மாயம் - 18
சர்ப்பலோகம்
இரவு நேரம் என்றும் போல் தங்களின் சிறையில் கண்களை மூடி அமைதியாய் அமர்ந்திருந்தனர் யட்சினிகள் மூவரும்.. நிலவின் ஒளி முழுவதும் இல்லையென்றாலும் ஓரளவிற்கு அவ்விடத்தில் ஒளியூட்டி வைத்திருந்தது..
அதன் பிரகாசமான ஒளியில் அதித்தியின் கன்னத்தில் வலிந்த ஒரு துளி கண்ணீர் வைரத்தை போல் ஜொளித்து மண்ணை அடையும் முன் ஒரு கரத்தில் மஞ்சமடைந்தது..
அதை உணர்ந்திருந்த அதித்தியோ மெதுவாய் திரும்பி பார்க்க அவளின் கன்னத்தை தனிச்சையாகவே ஒரு கரம் ஏந்தி கண்ணீரை பொருமையாய் துடைத்து விட்டது..
கண்களில் கண்ணீருடன் ஏக்கமாய் பார்த்திருந்த அதித்தி அவள் முன் அதே வெண்ணிற இறக்கைகளுடன் நிற்கும் அவனை கண்டு நம்ப முடியாமல் தினறி போய் அவன் கைகளை இறுக்கி நாயக் என அழைக்கவும் அவன் கலைய இவள் சட்டென நாயக் என அலரி கொண்டே கனவு கலைந்து எழுந்தமர்ந்தாள்...
ஆருண்யா : அதித்தி என்னானதம்மா.. அச்சுறுத்தும் போலான சொப்பனம்(கனவு )கண்டாயா... ஒன்றுமில்லையம்மா ஐயமுறாதே...
அதித்தி : அ..அன்று ஆரு.. யா..யான் எனது மணாளனை கண்டேன்.. எனது விழி நீரை துடைத்து எம் கன்னத்தினை கரத்திலேந்தினார் அவர் என ஒரு மிரட்சியுடன் மகிழ்வாய் இவள் கூற மற்ற இருவருக்குமே அது மகிழ்வை அளித்தது...
நித்யா : உமக்கும் நினைவு கிட்டியதில் அகமகிழ்கிறேன் அதித்தி.. விரைவில் ஆருவிற்கும் அவள் மணாளனின் நினைவுகள் தென்படும்.. பின் நிச்சயமாய் நமது மணாளன்கள் நம்மை நாடி வருவர் என இருவரையும் அணைத்து கொண்டாள்...
ஆரு : ஆயினும் எமக்கு நினைவே கிட்டவில்லை எனின் என் செய்வேன் நான் ... எமக்கான மணாளன் எம்மை நாடி இவ்வையகம் வரவளிக்காதிருந்திடுவாரா நித்தி என விலகி அவளை பார்த்து தவிப்புடன் வினவினாள்...
நித்யா : அவ்வாறு நிச்சயம் நிகழாது ஆரு.. என்(ன) ஈடேரினாலும் இரட்சகன்கள் சர்ப்பலோகத்தில் காலடியை பதிப்பர்.. அவ்வாறு இருப்பின் உமது மணாளன் உம்மை நாடாது எவ்வாறு இருப்பார்.. நிச்சயம் உமக்கு நினைவுகளும் தென்படுமடா என ஆறுதலாய் கூறியவளின் குரலை ஒத்து கேட்டது இன்னோறு குரல்...
" ஐயமுற அவசியமன்று ... தங்களுக்காய் நிச்சயம் இரட்கன்கள் இங்கு வருவர் " என கேட்ட மென்மையான குரலை அடையாளங்கண்ட மூவரும் திரும்பி பார்க்க சிறை வாயிலின் கதவை திறந்து உண்டியுடன் நின்றிருந்தாள் அந்த பணிப்பெண்.. அவளுடன் இன்னும் இரு பணிப்பெண்கள் நின்றிருந்தனர்.. அவ்விருவருள் ஒருவளே இன்று காலையில் விந்வார்த்த யஷ்டிகள் உரையாடியவையை செவி மடுத்தது... இம்மூவரை தான் சேவன் இளவரசிகளெனவும் குறிப்பிட்டிருந்தான்...
இந்த இரண்டு வருடத்தில் ஒரு வார்த்தை கூட தங்களிடம் பேசிறாத மூவரும் அவர்களாகவே வந்து முன் நிற்பது நம் நாயகிகளுக்கு சற்றே ஆச்சர்யமாக தான் இருந்தது..
இப்போதே அம்மூவரையும் ஆராய்ந்தது நமது நாயகிகளின் விழிகள்... ஒரே போலான முக அம்சங்கள்.. ஒன்றாய் சேர்த்து வைத்து பார்த்தால் நிச்சயம் சகோதரிகளென கூறுவர்... அழகிற்கா பஞ்சம் பேரழகினை ஒரு சிறு முகத்திறையிற்கு பின் மறைத்து வைத்திருக்கின்றனர்..
மூவருக்கும் வித்யாசமான விழிகள்.. நிற வேறுபாடல்ல.. கண்களே வித்யாசமாய் இருந்தது... அதில் முதலாமவள் முன் வந்தாள் அவள் சித்ரியா..
இரண்டாமவள் வேதித்யா
மூன்றாமவள் எழிலினியா (எழில்+இனியா)
(இம்மூவரும் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் தான்... நாயகிகள் இல்லை.. கிட்டத்தட்ட மோகினி கதாபாத்திரம் எப்படியோ அப்படி தான் இவர்கள்..)
எழில் : வருத்தமடையாதீர் .. இன்னும் ஒரு திங்களில் விந்வார்த்த யஷ்டிகள் ஒரு யாகத்தை ஈட்ட உள்ளனர்.. அதற்கு பலனாய் இங்கு இரட்சகன்கள் வரவளிப்பர்...
ஆருன்யா : தாம் இதை எவ்வாறு அறிந்தீர்கள்...
வேதித்யா : இரு தினங்களாய் ஈடேரிய யாகத்தின் மீதான சந்தேகத்தில் இன்று விடியலில் யாக பீடத்தை கண்காணிக்க நெருங்கியுள்ளாள்...
சித்ரியா : அந்நாழியில் விந்வார்த்த யஷ்டிகள் உரையாடியவைகளையெல்லாம் செவி மடுத்துள்ளாள்.. அவ்வாறே நாங்கள் இவையை பற்றி அறிந்து கொண்டோம்..
நித்யா : ஹ்ம் தம்மை நம்புவதால் எங்களுக்கு ஏமாளி பட்டம் கிடைத்திராதே...
சித்ரியா : நிச்சயம் இல்லை.. உண்மையை கூற வேண்டுமானால் எம் மூவருக்கும் இவ்விடத்தினில் வாழ்ந்திட துளியும் விருப்பமில்லை.. ஆயினும் வளர்ந்ததனைத்தும் இங்கு தான்.. எங்களை ஈண்டெடுத்த அன்னை யாரெனவும் அறியேன்..
எழில் : ஆயின் இத்தினம் வரை நாங்களும் மனித இனம் என்றிருந்த எண்ணம் ஆட்டம் கண்டு விட்டது..
ஆருன்யா : யாது எழில்...
வேதித்யா : தலைமை அமைச்சினி மிதரவர்தினி நேற்றைய விடியலில் தலைமை அமைச்சன் சாகாரகாந்தனிடம் உரையாடியவையை எதிர்பாராமல் செவி மடுத்தேனம்மா.. அவர்களின் யாகம் முடிவடையும் நாழியில் அவ்விடத்தினில் குழுமும் ஆயிரக்கணக்கான சர்ப்பங்களின் விகோரமான ஓசையை எம்மனித பிறவியேனும் செவி மடுப்பின் மரணம் நிச்சயம் என்றும் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவதை போல் உணர்வறென்றும் உரையாடி கொண்டனர்...
நித்யா : அவ்வாறிருப்பின் இவ்விசனத்தை அறிந்தே தாம் ஏன் அங்கு செல்ல வேண்டும் எழில் என கேள்வி கனைகளை அவள் புறம் திருப்பினாள்...
எழில் : ஏதும் பெரும் விசனமல்ல.. எமக்கு மனித பிறவியாய் புவியில் அச்சுதந்திர காற்றை நுகர்ந்து வாழவே விருப்பம்.. ஆயின் அது ஈடேராவிடினும் எம் சகோதரிகளாவது இவ்வையகத்தை விடுத்து தப்பி செல்ல வேண்டுமென எண்ணினேன்.. ஆதலாலே துணிந்து சென்றேன்.. ஆயின் அவ்வோசைகளை செவி மடுத்த பின்னும் கூட எமக்கு ஏதும் நிகழவில்லை என்பதே எமக்கு யாம் மூவருமே மனித இனமில்லை என்பதை உணர்த்தியது...
அதித்தி : ஹ்ம் ஒரு முறையேனும் இங்கிருந்து தப்பிச்செல்ல தாம் முனைந்ததில்லையா...
வேதித்யா : இல்லை.. ஏனெனில் அவ்வாறு ஒரு எண்ணம் சில திங்கள் முன் வரை யாம் பெற்றதில்லை.. தங்களின் நம்பிக்கை விசனமின்றி எங்களின் மனதையை வெளிகாட்டி விட்டது என அழகாய் சிரித்தாள்..
நித்யா : புன்னகைக்கையில் மிகவும் அழகாகிறாய் வேதித்யா
வேதித்யா : தங்களையும் விடவா இளவரசியாரே என குறும்புடன் வினவினாள்...
நித்யா : இதென்ன அடைமொழி வேறு.. தாம் மூவரை விடுத்தும் நாங்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் அல்ல.. இளவரசியாரே என்று அழைத்து வேறுபடுத்தி பார்க்காதே...
சித்ரியா : ஆகட்டும் நித்யா.. சினம் வேண்டாம்..
எழில் : சரி தாம் மூவரும் எச்சிரிக்கையுடன் இருங்கள்.. இரவு உண்டியை உண்ணுங்கள்.. நாங்கள் விடைபெறுகிறோம் என மூவருமாய் மனதில் ஒரு நிம்மதி பரவ அங்கிருந்து விலகினர்..
அற்புத கோட்டை
பயந்து கொண்டே ரக்ஷவ் உள்ளே வந்து விட்டான்.. அன்றிருந்த அதே அமானுஷ்ய அமைதி தான் அறை முழுவதும் நிறம்பியிருந்தது...
உள்ளே நுழைந்த சில வினாடிகளிளே சஹாத்திய சூரர்களின் முகங்கள் இறுகியது... சேவனும் நீலியும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.. அர்ஜுன் பெருமூச்சை இழுத்து விட்டு முன்னோக்கி கால் பதித்தான்...
அடுத்த நொடி சிம்மயாளியின் உறுமல் மிகவும் விகாரமாய் வெளிகேட்டது.. அதை கேட்ட அடுத்த நொடி ரக்ஷவும் நீலியும் அரண்டு போய் பின் நகர்ந்தனர்..
மிரண்ட ரக்ஷவின் முகத்தை ஒரு முறை திரும்பி பார்த்த அர்ஜுன் பின் மீண்டும் அடுத்த அடியை முன்னோக்கி எடுத்து வைத்தான்... இம்முறை உறுமல் வெளிவரவில்லை என்று உறுதி செய்ததும் ரக்ஷவை முன்னோக்கி அழைத்து சென்றனர்...
மனதில் ஒரு உதறல் எடுத்து கொண்டே இருக்க.. அக்கூண்டு உள்ள இடத்தை விட்டு சற்றே தள்ளி நகர்ந்ததுமே ரக்ஷவ் சீராய் மூச்சு விட்டான்...
அவனது சீரான முகமே சிம்மயாளிகள் இங்கிருப்பதை முன்பே அறிந்திருக்கிறான் என்பதாய் நம் நாயகன்களுக்கு உணர்த்தியது..
சரண் : ரக்ஷவ்...
ரக்ஷவ் : ம்ம் எனநிமிர்ந்து பார்த்தான்...
சரண் : உனக்கு எது புடிச்சிருக்கோ அத எடுத்துக்கோ என அழைத்து சென்று முன் விட்டு விட்டு பின் நகர்ந்து வந்நான்...
நிமிர்ந்து நன்கு பார்வையை கூராக்கி பார்த்த ரக்ஷவ் அவன் முன் எண்ணிலடங்கா அளவில்லா பலவிதமான ஆயுதங்கள் இருப்பதை கண்டு தனிச்சையாய் கண்களை விரித்தான்...
வாள் முதற்கொண்டு வில் அம்பு வேல் கேடையம் கத்தி ஈட்டி குறுவாள் என இன்னும் பெயர் தெரிந்திடா பல ஆயுதங்கள் தன் கூர்மையை காட்டி மின்னி கொண்டிருந்தது...
ரக்ஷவ் : எது வேணா எடுக்களாமா...
அஷ்வன்த் : ஆமா ரக்ஷவ் எது வேணா எடுக்களாம்.. ஆனா உன் மனசுக்கே தெரியும் எது உனக்கு போரிட்ரப்போ சரியா இருக்கும்னு.. மனச ஒரு நிலை படுத்தி அத எடு.. அந்த ஆயுதம் உனக்கு எப்பவும் முதன்மை குறியதா இருக்கும்.. நீ மத்த ஆயுதங்களையும் எந்த இடையூறிமில்லாம உபயோகிக்கலாம் என்றதும் அதை உன்னிப்பாய் கவனித்த ரக்ஷவ் இப்போது மீண்டும் பார்வையை ஆயுதங்களிடம் பதித்தான்...
அனைத்தையும் அளந்து வந்த ரக்ஷவின் பார்வை இறுதியில் பிடியில் சிறிய நீல நிற கல் பதித்து சில தமிழ் எழுத்துக்களுடன் பல வேலைபாடுகளுடன் உருவாக்கப்பட்டிருந்த ஒரு வாளை அதன் பிடியை இறுக்கி பிடித்து கையில் எடுத்தான்...
அதிக இடையில்லை.. அவனுக்கு ஏற்றதை போல் சில வினாடிகளிலே அது மாறி கொண்டது போலும்.. தன் கூர்மையை காட்டி அது அவனை பார்த்து மினுமினுக்கவும் அவன் கைகளிலிருந்த ப்ரேஸ்லெட்டில் தொங்கி கொண்டிருந்த குட்டி வாளும் சிரிப்பதை போல் பளிச்சென்ற ஒளியுடன் ஆடியது..
அதை ரக்ஷவ் கவனிக்கும் முன் அவன் பிடித்திருந்த பிடியிலிருந்த எழுந்த ஒரு ஒளி அவ்வாளை முழுதும் ஆக்ரமிக்க கண்கள் கூச இமைகளை மூடிய ரக்ஷவ் இமைகளை பிரித்து வாளை ஏறிட்டதில் அதில் சரிவான தமிழ் எழுத்துக்களில் செதுக்கப்பட்டிருந்த தன் பெயரை கண்டு ஆச்சர்யமடைந்தான்..
முகில் : வேலை முடிஞ்சது ரக்ஷவ் போவோமா.. என அழைக்க சஹாத்திய சூரர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடி கொண்டிருந்தது...
மந்திர வாள்களில் ஒன்றான அவ்வாள் அவனை தேர்ந்தெடுத்ததில் எண்வரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.. ரக்ஷவும் தலையசைத்து அவர்களை பின் தொடர்ந்தான்...
பாலமுத்திர கோட்டை
அஜயை சுற்றி இப்போது பராக்ரம வீரன்கள் துளைத்தெடுக்கும் பார்வையுடன் நின்றிருந்தனர்...
அஜய் : ஏன் டா இப்டி என்ன வெறிச்சு வெறிச்சு பாக்குறீங்க.. என அதே முளிப்புடன் வினவ...
அஷ்வித் : நேத்து ஊர்ல இருக்கேன்னு சொல்லிட்டு இன்னைக்கு இங்க என்ன டா செய்ர..
அஜய் : அது நா ஊருக்கு தான் டா வந்துட்டு இருந்தேன்.. ஆனா இங்க எப்டி வந்தேன்னே தெரியல... என இன்னும் அதிகமாய் விழித்தான்...
மித்ரன் : உண்மையாவே தெரியலையாடா..
அஜய் : தெரியலையே .. ஆமா இது எந்த இடம்...
ராகவ் : அதான் எங்களுக்கே தெரியலையே.. எப்டி வந்தோம்.. இது எப்டி வந்துச்சு ஒன்னும் புரியல...
வருண் : அத விடுடா.. அந்த சிறுத்த எப்டி கார்த்தி மேல பாய பாத்துச்சு என கேட்க அஜய் பதறி விட்டான் எங்கு சாகாரகாந்தன் இங்கு வந்து விட்டானோ என்று...
அஜய் : சிறுத்தையா எப்டி வந்துச்சு எங்கேந்து வந்துச்சு எப்போ போச்சு எப்டி போச்சு.. ஒரே நொடியில் மூச்சு விடாமல் மூன்று கேள்வி கேட்டான்...
அருண் : ஏன் டா பதறுற... அது எங்கையும் போல...
அஜய் : எங்கையும் போலையா இங்க தான் இருக்கா.. எங்க இருக்கு எங்க இருக்கு... என சுற்றி முற்றி பார்த்து கேட்க...
கார்த்திக் : ஏன் டா எனக்கென்ன ஆச்சுன்னு எதாவது கேட்டியா...
அஜய் : நீ குத்துக்கல்லாட்டம் நல்லா தான இருக்க... அப்ரம் என்ன டா சிறுத்தை எங்க...
ஆதவ் : ஆமா கல்லு பாய்ஞ்சா அவனுக்கு என்ன ஆய்ட போகுது என மூக்கு முட்ட அஜயை முறைத்து கொண்டிருந்த கார்த்திக்கின் தோளில் நக்கலாய் இடித்தான்...
அஜய் : கல்லா.. என்ன டா மாத்தி மாத்தி ஒளறுறீங்க..
மிதுன் : டேய் அந்த கல் சிற்பம் தான் டா உன் நொண்ணன் மேல பாய பாத்துச்சு... என அந்த கல்சிறுத்தையை காட்டினான்
அப்போதே அந்த சிற்பங்களை கண்ட அஜய் அதிர்ச்சியுடன் திண்டிலிருந்து கீழே இறங்கினான்.. அங்கிருந்த பதினோறு சிற்பமும் அவனை கண்டு உறுமி சீருவதை போல் ஒரு பிரம்மை ஏற்பட சித்தம் இழந்து உறைந்து நின்ற அஜயை உலுக்கியது என்னவோ வாயிலில் அதி பயங்கரமாய் கேட்ட ரவியின் கோபக்குரல் தான்..
ரவியின் குரலை இணங்கண்ட பத்து நாயகன்களுக்குமே அவனின் கோவக்குரல் மனதில் கிலியை மூட்டியது.. ரவி அவ்வளவு எளிதில் கோவப்படும் ரகம் கிடையாது.. அமைதியாகவும் அன்பாவகவும் குறும்பாகவும் மட்டுமே அவனை பார்த்திருந்த நாயகன்களுக்கு அவன் கோவம் அதிர்ச்சியை தான் கொடுத்தது...
தன் தந்தைவின் குணத்தை அச்சில் வார்த்ததை போல் அப்படியே பிறந்திருக்கும் தனையனுக்கு தெரியாதா அவன் கோவம் கொண்டிருக்கிறான் என்றால் நிச்சயம் நாம் ஏதோ ஒரு செய்ய கூடாத தவறை செய்து விட்டோம் என்று.. வருண் மற்ற ஒன்பது பராக்ரம வீரன்களுக்கும் பார்வையிலே பிரச்சனை தீவிரம் என்பதை உணர்த்தி விட்டு வேகவேகமாய் வெளியே சென்றான்...
மற்றவன்களும் வெளியே ஓட அங்கோ இக்கோட்டையை மண்ணிற்கு மேல் பார்த்த அதிரச்சி ஒரு புறம் இதை திறந்தது தன் மகவுகள் என்ற கோவம் ஒரு புறமென ரவி பேந்த பேந்த முளித்தவாறு நின்ற ரக்ஷவின் கரத்தை பிடித்தவாறு நின்றிருந்தான்...
நம் நாயகன்களுக்கு ரவியை பல நாள் கண்ட மகிழ்ச்சியில் சிரிப்பதா அல்ல அவன் கோவத்தில் ருத்ரமூர்த்தியாய் வந்திருக்கிறான் என்பதை எண்ணி பயப்புடுவதா என்று தெரியவில்லை..
அவர்களின் முகத்தில் தெரிந்த தீவிரமும் அஜயின் காயங்களும் எதையோ உணர்த்தினாலும் ரவி ஏதோ வாய் திறக்கும் முன் சட்டென ரவியின் கைகளை பிடித்திருந்த ரக்ஷவின் பிடி இறுகியது.. அவனை திரும்பி பார்த்த ரவி பின் சில வினாடிகளுக்கு கண்களை இறுக்க மூடி இருந்து விட்டு மீண்டும் இமைகளை பிரித்தான்...
ரவி : இங்க என்ன டா செய்றீங்க...
அஷ்வித் : அது மாமா என அனைவருக்கும் மூத்தவனாய் இவன் சமாளிக்கும் பொருப்பை ஏற்று மழுப்பும் முன்...
ரவி : நீ சும்மா இரு அஷ்வி.. அஜய் நீ சொல்லு இங்க என்ன செய்றீங்க என அவனை நேர் பார்வையிட அஜய்க்கு பொய் கூறவே வராதென்பதாலும் இருந்த அதிர்ச்சியினாலும் சற்றே தினறினான்..
அஜய் : அது சித்..தா.. நா.ங்க எ..ப்.டி..
ரக்ஷவ் : அந்த அண்ணன் இங்க எப்டி வந்தாங்கன்னு அவங்களுக்கே தெரியாது... நீ அவங்கள கேக்குறியே குருவே என எப்பொழுதும் போல் உளற... காட்டில் மறைந்து நின்று இவர்களை பார்த்து கொண்டிருந்த சரணும் வீரும் " போச்சு ஒளறீட்டான் " என தலையிலடித்து கொண்டனர்...
ரவி இப்போது ரக்ஷவை ஒரு அமைதியான பார்வை பார்க்க அந்த பார்வை " நா கேட்டனா " என்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் வைகைபுயல் வடிவேலுவிடம் கேட்பது போலிருக்க பின்னே ரக்ஷவ் தான் கூறியதை மீண்டும் மண்டைக்குள் போட்டு பார்த்து கண்களை விரித்தான்...
ஆனால் அதில் ஒரு நல்லதும் நடந்தது.. எப்டி ரவியை சமாளிக்கலாம் என்ற பலத்த யோசனையில் பராக்ரம வீரன்கள் ரக்ஷவ் உளறியதை சரியாய் கவனிக்கவில்லை..
அதை தன் கழுகு கண்களால் உணர்ந்து கொண்ட வீர் " அவனுங்களுக்கு ரக்ஷவ் சொன்னது கேக்கல... நீ கன்ட்டியு பன்னு டா " என மெல்ல வாயசைக்க.. வீரின் மனக்கணக்கின் படி அதை சரியாய் செவி சாய்த்த ரவி திரும்பி பார்க்காமலே அமோதித்து தலையசைத்தான்...
ஆனாலும் ஒரு நொடி ரவி அவன் மகனான வருணை பார்க்க இவனது கனிப்பு தப்பாமல் வீரின் குரலை கேட்டிருந்த வருண் சுற்றி பார்த்து கொண்டிருந்தான்... ஆனால் வருணிற்கு ரவி அளவு கவனிக்கும் திறன் அதிகரிக்கவில்லை என்பதாலும் அவனுக்கு ரவியின் சக்திகள் அப்படியே வரவில்லை என்பதாலும் வீரின் கூற்று தெளிவாய் கேட்கவில்லை.. ஏதோ குரல் கேட்டது போல் இருந்ததே என்று தான் அவன் சுற்றி பார்க்கிறான்...
ரவி : நீ எபோ ஊர்ல இருந்து வந்த அஜய் என டக்கென அனைவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினான்...
அஜய் : கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தா சித்தா...
அருண் : அப்பா நீ துருவி துருவி கேள்வி கேக்குறேங்குர பேருல பயமுறுத்தாத... இங்க நாங்க எப்டி வந்தோம்னு எங்களுக்கே தெரியாது.. ஏதோ காத்து வந்து அடிச்சிட்டு போய்டுச்சு..
ரவி : காத்தா என கேட்ட ரவியின் மனக்கண்ணில் சத்தீஷின் முகமே வந்து சென்றது...
நாயகன்கள் : ஆமா...
ரவி : ச..சரி இந்த கோட்டை...
மிதுன் : அது எப்டி வந்துச்சுன்னே தெரியல மாமா.. நாங்க அஜய்க்கு ட்ரீட்மென்ட் குடுக்குறதுக்காக தான் உள்ள போனோம்...
ரவி : ஹ்ம் சரி வீட்டுக்கு வாங்க.. உங்கள பாக்க ஒருத்தர் வந்துருக்காரு...
இம்மூவரும் இவன்கள் இங்கு வந்திருக்கிறான்கள் என அறிந்தே அவசர அவசரமாய் வந்திருப்பர்.. இப்படி வருவதற்குள் அந்த சிற்பங்களை நெருங்கிருப்பர் என எண்ணிடா நாயகன்களுள் ரவிக்கு சினம் அதிகரித்து விட்டது.. அச்சிற்பங்களை தப்பித்தவறி தொட்டாலும் அதன் வீரியத்தை அவன் அறிவான்.. கார்த்திக் தொட்ட போது அந்த சிறுத்தை பாய்ந்ததை போல் எக்கு தப்பாய் அனைத்தும் பாய்ந்திருந்தால் அவன்களின் நிலை என்னவாவது என்ற பயமே கோவமாகியிருந்தது... ஆனால் அனைத்தும் தெரிந்தது போல் வந்தால் எப்படி தெரியும் என்ற கேள்வி எழுமென்றே தெரியாததை போல் திசை திருப்பி வீட்டிற்கு அழைத்து செல்ல வந்திருக்கிறான்...
அஷ்வித் : போலாம் மாமா... ஆமா யாரிந்த பையன்..
ரவி : சொல்ல மறந்துட்டேன் டா.. இவன் பேரு ரக்ஷவ்.. என் தங்கச்சியோட பையன்.. நம்ம கூட கொஞ்ச நாள் இருக்கலாம்னு வந்துருக்கான்... என கூற அனைவரும் ரக்ஷவை பார்க்க அவனும் ஸ்நேகமாய் புன்னகைத்தான்...
சரண் வீர் : ரவி ரவி என இவனை தேடி வருவதை போல் உள்ளே வந்தனர்..
ரவி : இங்க இருக்கேன் டா என சத்தம் கொடுக்க இப்போதே இவர்களை பார்ப்பதை போல் பாவனை கொடுத்து அருகில் ஓடி வந்தனர்...
வீர் : டேய் பசங்களா எப்படா வந்தீங்க... இங்க எப்டி வந்தீங்க .. என ஒன்றுமே தெரியாததை போலவே வினா எழுப்ப ரவியிடம் கூறிய பதிலையே இவனிடமும் அவன்கள் கூற ... வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாத நம் சரண்...
சரண் : குடுத்த காசுக்கு எக்ஸ்ற்றாவா நடிக்கிறானே.. என்ன நடிச்சாலும் உனக்கு ஒத்த பைசா ஏத்தி குடுக்க மாட்டேன் டா என ரக்ஷவிற்கு கேட்பதை போல் வீரை கலாய்க்க ரக்ஷவ் அடக்க மட்டாமல் சிரித்து விட ரவி இருவரையும் முறைத்தான்...
வீர் : ஏன் டா சிரிக்கிர என ரக்ஷவிடம் கேட்க...
சரண் : அதெல்லாம் ஒன்னும் இல்ல வாங்க வாங்க வீட்டுக்கு போகலாம்... டைமாச்சு என தரதரவென இழுக்காத குறையாக ரக்ஷவை கூட்டி கொண்டு முன்னே நடந்தான்...
மற்றவர்களும் ஏனென்றே தெரியாமல் சிரித்து கொண்டே நடந்து சென்றனர்..
வீட்டை அடைந்ததும் சோர்வாய் உள்ளே நுழைந்த நாயகன்கள் ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே தெரியாது முளிக்க.. அஷ்வித் இதயம் நொறுங்கி போய் நின்றான்...
அவன் உயிருக்கு உயிரான காதலி பட்டு புடவை பட்டு ஜரிகை அணிந்து தங்க ஆபரணங்களால் அலங்கரித்து அழகே ஓவியமாய் கண்கள் எதையோ வெறிக்க அமர்ந்திருந்தாள்...
ரவி வீர் சரண் மூவரும் புன்னகையுடன் உள்ளே நுழைய ரனீஷ் ரவியின் மண்டையிலே ஒரு போடு போட்டான்...
ரனீஷ் : ஏன் டா அப்பா நீ உன் முத மக நிச்சியத்துல இருக்க வேண்டாம்.. இப்போ எங்க போன... ஏன் டா தாய்மாமன் தான டா நீங்க இரெண்டு பேரும் இத்தன புள்ளைங்கள மேய்க்க பொருப்பு வேண்டாம் என ரவியிடம் தொடங்கி வீர் சரணிடம் முடித்தான்...
ரவி : டேய் என் மக நிச்சயத்துல நா இல்லாம எப்டி டா.. வளவளன்னு பேசாம போ டா என ரனீஷை தள்ளி விட்டு இவன் உள்ளே சென்றான்...
அங்கு சகோதரிகள் புடை சூழ நடப்பதை கூட கவனிக்காமல் மங்கல லட்சனமாய் அமர்ந்திருந்தாள் ரனீஷ் ரக்ஷா ஈண்டெடுத்த தவச்செல்வி சங்கநந்தினி..
தர்மன் ஐயா நிகழ்வதனைத்தையும் ஒரு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார்.. அஜயை கண்டதும் அனைவரும் சந்தோஷத்துடன் அவனை வரவேற்றனர்...
வீனா : டேய் பசங்களா ஃபோன் பன்னா எடுக்க மாட்டீங்களா.. மதியத்துல இருந்து ஃபோன் பன்றோம்ல.. சரி போங்க போய் ரெடி ஆகுங்க டைமாச்சு என அஷ்வித்தையும் சேர்த்து மாடிக்கு விரட்டினாள்...
நாயகன்கள் அறையில் அவர்களுக்காய் வாங்கி வைத்திருந்த வேஷ்டி சட்டைகள் வரிசையாய் இருந்தது ... அஜயிற்கான வேஷ்டி சட்டையை முன்பே வாங்கி வைத்திருந்தமையால் அவனிடம் புன்னகையுடன் கொடுத்து விட்டு நகர போன வர்ஷி பால்கெனியில் விண்ணை வெறித்து கொண்டு நின்ற அஷ்வித்தை கண்டு அவனை நெருங்கினாள்...
வர்ஷி : டேய் கண்ணா என அவன் முகத்தை மெதுவாய் தன் புறம் திருப்பியவள் அதில் ஏதோ ஒரு வலி மறைந்திருப்பதை கண்டு கொண்டாள்.. வர்ஷிக்கு அஷ்வித் என்றால் கொள்ள பிரியம்.. அவளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.. இருக்காதா பின்ன முதல் முதலில் இவ்வீட்டில் துருவ் கயலுக்கு பின் தவழ ஜனித்த சிசு அவன்.. ஆனால் அவன் பிறக்கும் முன்னே முந்தி கொண்டு சித்து ருத்து அத்து எட்டு மாத குழந்தைகளாய் பிறந்து விட்டனர்...
அஷ்வித் : சித்தி..
வர்ஷி : என்னாச்சு அஷ்வி கண்ணா.. எதாவது ப்ராப்லமா...
அஷ்வித் : இ..இல்ல சித்தி..
வர்ஷி : என் கிட்ட ஏதோ மறைக்கிறியே..
அஷ்வித் : அப்டிலாம் ஒன்னுமில்ல சித்தி... நா எதையும் மறைக்கல...
வர்ஷி : சரி நீ கெளம்பலையா...
அஷ்வித் : எதுக்காக கெளம்பனும் சித்தி.. என்ன நடக்குது கீழ..
வர்ஷி : நிச்சயம் பன்ன போறாங்க டா கண்ணா...
மித்ரன் : எதனால திடீர்னு பன்றாங்கம்மா என கேட்டு கொண்டே வந்து அஷ்வித்தின் தோளில் ஆறுதலாய் அழுத்தம் கொடுத்தான்...
வர்ஷி : அது வீட்ல சீக்கிரம் ஒரு நல்லது நடக்கனும்னு தான் டா கண்ணா.. உங்க மாமாங்க மூணு பேருக்கும் நினைவு நாள் வருதில்லையா அதுக்கு அடுத்த வாரத்துல தான் அவங்க பிறந்தநாளும் வருது.. அவங்க ஆசைகள்ள எதையாவது ஒரு விஷயத்த நிறவேத்தலாம்னு இருக்கோம்டா.. அதுல ஒன்னு தான் நந்தினியோட கல்யாணம்.. அவங்க மூணு பேரும் நீங்கள்ளாம் பொறந்தப்பவே உங்க கல்யாணத்தல்லாம் நெனச்சு விதவிதமா கனவு கண்டாங்க.. அதான் இப்ப பொண்ணுங்களுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு.. அவளுங்கல்ல மூத்தவ கயல் தான்.. அவளுக்கு கார்த்திக்க ஆல்ரெடி பேசியாச்சு.. கயலுக்கு அடுத்த நந்தினி தான்.. அதான் இப்போ அவளுக்கு மாமாங்க பிறந்தநாள் அப்போ கல்யாணத்த வச்சுக்களாம்னு முடிவு பன்னீர்க்கோம்
அஷ்வித்திற்கு மனமெல்லாம் ஒரு பாரம் குடி கொண்டது... வாயே திறக்க இயலாமல் சட்டென அறைக்குள் சென்று மறைந்தான்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... இங்க ஒரே மழை... அதனால நெட்வொர்க் எடுக்கல... இப்போ கூட உங்க கிட்ட யூடி சீக்கிரம் வருமான்னு தெரியல... ஹ்ம்ம்ம் நல்லா இருக்கான்னு சொல்லுங்க... அடுத்தடுத்து பாப்போம் எப்டி போகுதுன்னு.. டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro