Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 12

(முதலில் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்.. இக்கதையில் பல கதாபாத்திரங்கள் உள்ளதே தங்கள் அனைவருக்கும் பல குழப்பங்களை தருகிறது.. இருந்தும் இன்னும் கதையில் ஆறுவர் அறிமுகமாகவில்லை என்பதே உண்மை.. மூவர் அறிமுகப்பட வேண்டியவர்கள்... தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்.. எத்தனையோ கோணங்களில் சிந்தித்து விட்டேன்... இந்த ஆறுவரில் அறிமுகமாகும் மற்ற மூவர் சாதாரண பெண்களின் கதாபாத்திரங்கள்... சாதாரண பெண்களாய் இருந்தாலும் அவர்களின் கதாபாத்திரமும் முக்கியத்துவமும் இக்கதையில் அவசியமானது.. எனது நிலையை புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.. அப்படி புது கதாபாத்திரங்கள் வேண்டாமென எண்ணினீர்கள் என்றால் தயங்காமல் தெரிவியுங்கள்.. அதில் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை... அப்படி புதிய கதாபாத்திரங்கள் வேண்டாமென்ற கருத்திற்கு அதிக வாசகர்கள் விருப்பப்பட்டால் ஏற்கனவே இருக்கும் கதாபாத்திரங்களை மெல்ல மெல்ல கதையிலிருந்து நீக்கி விடுவேன்.. இறுதியில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் இடம்பெறுவர்.. நன்றி) 

இரண்டு நாட்கள் கடந்து விட்டது...

வீட்டில் தன் தாய்களுடன் இருக்கும் நாயகிகளுக்கு இன்னமும் அதிர்ச்சி மீளவில்லை... ஏனெனில் அவர்கள் வீட்டை அடையும் போது நாயகிகள் அவர்களை சிறு அதிர்ச்சியுடனே அன்பாகவே வறவேற்றனர்... எதுவும் கடிந்து கொள்ளவில்லை... அதுவே இவர்களுக்கு சற்று நிம்மதியாய் இருக்க அவர்கள் முகத்தில் இருந்த ஒரு தீவிரத்தை கவனிக்க தவறினர்...

சோம்பல் முறித்து எழுந்து வந்த வைஷு கொட்டாவி விட்டவாறே கண்களை தேய்த்து கொண்டே வந்தவள் அவளை ஏதோ ஒரு கண்கள் அதிக நேரமாய் உருத்து நோக்குவதை போல் உணர்வெழ தூக்கம் பறந்து விழி விரித்து சுற்றி நோக்கினாள்...

அவளுக்கு நேரெதிரே இருந்த வாயிலின் முன் தன்னை உலுக்கு உலுக்கென உலுக்கியும் அதை சற்றும் கவனியாமல் தூங்கி எழுந்து வந்த தன் கனவுதேவதையை வாயை மூட மறந்து இமைக்காது பார்த்து கொண்டு நின்றிருந்தான் நம் வருண்...

வருணை நேரில் முதல் முதலாய் கண்ட வைஷுவிற்கு மனம் ஒரு நொடி உறைய அவனின் இமைக்காத இரசனபார்வை நாணம் கொள்ள செய்தது .. தன் இந்த புது மாற்றத்தை புரிந்து கொள்ள இயலாமல் அவனின் பார்வையிலிருந்தும் மீள இயலாது சமைந்து நின்றவளை கலைத்தது என்னவோ அஷ்வித்தின் " வைஷு குட்டி " என்ற ஆனந்த அழைப்பே...

கண்களை மூடி திறந்த இருவரும் ஒரு சேர அஷ்வித்தை நோக்க அவன் உள்ளே சென்று வைஷுவை அணைத்திருந்தான்.. முதலில் எதிர்பாராத வரவில் சமைந்து நின்ற வைஷு பின் தனன் நிலை பெற்றதோடு நில்லாமல் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து தன் முதல் அண்ணனை தானும் கட்டி கொண்டாள்...

வைஷு : அஷ்வித்தண்ணா... எப்டி இருக்கீங்க.. ஐம் சோ ஹப்பி... எப்போ ஊருக்கு வந்தீங்க... மோகினிம்மா கூட சொல்லவே இல்ல...

அஷ்வித் : சும்மா தான் பட்டுக்குட்டி சர்ப்ரைஸ் பன்னலாம்னு என இவ்விருவரும் அவர்களை காதிலும் மூக்கிலும் லாவா பொங்கி புகை வர பார்த்து கொண்டிருந்த வருணை கவனிக்கவில்லை...

அருண் அவன் மண்டையிலே ஒரு போடு போட்டு உள்ளே இழுத்து செல்ல... அஷ்வித்தின் குரலிலும் வைஷுவின் கத்தலிலும் மற்ற நாயகிகளும் கீழே ஓடோடி வந்தனர்...

அனைவரும் இவர்களை கண்டு அதிர்ச்சியில் வரிசையாய் நிற்க இக்ஷி மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க மிதுனை ஓரக்கண்ணால் இரசித்து கொண்டிருக்க... அதை அவன் கவனித்தானோ இல்லையோ திடீரென " மை டியர் " என கத்தி கொண்டே அவளை அணைப்பதை போல் ஓடி வந்தான்...

ஒரு நொடி கண்களை பிதுக்கி ஜெர்க்கான இக்ஷி தன் வயிற்றில் ஒரு ஜூவே ஓடுவதை போல் உணர்ந்து கண்களை இறுக்கி மூடி கொள்ள... கைகளை விரித்து கொண்டு வந்தவன் அவனுக்கு நேரே நின்ற இக்ஷியை விட்டு விட்டு அவள் பின் வாயை மூடி சிரிப்பை அடக்க கொண்டிருந்த சந்தியாவை " தங்கச்சி " என தன் வாக்கியத்தை முடித்து அணைத்து கொண்டான்...

சட்டென கண்களை திறந்த இக்ஷி இப்போது அப்பட்டமாய் அவனை முறைத்தாள்.. அதை கண்டு குறும்பாய் சிரித்த மிதுன் அவளை பார்த்து கண்ணடிக்க அவ்வளவு தான் இக்ஷி குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை...

கீழே எதையோ ஆழ்ந்து தேடுவதை போலவே அவளருகில் வந்த ராகவ் மறும் ராம்...

ராகவ் : என் குட்டிமா தொலஞ்சு போன வைரம் ஒரு ஒன்ற கோடி தேரும்ல..

ராம் : அதான அத எப்டி நீ தொலைக்களாம்... பாரு இப்போ பத்து நிமிஷமா தலை குனிஞ்சே தேட வேண்டியதா இருக்கு... என சீரியசாய் கூறியவாறு கீழே பார்த்து கொண்டிருந்த இக்ஷி அருகில் சுற்றி சுற்றி தேடினர்

தலை நிமிர்ந்த இக்ஷி இருவரின் முதுகிலும் நங்கு நங்கென அடித்தாள்...

ராம் : ஏ வலிக்கிது விடு டி என ஓடியவன் சந்தியாவை கண்டதும்... ஹே சந்துமா எப்டி இருக்க... என அவளருகில் சென்று நலம் விசாரிக்க... அவள் பெயரை கேட்டதும் ராகவிற்கு தான் மாரடைப்பு வந்தது...

இக்ஷியிடம் அடி வாங்கி கொண்டே மெல்ல திரும்பியவன் அவனை குறும்பாய் ஒரு பார்வை பார்த்தவாறு ராமிடம் பேசி கொண்டிருந்த சந்தியாவை கண்டதும் " அடி ராங்கி இங்கையா இருக்க நீ... ராகவ் உனக்கு இனிமேலும் இது சேஃபான இடம் இல்ல டா விடு ஜூட் " என மனதில் தனக்கு தானே கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடினான்...

சந்தியா நினைவு தெரிந்த நாள் முதலே ராகவ் விரும்புகிறாள்... ஆனால் ராகவோ முகிலின் கார்பன் காப்பி என்பதால் தந்தையை போலவே தனையனும் " நான் ஐபீஎஸ்.. ஐ ப்யூர் சிங்கிள் " என டயலாக் விட்டு கொண்டு பெண்களை கண்டாலே தெறித்து ஓடுவான்... அதில் வீட்டு பெண்களில் சந்தியா மாத்திரம் அடக்கம்...

அவன் ஓடுவதை கண்டு சந்தியா மனதிலே சிரிக்க பாவையளின் காதல் பார்வையும் அவள் மணாளனை பின் தொடர்ந்தது ... ஓடும் தன் அண்ணனை கண்டதும் " டேய் அண்ணா " என அவனை அழைத்தவாறே கதவருகில் சென்ற மதி சட்டென அப்புறத்திலிருந்து யாரோ வரவும் சடன் ப்ரேக் இட... அப்புறத்திலிருந்து வந்திருந்த மித்ரன் மதியை எதிர்பார்க்காது சடன் ப்ரேக்கிட இருவரும் ஒரே நேரத்தில் முட்டி கொண்டனர்...

மித்ரன் : அவ்ச் என நெற்றியை தேய்த்தவாறு நிமிர்ந்த மித்ரன் மதியை கண்டு கொக்கித்தான் போனான்... எந்தளவிற்கு என்றால்... அவனையும் மீறி அனைவரின் முன்னிலையிலும் முத்ரா என காதல் பொங்கிய குரலில் அவளை அழைத்திருந்தான்...

அனைவரும் இப்போது இவர்களை காண... மதியோ மித்ரனை கண்டதில் விக்கித்து நிற்க... இதை எதுவும் கண்டுக்கொள்ளாத இரு காதல் பறவைகள் ஒருவரை ஒருவர் பார்வையாலே பருகி கொண்டிருந்தனர்...

அஷ்வித் நந்தினியை கண்களாலே நிறப்பி கொண்டிருக்க அவளோ அவனை காண இயலாமல் கீழே தரையை அளந்து கொண்டிருந்தாள்...

அவனுக்கு நடுவே சென்று நின்ற ராகவ்...

ராகவ் : டேய் மச்சான்... என் தங்கச்சி எங்கையும் போக மாட்டா... அவள அப்ரமா சைட்டடி... இப்போ உன் தங்கச்சி கிட்ட இருந்து என்ன காப்பாத்து டா... என கெஞ்சலாய் கேட்க...

அஷ்வித் : இவன் ஒருத்தன் நேரங்காலம் இல்லாம போடா அந்த பக்கம் என தள்ளி விட... சரியாய் இவர்களை நோக்கி வந்திருந்த சந்தியாவையே மோதி நின்றிருந்தான் ராகவ்...

ராகவ் : சாரி சாரி சாரி சாரி என தோப்புக்கரணம் போடாத குறையாக கண்களை இறுக்கி மூடி மன்னிப்பு கேட்பவனை கண்டு பெருகிய சிரிப்பலையை சந்தியா அடக்கவில்லை...

சந்தியா : ஏன் மாமா என்ன பாத்தா இப்டி பயந்து ஓடுர.. என அதே சிரிப்புடனே கேட்க...

ராகவ் : ஏ ராம் உனக்கு அத்தான் நான் உனக்கு மாமாவா.. வழிய விடு...

சந்தியா : ஆமா மாமா தான்.. முடியாது முடியாது... முதல்ல பதில்.. என கை கட்டி நிற்க... அவளை தாண்ட நம் ராகவிற்கு துளியும் தைரியமில்லை...

ராகவ் : தர்ஷனா வேணாம்... நகந்து போ நா போனும்... என அவன் ஜெயம் பட சதாவை போல் கீழே பார்த்தவாறு காட்டமாய் கூறிட...

சந்தியா : ஆஹான் ஊரே பாத்து நடங்குர ஐபீஎஸ் அதிகாரி அத்த பொண்ணுக்கு நடுங்குராரு.. ஹ்ம் இருந்தாலும் பதில தெரிஞ்சிக்கிட்டேன்... சோ இப்போ உங்கள விடுறேன்.. அப்ரமா வந்து பிடுச்சுக்குறேன் வரட்டா மாம்ஸ்... என கண்ணடித்து கூறியவள் அதே மோகன புன்னகையுடன் அவள் அண்ணனிடம் சென்றாள்...

தன் சிறு வயது காதலியை கண்ட குஷியில் சுற்றம் மறந்து நின்ற மித்ரனை நெருங்கிய நவ்யா...

நவ்யா : ப்ரதர் ப்ரதர் போதும் பாத்தது... மச்சிக்கு கண்ணு வலிக்கும்... என மித்ரனின் தோளில் தட்டி கூற அவள் குரலிலே மித்ரனும் மதியும் நிஜ உலகை அடைந்தனர்... மதி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து ஓடி விட மித்ரனோ அசடு வலிந்தான்...

சந்தியா : பாத்து அண்ணா நாங்க வழுக்கி விடுந்துட போறோம் தொடச்சிக்க... என கர்ச்சிஃபை நீட்ட...

அருண் : ஓய் என்னாங்க டி ரொம்ப தான் என் மச்சான கலாய்க்குறீங்க... என மித்ரனை மீட்கும் பணியில் இறங்கினான்...

நவ்யா : ஹையொடா வந்துட்டாருயா சீமதொரை... என முகவாயை இடித்து கூற

அருண் : சீமராணிக்கு வேலை இருக்க இடத்துல தான சீமதுறைக்கும் வேலை இருக்கும்.. என ஷர்ட் காலரை உயர்த்தி கூறினான்...

அருணும் நவ்யாவும் அச்சு அசல் நம் ரனீஷ் ரக்ஷாவை போல தான்... இரண்டும் எப்பொழுதும் இப்படி தான் அடித்து கொள்ளும்... ஆனால் அருண் பல வருடமாய் நவ்யாவிற்கே தெரியாமல் அவளை காதலித்து வருகிறான்... என்ன தான் நம் வாயாடி நவ்யா தன் அண்ணன்களிடமும் அத்தான்களிடமும் வாயாடி குட்டு வாங்கினாலும் இவனிடம் வாயை அடக்கவே மாட்டாள்...

சந்தியா : அடடா கதை அப்டி போகுதோ... என நவ்யாவை பார்த்து சிரிக்க...

நவ்யா : அதெல்லாம் ஒன்னும் இல்ல வா டி உள்ள என அவளை வலுக்கட்டாயமாய் இழுத்து சென்றாள்... இப்போது மித்ரனும் அருணும் சிரித்து கொண்டனர்...

நம் முதல் நாயகிகளிடமிருந்து நாகன்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது... பத்து நிமிடம் விடாமல் எட்டு பேரும் நடு கூடத்திலே நின்று தோப்புக்கரணம் இட்ட பின்னே அமர விட்டனர்...

நாயகன்களுக்கும் நாயகிகளுக்கும் பல உபசரிப்பும் நல விசாரிப்பும் ஊருக்குள் கூடி கொண்டே போக இவர்கள் தான் தாய்மார்களின் அன்பில் திழைத்து போயினர்.. மறுநாள் காலையிலே கார்த்திக் மோகினி வளவனுடன் வேதபுரத்தை அடைந்தான்...

வந்ததும் மோகினி ஓட ஓட விரட்டாத குறையாய் நாயகன்களை விரட்டி " இனி பொய் கூறினால் சங்கு " என்ற ரேஞ்சிற்கு ஓட விட்ட பின்னே அசுவாசமடைந்தாள்....

சோர்வாய் அமர்ந்த எண்வர் அருகில் ஒரு எதிர்பார்ப்பை கண்களில் தேக்கி வந்தமர்ந்த கார்த்திக் கண்களை அங்குமிங்கும் சுழல விட்டவாறு...

கார்த்திக் : மச்சான்ஸ்... உங்க அக்கா எங்க...

ஆதவ் : அக்காவா... யார டா கேக்குற...

கார்த்திக் : ஸ் ஐ மீன் க..கய..ல் கயல் எங்க...

அருண் : எதுக்கு...

கார்த்திக் : நான் என் லவ்வர கேக்குறேன் உனக்கு என்ன டா...

நாயகன்கள் : லவ்வரா...

கார்த்திக் : டேய் நான் தான் லவ் பன்றனே அப்ரம் என்ன... நா கேட்டா என்ன டா...

ஆம் கார்த்திக்கிற்கும் கயலுக்கும் சிறு வயதிலே பேசி வைத்ததால் அவர்களின் விருப்பங்களையும் அறிந்ததும் நம் முதல் அணி நாயகர்கள் எந்த ஒரு இடையூறுமின்றி அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டியிருந்தனர்...

மிதுன் : கேப்ப கேப்ப... அதோ அங்க தான் உன் அத்த கூட இருக்கா...

கார்த்திக் : அத்தையா... எந்த அத்தை

ராம் : மாயமோகினி அத்த கூட...

கார்த்திக் : ஓஹோ... சரி தங்கச்சிங்க எங்க....

ராகவ் : வேற எங்க... எல்லாம் போர்வைய போத்திட்டு தூங்கிகிட்டு இருக்காளுங்க....

அஷ்வித் : டயர்ட்ல தூங்குராலுங்க விடுங்க டா...

மித்ரன் : ம்ம்ம் சரி துருவ் எங்க...

ஆதவ் : அதான நானும் வந்ததுல இருந்து துருவ பாக்கலையே...

வருண் : மாமா சித்தாவ கூட காணுமே...

நாயகன்கள் : தெரியலயே டா....

கார்த்திக் : துருவ் வந்துடுவான்... ஆனா அப்பாஸ் மாமாஸ் தான் எங்கன்னு தெரியல

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... இந்த யூடி ஒரு சுமாரான யூடி தான்... அடுத்த யூடில ஒரு க்லஷ் வச்சிர்க்கேன்... யாருக்கும் யாருக்கும்னு அப்ரம் சொல்றேன்... டக்குன்னு மேல உள்ள கொஷின்க்கு பதில் சொல்லுங்க... அப்போத்தான் நா ந்யூ கரெக்ட்டர்ஸ இறக்க மாட்டேன்... இல்லனா சேத்துடுவேன் ஹிஹி... நைட்டு ஒரு யூடியோட வரேன்.. டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro