Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 11

தன்னை கண்டதும் ஓடி வந்த தங்கைகளை ஆசை தீற தழுவி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டாள் கயல்...

நாயகிகள் : கயல் என ஒரு சேர அழைக்க...

கயல் : வெல்கம் பக் கெர்ள்ஸ்.. என அனைவரையும் அன்புடன் வரவேற்த்தாள்...

மதி : தன்க்யு சோ மச் கயல்... எங்கள வர வச்சதுக்கு...

கயல் : தன்க்ஸ நீங்க நம்ம சத்தீஷ் மாமாக்கு தான் டி சொல்லனும்...

நித்ரா : மாமாக்கா.. ஏன் டி...

கயல் : இரெண்டு நாளா உங்கள இங்க அழச்சிட்டு வந்துடலாமான்னு யோசிச்சிட்டே இருந்தேன்... பட் ஐடியா கெடைக்கல... நேத்து தான் கனவுல சத்தீஷ் மாமா இப்டி ஒரு ஐடியா குடுத்தாங்க... அதான் உடனே எக்ஸ்க்யூட் பன்னிட்டேன்..

நவ்யா : ஹ்ம் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு டி.. அவ்ளோ ஹப்பியா இருக்கு..

வைஷு : நாம இனிமே நம்ம அம்மாஸ் அப்பாஸ் சிச்சாஸ் சித்திஸ் மாமாஸ் அத்தீஸ் கூட சந்தோஷமா இருக்களாம்...

கயல் : ஆனா அவங்க திரும்ப உங்கள கெனடாக்கு அனுப்பீடாம பாத்துக்கனும் டி...

மாயா : நல்லதே நடக்கும்னு நம்புவோம்...

கயல் : பாட்டிஸ் தாத்தாஸ்க்கு தெரியாம தான வந்தீங்க...

நந்தினி : ஆமா வீட்டுக்கு போன உடனே நாம ஃபோன் போட்டு சொல்லனும்.. இல்லனா பதறீடுவாங்க... இந்நேரத்துக்கு தூங்கிக்கிட்டு தா இருப்பாங்க...

சந்தியா : ஓக்கே லெட்ஸ் கோ.. இனிமேலும் டைம் வேஸ்ட் பன்ன வேண்டாம்.. என உற்சாகமாய் பறபறத்தாள்...

கயல் : கமான் கமான்... என அவளும் அதே மகிழ்ச்சியுடன் எட்டு பேரைம் அழைத்து சென்றாள்...

ஊட்டி

கதவை திறந்து உள்ளே வந்த துருவனை இமைக்க மறந்து பார்த்தனர் அனைவரும்... துருவோ அலட்டாது வந்தவன் ருமேஷையும் விதுஷையும் எழுப்பி அவர்களின் கை கட்டுகளை கழட்டி விட்டான்...

ஆம் ருமேஷ் மற்றும் விதுஷ் வளவன் மோகினி தம்பதியரின் இரெட்டை புதல்வர்கள்... அதனாலே பராக்ரம வீரன்களுக்கும் அவ்விருவர் பரிட்சையமாய் இருந்தனல்...

துருவுடன் வந்திருந்த அப்பருந்து தன் சிறகை அசைத்து மேலே எம்ப அதனை கண்டு விசுவும் வசுவும் அதே போல் எம்பி அதனூடே பறந்து அவ்வீட்டை விட்டு வெளியே சென்றது...

ருமேஷ் விதுஷ் : அண்ணா... என எழுந்து நிற்க..

துருவ் : ஒன்னும் இல்லடா.. அவனுங்களும் தெரிஞ்சிக்கிர டைம் வந்துடுச்சு.. பதட்டப்பட வேண்டாம்... என இருவருக்கும் ஆறுதலாய் கூறி அவர்களின் தலை கேசத்தை கோதியவன் அனைவரையும் அவனது பருந்து கண்களால் ஏறிட அக்கூட்டத்தில் சித்து இல்லாதது அவனுக்கு பொறி தட்ட ருத்ராக்ஷும் ஆதியன்த்தும் அவனை வெகுவாய் ஈர்த்தனர்...

அவனையே இமைக்காது நோக்கிய சகோதரன்கள் இருவரின் அருகிலும் சென்ற துருவன் இருவரின் முகத்தையும் அவன் விரலினான் தொட... அத்தொடுகை ஏனோ இருவருக்குமே பரிட்ச்சையமாய் தோன்றியது..

அவர்கள் இருவரையும் இவ்வளவு அருகில் கண்டதும் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க.. தனிச்சையாகவே மாமா என உச்சரித்தான்...

அவன் வலி மிகுந்த குரலை கேடதில் ருமேஷும் விதுஷும் தலை குனிந்தனர்... மற்றவர்களுக்கும் துருவ் யாரை குறிக்கிறான் என புரிபட அனைவருக்குமே மனதில் ஒரு வலி பெருக்கெடுத்தது...

பேரலையாய் பெருக்கெடுத்த கண்ணீரை உள்ளிழுத்த துருவ் புன்னகையுடன் இருவரின் கன்னத்திலும் தட்டி கொடுத்தான்...

துருவ் : என்ன ஆச்சு.. என இவன் கேட்க... மறைக்காது ருமேஷ் விதுஷ் இருவரும் அவர்களுக்கு தெரிந்தவரை ஒப்புவிக்க... அதற்கு முன் நிகழ்ந்தவை தெரிய வேண்டி நாயகன்களை ஏறிட்டான்...

மித்ரன் : நாங்க சொல்றோம் துருவ்... பட் உனக்கும் சித்து ருத்து ஆதி உயிரோட இருந்தது தெரியுமா... என ஒரு வலி நிறைந்த குரலில் கேட்க... கண்கள் மூடி அதை அமோதித்தான் துருவ்...

மிதுன் : எதுக்கு டா எங்ககிட்ட இருந்து மட்டும் மறைச்சீங்க... என கேட்டவனின் குரலில் ஒரு ஆற்றாமை இருந்தது...

துருவ் : உங்களுக்கே எல்லாம் புரிய வரும் டா... நீங்க யாருமே சாதாரணமா பிறந்தவங்க இல்ல... நீங்க சாதாரணமா ஒன்னும் தெரியாம வளக்கப்பற்றுக்கலாம்... ஆனா உங்கள இப்டி தனி தனியா வளர விட்டதுக்கு பின்னாடி மலையளவு ஒரு காரணம் ஒளிஞ்சிருக்கு. சொல்லும் போது மட்டும் இல்ல... அதோட வீரயமும் மலையளவ தாண்டீடும்... நீங்க நினைக்கிர மாரி உங்க அப்பாக்களும் அம்மாக்களும் சாதாரண மனுஷங்க கிடையாது... என நிறுத்தினான்...

மித்ரன் : ஆர் யு கிட்டிங் துருவ்.. சாதாரண பிறப்பில்ல... சாதாண மனுஷங்க இல்லங்குர... எத டா மீன் பன்ற...

துருவ் : நாம யாருமே சாதாரண மனுஷங்க கிடையாது மித்ரன்... சொல்ல போனா எனக்கு இப்போ வர போற பிறந்த நாளோட மட்டுமே சேத்தாலும் என்னோட வயசு... 5030 .. நா பிறந்து ஐயாயிரம் வருஷமாய்டுச்சு... என்றதற்கு மற்ற பத்து பெயருமே அதிர்ந்து நின்றனர்...

ருத்ராக்ஷ் : டேய் விளையாடுரியா...

துருவ் : இல்ல ருத்ரா.. உண்மைய தான் சொல்றேன்... ருமேஷும் விதுஷும் நீங்க பொறந்த ஒரு வர்ஷத்துல தான் மோகினிமாக்கு பிறந்தாங்க... வளவனப்பானால நாங்க மூணு பேரு பருந்து வம்சத்த சேந்த விந்தைகள்... என கூற அவன் கூறியதற்கு அடையாளமாய் இரு சிறகுகள் இணைந்திருக்கும் ஒரே அச்சு சகோதரர்கள் மூவரின் பின்னங்களுத்திலுமே மறைவாய் இருந்தது...

ஆதியன்த் : எங்களுக்கு எதுவும் புரியல... நீ என்ன சொல்ல வர.. ஏதேதோ வம்சம்ங்குர... ஒன்னுமே புரியல... என தலையில் கை வைத்தவாறு கூறினான்...

துருவ் : ஹ்ம் நம்ம விதி எழாயிம் வருஷத்துக்கு முன்னாடியே தொடங்கீடுச்சு... என ஆரம்பித்து கோவன்கள் சஹாத்திய வம்ச சூரர்கள் யாளி வம்சத்து வீராங்கனைகள் நாகனிகளென மொத்த மீண்டும் தொடரும் காதலையும் புரியும் படி கூறி முடித்தான்...

பத்து பேரின் முகமும் கல்லென சமைந்திருந்தது.. மனமோ உண்மைகளை ஜீரனிக்க இயலாமல் தினறி கொண்டிருந்தது... அத்தோடு தன் உரையை தொடர்ந்தான் துருவ்...

உலகின் முக்கிய வம்சங்கள்
மகாவம்சம்
சஹாத்திய வம்சம்
அதிரதீர வம்சம்
பராக்ரம வம்சம்
நாகதாரணி வம்சம்
யாளி வம்சம்
பஞ்சலோக வம்சம்
மற்றும்
யட்சினி சர்ப்ப வம்சம்

கோவன்களான யுவக்ரிஷ்ணன் இந்திரஜித் மற்றும் சத்தீஷ்வரன் மகாவம்சத்தை சார்ந்தவர்கள்... அவர்களையன்றி வேறவரும் அவ்வம்சத்தில் பிறக்க மாட்டர்...

மகா வம்சத்திற்கு அடுத்து அதை போல் பார்க்க படும் மூன்று மூச்சங்களுடைய வம்சம் அதிரதீர வம்சம்... அதில் தான் இரட்சகன்கள் பிறப்பெடுப்பர்...

அடுத்து மகா வம்சத்திற்கு அடுத்ததாய் எண்ணப்படுவது சஹாத்திய சூரர்கள் என அழைக்கப்படும் அஷ்வன்த் ரவி ரனீஷ் வீர் ரித்விக் மிதுன் முகில் மற்றும் அர்ஜுன் பிறந்த சஹாத்திய வம்சம்

சஹாத்திய வம்சத்திற்கு ஈடாய் மதிக்கப்படும் வம்சம் பராக்ரம வம்சம் அதில் மித்ரன் வருண் அருண் ஆதவ் அஷ்வித் மிதுன் ராகவ் ராம் மற்றும் கார்த்திக் பிறப்பெடுத்துள்ளனர்...

நாகனிகள் என அழைக்கப்படும் அனு திவ்யா ப்ரியா நாகதாரணி வம்சத்தில் பிறந்தவர்கள்... நாகதாரணி வம்சத்தில் பிறந்த முதலும் கடைசியுமான மூன்று பெண்களே நமது நாகனிகள்...

நாகதாரணி வம்சத்திற்கு ஈடான சக்திகளும் நஞ்சும் கொண்டதே யட்சினி சர்ப்ப வம்சம்... அந்த வம்சத்தின் முதலும் கடைசியுமாய் பிறந்த மூன்று பெண்கள் நித்யா ஆருண்யா மற்றும் அதித்தி ஆவர்...

நாகதாரணி வம்சத்தின் ஒரு பகுதியே யாளி வம்சம்... அதில் யாளி வம்சத்து வீராங்கனைகள் என போற்றப்படும் பவி வீனா ரக்ஷா தான்யா மது வர்ஷி ஒவீ மற்றும் நிரு பிறப்பெடுத்துள்ளனர்...

அதற்கு அடுத்து மதிக்கப்படும் வம்சம் பஞ்சலோக வம்சம்... அதில் பிறப்பெடுத்தது வைஷ்ணவி மாயா நந்தினி நவ்யா சந்தியா நித்ரா இக்ஷித்தா மதிமுத்ரா மற்றும் கயல் ஆவர்...

விஞ்ஞவெள்ளன் சாகாரகாந்தன் மகரகாந்தன் அருளவர்தினி மற்றும் மிதரவர்தினி ஐவரும் யட்சினிசர்ப்ப வம்சத்தினால் தவறான வழியில் உருவெடுத்த வம்சங்களை சேர்ந்தவர்கள்... ( இன்னும் மூவர் உள்ளனர்.. அவர்கள் வரும் அத்யாயங்களில் அறிமுகப்படுத்தப்படுவர்)

வளவன் துருவன் ருமேஷ்யவன் மற்றும் விதுஷ்யவன் பருந்து வம்சத்தை சார்ந்தவர்கள்... மோகினி நாக வம்சத்தை சார்ந்தவள்...

துருவ் : ஹ்ம் இதெல்லாம் பிறக்கும் போதே நாம பிறக்குர வம்சங்களுடையது.. அதற்கு ஏற்றது போல நமக்கு சக்திகளும் இருக்கு... இந்த எட்டு வம்சங்களும் உலகத்துல முக்கியத்துவம் வாய்ந்தது... அதிரதீர வம்சமூம் .. பராக்ரம வம்சமும் .. பஞ்சலோக வம்சத்துல இருந்து பிரிந்தது தான்... மொத்தத்துல இந்த எட்டு வம்சங்கள்ளையுமே அதிசக்தி வாய்ந்த மூவர்னா அது மகாவம்ச கோவன்கள் மட்டும் தான்.. அவங்களுக்கு அடுத்த படியா இருக்குரது உங்க அப்பாக்களான சஹாத்திய வம்ச சூரர்கள்... என்ன தான் அதிசக்தி வாய்ந்தது கோவன்களா இருந்தாலும் இருவது வர்ஷத்துக்கு முன்னாடி...

சித்தார்த் : யட்சினி சர்ப்ப வம்சத்தவர்களால் மடிந்து விட்டனர்... என திடீரென கேட்ட இவன் குரலில் அனைவரும் திரும்ப அதற்கு முன்னே அங்கு சுடர் விட்டெரிந்த தீப்பொறி மறைந்திருந்தது...

ஆதவ் : இப்போ நாங்க என்ன பன்னனும்... என கேட்க அனைவரும் அவனூடே எழுந்து நின்றனர்...

துருவ் : நம்ம வீட்டுக்கு போங்க... என ஒரு காட்டத்துடன் கூற வேறு வழியின்றி இந்த நிலையில் நாம் வேறெதுவும் தவறாய் செய்ய கூடாதென அவர்களும் மனமின்றி கிளம்ப தயாராக...

கார்த்திக் : மச்சான்ஸ் அவன் வேதபுரத்துல இருக்குர நம்ம வீட்ட சொல்றான்... என சிரித்து கொண்டே உள்ளே வந்தான்...

நமது பராக்ரம வீரன்கள் ஒரு மகிழ்ச்சி பார்வையுடன் துருவை காண... துருவும் சிரித்த முகமாய் தலையசைத்து அமோதித்தான்...

துருவ் : தென் ருத்ரா ஆதி நீங்க இரெண்டு பேரும்...

இருவரும் : சித்துவ தேடி போறோம் என்றனர் ஒரு சேர...

அனைவரும் அவர்களை பார்த்து மென்மையாய் புன்னகைக்க... அடுத்த ஒரு மணி நேரத்தில் ருத்து ஆதி ஒரு பக்கமும் பராக்ரம வீரன்கள் ஒரு பக்கமும் பிரிந்து சென்றனர் இனிய வழியனுப்பல்களுடன்...

கை கால்களை உதறி நெட்டி முறித்து கொண்டிருந்த தன் இளவல்களை பார்த்தவாறு உள்ளே வந்தான் துருவன்...

ருமேஷ் : டேய் அண்ணா எதுக்கு டா அவனுங்க கிட்ட இந்த உண்மைகள மட்டும் சொன்ன.. அங்க என்ன நடந்துச்சுன்னே நமக்கு தெரியாதே...

துருவ் : எனக்கு தெரியுமே டா... என்க இருவரின் முன்னும் அங்கு நிகழ்ந்தவைகள் படமாக்கப்பட்டது..

ருத்ராக்ஷும் ஆதியும் மயங்கியதும் அவர்கள் எழவே பல மணி நேரம் எடுத்தது.. எழுந்ததும் அவர்களுக்கு நிகழ்ந்ததை பற்றி எந்த ஒரு நினைவும் இல்லை... ஆனால் ஒருவர் மற்றவரின் முகத்தை கண்டு அதிர்ச்சியுற்றிருந்தனர்... ஏனெனில் அவர்கள் மூவருக்குமே சிறு வயது நிகழ்வுகள் மறக்கவில்லை... அனைத்தும் நினைவில் இருந்தது.. அவர்கள் எப்படி பிரிந்தார்கள் என்பதை தவிற... சத்தீஷின் முக ஜாடையிலே இருக்கும் ஆதியையும் இந்திரனின் முக ஜாடையிலே இருக்கும் ருத்ராக்ஷையும் கண்டு கொள்ள இருவருக்கும் வெகு நேரம் தேவைப்படவில்லை...

உண்மை உணர்ந்ததுமே ஆற தழுவி கொண்டனர்... பின் சித்துவையும் கண்கள் தேட அப்பொழுதே நிகழ்ந்தவை நினைவில் வந்து சித்து உயிருடன் தான் இருக்கிறான் என மகிழ செய்தாலும் அவர்களின் சக்திகளே அவர்களை குழப்பி விட்டது...

இவர்கள் எழுவதற்காகவே காத்திருந்த நமது நாயகன்களுமே எழுந்த ஐந்து நிமித்தில் கட்டி உருண்டு பெரண்டு எழுந்து விட்டனர்... அனைவரின் மனதிலுமே ஒரு நெகிழ்ச்சியும் நிம்மதியும் இருந்தது...

இவர்களின் சிறு வயது பிணைப்பே இப்போதும் இவர்களை இணைத்திருக்கிறதென மனதார மகிழ்ச்சியடைந்தனர்...

பின் அனைத்தையும் பேசி கலந்துரையாடிய பின்னே ருமேஷ் விதுஷை தூக்க திட்டம் தீட்டி அதையும் சரியாய் செய்திருந்தனர்...

விதுஷ் : ஹ்ம் எல்லாம் சரி சித்து எங்க போய்ர்ப்பான்... என்றதற்கு மற்ற இருவரிடமும் எந்த பதிலும் இல்லை...

துருவ் : ருத்து ஆதிய நாம ஓரளவுக்கு தெரிஞ்சு அறிஞ்சு வச்சிருந்தாலும் சித்துவ நாம அந்தளவுக்கு படிக்கல... அவனுக்கு அனு திவ்யா ப்ரியா அத்தைங்க தான் சரி வருவாங்க... என ஒரு நினைவை நினைத்து சிரிப்புடன் கூறினான்...

தீரா : அதெல்லாம் நாம ஃப்லஷ்பக்ல பாப்போம்... இப்போ ஒரு வேலை இருக்கு அங்க போவோம்...

சர்ப்பலோலத்தின் அடர்ந்த காட்டருகில் அமைந்திருக்கும் தன் குகையில் ஏதோ கருமமே சிரத்தையாய் ஜெபித்து கொண்டு அமர்ந்திருந்தாள் மிதரவர்தினி...

அவள் முன்னிருந்த யாக குண்டத்தின் அருகே ஜம்பெலி அது சைசிற்கு இருந்த ஒரு கின்னத்தை தலை மேல் வைத்து பிடித்துகொண்டு தள்ளாடியவாறு நின்று கொண்டிருந்தது... சில நொடிகளில் கண்களை திறந்த மிதரவர்தினி முகம் கொள்ளா சிரிப்புடன் அக்குகையே அதிர சிரிக்க தொடங்கினாள்...

அதில் அரண்டு போன ஜம்பு அந்த கின்னத்தை தவற விட அது கீழே விழுந்து உடைந்தது... அந்த சத்தத்தை கூட கவனியாமல் இன்னும் ஆதித்யா சனலை போட்டு விட்டதை போல் சிரித்து கொண்டிருந்தாள் அவள்...

ஜம்பெலி : ராணியாரே... ராணியாரே... ஏன் இந்த ஆரவம்... தாம் எண்ணிய ஏதேனும் நிகழ உள்ளதா... எனை ஒரு வித ஆர்வத்தில் கேட்டு விட...

மிதரவர்தினி : எம்மையே வினா எழுப்புகிறாயா... என ஓங்கி ஒரு குட்டு வைத்தாள்...

தீரா : அவ தான் கொஷின் கேட்டாலே மண்டைய பொழக்குறாள்ள... அப்ரம் உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை...

ஜம்பெலி : பொருத்தருளும் ராணியாரே பொருத்தருளும் என தலையை தேய்த்து கொண்டு கீழே அமர்ந்தது...

மிதரவர்தினி : எம் மகிழ்ச்சிக்கு அளவில்லை ஜம்பு.. யான் எண்ணிய அனைத்தும் கூடிய விரைவில் நிகழ உள்ளது... நாமே யட்சினி வம்ச பொருப்புகளை ஈட்டிடவும் நமது மகாபிரபுக்களை விடுவித்திடவும் காலம் நெருங்கி விட்டது... பஞ்சலோக வம்சத்தில் பிறந்த நாக சக்தி உள்ள விந்தைகள் பல வருடம் களித்து மீண்டும் இம்மண்ணில் காலடியை பதித்து விட்டனர்... இனி எம் பயிற்சியை வித்விப்பது எமது கடமையாகும்... ஹாஹாஹாஹாஹாஹாஹா

ஜம்பெலி : ஆயின்.. ஆயின் ராணியாரே சஹாத்திய வம்ச சூரர்கள் அதற்கு தடையாய் அமைய வாய்ப்புள்ளதன்றோ...

மிதரவர்தினி : ஹ்ம் முதல் முறையாய் உமது ஞானம் உபயப்பட்டிருக்கிறது ஜம்பு.. நீ வினவுவதும் உண்மை தான்... ஆயினும் அவ்வாய்ப்பையே அமைய விடாது அச்சஹாத்திய வம்சத்தையே அழித்து விட்டால்.. என கேட்டு விட்டு வடிவேலு காமெடி கூறியதை போல் கைகொட்டி சிரித்தாள்....

ஜம்பெலி : ஆனாலும் அது சாத்தியமா... என நடுங்கியவாறே கேட்டதன் குரலே அடித்து கூறியது நிச்சயமாய் சாத்தியமில்லை என்று...

மிதரவர்தினி : ஏன் சாத்தியமில்லை... அதிசக்தி படைத்த கோவன்களே மடிந்து விட்டனர் அவர்களின் சக்திகளுக்கு ஈடான இவர்களை அழிக்க இயலாதா... என கூறியவளின் முன் மூன்றே மூன்று இளைஞர்களை அழிக்கவே ஒரு மாபெரும் வம்சமாய் இவர்கள் படாத பாடு பட்டு இறுதியில் நாழ்வர் அடைப்பட்ட பின்னே பாதி அழித்தது நினைவில் வர... இதில் நம்மை விடவும் சக்தி வாய்ந்த பலசாலிகளான சஹாத்திய சூரர்களை அழிப்பது உமக்கு இளகுவா என அவள் மனசாட்சியே அவள் முன் வினா எழுப்பியது...

ஜம்பெலி : இருந்தாலும் என ஏதோ இழுக்க...

மிதரவர்தினி : நிறுத்து உமது ஐய பிதற்றலை... சஹாத்திய சூரர்களை நிச்சயம் அழிப்போம்... இந்த இருவது வருடத்திலே அவ்வெண்வரின் பிள்ளைகளை பாதுகாத்திட தானே ஓடி ஒழிகின்றனர்... எம்மை என் செய்திட இயலும் அவர்களால்... பயந்தாங்கொள்ளிகள்... என கை கொட்டி சிரித்து அவளே அவளுக்கு ஆறுதல் கூறி கொள்வதை போல் ஏதோ உளறினாள்..

அந்த நேரம் சரியாக அவள் கன்னத்தில் இடியாய் இறங்கியது ஓர் அறை... அதில் நிலைகுழைந்து பொன மிதரவர்தினி அதிர்ச்சியுடன் திரும்ப.... இருள் வாணில் அதீத வெளிச்சத்துடன் ஓர் பெரும் மின்னல் வெடிக்க.... அதில் ஆபத்தபாந்தவனாய் உடல் விரைத்த இரத்த காயங்களுடன்... ஆறடிக்கும் மேலான உயரத்தில் என்றும் உறைந்த புன்னகையுடன் இருப்பவன் இன்று இறுகிய முகத்துடன் அவள் முன் நேருக்கு நேராக நின்றான் பகீரா வம்சத்தவனுமான நம் முதல் அணி நாயகன்களின் குட்டி நண்பன் சேவன்....

சேவன் : யாரை ஏசுகிறாய் மதிகெட்ட ஜென்மமே... உமக்கென்னடி தெரியும் எம் கோவன்களையும் சஹாத்திய சூரர்களையும் பற்றி... இன்றளவும் அவர்கள் பாதுகாக்கும் பொக்கிஷத்தை நீ அறியாது போகலாம்... ஆனால் எண்ணி இன்னும் சில திங்களிலே வர விருக்கும் எங்கள் மகாவம்ச கோவன்களின் வருடாந்திர நாளான மதிநட்ச்சத்திரம் விழும் நாளில் உம் கண் முன் தோன்றுவார்களடி உங்களின் அழிவை தர போககும் பஞ்சலோக வம்சத்தின சூரர்கள்... (இரட்ச்சகன்கள் பராக்ரமவீரன்கள் இருவரையும் உள்ளடக்கியதே பஞ்சலோக வம்சம்)

மிதரவர்தினி : மகாவம்ச கோவன்கள் மற்றும் சஹாத்திய வம்ச சூரர்களின் அடியேன் நீ.. யட்சினி வம்சத்து அமைச்சினியான எம்மை அறைகிறாயா...

சேவன் : அடியேனல்ல டி நான்... அவர்களின் சேவன்... எம்மை அடியேனென பறைவதை எமது சஹாத்திய சூரர்கள் செவி மடுப்பின் உமது நிலை கந்தலாகிடும்... யான் யாரென அறிந்திருக்க மாட்டாயல்லவா... பகீரா வம்சத்து முதன்மை காப்பாளன் உம் நா அன்று அறுந்ததன் காரணமான சேவபந்ரவீணையன் நான்...

இதை செவி மடுத்தவளின் செவிகளை அவளாலே நம்ப இயலவில்லை... அதிர்ச்சியில் தானாகவே அவளின் முகம் வெளிரியது....

மிதரவர்தினி : நீ...நி... என தடுமாறிட...

சேவன் : ஹாஹா நான் தான்... இதை செவி மடுத்ததிலே அந்த வலி நாவில் எரிகிறதல்லவா.. மேலும் எம் சஹாத்திய சூரர்ளை பற்றி ஏதேனும் இகழ்வாய் உரைத்தாய்... மீண்டும் அந்நாவை அறுக்க தயங்க மாட்டான் இந்த சேவன்... என அதிரடியாய் கூறியவனை இன்னும் மருண்ட விழிகளுடன் பார்த்திருந்தாள் அவள்...

சட்டென ஓரிடி இடிக்க... சேவனின் பின் நோக்கிய மிதரவர்தினியின் இதழ்கள் அதிர்ச்சியை மறந்து சிரிக்க... சேவன் சுதாரிக்கும் முன் அவன் பின்னங்கழுத்தை பிடித்திருந்தான் மகரகாந்தன்...

இத்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத சேவன் என்ன செய்வதென்று தெரியாமல் தினற... கை தட்டி கொண்டே முன்னேறி வந்தாள் மிதரவர்தினி

மிதரவர்தினி : சபாஷ் சபாஷ்.. என்ன உரை என்ன உரை... எண் காந்த தைரியம்.. ப்பா.. புல்லரிக்கிரது சேவா.. ஏதோ உமது சஹாத்திய வம்ச சூரர்களை பற்றி ஏதேனும் இகழ்வாய் உரைத்தால் எம் நாவை அறுத்திடுவாய் என மிகவும் விசுவாசமாய் கூறினாயே தாம் இன்னலில் இருப்பதை அறிந்து அவர்களே உம்மை காக்க இங்கு வரவளிக்க மாட்டாரோ.. என எகத்தாளமான குரலில் அப்பிவியாய் யேட்க.. அவளுக்கு சலைத்தவனா நம் சேவன்...

சேவன் : ஹா.. இதெல்லாம் ஒரு இன்னலா... முதுகிற்கு பின்னிருந்து தாக்கும் உமது சகோதரன் கோழையடி.. அவனுக்காக எம் சஹாத்திய சூரர்கள் இத்தொலை தூரத்தை கடந்து வர வேண்டுமா... என வினவியதில் இருவரின் மூக்குமே உடைந்தது...

மகரகாந்தன் : என்ன டா இத்துனையாண்டுகள் சுதந்திரமாய் சுற்றி திரிந்ததில் பிதற்றுகிறாயா... என இன்னும் வெறியாக நம் சேவனுக்கு பேசவா கற்று தர வேண்டும்...

சேவன் : ஹ்ம் நீர் தான் எம் சஹாத்திய சூரர்களின் சிறையில் இருந்து விட்டு சுதந்திர காற்றை கண்டதும் ஏதோ போரிட்டு வெற்றியடைந்து வந்ததாய் பிதற்றுகிறாய் யானில்லை... என அப்போதுமௌ சேவன் அலட்டி கொள்ளாமல் ஏற்றி விட்டான்..

மகரகாந்தன் : இவ்வாறெல்லாம் இக்குரல் வளைம் இருப்பதால் தானே பறைகிறாயௌ... அதையே இருந்த இடமின்றி செய்கிறேன் பார்.. என அவன் கழுத்தை இரு கைகளாலும் நெருக்க சேவனோ எவன் கழுத்தோ எனக்கென்ன என்பதை போலே இருந்தான்..

மகரகாந்தனே அலுத்து அவன் பிடியை தளர்த்த அடுத்த நொடி சேவன் ஆவன் கை பிடியிலிருந்தே விலகியிருந்தான்...

சேவன் : ஹ்ம் எம்மை வீழ்த்துவது சாதாரண செயல் அல்ல மகரகாந்தா... யாவர் தடுத்தாலும் எம் செயலை புரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்... யட்சினிகளிடம் அவர்களின் இரட்சகன்கள் இம்மண்ணில் காலடி எடுத்து வைத்து விட்டனர் என்பதை உறுதியுடன் உரைத்து விட்டு மீண்டும் எம் ஞாலத்திற்கு(உலகத்திற்கு) செல்வேன்.. என சவால் விட்டு விட்டு அக்குகையை விட்டு துணிச்சலுடன் வெளியேறினான்...

அந்த குகையே இப்போது மழை பேய்ந்து ஓய்ந்தது போல் கிடக்க... மகரகாந்தனும் மிதரவர்தினியும் கத்தி சிரித்தனர்...

மிதரவர்தினி : இவனுக்கு நாம் ஐயமெய்திட லேண்டுமா... ஹாஹா என சேவனை பற்றி அறியாமல் சிரித்தாள்...

மகரகாந்தன் : அவன் பிதற்றிய எதுவும் ஈடேரபோவதில்லை... வெற்றியை ஈட்ட போவதே நாம் தான்.. என கொக்கரித்தான்...

அவர்களுக்கு தெரியாதே அந்த வெற்றியை தட்டி பறிக்கவே  நாயகன்கள் பிறந்திருங்கிறனர் என்று....

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... இந்த யூடி உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நம்புறேனௌ... புடிச்சிருந்தா கமென்ட் பன்னுங்க... நைட் நல்லா தூங்குங்க குட் நைட்.. டாட்டா...

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro