😘 சக்கர 12 😘
கார்த்தி எழும் ஒவ்வொரு காலை பொழுதும் புத்துணர்ச்சியுடன் தன் மனையாளின் அந்த இனிய முத்தத்திலில் துவங்கி இரவு அவளின் அணைப்பு வரையில் மகிழ்ச்சி திழைத்து பழகிவிட்டு
இன்று அவள் இல்லாத அந்த கொடுமையான நாட்கள் அவனை ஒவ்வொரு நொடியும் கொன்றுக்கொண்டிருந்தது ......
தேவாவின் பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் நிறைந்த அவன் உலகம் இன்று வெறுமையை அடைந்ததை போல் உணர்ந்தான் .........
அவளுடன் பேசிய கதைகள் இனித்தது ....
அவளுடன் பழகிய அந்த நாட்கள் இனித்தது ....
அவளுடன் சேர்த்து சிரித்தேன் இனித்தது ....
அவளுடன் என் துன்பத்தை பகிர்ந்துக்கொண்டேன் இனித்தது .....
அவளுடன் கொண்டாடிய என் பிறந்தநாளும் இனித்தது .....
அவளுடன் சேர்த்து சுற்றிய பயணங்கள் இனித்தது ....
அவளுடன் சேர்ந்த நாளில் இருந்து என் வாழ்க்கை முழுவதும் இனிப்பாய் இனித்தது ....
இத்தனை இன்பங்களையும் இனிப்பாய் வழங்கியவள் இன்று உன் நினைவுகளை மட்டும் என்னிடம் விட்டு எங்கே சென்றாயடி .....
நான் சிரிக்க மறந்து பல நாள் ஆகிறது ....
உன்னை தேடாத இடம் இல்லை ...
பைத்தியம் பிடிக்கிறது...
என்னை ஏன் விட்டு சென்றாய் தேவா....
ஒரு முறை அந்த இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டான் .....
அவன் விழுந்த நேரம் அங்கு யாருமே இல்லை .....
தவினும் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அன்று இரவு கார்த்தியுன் நிலைமை மிகவும் மோசமானதுதான் மிச்சம் ......
அவன் விழுந்த வேகத்தில் கல்லில் கால் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது .....
பட்ட இடத்திலே படுவதை போல் அன்றும் தலையில் போடப்பட்ட தையலிலே மேலும் அடி பட்டு ரத்தம் வழித்துக்கொண்டிருந்தது .......
இரவு முழுவதும் யாருமே கவனிக்கவில்லை .....
அவன் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ தேவாவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவன் எண்ணமே அவன் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது ....
காலையில் தவின் அவனை அந்த நிலையில் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.....
உடனே மருத்துவமனையில் சேர்த்தான் .....
அதற்க்குள் அவன் ரத்தம் முழுவதும் அவனை விட்டு விலகி உறைந்திருந்தது ......
கார்த்திக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது ....
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான் .....
சிறிது நேரத்தில் தேவாவின் பெற்றோர் அவன் நண்பர்கள் என்று பலரும் மருத்துவமனையில் திரண்டனர். ...
பல மணி நேர போராட்டம்...
ரத்தத்தின் அளவு குறைந்து விட்டது
உடனடியாக ரத்தம் தேவை பட்டது ஆனால் அவன் ரத்தப்பிரிவு AB நெகடிவ் எங்கேயுமே கிடைக்கவில்லை .....
நேற்று இரவு தான் அதே இரத்தம் தேவை என்று அழைந்து திரிந்து ஒருவருக்கு ஏற்றப்பட்டது...
கார்த்திக்கு ரத்தம் கிடைக்க வழியே இல்லை .....
பல மருத்துவமனைக்கு தகவல் அனுப்பியும் எந்த பலனும் இல்லை ....
ரத்தம் கிடைப்பதற்க்கு அங்கு ஏதோ பிரச்சனை ...
அப்போது தான் அஞ்சலி அவர்களுக்கு தெரியாமல் தன் செல்வாக்கை பயன்படுத்தி இரத்தத்திற்க்கு ஏற்பாடு செய்தாள் .....
கிட்டதட்ட 10 மணி நேரம் கடந்து அந்த ரத்தம் கார்த்திக்கு செலுத்தப்பட்டது ......
(எப்படி)
அஞ்சலி மறைமுகமாகவே அவர்களுக்கு பல உதவிகளை செய்கிறாள் ....
எப்பொழுது இதை அவர்கள் உணர்வார்கள்...
பார்க்கலாம்...
கார்த்திக்கு ரத்தம் ஏற்றப்பட்டது ....
ஆனால் அவனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை..
அவன் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக தான் இப்படி ....
கார்த்திக்கு இன்னும் 48 மணி நேரம் மட்டுமே கெடு கொடுக்கப்பட்டது அதற்க்குள் அவன் பிழைத்துக்கொண்டாள் அவன் காயங்களை கூடிய விரைவில் சரிசெய்து விடலாம் என்றும்.....
இந்த இரண்டு நாளில் அவனுக்கு நினைவு திரும்பவில்லை என்றால் கோமாவிற்க்கு செல்லும் நிலைமை ஏற்படலாம் என்று கூறினார் .....
தவின் மற்றும் அவன் நண்பர்கள் அவனை விழிக்க வைக்க பல முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தனர் ....
பலன் என்று சொல்லும் அளவிற்கு எதுவுமே இல்லை ....
அவனுக்கு மருந்து தேவா மட்டுமே ஆனால் அவளும் இப்போது இல்லை .....
கார்த்திக்காக பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டது....
அவர்களின் கடைசி நம்பிக்கை வரையிலும் பல முயற்சிகளை எடுத்தனர்.....
ஒரு நாள் முடிந்தது ஆனால் முன்னேற்றமே இல்லை
அவனுக்கு கொடுத்த கெடு முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது இதற்க்கு மேல் அவன் நினைவு திரும்பும் என்ற நம்பிக்கையை கைவிட்டுவிட்டனர்....
இனி அவன் விதி படியேதான் நடக்கும் அதற்க்கு மேல் அந்த ஆண்டவன் கையில் தான் எல்லாம் ......
(நம் நம்பிக்கை தான் ஆண்டவன் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை... )
அன்றிரவு ஒரு 2 மணியளவில் இரு கால்கள் கார்த்தியின் அறைக்குள் நுழைந்தது ....
அந்த நேரம் அங்கு யாரும் இல்லை கார்த்தியையும் தவினையும் தவிர .
தவினும் சோர்ந்து போய் கார்த்தியை பார்த்துக்கொண்டே தூங்கிய நிலையில் இருந்தான் ....
அங்கு வந்தவள் மெல்ல கார்த்தியின் காதில் மெதுவாய் ஏதோ கூறினாள் அதுமட்டுமன்றி அவனிடம் ஒரு 10 நிமிடம் பொறுமையாக சில விசயங்களை சொன்னாள் அவள் கூறியது கேட்ட அடுத்த மாத்திரத்தில் கார்த்தியின் பல்ஸ் ரேட்டிங் கூடியது .....
மெல்ல அவன் கருவிழிகள் அங்கும் இங்கும் நகர்ந்தது .....
சட்டென்று அவன்
"தேவா "வென்று அலறினான் சத்தம் கேட்டு தவின் விழித்துக்கொண்டான்...
ஆனால் அங்கு யாரும் காணவில்லை ....
கார்த்தி எழ முடியாமல் படுக்கையிலே அலறிக்கொண்டிருந்தான் ....
அவன் கை கால் எங்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவனால் அசைக்கவே முடியவில்லை .....
அவனுக்கு உடனே மயக்க மருந்து அளிக்கப்பட்டது....
அவனுக்கு பல டெஸ்ட்டுகள் எடுக்கப்பட்டது ......
ஆனால் ஒரு 10-15 நிமிடத்திற்க்குள் எப்படி இது சாத்தியம் என்றுதான் புரியவில்லை ......
யார் அவள் என்ன கூறுயிருப்பாள்
.................................................................
Sorry my Dr readers 😢😢😢😢😢
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro