேவனை கண்டு " தாம் எமக்கு செய்த அனைத்து உதவிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி " என கூறி விண்ணை நோக்கி சீரிக்கொண்டு பறந்து அத்தோடே எங்கோ மறைந்து சென்றான்...
நிகழ்ந்தவையை உள் வாங்க இயலாமல் அமர்ந்திருந்த சேவனின் மனதில் சித்தார்த்தின் அந்த சிகப்பு நிற விழிகள் மின்னி மின்னி மறைய ... அவனது சிகப்பு நிற இறெக்கைகளும் மெதுமெதுவாய் அலையாடியது...
சேவன் : இரட்சகர்களின் ஆத்ம நிறமே ஊதா என்கையில் முதலாம் இரட்சகனின் ஆத்ம நிறம் எவ்வாறு சிகப்பு நிறமாய் இருக்கும் என அதிர்ச்சியுடன் சிந்தித்தவனுக்கு க்ரிஷ்ஷின் சிரித்த முகம் சட்டென வந்து செல்ல " அதே கண்களல்லோ " என சிந்தித்த சேவன் எச்சிலை கூட்டி விழுங்கினான்...
நிகழ்ந்த அனைத்தையும் அசை போட்டு தான் மனதில் " கோவன்கள் உயிர் நீக்கும் நொடியில் காத்த அவர்களின் மகவுகளே இளவரசிகள் " என நினைத்ததை அவன் எவ்வாறு அறிய முடியும் என கண்களை பயத்துடன் திறந்தவன்...
சேவன் : ஒட்டுமொத்த ஆகால பிரவஞ்சத்திலே மனதை வாசிக்கும் திறன் பெற்ற ஒரே உயிரெனில் அது முதலாம் நாகனியுமான சிகப்பு நிற ஆத்ம நிற கொண்ட முதல் கோவனான அனல் கோவனின் மனைவி... அப்படியென்றால் முதல் இரட்சகன்
" அனல் கோவன் யுவக்ரிஷ்ணன் மற்றும் முதல் நாகனி அனுராதாவின் தலை மைந்தனும் இருவது வருடங்கள் முன் உயிர் நீத்ததாய் கூறிய சகோதரர்களில் முதலாமவன் சித்தார்த் நாயக் " என சேவனோடே ஒரு குரல் பின்னிருந்து கத்தியது...
சேவன் யாரிந்த எலி குரல் என திரும்பி பார்க்க அவன் அமர்ந்திருந்த கிளையின் பின்னிருந்த மரத்தில் சேவன் நீலி மற்றும் மயூரனின் அளவிலே ஊதா நிற ஆடையில் ஊதா நிற கண்கள் பளபளக்க குட்டி இறெக்கைகளை ஆட்டி கொண்டு பறந்து கொண்டிருந்தாள் மயூரனின் காதலி பிறையீரா
சேவன் : பிறை... என இவன் அழைக்க நம் பிறையோ பேந்த பேந்த முளித்தவாறு அவனை ஏறிட்டாள்...
சேவன் : நீர் இந்நாழியில் இங்கென்ன செய்கிறாய்...
பிறை : பொருத்தருளும் தமையரே.. உமது தோழர்(மயூரன்) வேதபுரம் செல்வதாய் தூதனுப்பினார்... ஆதலின் யானும் இங்கு வரவளித்தேன்... அப்போதே கானகத்தில்(காட்டில் ) தம்மை யாரோ கிடத்தி செல்வதை கண்டேன்... ஆதலாலே தம்மை பின் தொடர்ந்து வந்தேன்...
சேவன் : ஏனம்மா இதுவே இது உமக்கு எவரேனும் வைத்த குறியாய் இருந்தால் என்(ன) செய்வாய்.. பெண்டிர் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமன்றல்லோ
பிறை : ஹ்ம் போர்களையில் எம்மை மிஞ்சிட யாவர் இருக்கின்றனர் தமையரே... தாம் எதற்கும் ஐயப்பட வேண்டாம்..
சேவன் : சரி அவ்வாறெனில் யானும் இரட்சகனும் பறைந்த அனைத்தையும் தாம் செவி மடுத்து விட்டாயா...
பிறை : அதில் தமக்கு எவ்வொறுச் சந்தேகமே வேண்டாம் தமையரே என கண்களை அழகாய் இமைத்து கூறிட சேவன் தலையில் கை வைத்தான்...
சேவன் : சரி பிறை.. இங்கு நிகழ்ந்ததை பற்றி நீர் மயூரனிடம் கூட தெரிவிக்க கூடாது.. மெய்யை அறிந்ததும் அனைவரிடமும் தெரிவிக்கலாம் சரியா என கேட்க
பிறை : சரி தமையரே தங்கள் ஆணை படியே என காலை மடித்து பறந்தவாறே பணிந்தெழுந்து சலாமிட்டாள்..
பிறை வாலில்லாத குரங்கென்று பட்டம் பெற்ற சேட்டைக்காரி... எதாவது குறும்புத்தனம் செய்து கொண்டே இருப்பவள்... இவள் ஒரு ஓட்டவாயென்பதே நம் சேவனுக்கு பயமாய் இருந்தது..
சேவன் : சரி கோட்டைக்கு செல்வோம் வா.. நாழியாகிறது என இருவருமாய் வேதபுரத்தை நோக்கி பயணம் செய்தனர்...
" நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்து கொண்டே வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் " என பாடாத குறையாக தன் துணையோடு ஆழ்ந்த டூயட்டில் இருந்த புறா ஒன்று சட்டென கேட்ட ஒரு க்ரீச்சிடும் சத்தத்தில் கனவு கலைந்து ஆத்திரத்தில் எவன் தன் கனவை கலைத்தது மண்டையிலே நான்கு கொத்து கொத்த வேண்டும் என திரும்பி திரும்பி பார்த்து விட்டு பச்சை மரங்களை தவிர்த்து வேறு ஒன்றும் கிட்டாமல் மீண்டும் உறங்க முயல அடுத்த நொடி மீண்டும் அந்த சத்தம் கேட்கவும் மரத்திலிருந்து தொபக்கடீரென கீழே விழுந்தது...
அந்த சத்தத்தை வசைபாடியவாறு கனவிலும் சேர விடமாட்டிக்கிராங்கையா என புலம்பி கொண்டே பறந்து சென்றது...
தீரா : ஒன் சைட் லவ்வரா இருக்க சிங்கிள் புறாவா இருக்குமோ
அந்த சத்தத்திற்கு காரணமாய் இருந்தவர்களோ அற்புத கோட்டைக்குள் இருந்த நமது நாயகன்கள்... சுற்றி எங்கும் பருத்தி மூட்டைகளும் தினை அரிசிகளும் பல வகையான செடிகளும் சூழ்ந்து கோட்டைக்குள்ளேயே ஒரு வெட்டைவெளியில் மைதானம் இருந்தது...
அதை சுற்றி யானையாளிகள் இரண்டிரண்டாய் அதன் மொழிகளில் ஏதோ உரையாடி கொண்டு நடை பயிற்சி சென்று கொண்டிருந்தது... மயூரன் அதுகளுடனே காலார நடந்து கொண்டிருந்தான்...
திடீரென வாள்கள் சுழற்றும் வேகத்தின் ஓசைகள் வேகமெடுக்கவும் யானையாளிகள் பயிற்சியை விடுத்து வாள் பயிற்சி கூடத்தை நோக்கி விரைந்தது... மயூரனும் அங்கே ஓடினான்...
அங்கோ பயிற்சி கூடத்தை சுற்றி ஒரு புறம் பராக்ரம வீரன்களும் மறு புறம் சஹாத்திய சூரர்களும் நின்று கத்தி கத்தி உற்சாக மூட்டி கொண்டிருந்தனர்....
மைதானத்தின் நடுவில் நேரெதிரே அம்ப்பயராய் ரக்ஷவன் அமர்ந்திருந்தான்... நீலி ஒரு விசிலை வைத்து கொண்டு ஊதி ஊதி உற்சாக மூட்டி தன் இறெக்கைகளால் உயர உயர குதித்து கொண்டிருந்தாள்...
கூடத்தின் உள்ளே ஒரு புறம் மருத்துவ தளபதியும் வாள் வீச்சில் கை தேர்ந்தவனுமான ரவியும் மறு புறம் படை தளபதியும் கண்கள் மூடி கொண்டே வியூகத்தால் வாள் வீச்சில் சிறந்திருக்கும் சரணும் தங்கள் இரு வாள்களை குறுக்கிட்டு நின்றிருந்தனர்...
இருவரின் கட்டுக்கோப்பான உடலிலும் வேர்வை முத்துக்கள் அரும்பியிருக்க முகத்திலே குறும்பான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது...
சரண் அவனது வாள் கொண்டு ரவியின் வாளை சுழற்றி எறிய முயல தன் வாளை தவற விட்ட ரவி நொடி தாளாது அதே இடை வேளையில் சரணின் வாளை தன் வசம் கொண்டு வர.. ரவி காற்றில் தவற விட்ட வாள் மண்ணில் வீழும் முன் காலால் இடித்து மேலே எம்ப வைத்த சரண் சரியாய் பிடித்து ரவி வீசிய வாளிலிருந்து குனிந்து அவன் வாளை பிடித்து ரவியின் வாளில் இடித்தான்...
பராக்ரம வீரன்கள் அனைவருக்கும் அவ்விருவரின் வாள் வீச்சு திறன்கள் மூக்கின் மேல் கை வைக்க கூடியதாய் இருந்தது... ஒருவர் மற்றவரின் வாளை ஒரே நேரத்தில் தவற விட்டு எதிரணியினது வாளை பறித்தது மிகவும் வியப்பை மூட்டியது...
ரவி இப்போது வாளை சுழற்றி சரணின் கழுத்தை போக்கி ஓங்க எவரும் அதிர்ச்சியடையாததை போலவே சரணின் வாள் சுழன்று அவன் வாளுக்கு குறுக்கே நீண்டது...
இவ்வாறு இவ்விருவரும் ஒருவர் மற்றவருக்கு சலைக்காமல் போரிட்டு அங்கிருந்த அனைவரையும் உற்சாகமூட்டி கொண்டிருந்தனர்...
இறுதியில் இவ்விருவரின் போரில் சலித்து போன ரக்ஷவ் நீலிக்கு ஆணையிட அவள் ஊதிய பெரும் விசிலில் இருவரும் போரிடுவதை நிறுத்திவிட்டு சிரிப்புடன் ரக்ஷவை என்னடா என்பதை போல் நோக்கினர்...
ரக்ஷவ் : பின்ன என்ன குருவே... காலைலேந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இப்டி நீங்களே இரெண்டு இரெண்டு பேரா சண்ட போட்டுட்டு இருக்கீங்க... போரடிக்கிதுல்ல நாங்க கத்துக்க வேணாமா...
சரண் : நீ கத்துக்கனும் அவ்ளோ தான இங்க வா... என்கவும் ரக்ஷவும் குடுகுடுவென ஓடி உள்ளே வந்தான்...
ரவி சரண் செய்ய போவதை உணர்ந்து வெளியே செல்ல ... சரணின் கண்ணசைவின் படி வீர் கூடத்தை விட்டு வெளியேறும் வழியை ரக்ஷவ் அறியாது அடைத்து விட்டான்...
ரக்ஷவ் : என்னா குருவே...
சரண் : நாம கத்தி சண்ட போட போறோம் என விஷமமாய் சிரிக்கவும் ரக்ஷவ் முகத்தில் பகீரென்ற உணர்வு பிறந்தது...
அவன் அதே உணர்வுடன் பின் நகர அவன் உள்ளே வந்த வாயிலுக்கு முன் அமர்ந்திருந்த சரணின் யானையாளி தன் தும்பிக்கையால் அவன் தோளை தட்டி " எக்ஸ்க்யூஸ் மி சார்... இங்க எங்க வரீங்க முன்னாடி போங்க " என தும்பிக்கையாலே தூக்கி அவனை முன் நிற்க வைத்தது...
ரக்ஷவ் : இப்பன்னு பாத்து சதி பன்றியே டா.. என சரணின் யாளியை திரும்பி பார்த்து வசைபாடியவன் திரும்பவும் சரண் குனிந்து முதலில் வணக்கம் செழுத்தினான்...
ரக்ஷவும் அதே போல் செய்ய ... குனியும் போது சரணின் உடலசைவினால் அவன் வாளை பற்றி தன்னை நோக்கி ஓங்குகிறான் என்பது தெரிய இப்போது தனிச்சையாய் ரக்ஷவின் வலது கரம் அவன் இடையில் இருந்த அவன் வாளின் பிடியை பற்றியது...
சரண் வேண்டுமென்றே வாளை திருப்பி பிடித்து ரக்ஷவை நோக்கி எடுத்து செல்ல அவன் முதுகை தொட இருந்த ஒரு நொடிக்கு முன்பாக தன் காலை மடிக்கி சட்டென முழங்காலிட்ட ரக்ஷவ் அதே வேகத்திற்கு அவன் வலது கையால் வாளை உருவி இடது கையை துணைக்கு வாளின் பிடியை பற்றி சரணின் வாளுக்கு குறுக்கே கொடுத்து சரணின் வாளை க்ரீச் என்ற பலத்த சத்தத்துடன் இடித்து எதிர்த்தான்...
ரக்ஷவின் முதல் தாக்குதல்... இச்செயல் ஒன்று போதாதா அவனின் துணிச்சலை வெளிகாட்டிட... ரக்ஷவிற்கு வாளை எப்படி பிடிக்க வேண்டுமென்றும் தெரியாது... வாள் வீச்சும் தெரியாது.. இருந்தும் இந்த முதல் படியே அவனை சரியாய் வகுத்திருந்தது...
கர்வமான புன்னகை ஒன்று சரணின் முகத்தில் இழையோடின... அடுத்த நொடி தன் வாளை இனி இப்படி திருப்பி பயன்படுத்த தேவையில்லை என உணர்ந்த சரண் வாள் வீச்சின் முறை படி அவன் வாளை எடுத்து சுழற்றி மீண்டும் ஓங்க இம்முறை எழுந்து கொண்ட ரக்ஷவ் முன்பை போலவே சரணின் வாளை தாங்க தன் வாளை குறுக்கே விட இம்முறை வேகம் முன்பிருந்ததை போல் இல்லாதமையால் ரக்ஷவ் வாளை தவற விட்டிருந்தான்...
ரக்ஷவ் தோய்ந்த வதனத்துடன் குற்ற உணர்ச்சியில் சரணை நிமிர்ந்து நோக்க அவனோ மிகவும் மகிழ்ச்சியாய் புன்னகைத்து கொண்டிருந்தான்... குழப்பமாய் சுற்றி பார்த்த ரக்ஷவ் அவனது குருக்களான சஹாத்திய சூரர்கள் உள்ளே தாவி குதித்து வருவதை கண்டு இன்னும் குழம்ப நம் சஹாத்திய சூரர்கள் ஏழ்வரும் ரக்ஷவை தூக்கி வைத்து கொண்டாடினர்...
யானையாளிகள் எட்டும் அவர்களின் தலைவன்களின் உணர்வுகளை பெற்றதை போலவே அவர்களிள் குட்டி ரக்ஷவ் எதிர்த்து போராடியதால் உண்டான அதீத மகிழ்ச்சியில் இரு கால்களை தூக்கி பிளரளிட்டது...
அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை... பராக்ரம வீரன்களுக்கும் அவர்களின் மகிழ்ச்சிக்கான காரணம் புரியவில்லை என்றாலும் ரக்ஷவின் அந்த எதிர் தாக்குதல் ஒரு மிரட்சியையும் அதே நேரம் மனதில் மகிழ்ச்சியையும் பயிர் விதைத்திருந்தது...
நீலியோ தங்கள் வீரன் அவனது பாதைக்கான முதல் அடியை துடங்கி விட்டான் என்னும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.. சஹாத்திய சூரர்களின் எண்ணம் அவளுக்கு புரியாமலா இருக்கும்... முதல் முறை தோல்வியை தழுவினாலும் அவன் முயன்றதே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது...
சண்டையென்றால் தெறித்து ஓடுபவன் வாள் நீட்டி எதிர்த்து நின்றாள் யாருக்கு தான் சந்தோஷமாக இருக்காது...
ரக்ஷவ் : குருக்களே... லூசாய்ட்டீங்களா... நா தோத்துட்டேன்யா என அவர்களுக்கு மெய்யை உணர்த்த முயல...
ரனீஷ் : டேய் நீ ஜெய்க்க பிறந்தவன் டா... இதெல்லாம் ஒரு தோல்வியே இல்ல... இந்த எதிர்தாக்குதல நாங்க யாருமே உன் கிட்ட எதிர்பாக்கல தெரியுமா.. ஆனா நீ மாஸ் காட்டீட்ட
ரக்ஷவ் : உண்மையாவா குருவே என கேட்டவனின் முகத்திலும் தௌசண் வாட்ஸ் பல்பு மின்னியது...
சரண் : உண்மையா தான் கண்ணா... உனக்கு இன்னும் வாள பிடிக்க கூட நாங்க பயிற்சி குடுக்கல... ஆனா என்னோட வாள நீ தடுத்தது எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா... என கூறியவனின் கண்களில் குழந்தை தன் முதல் காலடியை பதிக்கும் போது தாய் உணரும் அந்த ஒரு தூய்மையான மகிழ்ச்சி தென்பட்டது...
ரக்ஷவ் : அப்போ என்னாலையும் சண்ட போட முடியுமா...
அஷ்வன்த் : உனக்கு அதுல சந்தேகமே வேண்டாம் ரக்ஷவா.. நீ வேணும்னா பாரு கூடிய சீக்கிரத்துல நீ சரணையே மிஞ்ச போற என கூற ரக்ஷவ் சந்தோஷத்தில் குதித்தடங்கினான்...
ரித்விக் : இனிமே என்ன உங்க பதினோறு பேருக்கும் பயிற்சி மட்டும் தான் பாருங்க என அவன்களின் மகன்களையும் உற்சாக படுத்தி ரக்ஷவை அவன் கழுத்தில் அமர வைத்து உள்ளே அழைத்து சென்றான்...
எங்கே செல்கிறோம் என்பதை போல் அனைவரும் அவனை பின் தொடர சிம்மயாளிகள் இருக்கும் அதே அறைக்குள் இப்போது அனைவரும் நுழைந்தனர்...
ஆயுத அறைக்குள் நுழைந்ததும் பராக்ரம வீரன்களும் ரக்ஷவையும் அதற்கு முன் நிறுத்தி...
முகில் : பசங்களா உங்க ஆயுதங்கள நீங்க தான் இப்போ தேர்ந்தெடுக்க போறீங்க... எத வேணா எடுங்க.. ஆனா அது உங்களோட சக்திகளுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்றதா இருக்கனும் நாங்க இப்போ வந்துடுறோம் என கூற சரியென தலையசைத்த பத்து பேரும் ஆயுதங்களை கவனிக்க தொடங்கினர்...
நம் சஹாத்திய சூரர்கள் சிம்மயாளிகள் உள்ள பக்கமாய் செல்லவும் ரக்ஷவ் பராக்ரம வீரன்களுடனே ஒட்டி கொண்டான்...
அஷ்வித்தின் கண்களில் மஞ்சள் நிற பிடி கொண்ட கருப்பு கல் பதித்த வாள் ஒன்று தென்பட அவன் எசபிசகின்றி அதை கையிலெடுத்தான்...
மித்ரன் ஆழ்ந்து அனைத்தையும் பார்த்து விட்டு குறுவாளும் அல்லாது ஆளுயர வாளும் அல்லாது நடு நிலையில் இருந்த மெலிதான அதிக இடையுள்ள ஒரு வாளை எடுத்தான்...
ஆதவ் தன் கூரிய கண்களால் அதை அளசி விட்டு இறுதியாய் ஒரு வில்லம்பை எடுத்தான்... ஆனால் அவனுக்கு பரிசானதை போல் அந்த அம்பு அவன் கை பட்டதும் மின்னி மறைந்து ஒரு கூரிய வாளாய் மாறியிருந்தது...
மிதுன் ஒரு ஈட்டியை எடுக்க போய் அதற்கு பதிலாய் ஒரு குறுவாளை எடுத்தான்... அது குறுவாள் தான் என்றாலும் கூர்மையிலும் இடையிலும் ஒரு கோடாரியை ஒத்திருந்தது..
ராகவ் மற்றும் ராம் ஒரு சேர ஒரே போல் இருந்த இரு வாள்களை நடுவில் பிடித்து சுழற்றி எடுத்தனர்... அதன் ஒரு முனைகள் கூரிய வாளாகவும் மறுமுனைகள் பலமான வேலாகவும் இருந்தது...
வருண் மற்றும் அருண் ராகவ் ராமை போலவே ஒரே போலிருந்த இரு வாளை எடுத்தனர்... ஆனால் இரண்டிலும் வித்யாசம் இருந்தது... வருணின் வாளில் இடையில் ஈட்டி போன்ற சிறு ஆயுதம் இருந்தது... அருணின் வாளில் பிடியுள் ஒரு குறுவாள் இருந்தது... தேவை ஏற்படின் இருவராலும் போரின் இடையிலே அவர்களின் பிடி வழியே வேறு ஆயுதத்தை எடுக்க முடியும்...
கார்த்திக் மற்றும் அஜயின் வாள்கள் இரண்டும் அச்சடித்ததை போல் ஒன்றாக இருந்தது... ஆனால் கார்த்திக் வாளின் பிடியில் சீரும் ஒரு விலங்கின் சின்னமும் அஜயின் வாளின் பிடியில் பறக்கும் இறெக்கையின் சின்னமும் பதிந்திருந்தது....
அனைவரும் தேர்ந்தெடுத்ததும் சுற்றி பார்த்து கொண்டிருந்த நீலி சஹாத்திய சூரர்கள் வருவதை கண்டதும் " இதோ தமையனார்களும் வந்து விட்டனர் " என்று கூற அனைவரும் அவர்கள் புறம் திரும்பினர்...
உடன் அர்ஜுன் கையில் ஒரு மரப்பெட்டியும் முகிலின் கையில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது... முதலில் முன் வந்த அர்ஜுன் அப்பெட்டியை திறந்து அதிலிருந்த முத்திரைகளை எடுத்தான்...
இரண்டிருந்தது.. ஒன்று கருப்பாகவும் மற்றொன்று வெள்ளையாகவும்... பராக்ரம வீரன்களின் புறங்கையிலிருந்த அச்சில் அவன் அந்த முத்திரைகளை பதிக்க நொடியிலே மித்ரன் வருண் அருண் ஆதவ் மற்றும் அஜயின் சின்னங்கள் வெள்ளையாகவும் ராகவ் ராம் மிதுன் அஷ்வித் கார்த்திக்கின் சின்னங்கள் கருப்பு நிறமாகவும் மாறியது...
அதை ஆச்சர்யமாய் இளையவர்கள் அனைவரும் காண...
வீர் : இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அடையாளம்... இது இருக்குர நிறத்த விட்டு வேற மாரி மாறுனா யாரோ உங்கள தப்பான நோக்கத்தோட நெருங்குறாங்கன்னு அர்த்தம்... ஒரே நேரத்துல எல்லாமே பழைய நிறத்துக்கு மாறுனா அது ஏதோ ஆபத்த குறிக்கிதுன்னு அர்த்தம்.. ஒருவேளை உங்க அஞ்சு பேர்க்கும் கருப்பாவும் உங்க அஞ்சு பேர்க்கும் வெள்ளையாவும் மாறுனா நீங்க வெவ்வேறு திசையில பிரிஞ்சிருக்கிங்ன்னு அர்த்தம்... இது சர்ப்பலோகத்துல ரொம்ப உதவியா இருக்கும் என புன்னகைத்தான்...
நீலி : அப்போ இது என்ன டப்பா தமையரே...
முகில் : இது ரக்ஷவ்க்கானது நீலி என கூற எனக்கா என்பதை போல் நிமிர்ந்து பார்த்தான் ரக்ஷவ்..
சரண் : ஆமா ரக்ஷவ் உனக்கு தான் இங்க வா டா என அவனை முன் நிறுத்தி அந்த பெட்டியை தந்தனர்...
முகில் : இத திறக்க வேண்டிய நேரம் இது இல்ல... அதனால அதுக்காக காத்திரு என புன்னகையுடன் கூறினான்...
அவனை நிமிர்ந்து பார்த்த ரக்ஷவும் புன்னகைக்க அப்பொழுதிலிருந்தே ரக்ஷவுடன் நாயகன்களுக்கும் வாள் வீச்சில் பயிற்சிகள் தொடங்கியது...
சரண் பதினோறு மாணவர்களுக்கும் முதல் வேலையாக வணக்கத்தை கற்று தர ... அடுத்ததாக வாளை எவ்வாறு திடமாக அதே நேரம் சரியாக பிடிக்க வேண்டுமென கற்று கொடுத்து கொண்டிருந்தான்...
நீலிக்கு சில மணி நேரம் முன்பு நினைவுகள் பயணித்தது...
சஹாத்திய சூரர்கள் சேவனை பற்றி கேட்கவும் பின்னிருந்த ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்...
யானயாளிகளை கண்டு பராக்ரம வீரர்கள் அதிர்ச்சியடையவில்லையே என நினைத்து கொண்டிருந்த ரக்ஷவிற்கு மயூரன் அவர்கள் மனிதர்களிலிருந்து மிருகமாய் மாறியதையே பெரிதாய் நினைக்கவில்லை யானையாளிகளை கண்டு அதிர்ச்சியடைய மாட்டார்காள் என கூறி கொண்டிருந்தான்...
ஆனால் அப்படி இல்லையே யானையாளிகளை கண்டு பராக்ரம வீரன்கள் பத்து பேரும் மயங்கி விழுந்திருந்தனர்..
அனைவரும் அவர்களை எழுப்ப நம் ரக்ஷவோ வாயை மூடி சிரித்தவாறு
ரக்ஷவ் : நா கூட இப்டி பயப்புடலையே அண்ணா என கூற பராக்ரம வீரன்கள் அவனை துரத்தி கொண்டு ஓடி இறுதியில் அவன் அனைவருக்கும் ஆட்டம் காட்டி விட்டு யானையாளி பின் ஒளிந்ததும் மிதுனும் ராகவும் இரு புறமாய் சென்று அவன் ஓட பார்த்த சமயம் பிடித்து வைத்து வலிக்காமல் கொட்டினர்...
அதன் பின் தான் சஹாத்திய சூரர்கள் வாள் வீச்சை தொடங்கியிருக்க இப்போது சேனும் பிறையுடன் வேதபுரத்தை அடைந்திருந்தான்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... யூடி நல்லா இருந்துச்சா... இனிமே என்ன நகைச்சுவையோட தீவிரமா எப்பவும் போல கதை நகரும்... நாளைக்கு யூடி வரும்னு நெனக்கிறேன்... ஏன்னா ஞாயிறு அன்னைக்கு எனக்கு டெஸ்ட் வச்சிருக்காங்க... நாளைக்கு தான் படிக்க வேண்டியது எனக்கு கிடைக்கும்... சோ மே பீ லேட்டாகும் காத்திருந்து படிக்கவும்... பட் உங்க காத்திருப்புக்கு கண்டிப்பா ஒர்த்தானதா தான் குடுப்பேன் கவலப்படாதீங்க... நெக்ஸ்ட் யூடில ஹீரோயின்ஸையும் ஊட்டில இருக்க இரட்சகன்களையும் பாப்போம்... என்னாத்தான் அவங்களும் செய்ராய்ங்கன்னு... சரி ஓக்கே குட் நைட்.. டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro