மாயம் - 14
சேவன் : மகரகாந்தன் சர்ப்பலோகத்தை சென்றடைந்து விட்டான்... அத்துடனில்லாது இன்றே மிதரவர்தினி அருளவர்தினி இருவரும் அவரவர் உருவிற்கு வர இருக்கின்றனர்.. ஆதலால் சர்ப்பலோகத்தில் நேற்றைய கடும் இரவில் கனமழையில் கூட பலிபீடத்தில் யாகம் ஈடேறி தற்போதும் தொடர்கிறது.. என ஒரு ஆச்சர்யத்துடன் கூறி கொண்டு வர முதலில் இதை கேட்டு அதிர்ந்த ரவியும் ரனீஷும் பின் நிலையடைய நம் ரக்ஷவ் பலி என்றதில் சற்று அரண்டு விட்டான்... " இதுங்க கொலகார கும்பலா இருக்குமோ " என்ற சந்தேகத்தில்..
நம் சேவனால் சர்ப்பலோகத்தில் எந்த உருவில் வேண்டுமானாலும் இருக்க முடியும்.. அப்படி தான் மயூரனும்.. அவன் தேனீயே முதலில் கிடையாது.. அவன் விருப்பப்பட்ட நேரத்தில் விருப்பப்பட்ட உருவில் இருப்பான்... சர்ப்பலோகத்தில் எந்த ஒரு தடங்களும் இல்லாது சேவனால் அவனது சக்திகளை உபயோகிக்க முடியும்.. அதில் தனிச்சையாய் பெருக்கெடுத்த அவன் சக்திளில் ஒன்றே குரு தந்திரா பரிசளித்த விஷேஷ சக்தியான இந்த தன் உண்மை உருவை எடுக்கும் சக்தி...
ரவி : இவை அப்படியொன்றும் அதிர்ச்சிகரமான விசனம் இல்லை சேவா...
சேவன் : அட என்ன சஹாத்திய சூரரே இவ்விசனத்தை தெரிவித்திட யான் இரண்டு மாமலைகளை தாண்டி உம் தரம் வந்தடைந்துள்ளேன்.. அப்படி ஒன்றும் அதிர்ச்சிகரமானதில்லை என்கிறீரே.. என சேவக்கோழி சண்டைக்கு தயாராவதை போல் சிலிர்த்து கொண்டான்...
ரனீஷ் : அடடே சினம் வேண்டாம் சேவா.. அவ்வாறன்று.. இவ்விசனத்தை யாம் முன்பே எதிர் நோக்கினோம்.. ஆயின் உமது வரவு முற்றிலும் எதிர்நோக்காதது தான்...
சேவா : ஹ்ம் இருப்பினும் யட்சினிகளுக்கு பயிற்சிகளை வித்விக்க தான் இளவரசிகளை சிறை வைத்திருக்கின்றனரென உள்ளுகிறேன் சஹாத்திய சூரரே என மெதுவாய் முனுமுனுத்தவனின் கூற்று ரவியின் செவிகளில் தெள்ளத்தெளிவாய் சென்றடைந்தது...
ரவி : அவ்வாறெனில் யட்சினிகளும் மண்ணில் ஈண்டு அவர்களை சிறை வைத்தும் விட்டனரா சேவா.. ஆயின் இளவரசிகளென யாரை குறிப்பிடுகிறாய்... என கேட்க சேவனுக்கு ஒரு நொடி அவனது பயம் அனைத்தும் கண் முன் நிழலாடியது...
ரவி அருகில் இருக்கையில் எவ்வாறு தான் நிலை இன்றி உளறினோம் என்று முளித்து முளித்து பார்த்து தொண்டிருந்தான் சேவன்...
ஏனெனில் நம் ரவியின் ஆத்மார்த்த சக்தியே செவி சாய்த்தல் தான்.. அவனது ஆத்ம சக்தியின் சின்னம் பாம்பின சக்தி வாய்ந்த பறவையை குறிப்பதால் சத்தமே இல்லாமல் வாயசைத்தாலும் அவனால் அதை கனக்கச்சிதமாய் செவி சாய்க்க முடியும்.. இதற்கு எடுத்துகாட்டுகளை ஒரு சாவி ஒரு சாவு பயணத்திலிருந்தே நாம் கவனிக்கலாம்..
ரக்ஷவ் : ஏன் சேவா முளிக்கிறீர்.. என்க...
ரனீஷ் : மொதல்ல இவனுக்கு தமிழ் க்லஸ் எடுக்கனும் டா.. காதுலேருந்து இரத்தம் வந்துரும் போல.. என பாவமாய் கூற...
ரக்ஷவ் : ட்யூஷன் அப்பரம் வைக்களாம்.. நீங்க திருட்டு முளி முளிக்கிர இவன பாருங்க... என்கவும்...
சேவன் ம.வ : அல்ல.. மெய்களை அறிவதற்கு முன் யானே தவறாய் ஏதேனும் அறிவித்து அது எம் சஹாத்திய சூரர்களை பாதித்து விட கூடாது.. தற்போது இதை இவர்களிடமிருந்து மறைப்பதே சிறந்தது.. என தனக்குள்ளே திட்டம் தீட்டி கொண்டு நிமிர்ந்தவன்..
ரவி : பதிலளி சேவா...
சேவா : அது.. யான் அவ்வாறு உரைக்கவில்லை சஹாத்திய சூரரே.. இளவரசிகளெனிலும் யட்சினிகள் தான்.. யட்சினி சர்ப்ப வம்சத்தின் இளவரசிகள் யட்சினிகள் தானே.. என ஏதோ நினைவில் வந்ததை கொண்டு சமாளிக்க...
ரனீஷ் :ஹ்ம் ஆம் யட்சினி சர்ப்ப வம்ச இளவரசிகள் யட்சினிகள் தான் என்ற மெய்யை என்றும் அவமதிக்க இயலாது.. என ஒரு யோசனையுடன் கூறியவனுக்கு தெரியாமல் பெருமூச்சு விட்ட சேவன் " முதலாம் நாகனிக்கு மாத்திரமே மனதை வாசிக்கும் திறன் இருப்பது எமக்கு நற்சகுனமாய் விடிந்துள்ளது " என புன்னகைத்த சேவனுக்கு தெரியவில்லை... அதே திறன் கொண்ட ஒருவன் அவனை தேடி படையெடுத்து வருகிறான் என்று...
ரக்ஷவ் : சரி சேவன் இத்தன நாளா எங்க இருந்த.. என செந்தமிழை விட்டு விட்டு பேச்சு வழக்கிலே இவன் கேட்க அதில் பிற மொழி கலக்கவில்லை என்பதால் சேவன் எளிதிலே புரிந்து கொண்டான்...
ரனீஷ் : அதுதானே.. இத்துனை நாட்களாய் எங்களிடம் கூற தெரிவிக்காமல் மாயமாய் எங்கு மறைந்தாய்..
ரவி : அத்தோடு இரண்டு மாமலையை தாண்டி வந்ததாய் கூறினாயே.. எவ்வாறு தனி மனிதனாய் இங்கு வந்தாய்.. என இரு கேள்வியையும் முன் வைக்க... அதற்கோ சேவன் இளித்தான்...
ரக்ஷவ் : ஏன் இப்போ நீ வாய காது வர இளுக்குர.. என முகத்தை அஷ்டகோணலாய் வைத்தவாறு கேட்டான்..
சேவன் : தம் மூவரது வினாவிற்குமே ஒரே விடை தான் என அதே இளிப்புடன் கூறியவன் பின் திரும்பி " நீலி " என அழைத்தான்...
இவர்களும் நீலியா என அங்கே பார்க்க ரக்ஷவோ பக்ரௌண்டில் " காளி சூளி நீலி ஹோலி " என்ற ம்யூசிக்குடனே திரும்பி பார்த்தான்...
தீரா : நீலிக்கு தெரிஞ்சா மண்டைய கொட்டியே புண்ணாக்கீடுவா டா.. சும்மா இரு..
ஒரு மரத்தின் பின்னிருந்து தயங்கி தயங்கி வெண்ணிற சிறு பட்டாம்பூச்சியை போல் இறெக்கையுடன் சேவனை விட சற்றே உயரத்தில் குறைந்து அவனை போல் சுறுங்கிய உருவத்தில் இருந்த அழகிய பெண்ணொருவள் பறந்து இவர்கள் அருகில் வந்தாள்...
அவள் நமது சேவனின் குட்டி இதயத்தை திருடிய திருடியும் நம் சர்ப்பலோக மாய காதலிற்கு புது மணப்பெண்ணாய் (கல்கி வீரா ரக்ஷவனின் சாகசபயணத்திலிருந்து) வந்திருக்கும் நீலி...
மூவரும் அவளை மலங்க மலங்க விழித்தவாறு நோக்க.. தன் இறகை விரித்து பறந்து வந்தவள் சேவனை பிடித்து கொண்டு ரனீஷின் கைகளில் அவன் பின் சென்று நின்று கொண்டாள்...
ரவி : சேவா.. யாரடா இப்பெண்.. என கண்களை அகல திறந்து வைத்து கொண்டு கேட்க...
சேவன் : எமது எதிர்கால வாழ்கை சஹாத்திய சூரரே.. என சிறு நாணத்துடன் கூற நீலிக்கும் நாணம் முகத்தை கவ்வி கொண்டது...
ரனீஷ் : ஹா ஊமையாய் இருந்து கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கிறாய் நீ.. ஹாஹா வாழ்த்துக்கள் என் குட்டி நண்பா.. என சிரிப்புடன் நக்கலாய் நகைத்தான்...
ரவி : வாழ்த்துக்கள் சேவா... நீ உனது வாழ்வையும் வீண் செய்யாமல் உம் மனம் கவர்ந்தவளை கை கோர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.. என முழு மனதுடன் வாழ்த்தினான்...
சேவன் : என்ன சஹாத்திய சூரரே.. எம் வாழ்வே உமக்காய் வழங்கப்பட்டது தான்.. தங்களுக்காய் சகாயம் செய்யாவிடில் யான் ஈராயிரம் வருடங்களுக்கும் மேலாக வாழ்வதில் அர்த்தமே இல்லை... என மனதார அவர்களிடம் அவனது மனதை வெளிச்சமிட்டு காட்டினான்..
ரனீஷ் : பெரிய பெரிய வார்த்தைகளை கூறாதே சேவா.. நீர் செய்த உதவிக்கு முன் யாம் உமக்கு செய்த கைமாறுகள் தகுதியற்றது... என்றதும் சேவனும் அவன் சொல் படி புன்னகையுடன் ஏற்று கொண்டு நீலியை நோக்கி இளிக்க... அவளோ " ஏதோ எனக்காய் தான் உன்னை குரு தந்திரா சுருக்கினார் என கூறினாய் " என்பதை போல் அவனை முறைத்தாலும் உள்ளுக்குள் அவளும் சஹாத்திய சூரர்கள் தன்னவன் மீது வைத்திருக்கும் அன்பையும் தோழமையையும் எண்ணி பூரித்தாள்...
ரக்ஷவ் : ஹலோ எக்ஸ்க்யூஸ் மி.. பேசுறது தான் பேசுறீங்க... எனக்கும் புரியிர மாரி பேசுனா தான் என்னவாம்... இல்ல அப்டி ஓரமா போய் பேசுங்க போங்க.. நா போறேன்..
நீலி : நோ நோ கல்கி வீரனே... நானும் உங்க கூட வரேன்.. இந்த ப்ரதர்ஸ் அவங்களோட பாசமழைய கன்ட்டின்யூ பன்னட்டும்... வாங்க நாம போவோம்.. என அவனை அறிந்திருந்ததால் இயல்பாய் பறந்து சென்று அவனது தோளில் அமர்ந்து கொண்டாள்...
கல்கி வீரனா என முதலில் முளித்த ரக்ஷவ் பின் அவள் பேச்சு வழக்கிலே பேசவும் அந்த ஆச்சர்யத்தில் குளப்பத்தை மறந்தான்... ரவியும் ரனீஷும் அவளின் பேச்சிலே இவள் சேவனுக்கு ஏற்ற வாயாடியே தான் என புரிந்து சிரித்த முகமாய் நின்றனர்...
சேவன் : நீலி உம்மை யவனர் மொழியில் உரையாட கூடாதென்று கூறியுள்ளேனன்றோ.. எமக்கு புரிவது போல் சொற்களை உரைத்திடு என சினுங்களுடன் கூற..
நீலி : நோ சேவா ஐ கான்ட் என்க.. சேவன் உதட்டை பிதுக்கி அவன் நெஞ்சார்ந்த சஹாத்திய சூரர்களை பார்க்க...
ரவி : ஹியர் மை வர்ட்ஸ்னு சொல்லு சேவா.. என மெதுவாய் கூற.. அதை உள்ளுக்குள் கூட கூறி பார்த்திடாத சேவன் பட்டென அப்படியே வெளியே சொன்னான்...
சேவன் : ஹியர் மை வர்ட்ஸ் நீலி என காட்டமாய் கூற இப்போது நீலி முளிக்க தொடங்கினாள்...
ரக்ஷவ் : ஹாஹா நீ இங்லிஷ் நல்லா பேசுற சேவா என்க தலை வணங்கி சலாம் போடுவதை போல் செய்த சேவன் சஹாத்திய சூரர்களை பார்த்து கண்ணடித்தான்..
ரனீஷ் : நீ எப்படியம்மா ஆங்கிலத்தில் இவ்வளவு இயல்பாய் உரையாடுகிறாய்...
நீலி : ஆங்கிலம் மட்டும் இல்ல சஹாத்திய சூரரே.. நான் செந்தமிழும் தெளிவா சரளமா பேசுவேன்.. என்னோட மறுமை பூமில செந்தமிழ் பேச தொடங்கி அது பேச்சு வழக்கா மாறுற வரையுமே நா வாழ்ந்ததாதல இரெண்டுமே நல்லா பேசுவேன்.. என ஸ்நேகமான புன்னகையுடன் கூறினாள்...
சேவன் : இவ்வாறு உரையாடினாயெனிலாவது எம்மால் புரிந்து கொள்ள முடியும்.. என இன்னும் அவன் தூக்கி வைத்த முகத்தை இறக்கி வைக்கவில்லை...
ரக்ஷவ் : நீ கவலப்படாத சேவா.. நா உனக்கு இங்.. இல்ல இல்ல ஆங்கிலம் சொல்லி தரேன்..
ரவி : நல்லா சொல்லி குடு இப்போ வா நம்ம கோட்டைக்கு போகலாம்...
ரக்ஷவ் : வாங்க வாங்க என முன் நடக்க.. நீலியும் சேவனும் தயங்கி நின்றனர்...
ரனீஷ் : என்ன சேவா எங்களுடன் நமது கோட்டைக்கு நீ வரவிரும்பவில்லையா..
சேவன் : அவ்வாறல்ல சஹாத்திய சூரரே.. நீலியை அவ்விடம் அழைத்து வர எமக்கு சரியாய் தோன்றவில்லை.. அவளை ராஜ்ஜிய மர்வதன மண்டபத்திலே இருந்திட கூறட்டுமா...
ரக்ஷவ் : அவ எப்டி தனியா இருப்பா சேவா...
நீலி : தனியா நா இருந்துப்பேன்
ரனீஷ் : அது முன் வேண்டுமானால் இருந்திருக்களாம் நீலி.. எண்ணி பத்து நிமிடங்களுக்கு முன்னிருந்து தானும் எங்களது குடும்பத்தில் ஒருவளாகி விட்டாய்.. எங்கள் வீட்டிற்கு வந்த மகளை நாங்கள் என்றும் ஒதுக்கி வைக்க அனுமதிக்க மாட்டோம்.. நீயும் எங்களுடன் நமது கோட்டையில் தான் இருக்க வேண்டும்..
சேவன் : இல்லை சஹாத்திய சூரரே...
ரவி : உனது சரிபாதிக்கும் உமக்குள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது... அக்கோட்டைக்குள் உம்மை தவிர்த்து வேறெவரும் வந்ததில்லை என்பதற்காய் தயங்காதே.. நீலியை அழைத்து வா என கூறவும் சேவனுக்கும் மறுக்க மனமில்லாததால் ஒப்பு கொண்டான்..
என்றுமில்லாது அன்றைய நாளில் காரணம் தெரிவிக்காமலே வெகு விரைவாக நிலமகளடி சாய்ந்திருந்தான் கதிரவன்.. இருள் அப்பிய அந்த அடர்ந்த ஷேஷ்வமலையின் அபாய காட்டில் ஒரு மரத்திலிருந்து இன்னோறு மரத்திற்கு பொருமையாய் தத்தி தத்தி தாண்டி சென்றது ஒரு குட்டி புறா..
ஆம் நம் புறனா தான்.. இடது காலில் ஒரு சில குட்டி குட்டி காயங்களுடன் முட்டியில் சீராய்ப்புகளுடன் வலது இறெக்கையான வலது கரத்தை மறு கரத்தால் பிடித்து கொண்டு கன்னங்களை கண்ணீர் நனைக்க பாதி புறாவின் உருவிலும் மீதி மனித உருவிலும் இருந்தவாறு சென்று கொண்டிருந்தாள்..
காயத்தின் வலியில் முகம் சுருக்கியவளின் காதுகள் சட்டென சிலிர்த்தடங்க தனிச்சையாய் சமைந்து நின்றவள் ஒரு திகில் கலந்த பார்வையுடன் சுற்றி நோக்கினாள்..
ஒரு அமைதியான உறுமல் இரவின் நிசப்தத்தை மெதுமெதுவாய் கிளித்தது.. அந்த இருளில் தெளிவாய் ஒன்றும் இல்லையென்றாலுல் இருளுக்கு பழகியவளின் வெண்ணிற கண்கள் எதையோ கண்டு விரிய அவள் முன் அபாயகரமான தன் கூரான பல்லை காட்டி கொண்டு தனது கம்பீரமான நடையுடன் வந்து நின்றது ஒரு கருஞ்சிறுத்தை ..
அதை கண்ட புறனாவிற்கு பயத்திலே மதி மழுங்கியது... கண்கள் பயத்தில் கண்ணீரை சுரக்க தொடங்கியிருக்க அக்கருஞ்சிறுத்தையோ
கருஞ்சிறுத்தை : கண்ணீர் விட அவசியமன்று ஊனே (உணவே) ... உமக்கு எவ்விதமான வலியுமின்றி இன்றைய உண்டியை (உணவை) மகிழ்வாய் உண்டுகளிப்பேன் நீர் தப்பி செல்ல முயலாமல் இருந்தால்.. என குழந்தையிடம் வலிக்காமல் ஊசி போடுவேன் என மருத்துவர்கள் பொருமையாய் கூறுகிறார்களோ அதே போல் இது கூறி கொண்டே புறனாவை சுற்றி நடை போடவும் எச்சிலை கூட்டி விழுங்கினாள்..
புறனா : இ..ல்..லை யா..யான் செ..ல்ல.. னும்... என திக்கி தினறியவளை தன் நாவால் பற்களை ஈரப்படுத்தி கொண்டு பார்த்த கருஞ்சிறுத்தை சட்டென அவள் மீதே பாய.. புறனா பயத்தில் வீலென அலர... அடுத்த நொடி புறனாவை தாண்டி தொலைவில் மண்ணில் தேய்த்து கொண்டு போய் விழுந்தது அந்த கருஞ்சிறுத்தை...
சட்டென கண்களை திறந்த புறனா அவள் முன் அறடி உயரத்தில் முதுகில் இரண்டு இறெக்கைகள் முளைக்கப்பட்டு .. புடைத்து வந்ததனால் முதுகில் ஏற்பட்ட இரத்த கசிவுடன் சட்டையணியாது திரும்பி நின்றிருந்த ஒருவனை கண்டு பயத்தில் மீண்டும் கண்களை இறுக்கி மூடி கொண்டாள்...
விழுந்த வேகத்திற்கு எம்பி எழுந்த கருஞ்சிறுத்தை தன் முன் நின்ற அவனை கண்டு ஒரு நொடி விக்கித்து போனது.. சட்டை அணிந்திடாமல் தனது கட்டுடலில் இரத்தம் கசிய பெரிய இறெக்கைகளுடன் கேசம் அலைபாயாது பாதி படிந்த கேசத்துடன் சிகப்பு விழிகளில் தீ பொறி பறக்க ருத்ரமூர்த்தியாய் விரைத்து நின்றது சித்தார்த்...
மாயம் தொடரும்...
ரியலி சாரி இதயங்களே.. இன்னைக்கு யூடி லேட் பன்னிட்டேன்... டோன்ட் வரி நாளைக்கு எப்பவும் போல டபுள் யூடி குடுத்துடுறேன்.. இது போரிங்கா இல்லாம இருந்துர்க்கும்னு நம்புறேன்.. நாளைக்கு இரெண்டு யூடியுமே பெரிய யூடி.. இது சின்னதா இருக்குரதுக்கு டைம் பத்தாதது தான் காரணம்.. அத பெருசா குடுக்குறேன்.. குட் நைட்.. டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro