friendly update
அனைவருக்கும் வணக்கம் இதயங்களே...
நா இப்போ கொஞ்சம் லைட்டா கன்ஃப்யூஸ்ட் ஸ்டேட்ல இருக்கேன்.. என்ன செய்ரதுன்னே தெரியல.. நா யாரையும் இங்க குறை சொல்ல வரலப்பா.. என்னோட மனகுறைய சொல்ல தான் வந்துர்க்கேன்.. எனக்கு உண்மையாவே நா சரியா தான் கதை எழுதுறனான்னே தெரியல.. என்னோட கற்பனை போற விதம் அப்டி இருக்கு..
என்னால முடிஞ்ச அளவு என் கற்பனைல படம் போல ஓடுர காட்சிகள உங்க கண்ணு முன்னாடி நடக்குர மாரி எழுத ட்ரை பன்றேன்.. என் ஆரம்பமும் சரி இப்பவும் சரி நா அப்டி தான் எழுதுறேன்...
ஒரு விஷயம் சொல்ல போனா ஏன்னு தெரியல மாய மந்திர கதைகள யாரும் விரும்பி படிக்க மாற்றாங்க.. அது ஏன் எதுக்குன்னு தெரியல.. பட் என்ன மாரி கற்பனை விரும்பிகள் மாய மந்திர கதைகளுக்காக மட்டுமே ஏங்குறாங்க... அப்டி இருக்கவங்களுக்காக தான் நா எழுதுரத கன்ட்டின்யூ பன்னேன்..
பட் இப்போ எனக்கே குழப்பமா இருக்கு நா தப்பா எழுதுறனனோ.. சர்ப்பலோக மாய காதல் கதைல இத்தன கதாபாத்திரங்கள கொடுத்தது தப்போன்னு தோனுது.. படிக்கிரவங்களுக்கு புரியிதான்னு கூட என்னால தெரிஞ்சிக்க முடியல... அதுக்குன்னு லெசன் நடத்துன மாரி என்னால க்யூ அன் ஏ செஷ்ஷென் வைக்க முடியாது...
படத்துல மட்டும் தான் பத்து ஹீரோஸ் இருக்கனுமா கதைல இருக்க கூடாதா... ஒத்துக்குறேன் புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும்.. இல்லன்னு சொல்லல பட் என் கிட்ட முன்னாடியே சொல்லீர்க்களாமேன்னு தான் கேக்குறேன்...
புரியலன்னா பட்டுனு சிலர் சொல்லீடுறாங்க.. அவங்களால என்னால புரிஞ்சிக்க முடியிது... பட் எல்லார்க்குள்ளையும் என் கதைய பத்தி என்ன தான் நினைக்கிறீங்க.. ஆரம்பத்துலையே என்ன நீங்க எதாவது சொல்லீர்ந்தா கூட நா கதைய மாத்த முயற்சித்திருப்பேன்...
ஆனா இப்போ முயற்சிக்க கூட முடியாத இடத்துல இருக்கேன்... ஒரு செக்கெண் தோனுச்சு... கதைய மொத்தமா அன்பப்லிஷ் செஞ்சிட்டு ஹீரோஸ் ஹீரோயின்ஸ குறைச்சிடலாமான்னு... பட் ஹீரோஸ அப்டி குறைக்க முடியாது... ஏன்னா அவங்க மீண்டும் தொடரும் காதல் கதைதோட இணைஞ்சவங்க.. குறைக்கனும்னா ஹீரோயின்ஸ குறைக்கலாம்.. நீங்க என்ன சொல்றீங்க... பட் ஜோடி கம்மியா இருக்கும்.. இல்லனா இரண்டாம் அணி நாயகிகள் (கயலை தவிர்த்து) மற்ற ஒன்பது பேர நீக்கலாமா...
எதாவது நீங்க சொன்னா நல்லா இருக்கும்னு எனக்கு தோனுது... அதோட இப்பவே ஒரு விஷயத்தையும் சொல்லீடுறேன்... மதிமர்மத்தோட இரண்டாம் பாகம் தான் நான் பத்திற்கும் மேற்பட்ட கதாநாயகர்கள கொண்டு நா எழுத போற கடைசி கதை... அப்ரம் வர எந்த கதைலையும் கதாநாயகர்கள் பத்து என்ன... அஞ்ச கூட தாண்ட மாட்டாங்க...
என்ன தான் பிரச்சனை வந்தாலும் மதி மர்மம் கதையோட இரண்டாம் பாகமான " காதல் மன்னவா எனைத்தேடி வாராயோ " கதைல கதாபாத்திரங்கள் குறைக்கப்பட மாட்டாது...
ஏன்னா அதுல குறைக்கவும் முடியாது... கதை மொத்தமா போய்டும் புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்... எதுவா இருந்தாலும் தாமதிக்காம சொன்னீங்கன்னா தான் உண்டு இல்லனா நா எழுதுர படியே கன்ட்டின்யூ பன்ன வேண்டியது தான்... திட்டனும்னு நெனச்சாலும் திட்டலாம்... எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல.. என் குழப்பம் இப்போதிக்கு தீரனும்.. அடுத்த அத்யாயத்தோட சீக்கிரமே வரேன்... நன்றி
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro