😘 சக்கர 20 😘
தவின் : அன்னைக்கு டெல்லி ரூம்ல நடந்த மீதி கதைய சொல்லு ....
அஞ்சலி : அன்னைக்கு அந்த ரூம்ல உங்க ரெண்டு பேரோட சாப்பாட்டுலயும் போத மருந்த கலக்கி கொடுத்துருக்கா ...
நீங்க போதைல ஏதோ உலருட்டு இருக்கப்போ நிருபமா அந்த ரூம்குள்ள வந்தா ...... அங்க வந்ததும் தேவாக்கு வீடியோ கால் பண்ணி கார்த்திய கொல பண்ணிருவனு மெரட்டி இருக்கா ...
தேவாவ தனியா எங்கேயாச்சும் போய்ட சொல்லி ரொம்ப டார்சர் பண்ணிணா ...
தேவா தான் பாவம் ..
யார்கிட்டயும் சொல்லவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டா ....
தவின் : ஆனா அவ தேவாவ பழி வாங்கர்துக்கு பதிலா அவங்க அப்பாவ ஏதேச்சும் பண்ணிருக்கலாம் ....
அஞ்சலி : அதா சொன்னனே அவளுக்கு இருக்க மன நோய் தான் காரணம் தேவா மேல இருக்க வெறுப்பு அவள சந்தோஷமா வெக்க கூடாது சொல்லி அவ எதுக்காக தேவாவ வெருக்குறானே தெரியாம கண்மூடிதனமா கொல பண்ற அளவுக்கு கொண்டு போய்ருக்கு ....
தேவாவ ரொம்ப டார்சர் பண்ண ஆரம்பிச்சுட்டா கார்த்தி விட்டு ரொம்ப தூரமா போய்ட சொல்லி ....
கடைசியா நீங்க டெல்லி போய்ருந்தப்போ நேரடியாவே அவள மிரட்டி இருக்கா...
நீங்க திரும்பி வந்த அடுத்த நாள் தான் அந்த ஆக்ஸிடென்ட் நடந்துச்சு அந்த ஆக்ஸிடென்ட் கூட அவளோட வேல தான் .... அப்போ தான் தேவாவ கடத்திட்டா ....
தேவாவும் கார்த்தியும் பட்ற வேதனைய பாத்து ரொம்ப ரசிச்சுட்டு இருந்துருக்கா ....
தவின் : அப்போ இது எல்லாமே அவ மட்டும் தனியாவா பண்ணா ...
அஞ்சலி : இல்ல ....
அவகூட படுச்ச ஒருத்தனும் அவளுக்கு உதவி பண்றான் ....
அவனுக்கு தேவா மேல ஒரு கண்ணு ....
அவங்க அடுத்த பிளான் கார்த்திய கொல பண்ணிட்டு தேவாவ அவங்க கூடவே அடிமையா வெச்சுக்கிறதுதான் இருந்துச்சு ..
தவின் : இதெல்லாம் தேவாக்கு எப்டி தெரிஞ்சது ...
நா இப்போ தேவாவ காப்பாத்துலனா என்ன நடந்துருக்கும் ....
அஞ்சலி : தேவாக்கு இங்க இருக்குற வரைக்கும் ஒன்னுமே தெரில அங்க அவளுக்கு ஹெல்ப் பண்ண ஒரு ஜீவன் இருந்திருக்காரு சக்தி ...
அவர் ஏதோ உதவி பண்ண போய் தான் நிருபமா பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டா ....
அவளுக்கு நிருபமா தன்னோட தங்கச்சினு தெருஞ்சதும் என்ன பண்றதுனே தெரியல ...
கார்த்தி கிட்ட சொன்னா எங்க நிருபமாவ கொல பண்ணிருவாரோனு தான் அவர்ட சொல்லல ....
ரொம்ப பொறுமையா யோசிச்சோம் என்ன பண்றதுனு ....
நீங்க மட்டு நா அவளுக்கு ஹெல்ப் பண்றது கண்டுபுடிக்கலனா இன்னு ரெண்டு நாள்ள கமிஷ்னர் மூல்யமா முடிச்சுருப்போம்.....
தவின் : தேவா இங்க வந்ததும் அவ வேரென்ன பிளான் பண்ணிருப்பா ...
அஞ்சலி : இல்ல. போலீஸ்ட இன்பார்ம் பண்ணியாச்சு ரெண்டு பேரையும் அவர் டீல் பண்ணிகிறதா சொல்டாரு ....
ஆனா ஃபேமிலி மேட்டர் வெளிய வராத மாறி பேசிட்டேன்...
அவளுக்கு இருக்க மன நோய்ய குணபடுத்த நல்ல மனநல டாக்டர்ஸ்கிட்ட கூட்டிட்டு போய்ருக்காங்க... ஆனா இது அவளோட சின்ன வயசுல இருந்தே இருக்கனால அவ்வளவு சீக்கிரத்தில சரி பண்ண முடியுமானு தெரியல ...
இன்னிக்கு தான் பெங்களுருல இருக்க ஒரு ஹோம்ல அவள செத்துருக்காங்க ....
அவ கூட ஒருத்தன் இருந்தான்ல அவன ஜெயில்ல வெச்சுருக்காங்க ....
அவன பாத்து பேசினப்போ அவனுக்கு ஒரு குடும்பம் இருக்க விஷயம் தெரிய வந்துச்சு சோ அவன் மேல எந்த ஆக்ஷனும் எடுக்காம எல்லாதையும் முடிக்க சொல்லியாச்சு ....
தவின் : இதெல்லாம் எப்போ பண்ண ....
அஞ்சலி : இது பண்ணது நான் இல்ல கார்த்தி தான் ...
தவின் : என்னது கார்த்தியா ...
அவனுக்கு எப்போ தெரிஞ்சது .....
அஞ்சலி : நீ தேவாவ கூப்ட போனிங்கல்ல அன்னைக்கு கார்த்தி கிட்ட எல்லாதையும் சொல்லிடேன்...
ஆனா இது தேவாக்கும் உனக்கும் தெரியாது ....
கார்த்தி தான் நீ அங்க இருந்து கிளம்பினதும் அவரோட போலீஸ் பிரெண்ட்ட வெச்சு எல்லாதையும் முடிச்சுடாரு ....
தவின் : நல்லது இனி அவனுக்கு தனியா விளக்கம் கொடுக்க தேவையில்ல .....
அஞ்சலி : நிருபமா இவ்ளோ பண்ணியும் அவ மேல தப்பு சொல்ல தோணல ...
அவ நெலமைல இருந்து பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு ....
தவின் : சின்ன வயசுல இருந்தே அம்மா அப்பா பாசம் எதுவுமே கெடைக்காம வளர்ந்துருக்கா ....
ஆனா அவளோட நியாத்த கூட கேக்க முடியாம நெலமைல இருக்கா....
அவளுக்கு முழுசா சரி ஆனதும் அவகிட்ட பேசி அவளுக்கு ஒரு வாழ்க்கய அமச்சு கொடுக்கனும்
அஞ்சலி : அவளுக்கு இருக்க நோய் முழுமையா குணபடுத்தனும்னா அவ இழந்த அவளோட சந்தோஷம் அன்பு பாசம் எல்லாமே அவளுக்கு திரும்பி கெடச்சா மட்டுந்தா கொஞ்சம் கொஞ்சமா அவள வெளிய கொண்டு வர முடியும் ...
நீ அன்னைக்கு தேவாவ கூட்டிட்டு வந்தது அவளுக்கு தெரிஞ்சதும் எப்டி பிகேவ் பண்ணா தெரியுமா ...
வெறி புடிச்சவ மாறி எல்லா பொருளும் தூக்கி போட்டு ஒடச்சு முடியெல்லாம் பிச்சுட்டு பாக்கவே ரொம்ப ஆக்ரோஷமா நடந்துகிட்டாலாமா ....
அவள அமைதி படுத்தவே முடியல கடைசிய மயக்க மருந்து கொடுத்து தான் கூட்டிட்டு போனாங்களாமா ....
சக்தி போண் பண்ணான் ..
அங்க இருக்க எல்லாரும் பயந்துட்டாங்க ...
தவின் : எவ்ளோ கொடும இதுகெல்லாம் அந்த ஆளு தான காரணம் அவருக்கு இப்போ நடந்தது எதாச்சும் தெரியுமா ...
அவராலதான் அவ பயித்தியம் ஆய்ட்ட இன்னொரு பொண்ணு பாதி உயிரா திரும்பி வந்துருக்கானு தெரியுமா .....
அஞ்சலி : விஸ்வநாதன் அங்கிள் கிட்ட நேத்து காலைல தான் பேசுனேன் நிருபமா பத்தி ...
ஆண்டி ரொம்ப ஷாக் ஆய்டாங்க ...
அந்த அங்கிள்க்கும் என்ன சொல்றதுனே தெரில போன்லயே ரொம்ப அழுதாங்க ரெண்டு பேரும் ....
அவங்களுக்கு அப்போ தான் புருஞ்சது அவங்க பண்ண தப்போட வீரியம்...
அவரும் ஆன்டியும் நேத்தே கெலம்பீட்டாங்க நிருபமாவ பாக்க ...
தவின் : அந்த ஆள நிக்க வெச்சு நாலு கேள்வி நருக்குனு கேட்ருக்கனும் ....
அஞ்சலி : அவருக்கு தண்டன அது இல்ல தவின் ....
நிருபமா இன்னும் ஒரு மாசத்துக்கு அப்றம் விஸ்வநாதன் வீட்டுலயே வெச்சு பாத்துகிறதா பிளான் ...அவளோட அந்த நிலைக்கு அவர்தான காரணம்னு தினமும் அவள பாக்குறப்போ அவரு வருத்தபடனும் ....
உள்ள குத்தனும்..
தன்னோட பொண்ணு வாழ்க்கைய அவரே அழுச்சுடாருன்னு தோனனும் ....
ரேவதி அம்மாக்கும் ரொம்ப கில்ட் ஃபீல் தன்னோட மகள நல்லா வளர்த்து கல்யாணம் காட்சியெல்லாம் பண்ணி பாத்துட்டு இப்டி நிருபமாவ விட்டோமேனு ...
இனி ரெண்டு பேரும் தான் அவள பாத்துக்கனும் ....
தவின் : சும்மா பாத்துகிறதுக்கு என்ன கஷ்டம் ...
அஞ்சலி :அவ ஒன்னு சாதாரணமான பொண்ணு இல்ல...
இப்போ அவளோட நியாபகத்துல இருக்குறது அவளோட அம்மாவும் அப்பா விஸ்வநாதனும் அப்றம் தேவா அவ்ளோதான்..
இப்போ அவளோட அப்பா அவ கூடவே இருக்குறப்போ அவ கேக்கனும் நெனச்ச கேள்வி அவர்ட வெளிபடுத்தனும்னு நெனச்ச பாசம் எல்லாமே அவர்கிட்ட காட்டுவா ஆனா அது எத்த முறைல வேனா இருக்கலாம் ...
அழுது கரஞ்சு வெளி படுத்தலாம்..
கோபமா கத்தி கூச்சல் போடலாம்..
சந்தோஷமா கூட இருக்கலாம் எப்டி வேணாலும் நடக்கலாம் ....
விஸ்வநாதன் அங்கிள்க்கு இதுக்கு மேல தண்டன கொடுக்க முடியாது.....
தவின் : அவருக்கு அப்போவாச்சு புரிதானு பாக்கலாம் ..
அஞ்சலி : அவங்க நடத்துகிற விதத்துல தான் தெரியும் நிருபமாவ முழுசா மீட்க முடியுமானு ......
தவின் : நிருபமா பயித்தியமான விஷயம் தேவாக்கு தெரியுமா ....
சொன்னா வருத்தபடுவா ...
அஞ்சலி : அத கார்த்தி பாத்துப்பார் ....
வாங்க அங்க என்ன நடக்குதுனு பாக்கலாம் ....
(கார்த்தி தன் அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தான் ... )
தேவா : மாமா ...
கார்த்தி : சொல்லு டா ...
தேவா : என்ன தேடிட்டு இருக்கீங்க ...
கார்த்தி : ஒரு முக்கியமான ஃபைல் டா ....
இதோ கெடச்சுருச்சு..
தேவா : மாமா ...
கார்த்தி : சொல்லு மா ...
தேவா : என்ட ஏன் சரியா பேசமாட்டேங்குறீங்க ..
எதுக்கு உங்கள விட்டு போன என்ன ஏது எதுவுமே கேக்க மாட்டீங்களா ????
கார்த்தி : நீ இல்லாம இந்த ஒரு வருசம் நான் நானாவே இல்ல டா மல்கோவா ... நமக்கு ரொம்ப புடிச்ச பொருள் பாத்து பாத்து நமக்கு பக்கத்துலே வெச்சுருக்க பொருள் திடீர்னு தொலஞ்சு போச்சுனா எப்டி இருக்கும் ....
அதே மனநிலைதான் நான் இருந்த ...
அவள் கன்னங்களை பற்றியவாரு ..
நீ இல்லாம நா நடபிணமா தான் இருந்த மல்கோவா ...
நீ வந்ததும் எனக்கு என்னோட மொத்த சந்தோஷமும் திரும்பி கெடச்சிருச்சு ...
நீ காரணமில்லாம எதுவும் பண்ணமாட்ட ஆனா இனி என்ன விட்டு போனும் மட்டும் முடிவெடுத்துறாதா ....
எனக்கு எல்லாமே தெரியும் ....
எனக்காக தான் இதெல்லா நீ பண்ணணு எனக்கு தெரியும் ...
தேவா : என்ன மன்னிசுருங்க மாமா ....
எனக்கு என்ன பண்றதுனே தெரில ....
அவ சொன்னப்போ என்னால நம்ப முடில ஆனா உன்ன கொல்ற அளவுக்கு அவ போனதும் எனக்கு ரொம்ப பயமாய்டுச்சு மாமா ....
நா கூட இருந்தா உங்க உயிர்..
அதா மாமா ....
உங்களுக்கு எப்படி மாமா தெரிஞ்சது ...
கார்த்தி : அதுக்கு அவசியம் இல்ல டா சக்கர ...
எனக்கு எல்லாமே தெரியும் டா...
தேவா : மாமா ....
அவ என்னாட தங்கச்சி மாமா ...
அவள எதுவும் பண்ண மாட்டீங்கள ....
அவ எந்த தப்பும் பண்ணல ...
தேவா ...
மாமா.. அவ பாவம் மாமா ..
எங்கப்பா இப்டி பண்ணிருப்பாருனு ..
தேவா போதும் டா ..
இல்ல மாமா ....
அவ எவ்ளோ வலிய...
சரி சரி நீ எதுக்கு இப்டி பொலம்புற பாத்துக்கலாம் ...
இல்ல இல்.....
அவள் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்ல அவளை அமைதிபடுத்த அவள் இதழை சிறை செய்தான் .....
அதற்க்கு பிறகு நிருபமா பற்றி அவளிடம் எதுவும் கூறவில்லை ...
அவன் பெற்றோருடன் பேசவும் விட வில்லை ...
தேவாவிற்க்கும் அவர்களிடம் பேச பிடிக்கவில்லை .....
.................................................................
Ethuku mela vishvanathanuku enna thandana kudukanumnu enaku therila ...
Ethachu thappa eruntha sollunga yethiyachum miss panirunthalum sollunga 😊😊
Last update naaliku may be 😆😆
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro