மாயம் - 19
சற்று நேரம் முன்பு உண்மையில் நடந்தது என்ன...
தர்மன் ஐயா சட்டென வீட்டிற்குள் வரவும் நாயகிகள் உடனே எழுந்து அவரை வரவேற்றனர்..
நாயகிகள் : வணங்குகிறோம் தர்மன்ஐயா என தலை பணிந்து மரியாதை அளித்தனர்..
தர்மன் ஐயா : வணங்குகிறேன் நாகனிகள் மற்றும் யாளி வம்ச வீராங்கனைகளே என அவர்களுக்குரிய மரியாதையை அளித்தார்..
ரக்ஷா : திடீர் விஜயம் ஏன் தர்மன் ஐயா.. சந்திக்க வேண்டுமெனில் செய்தி அனுப்பியிருக்கலாமன்றோ.. யாமே ஷேஷ்வமலையை அடைந்திருப்போமல்லவா...
தர்மன் ஐயா : இருக்கட்டும் யாளி வீராங்கனையே.. இதை ஆரப்போட சரியான நேரமில்லை.. உடனே கலந்துரையாட வேண்டுமெனவே யானே இங்கு வரவளித்தேன்..
மோகினி : சரி கதிரையில் அமருங்கள் ஐயா.. என்கவும் அவர் அமைதியாய் அமர்ந்து சில நிமிடங்கள் மௌனமாயிருந்தார்..
நிரு : ஐயா என இழுக்க...
தர்மன் ஐயா : பஞ்சலோக சூரர்கள் நம் மண்ணில் காலடி பதித்ததை தாம் அறிவீர் தானே என கண்களில் கேள்வி குறியை தேக்கி வினவினார்...
அனு : அறிவோமையா...
தர்மன் ஐயா : பஞ்சலோக சூரர்களென யான் இரட்சகன்களையும் இணைத்தே வினவினேனம்மா...
அனு : அறிவேன் ஐயா.. யாம் பஞ்சலோக புத்திரன்களான பராக்ரம வீரன்கள் மற்றும் இரட்சகன்கள் இம்மண்ணில் தங்கள் காலடி தடங்களை பதித்து விட்டனர் என முன்னமே அறிவோம்...
தர்மன் ஐயா : ம்ம் நல்லது நல்லது என்றவர் எதையோ கூற தயங்கி கொண்டே தான் இருந்தார்...
பவி : தாம் ஏன் தயங்குகிறீர் தர்மன் ஐயா... கூற வருவதை வெளிகாட்டுங்கள்..
தர்மன் ஐயா : ஹ்ம் கோவன்களின் நினைவு தினம் ஒரே திங்களில் வர விருப்பதை தாம் அறிவீர் தானே என்றதும் அனைவரும் தலையாட்டினர்..
மது : ஒவ்வொரு ஆண்டும் அத்தினமன்று யாம் ஷேஷ்வமலை வருவது வழக்கம் தானே ஐயா.. பின் எவ்வாறு இவ்வாண்டு அதை மறவோம்..
தர்மன் ஐயா : ஹ்ம் உண்மை தானம்மா ஆயினும்..... மூன்றாம் நாகனியே இன்னமுமா தாம் எதிர்காலத்தில் நிகழ உள்ளதை காணவில்லை என நேராக விஷயத்திற்கு வந்து ப்ரியாவை ஏறிட்டார்...
ப்ரியா : பராக்ரம வீரன்களான எமது புத்திரன்களை ஏதோ ஒரு போர்களத்தில் இருப்பதை போல் ஒரு காட்சியை தவிர்த்து வேறெதையும் யான் காணவில்லை ஐயா என ஒரு குழப்பத்துடன் கூற தர்மன் ஐயாவிடமிருந்து கவலை கலந்த ஒரு பெருமூச்சு வெளிவந்தது...
தர்மன் ஐயா : இன்னும் இரு திங்களில் வர இருக்கும் கோவன்களின் ஜனன தினமான மதிநட்சத்திரத்தில் இந்த யட்சினி வம்சத்தினர் எதையோ திட்டம் தீட்டி நிகழ்த்த உள்ளனர்.. மெய்யாகவே அவர்கள் எதை சித்தத்தில் பொருத்தி சகாயம் செய்கின்றனர் என்பதை அறிய இயலவில்லையம்மா.. யாம் அனைத்திற்குமே எச்சிரிக்கையுடன் இருத்தல் அவசியம்.. தற்போது உயிர்த்தெழுந்த யட்சினி சர்ப்ப வம்சம் நம்மிடத்திலிருந்து இருவது வருடம் முன் கோவன்களை பிரித்து சென்றனர்.. ஆயினும் அதன் பின் அவர்கள் ஏதும் ஈட்டாமல் இருப்பதன் விசனம் யாதெனவும் அறியவில்லை... ஆனால் நுப்பது வருடங்கள் பின் மீண்டும் மதிநட்சத்திரம் வர உள்ளது ... இது ஈடேர துளியும் வாய்ப்பில்லை ஏனினும் கோவன்கள் உயிருடன் இல்லாத பொழுதே மதிநட்சத்திரம் வருவதால் நம்பும் அவசியமும் நமக்குள்ளது.. இதன் படி பார்க்கையில் விரைவில் மதிநட்சத்திரமன்று யஜ்னுவர்த மலரை அபகரிக்க எண்ணலாம்.. ஆனால் அதற்கான வழியின் தேடல் நீண்டு கொண்டே இருப்பதால் அதை அபகரிக்க அவர்களால் இயலாது.. ஆதலால் அதே நாளன்று கோவன்களின் சக்திகளையும் விட உயர்வான சக்திகள் கிடைக்க வேண்டி உலகின் ஐம்பெரும் வம்சங்களான மகாவம்சம் சஹாத்திய வம்சம் நாகதாரணி வம்சம் யாளி வம்சம் மற்றும் பஞ்சலோக வம்சத்தை பலி கொடுக்க திட்டமிடலாம்.. இதில் முன்னமே கோவன்களை அவர்கள் மடிய செய்ததனால் அவர்களின் அடுத்த குறி நிச்சயம் தங்கள் நாழ்வர் வம்சத்தின் மீதே இருக்கும்.. ஆதலின் தாம் மிகுந்த எச்சிரிக்கையுடன் இருக்க வேண்டும்..
நாயகிகள் : ஆகட்டும் ஐயா..
அனு : ஆயினும் தாம் ஏதோ மறைப்பதை போல் உள்ளதே தர்மன் ஐயா...
தர்மன் ஐயா : மாற்றான் மனதை வாசிக்கும் திறன் அறிந்த முதலாம் நாகனிக்கு எம்மனதை வாசிக்க இயலவில்லையா தாயே..
அனு : யான் மாற்றான் மனதை வாசிப்பதை நிறுத்தி இருவது வருடங்கள் கடந்து விட்டது தர்மன் ஐயா என்றவளின் முகம் நொடி கணக்கில் ஒரு புது உணர்வை பிரதிபலித்தது...
தர்மன் ஐயா : ஹ்ம் இந்நாழிகையில் வீட்டில் ஒரு நற்செய்தி சொல்வது நன்னர் காலமாய் அமையும்.. தம் புத்திரன்களும் புத்திரிகளையும் இனி தொலைதூரம் அனுப்பி வைக்க அவசியமன்று.. விருப்பமிருப்பின் புத்திரகளுக்கு திருமணத்தை நிச்சயித்து மதிநட்சத்திரத்திற்குள் ஈட்ட நினையுங்கள்.. அந்த புதிய பந்தம் உறவுகளை காக்கும் வளையத்தினை உருவாக்கும்...
வர்ஷி : இவை பற்றி யாமே உம்மிடம் உரையாட எண்ணினோம் தர்மன் ஐயா.. திருமணம் நிகழ்வதால் எம் புத்திர புத்திரிகளுக்கு இன்னல் ஏற்படாதல்லவோ...
தர்மன் ஐயா : நிச்சயம் இல்லையம்மா.. நீர் விருப்பப்பட்டால் இன்றே கூட தம் புத்திரிகளுக்கு மணாளனை நிச்சயிக்கலாம்...
மது : பின் ஏன் தாமதிக்க வேண்டும்.. உடனே சஹாத்திய சூரர்களுக்கு இதை பற்றி அறிவியுங்கள் என்ற சில நிமிட நேரங்களில் ரவி வீர் சரண் பராக்ரம வீரன்களை தேடி ரக்ஷவனுடன் கானகத்திற்கு சென்றனர்...
கயலின் பின் நந்தினியே மூத்த பெண் என்பதால் அவளிடமே சம்மதம் கேட்க அவளோ முதலில் பேந்த பேந்த முளித்தவள் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் உறைந்திருந்தாள்..
கோவன்களின் விருப்பம் ஆதலாலே இத்துனை விரைவில் செய்கிறோம் என்ற பாதி உண்மையையும் கூறி அவளுக்காய் குடும்பமாய் தேர்ந்தெடுத்த மணமகனின் புகைபடத்தை அவளிடமே கொடுத்து விட்டு சென்றனர்..
சில நிமிடங்களில் செய்தி கனடாவில் உள்ள பெற்றோர்களுக்கு செல்ல அவர்கள் எந்த ஒரு மறுப்புமின்றி ஒத்துழைத்தனர்..
நந்தினி தன் காலமான தந்தைகளின் விருப்பம் என்றதில் மறுப்பு தெரிவிக்க இயலா நிலையில் இருந்தாள்... அவள் மௌனத்துடன் சம்மதம் கூறவுமே ஏற்பாடுகள் நடக்க தொடங்கி பராக்ரம வீரன்களும் வீட்டை அடைந்திருந்தனர்...
அஷ்வித்தை பின் தொடர்ந்து அவனறைக்குள் நுழைந்த மித்ரன் தன் சகோதரனும் தோழனுமான அவனின் வலியை எண்ணி கவலை கொண்டான்..
மித்ரன் : டேய் மச்சான் மாமா கிட்ட சொல்லலாம் டா... நீ ஏன் இப்டி இருக்க வா...
அஷ்வித் : இல்லடா அவ என்ன காதலிக்கிறாளான்னு கூட தெரியல... அதோட இது க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மாமாவோட ஆசைன்னு சித்தி சொல்றாங்க.. அப்டி இருக்க இப்போ நா என் விருப்பத்த சொன்னாலும் அவ என்ன எப்போ விரும்புவா.. அதுக்குள்ள மாமாக்களோட நினைவு நாளே போய்டும் டா.. ஒரே வாரத்துல என்னால ஒன்னுமே பன்ன முடியாது...
மித்ரன் : டேய் உன் காதல்ல நீயே நம்பிக்கை வைக்காம இருந்தா எப்டி டா...
அஷ்வித் : என் காதல பத்தி உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும்.. அதனால அத இப்பவோ மனசுல புதைச்சிடு... என் சதி சந்தோஷமா இருந்தா எனக்கு போதும்...
மித்ரன் : டேய் நந்து முகத்த நீ பாத்தல்ல.. அவளுக்கே இதுல ஏதோ விருப்பம் இல்லாத மாரி தான் டா இருக்கு...
அஷ்வித் : ம்ச் இவ்ளோ சீச்க்கிரம் கல்யாணம் நடக்க போகுதேன்னு அவ அந்த பதட்டத்துலையும் பயத்துலையும் அப்டி இருப்பா டா... நீ என் மனச கலைக்காத போய் ரெடி ஆகு போ என சொல்ல சொல்ல கேட்காமல் மித்ரனை வெளியே துரத்தி விட்டு ஷவரினடியில் போய் நின்றான்...
அவனுடலை தழுவி செல்லும் நீருடன் அவன் கண்ணீரும் கரைந்தது...
நந்தினியை தோழிகள் அனைவரும் புடை சூழ தயார் செய்து கொண்டிருந்தனர் அவள் கடமைக்கென சிரித்து கொண்டிருந்தாள்... மலர் சூடுவதற்காக வெளியே செல்ல வேண்டி அறை கதவை திறந்த வைஷு முளிக்க அவளுக்கு முன் கதவை தட்டலாமா வேண்டாமா என வருண் நின்றிருந்தான்...
இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு முளிக்க வருண் பின் நின்ற அருண் அவனை போட்டு உலுக்கினான்..
அருண் : டேய் நாயே..
வருண் : ஆஆ என்ன டா...
அருண் : உள்ள போய் தொல... அவ எப்பையோ ஓடீட்டா...
வருண் : ஓடீட்டாளா என உள்ளே பார்த்த வருண் அங்கு வைஷு இல்லாததை கண்டு அசடு வலிந்து விட்டு உள்ளே சென்றான்...
அவ்விருவர் பின்னேயே வந்த ராகவும் ராமும் உள்ளிருந்த நாயகிகள் அனைவரையும் வெளியே விரட்டினர்...
நந்தினி : வாங்க ப்ரோஸ் என்ன இந்த பக்கம் என இவள் சாதாரணமாய் கேட்க...
வருண் : ஏன் குட்டிமா உனக்கு உண்மையாவே கல்யாணத்துல இஷ்டம் இருக்கா.. என கேட்க..
நந்தினி : ஏன் அண்ணா இப்டி கேக்குர இல்லாம தான் ஒத்துக்கிட்டு இப்போ இப்டி இருக்கனா...
வருண் : உண்மையாவா
ராம் : பட் வேற ஏதோ கவலை தெரியிதே டா உன் முகத்துல...
நந்தினி : காம்பக்ட் பத்தலையோ என கன்னாடியை பார்த்து கேட்க... அருண் அவள் மண்டையில் வலிக்காமல் கொட்டினான்...
அருண் : கொழுப்பா உனக்கு உண்மைய சொல்லு ...
நந்தினி : ஆஆ இதென்ன நியாயம்... உண்மைய சொன்னா நம்பாம உண்மைய சொல்லுன்னு அடிக்கிறீங்க... இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்...
ராகவ் : நாளைக்கு அர்ஜு அப்பாட்ட கேஸ் குடு அவரு எங்கள தூக்கி ஜெயில்ல போடுவாரு... இப்போ நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லு...
நந்தினி : ஆஹா என் சகோதரன்களுக்கு என் மேல எவ்ளோ பாசம் உண்மையா தான் அண்ணா சொல்றேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல...
வருண் : ம்ச் உண்மையா தான் சொல்றியா...
நந்தினி : ஆஹா ஏன் டா அண்ணா நீ இத்தன முறை கேக்குர... போ போய் கெளம்புர வேலைய பாரு.. தங்கச்சி நிச்சயத்துல என் அண்ணனுங்க நாழு பேரும் ஹீரோ மாரி இருக்க வேண்டாமா... கெளம்புங்க கெளம்புங்க... அர மணி நேரத்துல கெளம்பி வந்துருக்கனும் கீழ என அவன்களை பேசவே விடாமல் வெளியே துரத்தி கதவை மூடினாள்...
பின் எவ்வளவு நேரம் அவளாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியும்... வருண் " உண்மையா தான் சொல்றியா " என ஒரு வித கவலையுடன் கேட்ட மூன்று முறையும் அவன் மடியில் படுத்து " எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல அண்ணா " என கத்தி அழ வேண்டும் போலிருந்தது.. இருந்தும் அதை தன் குடும்பத்திற்காக மறைத்து கொண்டு எதுவும் நடவாததை போலவே பாவித்து கொண்டாள்...
ஆனால் அவளறியவில்லை அவள் தந்தைமார்களே தங்கை எவனை விரும்புகிறார்களோ அவனை கடத்தி வந்தாவது கட்டி வைக்கும் போது இருவரின் விருப்பமும் தெரியும் போது இவர்களை பிரித்து விடுவார்களா என்ன...
நம் முதலணி நாயகர்கள் ஒரு ஒருவரும் ஒவ்வொரு வேலையில் சுற்றி கொண்டிருந்தனர்... தான்யா மது பவி மூவரும் மனமகளுக்கு புடவையும் நகையும் எடுக்க சென்றிருந்தனர்... அனு நிரு இருவரும் நிச்சயத்தை குறிக்க வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர்... ஒவீ வீனா ரக்ஷா பார்த்து பார்த்து நந்தினிக்கு அனைத்தும் செய்து கொண்டிருந்தனர்... திவ்யா வர்ஷி ப்ரியா மூவரும் தடபுடலாய் சமைத்து கொண்டிருந்தனர்...
இன்றும் என்றும் இளமை மாறா அதே கம்பீரமான நடையில் நம் சஹாத்திய சூரன்கள் அவர்களின் வேஷ்டி சட்டைகளில் பேரழகன்களாய் இறங்கி வர.. வேஷ்டி சட்டையில் நம் முதலாம் அணி நாயகன்களுக்கு டஃப் கொடுப்பதை போல் அக்மார்க் புன்னகையுடன் இறங்கி வந்தனர் நமது இரண்டாம் அணி நாயகன்கள்...
அரை மணி நேரம் முடிய நந்தினி அவள் தோழிகள் புடை சூழ வலியை மறைத்த அழகான புன்னகையுடன் அழகே பொறாமை கொள்ளும் பேரழகுடன் கீழே இறங்கி வந்தாள்...
எவ்வளவு தான் அவள் தன்னவள் இல்லை என மனதுக்கு சாட்டை அடி கொடுத்தாலும் சேலையில் முதல் முறை கண்ட பெண்ணவளை அஷ்வித்தின் கண்களால் பார்க்காமல் இருக்க முடியவில்லை... இமைக்காமல் அவளையே பார்த்திருந்தவனை ஒரு முறை நிமிர்ந்து நோக்கிய நந்தினியின் விழிகளில் பல அர்த்தங்கள் மறைந்திருந்தது...
என்ன தான் இருவருமே அவர்களின் முகத்தில் ஃபௌண்டேஷனே போடாத குறையாக அழுத தடம் தெரியாமல் மனதின் வலியை முகத்தில் காட்டாமல் மகிழ்வுடன் இருப்பதை போல் காட்டி கொண்டாலும் அந்த சிரிப்பு கண்களில் தெரியவில்லை...
நந்தினியின் விழிகள் " நீயாவது ஏதேனும் பேசுவாயா.. " என்பதா போல் அஷ்வித்தின் விழிகளிடம் வெறும் ஒரே ஒரு நொடி மட்டும் மௌனம் பேசியது.. அடுத்த நொடியே அவள் பார்வையை விலக்கி கொண்டாள்..
அஷ்வித்திற்கு அந்த பார்வையின் அர்த்தம் விளங்கியதோ விளங்கவில்லையோ மனதில் இன்னும் பாரம் குடி கொண்டது.. நந்தினியை ஒரு பக்கத்தில் அமர வைத்து அவளருகில் ரனீஷ் ரக்ஷா தம்பதிரும் ரவி வீனா தம்பதியரும் தாய் தந்தை என்ற பதவியினால் அமர்ந்தனர்.. அவர்களருகிலே முகில் ஒவீ மற்றும் அர்ஜுன் நிரு தம்பதியினரும் அப்பா அம்மா முறையில் அமர்ந்திருந்தனர்... அவர்கள் பின் வருண் அருண் ராகவ் ராம் மாயா இக்ஷி மற்றும் மதி நின்றனர்..
அவர்களுக்கு முன் நந்தினிக்கு தாய்மாமான் முறையுள்ள வீர் அஷ்வன்த் சரண் அமர்ந்திருந்தனர்... அவர்கள் பின் மித்ரன் ஒரு தீவிரமான முகத்துடன் அஷ்வித் குழப்பமான முகத்துடன் நின்றிருந்தனர்... மிதுன் ஆதவ் ஒரு புன்னகையுடன் நின்றிருந்தனர்... வைஷு சந்தியா நவ்யா நித்ரா நாழ்வரும் நந்தினியை அத்தை மகள் என்றதனால் நையாண்டி செய்து கொண்டிருந்தனர்... வளவனும் மோகினியும் அனைவரையும் அடக்கும் பொருட்டு பெரியவர்களாய் தத்தமது வேலையை செய்து கொண்டிருந்தனர்... மோகினி தன் மகன்கள் மூவரும் ஊருக்கு வராததால் அவர்கள் மேல் கடுங்கோவத்தில் வேறு இருந்தாள்... கயலே தன் அண்ணன்களுக்காய் பரிந்துரை ஆற்றி சமாளித்து வைத்திருக்கிறாள்...
அஷ்வித்தின் கண்கள் குழப்பமாய் சுழலும் போதே " மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தாச்சு " என கத்தி கொண்டே விதுஷ் உள்ளே ஓடி வந்தான்...
இவன் எப்போ வந்தான் என அனைவரும் அவனை பார்க்க நம் அஷ்வித்தோ அவன் கூற்றில் மனம் கனக்க நிமிர்ந்து நோக்கியவன் வாயிலில் ஒரு தாம்புலத்தில் புடவை நகையை வைத்தவாறு மது வருவதை கண்டு அவள் பின் நோக்க ரித்விக் வர்ஷி பவியுடன் வேகவேகமாய் உள்ளே வர அவர்கள் பின் ஒரு உயர்ரக கார் நின்றிருந்தது...
இவன் ஒரு ஆற்றாமையுடன் யாரந்த ஆமை மண்ட என மனமகனை கருவி கொண்டே எட்டி பார்க்க... காரின் கதவை திறந்து ருமேஷ் இறங்கினான்...
இதை சற்றும் எதிர்பார்க்காத அஷ்வித் பே என முளிக்க... அதற்கு முன் அவனை யாரோ கீழே தள்ளி விட்டு மண்டியிட வைக்க அடுத்த நொடியே ரித்விக் அஷ்வன்த் மற்றும் ரவி ரனீஷ் தாம்புலத்தை மாற்றினர்...
நாயகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஹே என கத்த நடப்பதை சில நொடிகளின் பின்னே உணர்ந்து கொண்ட அஷ்வித் நந்தினி இருவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுத்தது...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... என்னடா டெய்லி யூடி போடுவேன்னு எவளோ டயலாக் விடுவாளே.. எங்க காணும்னு நீங்க எல்லாம் பேசிக்கிட்டதா எனக்கு தெரியவந்துச்சு... அதான் அறிவிப்பு கொடுக்க வந்தேன்... ஈஈஈஈஈஈ நாளைக்கு யூடி இல்ல மக்களே... நாளன்னைக்கு தான்... மே பி நாளைக்கு நைட் வேணும்னா யூடி இருக்கும்... அடுத்த ரெண்டு யூடி ஜாலியா போகும்... அப்ரம் என் வேலைய ஆரம்பிக்க போறேன்... எல்லாரும் பொருத்திருந்து பாருங்க என்ன... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro