😘சக்கர 2 😘
நான் : போலாம் டா தங்கோ...
நா ரெடியாதா இருக்க...
அவள் : ரெடி ஆனா மட்டும் பத்தாது.. கொஞ்சம் இடுப்புல இருந்து அந்த கைய எடுத்துட்டு...
வால சுருட்டி வெச்சுட்டு சமத்து புள்ளைய வரனும்...
சரியா....
நான் : ஏ இதெல்லா ஓவர் டீ...
அவள் : மாமா ... சீக்கிரமா வாய்யா....
நான் : அவ டா பேட்றதுகுள்ள கெலம்புறது தான் நல்லது...
சரி சக்கர எங்க போனுனு சொல்லாம வண்டி எடுக்க சொன்ன எப்டி...
அவள் : அட மங்குனி மாமா...
நா வழிய சொல்ற வண்டிய எடு.....
நான் : உத்தரவு மகாராணி சொல்லுங்க....
அவள் : மாமா.... நேரா போங்க...
இந்த ரைட்.....
அடுத்த லெஃப்ட்.....
அந்த ரௌன்டானா கிட்ட இருக்க அந்த பில்டிங் பக்கத்துல....
நான் : ஹே உனக்கு எங்க போனு தெரியுமா...
இல்ல இந்த மாமன கட்டிட்டே ஊர சுத்துற ஐடியாவா....
அவள் : ஆமா மாமா கண்டுபுடுச்சுடியே....
கிரேட் மாமா....
நான் : அடியேய் வெளாடாம எங்க போனு சொல்லு....
அவள் : இங்க தான் மாமா....
பார்கிங்ல வண்டிய போட்டு வாங்க....
கேட்கிட்ட நிக்கிற....
நான் : அந்த இடத்துக்குள்ள போனதும் ஏதோ ஒரு மாறி இருந்துச்சு....
கண்ணெல்லா கலங்கீருச்சு...
நா எதுமே பேசல என்னோட மல்கோவாவ கூப்ட்டு உள்ள போன....
அவள் : மாமா....
உன்னோட sixth wish உன்னோட பொறந்த நாளைக்கு அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கனு நெனச்சல்ல...
இங்க ஒரு அம்மா இல்ல நூறு அம்மா இருக்காங்க....
ஒரு ஆசிர்வாதம் மட்டும் இல்ல நூறு ஆசிர்வாதம் கெடைக்க போது.....
நான் : அவள இருக்கமா கட்டி புடிச்சுட்ட....
எனக்கு பேச வார்த்த வர்ல...
அவள் : மாமா...
ஒன்னு இல்ல...
என் செல்லோல்ல... .கன்ர்ட்ரோல் யுவர் செல்ஃப் மாமா....
உள்ள போலாம் எல்லாரும் வெய்ட் பண்றாங்க.....
(என்னோட மாமாக்கு அம்மா அப்பா இல்ல...
அவர் ஹாஸ்டெல்ல தான் படிச்சாரு எல்லாமே....
சோ இங்க வந்ததும் கொஞ்சம் எமோசன் ஆய்டாரு...
மத்தபடி வேற ஒன்னு இல்ல மாமா இஸ் ஃபைன்.... )
நானு அவளு உள்ள போனோ...
அங்க நெறைய பெரியவங்க இருந்தாங்க....
வீல் சேர்ல கொஞ்ச பேர் உக்காந்திருந்தாங்க....
அவங்களுக்கு பின்னாடி என்னோட கூட படுச்ச ரெண்டு பேர் இருந்தானுங்க....
அவங்கள நா இங்க எதிர்பாக்கல....
அவனுங்க இல்லன இப்போ நா இங்க இல்ல....
அவங்க இல்லனா என்னோட மல்கோவா எனக்கு கெடச்சுருக்க மாட்டா....
எல்லாரும் சேந்து எனக்கு ஹேப்பி பெர்த்டே பாட்டு பாடிட்டே என் கிட்ட வராங்க.....
அப்போ ஒரு பெரிய கேக் அவங்களுக்கும் எனக்கும் இடையில் வந்து வெச்சா என்னோட சக்கர....
என்னால எதுவுமே பேச முடில...
என்ன மட்டுமில்லாம என்னோட வார்த்தைகளையும் சேத்து திருடிட்டா அந்த கொள்ளக்காரி.....
அந்த கேக்க வெட்டி அந்த ஹோம்லயே ரொம்ப வயசான பாட்டி ரெண்டு பேர் இருந்தாங்க....
கிட்டதட்ட 80 வயசு இருக்கும் அவங்களுக்கு....
அவங்களுக்கு ஊட்டி விட்டு அவங்க கால்ல விழுந்த....
பாட்டி : (அந்த பாட்டி கேக் ஊட்னதும் ரொம்ப சந்தோஷமாய்டாங்க..) நூறு வருசத்துக்கு அந்த புள்ள கூட சேந்து 16 செல்வத்தையும் பெற்று நாலு பேரு மதிக்கிற மாறி பெரிய ஆளா வருவ என்னோட ராசா......
(அப்டினு அவன வாறி நெட்டி முறிச்சாங்க.... )
அவள் :எவ்ளோ நட்டு ஒடையுது...
எல்லா கண்ணு என்னோட மாமா மேல தான் வீட்டுக்கு போனதும் சுத்தி போடனு .....
பாட்டி : எனக்கு உன்ன மாறி தான் ஒரு பேரன் இருந்தாப்பா...
ஒரு 10 வருசதுக்கு முன்னாடி அந்த பாலாபோன பைக்ல வேகமா போய் செத்துட்டா....
பாவம் கல்யாணம் காட்சி பண்ணி பாக்கனு நெனச்ச எல்லா கனவையு எடுத்துட்டு போய்ட்டா....
அதுக்கு அப்றம் வீடே வெறிச்சு போச்சு...
கடசில இங்க வந்து சேத்துட்டாங்க......
(கண்ண தொடச்சுட்டே சொல்றாங்க அந்த பாட்டி)
உன்ன பாக்குறப்போ அவன பாக்குறமாறியே இருக்கு ராசா....
நான் : அதுக்கென்ன பாட்டி...
நானு உங்க பேர மாறி தான்....
(அப்டியே அவங்க கன்னத்த புடிச்சுகிட்ட).....
அங்க இருந்த எல்லாருக்குமே மனசுகுள்ள ஏகபட்ட கவல....
அதெல்லாதையும் மறந்து
அன்னைக்கு ஃபுல்லா அவங்க கூட ரொம்ப ஜாலியா போச்சு...
அவங்களுக்கு நெறைய டிரஸ் வாங்கிட்டு வந்தா....
மதியம் கூட நாங்க எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்ட்டோம்...
அப்றம் எல்லாரையும் பாட்டு பாட வெச்சு டான்ஸ் ஆடி ரொம்ப ரனகலமா போச்சு....
என்னோட சக்கரையும் கூட டான்ஸ் பண்ணா....
என்னோட ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே எல்லா பெரியவங்க கூட சேந்து கேம் வெச்சு வெளாடிட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷமா மனசு நெறஞ்சு போச்சுனே சொல்லலாம்.....
எல்லாதுக்குமே காரணம் என்னோட ஜிலேபி மட்டுந்தான்.....
என் கூடவே என் கைய இருக்கமா புடிச்சுட்டு இருந்தா....
கொஞ்சமா நா ஃபீல் பண்ணா கூட என் கைய அழுத்தி புடுச்சு கிட்டா....
இன்னிக்கு காலைல இருந்து என்ன நெறைய தடவ கண் கலங்க வெச்சுட்டா.... என் மல்கோவா....
அங்க இருந்து போகவே மனசில்ல....
மணி 5 இருக்கும்....
அப்றமா மெல்லமா வீட்டுக்கு போலானு சொல்லி அங்க இருந்து கெலம்புனோ.....
அப்போ என்னோட ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேருமே வந்து ரெண்டு சினிமா டிக்கெட் கைல கொடுத்தாங்க .....
பாத்தா ... பியார் பிரேமா காதல் படத்தோட டிக்கெட்ஸ் அது.....
நண்பன் : மச்சா....
தங்கச்சிய கூட்டிட்டு படத்துக்கு போய் நல்லா என்ஜாய் பண்ணு..டா.....
உன்ன நாங்க அடுத்த மாசம் மீட் பண்றோம்....பாய்....
நான் : டேய் நில்லுங்க. டா.... நிக்காம போய்டே இருக்கானுங்க.....
சக்கர நீயாச்சும் அவங்கள வீட்டுக்கு கூப்டுருக்கலாம்ல....
அவள் : நாளைக்கு வருவாங்க மாமா.....
இப்போ படத்துக்கு போலாமா ??இல்ல வீட்டுக்கு போலாமா... ??
நான் : டையர்டா வேற இருக்கு....
சரி போலாம் ....
அவள் : டையர்டா இருந்தா வீட்டுக்கு போலா மாமா...
நான் : பரவால ஜிலேபி போலாம்....
ரெண்டு பேருமே அந்த படத்துக்கு போனோம்....
அங்க எல்லாரும் ஜோடி ஜோடியா உங்காந்திருந்தாங்க...
படம் போட்டு ஒரு அரை மணி நேரத்துல என்னோட கைய புடுச்சுகிட்டு நல்லா தூங்கிட்டா....
நைட் ஃபுல்லா தூங்கல...
அசதில நல்லா தூங்கிட்டா...
அந்த சீட் வேற கார்னர் சீட்டா போச்சு... ( தூங்கினாராமா யாரும் நம்ப தீங்க ..... )
நானு படத்த பாக்கல அவ தூங்குற அழகையே பாத்துட்டு இருந்த....
நேரம் போனதே தெரில படம் முடிஞ்சு எல்லாரும் வெளிய போறப்போ தான் எந்துருச்சோம்....
வீட்டுக்கு போற வரைக்கும் ஒன்னுமே பேசல....
அமைதியா வந்தா....
வீட்டுக்குள்ள போனதும்...
அவள் : மாமா...
நான் : சொல்லு டா.....
அவள் : பீர் அடிக்கிறியா....
நான் : என்ன புதுசா...
கேக்குற...
அன்னைக்கு அடிச்சுட்டு பண்ண பாடு பத்தாதா...
வேனா மா....
இனி அந்த கருமத்த தொட்றதா இல்ல....
அவள் : இல்ல மாமா.... நா அந்த பீர்க்குதா தேங்ஸ் சொல்லனும்...
தான் : என்னடி ஒளர்ர...
உனக்கு பீர் அடிக்கனுமா இப்போ அதா இத்தன கேள்வி கேக்குற போல...
அவள் : அந்த குண்டு குண்டு கண்ண உருட்டி நல்லா மொறைக்கிற...
நான் : சரி சரி கூல்....
மல்கோவா சொல்லு ...
அவள் : இல்ல.. போன தடவ தண்ணீ அடுச்சுட்டு நைட் ஃபுள்ளா உன்னோட ஆச என்ன எல்லாதையுமே நல்லா ஒளருன தெரியுமா....
நான் : அடப்பாவமே அதான பாத்த எப்டி டா இதெல்லா உனக்கு தெரிஞ்சதுனு....
அவள் : அதா தெரிஞ்சுருச்சில்ல பின்ன என்ன....
இப்போ பீர் வேனுமா வேனாமா...
நான் : வேனா சக்கர....
நா உன் கூட ரொம்ப நாள் வாழனு நினைக்கிற ...
இந்த பீர் அடிச்சு உன்ன விட்டு சீக்கிரமா போய்ட்டன உன்ன யாரு பாத்துப்பா....
இனி இதெல்லா தொட கூட மாட்ட ஓகே வா..... .. சொல்ல போனா நா எங்க உன்ன பாத்துக்குற நீ தா என்ன பாத்துக்கிற....
அவள் : ஓடிப்போய் அவர கட்டி புடிச்சுட்ட....
எனக்கே தெரில கண்ணெல்லா கலங்கீருச்சு....
நான் : மல்கோவா....
அவள் : ம்ம்....
நான் : ஏ சக்கர இங்க பாரு....
அவள் : ம்ம் சொல்லுங்க....
நான் : உனக்கு நெஜமாவே என்ன புடுச்சுருக்கா ???
அவள் : போ... டா பக்கி...
புடிக்காமதா இதெல்லா பண்ணங்களா...
(நெஞ்சு மேலயே நச்சு நச்சுனு நாலு அடி அடுச்சா பாரு.....)
நான் : அடியே... போது....
வலிக்குது டீ....
அவள் : நல்லா வலிக்கட்டும்...
உனக்கு புடிக்குமோ இல்லயோனு பாத்து பாத்து பண்ணா...
நல்ல கேள்வி கேக்குற....
போ மாமா....
நான் : அடியே மல்கோவா
"ஐ லவ் யு " டி ...
உன்ன மாறியே.....
செம்ம கியூட்டா....
ஒரு பாப்பா பெத்து தரியா....
அவள் : மாமா அப்டி சொன்னதும்
என்னன்னு தெரில...
வெட்கமா இல்ல பயமானு தெரியாத ஒரு உணர்வு....
அவர இன்னு இருக்கமா கட்டி புடிச்சுட்ட....
நான் : ஏ...
இங்க பாரு டா.....
என்ன ஆச்சு குட்டிமா....
அவள் :மாமா.....
உங்க seventh wish நம்ப ஹனிமூன் டிரிப் எங்க தெரியுமா....
தாஜ்மஹால்...
ஆக்ரா....
நாளைக்கு நைட் டிரெயின்ல போறோம்..... வரப்போ பிளைட்ல வரோம்.....
அங்க வெச்சு பிரபோஸ் பண்ணலாம்னு நெனச்ச அதுக்குள்ள..... (அவரோட கழுத்த கட்டி புடுச்சுட்ட....)
நான் : என்ன டா ஷாக் மேல ஷாக் குடுக்குற....
கண்டிப்பா போனுமா ???
அவள் : மாமா போனுமானு கேட்டது எனக்கு செம்ம கோபம் வந்துருச்சு....
போயா...
மக்கு மாக்கா...
எவ்ளோ ஆசஆசைய இந்த டிரிப் ரெடி பண்ண தெரியுமா....
போ இங்ளோ சலிச்சுகிட்டு நீ ஒன்னு வர தேவையில்ல.....
நான் : சம்மா அவள சீண்டி பாக்க தான் அப்டி சொன்ன பாத்தா அவ கோச்சுகிட்டா....
அவள அப்டியே தூக்கி சுத்துன...
அவள் : மாமா விடு தல சுத்துது....
விடு....
நான் : (அவள மெல்லமா இறக்கி விட்டு பெட்ல உக்கார வெச்சு அவ முன்னாடி மண்டி போட்டு உக்காந்த...)
இங்க பாரு சக்கர...
நமக்கு கல்யாணம் ஆகி ஏழு மாசம் ஆகபோது.....
ஆனா இந்த ஒரு மாசமா தா நம்ப நல்ல பழகுறமாறி ஃபீல் ஆது....
உன்ன எப்போ பாத்தேனோ அன்னைக்கே என்னமோ லைட் எறிஞ்சது...
ஆனா உனக்கு எப்போ புடிக்கிதோ அது வரைக்கும் காத்துருக்கலாம்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்ட...
அதா உனக்கு என்ன பிடிச்சுருக்குனு உன்னோட வாய்ல இருந்து கேக்கனும்னு ஒரு சின்ன ஆச....
அவள் : உங்களுக்கே தெரியும் நமக்கு அரேன்ஜ்டு மேரேஜ் தான்...
உங்ககிட்ட பேசனு பழகனு காதலிக்கனும் இப்படி நெறைய ஆச அதுக்கு அப்பறமா தான் பேபி அப்டினு முடிவு பண்ணிருந்த...
அதுக்கு ஏத்த மாறி எனக்கான ஸ்பேச நீங்க கொடுத்தீங்க...
இந்த ஒரு மாசமா இல்ல நமக்கு கல்யாணம் முடிஞ்சு நாள்ல இருந்தே தனி பிரியம், மரியாதை எல்லாமே இருந்துச்சு அது காதலா இல்ல ஒரு ஈர்ப்புதானானு தெரில...
கடைசிய எப்போ எப்டினு தெரியல...
"I fall in love with you "...😘😘
அத உங்க கிட்ட எப்டி சொல்றதுனே தெரில...
அப்போ முடிவு பண்ணதுதான்...
உங்க பிறந்த நாள் அன்னைக்கு உங்க ஆசையெல்லாதையுமே நெறைவேத்தி என்னயே உங்களுக்கு கொடுக்க முடிவு பண்ண.....
சோ.... ...
இனி நீங்க தான் சொல்னும்....(வெட்கப்பட்டுட்டே பேசி முடிச்சுட்ட)
நான் : அவ சொன்ன ஒவ்வொரு வார்த்தையுமே எனக்கு புதுசா ஏதோ பேச்சே வரல....
அவள இருக்க கட்டு புடிச்சு முதல் முறையா என்னோட இதழ அவளுக்கு பரிசா கொடுத்தேன் ....
எங்களோட லைஃப் அங்க இருந்து தான் ஸ்டார்ட் ஆச்சு....
எனக்கு அம்மா அப்பா இல்லாம இருக்கலாம் ஆனா அவங்க எல்லாருப்மே சேர்ந்து மனைவியா என்னோட சக்கர எனக்கு கெடச்சுட்டா.....
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க ......
என் மல்கோவா தான் என் வாழ்க்கையில எனக்கு கெடச்ச மிகப்பெரிய வரம்...
சக்கரனு அவள கூப்ட்றது சும்மா இல்ல என்னோட மொத்த சத்தோஷத்தையும் தித்திப்பா எனக்கு கொடுத்தவ....
இந்த கதைய என் மனைவிக்கு சமர்பிக்கிறேன் .....
.................................................................
Summa just oru imagination tha ezuthanu thonuchu ezuthuna....
Intha short story ya Hero heroine name vechu kathaya thodaralama illa ethuve over ah nu sollunga .....
Unga commentsla next update podalama illa venama sollunga....
Unga karuthu yethuvanalum marikkama theriviungal makkaleee 😊😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro