Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 2

தங்க தாரகைகளின் அருகாமை விட்டு மலைமகளடி சாய்ந்த நிலவவனின் சகோதரன் தன் உற்சாகத்தை உலகெங்கிலும் பரப்பி கொண்டு விண்ணில் உதயமானான்...

ஆள் அரவமற்ற அந்த வீதியில்... ஆறடி ஆண்மகன் ஒருவன் ஓடி கொண்டிருந்தான்... அவனின் கட்டுக்கோப்பான உடலில் வேர்வை துளிகள் பனி துளிகளாய் கரைந்து கொண்டிருக்க... பகலவனின் கதிர்கள் அவன் மேல் வாஞ்சையாய் சூடிக்கொள்ள... அவன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ள ஒரு நொடி வேகம் தளர்த்திய போது மற்றுமோர் ஆறடி ஆண்மகன் அவனின் ஓட்டத்தில் பங்கு கொண்டான்...

இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் மோத... கட்டுமஸ்த்தான உடலில் பூத்திருந்த வேர்வை துளிகளை துடைத்தெறிந்த புதியவன் கண்ணடிக்க... அடுத்த இறு நொடியில் இருவரின் ஓட்டமும் ஒரே நேரத்தில் வேகமெடுத்தது....

சிறிது நேரத்தில் ஒரே வீதியில் தங்களின் ஓட்டத்தை தொடர்ந்த இருவரும்... ஒரே நேரத்தில் ஒரு பெரிய அரண்மனை முன் காலை தேய்த்து கொண்டு நின்றனர்....

இருவரின் வேகத்திலும் மண் காற்றில் பறக்க.... வெற்றியுடன் புன்னகைத்த இரு இதழ்களும் விரிய... ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு விடை பெற்றனர் நம் ஒட்டி பிறந்த இரெட்டை சகோதரன்கள்... முகிலர்ஜுனன் மற்றும் நகுலர்ஜுனன்....

இத்துனை வருடம் கடந்தும் உயர்ந்து கம்பீரமாய் நின்றது அவ்வரண்மனை.... சகோதரன்கள் இருவரும் எப்பொழுதும் போல் உள்ளே நுழைய... இரு டவலுடன் தூரத்திலிருந்து வந்தது ஒரு உருவம்...

இருவரும் அவரவர் ஷூவை கலட்டி கொண்டிருக்க... சிவந்த நிறத்தில் இன்றும் முகத்திலிருந்த அமைதி கலையாமல்... மென்னகையுடன் அழகுக்கு அழகு சேர்த்த காதுகளில் குலுங்கும் ஜிமிக்கிகளுடன் தன் கணவனையும் அவன் சகோரனையும் நெருங்கினாள் ஒவீனா...

ஒவீ : இன்னைக்கு என்ன எக்ஸ்ட்ரா ஓட்டமா அண்ணன் தம்பி இரெண்டு பேரும்...

அர்ஜுன் : லைட்டாடா ஒவீமா... என்று நக்கலுடன் அவள் கொடுத்த டவலை வாங்கி முகத்தை துடைத்தான்...

ஒவீ : சாருக்கு துடைச்சு தான் விடனுமோ... புடிங்க டவல எனக்கு வேலை இருக்கு... என அவளை பார்த்து கொண்டிருந்த முகிலின் கையில் தினித்து விட்டு திரும்பி நடந்தாள்...

" ஏன் என் அத்தான் என்ன டி தப்பா ஆசப்பட்டுட்டான் " என்ற தேன்குரலை கேட்டு திரும்பாமலே...

ஒவீ : புதுசா கல்யாண ஆன ஜோடின்னு நெனப்பு உன் அத்தான்க்கு... போடி ... என இவளும் கலாய்த்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்...

மாடி படியில் தன்னை பாவமாய் பார்த்த முகிலை பார்த்து நையாண்டி செய்தவாறு இன்றும் அந்த குறும்பு மாறா அழகான புன்னகையுடன் அழகு பதுமையென நடந்து வந்தாள் அர்ஜுனின் மனைவி நிராவுமான முகிலின் தோழி நிரஞ்சனா...

அர்ஜுன் : டேய் அவ என் பொண்டாட்டி டா...

முகில் : ம்க்கும்... அதுக்கு முன்னாடில இருந்து எனக்கு ஃப்ரெண்டு டா .. என இவனும் அவனை போலவே கூற...

நிரு : ரொம்ப அடிச்சிக்கிர மாரி சண்ட போடாதீங்க டா... இன்னைக்கு டைரி மில்க்க மறந்துருவேன்னு நினைக்காதீங்க... இரெண்டு பேரோட பங்கும் மதியம் என் ரூமுக்கு வந்திருக்கனும்... என செல்லமாய் கட்டளையிட்டு விட்டு ஒவீயை பின் தொடர்ந்தாள்...

முகில் : இன்னும் பயிற்சி வேண்டுமோ சகோதரா...

அர்ஜுன் : நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டது... என ஒருவரை ஒருவர் பார்த்து கூறி கொண்டனர்...

அதை பார்த்து சிரிப்பை அடக்க இயலாமல் அவர்களின் நடுவில் அமர்ந்தாள் அவள்.... நிறமாறா அதே செம்மை நிறத்தில் அழகான புன்னகையுடன்... தன் தோழன்களின் பல்பினால் அரும்பிய நக்கல் சிரிப்புடன் அவன்களிடம் கொட்டு வாங்கி கொண்டாள் நிருவின் அக்காவுமான மற்றவர்களின் செல்ல தங்கை தோழியுமான நம் மதுரஞ்சனா...

மது : நீங்க பல்பு வாங்குனதுக்கு என்ன எதுக்கு டா கொட்டுனீங்க...

முகில் : சிரிச்சா கொட்ட தான் செய்வோம்...

மது : நா சிரிப்பேன் ஈஈஈஈ

அர்ஜுன் : நானும் கொட்டுவேன்... என நங்கென வலிக்காமல் கொட்டி விட்டு அவள் கொட்டும் முன் உள்ளே ஓடி யாரின் மீதோ இடித்தான்.... அவன் முன்னிருந்தவனை கண்டு இவன் முளிக்க... பின் நின்ற மதுவோ

மது : மாமா அவன புடி என கத்த.... அர்ஜுனின் முன் அவன் உயரத்திற்கும் கம்பீரத்திற்கும் சற்றும் குறைவில்லாமல் தன் அக்மார்க் புன்னகையுடன் நக்கலாய் சிரித்தவாறு முருக்கி விட பட்ட மீசையுடன் நின்றிருந்தான் மதுவின் ஆசை கணவன் ரித்விக்கரண்...

அர்ஜுன் தப்பிக்கும் முன் ரித்விக் அவனை பிடிக்க... மது அவனருகில் ஓட...

அர்ஜுன் : அடேய் விடு டா...

ரித்விக் : ஹிஹி இரு மச்சான்.. என் பொண்டாட்டி கிட்ட ஒரு கொட்டு வாங்கினதும் நா விட்டுரேன்...

அர்ஜுன் : அவ கொட்டுனான்னா நா பூமிக்குள்ள போய்டுவேன் டா...

ரித்விக் : பரவால்ல நில்லு மச்சான்...

அர்ஜுன் : அடேய்....

ரித்விக் : அவ உன் ஹைட்டுக்கு எட்டிகிட்டு கொட்டி முடிக்கிரதுக்குள்ள மதியமாய்டும் டா... என வாயை விட

" மாட்டிக்கிட்ட டா சகோதரா " என்ற கூற்றினூடே ஒலித்த சிரிப்பொலியை கேட்டு இருவரும் திரும்ப... அங்கோ தன் நிமிர்ந்த தோற்றத்தில் கன்னத்தில் குழி விழ சிரித்து கொண்டே நின்றிருந்தான் ரித்விக்கின் சகோதரன் அஷ்வன்த்...

ரித்விக் : என்ன டா சொல்ற...

முகில் : சற்று இக்கடச்சூடு மச்சான்... என குரல் குடுக்க... இப்புறம் திரும்பிய ரித்விக் மூக்கு முட்ட முறைக்க நின்றிருந்த மதுவை கண்டு ஈஈஈ என இழித்தான்... அர்ஜுன் அவனின் பிடியிலிருந்து நழுவி கொள்ள... ரித்விக்கை பார்த்து முகத்தை சுழித்த மது சமையலறைக்கு செல்ல அவள் பின்னே செல்ல போனவனை இடையில் வந்து கட்டி கொண்டான் ஒரு ஆறடி ஆண்....

அவனின் பிடியிலிருந்து தீவிரமாய் திமிறினான் ரித்விக்...

ரித்விக் : எரும விடு டா... என் பொண்டாட்டி கோச்சிட்டு போறா டா... என அவனை பார்த்து விளையாட்டாய் சிரித்து கொண்டு அவனின் நிமிர்ந்த தோற்றத்தில் முட்டி கொண்டு தன் கம்பீரமான உடலில் உடல் பயிற்சி செய்ததற்கான வேர்வையுடன் நின்றிருந்தான் சரண் பிரகாஷ்...

சரண் : விட மாட்டேனே...

ரித்விக் : அவ கிச்சன் குள்ள போய் இந்நேரம் அடுத்த கொள்ளைக்கே போய்ர்ப்பா விட்டு தொல டா என்னைய... என திமிறி அவன் பிடியிலிருந்து வெளியேறினான்...

அவன் செய்வதையெல்லாம் பார்த்து சிரித்து கொண்டே அமைதி குடியேறிய வதனத்தில் என்றும் உறைந்திருக்கும் சிறு புன்னகையுடன் கனிவான கண்கள் பிரகாசிக்க இவர்களுக்கு காஃபீயுடன் நடந்து வந்தாள் சரணின் காதல் மனைவி தேவர்ஷினி

வர்ஷி : ரொம்ப அல்ட்டிக்காத அத்தான்... என் அக்கா தங்கமானவ... சீக்கிரம் உன் வழிக்கு வந்துருவா... இந்தா காஃபீ.. என அவன் கையில் தினித்து விட்டு சென்றாள்...

ரித்விக் : உங்கொக்காவ அப்ரமா பாத்துக்குறேன்... இரு என பொரிந்து கொண்டே காபீயில் வாய் வைக்க...

" நீ பேச்சிக்கு மட்டும் தான் டா மச்சான் லாயிக்கு " என நண்பனை கலாய்த்தவாறு ஈரம் காயாத கேசத்தை துவட்டி கொண்டு சில நிமிடங்கள் முன்னே குளித்த முடித்ததற்கு அடையாளமாய் அங்கங்கு நீர் துளிகளுடன் இறங்கி வந்தான் அந்த ஆளை கவரும் கண்ணழகன் ரவீன்

அவனோடே அவன் முதுகில் தொங்கி கொண்டு வந்தாள் ஒரு குட்டி தேவதை... ஐந்தடி உயரத்தில்... இடை தாண்டிய கார்கூந்தல் அசைந்திட... மாநிறத்தில்... குழி விழும் அழகான கன்னமும்... முழங்கையில் யாளி அச்சுடன் ...  மை தீட்டிய ஆளை கவரும் கண்களுக்கு சொந்த காரியான இருவத்தி ஒரு வயதை அடைந்த அக்குடும்பத்தின் முதல் குழந்தையும் நம் கதையின் ஒரு கதாநாகியுமான கயல்விழி ....

ரித்விக் : கயல் குட்டி நீயாவது அப்பாக்கு ஹெல்ப் பன்னு டி...

கயல் : நீயே உன் பொண்டாட்டிய சமாளிச்சிக்க போப்பா... என்னாலல்லாம் முடியாது...

ரித்விக் : இப்டியே நீயே அப்பாவ கலட்டி விட்டியே பட்டுமா...

" நா உனக்கு கமம்பெனி தரேன் டா மச்சி டேய் " என கத்தியவாறே மாடி படியின் பிடியில் சருக்கி கொண்டே வந்தான் கட்டுமஸ்த்தான தேகத்தின் சொந்தகாரனும் அவ்வீட்டின் அறுந்த வாலும் ரவியின் உடன் பிறந்த இரட்டை சகோதரனுமான ரனீஷ்...

" நில்லு டா வளந்து கெட்டவனே " என கத்தி கொண்டே மாடி படியில் ஓடோடி வந்தாள் அவவின் தர்ம பத்தினியும் விழியழகியுமான ரக்ஷா

ரவி : ஆஹா என்ன ஆச்சு ரக்ஷ் மா...

ரக்ஷா : மண்டையிலே கொட்டுவேன்... ரக்ஷான்னு கூப்டு டா...

ரவி : சரி மிஸ்ஸஸ் மச்சினிச்சி ரக்ஷா... என் சகோதரனை இவ்வளவு கொடூரமாய் நீ துரத்துவதன் காரணத்தை சொல்...

ரக்ஷா : மண்ணாங்கட்டி காரணம்... இன்னைக்கு எனக்கு ஹாஸ்பிட்டல்ல மீட்டிங் இருக்குன்னு சொன்னனா இல்லையா... உன் தொம்பி பன்னி வச்சிர்க்க வேலைய பாரு அத்தான்... என ஒரு வெள்ளை கோட்டை தூக்கி காட்டினாள்... அதில் ஐயர்ன் பாக்ஸின் அழகான அச்சு மிகவும் நேர்த்தியாய் இடம் பெற்றிருந்தது... இதை கண்ட ரவி முளிக்க... அவன் எதிர்பார்த்ததை போலவே அடுத்து வந்தது அந்த குரல்...

" அடியேய் அது என் கோட்டு டி இங்க இருக்கு உன்னோடது " என அழுவதை போல் கத்தி கொண்டே மஞ்சள் நிற காட்டன் சேலையின் முகம் சினுங்க நடந்து வந்தாள் அவ்வழகிய பாவை... ரவியின் மனைவியும்... ஒவீயின் உடன்பிறந்த இரெட்டை சகோதரியுமான ரொவீனா ...

ரனீஷ் : மச்சான் மாட்டிக்கிட்ட ஓடு...

ரவி : மீ எஸ்கேப்... என அவன் ஓட்டம் பிடிக்க... சரியாக அவன் முன் மதிலாய் நின்ற ரித்திக் அவனை நகர விடாது பிடித்து கொண்டான்...

ரித்விக் : நான் பெற்ற புகழ் இவ்வயகமும் பெருக... என கெக்கபெக்க என சிரிக்க...

ரவி : அட கிராதகா உனக்கு வில்லத்தனம் பன்ன வேற நேரம் கிடைக்கலாயா... என்ன உடுடா...

ரித்விக் : முடியாது முடியாது...

" நேத்து என்ன சிக்க விட்டல்ல... நீ இப்போ நி மாட்டுனியா " என பலுப்பு காட்டியவாறே அந்த படிகளில் தன் அலையலையான கேசத்தை கோதியவாறு கம்பீரமாய் வந்தான் ஒவீ வீனாவின் அண்ணனுமான நாயகன்களின் சீரியஸ் நண்பன் ரன்வீர்...

" பாவம் டா என் அண்ணன் " என அவன் பின்னே மண்டையில் கொட்டி விட்டு சிறு பிள்ளை போல் அவனிடமிருந்து தப்பி நீல நிற சேலையில் கீழே ஓடி வந்தாள் அந்த தாரகை வீரின் மனைவியுமான ரவி ரனீஷின் பாசமிகு தங்கை ரிதான்யா...

கயல் : அத்த... பாவம் என் மாமா... விட்டுடேன்...

வீனா : ஹ்ம்... நீ சொல்றதுனால இன்னைக்கு தப்பிச்சான்.. அப்ரம் இருக்கு.. என மூக்கு முட்ட முறைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்...

ரவியும் ரனீஷும் ஒரே நேரத்தில் பெருமூச்சு விட... சிரித்தவாறு சமையலறைக்குள் நுழைந்த நாயகிகளுடன் சென்ற ரக்ஷா மீண்டும் வந்து ரனீஷின் மண்டையில் ஓங்கி கொட்டி விட்டு  சமையலறைக்குள் ஓடினாள்...

கயல் : அச்சச்சோ இங்க நா சின்ன புள்ளையா... இல்ல நீங்க சின்னப் புள்ளையான்னே தெரியல மாமாஸ் அன் அப்பாஸ்....

முகில் : ஏன் டா கயல் குட்டி உனக்கு இப்டி ஒரு டௌட்டு..

கயல் :  பின்ன என்னப்பா... என் காலேஜ் ஸ்டாஃப் யாராவது உங்கள்ள யாரையாவது பாத்தா உன் அண்ணனான்னு கேக்குறாங்க... இங்க அத்த சித்திங்க கூட உங்க விளையாட்டு வேற தாங்க முடியல...

அர்ஜுன் : எங்க மேல பொறாமை டி செல்லம் உனக்கு...

கயல் : ம்க்கும் உன் மருமகன் மட்டும் வரட்டும் சிச்சா... அப்ரம் இருக்கு என் ஆட்டம்...

சரண் : அடிங்க... அப்பாட்ட பேசுர மாரியா பேசுர... ஓடு... என செல்லமாய் விரட்ட... மாடி படி வரை ஓடியவள் திரும்பி நின்று...

கயல் : ம்க்கும் நீங்கல்லாம் மட்டும் எனக்கு அப்பா மாமா மாரியா நடந்துக்குரீங்க போ சித்தா... என பலுப்பு காட்டி விட்டு ஓடி விட்டாள்...

நாயகன்கள் அனைவரும் ஒருவர் மற்றவர் முகத்தை கண்டு நிம்மதியாய் புன்னகைத்தனர்.... அவர்கள் ஒன்பது பேரும் இரண்டடி எடுத்து வைத்து செவுரின் பக்கம் திரும்ப.... அங்கு வேலு தாத்தா மற்றும் சங்கரன் தாத்தாவின் புகைபடங்களுக்கு பூ அனிவிக்கப்பட்டிருக்க... அவர்களருகிலே தெய்வானை பாட்டியின் புகைபடமும் இடம் பெற்றிருந்தது...

நார்த் அமேரிக்காவில் உள்ள ஒரு விசாலமான மாநிலம் கனடா... தமிழர்கள் சிலரும் குடும்பமாய் வாழும் அழகான ஊரது... கனடாவிலே முக்கியமான டௌன் ஒன்றின் எல்லையில் தோட்டங்களின் மத்தியில் அமைந்திருந்தது ஒரு வீடு...

அழகான கருமை நிறத்தில் சாயம் பூசப்பட்டு பசுமையான பூக்களும் செடிகளும் பூத்து குழுங்க அழகிய பூங்கா வனம் போல் ஆட்சி அளித்தது அந்த இல்லம்...

மூன்று அடுக்கு மாடிகளுடன் கூடிய அந்த விசாலமான இல்லத்தில் கீழிருந்த பெரிய சமையலறையில் பெண்மணிகள் மூவர் சிரித்து பேசியவாறு காலை வேளை சமையலை செய்து கொண்டிருந்தனர்...

மூவரும் ஐம்பது வயதை தாண்டியதாய் அங்கங்கு கூந்தலில் கலந்திருந்த நரை முடிகளும்... கைகளில் இருந்த சுருக்கங்களும் காட்டி கொடுக்க... அதற்கு நேர் மாறாய் அவர்கள் சுறுசுறுப்பாய் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்...

அந்த நேரம் இரண்டாம் மாடியிலிருந்து கை கடிகாரத்தை மாட்டியவாறு கீழே இறங்கி வந்தார் ஒரு அறுவத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஆண்.... அவர் மாதவன்... சங்கரன் தாத்தா தெய்வானை பாட்டியின் முதல் வாரிசு...

மாதவன் : வனித்தா... இலக்கியா காவியா என அழைத்து கொண்டே அவர் கீழ் வர... அவரின் அழைப்பிகு ஏற்ப மாடி படியை எட்டி பார்த்த மூன்று பெண்மணிகளும் காலை தேனீருடன் வெளியே வந்தனர்....

மாதவனின் மனைவி வனித்தா... மாதவனின் இரெட்டை தங்கைகள் இலக்கியா காவியா

காவியா : குட் மார்னிங் அண்ணா...

மாதவன் : குட் மார்னிங் டா மா... மச்சானுங்க எங்க...

இலக்கியா : தோ வராங்களே... என மேலே பார்த்தவாறு கூற.... மாதவனை போலவே கோர்ட் சூட்டில் கீழே இறங்கி வந்தனர் காவியாவின் கணவர் முரளி தரணும்... இலக்கியாவின் கணவர் இரமனனும்...

தீரா : வி மிஸ் யு இரமனன் ஸர்...

முரளி இரமனன் : குட் மார்னிங் மாதவா...

மாதவன் : குட் மார்னிங் டா.. வாங்க...

இலக்கியா : உன் மருமகளுங்க எங்கன்னுலாம் கேக்க மாட்டியா அண்ணா... என முறைப்பாய் கேட்க...

மாதவன் : என் மருமகளுங்க கொஞ்சம் எக்ஸ்ற்றாவா தூங்குனா உனக்கு பொருக்காதே... அவங்க தூங்கி எந்திரிச்சு நேரா என் கிட்ட தான் வருவாங்க... நீ விடு இலக்கியா...

இலக்கியா : என்னண்ணா இப்பவும் அவளுங்களுக்கு நீ செல்லம் குடுத்துட்டு இருக்க....

வனித்தா : என் மருமகளுங்க தூங்குனா உனக்கென்ன டி வந்துச்சு.... அத வச்சு பட்டிமன்றம் நடத்துர...

இரமனன் : விடு இலக்கியா மணி ஆறுதான ஆகுது.. என் பொண்ணுங்க பொருமையா வருவாங்க... எனக்கு சூடா இட்லி வை வா...

இலக்கியா : நீங்க இட்லி சாப்டரதுலையே இருங்க எப்போப்பாரு...

முரளி : அட கூல் அண்ணி... இன்னைக்கு சட்டர்டே தான... தூங்கட்டும்...

இலக்கியா : எல்லாரும் அவளுங்களுக்கு தான் சப்போர்ட்டு... அப்ரமா பாத்துக்றேன் உங்கள... என்றவாறு சிரிப்புடன் வந்த வனித்தா காவியாவுடன் சமையலறையுள் நுழைந்தார்...

மூன்றாம் மாடி அவ்வீட்டில் இருப்பதிலே அதிக அறைகள் கொண்டது... அங்கு மொத்தமாகவே கிட்ட தட்ட பதினைந்து அறைகளிருக்க... அவ்வறைகளிலே இறுதியாய் இருந்த அறையில்.... முழுதும் இருள் கவ்வி கிடக்க... யாரோ நடக்கும் ஓசை அங்கு நிறம்ப... சில நொடிகளிளே யாரோ அவ்வறையின் தீரைசேலையை அகற்ற.... வேகவேகமாய் உள்ளே வந்த சூரியனின் தங்க தாரகைகள் அங்கு நின்றிருந்த தேவதையை கண்டு சொக்கி விழுந்தது...

வெள்ளை நிற காட்டன் சுடியில்... இடை தாண்டிய கார் கூந்தல் அழகாய் அசைந்தாட.... ஆரவாரமில்லா அழகுடன் சூரிய கதிர்களில் ஜொளித்தவாறு நின்றாள் இலக்கியா பெற்ற இரண்டாம் தேவதை திவ்யஹரினி

அவள் பின் அழகான தன் பட்டாம்பூச்சி கண்கள் சிறகடிக்க... மனதில் பூத்த புது வித நிம்மதியுடன் அழகென்பது சிறிதும் குறையாது சிவந்த நிறத்தில் நீல நிற சுடியில் நின்றாள் இலக்கியா பெற்ற மூன்றாம் தேவதை தேவிப்ரியா...

கண்களிலில் மேலும் கண்ணீர் சுரக்க வழி இல்லாது வரண்டிருக்கும் போதும் கூட... விடாமல் கண்ணீரை சுரந்தது அப்பேதையவளின் காந்த விழிகள்.... பலர் அவ்விழியை இரசிக்க வரிசையாய் வந்து நின்றாலும் அவ்விழி இரசிக்க வேண்டியவனோ.... அவ்விழியை இரசிக்க வேண்டியவனோ தொலை தூரத்தில்..... அளவில்லா தூரம்.... கடல் மலை பாலைவனம் காடு என அனைத்திற்கும் பின் அவன்.... அவனும் அவர்களும்....

மறைந்தவனுக்காய் கண்ணீர் சிந்துவதா... தன்னுடனே தனிமையில் வாடும் இருவருக்காகவும்... குடும்பத்திற்காகவும் கண்ணீர் சிந்துவதா என்ற குழப்பமேதும் இல்லாமல் நில்லாமல் வலிந்தோடியது கண்ணீர்....

அசைந்தாடும் கேசம் கூட அவள் வலி அறியுமோ என்னவோ... அவளை தொந்தரவு செய்யாமல் மெதுவாய் அசைந்தாடிக் கொண்டிருந்தது.... பெண்ணவளின் அறை கதவு மெல்ல திறக்கப்பட.... இருள் சூழ்ந்திருந்த அவ்வறையில் வெளிச்சம் வர.... கண்களை மெல்ல திறந்தவளுக்கு உள்ளே ஒரு ஆடவன் வருவது புரிய.... மீண்டும் கண்களை இருக்கி மூடிக் கொண்டாள்.... வந்தவன் அவள் அருகில் அமர்ந்து அவள் கேசத்தை தொடப்போக..... சட்டென கனவு கலைந்து இமைகளை பிரித்தாள் அவள்....

சூரியனின் மாய கதிர்கள் கண்களில் படர.... ஆளை மயக்கும் காந்த விழி அழகாய் மின்ன... தன் சகோரிகள் எழுந்து நிற்பதை கண்டு தானும் அவர்களின் புத்துணர்ச்சியில் கலந்து கொள்ள.... கதிரையை விட்டு எழுந்தாள் இலக்கியா பெற்ற முதல் தேவதை அனுராதா....

ப்ரியா : குட் மார்னிங் கெர்ள்ஸ்...

இருவரும் : குட் மார்னிங் டீ..

அனு : ஹ்ம்... கீழ கேக்குர சௌண்ட பாத்தா... நம்ம தான் டாப்பிக் போலையே...

திவ்யா : அதுல உனக்கு சந்தேகம் வேறையா...

ப்ரியா : சரி என்ன பன்னலாம்...

அனு : வேற வழி அவளுங்களையும் இழுத்துட்டு கீழ ஓட வேண்டியது தான்...

திவ்யா ப்ரியா : ஓக்கே லெட்ஸ் கோ... என்றவாறு கதவை திறந்த மூவரும் வெளியே வர.... மற்ற பதினான்கு அறையையும் கண்டு கொள்ளாமல் அவர்களறையின் எதிரே உள்ள கதவை திறந்து கொண்டு பூனை நடையிட்டு உள்ளே நுழைந்தனர்....

அங்கும் ஏதோ குகைகக்குள் நுழைந்ததை போல இருளே அப்பி கிடக்க.... ஜன்னல் வரை சென்ற ப்ரியா இவள்களை பார்த்து கண்ணசைக்க... ரெடி என்பதாய் தலையசைத்த இருவரும் போர்வையில் கை வைக்க... ப்ரியா தீரை சேலையை இழுத்த அடுத்த நொடி அனுவும் திவ்யாவும் ஒரே நேரத்தில் போர்வையை இழுக்க.... அத்தீஸ் அம்மீஸ் என கத்தி கொண்டே எழுந்தனர் அந்த அறையில் சேர்த்து சேர்த்து போட பட்டிருந்த ஐந்து படுக்கைகளில் படுத்திருந்த நம் கதையின் கதாநாயகிகளான இருவத்தியோரு தங்க காரிகைகள்...

இது என்றும் நடப்பது தான் என்பதை போல் கத்தலை கேட்டதும் கீழிருந்த பெரியவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டனர்....

அஷ்வன்த் பவியின் மகள் வைஷ்ணவி சமுத்ரா (சமுத்ரா)

ரித்விக் மதுவின் மகள் சந்தியதர்ஷனா... (சந்தியா)

முகில் ஒவீயின் மகள் இக்ஷிதாஷினி (இக்ஷிதா)

அர்ஜுன் நிருவின் மகள் மதிமுத்ரா (மதி)

ரவி வீனாவின் மகள் மாயநந்தினி (மாயா)

ரனீஷ் ரக்ஷாவின் மகள் சங்கநந்தினி (நந்தினி )

வீர் தான்யாவின் மகள் நவ்யதரா (நவ்யா )

சரண் வர்ஷியின் மகள் நித்ரவிகா (நித்ரா )

அனு : போதும் போதும் கத்துனது ... மணி ஏழாகப்போகுது... எந்திரிங்க டி...

நந்தினி : என்ன அம்மி... இப்டி காலங்காத்தாலையே எழுப்பி விட்டுட்ட... தூக்கம் தூக்கமா வருது தெரியுமா என முகத்தை சுருக்கி சினுங்கி கொண்டே கூற...

ப்ரியா : மை டியர் மகளே... கீழ உங்க பாட்டி தாத்தாஸ் கிட்ட எங்கள ரொம்ப வருத்தெடுக்குறாங்க டி... இப்பவே நீங்க கெளம்பீட்டீங்கன்னா நாம ஓடீடலாம்...

நித்ரா : அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரம்லாம் ஓவர் அத்தீ...

ப்ரியா : அப்ரம் தண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்... வாங்க டி...

சந்தியா : அப்டி மட்டும் எதாவது செஞ்ச நைட்டு நைட்டு ஒரு மணிக்கெல்லாம் உன்ன தண்ணில போட்டு முக்கி எடுத்துருவேன் அத்தீ.. என கண்களை திறக்காமலே எச்சிரித்தாள்...

திவ்யா : அதெல்லாம் அப்ரம் தண்ணில போடலாம் இப்போ போய் முதல்ல குளிங்க டி... என முதலில் அமர்ந்திருந்த நவ்யாவையும் சந்தியாவையும் இழக்க...

நவ்யா : அத்தீ.. என் செல்ல அத்தீல இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறோமே ப்லீஸ்...

திவ்யா : இப்போ நோ செல்லம்... கெளம்பு கெளம்பு...

மதி : உன்ன வந்து வச்சிக்கிறேன் அத்தீ... வாங்க டி எருமைங்களா...

இக்ஷிதா : ஏ நான் தான் ஃபர்ஸ்ட்டு போவேன்... என குளியலறைக்குள் சென்று கதவை மூடி கொண்டாள்...

மாயா : அடியேய் அப்போ நாங்க எப்போ டி குளிக்கிரது...

அனு : ரூமுக்கு பஞ்ச வந்த மாரி பேசாதீங்க டி... அடுத்தடுத்து பத்து ரூமிருக்குள்ள... போய் குளிங்க டி... என வெளியே விரட்டி விட்டாள்...

ஏழ்வரும் செல்லமாய் முறைத்தவாறு செல்ல நம் அனு திவ்யா ப்ரியா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்...

ஆழி கடலின் பேரலைகள் ஆசையாய் வந்து கரையை அணைத்து கொள்ள... அதன் துரைமுகத்தில் ஆராவாரமில்லாமல் அமைதியாய் கிடந்தது ஒரு சிறிய படகு... அது அலைகளின் ஓட்டத்தில் இடதிலும் வலதிலும் அசைந்தவாறு கிடக்க.... அடுத்த நொடி அப்படகை கடந்து சென்ற அதிவேகமான காற்றில் அப்படகு அலைகளில் கவிழ்ந்து விழுந்தது...

காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுப்பதை போல் யாரோ சிலர் அதி வேகமாய் அந்த கரையில் ஓடி கொண்டிருக்க... அவர்களின் வேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் அவர்கள் முன் தரை இறங்கியது ஒரு பருந்து....

அப்பருந்தை கண்டவர்கள் மண்ணில் காலை சீரி கொண்டு ஓட்டத்தை நிறுத்த... அவர்கள் இமை மூடி திறக்கும் நொடி பொழுதில் இப்போது அந்த பருந்தினருகிலே புன்னகையுடன் பாதி தொப்லாய் நனைந்தவாறு சிவந்த நிறத்தில் கண்கள் பளபளக்க நின்றான் அந்த ஆறயடி ஆணழகன்...

இருவத்தி ஏழு வயதினருக்கு ஏற்ற உயரத்தில்... கட்டுமஸ்த்தான உடல் இருக... மாநிறத்தில் இருகிய இதழ் விரிய... ஓடி வந்த ஒரு ஆண்மகன் தாவி குதித்து முன்னிருந்த ஆணின் மேலேர... அருகிலிருந்த பருந்து விண்ணில் சீரி பறந்தது...

தன் மேல் தாவியவனை அலேக்காய் பிடித்த அவன் தண்ணீரில் தூக்கி போட... அவன் விழுந்த வேகத்தில் இவனும் அதே தண்ணீரில் விழ... " டேய் துரு " என்ற பெண்ணின் குரல் அவ்விடத்தில் ஓங்கி ஒலிக்க.... கீழே விழுந்த இருவரும் ஓட்டம் பிடித்திருந்த ஆண்களணியும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்தது...

அங்கோ சிவந்த பளிச்சென்ற நிறத்தில் அழகான கருப்பு சேலையில்... முதுகை தாண்டிய கூந்தல் கழுத்தை உரச... இவர்கனைவரையும் முறைத்தவாறு நின்று கொண்டிருந்தாள் அதே பேரழகி நம் மாயமோகினி...

இவளின் அழைப்பில் இரண்டாவதாய் அலைகளில் விழுந்தவன் பேந்த பேந்த முளித்தாலும் இதழ் புன்னகையில் விரிய சிரித்தவாறு எழுந்து நின்றான் அந்த பெண்களை கவரும் மண்ணவன்.. இருவத்தி ஏழு வயதை எட்டிய நம் மாயமோகினியின் ஆசை மகன் துருவன்..

அவனோடே கள்ள புன்னகையை வீசியவாறு எழுந்தான் அவன் ஆருயிர் நண்பனும் நம் கதையின் ஒரு கதாநாயகனுமான  கார்த்திக்...

இப்போது மோகினியின் பார்வை அந்த ஆண்கள் கூட்டத்தினரின் மீது திரும்ப.. அதற்கு முன்னே அக்கூட்டம் கடலை நோக்கி விடு ஜூட் என ஓட தொடங்கியிருந்தது...

மோகினி : டேய் என கத்த... அவர்களனைவருமே கடலில் மறைந்திருக்க.... மோகினியின் பார்வை கூராக... தூரத்தில் எழுந்த ஒரு பெரும் அலையில் துள்ளியவாறு எழுந்து சர்ஃபிங் போட்டில் கீழ் நோக்கி குதித்தவனை கண்டதும் இவர்கள் ஒரே நேரத்தில் அஷ்வித் என கத்தினர்...

தன் அலையலையான கேசம் நீரில் நனைந்திருக்க... கட்டுக்கோப்பான தேகத்தை குளிர் காற்று தீண்டி விட்டு செல்ல.... நிமிர்ந்து நின்றவாறு இவர்களை பார்த்து கண்ணடித்தான் நம் ரித்விக் மதுவின் இறுவத்தியாறு வயதான தலை புதல்வன் அஷ்வித் கரண்....

அவன் மேல் வேறொரு சர்ஃபிங் போட்டில் தாண்டி குதித்து கடலில் மூழ்கி மீண்டும் தாவி வந்தான் ஒரு ஆறடி ஆணழகன்.... அவனை வேறொரு பெரும் அலை பின் தொடர... அதை கண்ட மோகினி பயத்தில் " மிதுன் " என கண்களை மூடி கத்தி விட.... அவள் கண்களை திறக்கும் போது அந்த பெரும் அலையின் மேல் அஷ்வித்தின் பக்க வாட்டில் இவளை பார்த்து அழகாய் புன்னகைத்தவாறு கண்ணடித்தான் அந்த மன்மதன் நம் சரண் மற்றும் வர்ஷியின் இருவத்தி ஆறு வயதான தலை மகன் தேவமிதுன்..

மோகினி : கீழ வாங்க டா முதல்ல... என இங்கிருந்து கத்த...

" நோ சான்ஸ் அத்து " என கத்தி கொண்டே அலைகளில் பாய்ந்தான் அந்த கட்டுக்கோப்பான இருகிய தேகத்தின் உரிமையாளனான குறும்பு மன்னனும் புன்னகையில் மங்கையரை மயக்கும் அழகனுமான ரனீஷ் ரக்ஷாவின் தலை மகன் அருண்தேவ்

மோகினி மூக்கு முட்ட மூவரையும் முறைக்க... அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு ஒரே நேரத்தில் பின்னோக்கி நகர... அவர்கள் பின்னிருந்து மேல் குதித்து ஆறடி உயரத்தில் அழகான முக அம்சங்களுடன் நிமிர்ந்த தேகத்தில் நீர் துளிகள் குடியேற மென்புன்னகையுடன் இருவத்தி ஆறு வயது அழகனாய் அஷ்வன்த் மற்றும் பவியின் தலை மகன் மதி மித்ரன்...

அவன் பின் அவனது சர்ஃபிங் போட்டில் ஒரு காலை மேல் வைத்தவாறு மற்றொரு காலை கடலில் தேய விட்டு சிரித்தவாறு வந்தான் ஒரு அழகன்...

ஆளை கவரும் அழகான கண்கள்... சிரிப்பிலே மயங்க வைக்கும் அழகனென கம்பீரத்துடன் நின்றான் ரவி வீனாவின் தலை மகனான இருவத்தியாறு வயது ஆணழகன் வருண் ஷிவ்...

இவ்வைவரின் தலையையும் பிடித்து ஆட்டுவதை போல் மோகினி இங்கு செய்கை செய்ய... அவ்வைவரின் மேலும் " தோ நா வரேன் மம்மி " என கத்தியவாறு சர்ஃபிங் போட்டிலே குதித்தான் அந்த அழகன்... தந்தையை போல் தனையனும் புன்னகையில் ஆளை மயக்கும் மன்னவன்... அவன் வீர் மற்றும் தான்யாவின் இருவத்தி ஆறு வயதான தலை மகன் ஆதவ்தரன்...

அவன் போவதற்குள் அவன் முன் நீரிலிருந்து தாவி எழுந்தனர் ஒட்டி பிறந்த இரெட்டையன்களின் தனி தனி தலை மகன்கள் ....

முகில் ஒவீயின் ஆறடி ஆண்ழகனான இருவத்தியாறு வயது அன்பார்ந்த தங்க மகன் ராகவசரண்...

அர்ஜுன் நிருவின் அறடி ஆணழகனான இருவத்தியாறு வயது அதிபுத்திசாலி மகன் ராம்சரண்...

மோகினி : இப்போ வரலன்னா மதியம் சோறு போட மாட்டேன் டா... என கரராய் கத்த....

சோறென்றதுமே ஒரே நேரத்தில் திரும்பிய நம் நாயகன்கள் அதிவேகத்தில் கரையை அடைந்து மோகினியிடம் சமத்தியாய் வாங்கி கொண்டார்...

கார்த்திக் : சோறுன்ன உடனே வந்து மானத்த வாங்கீட்டீங்க டா...

அருண் : மானமா சோறான்னு பார்த்தா எங்களுக்கு சோறு தான் டா முக்கியம்....

மிதுன் : அம்மு சாப்பாடெங்க... என பறபறக்க

மோகினி : காலங்காத்தாலையே இவ்ளோ சேட்டை பன்னதால காலை சாப்பாடு கட்டு... வேணும்னா காஃபீ போட்டு நீங்களே குடிங்க...

கார்த்திக் : அத்தமா நோ..

மோகினி : நோன்னா நோ தான்... டுடே நோ ப்ரேக்ஃபாஸ்ட்...

ஆதவ் : அம்மு உன் மகன் பாவம் இல்லையா... நீ கூப்பட்டதுமே நான் வந்தேன்ல.. இந்த வெள்ளை குரங்குங்க தான் என்ன விடல..

மோகினி : நா முன்னாடி கூப்ட்டப்பலாம் என்ன டா பன்ன.... என இடுப்பில் கை வைத்து முறைக்க...

ஆதவ் : இந்த தீரா பக்கி இன்ட்ரோ குடுத்ததும் போன்னு புடிச்சு வச்சிட்டா அம்மு...

தீரா : அச்சச்சோ மாட்டி விட்டுடான்...

மோகினி : குட்டிமா...

தீரா : ஈஈஈ அதான் விட்டுட்டேன்ல என்ன விட்டுடு மோகினிமா...

மித்ரன் : அப்டியே எங்களையும் விட்டுடு அம்முமா...

மோகினி : ஹ்ம் சரி... ஆரம்பத்துல முடியாதுன்னு ஒருத்தன் கத்துனானே எங்க அவன் என நோட்டம் விட்டவாறு கேட்க... கீழே குனிந்து தப்பி ஓட முயன்ற அருணை பிடித்து தூக்கி காண்பித்த வருண்...

வருண் : இங்க இருக்கான் அத்து...

அருண் : பாவி... சகோதரன மாட்டி விட்டியே டா... என புலம்பி விட்டு மோகினியை பார்த்து ஈஈஈ என இழித்தான்.... அவனை ஒரு சில நொடி முறைத்த மோகினி பின் சிரித்து விட்டு... காதை திருகி

மோகினி : படவா .... வாங்க சாப்டலாம்...

அஷ்வித் : ஹையா ஜாலி... என்ன சாப்பாடு அம்மு...

அருண் : மாட்டுனது என் காதுல உனக்கு ஜாலியா தான் டா இருக்கும்... என காலால் முதுகிலே இடித்தான்...

அஷ்வித் : எரும போடா அந்த பக்கம்...

மோகினி : சரி சரி போதும் சண்டை... இன்னைக்கு பூரி வித் குர்மா...

துருவன் : ஐ சூப்பர்.... வாங்க வாங்க போவோம்...

" டேய் கணக்குல என்ன விற்றாதீங்க டா " என சத்தம் கேட்டு அனைவரும் திரும்ப.... அங்கோ இவன்கள் செய்த அட்டூழியங்களினால் நீரில் மூழ்கி தொப்பலாய் நனைந்து கடலில் இருந்து இப்போதே பாடு பட்டு எழுந்து வந்திருந்த மாயமோகினியின் காதல் கணவன் ராஜவளவன்...

கார்த்திக் : உங்கள விடுவோமா மாமா கமான்... என தள்ளி கொண்டு ஓடினான்.... சரியாக துருவின் ஃபோன் அடிக்க... அதில் முகிலின் படம் ஓளிரியது...

துருவன் : ஹே முகி மாமா அடிக்கிராரு...

மோகினி : ஆன் பன்னு டா... என கூறியதும் அவன் அட்டென் செய்ய... வீடியோ காலில் நம் முதல் அணி நாயகன்கள் இருந்தனர்....

வளவன் : ஹாய் பாய்ஸ்...

அர்ஜுன் : ஹாய அண்ணா... எப்டி இருக்கீங்க...

மோகினி : டேய் இளவா... நைட்டு தான டா பேசுன...

சரண் : எப்போ பேசுனாலும் எங்களுக்கு பல நாள் களிச்சு பேசுர மாரி தான் இருக்கு அண்ணி...

துரு : இருக்கும் சிச்சா இருக்கும்...

ரனீஷ் : மை டியர் ப்ரின்ஸ் எப்டி டா இருக்க...

வருண் : ஏன் உனக்கு எங்களல்லாம் தெரியலையா சிச்சா...

ரனீஷ் : நல்லா தெரியிரியே டா மகனே...

ஆதவ் : அப்ரமென்ன மாமா அவன மட்டும் கேக்குர...

ரனீஷ் : அவன் தான டா என் முத மருமகன்...

கார்த்திக் : தந்தையாரே அப்போ நானு...

ரவி : நீ முதல் மகன் டா...

தான்யா : போதும் போதும் ஃபோன குடு அண்ணா... டேய் பசங்களா மோகினிமாட்ட ஃபோன குடுங்க...

மோகினி : சொல்லு தான்யாமா..

ரக்ஷா : அண்ணி இன்னைக்கு என்ன எல்லாரும் வெளிய நிக்கிரீங்க..

வளவன் : எல்லாம் உன் புள்ளைங்க பன்ன அட்டூழியம் தான் தங்கச்சி...

நிரு : இன்னைக்குமா...

மது : என்னைக்கு இல்லாம இருந்துருக்கு இவனுங்களோட சேட்டை...

மிதுன் : அதெல்லாம் சரி... அத்தீஸ்ட்ட பேசுனீங்களா இல்லையா ...

வர்ஷி : என் உனக்கிந்த டௌட்டு...

ராகவ் : என் தங்கச்சிய பத்தி கேக்க தான் வேற எதுக்கா இருக்க போகுது அத்து...

மிதுன் : நா என் முறை பொண்ண பத்தி கேப்பேன்... உங்களுக்கு என்ன டா...

அஷ்வன்த் : என் மகன் அப்டியே என்ன மாரி இருக்க டா... வாழ்க வளமுடன் மகனே...

மிதுன் : டன்க்யு தகப்பா...

சரண் : டேய் மகனே... உனக்கு அங்க தங்கச்சிங்க இருக்காளுங்க அதாவது நியாபகம் இருக்கா...

மதி : ஏன் இல்லாம... துரு காலைல அத்தீஸ்ட்ட பேசுனப்பவே நாங்க ஒட்டுகேட்டு அவங்கள பத்தி கேட்டுட்டோம் சித்தா...

இதை கேட்ட நாயகர்கள் அனைவரும் ஒரு நொடி அனைவரையும் அதிர்ச்சியுடன் பார்த்து விட்டு அடுத்த நொடியே அதை காட்டி கொள்ளாமல் துருவை பார்க்க... அவன் கண்ணசைத்து எதுவும் அசம்பாவிதம் இல்லை என கூறினான்... பின்னே அவர்களுக்கு மூச்சு வந்தது...

ஒவீ : சரி பசங்களா நீங்க போய் சாப்புடுங்க... நாங்க அப்ரமா காள் பன்றோம்...

ஆதவ் : சரி அத்து டாட்டா... என காளை கட் செய்தனர்....

ஆம் நம் இரண்டாம் அணி நாயகன்கள் பிறந்து பல வருடம் கடந்திருந்தது.... இவ்வருடத்துடன் அவர்கள் அனைவருமே இருவத்தியாறு வயதை அடைந்திருந்தனர்... எட்டு பேருக்குமே சில மாதங்கள் மற்றும் நாட்கள் தான் வயதில் வித்யாசம்... நாயகிகளும் அவ்வழியே... நாயகன்களின் நான்காம் வயதிலிருந்து ஐந்தாம் வயதினடையில் பிறந்தனர்...

வேதபுரத்தில் பெருமூச்சரித்தவாறு அமர்ந்த நாயகன்கள் அமைதியாய் இருக்க... நாயகிகள் அவரவர் கணவனின் தோளில் அழுத்தம் கொடுத்து நம்பிக்கையூட்டி சமையலறை பக்கம் சென்றனர்...

சில நிமிடங்கள் கண்களை மூடி திறந்த நாயகன்கள் இமைகளை பிரிக்க... அவர்கள் முன் செவுரில் பெரிதாய் ஒரு புகை படம் மாட்டப்பட்டிருந்தது.... அதை கண்டதுமே நாயகன்கள் அனைவரின் மனமும் சொல்லேனா துயரில் ஆழ்ந்தது....

அதில் முதலில் தன் கூர்மையான கண்களிரண்டும் சிரிக்க... கட்டுக்கோப்பான தேகம் இருக... இளதிலும் கம்பீரமாய் அவன் நிற்க.... அவனை அடுத்து தன் அழகான வசீகரமான புன்னகையை சிந்தி கட்டுமஸ்த்தான தேகம் நிமிர்ந்திட அவன் நிற்க... அவனருகில் வாலில்லா குறங்கென பட்டம் பெற்றவன் நாக்கை துரித்தி கண்ணடித்தவாறு அழகனவன் சிரித்தவாறு நின்றிருக்க... அம்மூவரின் கீழும் அவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு பூ மாலை ஆடி கொண்டிருந்தது...

யுவக்ரிஷ்ணன் இந்திரஜித் சத்தீஷ்வரன்

மாயம் தொடரும்...

எல்லாரும் உடனே போர் கொடி தூக்கீராதீங்க... கதையின் நியதி அது தான்... நிறைய கரெக்ட்டர் இருக்குர மாரி தோனும்னு நெனக்கிறேன்.... பட் இவங்க எல்லாரும் தான் மெய்ன் கரெக்ட்டர்ஸ்.... குழப்புச்சுன்னா சொல்லுங்க... யாரு யாரோட புள்ளைங்ககைன்னு தனி யூடி போடுறேன்.... யாரு யாரோட பருங்குரதையும் தனீ யூடில சொல்றேன்.. மறக்காம யூடி எப்டின்னும் சொல்லிட்டு போங்க.... பெரிய யூடி போட்டு கழுத்தறுத்துருந்தா பாப்பாவ மன்னிச்சிடுங்க... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro