Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😘 சக்கர 13 😘

கார்த்தி...

அவ சொன்னது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு தவின்....
என் தேவா சாகல இன்னு உயிரோடதான் இருக்கா...

நா சீக்கிரமா அவள தேடி கண்டு பிடிக்கனும்....
அவளுக்கு ஏதோ பிரச்சனை டா...
அவள தேடனும் ...

தவின் : கார்த்தி டென்சன் ஆகாத டா...
இவ்ளோ நாளா தேடிட்டு தானே இருக்கோம்....
கண்டிப்பா கண்டு பிடிச்சரலாம்...

கார்த்தி : இல்ல டா....
நேத்து.... 
நேத்து....

தவின் : ஆமா கார்த்தி என்ன ஆச்சு அப்படி அலருன நேத்து நைட்டு ....
நீ பிழைக்குறதே கஷ்டம்னு சொன்னாங்க...
எவ்ளோ டிரை பண்ணோம் தெரியுமா...
ஆனா நேத்து எப்டி டா...
தேவானு கத்திட்டு பதறியடிச்சு எழுந்த ....
டாக்டர்ஸ் எல்லாரும் மெரண்டுடாங்க டா...

கார்த்தி : யாரோ என் கிட்ட வந்து பேசுனாங்க டா...
அந்த வாய்ஸ் கூட நா இதுக்கு முன்னாடி கேட்ட வாய்ஸ் தான் ...
அவ என்ன சொன்னா தெரியுமா...

" உன்னோட உயிர் உனக்காக காத்திட்டு இருக்கு கார்த்தி...
உன்னோட நம்பிக்கைய விட்றாத....
அவள தேடு...
அவளோட ரத்தம் உன்கிட்ட வந்து சேந்திருக்கு அவளும் சீக்கிரமா வந்துருவா.....
அவ ஒரு பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்கா.....
நீ போய் அவள காப்பாத்து எந்திரி கார்த்தி.... 
எந்திரி.... "

அப்படினு ஒரு குரல் மட்டுந்தான் எனக்கு திருப்பி திருப்பி கேட்டுச்சு......
தேவாவ பத்தி அவளுக்கு என்னமோ தெருஞ்சுருக்கு டா...
அவள புடிச்சா தேவா கெடச்சுருவா .....

தவின் : ஆனா அது யாரு டா....
நீ கத்திட்டு எந்திரிக்கும் போது அங்க யாருமே இல்லயே நா மட்டுந்தான் உன் கூட இருந்த பின்ன எப்டி....

கார்த்தி : அதெல்லா எனக்கு தெரியல டா ஆனா அவ சொன்னது மாறி தேவாக்கு என்னமோ பிரச்சனை இருக்கு சீக்கிரமா அவள கண்டு பிடிக்கனும் ....
கெளம்பு ...
போலாம் ...

தவின் : என்ன கார்த்தி விளாடுறியா ???
உன்னோட கால்ல ரெண்டு எலும்பு ஒடஞ்சுருக்கு...
கைல கூட சுலுக்குமாறி இருக்கு...
தலைல ஆல்ரெடி போட்ட தையல் பிரிஞ்சு மறுபடியும் தையல் போட்றுக்காங்க....
இப்போ பெட் ரெஸ்ட் தேவ....
நீ எழுந்து நிக்கவே ரெண்டு வாரம் ஆகும் முழுசா நீ குணமாக ஆறேழு மாசமாச்சும் ஆகும்.....
ஒழுங்கு மறியாதயா கொஞ்ச நேரம் தூங்கு அப்றமா மத்தத பேசிக்கலாம்...
தேவாவ காப்பாத்தனும் தா இல்லனு சொல்லல நீ உயிரோட இருந்தா தானே காப்பாத்த முடியும்....
சொல்றத கேலு கார்த்தி .....

கார்த்தி : ப்ச்ச்ச்....
சரி நீ ஒன்னு பண்ணு .....
இங்க இருக்க சீசீடீவி புட்டேஜ்ஜ செக் பண்ணு ....
யாராச்சும் என்ன பாக்க வந்தாங்களானு .....
அப்றம் எனக்கு எங்க இருந்து இரத்தம் கெடச்சது எந்த ஹாஸ்பிடல் எல்லா டீடெய்ல்ஸும் கலெக்ட் பண்ணு...
அந்த போலீஸ் கமிஷ்னர் கிட்ட ஏதாச்சும் விவரம் கெடச்சதான்னு விசாரி ...
அப்டியே ....

அவனை இடைமறித்த தவின் ..
தவின் : போது...
போது..  டா...
ஸ்டெரெயின் பண்ணிக்காத....
அமைதியா படு...
டாக்டர வர சொல்ற .....

கார்த்தி : சரி டா....
(மல்கோவா எங்க டீ இருக்க.....)

(அஞ்சலி தினமும் மருத்துவமனைக்கு வந்து எட்ட நின்றே கார்த்தியை ஒரு முறை பார்த்து விட்டு செல்பவள் அன்றும் கார்த்தியை தூரமாக நின்று பார்த்து விட்டு போனில் .... )

அஞ்சலி :ஹலோ....

..........

நான் தா பேசுற....

..............

எப்டியோ கார்த்திய காப்பாத்தியாச்சு ...
நீ எப்டி இருக்க ..

........

யாரு டீ அவ அன்னைக்கு ஹோட்டல் ரூம்க்கு வந்தவளா....

........

ஹே ஹே....
ஹலோ...
ஹலோ....

இது ரொம்ப நாளைக்கு நிலைக்காது தேவா...
கண்டிப்பா கார்த்தி உன்ன தேடி வருவான் .....

(அவளே தனியாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்....
அவளை தோலை தொட்டு யாரோ பின்னால் இருந்து அழைத்தார்கள் அவளும் மெல்ல பதட்டமாக திரும்பி பார்த்தாள் ....)

அஞ்சலி : த...  தவி...  தவின் ...
ஹா..  ஹாய்...

தவின் : நீ எப்டி இங்க ...
யார் கூட போன்ல பேசிட்டு இருக்க ....

அஞ்சலி : அது அது வந்து நா...
நா...
உங்க கிட்ட எதுக்கு சொல்லனும் ...

தவின் : நீ தான தேவாவ கடத்தி வெச்சிருக்க ஒழுங்கு மரியாதையா சொல்லிடு...

அஞ்சலி : எனக்கு ... ஒன்னும்... தெரியாது....  யார் .... யார் அந்த தேவா...  ???

தவின் : உனக்கு தெரியாதுனா எதுக்கு தெனமு ஹாஸ்பிடல்க்கு வந்துட்டு இருக்க .....

அஞ்சலி : என்ன பேசுறீங்க....
இந்த ஹாஸ்பிடல்ல கார்த்தி மட்டுந்தான் இருக்காரா ..

தவின் : நீ கார்த்திய தான் பாக்க வரனு சொல்லவே இல்லயே ....
பொய் சொன்னா  பல்ல தட்டி கைல கொடுத்துருவ...
யாரு டீ நீ....

அஞ்சலி : ஹே....
முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்டியா ரூடா பிஹேவ் பண்ணுவீங்க .....
எனக்கெதுமே தெரியாது....

தவின் : பளார்.....
என்ன டீ போனா போது பொண்ணாச்சேனு பேசினா ஓவரா போற ....
உண்மைய சொல்ல போறியா இல்லயா .....

(அவள அடிக்கனும்னு நா நெனைக்கல ஆனா அவ பொய் சொல்றா அதா கோபம் வந்துருச்சு......
அவ கண்ண பாத்த அவ்ளோ வலி என் கிட்ட என்னமோ சொல்லனு நெனைக்குறா ஆனா சொல்ல மாடேங்குறா....
ஆனா அவ கண்ணு கலங்குனதும் மனசு கேக்கல ...
இருந்தாலும் அவள விடாம  கேட்ட ....)

அஞ்சலி : தேவா கிட்ட தான் பேசிட்டு இருந்த .....

.................................................................

Pakkalam next update la ......
ennoda mistakes sonna ellarukum romba thanks intha update la crt panna try panniruken paduchutu sollunga.....
Share ur votes and valuable comments 😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro