😘 சக்கர 4 😘
கார்த்தியின் பல நாள் கனவு நினைவானதால் அவன் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தான்...
தன் மனைவியிடம் இந்த நற் செய்தியை சொல்ல ஆசை ஆசையாய் ஓடி வந்தான்...
வீட்டில்....
சக்கர...
மல்கோவா...
ஜிலேபி....
எங்க டீ இருக்க...
என்று ஒவ்வொரு அறை கதவையும் திறந்து பார்த்தான்...
கடைசி அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள் வேதா...
வேத் குட்டி இங்க என்ன டி பண்ற...
மாமா...
உன்னோட சாக்ஸ் ....
அத தேட்றேங்க...
அடியேய் அத ஏ இங்க தேட்ற...
அந்த பக்கத்து வீட்டு குட்டி பாப்பா வந்து வெளாடிட்டு இருந்தானா அவன் தான் இங்க போட்டுடான் என்று வாயை பிதிக்குக்கொன்டு ஒரு கையில் அந்த சாக்ஸை எடுத்து காட்டினாள்.....
அவள் சைகையை பார்த்தவன் தன்னை மறந்து சிரித்து கொண்டே..
மல்கோவா ஒரு குட் நியூஸ் சொல்லும்னு வந்த...
என்னங்க...
அது நம்ப புது கம்பெனி ஓப்பன் பன்ன அப்ரூவல் கெடச்சுருச்சு டீ....
என்று அவளை தூக்கி சுற்றினான்.....
அப்படியா......
நெஜமாவா...
சூப்பர் சூப்பர் மாமா...
என்று அவளை கட்டிக்கொண்டாள்.....
இன்னொரு விசயம் பேங்க்ல கூட லோன் தரதா சொல்லிடாங்க...
இனி நம்ப கம்பெனிய நல்லபடியா தொடங்கி நல்லா டெவலப் பண்ணும்....
ஆல் தி பெஸ்ட் மாமா....
என்று மேலும் அவனுள் புதைந்தாள்...
நாட்கள் மெல்ல கடந்தது....
கார்த்திகேயனின் கம்பெனியிலும் சிறு சிறு சறிவுகள் இருப்பினும் அதை திறமையாக எதிர் கொண்டான்...
அவன் கம்பெனி சற்று வேரூன்ற தொடங்கியது ....
அந்த வேலையில் அன்றொரு நாள் மாலை ஒரு 6 மணியளவில்...
தேவா : (போனில் ) என்னங்க இங்க ரொம்ப பெரிய மழையா இருக்கு நா கேப் பிடிச்சு வீட்டுக்கு போற நீங்க பைக்ல வராதீங்க சரியா....
கார்த்தி : சரி மா வீட்டுக்கு போனது போன் பண்ணு நா வர லேட் ஆகும் ....
தேவா : மாமா...
என்ன ஆச்சு உன்னோட வாய்சே சரியில்லையே....
கார்த்தி : ......
தேவா : மாமா....
லைன்ல இருக்கீங்களா... ???
கார்த்தி : தேவா கொஞ்சம் வேல இருக்கு அப்றமா கூப்ட்ற....
தேவா : மாமா.....
(லைன் கட்டானது...)
என்ன ஆச்சு மாமாக்கு ...
(ஏதோ யோசனையில் திரும்பும் போது சட்டென்று யாரோ அவளை இழுத்து ஒரு வண்டியில் போட்டனர் .......)
யாராக இருக்கும்
கார்த்தி 7 மணிவாக்கில் கார்த்தி வீட்டிற்கு வந்தான்....
வீட்டில் அணைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது...
கதவிற்க்கு அருகில் இருக்கும் அவள் செருப்பை காணவில்லை...
சற்று பதட்டத்துடன் அறை முழுவதும் தேடினான்....
ஆனால் தேவாவை அங்கு காணவில்லை...
அவள் இன்னும் வீட்டிற்க்கு வர வில்லையா என்று அவள் எண்ணிற்க்கு அழைத்து பார்த்தான்....
அது நாட் ரீச்சபிள் என வரவும் தன் கையை சுவற்றில் ஓங்கி அறைந்தான்....
அவளை எங்கு சென்று தேட என்று பைக்கில் அவளை அவள் அலுவலகம் அவள் தினமும் சென்றுவரும் வழி என்று தேடினான்...
இடையிடையே தன் போனை பார்த்துக்கொண்டான் அவள் அழைத்திருக்கிறாளா என்று...
அந்த போனும் அவனை ஏமாற்றியது...
அவன் தோழன் தவினிடமும் சொல்லி விசாரிக்க சொன்னான்....
நேரம் செல்ல செல்ல அவனுக்கு பதட்டம் அதிகமானது...
அன்று அவளுடன் பைக்கில் சென்றது நியாபகம் வர கண்கள் தானாக களங்கின.....
மணி 11.30 இருக்கும் அப்போது தேவாவிடமிருந்து அழைப்பு வந்தது....
கார்த்தி : தேவா...
அவள் பெயரை உச்சரிக்கும் போதே அவன் வர்த்தைகள் தடுமாற பதட்டம் குறையாமல் தேவா..
எங்.. எங்க.. எங்க இருக்க....
தேவா : மாமா என்ன ஆச்சு எப்போ வருவீங்க வீட்டுக்கு என்ற அவள் குரல் சற்று நிதானமாகவே கேட்டது...
கார்த்தி : அவள் குரலை கேட்டப்பின் தான் தன் உயிர் திருப்பி வருவதை உணர்ந்தான்...
அவள் வீட்டில் தான் உள்ளாள் என்று தெரிந்தது போனை கட் செய்து விட்டு வீட்டிற்கு பறந்தான்....
தேவாவிற்க்கு ஒன்றும் புரியவில்லை மாலை பதட்டமாக பேசியது இப்போது இப்படி என்னவென்று அவளால் யூகிக்க முடியவில்லை அவனுக்காக காத்திருந்தாள்....
அடுத்து பத்தே நிமிடத்தில் வீட்டிற்க்கு வந்தவன் தேவாவை பார்த்த உடன் அவளை அணைத்துக்கொண்டான்.....
தேவா : என்ன.... என்ன.... ஆச்சு மாமா...
கார்த்தி : எப்போ வந்த...
எங்க போன இவ்ளோ நேரம்...
ஒரு போன் பண்ணிருக்கலாம்ல என்று சற்று வருத்தம் கலந்த குரலில் கேட்டான்...
தேவா : 9 மணிக்கே வந்துட்ட மாமா என்றால் கூலாக...
அவன் பதட்டம் என்னவென்று புரியாமல்...
அவள் பதிலை கேட்டதுதான் அவளை பளாரென்று அறைந்தான்....
அடுத்து என்ன நடந்ததென்று அடுத்த பதிவில் காண்போம்....
................................................................
My Dr frds plz share ur votes and commends 😊😊😊😊😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro